09/10/2018

நியமம் - (அட்டாங்க யோகம்)...


நியமம்...

ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுன் மன்னும் பராசத்தி யோடுடன்
 நீதியுணர்ந்து நியமித்த னாமே  - 555

பரசிவத்தை வேதங்கள் கூறும் அப்பொருளை அனுசரிக்கிறவனை சோதியை அந்தவிடத்தில் சுடும்படியான அக்கினியைப் பாதி பாகத்தில் சேர்ந்திருக்கும் பராசத்தியுடன் இவற்றை நியாயமான வழியில் அறிபவன் நியமத்தனாகும்

தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமங் களவு கொலையெனக் காண்பவை
நேமியீ ரைந்து நியமத்த னாமே.  -- 556

பரிசுத்தம், அருள், உள்ளடக்கம்,  பொறுமை, இணக்கம், சத்தியம், ஸ்திரத்தன்மை கொள்ளுதல் இவையல்லாமல் காமம், களவு, கொலை என்பவைகளைத் தீமையெனக் காண்டல் முதலியவை பூமியில் இந்தபத்தும் நியமமாகும்.

குறிப்பு: அரசன், கல்விமான், பணக்காரன், அறிவாளி இவர்கள் தக்க நிலைமையை அடைந்திருந்தும் தங்களுக்குச் சம்பந்தமில்லாத காரியத்தில் பிரவேசித்து இழிவான தன்மையை அடைவதுபோல, மனிதன் உலகத்தில் பிறந்து யுக்த வயதடைந்தவுடன் பார்வையினாலும், சேர்க்கையினாலும் சம்பாதித்துக் கொள்ளும் காரியங்களாகிய, பிறர் தம்மை மதிக்கவேண்டிய தென்கின்ற கொள்கை, பற்று, தன்னறிவைப் பெரிதாகக் கூறல், பதார்த்தங்களில் இச்சை, அவசியமில்லாததை உபயோகித்தல், டாம்பீகமாக நடத்தல் என்னும் இவை போன்றதை நியமித்துக் கொண்டு இழிவையடைதல் சகஜம்.  அவ்வாறின்றி, மேற்சொன்ன குணங்களை நீக்குவதே நியமமாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.