21/01/2018
சங்கீதம் என்பது சரீரம், சாரீரம், சுருதி, லயம் இவைகளைக் கொண்டது...
சரீரம் : சரீரம் என்றால் உடம்பு. உடம்பு நன்றாய் இருந்தால் தான் சாரீரம் நன்றாக இருக்கும்
சாரீரம் : சாரீரம் என்றால் குரல். குரல் நன்றாக இருந்தால்தான், சுருதி நன்றாக சேரும். குரலை ஸாதக பலத்தால் நன்றாக வளமடையச் செய்ய முடியும்
சுருதி : சுருதி என்பது, மந்திரஸ்தாயி ஷட்ஜம் (ஸ) மத்யஸ்தாயி பஞ்சமம் (ப) தாரஸ்தாயி ஷட்ஜம் (ஸ்) இந்த மூன்று ஸ்வரங்களும் சேர்க்கம் இனிமையாய் ஒலிப்பதாகும். முக்கியமாகக் காது நன்றாய் கேட்க வேண்டும். பாடும் போதோ, வாத்யங்களில் வாசிக்கும் போதோ, சுருதியை நன்றாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சுருதியை தாயாருக்குச் சமமாகச் சொல்லப்படுகிறது.
லயம் : லயம் என்றால் தாளம். எண்ணிக்கையின் சமமான இடைவெளியை குறிக்கும். தாளத்தை தகப்பனாருக்கு சமமாக குறிப்பிடுவார்கள்.
கர்னாடக சங்கீதம் : கர்னாடக சங்கீதம் என்பது, ஸ்வராளி வரிசைகள், கீதங்கள், வர்ணங்கள், ராக ஆலாபனை, நிரவல், கல்பனா ஸ்வரங்கள் முதலிய அம்சங்களைக் கொண்டதாகும்...
பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவில்.. கொள்ளையன் யார் என்று கண்டுபிடி?
பஸ்ல போனா பயண கட்டணத்தை பல மடங்கு உயர்த்துறாங்க..
பைக்ல போனா போலீஸ் தொல்லை இன்சூரன்ஸ்க்கு வருசாவருசம் ஆயிரம் ரூபாய் அழனும்..
கார்ல போனா வழிப்பறி கொள்ளையர்களைப் போல் 50 கி.மீ க்கு ஒரு கட்டணவசூல் மையம்..
பெட்ரோல் டீசல் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு..
இது பத்தாதுனு GST 18% - 28%..
சம்பாதிக்கிற காசுல வேற income tax 30% வரை..
இதுல கார், பைக் வாங்குனா road tax , compulsory vehicle insurance..
இதையும் மீறி சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்திருந்தால் Property க்கு tax கட்டணும்..
ஒரு பக்கம் பேங்குல காசு போட்டாலும் servive கட்டணம் பணம் எடுத்தாலும் service கட்டணம்..
ATM கார்டுக்கு வருசத்துக்கு usage கட்டணம்..
Balance குறைந்தால் கட்டணம்..
Message அனுப்ப கட்டணம்..
இப்படி எட்டு பக்கமும் பிச்சுப்புடுங்குற கூட்டத்துக்கு நடுவுல வாழுறோம்..
இத விடவா வேற எதாச்சும் திருடன் வந்து நம்ம கிட்ட இருக்கறத திருடிற முடியும்...
சந்தைக்கு வந்த சத்துணவு முட்டைகள் : வால்பாறையில் அமோக விற்பனை...
வால்பாறையில், சந்தைக்கு வந்த சத்துணவு முட்டைகளால், மக்கள் ஆவேசமடைந்தனர். கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சியில், மொத்தம் 21 வார்டுகளில், 91 சத்துணவு மையங்கள் உள்ளன. இந்த சத்துணவு மையங்களில், 4,200 மாணவர்களுக்கு, தினமும் சத்துணவு வழங்கப்படுகிறது. வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை, ஐந்து நாட்களும், சத்துணவுடன் முட்டையும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சமீப காலமாக வால்பாறை சத்துணவு திட்டத்தில், பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. இதை நகராட்சி அதிகாரிகளும் கண்டு கொள்ளாததால், அரிசி முதல் முட்டை வரை சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, சத்துணவு அரிசி, 10 ரூபாய்க்கும், சத்துணவு முட்டை, மூன்று ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள வீடு, கடைகளுக்கு முட்டை விற்பனையாகிறது.சத்துணவு திட்டத்தை கண்காணிக்க மேலாளர், மேற்பார்வையாளர் பணியிடங்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாகவே உள்ளது. இதனால், முறைகேடுகள் அதிக அளவில் நடக்கிறது. இதை நகராட்சி அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.
நகராட்சி கமிஷனர் சம்பத்குமாரிடம் கேட்டபோது, ''மாவட்டத்தில் உள்ள நகராட்சியில், வால்பாறையில் தான் அதிக சத்துணவு மையங்கள் உள்ளன.
சத்துணவு திட்ட மேற்பார்வையாளர், மேலாளர் பணியிடங்கள், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாகவே உள்ளது.
சத்துணவு மையங்களில் அரிசி, முட்டை போன்றவை வெளிமார்க்கெட்டில் முறைகேடாக விற்பதை தடுக்க முடியவில்லை. இது குறித்து, தனி கூட்டம் நடத்தி எச்சரிக்கை விடுக்கப்படும், என்றார்...
அனைத்து இயக்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் இறந்து போன விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி கருப்பு பட்டை அணிந்து ஊர்வலம்...
நாள்: செவ்வாய் கிழமை.
தேதி: 23/01/2018.
இடம்: அரியலூர் மாவட்டம்
திருமானூர் எம்.ஜி.ஆர் சிலையிலிருந்து பேருந்து நிலையம் வரை..
நேரம்: காலை 10 மணி..
சிறப்பு அழைப்பாளர்கள்...
க.கா.இரா.இலனின்
அக்குபங்சர்
மருத்துவர்,
நிறுவன தலைவர்,
பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம்
தஞ்சை.
வெ.ஜீவக்குமார், வழக்கறிஞர்,
தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் செயலாளர்
தஞ்சை.
சாமி நடராஜன்
தமிழ்நாடு விவசாய சங்க தஞ்சை மாவட்ட செயலாளர்.
மூ.மணியன்
அரியலூர் மாவட்ட தமிழ்நாடு விவசாய சங்க தலைவர்.
ஏ.கே.இராஜேந்திரன்
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விவசாய சங்க தலைவர்.
தங்க சண்முக சுந்தரம்
அக்குபங்சர் மருத்துவர்,
அகில இந்திய மக்கள் சேவை இயக்க நிறுவன தலைவர்
அரியலூர் மாவட்டம்.
நல்லதுரை, வழக்கறிஞர்,
நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்
தஞ்சை.
வி.செல்வராஜ்
சித்த
மருத்துவர்
அகில இந்திய மக்கள் சேவை இயக்க தஞ்சை மாவட்ட தலைவர்.
தங்க சரவணன்
அகில இந்திய மக்கள் சேவை இயக்க செயலாளர்.
மு.வரதராஜன்
நிறுவன தலைவர்
அரியலூர் மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு சேவை சங்கம்.
பாளை திருநாவுக்கரசு
சமூக ஆர்வலர்.
அ. காசி பிச்சை
கால்நடை மருத்துவர்.
அ.எழிலன்பன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
அகில இந்திய மக்கள் சேவை இயக்கம்.
பஞ்ச நாத கணபதி
அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
அகில இந்திய மக்கள் சேவை இயக்கம்.
உள்ளிட்ட ஏராளமான விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்...
பேருந்து கட்டண உயர்வு : சமூக வலைதளங்களில் பரவும் விஜயகாந்தின் vs திமுக ஸ்டாலின் புகைப்படம்...
தான் எதிர்கட்சி தலைவராக இருந்த போது சட்டமன்றத்தில்... 29 எம்எல்ஏக்களை வைத்திருந்த விஜயகாந்தின் ஆளுமை கொண்ட ஜெயலலிதாவை எதிர்த்தார்...
90 க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை வைத்துள்ள திமுக ஸ்டாலின் ஜெயலலிதா தற்போது இல்லை என்ன செய்யப் போகின்றார் என்ற கேள்வியுடன் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது...
இறந்த பிறகு என்ன நடக்கும்.?
வாழ்வில் நீங்கள் பிறப்பைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. அது நடந்து முடிந்து விட்டது.
அதைப்போல் வாழ்வைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. அது நடந்து கொண்டே இருக்கிறது.
அதேபோல் இறப்பைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. ஏனெனில் அது தவிர்க்க முடியாதது.
அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். பின்பு எதைக் கண்டு அஞ்ச வேண்டும்?
நான் பிறக்கும் போது எந்தக் கவலையையும் சுமந்திருக்கவில்லை. எந்த மாதிரியான தொந்தரவுகளை சந்திக்கப் போகிறோம் என்று எண்ணவில்லை.
அப்போது நான் என்ற உணர்வு கூட என்னிடம் இருந்ததில்லை. அதைப்போல இறக்கும் போதும், அதே உணர்வுடன் தான் இறப்பேன், என்று எண்ணுங்கள்.
இறந்த பிறகு என்ன நடக்கும்.?
இதற்குப் போய் உன் நேரத்தை வீணடிக்காதே. நீ கல்லறையில் படுத்திருக்கும் போது அதைப்பற்றி சிந்தித்துக் கொள்ளலாம். இப்போது ஏன் நீ அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டும்...
வரலாற்று தலைவர்களின் நினைவை போற்றும் கிராமம் -- பெரியபோது...
ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட பெரியபோது கிராமத்தில் தெருக்களுக்கு வரலாற்று தலைவர்களின் பெயரை சூட்டி பெருமை சேர்த்துள்ளனர். ஆனைமலை ஒன்றியத்தில் பெரியபோது ஊராட்சி, அங்கு செல்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அங்குள்ள தெருக்களுக்கு வரலாற்று தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாக உள்ளது. பெரியபோது ஊராட்சியில், பெரியபோது, காந்தி ஆசிரமம், சித்தாண்டிகவுண்டன்புதூர் என்ற மூன்று கிராமங்களையும், ஒரு ஆண்டிற்கு முன்பு புதிதாக உருவாக்கப்பட்ட அம்மன் நகர் என்ற பகுதியையும்
கொண்டது.
இந்த ஊராட்சியில் மக்கள் ஐந்தாயிரம் பேரும், மூவாயிரத்து 500 வாக்காளர்களையும் கொண்டுள்ளது. இக்கிராமத்தில் 15 தெருக்கள் உள்ளன. காமராஜர் வீதி, இந்திராகாந்தி வீதி, பாரதியார் வீதி, கஸ்தூரிபாய் வீதி, குமரன் வீதி, விவேகானந்தர் வீதி, நேரு வீதி, ராஜாஜி வீதி, திருவள்ளுவர் வீதி, திருஞானசம்பந்தர் வீதி, வினோபா வீதி போன்ற வரலாற்று தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.பி.கே.பி. வீதி, நல்லண்ணகவுண்டர் வீதி, கிருஷ்ணசாமி வீதி போன்ற பெயர்களையும் கொண்டுள்ளது. கடைசி மூன்று பெயருள்ள தெருக்கள் பெரியபோது கிராமத்திற்கு இடம் கொடுத்தவர்களின் பெயர்கள். இதுவரை இந்த ஊராட்சிக்கு தற்போது உள்ள ஊராட்சி தலைவரையும் சேர்த்து நான்கு பேர் தலைவர்களாக இருந்துள்ளனர்.
இதில் பழனிச்சாமி என்பவர் மூன்று முறை தலைவராக இருந்துள்ளார். முன்னாள் ஊராட்சித்தலைவர்கள் சுப்பையர், ராதா கலையரசி ஆகியோரும் இருந்துள்ளனர். தற்போது ராதாகண்ணன் என்பவர் ஊராட்சியின் தலைவராக உள்ளார். மற்ற ஊராட்சிகளுக்கு முன்னுதாரணமாக அனைத்து வீடுகளிலும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள மூன்று கிராமங்கள் முழு சுகாதார கிராமம் என்ற சான்றிதழையும் டில்லியில் நடந்த விழாவில் பெற்றுள்ளது. அதில் பெரியபோது கிராமமும் உள்ளது. ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கழிப்பிட வசதி ஏற்படுத்த ஊர் பொது மக்கள் நன்கொடை வழங்கி அதன் மூலம் திட்டம் நிறைவடைந்துள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 1956ம் ஆண்டு காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியபோது ஊராட்சி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3333 ஆகும். இவர்களில் பெண்கள் 1642 பேரும் ஆண்கள் 1691 பேரும் உள்ளனர்.
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்:
சித்தாண்டிகவுண்டண்புதூர்
காந்திஆஸ்ரமம்
பெரியபோது
பெரியபோது ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தினமும் காலை வழிபாட்டில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பாடல் பாடப்படுகிறது. பொள்ளாச்சி அடுத்துள்ள பெரியபோது ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு தமிழின் சிறப்பை விளக்கும் வகையில், செம்மொழி மாநாட்டு பாடல் கற்பிக்கப்படுகிறது. தினமும் காலை பிரார்த்தனை கூட்டத்தின்போது, மாநாட்டு பாடலையும் பாடி மாணவர்கள் அசத்துகின்றனர்.
பள்ளி தலைமையாசிரியர் திருநாவுக்கரசு கூறியதாவது:
செம்மொழி மாநாடு குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிப்பது மட்டுமின்றி, பாடலையும் பாட வைத்தால், நாளடைவில் அவர்களுக்கு தமிழின் சிறப்பு தெரியவரும். தமிழ் மீது அவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே, செம்மொழி மாநாட்டு பாடல் துண்டு பேப்பர் மூலமாக அனைத்து மாணவர்களுக்கும் வினியோகிக்கப்பட்டுள்ளது; பாடவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.தினமும் காலையில் கூட்டுப் பிரார்த்தனையின் போது, மாணவர்கள் அந்த பாடலை பாடி வருகின்றனர். தமிழ்தாய் வாழ்த்துக்கு அடுத்தப்படியாக செம்மொழி மாநாடு விளக்கப்பாடல் பாடப்படுகிறது. பின்னர், உறுதிமொழி, தேசியகீதத்துடன் பிரார்த்தனை கூட்டம் முடிவடைகிறது. இவ்வாறு, தலைமையாசிரியர் தெரிவித்தார்.
பெரியபோது ஊராட்சியில் நுழைந்ததும் ரோட்டோர குப்பைகள் நம்மை வரவேற்றது. முகம் சுளித்துக் கொண்டு ஊராட்சிக்குள் சென்றதும் அழகுச் செடிகள் சூழ வரவேற்கிறது ஊராட்சி அலுவலகம். அதேபோன்று, அழகுச் செடிகள் சூழ்ந்த நுாலகமும், ஆபத்தை வரவேற்கும் பாதுகாப்பு வேலி இல்லா பொதுக்கிணறும் கண்ணில் பட்டது. ஊருக்குள் சுற்றிய போது, திறந்த வெளி கழிப்பிடமில்லாத ரோடுகள், எல்.இ.டி., தெருவிளக்குகள், உயர்நிலைப் பள்ளி போன்ற வசதிகள் நிறைவு செய்யப்பட்டிருந்தன. மக்களிடம் பேசிய போது, 'எங்கள் ஊரில் அனைத்து வசதிகளும் உள்ளது, குப்பையைத் தவிர வேறு எந்த பிரச்னையும் இல்லை' என பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியபோது ஊராட்சியில், ஒன்பது வார்டுகளில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். விவசாயம், விவசாயகூலி மற்றும் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்து வாழ்கின்றனர் மக்கள்.ஊராட்சியில் நுாலகம், உயர்நிலைப் பள்ளி, வறுமை ஒழிப்புத் திட்ட கட்டமைப்பு, சேவை மையம், தரமான ரோடுகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளது. ஆனால், சில காட்சிப்பொருள் கட்டமைப்புகளாலும், குப்பை மற்றும் குடிநீர் பிரச்னையாலும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.ஊராட்சியில் மொத்தம், 33 ரோடுகள் உள்ளன. தேசத் தலைவர்களான காமராஜர், நேரு உள்ளிட்டோரின் பெயர்கள் ரோடுகளுக்கு சூட்டப்பட்டுள்ளன. மெயின் ரோடுகள் தார் ரோடாகவும், மற்ற இடங்கள் கான்கிரீட் ரோடுகளாகவும் அமைக்கப்பட்டுள்ளன. ரோடுகள் அனைத்தும் குண்டும், குழியுமின்றி பளிச்சிடுகின்றன.
குடிநீர் சப்ளைபெரியபோது ஊராட்சிக்கு வேட்டைக்காரன்புதுார் - ஒடையகுளம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம், நான்கு மேல்நிலைத் தொட்டி, மூன்று தரைமட்ட தொட்டிகளில் குடிநீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு வாரத்துக்கு ஒருமுறை வினியோகம் செய்யப்படுகிறது.குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட, எட்டு ஆழ்குழாய் கிணறுகளில் தற்போது ஆறு இடங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. இதன் மூலம் நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், நேரு வீதியிலுள்ள கைப்பம்புடன் கூடிய ஆழ்குழாய் கிணறு, ஒரு மாதமாக பழுதடைந்துள்ளது. பொதுமக்கள் குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்கு அருகிலுள்ள தெருக்களுக்குச் சென்று தண்ணீர் எடுக்கின்றனர். நுாலகம்ஊராட்சி அலுவலகம் அருகில், 3.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்கள் வசதிக்காக நுாலகம் கட்டப்பட்டது. பல ஊராட்சிகளில் நுாலகம் யாருக்கும் பயன்படாமல் பூட்டிக்கிடக்கும் நிலையில் பெரியபோது நுாலகத்தை, ஊராட்சி நிர்வாகத்தினர் சிறப்பாக பராமரிக்கின்றனர்...
- காரிடிவி
கவனத்தைக் கவர விரும்பாதே...
உன்னைப் பற்றி யாருமே தெரிந்து கொள்ளாத வகையில் உன் வாழ்க்கையை அமைத்துக் கொள்.
நீ இந்த உலகத்தில் இல்லாதது போலவே உன் வாழ்க்கை இருக்கட்டும்.
உன்னுடைய நடவடிக்கைகள் ஒருவருக்கும் தெரியாமல் இருக்கட்டும்.
நீ இங்கு இருப்பதே ஒருவருக்கும் தெரிய வேண்டாம்.
ஆன்மிகத்தின் வெடிப்பை அப்போது தான் உன்னால் அடைய முடியும்.
இல்லையென்றால், அகந்தை எப்போதும், ஒரு கடினமான பாறையாகச் செயல்பட்டு, அந்த வெடிப்பைத் தடுத்து நிறுத்தி விடும்.
நீ எதற்காக கவனிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறாய்?
ஏனென்றால், நீ யார் என்பதைப் பற்றி உனக்கு நீயே ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
அப்படியானால், நீ கவனிக்கப்படுவதன் மூலம், நீ யார் என்பது எப்படிப் புலனாகும்?
நீ உன்னைப் பற்றிக் கண்ணாடியில் பார்ப்பதால் தெரிந்து கொள்ள முடியாது.
அவர்கள் உன்னை பாராட்டுகிறார்களோ, விமர்சிக்கிறார்களோ, அந்தக் கண்கள் கண்ணாடியைவிட மேம்பட்டதாக இருக்க முடியாது, நண்பர்கள், எதிரிகள் அனைவருமே கண்ணாடிகள் தான்.
நீ உன்னைப் பற்றி, நேரடியாக, உடனடியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நீ உள்ளுக்குள் செல்ல வேண்டும்.
கவன ஈர்ப்பில் தான் அகந்தை வாழ்கிறது. அது ஒரு தவறான விஷயம். அதைப் புரிந்து கொண்டு, அதிலிருந்து வெளியே வாருங்கள்.
நீ அதிலிருந்து மீண்டுவிட்டால், வித்தியாசமான ஒரு அமைதியும், நிம்மதியும், சாந்தமும் உனக்கு ஏற்படும்.
இயற்கையான, தங்குதடையற்ற ஒரு பரமசுகம் உனக்குள் பொங்கத் தொடங்கும்.
ஓர் உட்புற நடனம் சம்பவிக்கும். உட்புற நடனம் மட்டுமே, தன்னை மறந்த ஒரு நிலை அங்கே இருக்கும்.
அதை நீ அடையாத வரையில், நீ வாழ்வது போலியான வாழ்க்கை.
நீ யாரையும் ஏமாற்றவில்லை. ஆனால், உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கிறாய்...
தமிழர் நீர் நிலைகள்...
ஒரு சின்ன குழாயில் நீர் பிடிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47...
(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்..
(2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது..
(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு..
(4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி..
(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்..
(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு..
(7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை..
(8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது..
(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்..
(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்..
(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு..
(12) கடல் (Sea) - சமுத்திரம்..
(13) கம்வாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்..
(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு..
(15) கால் (Channel) - நீரோடும் வழி..
(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி..
(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை..
(18) குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை..
(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை..
(20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்..
(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு..
(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று..
(23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை..
(24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு..
(25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்..
(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை..
(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு..
(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை..
(29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை..
(30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்..
(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்..
(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை..
(33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்..
(34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்..
(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்..
(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்..
(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு..
(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்..
(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு..
(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு..
(41) பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை..
(42) மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்..
(43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு..
(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை..
(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்..
(46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்..
(47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள்...
சட்டநாதன் ஆணையம் என்ன ஆனது?
தமிழக இட ஒதுக்கீட்டில் எப்படி வந்தேறிகள் புகுந்தார்கள் என்று தெரியுமா?
இதோ தமிழர் இனத்துக்கும், எம் மக்களுக்கும் திராவிட அரசியல் செய்த துரோக வரலாறு...
1972 - ல் கொண்டு வந்த " சட்டநாதன் ஆணையத்தின் " பரிந்துரைகளைத் தமிழ் நாட்டில் நடைமுறைக்கு கொண்டு வந்தாலே மள்ளர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தமிழ்ச் சமூகங்களுக்கான உரிய பங்குகள் எல்லாத் துறைகளிலும் கிடைக்கப் பெறும்.
ஆகவே தமிழ்நாடு அரசு தமிழ் மக்களின் நலன் கருதி "சட்டநாதன் ஆணையத்தின்" பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும்.
தமிழர்கள் இதற்கான போராட்டத்தை துரிதப்படுத்தி காலத்தின் அவசியத்தை புரிந்து கொண்டு போராட முன் வர வேண்டும்.
சட்டநாதன் ஆணையம் என்றால் என்ன?
அந்த ஆணையம் என்ன ஆனது?
இதன் முக்கியத்துவம் என்ன?
இந்த ஆணையத்தை கிடப்பில் போட்டுத் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்த துரோகி யார்?
இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியவர், திருவாரூரை சேர்ந்த திருவாளர் கருணாநிதி மட்டுமே...
1956 - ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் கர்நாடகாவில் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட கன்னடச் சாதிகள் மட்டுமே மாநில பட்டியல்களில் இடம்பெற்றது, கன்னடர் மட்டுமே அரசு வேலை மற்றும் அரசாங்க பிரதிநிதிகளாக இருக்க வகை செய்தது கர்நாடகம். அங்கு உள்ள பட்டியல்களில் எந்தவொரு தமிழ்ச் சாதிகளும் இடம் பெற முடியாது. தாழ்த்தப்பட்டவர் இட ஒதுக்கீட்டில் கன்னடர் அல்லாத பிற மாநில தாழ்த்தப்பட்டோருக்கு இடமில்லை.
அவ்வாறே ஆந்திராவில் தெலுங்கைத் தாய் மொழியாகவும், கேரளாவில் மலையாளத்தை தாய்மொழியாகவும் கொண்டவர்கள் மட்டுமே அந்தந்த மாநில பட்டியல்களில் இடம் பெற வகை செய்யப்பட்டது.
இதே நிலைபோல் தமிழகத்திலும் தமிழ்ச் சாதிகளை மட்டுமே பட்டியல்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து அதன் அடிப்படையில் "சட்டநாத ஆணையம் " 1972 - இல் மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.ஆட்சியின் போது நீதிபதி சட்டநாதன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு அனைத்து பட்டியல்களில் உள்ள தமிழ்ச் சாதிகளை இனம் கன்டு புதிய பட்டியல் உருவாக்குவதற்க்கான திட்டம் வகுக்கப்பட்டது.
சட்டநாதன் ஆணையம் அனைத்து பட்டியலில் உள்ள தமிழ்ச் சாதிகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, அந்தந்தச் சாதிகளைப் பற்றிய முழு விவரங்களையும் தொகுத்து ஆங்கிலத்தில் 300 பக்கங்களை கொண்ட அறிக்கையைத் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.
அனைத்து பட்டியல்களிலும் தமிழ்ச் சாதிகளை மட்டுமே கொண்ட அந்த அறிக்கையில் தனது சாதியான "சின்ன மேளம்" (இசை வேளார்) என்ற தெலுங்குச் சாதி இடம் பெறாதது கண்டு அதிர்ச்சி அடைந்த மு. கருணாநிதி 'அறியாமையில் பெரும் பிழை செய்து விட்டோமே' என அஞ்சி சட்டநாதன் ஆணையத்தின் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டு இருட்டடிப்புச் செய்துவிட்டார்.
தற்போது இருக்கக்கூடிய அனைத்து பட்டியல்களிலும் ( SC,ST,BC,MBC) தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவிகளை தமிழர்கள் இருக்கக்கூடிய இடங்களில் அந்நிய மொழியினரான தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும், மார்வாடிகளும், செளராட்டிரர்களும், 'இந்தி'யர்களும்தான் வலுவாக அமர்ந்து கொண்டு வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இடத்தை பறிகொடுத்த தமிழர்கள் ஏமாளிகளாகத் தேர்வு எழுதிக் கொண்டே தெருவில் திரிகிறார்கள்.
ஆகையால் தமிழ் மக்களின் நலன் கருதி மீண்டும் நமக்குரிய அதிகார பங்கினை மீட்டெடுக்க. " சட்டநாதன் ஆணையத்தை" தமிழகத்தில் நடைமுறைப்படுத்த
தமிழர் அமைப்புகள் அனைத்தும் இந்த போராட்டத்தை வீரியத்துடன் முன்னெடுத்து போராட வேண்டும்.
-வாலறிவன்
தமிழ் நாட்டில் தலித் அரசியல் பேசுவோர் தமிழர் நலனில் கவனம் செலுத்த மாட்டார்கள், தாழ்த்தப்பட்ட தமிழரை ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளாகவே பார்பார்கள்.
தமிழர் அல்லாதோரின் நலனுக்காக கட்சி கண்ட திராவிட அரசியல் கட்சிகளும் இதை கண்டுகொள்ளாது.
திராவிட இயக்கம் இந்த 'தமிழர் உரிமை மறுப்பை' ஆதரித்து சட்டநாதன் ஆணையத்தையே இனவாதம் என்று கருத்தாக்கம் செய்ய துணியும்.
தமிழ் தேசிய அரசியலில் மட்டுமே இந்த தமிழர் உரிமையும் நிலைநாட்டப்படும்...
Rs75,000 லஞ்சம் பெற்றதாக தஞ்சை மாநகராட்சி ஆணையர் வரதராஜன் கைது...
வரியை குறைத்து வசூலிக்க சம்பந்தம் என்பவரிடம் Rs75,000 லஞ்சம் பெற்றதாக புகார்.
மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
மாநகராட்சி அலுவலகத்திலேயே மாநகராட்சி ஆணையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
லஞ்சம் பெற்ற விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட நாகராஜ் என்பவரும் கைது...
இலுமினாட்டி களின் சாகர்மாலா திட்டம்... விரைவில் ராணுவ கட்டுப்பாட்டில் வரப்போகும் தமிழகம்...
கார்ப்பரேட் கைக்கூலிகளாக பாஜக காங்கிரசின் சதி திட்டங்கள்...
Subscribe to:
Posts (Atom)