கோவையைச் சேர்ந்த 98 வயதான நானம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ள நிலையில், அவரது சாதனையைச் சற்று திரும்பி பார்ப்போம் கோவை மாவட்டத்தில் யோகா நானம்மாள் யார் என்று கேட்டாலே போதும், சிறிய எரும்பு கூட அவரது பெருமைகளை பறை சாற்றும். அந்த அளவுக்கு யேகாவில் கை தேர்ந்தவர். 98 வயதில் கீழே விழுந்து முதுகில் அடிபட்ட நிலையிலும் விடாமல் யோகா செய்து வருபவர்.
கோவை மாவட்டம் கணபதி பகுதியில் வசித்து வரும் நானம்மாள், பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ம் ஆண்டு பிறந்தவர். இவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தாத்தா மன்னார்சாமியிடம் இருந்து நானம்மாள் யோகாசன பயிற்சிகளைக் கற்றுக் கொண்டார். சிறிய வயதில் கற்ற பயிற்சிகளை முறையாக செய்யத்துவங்கிய நானம்மாள், அதை 98 வயது கடந்த போதிலும் விடுவதாயில்லை.
நானம்மாளுக்கு திருமணம் ஆன பிறகு, புகுந்த வீட்டில் அவரது யோகா பயிற்சியை சற்று விசித்திரமாகப் பார்த்திருக்கின்றனர். பிறகு, 'என்ன எப்போது பார்த்தாலும் கை, காலை ஆட்டிக்கொண்டிருக்கிறாய்?' என்று கேட்க ஆரம்பித்தனர். ஆனால், அந்த வீட்டில் இருந்த பெண்கள் சிலர் வயல் காட்டு வேலையை முடித்துவிட்டு வந்து உடல் வலி என்று அமரும்போது, அவர்களுக்கு சில பயிற்சிகளைச் சொல்லித் தருவேன். அவர்களது உடல் வலி சரியானபோது என்னை நம்ப ஆரம்பித்தார்கள். அதற்குப் பிறகு யாரும் என்னைத் தொந்தரவு செய்யவில்லை' என்று நினைவுகூர்கிறார் நானம்மாள்.
கணவர் சித்த வைத்தியர் என்பதால், அவர் நானம்மாளின் பயிற்சிக்கு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள். ஒட்டுமொத்தமாக 11 கொள்ளுப்பேரன் - பேத்திகள். 'கடந்த 15-20 ஆண்டுகளாகத்தான் யோகாசன பயிற்சியை பணம் வாங்கிக்கொண்டு சொல்லித்தருகிறோம். அதற்கு முன்பாக இலவசமாகத்தான் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள்தான் அப்போது கற்றுக்கொண்டார்கள்' என்கிறார் நானம்மாள்
யோகாசன பயிற்சியின் காரணமாகவே இதுவரை தான் மருத்துவமனைகளை நாடியதில்லை என்கிறார் நானம்மாள். தனது குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவருமே சுகப்பிரசவம் மூலமே குழந்தைகளைப் பெற்றனர். அதற்குக் காரணம் யோகா பயிற்சிதான் என்கிறார் நானம்மாள்.
இவருடைய நல்ல உள்ளத்துக்கும் யோகாவுக்கும் ஏற்றார் போல், இவரது கணவர் சித்த வைத்தியராக அமைந்தார். அவர், நானம்மாளின் யோகாவை பாரட்டினாரே தவிர, தடை விதிக்கவில்லை. இவர்களுக்கு 2 மகனகள், 3 மகள், 11 பேரன் பேத்திகள் உள்ளனர். நானம்மாளிடம் இதுவரை பல பேர் யோகா கற்று பயனடைந்துள்ளனர். அவர்களில் சுமார் 600க்கும் மேற்பட்டோர்கள் உலகம் முழுவதிலும் யோகா பயிற்சி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், நானம்மாளின் மாணவர்கள் சீனா, ஆஸ்திரேலியா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து என பல்வேறு நாடுகளில் நடக்கும் யோகா போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். இவருடைய சிறப்புகளை உணர்ந்து தான், தற்போது மத்திய அரசு 2018ம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. ஏற்கனவே நானம்மாள் குடியரசுத்தலைவரிடம் பெண் சக்த விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.