27/01/2018
செம்மரக்கடத்தல் வழக்கில் சிக்கிய தி.மு.க ஒன்றியச் செயலாளர் எங்கே? ஆந்திராவில் காட்டும் செல்போன் சிக்னல்...
செம்மரக்கடத்தல் வழக்கில், குண்டர் சட்டத்தில் கைதான வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபுவை கடந்த 4 நாள்களாகக் காணவில்லை என்று அவரது மனைவி பிரேமலதா, போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றிய தி.மு.க செயலாளர், பாபு. இவர் மனைவி பிரேமலதா. இவர், கடந்த 24-ம் தேதி அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரில், "எனது கணவர் பாபு, கடந்த 10 ஆண்டுகளாக அணைக்கட்டு ஒன்றிய தி.மு.க செயலாளராக இருந்து வருகிறார். அணைக்கட்டு - ஒடுக்கத்தூர் செல்லும் சாலையில், ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். எங்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். எங்கள் மகள், நாமக்கல்லில் பிளஸ் டூ படிப்பதால், அவருடன் நான் தங்கியிருக்கிறேன். மகனும், பாபுவும் காட்பாடியில் தங்கியுள்ளனர். கடந்த 22-ம் தேதி இரவு, பாபுவுடன் போனில் பேசினேன். அன்றைய தினம் அவர் வீட்டுக்குச் செல்லவில்லை என்று என் மகன் என்னிடம் கூறினார். இதனால், 23-ம் தேதி அவருடைய செல்போனில் தொடர்புகொண்டேன். ரயிலில் வீட்டுக்குச் செல்வதாக மட்டும் கூறினார். அதன்பிறகு, அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதனால், என்னுடைய கணவரை யாராவது கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, வேலூர் மாவட்ட எஸ்.பி., பகலவன் உத்தரவின்பேரில், இரண்டு தனிப்படை அமைத்து, மாயமான பாபுவைத் தேடிவருகின்றனர். பாபுவின் மனைவி பிரேமலதாவிடம் போலீஸார் விசாரித்தபோது, அவருடைய செல்போனில் தொடர்பு கொண்டபோது, தெலுங்கில் தகவல் சொல்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால், பாபுவின் செல்போன் ஆந்திராவில் இருக்கலாம் என்று கருதிய வேலூர் போலீஸார், அந்த மாநில போலீஸாரிடம் விசாரித்துள்ளனர்.
யார் இந்த பாபு?
அணைக்கட்டு ஒன்றியத்தின் தி.மு.க செயலாளரான பாபு மீது செம்மரக்கடத்தல் வழக்கு உள்ளது. மேலும், வேலூர் மாவட்டத்தில் செம்மரக்கடத்தல் வழக்கில் சிக்கிய நடனக்கலைஞர் மோகனாம்பாளுக்கும் பாபுவுக்கும் செம்மரக்கடத்தல்ரீதியான பழக்கம் இருந்துவந்ததது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பாபுவைக் கைதுசெய்த போலீஸார், 2014-ம் ஆண்டு அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளியில் வந்ததும், மீண்டும் ஒன்றியச் செயலாளர் பதவி பாபுவிடமே ஒப்படைக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலில் அணைக்கட்டுத் தொகுதியில் போட்டியிட பாபுவும் கட்சித் தலைமையிடம் விருப்பமனு கொடுத்தார். ஆனால், மாவட்டச் செயலாளரான நந்தகுமாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், நந்தகுமாரின் அலுவலகம் அடித்து உடைக்கப்பட்டது. அதில், பாபு மீது சந்தேகம் எழுந்தது. இருப்பினும் உள்கட்சி விவகாரம் பெரிதுப்படுத்தப்படவில்லை. இருப்பினும் நந்தகுமார், தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ., ஆனார்.
இதையடுத்து, அணைக்கட்டுப் பகுதியிலிருந்து காட்பாடிக்கு பாபு இடம்பெயர்ந்தார். குழந்தைகளின் கல்விக்காக இடம்பெயர்ந்ததாக பாபு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், செம்மரக்கடத்தல் வழக்கில் தொடர்புடைய பாபுவை விசாரணைக்காக ஆந்திர மாநில போலீஸார் அணைக்கட்டில் உள்ள அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்ததால், குடிபெயர்ந்ததாகத் தகவல் வெளியாகின. பாபுவைப் பொறுத்தவரை அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்வதுண்டு. இரண்டு நாளுக்குப் பிறகு, அவர் வீட்டுக்கு வந்துவிடுவார். ஆனால், இந்த முறை நான்கு நாள்களாகியும் பாபு வீட்டுக்கு வரவில்லை. அதனால்தான், அவரது மனைவி பிரேமலதா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
ஆந்திராவில் செல்போன் சிக்னல்
பாபு மாயமான தகவல், வேலூர் மாவட்ட தி.மு.க-வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செம்மரக்கடத்தல் வழக்குத் தொடர்பாக, பாபுவை ஆந்திர மாநில போலீஸார் விசாரணைக்கு அழைத்துச்சென்றிருக்கலாம் என்ற தகவல் வெளியானது. ஆனால், அதை ஆந்திர மாநில போலீஸார் உறுதிப்படுத்தவில்லை. வேலூர் மாவட்ட போலீஸாருக்கும் பாபுகுறித்த முழுவிவரம் தெரியவில்லை. மாயமான பாபுவை தொழில்போட்டி காரணமாக யாராவது கடத்தினார்களா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்துவருகின்றனர். பாபுவின் செல்போன் சிக்னல், அவரது செல்போனுக்கு கடைசியாக வந்த அழைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில், வேலூர் மாவட்ட போலீஸார் விசாரித்துவருகின்றனர். பாபுவின் மனைவி கூறியதன் அடிப்படையில், அவரது செல்போன் சிக்னல் ஆந்திராவில் காட்டியதா என்றும் போலீஸார் விசாரித்துள்ளனர்.
பாபுவின் பின்புலம்...
பாபுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "கடந்த 92-ம் ஆண்டில், சந்தனமரக்கடத்தலில் ஈடுபட்டுள்ளார். அதுதொடர்பாக வனத்துறையினர் பாபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு, செம்மரக்கடத்தலில் கால் பதித்துள்ளார். அதன்மூலம் கோடிக்கணக்கில் பணம் பாபுவிடம் புரளத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இதனால், அணைக்கட்டுப் பகுதியிலிருந்து காட்பாடிக்கு இடம்பெயர்ந்தார். அங்கு, லட்சக்கணக்கான மதிப்பில் பங்களா வீட்டைக் கட்டியுள்ளார். அணைக்கட்டுப் பகுதியிலும் பாபுவுக்கு சகல வசதிகளுடன்கூடிய வீடு உள்ளது. நடனக் கலைஞர் மோகனாம்பாளின் உறவினர் சரவணனுடன் பாவுக்கு அறிமுகம் கிடைத்துள்ளது. அவர்கள் இருவரும் செம்மரக்கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில், செம்மரங்களைப் பதுக்கிவைக்க குடோனை பாபுவின் கூட்டாளிகள் வைத்துள்ளனர்" என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன...
கடலூரில் ஓசியில் வாழைப்பழம் தர மறுத்த திருநங்கையை தாக்கிய திமுக பிரமுகர்கள்...
கடலூர் மொழிப்போரில் உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் வருடந்தோறும் ஜனவரி 25ந் தேதி வீரவணக்க நாள் நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது.
தமிழுக்காக மாணவர் ராசேந்திரன் உயிரைக் கொடுத்த வீரமண்ணான கடலூர் மாவட்டத்தில் வீரவணக்க நாள் உரையாற்ற மு.க ஸ்டாலின் கடலூர் மஞ்சை நகர் திடலுக்கு நேற்று (ஜனவரி 25-ம் தேதி) மாலை வந்திருந்தார் தலைவரே வருங்கால முதல்வரே வருக என வண்ண பேனர்களால் அலங்கரிக்கப்பட்டு உற்சாக வெள்ளத்தில் உரையாடிய திமுக ஸ்டாலின்..
ஜனவரி 26-ம் தேதி காலை சிதம்பரம் தில்லை நகரில் முன்னாள் சட்டமன்ற கொறடாவும் கழகத்தின் முன்னோடியான மருதூர் இராமலிங்கம் இல்லத் திருமண விழாவைத் தலைமையேற்று நடத்த இருக்கும் நிலையில் சில திமுக பிரமுகர்கள் குடிபோதையில் சுமங்கலி துணிக்கடை அருகில் உணவு அருந்திவிட்டு தள்ளுவண்டியில் ஓசியில் வாழைப்பழம் கேட்டு தகராறு செய்தனர் தர மறுத்த திருநங்கையை அடித்து உதைத்து தாக்கி உள்ளனர். திமுக பிரமுகர்கள் பிறகு மின்னல் வேகத்தில் சிதம்பரத்தை நோக்கி சென்றனர்.
காவல் துறைக்குத் தகவல் தருவதற்காக திருநங்கை முயற்சி செய்த போது கைபேசியை தூக்கிச் சென்றனர் காரில் வந்த பிரமுகர்கள். பழக்கடை முன் ஐம்பதிற்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஒன்று கூடியதால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது...
அகாரசாதகம்...
உயிரெழுத்துகளாகிய ஆ, ஈ, ஊ, என்ற அகார, இகார, உகார உயிரினாலேயே சுரங்களைப் பாடுதல் வேண்டுமென்பது நம் மூதாதியினர்களின் கருத்தாகும்.
அதாவது ஒவ்வொருவரின் தொண்டையிலிருந்து வரும் உயிரொலியானது சுருதியோடு ஒன்றி ஆ- என்றோ, ஈ-என்றோ, ஊ-என்றோ எது பொருந்துமோ அதைக் கூறி, ஏழிசைகளையும் இயற்றுதல் வேண்டுமாம்.
விளக்கம்...
ஸ, ரி, க, ம, ப, த, நி, ஸ்
ஆ, ஆ, ஆ, ஆ, ஆ, ஆ, ஆ
ஈ, ஈ, ஈ, ஈ, ஈ, ஈ, ஈ, ஈ
ஊ, ஊ, ஊ, ஊ, ஊ, ஊ, ஊ, ஊ
ஏ, ஏ, ஏ, ஏ, ஏ, ஏ, ஏ, ஏ
ஓ, ஓ, ஓ, ஓ, ஓ, ஓ, ஓ, ஓ
இவ்வாறு ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்று அகார, இகார, உகார முறையில் பாடும்போது, ஏழிசைகளும் இவ்வுயிர்களினால் தொடர்ந்து ஒலியோடு வரல் வேண்டும். இடைவெளிவிட்டுக் காணுதல் கூடாது.
இம்முறையை தான் “அகாரசாதம்” எனக் கூறுகின்றனர்...
கோவையைச் சேர்ந்த 98 வயதான நானம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது; யார் இந்த நானம்மாள்...
கோவையைச் சேர்ந்த 98 வயதான நானம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ள நிலையில், அவரது சாதனையைச் சற்று திரும்பி பார்ப்போம் கோவை மாவட்டத்தில் யோகா நானம்மாள் யார் என்று கேட்டாலே போதும், சிறிய எரும்பு கூட அவரது பெருமைகளை பறை சாற்றும். அந்த அளவுக்கு யேகாவில் கை தேர்ந்தவர். 98 வயதில் கீழே விழுந்து முதுகில் அடிபட்ட நிலையிலும் விடாமல் யோகா செய்து வருபவர்.
கோவை மாவட்டம் கணபதி பகுதியில் வசித்து வரும் நானம்மாள், பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ம் ஆண்டு பிறந்தவர். இவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தாத்தா மன்னார்சாமியிடம் இருந்து நானம்மாள் யோகாசன பயிற்சிகளைக் கற்றுக் கொண்டார். சிறிய வயதில் கற்ற பயிற்சிகளை முறையாக செய்யத்துவங்கிய நானம்மாள், அதை 98 வயது கடந்த போதிலும் விடுவதாயில்லை.
நானம்மாளுக்கு திருமணம் ஆன பிறகு, புகுந்த வீட்டில் அவரது யோகா பயிற்சியை சற்று விசித்திரமாகப் பார்த்திருக்கின்றனர். பிறகு, 'என்ன எப்போது பார்த்தாலும் கை, காலை ஆட்டிக்கொண்டிருக்கிறாய்?' என்று கேட்க ஆரம்பித்தனர். ஆனால், அந்த வீட்டில் இருந்த பெண்கள் சிலர் வயல் காட்டு வேலையை முடித்துவிட்டு வந்து உடல் வலி என்று அமரும்போது, அவர்களுக்கு சில பயிற்சிகளைச் சொல்லித் தருவேன். அவர்களது உடல் வலி சரியானபோது என்னை நம்ப ஆரம்பித்தார்கள். அதற்குப் பிறகு யாரும் என்னைத் தொந்தரவு செய்யவில்லை' என்று நினைவுகூர்கிறார் நானம்மாள்.
கணவர் சித்த வைத்தியர் என்பதால், அவர் நானம்மாளின் பயிற்சிக்கு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள். ஒட்டுமொத்தமாக 11 கொள்ளுப்பேரன் - பேத்திகள். 'கடந்த 15-20 ஆண்டுகளாகத்தான் யோகாசன பயிற்சியை பணம் வாங்கிக்கொண்டு சொல்லித்தருகிறோம். அதற்கு முன்பாக இலவசமாகத்தான் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள்தான் அப்போது கற்றுக்கொண்டார்கள்' என்கிறார் நானம்மாள்
யோகாசன பயிற்சியின் காரணமாகவே இதுவரை தான் மருத்துவமனைகளை நாடியதில்லை என்கிறார் நானம்மாள். தனது குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவருமே சுகப்பிரசவம் மூலமே குழந்தைகளைப் பெற்றனர். அதற்குக் காரணம் யோகா பயிற்சிதான் என்கிறார் நானம்மாள்.
இவருடைய நல்ல உள்ளத்துக்கும் யோகாவுக்கும் ஏற்றார் போல், இவரது கணவர் சித்த வைத்தியராக அமைந்தார். அவர், நானம்மாளின் யோகாவை பாரட்டினாரே தவிர, தடை விதிக்கவில்லை. இவர்களுக்கு 2 மகனகள், 3 மகள், 11 பேரன் பேத்திகள் உள்ளனர். நானம்மாளிடம் இதுவரை பல பேர் யோகா கற்று பயனடைந்துள்ளனர். அவர்களில் சுமார் 600க்கும் மேற்பட்டோர்கள் உலகம் முழுவதிலும் யோகா பயிற்சி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், நானம்மாளின் மாணவர்கள் சீனா, ஆஸ்திரேலியா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து என பல்வேறு நாடுகளில் நடக்கும் யோகா போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். இவருடைய சிறப்புகளை உணர்ந்து தான், தற்போது மத்திய அரசு 2018ம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. ஏற்கனவே நானம்மாள் குடியரசுத்தலைவரிடம் பெண் சக்த விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது...
பெண் போல உருவம் கொண்ட நரிலதா மலர்...
இணையத்தில் எதார்த்தமாக தேடலின் போது இந்த பெண் போல உருவம் கொண்ட நரிலதா மலர் கண்களில் தென்பட்டது.
மேலும் நரிலதா மலர் பற்றி தொடர்ந்து தேடிய போது கிடைத்த செய்திகள் ஆச்சிரியப்பட வைத்தது .இந்த நரிலதா மலர் பூர்வீகம் இமயமலை அடிவாரம் என்றும் 20 வருடங்களுக்கு ஒரு மட்டுமே பூக்கும் எனபதே ஆச்சிரியம்.
நரிலதா மலர் மரம் இந்தியாவில் மட்டுமின்றி தாய்லாந்து , இலங்கை நாடுகளில் காணப்படுகிறது.
புத்த மத புராணப்படி இந்த மரத்தை கடவுள் படைத்தாக தெரிகிறது.அச்சு அசலாக பெண் நிர்வாணமாக இருக்கும் இந்த மலரை மனிதன் தான் உருவாக்கி இருக்க வேண்டும் என்று கூறுவோரும் உண்டு.
தாய்லாந்தின் தலைநகரான பேங்காக்கில் இருந்து 500 கி.மீ தொலைவில் பெட்சபூன் என்ற இடத்தில் இருக்கிறது.
தாய்லாந்தில் இந்த மரத்தை நாரிபோல் என்றழைக்கப்படுகிறது. நாரி என்றால் ஆண், பெண்ணையும் போல்
என்றால் மரத்தையும் குறிக்கிறது...
விண்வெளி ஆராய்ச்சியாளரா 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழன் மணிவாசகர்...
உலகம் உருண்டை தான் என்று நிரூபிக்கவே இந்த நவீன அறிவியல் திக்குமுக்காடியது என்பதே உண்மை.
அதன் பிறகே எல்லா கோள்களும் உருண்டை தான் என்றும், சூரிய குடம்பம் என்றும், பல சூரியன் உண்டென்றும், எந்த அண்டம் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும் பல நவீன இயந்திரங்களின் உதவியோடு அதுவும் எந்த தெளிவும் இல்லாமல் எல்லாவற்றையும் ஒரு யுகமாம்வே கூறிவருகிறது இன்றைய நவீன அறிவியலும் அதை சார்ந்த ஆய்வுகளும்.
இன்றைய நிலைமையே இப்படி இருக்க, 9 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழன் இந்த அண்டம் உருண்டை தான் என்றும், நூறு கோடிக்கும் மேலான கோள்களும், விண்மீன்களும் உள்ளன என்றும் அடித்து கூறியுள்ளான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..
ஆம்.. இப்படியான பல அறிவியல் உண்மைகளை பற்பல நூறாண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் இனத்தின் மூத்தோர்கள் தெளிவுற உரைத்துச் சென்றுவிட்டனர்.
சரி அந்த 9 நூற்றாண்டில் வாழ்ந்த மனிதன் யார்? அவர் என்னதான் சொன்னார்? சற்றே பொறுமையாக படியுங்கள்.
அவர் பெயர் மணிவாசகர், திருவாசகம் இயற்றியவர். இவர் தான் பாடிய திருவாசகத்தில் திரு அண்டம் என்னும் பகுதியில் இந்த அண்டத்தின் வடிவம் பற்றியும் அவற்றில் நிறைந்திருக்கும் கோள்கள் பற்றியும் மிக விளக்கமாக கூறுவதை காண்போம்.
manivasagar
“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன
இன்நுழை கதிரின் துன் அணுப் புரைய
சிறியவாகப் பெரியோன் தெரியின்”
விளக்கம்:
இந்த அண்டம் உருண்டையாகவே பிறந்துள்ளது, மேலும் இந்த அண்டத்தில் நூற்றியொரு கோடிக்கும் மேலான கோள்களும், விண்மீன்களும், சூரியன்களும்,சந்திரன்களும், பூமிகளும் நிறைந்து பறந்து விரிந்து கிடக்கிறது என்றும். இந்த கோள்கள் ஒவ்வொன்றும் ஒன்றுகொன்று தம் ஒளியை பகிர்ந்து கொள்கின்றன அதாவது ஒளியற்ற கோள்கள் கூட சூரியனின் அணுக்கதிர்களை உள்வாங்குவதால் ஒளியை சூடிக்கொள்கின்றன என்றும் கூறுகிறார்.
பூமியும், சூரியனும், சந்திரனும் மட்டும் அல்லாமல் இந்த அண்டமே உருண்டை தான் என்றும் அதில் நூறு கோடி விண்மீன்களும் கோள்களும் சிதறிக்கிடக்கிறது என்றும் இந்த மணிவாசகர் எந்த டெலஸ்கோப் வைத்து இதையெல்லாம் ஆய்ந்தார் என்பது தெரியவில்லை.
இப்படியாக ஒவ்வொரு தமிழனும் உலகம் வியக்கும் பலவற்றை வகுத்து தொகுத்து வழங்கி சென்றிருக்கிறான்.
ஆனால் இன்றைய நமது சமூகமோ, தமிழன் மூடன் என்றும் தமிழனுக்கு சுய அறிவு இல்லை என்றும் கூறிக் கொண்டுத் திரியும் மூடர் கூடமாகவே இருக்கிறது என்பதை எண்ணி நாம் நம்மையே கடிந்து தான் கொள்ள வேண்டும்...
தமிழகம் முழுவதிலும் எரிவாயு குழாய் அமைக்க மத்திய அரசு முடிவு; அதனை எதிர்த்து உங்கள் குரலை பதிவு செய்ய இந்த பெட்டிஷனை கையெழுத்திடுங்கள்...
''கீழடி'' அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம் திருபுவனம் தாலுக்காவில் மட்டும் பூவாந்தி, மடப்புரம் உள்ளிட்ட 9 ஊர்களை பயன்படுத்த மத்திய அரசு முடிவு.
இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிப்பதாக இருந்தால், 14-02-2018க்குள் தெரிவிக்கவும் - மத்திய அரசு.
குழாய் பாதை ஒன்று
தூத்துக்குடி - ராமநாதபுரம் - சிவகங்கை - புதுக்கோட்டை - திருவாரூர் - நாகப்பட்டினம் - கடல்லூர் - பாண்டிச்சேரி - காஞ்சிபுரம் - சென்னை
குழாய் பாதை இரண்டு
மதுரை - சிவகங்கை - திருச்சி - அரியலூர் - நாகப்பட்டினம்
குழாய் பாதை மூன்று
பாண்டிச்சேரி - திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி - பெங்களூர்
https://www.change.org/p/stop-pipeline-projects-in-tamilnadu?recruiter=726558971&utm_source=share_petition&utm_campaign=psf_combo_share_message.undefined.nafta_petition_show_share_buttons.control.nafta_psf_sequential_1.control&utm_medium=whatsapp&utm_content=whatsapp_share_content_1%3Av5
Subscribe to:
Posts (Atom)