02/09/2017
அனிதா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம், அரசுப் பணி எடப்பாடி அறிவிப்பு...
இதே எழு லட்சத்தையும் , உம்ம குடும்பத்துக்கு ஒரு வேலையையும் தருகிறோம் நீர் தற்கொலை செய்துகொள்ள தயாரா ?
மானம்கெட்ட அடிமைகள்.. ஒரு மானவியின் உயிரை மோடி சர்காருக்கு அடிமை சேவை செய்தே கொன்று விட்டோமே என்ற உறுத்தல் இல்லை..
தமிழ்நாட்டின் மாணவர்களின் எதிர்காலம் பற்றிய குற்ற உணர்வு இல்லை..
இந்த லட்ச்சனத்தில் வெறும் எழு லட்சத்தை கொடுக்குராராம்..
என்பா வெண்ணைகளா அந்த மாணவி மருத்துவர் ஆகியிருந்தால் அவரால் எத்தனை லட்சம் மக்களுக்கு பயனாக இருந்திருக்கும்.. அந்த மாணவியின் உயிரை உங்களால் திருப்பி கொடுக்க முடியுமா. நியாயப்படி உங்கள் மீதெல்லாம் கொலை வழக்கு தான் பதிய வேண்டும்.. . கார் தூ..
-காதிர்
நீட் என்ற ஆயுதத்தால் மாணவி அனிதாவை கொலை செய்த மத்திய மாநில அரசுக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் கடும் கண்டனம்...
இதை பற்றி கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில துணை தலைவர் ஆயிஷா சித்திக்கா கூறுகையில்...
+2 தேர்வில் 1176 மதிப்பெண்களும், 196.5 கட் ஆஃப் எடுத்து மத்திய அரசின் நீட் தேர்வால் தன் மருத்துவ கனவை இழந்த மாணவி தான் அனிதா. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியம் நீட் தேர்வால் நசுக்கப்பட்டுவிட்டது. அவர் நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர். மத்திய அரசின் நம்பிக்கை துரோகத்தால் நீட் அடிப்படையிலே கலந்தாய்வு நடந்தது.
இதனால் மணம் உடைந்து போன அனிதா, தன்னுடைய மருத்துவ கனவு இவ்வருடம் தகர்ந்ததால் தற்கொலை செய்து கொண்டார். அனிதாவிற்க்கு கேம்பஸ் ஃப்ரண்ட் சார்பாக ஆழ்ந்த இறங்களை தெரிவித்துகொள்கிறேன்...
இது தற்கொலை இல்லை மாறாக மத்திய மாநில அரசு செய்த படுகொலை. அனிதாவின் படுகொலைக்கு மத்திய மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும். அனிதாவின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.
மாணவர்கள் அனைவரும் இந்த அநீதியை எதிர்த்து போராட வேண்டும். தற்கொலை தீர்வில்லை. நாம் ஒன்றிணைந்து போராடி வெற்றி பெறுவதே அனிதா போன்ற மாணவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு. நீட் தேர்விற்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வரை போராடுவோம்.
A. ஆயிஷா சித்திகா
மாநில துணைத்தலைவர்
கேம்பஸ் ஃப்ரண்ட் இந்தியா
தமிழ்நாடு...
நீட் பற்றிய அருமையான விளக்கம்...
2 x 10 = 120 என்று சமச்சீர் கல்வியில் படித்திருப்பார்கள். அதே கணக்கை நீட் தேர்வில்.
0.12 x 10 = ??
0.12 x 0.01 =??
120 / 0.012 =??
என்று கேட்பார்கள். மேலே இருக்கும் கணக்கு 12 x 10 = 120 நேரடியானது.
கிழே கேட்டிருக்கும் கணக்குகள் கொஞ்சம் சுற்றிவிடுவது. மேலே இருக்கும் கணக்குத் தெரிந்தவர்களுக்கு கிழே இருக்கும் கணக்கு தெரியாது என்றில்லை. அந்தப் பயிற்சியை அவர்கள் பெற்றிருக்க மாட்டார்கள். இந்த கீழே உள்ள கணக்கைத்தான் மற்றவர்கள் தரம் தரம் என்கிறார்கள்.
மேலே உள்ள கணக்கைப் புரிந்து கொள்வது அடிப்படை அறிவாகும்.
கிழே இருக்கும் கணக்கைப் போடுவது ஒரு பயிற்சிதான்.
முதலில் உள்ள கணக்கான 12 x 10 = 120 புரிந்து கொள்வதுதான் முக்கியம். அதுதான் அடிப்படை.
அந்த அடிப்படையை சமச்சீர் கல்விபுத்தகங்கள் தேவைக்கு அதிகமாகவே கற்றுக் கொடுக்கின்றன.
இந்த கீழே உள்ள பயிற்சிமுறை இருக்கிறது பாருங்கள். அதாவது
0.12 x 10 = ??
0.12 x 0.01 =??
120 / 0.012 =?? என்று இருக்கிறதல்லவா? இது மாதிரி கேள்விகளை கேட்டுக் கொண்டே இருக்கலாம். யார் ஒருவனையும் இதை வைத்து திணறடிக்கலாம்.
பிளஸ் டூ பிஸிக்ஸ் மற்றும் சமச்சீர் கெமிஸ்டரி புத்தகங்களை எடுத்துப் பாருங்கள். இரண்டுமே தலா 500 500 பக்கங்கள் இருக்கின்றன. சி.பிஎஸ்.சி பாடத்தில் உள்ள அனைத்து பாடங்களும் சமச்சீரிலும் இருக்கின்றன.
இவர்களுக்கும் ”நீட்டுக்கும்” உள்ள வித்தியாசம் நீட்டுக்குள்ள பிரத்யோக பயிற்சிதான்.
நீட் தேர்வு இருக்கும்பட்சத்தில் ஒரு மாணவன் அவன் பாடப்புத்தகங்களையும் படிக்க வேண்டும். அதே சமயம் இந்த நீட் பயிற்சியையும் எடுக்க வேண்டும்.
எப்போதுமே உங்களுக்கு தெரியும் Objective type என்ற Choose the best answer type question யில் , அதாவது நான்கு விடை கொடுத்து அதில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் முறைப் படிப்புக்கு கடைசி பத்து வருடம் கொஸ்டின் பேப்பர் இருந்தால் போதும்.
நான் பிளஸ் டூ படிக்கும் எண்டிரன்ஸ் எக்சாம் உண்டு. ஒரு கேள்விக்கு பதில் தெரியாவிட்டால் நான் புத்தகத்தை எடுத்து விளக்கமாக படிக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் இந்த கேள்விக்கு இது விடை என்றுதான் மற்றவர்கள் படிப்பார்கள். அதுதான் அத்தேர்வுகளை Crack செய்யும் முறையும் கூட.
ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
Distillation Process என்று ஓன்று இருக்கிறது. ஒரு குடுவையில் நீரை வைத்து கிழே சூடாக்கினால் அது நீராவியாகி ஒரு குழாய் வழியே போகும், அப்படி போகையில் குழாயை குளிர வைக்கும் போது அது குழாயின் மறுமுனையில் இருக்கும் பாத்திரத்தில் கிருமியில்லாத நன்னீராக சென்று விழும்.
இந்த கேள்வியை DESCRIPTIVE ஆக அதாவது நம் பிளஸ் டூ தேர்வு முறையில் எழுதச் சொன்னால் ஒரு மாணவி என்ன செய்வாள்.
அதற்கொரு படம் பென்சில் ஸ்கேல் வைத்து போடுவாள். அதைக் குறிப்பாள். அதற்கான விடை எழுதுவாள். இப்படி செய்யும் போது அவள் அடிப்படை அறிவு விரிவடையும் வரும்.
இதே உதாரணத்தில் Objective type கேள்வி கேட்டால் எப்படி கேட்க முடியும்.
Distillation Processயில் என்ன நடக்கிறது.
a திரவம் வாயுவாகிறது.
b. வாயு திரவமாகிறது.
c. வாயுவான திரவம் திரவமாகிறது.
b. மூன்றும் இல்லை.
இங்கே கவனியுங்கள் மேலே DESCRIPTIVE ஆக Distillation Process ஐ நன்றாக புரிந்து கொண்டவர்கள் கூட கீழே உள்ள இந்த Objective type தந்திரத்தில் குழம்பி விடுவார்கள்.
இதற்கு சரியான விடையான “வாயுவான திரவம் திரவமாகிறது” என்ற விடையை சட்டென்று அவர்களால் அடையாளம் காணமுடியாது. உடனே அக்குழந்தைக்கு Distillation Process தெரியாது என்று அர்த்தமல்ல.
அதே சமயம் நீட் தேர்வுக்கென்று பயிற்சி எடுத்த மாணவி இக்கேள்வி Pattern யில் நிறைய கேள்விகளை பார்த்து வரும் போது அவள் சட்டென்று பதில் எழுதிவிடுவாள். அதில் மார்க் எடுக்கும் போது அவள் அறிவாளி என்பது மாதிரி ஆகிவிடுகிறது.
ஒருவேளை Choose the best answer இல்லாமல் விரித்து எழுதும் தேர்வு இருந்தால் தமிழக மாணவர்கள் நிச்சயம் பலரைவிட நன்றாகவே மிளிர்ந்திருப்பார்கள்.
உங்களுக்கு இப்போது கேள்விவரலாம்.
நீட் தேர்வு என்ற Objective type தந்திரம் என்கிறாய்? இந்த தந்திரத்தை தமிழ்நாடு அரசே சொல்லிக் கொடுத்து விட வேண்டியதுதானே என்ற சந்தேகமாய் இருக்கலாம்.
ஏன் இந்த Objective type தந்திரம் நீட்டுக்கு அதரவு கொடுக்க கூடாதென்றால்.
1. Objective type தந்திரத்துக்கு எல்லையே கிடையாது. கேள்வி கேட்பவரின் அறிவு சைக்கோதனத்துக்கு ஏற்றால் போல் அதை சுற்றி சுற்றி கேட்கலாம். பிளஸ் டூ தமிழ்நாடு எண்டிரன்ஸில் அண்ணா யுனிவர்சிட்டி கணித பேப்பர் அப்படித்தான் இருக்கும். அங்கேதான் அண்ணா யுனிவர்சிட்டி மற்றும் கணித வாத்தியார்கள் மிக மிக தங்கள் அறிவைக் காட்டி சுற்றி சுற்றி கொஸ்டின் கேட்டிருப்பார்கள். 80 சதவிகித கிராமப்புற சரியான பயிற்சி எடுக்காத மாணவர்களால் அதை நெருங்க கூட முடியாது. நான் ஒரு Mechnanical engineer. என்னிடம் ஒரு நீட் கொஸ்டின் பேப்பர் எடுக்கச் சொன்னால் இந்தியாவில் எந்த பயிற்சி பள்ளியில் படித்தவனாலும் நல்ல மார்க் எடுக்க முடியாத கொஸ்டினை எடுக்க முடியும். இதை சவாலாகவே சொல்கிறேன்.
2. ஆக நீட் தேர்வு வருடா வருடம் போக போக இந்த Objective type தந்திரம் கூடிக்கொண்டே போகும். மாணவர்கள் சப்ஜக்டை விரித்து படிப்பதில் இருந்து விலகி Objective type ஸ்டைலிலேயே படிப்பார்கள்.முற்றிலும் விஞ்ஞானத்தில் இருந்து விலகி இருப்பார்கள்.
3. கல்வியை ரசனையாக ரசித்து படிக்க முடியாத சூழல் வரும். Diagrams figures சுத்தமாக படிக்க மாட்டார்கள். ஒரு படம் வரைவதையே மாணவன் கடுப்பாக நினைப்பான். எப்படி பிளஸ் டு மாணவன் தமிழ் மனப்பாடப் பகுதியை படிக்காமல் இருக்கிறானோ அப்படி அவன் விரித்து எழுதுவதில் வந்து சேரும் அறிவை நிராகரிப்பான்.
4.நீட் தேர்வு பயிற்சி வகுப்பை கிராமப்புறத்துக்கு எடுத்துச் சென்று அது செட் ஆக எடுக்கும் நாலு வருடங்களில் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
5.Objective type விடைகளை திருத்த எளிது என்பதற்தாக அதை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் அது கேடான முறைதான்.
இதை ஏன் எழுதுகிறேன் என்றால் சமச்சீரில் நல்ல மார்க் எடுத்தவர்கள் நீட்டில் மார்க் குறைவு என்றது சமச்சீரில் தரமில்லை என்று உங்கள் மூளை நினைத்துவிடக் கூடாதே என்று சொல்கிறேன்.
சமச்சீர் சரியில்லை என்று சமச்சீர் எடுக்கும் ஆசிரியர்களே நினைத்து விடக் கூடாதே என்று எழுதுகிறேன்.
இதையெல்லாம் தாண்டி அனிதாவின் மனதை நினைத்து நேற்றிரவு ஒருமாதிரி இருந்தது.
நீட் தேர்வு எழுதி வரும் போது அந்தப் பிள்ளைக்கு “நாம அறிவுல குறைந்துவிட்டோமோ, நல்லா எழுதலியே” என்று கலங்கியிருக்கும் பாருங்கள்.
நீட் மார்க் வரும் போது அவளுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை வந்திருக்கும் பாருங்கள். அந்த விநாடி அனிதாவின் மனதைப் பாருங்கள். எப்படி அவள் மனது பிசைந்திருக்கும்.
ஒரு திறமைசாலியை ஒரு தந்திரத்தைக் காட்டி நீ திறமைசாலி இல்லை புத்திசாலி இல்லை என்று
பொய்யாக நிருபித்து , அவளையே “நாம் சரியில்லையோ” என்று நினைக்க வைப்பது எவ்வளவு பெரிய கொடுமை.
அனிதாவின் மனம் நடுங்கிருக்கும்தானே...
பெருமூச்சு...
- Vijay bhaskar vijay
தலையில் பூ மாலை அணிந்து நின்ற பிரான்ஸ் நாட்டு பெண் காவல்துறை அதிகாரிகள்... வெட்க்கி தலைகுனிந்த தமிழ் பெண்கள்...
ஸ்ரீமாணிக்க பிள்ளையார் ஆலய தேர்திருவிழாவில் தலையில் பூ அணிந்து கடமையில் ஈடுபட்ட பிரான்ஸ் பெண் பொலிஸ் அதிகாரிகளை பார்த்து பலர் வியந்துள்ளனர்.
பல வேற்று இனத்தவர்கள் தமிழர்கள் கலாச்சாரத்தில் வந்துநின்றனர், ஆனால் நமது தமிழ் பெண்கள் மேலத்தேய கலாச்சரத்தில் வந்திருந்தார்கள்....
நம்ம தமிழ் பெண்களுக்கு ஒருநாள் எமது கலை, கலாச்சாரம், பண்பாடு அனைத்தும் புரியும் என நம்புகிறோம், நாம் அனைத்து பெண்களையும் குறிப்பிடவில்லை தொப்பி அளவானவர்கள் போட்டுக் கொள்ளலாம்...
பாத வெடிப்பு போவதற்கான டிப்ஸ் - இயற்கை வைத்தியம்...
பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.
மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொர சொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.
வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.
தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.
வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.
இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.
குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்...
ரோகினி IAS ஐ திடீர் என்று கொண்டாடும் நோக்கம் என்ன ? யார் இந்த ரோகினி ?
ரோகினி ஐ.ஏ.எஸ் (சேலம் மாவட்ட முதல் பெண் கலெக்டராக ரோஹினி ஆர்.பாஜிபாக்ரே) அறிவோம்..
புதிய அஇஅதிமுக மாவட்ட செயலாளர்..
சேரன்மாதேவி சப் கலெக்டராக 2011-2013 இல் இருந்த போது தாது மணல் கொள்ளையை எதிர்த்த மக்களை, வைகுண்டராசன் அடியாளாக இருந்து கூத்தன்குழி என்ற கிராமத்தினர் அனைவரையும் சுமார் 5000 மக்களை அகதியாக்க துணை நின்றவர்.
53 வாரம் மட்டுமே சட்டப்படி சப்-கலெக்டராக இருக்க வேண்டியவர் சட்டவிரோதமாக. 100 வாரத்திற்கு மேல் இருந்தவர்.
ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கை கர்நாடகத்தில் தண்டணை வராமல் தடுக்க ஜெகஜால புரோக்கர் வேலைககள் பல செய்த சங்கர் பிதாரியின் மருமகள்.
எஸ்.பி என்ற. பேரை வைத்துக்கொண்டு பல்வேறு சமூக விரோதிகளின் (தாதுமணல்- கிரானைட்) கூட்டாளியாகயாகவும், அணுஉலை எதிர்ப்பு போராட்டக்காரர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொலை செய்ய முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும், சகாயம் இ.ஆ.ப. அவர்கள் கிரானைட் முறைகேட்டில் நரபலி ஆய்வை செய்ய விடாமல் தடுத்து அவரை சுடுகாட்டில் படுக்க வைத்தும், நெல்லை-மதுரை மாவட்டத்தில் எஸ்.பி யாக. இருந்த. விஜேந்திர பிகாரியின் மனைவி தான் ரோகினி ஐ.ஏ.எஸ்...
அனிதா மிரட்டப்பட்டு தற்கொலைக்கு தூண்டபட்டாரா? அனிதா மிரட்டி படுகொலை...
அனிதா மிகவும் தைரியமான பெண் , தைரியமாக மத்திய மாநில அரசுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை வழக்கு தொடுக்க தன்னார்வர்களின் உதவிடன் டெல்லி வரை சென்றவர் NEET யால் தன் மருத்துவர் கணவு தகர்க்க பட்டாலும் தன்னார்வர்களின் உதவுடன் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு கால்நடை மருத்துவம் எடுத்து படிக்க தயாராகவே இருந்துள்ளார் அனிதா....
பின் எப்படி தற்கொலை ?
மத்திய மாநில அரசுகளை எதிர்த்து வழக்கு தொடுத்ததால் பல்வேறு வகையான மரட்டலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார் அனிதா , இன்று காலை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மத்தியில் அனிதா கடுமையாக மிரட்டப்பட்டிருப்பதாக செய்தி பரவியிருக்கின்றது. பின் 3 மணி அளவில் அவரது தற்கொலை செய்தி வந்திருக்கின்றது ...
நமது கேள்விகள்..
வேறு படிப்பு எடுத்து படிக்க தயாராக இருந்த மாணவியை தற்கொலை செய்யும் அளவிற்கு மிரட்டிய மர்ம நபர் யார் ?
மிரட்டிய நபர் மாநில அரசை சேர்ந்தவரா மத்திய அரசை சேர்ந்தவரா அல்லது இருவருமா ?
பாஜக சுப்பிரமணிசாமி...
எவரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இறுமாப்புடன் பேசும் சு.சாமியின் கீழ்த்தரப்பட்ட யோக்கியதாம்சம் எத்தகையது என்பதற்கு புகைப்படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்..
உண்மைகளை மறைக்கிறார். பதில் அளிக்காமல் பிடிவாதம் காட்டினார் என்று கமிஷன் கூறுகிறதே - இந்தப் பேர் வழி ஒரு நாணயமான மனுசனாக இருந்திருந்தால் உண்மைகளை ஏன் மறைக்க வேண்டும் - பிடிவாதமாகப் பதில் சொல்ல ஏன் மறுக்க வேண்டும்? - பதுங்க வேண்டும்?
வீராதி வீரர்போல அரட்டைக் கச்சேரி நடத்துகிறாரே - கமிஷன் கேட்ட கேள்விக்கு உரிய பதில் சொல்ல முடியாமல் ஏன் வாலை சுருட்டிக் கொண்டு உட்கார வேண்டும்? விழி பிதுங்கி ஏன் திணற வேண்டும்? கவட்டிக்குள் ஏன் கவிழ்ந்து படுக்க வேண்டும்?
குற்றம் செய்தவர் எவராக இருந்தாலும் கூனிக் குறுகத்தானே வேண்டும்? வெல வெலத்துத்தானே போக வேண்டும்? - முகம் வெளிரத்தானே செய்யும்!
நியாயமாக உண்மைகளைச் சொல்லத் தவறிய காரணத்தால் - மறைத்த காரணத்தால் உள்ளே தள்ளப்பட்டு இருக்க வேண்டும். இரண்டு நாள் ஜெயிலில் இருந்திருந்தால் இந்தக் கோழையின் குணாதிசயங்கள் வெளிப்பட்டிருக்கும். மன்னிப்பு எழுதிக் கொடுத்துவிட்டு அப்ரூவராக ஆசாமி மாறியிருப்பார். என்ன காரணத்தாலோ, எந்தப் பூணூல் பாசத்தாலோ, நிருவாக அமைப்பில் உள்ள பஞ்சக் கச்சங்களின் பரிவாலோ ஒவ்வொரு சமயமும் இந்த ஆள் தப்பித்துக் கொண்டு வருகிறார்.
சு.சாமி தலைவராக இருக்கும் ஜனதா கட்சியின் அகில இந்திய செயலாளராக இருந்த தோழர் வேலுச்சாமி இந்தச் சு.சாமியைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்?
கூடவே இருந்தவராயிற்றே..
அகம் - புறம் அறிந்தவராயிற்றே.. சும்மா சூடு பிறக்கிறது வேலுச்சாமியிடமிருந்து...
எதிர்காலத் தமிழகமும்: எனது கனவும் : தமிழ் மற்றும் கல்வித்துறை...
தமிழ் மற்றும் கல்வித்துறை:
1. தமிழ் உலகின் முதல் மொழி என்பதனை சர்வதேச சமூகம் ஆராய்ந்து அங்கீகரிக்க அனைத்து கடலியல், மொழியியல் ஆராய்ச்சி ஏற்பாடுகளும் செய்யப்படும்.
2. தமிழ் மொழியே தமிழ்த் தேசிய மொழி, ஆட்சி மொழி, கல்வி மொழி, அலுவல் மொழி, தொழில் மொழி.
3. 12 வகுப்புகள் வரை இலவசக் கல்வி, கட்டாயக்கல்வி. தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்காத பெற்றோர் கைது செய்யப்படுவர்.
4. அனைத்து பள்ளிகளும் அரசுப் பள்ளிகளாக்கப்படும்.
5. அனைத்தும் இரு பாலார் பள்ளிகளாகவே இருக்கும். ஆண் - பெண் சமத்துவம், இணைந்து செயலாற்றும் திறன் வளர்க்கப்படும்.
6. பள்ளியில் தமிழ் தவிர ஒரு இந்திய மொழி, ஒரு ஐரோப்பிய மொழி கற்றுக்கொடுக்கப்படும் (அவரவர் விருப்பத்திற்கேற்ப). ஆனால் பயிற்று மொழி தமிழே.
7. 12 ம் நிலை முடிக்கும் முன்பாக அனைத்து மாணவருக்கும் நீச்சல் திறன், வாகன ஓட்டும் திறன், கணிணி திறன் இவைகளை கற்றுக்கொள்வது அடிப்படை. கணினி விசைப்பலகையில் (keyboard) தமிழ் மட்டுமே.
8. இங்கு அவர்கள் உருவாக்கும் ஈ மெயில் முகவரி அவர்களுக்கென இறுதி வரை இருக்கும். அரசின் அனைத்து தகவல்களும் அதன் மூலமே அனுப்பப்படும், அவர்கள் வாகன விதி மீறினால் வரும் தண்டனைத் தொகைத்தகவல் உட்பட.
9. அலுவலகம், பள்ளி அனைத்திலும் தமிழில் மட்டுமே பேச வேண்டும்.
10. விளையாட்டு: தமிழக தேசிய விளையாட்டாக பலர் இணைந்து செயல்படும் வகையில் உள்ள கால்பந்து அறிவிக்கப்படும். வட்டம், மாவட்டம், மாநிலம் வாரியாக ஆண்-பெண் களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு ஒலிம்பிக்கிலும் நேரடியாக பங்குபெற்று பலரும் வெற்றி பெறும் வகையில் பள்ளியிலிருந்தே வீரர்கள் உருவாக்கப்படுவர்.
11. கல்வி முடித்த எவரும் முதல் ஐந்து வருடத்திற்கு தமிழ் நாட்டில் தான் பணி செய்ய வேண்டும்.
12. அயல் நாடு செல்வோர் 5 வருடங்களுக்கு மேல் அங்கு படிப்போ, பணியோ செய்ய முடியாது. தாயகம் திரும்ப வேண்டும்...
எதிர்காலத் தமிழகமும்: எனது கனவும் : தமிழ்ப் பண்பாடு...
தமிழ்ப் பண்பாடு:
1. திரைப்பட, தொலைக்காட்சி தணிக்கை முறையில் தமிழ், தமிழ் சமூக மேம்பாட்டுக்கு எதிரானவை தடை செய்யப்படும்.
2. ஆங்கிலக்கலப்பு மிக்க நிகழ்ச்சிகள் தடை செய்யப்படும்.
3. ஆங்கிலம் உட்பட பிற மொழிகளில் உள்ள தொலைக்காட்சிகளும் செயல்படும். ஆனால் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமிழ் மட்டுமே.
4. தமிழர் பண்பாடு, தமிழர் வரலாறு, மக்கள் முன்னேற்றம், அறிவியல், மனித நேயம், ஆண் - பெண் சமத்துவம், மருத்துவம், விளையாட்டு போன்ற மதிப்பீடுகளை உயர்த்தும் திரைப்படங்கள், நூல்களுக்கு மட்டுமே வரிவிலக்கு, விருதுகள் வழங்கப்படும்.
5. இத்தகைய மதிப்பீடுகளுடன் தமிழ் சமூகத்துக்காக உழைக்கும் நபருக்கு ஒவ்வோர் ஆண்டும் தமிழ் ரத்னா விருது வழங்கப்படும்...
எதிர்காலத் தமிழகமும்: எனது கனவும் : மின்சாரம், தகவல் தொடர்பும்...
மின்சாரம், தகவல் தொடர்பு:
1. மின்சாரத்துக்கென தனிப்பட்ட வானியல் செய்மதி நிலையங்கள் (Space Stations) வானில் நிறுவப்பட்டு (24 மணிநேரமும் சூரிய ஒளி அங்கு கிடைப்பதால்), சூரிய மின்சாரம் பெறப்பட வேண்டும்..
2. ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடி மின் தொடர்பு சாதனங்கள் (மின் ஈர்ப்புக்கருவி) வழங்கப்பட்டு சூரிய மின்சாரம் இலவசமாக்கப்பட வேண்டும்...
3. தமிழகம் மின் கம்பியற்ற மாநிலமாக்கப்பட வேண்டும்..
4. அதே போல் நிறுவுவதற்குரிய செலவு மட்டுமே உண்டு என்பதால் மின்சாரம் போன்று செல்லிட பேசியில் பேசுவதும் இலவசமாக்கப்பட வேண்டும்..
5. சமையல் அடுப்பும் அனைத்து வீடுகளிலும் இந்த சூரிய மின் மயமாக்கம் என்பதால் அதுவும் இலவசமே. எனவே காஸ் அடுப்பு, மருமகள் சாவு இருக்காது.
6. தொலைக் காட்சி கட்டணமும் இருக்கக் கூடாது..
7. ஆனால் இவையெல்லாம் தமிழ் குடியுரிமை அட்டை பெற்றவருக்கு மட்டுமே.
8. ஒரு சிறு தொகை பராமரிப்பு செலவுக்கென முதல் 5 வருடங்களுக்கு மட்டும் பெறப்பட்டு பின்பு அனைத்தும் இலவசமாக வேண்டும்..
9. பல்வேறு வரிகள் மூலம் பெறப்படும் தொகை அனைத்தும் தமிழ், தமிழர், தமிழக வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்...
எதிர்காலத் தமிழகமும்: எனது கனவும் : தொழில்துறை...
தொழில்துறை:
1. பொருட்களுக்கான தர நிர்ணயகுறியீடு "த". (ISI) போல ஆனால் உலகத்தரம் வாய்ந்த தரக்குறியீடாக அது "த" உருவாக்கப்படும். (த-தமிழையும் குறிக்கும், தரத்தையும் குறிக்கும்)
2. மக்கள் பயன்படுத்தும் நெகிழி, குடிநீர், துணி, மருந்து, மகிழுந்து, பேருந்து, தொடர்வண்டி என அனைத்து உற்பத்தி பொருட்களும் இந்தக் குறியீடு இல்லை என்றால் உற்பத்தி செய்ய முடியாது.
3. அதே போல தொழில் துறையில் பகுதி வாரியாக தொழில் மண்டலங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்..
சென்னை-வாகனம், கணினி
கடலூர்-தூத்துக்குடி, கன்னியாகுமரி-மீன், கடல் பொருட்கள், கப்பல் கட்டுமானம்
திருச்சி-பாத்திரங்கள், வீட்டு உபயோக மின் பொருட்கள்
கோவை- தொழில், எந்திரங்கள்,
ஈரோடு-மளிகைப்பொருட்கள்
திருப்பூர்-ஆடைகள் ,
கரூர்-வாகனங்கள், உதிரி பாகங்கள், பேருந்து, மகிழுந்து, தொடர்வண்டி, விமானம் தயாரிப்பு.
சேலம்-இரும்பு, அலுமினியம்
மதுரை-விவசாய, பண்ணைக்கருவிகள், எந்திரங்கள்,
நெல்லை-குளிர்பானங்கள், உணவு பதப்படுத்தும் கருவிகள் உற்பத்தி
சிவகாசி-காகிதம், புத்தகம், அச்சிடும் கருவிகள், (பட்டாசு, வெடி பொருட்கள் தொழில் தடை செய்யப்பட வேண்டும்)
ஒவ்வொரு பகுதியிலும் இவையெல்லாம் ஏறக்குறைய இருந்தாலும் அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்..
1. முக்கியமாக உள்நாட்டு தொழிநுட்பத்தில் ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள், தொழில் முனைவோர் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்..
2. அனைத்து ஆராய்ச்சிகளும் தமிழில் மட்டுமே நடக்க வேண்டும்..
3. தமிழில் கற்றோருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்..
4. தாய்த்தமிழ் மொழியிலான சிந்தனை, புதுக்கண்டுபிடிப்பு, முன்னேற்றம், தரமான பொருட்கள், கருவிகள், எந்திரங்கள் உற்பத்திக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும்...
எதிர்காலத் தமிழகமும் : எனது கனவும் : போக்குவரத்து துறை...
போக்குவரத்து துறை:
1. அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நிலத்தடி தொடர்வண்டி (மெட்ரோ) போக்குவரத்து.
2. நகரப்பேருந்துகள் தொலைவிலுள்ள கிராமங்களுக்கு மட்டுமே. நகரங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்காது.
3. நகரமயமாக்கம் குறைக்கப்படும். அனைத்து ஊர்களிலும் அனைத்து வசதிகளும் இருக்கும்.
4. அனைத்து தமிழக தொடர்வண்டிகளும் பேருந்துகளும் மின்மயமாக்கப்பட வேண்டும்..
வாகனப்புகையற்ற சுகாதார தமிழ்நாடு உருவாக்க வேண்டும்..
5. அனைத்து பேருந்துகளும் சீரான வேகத்துடனும், பாதுகாப்புடனும் செல்லும் வகைச் செய்து கண்காணிப்போடு விபத்தை தடுக்கப்பட வேண்டும்..
6. மிக முக்கியமாக நீர் வழிப்போக்குவரத்து உருவாக்கப்பட வேண்டும்...
1. ஆற்று வழி நீர்ப் போக்குவரத்து:
1. தாமிரபரணி ஆற்றில் பாபநாசம் முதல் திருநெல்வேலி, திருநெல்வேலியில் இருந்து புன்னைக்காயல் வழியாய் தூத்துக்குடி வரை.
2. காவிரி, பவானி ஆறுகளில் மேட்டூரிலிருந்து ஈரோடு, சத்தியமங்கலத்திலிருந்து ஈரோடு, ஈரோடு-கரூர்-திருச்சி-சிதம்பரம், திருச்சி-தஞ்சாவூர், திருச்சி-நாகூர்.
3. வைகையில் தேனீ-மதுரை, மதுரை-பரமக்குடி
இவைதவிர...
2. கடல்வழி நீர்ப் போக்குவரத்து :
சென்னை-மகாபலிபுரம்-பாண்டிச்சேரி-கடலூர்-சிதம்பரம்-நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி-கோடியக்கரை-மணமேல்குடி-தொண்டி-இராமேஸ்வரம்-கீழக்கரை-தூத்துக்குடி-திருச்செந்தூர்-உவரி-கன்னியாகுமரி-குளச்சல்.
என அமையும் 1000 கிலோமீட்டருக்கான கடல்வழிப்போக்குவரத்தின் பயன்கள்:
1. தரைவழிப் போக்குவரத்து (சென்னை-விழுப்புரம்-திருச்சி-மதுரை-நெல்லை-கன்னியாகுமரி வரை) (பேருந்து-தொடர்வண்டி) நெரிசலைக் குறைக்கும்.
2. அதிக செலவில்லா போக்குவரத்தாக அமையும். கடலில் ஒவ்வோர் ஆண்டும் சாலை போடும் தேவையே இருக்காது. தஞ்சையில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவில் செல்லும் கப்பல், சூரிய ஒளி கப்பல் என அமையும்.
3. சுற்றுலா பெருக்கும் வழிமுறையாக அமையும். கப்பலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் தவிர உள்ளூர் மக்களும் விரும்புவர். ராமேஸ்வரம்-தூத்துக்குடி வரை உள்ள 12 தீவுகளில் தங்கும் விடுதி வசதி போன்றவை அமைக்க வேண்டும்..
சென்னைக்குள்ளேயே புலிகாட் ஏரி, எண்ணூர் லிருந்து திருவொற்றியூர், பாரிமுனை, சாந்தோம், பட்டினம்பாக்கம், நீலாங்கரை, வி.ஜி.பி. தங்கக்கடற்கரை வரை நகரப்பேருந்து போல படகு இயக்க வேண்டும்...
நியூட்டன் விதி.. நியூட்டனுக்கு முன்னால்...
பூமியில் பொருட்கள் கீழே விழ புவியின் ஈர்ப்பு விசை தான் காரணம்..
இந்த ஈர்ப்பு விசை அனைத்து இடங்களிலும் உண்டு..
கிரகங்கள் தங்கள் பாதையில் தடம் மாறாமல் செல்வது கூட இந்த விசையால் தான்..
இந்த உண்மையை எடுத்து உரைத்தது ஒரு இங்கிலாந்து விஞ்ஞானி என்றும் அவர் பெயர் சார் இசாக் நியூட்டன் என்றும் தான் நமது அறிவியல் ஆசிரியர்களும் அறிவியல் புத்தகமும் சொல்லி இருக்கிறது..
ஆனால் இதை அவருக்கு முன்னால் ஒருவர் அதுவும் ஒரு தமிழர் சொல்லி இருக்கிறார் என்றால் ஏற்றுக் கொள்வீர்களா?
ஆம் இதை நியூட்டனுக்கு முன்னால் ஒருவர் சொன்னதுண்டு.
நியூட்டனுக்கு முன்னால் என்றால் ஏதோ ஓரிரு நாட்கள் முன்னால் அல்ல, நியூட்டன் பிறப்பதற்கு 1200 தமிழ் வருடங்களுக்கு முன்னால் சுமார் கி.பி.400 - கி.பி.500 ஆண்டுகளில் இயற்றப்பட்ட சூரிய சித்தாந்தம் எனும் நூலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது..
இதை இயற்றியவர் பாச்கராச்சரியா எனும் தமிழன்..
உண்மையை உலகிற்கு எடுத்துரைப்போம். தமிழர் என்று பெருமிதம் கொள்வோம்...
தமிழர்கள் எல்லாம் இந்துக்கள் என்று ஒரு மதத்துக்குள் மட்டும் இழுக்கும் பாஜக தமிழின துரோகிகளே...
தமிழர்கள் காலத்தின் ஓட்டத்தில் எல்லாவிதமான மதங்களையும் தழுவியுள்ளான்.......
உண்மையான இனமானம் உள்ள தமிழன் மதங்களுக்கு அப்பாற்பட்டவன் இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்!
ஒரு மததிற்க்குள் மட்டும் தமிழர்களை தேடும் அயோக்கியர்களே ஏன்டா உங்களுக்கு இந்த மதவெறி?
அப்படியே உண்மையில் தமிழன் நீங்கள் சொல்வது போல் இந்துவாக இருந்திருந்தால் ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது இந்து மதமும் அதன் சங்கங்களும் இயக்கங்களும் என்னடா மசிர புடிங்கி கிழிச்சது?
அப்பொழுது நீங்கெல்லாம் எங்கடா இருந்திங்க ?
இன்னும் கேள்விகள் நிறையவே இருக்கு ஆனால் மதவெறி பிடித்த கேவலமான உங்களால் தமிழனாக சிந்திக்கவே முடியாது..........
இனத்திற்காக சிந்திக்காதவன் அந்த இனத்திற்கே கேவலமானவன்!
இனமானம் இல்லாத தமிழன் உண்மையில் தமிழனே அல்ல................
முதலில் இனம் அதன் பின் நீ எதை வேண்டும் என்றாலும் தழுவிக்கொள் பிரச்சனையில்லை..
தமிழையும் மதங்களையும் சேர்த்து பார்க்காதே!
வீறுகொண்டு எழுந்து வா இனமானம் உள்ள தமிழனாய்.....
சாதிய உயர்வு தாழ்வை விட்டொழி....
தமிழர் சமத்துவம் படைக்க கிளம்பிவா.......
மொழிக்கு உயிராய் இரு......
இன ஒற்றுமைக்கு பாடுபடு......
உலகத்தில் உள்ள தமிழர்கள் எல்லாம் ஒன்றுபடுத்துவோம்..
தமிழனின் பிரச்சனைகள் நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகின்றது இதற்க்கான தீர்வு தமிழர்கள் ஒற்றுமையே.....
தமிழர்கள் ஆதிகார பீடத்திற்கு வரவேண்டும் அதற்க்காய் தமிழின உணர்வோடு தமிழர்கள் அனைவரும் சாதி உயர்வு தாழ்வு மற்றும் மத வேற்றுமைகள் கடந்து ஒன்றுபடுவோம்..
இப்படிக்கு..
தமிழின மீட்ச்சிக்கு துடிக்கும்
ஒரு தன்மானமுள்ள தமிழன்...
பரீட்சையை கண்டு பிடிச்சவன் மட்டும் கைல கிடைச்சான் ....
பரீட்சை யை கண்டு பிடிச்சவன் மட்டும் கைல கிடைச்சான் செத்தான்டா..
இது தான் ரஜனிகாந்த், வடிவேலுவின் பஞ்ச் டயலாக்குகளுக்குப் பிறகு அன்று தொட்டு இன்றுவரை சலித்துப் போகாத ஒரு பஞ்ச் டயலாக்..
நாம் பாடசாலையில் படிக்கும் போது ஏன் படிக்கிறாய்? என்ற கேள்வி வந்தால் கம்பஸ் போகணும் படிக்கிறோம் என்று சொல்லுவோம்.
கம்பஸ் போன பிறகு ஏன் படிக்கிறாய்? என்று கேட்டால், நல்ல வேலைக்குப் போகணும் என்று சொல்லுவோம்..
ஆனால் வேலைக்குப் போகிறவர்களைக் கேட்டால் நான் படிச்சதுக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்லுவார்கள்..
அப்படியென்றால் தேவையில்லாதவற்றை ஏன் படிக்கிறோம் என்ற கேள்வி மனதில் எழுகிறது..
நாம் பாடசாலையில் எல்லாப் பாடத்தையும் படிக்கிறோம். அதாவது இத்தனை துறைகள் இருக்கிறது என்று எங்களுக்கு டெமோ காட்டுகிறார்கள். அதன் பிறகு பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கம்பஸ்/உயர் கல்விக்குச் செல்கிறோம்..
எனக்கு இருக்கிற முக்கிய சந்தேகம் என்னவென்றால் என்னதான் பாடங்கள் பல இருக்கு என்று டெமோ காட்டப்படும் போதும் சரி, அதன் பிறகு பிரிக்கப்படும் போதும் சரி, உயர்கல்விக்குப் போகும் போதும் சரி சில விடயங்கள் அப்பிடியே எல்லா இடத்திலும் வந்து தொலைக்கிறது.
அதாவது
What are the advantages of bla bla bla?
What are the disadvantages of bla bla?
Briefly explain the following?
Definitions
இந்த மாதிரியாக கேள்விகள் எல்லா இடத்திலும் வந்து உயிரை எடுக்கிறது.
பாடமாக்கி எழுதினால் மட்டுமே இது மாதிரியான எல்லாக் கேள்விக்கும் பதிலளிக்க முடியும். விளங்கிக் கொண்டு அதை வைத்து எழுதலாம் என்றால் பாடத்தில் எத்தனை chapterகள் இருக்கோ அத்தனைக்கும் இந்தக் கேள்விகள் இருக்கிறது..
புரியாத மொழிப் படத்தை தியெட்டரில பார்க்கும் போது எல்லாரும் கைதட்டும் போது நாங்களும் கை தட்டுகிற மாதிரி Examல Definition, Advantage, Disadvantage எல்லாம் எதுக்குக் கேக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது, ஆனால் கேட்கிறார்கள்.
Examக்குப் பிறகு அதை நாங்க ஞாபகம் வைத்துக்கொள்ளப் போவதே இல்லை என்றும் அவர்களுக்குத் தெரியும்..
வேலைக்குப் போய் Definitionஐ பாக்காம எழுதி சம்பளம் வாங்குற யாரையும் நான் இதுவரைக்கும் பாத்ததில்ல. Google பண்ணினா 2 செக்கன்ல வருகின்ற விசயத்தை அரைமணி நேரம் பாடமாக்கி எழுதணுமா?
குறட்டை பிரச்சனைக்கு தீர்வாகும் மஞ்சள்...
குறட்டை மன உளைச்சலை தருவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துகிறது.
சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கமுற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும்போது ஏற்படும் அதிர்வால் குறட்டை ஏற்படுகிறது.
ஒவ்வாமை, குளிர்ந்த நிலை ஆகியவற்றால் குறட்டை ஏற்படுகிறது. மஞ்சளை பயன்படுத்தி குறட்டையை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையானவை: மஞ்சள், ஏலக்காய், தேன்.
செய்முறை: கால் ஸ்பூன் மஞ்சள் பொடி எடுத்துக்கொள்ளவும். இதில் ஏலக்காய் தட்டிபோடவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி தேன் சேர்க்கவும்.
இரவு தூங்கும் முன்பு தினமும் 50 மில்லி அளவுக்கு குடித்துவர குறட்டை ஒலி குறைந்து விடும்.
சளிக்கு மருந்தாக அமைகிறது. நெஞ்சு சளியை கரைக்கும். திப்லி பொடியை பயன்படுத்தி குறட்டைக்கான மருந்து தயாரிக்கலாம்.
அரை ஸ்பூன் ஆலிவ் ஆயில் எடுத்து கொள்ளவும். இதனுடன் சிறிது திப்லி பொடி, தேன் சேர்க்கவும். இதை அனைத்தும் ஒரு ஸ்பூன் வரும் அளவுக்கு எடுத்து இரவு தூங்கப்போகும் முன்பு சாப்பிட்டு வர குறட்டை குறையும்.
பசும் நெய்யை நன்றாக உருக்கி இளம் சூடாக இரவு நேரத்தில் மூக்கில் ஓரிரு சொட்டு விட்டு உறிஞ்சுவதால் குறட்டை ஒலி குறையும். காலை வேளையிலும் இதேபோல் செய்து வந்தால் நாளடைவில் குறட்டை பிரச்சனை தீரும்.
அருகம்புல்லை பயன்படுத்தி தோல் நோயை தடுக்கும் மருத்துவத்தை காணலாம். எளிதாக கிடைக்க கூடிய அருகம்புலுடன், மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசு குளிப்பதால் தோல் நோய் வராமல் தடுக்கலாம்...
20 நாட்களில் 10கிலோ எடை குறைக்கும் சீரகம்...
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?
அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்..
சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அது மட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.
உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.
* சீரக தண்ணீர் : 2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
* சீரகப் பொடி மற்றும் தயிர் மற்றொரு வழி : சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
* சீரகப் பொடி மற்றும் தேன் : 1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
* சூப்புடன் சீரகப் பொடி: உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
* எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும்.
அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
* தொப்பையைக் குறைக்கும்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது.
இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
* சீரகத்தின் வேறுசில நன்மைகள் மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு...
Subscribe to:
Posts (Atom)