24/12/2017

89013 வாக்குகளை பெற்று டிடிவி தினகரன் வெற்றி...


திமுக பாஜக உட்பட 57 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு...

அதிமுக 47115 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது...

அதிமுக வளர்மதியை காணவில்லை...


மக்களுக்கு எங்க மேல ஏதோ கோபம் போலருக்கு - செல்லூர் ராஜு...


எங்களை எதிர்ப்பதாக இருந்தால் திமுகவிற்கு தான் ஓட்டு போட்டிருக்க வேண்டும் , தினகரனுக்கு நாங்கள் தான் சென்ற முறை வாக்கு கேட்டோம் , எங்களுக்கு தோல்வி அல்ல - செல்லூர் ராஜு பேட்டி...

ஒபிஎஸ் இபிஎஸ் அணி எம்பி செங்குட்டுவன் டிடிவி தினகரனுடன் திடீர் சந்திப்பு...


பாஜக இறுதிவரை நோட்டாவுடன் போட்டி போட்டு.. 1000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது....


நோட்டா - 2203
பாஜக. - 1236

வைகோ நாயூடு மற்றும் விசிக கூட்டணி என்றால் சும்மாவா...?


சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் முன்னிலையாம்  ஆனால் பல கட்சி சேர்ந்த திமுக மூன்றாமிடமாம்...

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், ஓகேனக்கல் க்கு சுற்றுலா வந்த போது காவிரி ஆற்றில் முழ்கி 3 கல்லூரி மாணவர்கள் பலி...


கர்நாடக மாநிலம் பெங்களுரு மாவடி பகுதியை சேர்ந்தவர் லட்சுமண் இவருடைய மகன் சந்தோஷ் வயது (18 பெங்களுரு உத்தர அள்ளி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் இவருடைய மகன் எஸ்எஸ் 18 இவர்களுடைய நண்பர் கள் நந்தகுமார்  , சூர்யா, அருள், பிரதீல், காத்திக், இவர்கள் அனைவரும் ரகுனஅள்ளி பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தனர்.

இந்த நிலை நேற்று முன்தினம் பாலிடெக்னிக் தேர்வு முடிவடைந்து, 8 பேரும் நேற்று ஓகேனக்கல் சுற்றுலா வந்தனர்  பின்னர் அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு நண்பர்கள் 8 பேரும் காவிரி ஆற்றில் உற்சாகமாக குளித்து கொண்டு இருந்தனர்...

அப்போது மாணவர் சந்தோஷ் ஆற்றின் ஆழமான பகுதிக்கு  தண்ணிரில் இலுத்து செல்லப்பட்டு  தத்தளித்தார், இதனால் பாலாஜி எஸ் எஸ் ஆகியோர் அவரை காப்பாற்ற சென்றனர் இதில் நன்பர்கள் 3 பேரும் அடுத்து அடுத்து தண்ணீரில் முழ்கினர் இதைக் கண்ட மற்ற நண்பர்கள், காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர்,

மேலும் இது குறித்து ஓகேனக்கல் தீயணைப்பு நிலையத்திற்கும் போலிஸ் நிலைத்திற்கும் அவர்கள் தெரிவித்தனர்...

அதன் பேரில் போலிசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து 3 பேரையும் பரிசல் ஓட்டிகள் மீனவர் கள் உதவியுடன் பரிசலில் சென்று தேடினர் காவிரி ஆற்றில் 3 கல்லூரி மாணவர்கள் மூழ்கிய சம்பவம் குறித்து தகவல் அறிந்தும் பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அன்புராஜ், தாசில்தார் சேதுலிங்கம் , போலீஸ் இன்பெக்டர் முனுசாமி ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு நண்பர் களிடம் விசாரனை நடத்தினர்...

மேலும் அவர்கள் தேடும் பணியை துரிதப்படுத்தி ஆலாம்பாடி பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டன, பின்னர் அவர்களுடைய உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர் இது குறித்து ஓகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

விழித்துக்கொள் தமிழா...


அரசு தரவேண்டிய தண்ணீரை தனியார் விற்பதும், தனியார் விற்க வேண்டிய டாஸ்மாக்கை அரசு விற்பதும் அவர்களின் முட்டாள்தனம் இல்லை... நம் முட்டாள்தனமே...

என்னைக்கு இந்த தண்ணீர் பாட்டில் வந்துச்சோ.., அன்னைக்கு ஆரம்பிச்சது தான் தண்ணீர் பஞ்சம்.. என்ற வசனத்தில் ஆழமான உண்மை உண்டு...

தாமிரபரணி நாடு...


குறவருக்கும் (கௌரவர்).
பாண்டியருக்கும் (பாண்டவர்).
நடந்த போரே மகாபாரதம்.

இந்த பகையை முடித்து இருவரையும் சேர்த்து வைக்கத்தான் பாண்டிய மன்னனான முருகன் குறவர்களிடம் பெண் எடுத்தார்.

சேரர் நடுநிலை வகித்தனர்.

இரு படைகளுக்கும் உணவு கொடுத்தவன் உதியஞ்சேரலாதன்.

இதனாலே இவனை பெருஞ்சோற்று தியஞ் சேரலாதன் என்பர்.

இவனை புகழ்ந்து முரஞ்சியூர்முடி நாகராயர் பாடிய பாடலில் இதை அறியலாம்.

யாணர் வைப்பி னன்னாட்டுப் பொருந

வான வரம்பனை நீயோ பெரும

அலங்குளைப் புரவி யைவரோடு சினைஇ

நிலந்தலைக் கொண்ட பொலப்பூந் தும்பை

யீரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தாய்.

அப்போது இலங்கைத் தீவும் தமிழகமும் ஒன்றாக இருந்தன.

பொதிகை மலையில் தோன்றி நடு இலங்கை வரை பாய்ந்தது தென்பொருநை (தாமிரபரணி).

2000 ஆண்டுகள் பழமையான தாலமியின் (Ptelomy) உலக வரைபடத்தில் இலங்கைத் தீவு தாப்ரபேன் என்று குறிக்கப்பட்டுள்ளது.

வடமொழியில் உள்ள மகாபாரதத்தில்..

குந்தியின் மகனே..
மோட்சத்தை அடையக் கடுந்தவம் புரிந்த முனிவர்களின் ஆசிரமத்தில் இருந்த தாமிரபரணியின் பெருமையை உனக்கு நினைவுபடுத்துகிறேன்.

என்று ஒரு முனிவர் தர்மனைப் பார்த்துச் சொல்வதாக ஒரு பாடல் உண்டு.

சோழர்கள் இலங்கையை ஆண்ட போது குற்றால குறும்பலா ஈஸ்வரர் கோயிலுக்கும் ஈழத்தில் உள்ள திருக்கேதீஸ்வரர் கோயிலுக்கும் நித்திய தீப நிவந்தம் போன்ற ஆன்மீக கொடுக்கல் வாங்கல் இருந்ததாக பழ.நெடுமாறனின் ஈழப் போர்முனையில் புலிகளுடன் என்ற 1985 ம் ஆண்டுகால புத்தகத்தில் படித்ததாக நினைவு...

இசைத் தோற்றம்...


ஓசையுலகம் : கண்ணை மூடித் திறந்தால் உருவுலகம் கண்ணுக்குப் புலனாகின்றது. அதுபோல் செவிக்குப் புலப்படுவது ஓசையுலகமாகும். உருவுலகத்தில் கல், மண், மலை, நீர், நெருப்பு, புழு, பறவை, விலங்கு, மனிதர் முதலிய அசையும் பொருள்களும், அசையாப் பொருள்களும் அடங்குகின்றன. ஓசையுலக்த்தில் இடிமுழக்கம், கடலோசை, கைக்கொட்டுதல், நீர்வீழ்ச்சியின் இரைச்சல், பறவை விலங்குகள் ஒலித்தல், பேச்சு, பாட்டு, அழுகை, இசைக்கருவிகளின் முழக்கங்கள் போன்றவைக் காதினால் கேட்க பெறுகின்றன. இந்த ஓசையுலகமானது, ஓசையுலகம், இயல் உலகம், இசையுலகம் என மூவகைப்படும்.  ஓசை, பேச்சு, பாட்டு ஆகிய விகற்பங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே.

ஓசை: மணியின் ஓசையைக் கேட்டு அது கோயில் மணி ஓசை என்றும், பக்கத்து வீட்டுத் தெய்வ வழிப்பாட்டு மணியின் ஓசையென்றும் பேதம் தெரிந்து கொள்கிறோம். இரயில் ஊதுவதைக் கேட்டு சுமார் இன்ன தொலைவில் இருந்து வருகின்றது என்பதை ஊகிக்கிறோம். இரும்பு அடித்தல், கல் உடைத்தல், பேருந்து, ஆகிய ஓசைகளின் விகற்பங்கள் நன்றாய் உணரப் பெறுகின்றன.

பேச்சு: இது “அ, இ, உ, எ, - க, ங, ச, ஞ” முதலிய எழுத்து ஒலிகளால் பாகுபாடு செய்யப் பெறுகின்றது. எழுத்துகளால் சொற்களும், சொற்களால் சொற்றொடர் வரிகளும் உண்டாயின. அச்சொற்றொடர் வரிகள் உலகத்திலுள்ள அகச் செய்திகளையும் புறச் செய்திகளையும் வசன நடையாலும், செய்யுள் நடையாலும் தெரிவிக்கின்றன. இது கலைகளின் இயல் உலகம் எனப்பெறும். இதில் படிப்பும் விகாரங்களும் எழுத்தும் அடங்குவனவாகும்.

பாட்டு: இது மகிழ்ச்சியினால் வெளிவருவதாகும். இது கீதம், கானம், எனப் பெறும். தமிழ்மொழியில் பாட்டு, இசை எனவும் கூறத்தகும். இந்த கீதமானது தூய்மை செய்யப்பெற்றுக் குற்றம் இன்றி விளக்கும் போது அது இசையாகின்றது. சங்கீதமென்றால் "ஸம் கீதம்- சம்யக் கீதம்- சங்கீதம்". சிறப்பினும் சிறப்பான மாண்புபெற்ற கீதமானது சங்கீதமாகும். கீதம் என்பதற்குச் சுரமென்றும், சுரக் கூட்டமென்றும் பொருள் உள்ளது. இந்த சங்கீதமாகிய இசையானது தொண்டையின் விரிவினாலும் ஒடுக்கத்தினாலும் இனிய ஒலிஉருவத்தோடு வெளிவருவதாகும்...

துறவிகள், ஆன்மிகத் தலைவர்கள், கடவுளர்கள் மற்றும் பெண் கடவுளர்கள் வழிபடப்படும் தேசம் வேண்டுமா அல்லது திப்பு சுல்தான் வழிபாட்டாளர்களின் தேசம் வேண்டுமா? என்கிறார் உத்தரப் பிரதேச மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத்...


மானுட நெறியை அழிக்க நினைக்கும் விஷம கோஷம் ஆபத்தானது.

யோகியின் இந்த போக்கு கண்டிக்ககூடியது, வெள்ளைக்காரன் கால்களை நக்கி கொண்டு இருக்கும் போது அதை எதிர்த்து சீறிபாய்ந்தவன் தேசமகன் திப்புசுல்தான்.

தேவை திப்பு போன்ற தேசபக்தர்கள்...
தேவை இல்லை யோகி போன்ற தேச விரோதிகள்...

வரும் 2018ல் டெல்லியில் நடைபெற உள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கான லோகோ...


கேரட் சாப்பிட்டால் ஏற்படும் ஐந்து அற்புதங்கள்...


1. கண் பார்வை அதிகரிக்கும்...

கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. பீட்டா கரோட்டினில் உள்ள வைட்டமின் ஏ சத்து மாலை மற்றும் இரவு நேரங்களிலும் கண் பார்வை மங்கலாகாமல் பார்த்து கொள்கிறது. இதனால் இரவு நேரத்திலும் கண்களில் பார்வை கூர்மையாக இருக்கும். கண் சம்பத்தப்பட்ட நோய்கள் உங்களை அண்டாது.

2. என்றும் இளமையாக...

கேரட்டில் இருக்கும் இந்த பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது. இந்த ஆன்டி ஆக்சிடன்ட் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக வயதான தோற்றம் மறையும். 25 வயதிலேயே வயதான தோற்றம் வருகிறது என வருந்துபவர்கள் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வரலாம். உங்கள் மேனி எப்போதும் பளபளப்பாக இருக்க கேரட் சாப்பிடுங்கள்.

3. மாரடைப்புக்கு குட்பை...

கேரட்டில் பீட்டா கரோட்டின் மட்டுமின்றி ஆல்பா கரோட்டின், லுட்டின் ஆகியவையும் இருக்கின்றன. கேரட் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ஊளைச்சதை குறையும், கொழுப்பு குறைவது மட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக பசியும் அடங்கும். இதனால் இதய வால்வுகளில் கொழுப்பு அடைக்காமல் மாரடைப்பு முதலான இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைகிறது.

4. புற்று நோய்க்கு தடா...

கேரட்டில் பால்காரினால், பால்காரின்டியோல் ஆகியவை இருக்கிறது. இவை புற்று நோய் வருவதற்கான வைபுகளை குறைக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கின்றனர். எனவே நுரையீரல் புற்றுநோய், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

5. பள பள பற்கள்...

கேரட் சாப்பிடுவதனால் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். உமிழ்நீர் அதிகம் சுரப்பதின் காரணமாக பற்களில் பாக்டீரியா போன்றவை வளருவது தடுக்கப்படும். கொஞ்சம் கடினமாக இருக்கும் கேரட்டை நன்றாக கடித்து சாப்பிட்டால் பற்கள் வலுவடைவதோடு பற்களில் உள்ள அழுக்கும் நீங்குகிறது...

இந்தியா வில் விஞ்ஞானிகள் அதிகமாகி கொண்டே செல்கிறார்கள்...


குஜராத் கோத்ரா தொகுதியில் பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை எப்படி அதிகமானது ? - பிரியங்கா காந்தி பரபரப்பு கேள்வி...


இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு அவர் கூறியுள்ளார்.

குஜராத் கோத்ரா தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 1,76,417. ஆனால் எண்ணப்பட்டதாக கூறப்படும் வாக்குகள் 1,78,911 இது எப்படி சாத்தியம்.

இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் வெறும் 258 வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளார்.

இவ்வாறு பிரியங்கா காந்தி கூறியுள்ளார்...

குஜராத் பாஜக வெற்றியின் ரகசியம் இதோ...


கோத்ரா தேர்தலில் பதிவான வாக்குகள் = 1,76,417
எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை = 1,78,911

2494 வாக்குகள் பதிவான வாக்குகளை விட அதிகளவில் எப்படி வந்தது?

இந்த தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் 258 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

'தேர்தல் பாதை திருடர்களின் பாதை' என்ற லெனின் கூற்றை அப்பட்டமாக நிருபிக்கிறார்கள் இந்திய அரசியல்வாதிகள்.

இந்தியாவைப் பொறுத்தவரை 'தேர்தல்' கூட மக்களுக்கு எதிரானதாக இருக்கிறது. இனி பாராளுமன்றம் / நாடாளும் மன்றம் உறுப்பினர்கள் 'மக்கள் பிரதிநிதிகள்' என்று சொல்வதைவிட,  'மின்னணு வாக்கு இயந்திரத்தின் பிரதிநிதிகள்' என்று பிரகணப்படுத்திக் கொள்வதே சரியானதாகும்.

இந்தியாவின் 'ஜனநாயகம்' மின்னணு வாக்கு இயந்திரத்தினால் Digital India இருண்ட காலத்திற்கு அரசியல் வாதிகளால் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை மக்கள் உணராத வரை இந்நிலையை மாற்ற முடியாது...

பஞ்சாபில் கிறிஸ்த்தவர்களை முறைத்துப் பார்த்தால் கூட அவர்களின் கண்களை பிடுங்கி எடுத்து விடுவோம் என சித்து எச்சரிக்கை...


பஞ்சாப் அரசு சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவின் போது கலந்து கொண்டு பேசிய பிஷப் ஒருவர் பேசும் போது...

இந்தியாவில் பல மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.

கிறிஸ்துமஸ் கொண்டாடக் கூடாது என மிரட்டல் விடுக்கப்படுகிறது என கூறினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய சித்து அவ்வாறு பேசினார்.

சித்து தற்போது பஞ்சாப் அரசவையில் அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...

தமிழர்களின் வினோத கட்டிடக்கலை - அதிசய இசைத் தூண்கள்...


நாம் வெறும் மூட நம்பிக்கைகளால் மூழ்கியவர்கள் அல்ல. இயற்பியலிலும், கட்டிடவியலிலும் காலத்தை வென்றவர்கள் என்பதற்கு இந்த இசைத்தூண்களே சாட்சி. நம் பெருமைகளை நாம் தான் மதிக்க வேண்டும்.

உலக அதிசயப்பட்டியலில் இடம் பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான இசைத் தூண்கள்..

இந்த இசைத் தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் சப்தஸ்வரங்கலான " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது. சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது.

இதில் பெரிய தூணில் கர்நாடக சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் "மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி " போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது. அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும்.

இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை, உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது. சரி இது எதற்காக பயன்பட்டது ?

அந்தக்காலத்தில் இருந்த இசைக்கலைஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர். இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது. இந்த இசைத்தூண்களை "மிடறு" என்று அழைத்தார்கள்.

இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான " அலைகற்றையை " உருவாக்குகின்றது . எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது ? இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு.அனிஷ் குமார் என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள "இயற்பியல்" அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது.

"In situ metallography " (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/ corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது " தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் " என தெரிய வந்தது . " spectral analysis "என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது " தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றையினால் " சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது. சப்தம் உருவாவதே ஒரு அதிசயமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது ? நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல். இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை, ஆனால் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை .

இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த " இசைத்தூண்கள் " ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது. அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை ? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது..

ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள் , இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள் இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தையுமாவது கட்டிக்காப்போம்..

இந்த இசைத் தூண்கள் அமைந்துள்ள கோவில் பற்றிய தகவல்கள் கீழே குடுக்கப் பட்டுள்ளது.

நெல்லையப்பர் - காந்திமதி கோயில் நெல்லையின் முக்கியமான சிறப்பே நெல்லையப்பர் - காந்திமதி கோயில்தான். அம்மைக்கும் அப்பனுக்கும் தனிக் கோயில்கள் இங்கு உள்ளன. அரிய வேலைப்பாடுகள் உள்ள ஆவணங்கள், தங்க அல்லிக்குளம் இசைத் தூண்கள் ஆயிரங்கால் மண்டபம் போன்றவை இக்கோயிலின் தனிச்சிறப்புகள்.

கோயிலின் மூலக்கதை:

முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம்.

அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.

சிறப்புக்கள்:

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது.

சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று.

திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற புகழ்மிக்க தலமாக விளங்குகிறது.

அருணாசல கவிராயரால் வேணுவன புராணத்தில் பாடப்பெற்ற பெருமையுடையது.

சொக்கநாத பிள்ளையால் காந்திமதியம்மை பதிகத்திலும் பாடப்பெற்ற பெருமையுடையது.

32 தீர்த்தங்கள் கொண்டது இத்திருத்தலம்.

இக்கோவில் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது...

பாஜக மோடி மக்களுக்கு பெரிய ஆப்பு வைக்க பிளான் பண்ணுறான் உசாருய்யா உசாரு..


ஆர்கிமிடீஸ் தத்துவம் - பல அறிவியல் கண்டு பிடிப்புகளை அனாயசமாய்க் கண்டவன் தமிழன்...


கோச்சடையானுக்கு ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் என்கின்ற பெயரும் உண்டு. ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் பாண்டிய நாட்டை சேர்ந்தவர். சோழர்கள், சேரர்கள், மற்றும் ஆந்திரர்கள் இவர்களை எல்லோரையும் போரில் வென்று தமிழகத்தை விரிவாக்கி பாண்டிய நாட்டு ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.

சோழர்களை போரில் வென்றதன் விளைவாக நானுறு நாட்டுகளாக அவர்கள் சேர்த்து வைத்திருந்த விலை மதிப்பில்லா செல்வங்கள் அனைத்தும் ஜடாவர்மனுக்குக் கிடைத்தது. ஆனால் ஜடாவர்மனோ கிடைத்த செல்வங்களை தானே எடுத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தென்னகத்தில் இருந்த பல கோவில்களுக்கு நன்கொடையாக தந்து விட்டார்.

குறிப்பாக தொண்டை நாட்டிலுள்ள கோவில்களுக்கு நிறைய திருப்பணிகள் செய்தார். இந்த திருப்பணிகளால் அதிகம் பயன்பெற்ற கோவில்கள் என்றுப் பார்த்தால் சிதம்பரத்தில் இருக்கின்ற நடராசன் பெருமான் கோவிலும் திருவரங்கத்தில் இருக்கக் கூடிய இரங்கநாதர் கோவிலும் தான்.

திருவரங்கத்தில் இருக்கின்ற இரங்கநாதர் கோவிலுக்கு சுந்தரப் பாண்டியன் ''துலாபார தானம்'' செய்தார்.

துலாபார தானம் என்றால் தராசு கட்டியில் ஒருவரை அமர செய்து அவரின் எடைக்கு சமமான தங்கத்தை நன்கொடையாக கொடுப்பதாகும். ஆனால் சுந்தரப் பாண்டியன் செய்த ''துலாபார தானம்'' சற்று புதுமையானது.

ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் தனது பட்டத்து யானையை நன்கு அலங்கரித்து அந்த யானைக்கு மேல் கனமான அம்பாரி, அந்த அம்பாரிக்கு மேல் பூரண கவசத்துடன் தன் பட்டத்தரசியுடன் தானும் அமர்ந்துக் கொண்டார். முன்புறம் யானையின் பாகன் அமர்ந்துக் கொண்டான். யானை, அம்பாரி, அரச தம்பதியர் மற்றும் யானைப் பாகன் இவர்களின் எடைக்கு சமமான தங்க ஆபரனங்களை திருவரங்கக் கோவிலுக்கு நன்கொடையாக தந்தான்.

இப்பொழுது கேள்வி என்னவென்றால் எப்படி ஜடாவர்மன் பாண்டியன் இவர்களின் எடை சரியாக அளந்து அதை சமமான தங்க ஆபரணங்களை தானமாக கொடுத்தான் ? ஒரு வேளை யானை அளவிற்கு ஒரு தாராசுக் கட்டியை செய்து அளந்திருப்பானோ ?

அதுதான் இல்லை.

முதலில் ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் காவிரிக் கரையாரில் ஒரு நீராழி (குளம்) மண்டபத்தை காட்டினான். அந்த மண்டபத்திருக்குப் பக்கத்தில் ஒரு தெப்பத்தை (நீரில் மெதக்கும் ஒரு பெரிய பலகைப் போன்றது) கட்டினான். அந்த தெப்பதற்கு மேல் அம்பாறிப் பூட்டப்பட்ட பட்டத்துயானையின் மீது பாண்டியனும் அரசியும் மற்றும் பாகனும் அமர்ந்தவாறு ஏறினார்கள். யானை தெப்பத்தின் மீது ஏறியவுடன் அந்த தெப்பம் சிறிதளவு தண்ணீரில் அமிழ்ந்தது. பிறகு அதிலிருந்து யானையை இறக்கி விட்டு தங்க ஆபரங்களை வைக்க ஆரம்பித்தார்கள். யானை நின்ற பொழுது எவ்வளவு தூரம் தெப்பம் அமிழ்ந்ததோ அந்த அளவு வரும் வரை தங்க ஆபரணங்களை வைத்துக் கொண்டே இருந்தார்கள். கடைசியாக யானை நின்ற பொழுது அமிழ்ந்த அளவும் வந்தது. பிறகு செல்வங்களை எடுத்து கோவிலுக்கு கொடுத்தார்கள்.

ஆர்கிமிடீஸ் தத்துவத்தை தமிழன் என்றோ தெரிந்து வைத்திருக்கின்றான் என்று நினைக்கும் பொழுது நமக்கு வியப்பாக இருக்கும்...

திமுக வும் ஊழல்களும்...


தமிழ்நாட்டிலே ஏன் உலகத்துலயே ஊழல் கறை படியாத கட்சின்னா அது திமுகதான்னு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

இதுவரை எந்த ஊழல் கொலை வழக்கிலும் தண்டனை பெற்றதே இல்ல அந்த அளவுக்கு தெளிவா செய்வோம்.

என் சீனியர் அடிக்கடி சொல்லுவாரு திருடுனா திமுக காரன் மாதிரி திருடனும்னு...

அண்ணா இருந்த ரெண்டு வருசம் எந்த குற்றச்சாட்டும் வராத நிலைல தலீவர் வந்த கொஞ்சநாள்ல வீராணம், விமானத்தில பூச்சிமருந்து தெளிக்கறது உட்பட 28 குற்றச்சாட்டுகள் (கடைசில இணைச்சிருக்கேன்) எழுகிறது.

உடனே ஆட்சிய கலைச்ச இந்திரா சர்க்காரியா கமிசன் விசாரணைய அமைக்கறாங்க. பாவம் நீதிபதி சர்க்காரியா நம்ம 2ஜி நீதிபதி ஷைனிய விட அதிகமா நொந்து போய் ஊழல் செஞ்சது தெளிவா தெரியுது ஆனா நிரூபிக்க முடியல,விஞ்ஞான பூர்வ ஊழல் அப்டினு பொலம்புறாரு.

நம்ம தலைவரு அடுத்த தேர்தல்ல (எமர்ஜென்சி யால பல உயிர்களை பறிகொடுத்த ஈரம் காயுமுன்னேயே) "நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக" அப்டினு பல்லவி பாடி கூட்டணி போட்டு ஜெயிக்கறாங்க அப்புறம் இந்திரா சர்க்காரியா கமிசனை நீக்கிடறாங்க (இதே இந்திரா மண்டைய ஒடச்சி ரத்தம் வந்தப்ப பெண்களுக்கு தலைல மட்டும்தான் ரத்தம் வருமானு கேட்ட கில்லாடிங்கோவ்).

அங்க ஆரம்பிச்ச வரலாறு...

கூவத்த சுத்தம் செய்றோம்னு கொஞ்சம்..

அப்றம் நிதி நெருக்கடினு மது விலக்கு ரத்துனு ஆரம்பிச்சி..

வளந்து கச்சத்தீவு தாரை வார்த்து சந்தோசப்பட்டது வரை போச்சு...

( சரி சட்டசபைல நல்லா பேசுனாங்களானு பாத்தா திராவிட நாடு எங்கனு கேட்ட காங் அனந்த நாயகி கிட்ட நாடாவை அவுத்து பாவாடைய தூக்கி பாரு அங்க இருக்கு திராவிட நாடுனு சொன்ன ஆளுக).

எந்த மதவாதத்தை எதிர்க்கறோம்னு சொன்னாங்களோ அதே பாஜக வோட கூட்டணி மத்திய அமைச்சர் பதவி (முரசொலி மாறன் இலாகா இல்லாத அமைச்சர்).

அப்புறமா மறுபடியும் காங். கூட்டணி இந்த காலகட்டத்துலதான் மீத்தேன் ஒப்பந்தம் அனுமதி தந்தது.

அப்புறம் நம்ம ராசா 2ஜில மாட்றாரு இப்ப விடுதலை ஆகிட்டாங்க ஆனா கலைஞர் டிவிக்கு ₹200 கோடி எப்படி வந்துச்சினு தெரியல.

ஸ்பெக்ட்ரம் புகழ் நீரா ராடியாவும் உளவுத்துறை ஜாபர்சேட்டும் மட்டும் டேப் உரையாடல் மானாட மயிலாட பத்தி பேசுனாங்களாம்.

அப்றம் நம்ம உத்தம சகோதரங்க மாறன் பிரதர்ஸ் மெர்க்கண்டைல் பேங்க ஆட்டைய போட்ட சிவசங்கரனையே மிரட்டி ஏர்செல் மேக்சிஸ் கு எழுதி வாங்குனது.

ரத்தன் டாடா கண்ணுல விரல விட்டு ஆட்டுனது, தனியா கேபிள் பதிச்சி சன் டிவிக்கு BSNL ல இருந்து டெலிபோன் கனெக்சன் எடுத்தது.

மதுரை பக்கம் ஹார்லிக்ஸ் லாரிய கடத்துனது.

பல கிரானைட் மலைகள் காணாம போயும் ஒரு பெட்டி கேஸ் கூட போடமுடியாம இருக்குறது.

ஆத்தா ஆட்சியில் நில அபகரிப்புக்குனே தனிகவனம் செலுத்தி எல்லா அமைச்சர்களையும் சுளுக்கெடுத்தது.

சில்லறை வர்த்தகத்துல அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்னு சொல்லி ஆதரிச்சது.

நீட்தேர்வு வரைவு நிலைல இருந்தப்பவே எதிர்க்காம அமைதியா இருந்தது.

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான மசோதாவை ஆரம்பநிலைல எதிர்க்காம விட்டதுனு நிறைய இருக்கு.

போக மதுரை கவுன்சிலர் லீலாவதி தன்னைதானே வெட்டி செத்துபோனது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மாணவன் உதயகுமார் தற்கொலை(?) செஞ்சி செத்துபோயி அவனோட அப்பா அம்மா அது என் மகனே இல்லனு சொன்னது.

தா.கிருட்டிணன் கத்திய எடுத்து தானே வெட்டி செத்தது.

ஆலடி அருணாவும் அப்டியே செத்தது.

கே.என்.நேரு தம்பி இராமஜெயம் தானே கம்பியில கட்டிகினு தற்கொலை செய்துகிட்டது.

அண்ணா நகர் ரமேஷ் 2ஜில சம்பந்தப்பட்டப்புறம் தற்கொலை.

சாதிக் பாஷா வயித்து வலினு தூக்குல தொங்குனது.

யார் பெரியவங்க அழகிரியா ஸ்டாலினா மாறனா னு கருத்து கணிப்பு வந்தப்ப தினகரன் ஊழியர்கள் 4பேர் பத்திரிகை அலுவலகத்தை கொளுத்திகினு செத்து போனது.

இன்னும் எவ்வளவோ நடந்துச்சி எதையாவது நிரூபிக்க முடிஞ்சதா. தேக்குடா தேக்கு யாருகிட்ட.

சத்தமா சொல்லுவோம் திமுக ஊழல் கறை படியாத கட்சி..

சர்க்காரியா கமிசன் அமைக்க காரணமான வழக்குகள்...

1. மேகலா பிக்சர்ஸ் ஊழல்.
2. அஞ்சுகம் பிக்சர்ஸ் ஊழல்,
3. டிராக்டர் ஊழல்,
4. கருப்பு பணத்தில் கோபாலபுரம் இல்லம் விரிவாக்கம்,
5. முரசொலி ஊழல்,
6. திருவாரூர் வீட்டு ஊழல்,
7. ராஜா அண்ணாமலைபுரம் வீடு ஊழல்,
8. கோபாலபுரம் வீட்டு மதிப்பு ஊழல்,
9. ஊழல் அதிகாரியை காப்பாற்றி முறைகேடு செய்தது,
10. வீராணம் ஊழல்,
11 (அ).நாதன் பப்ளிகேசன்ஸ் ஊழல்,
11. (ஆ) பூச்சி மருந்து தெளிப்பு ஊழல்,
12. மணி அரிசி ஆலை கடன் ஊழல்,
13. ஜெ.கே.கே. குழுமத்தின் விற்பனை வரி ஏய்ப்பு ஊழல்,
14. சமயநல்லூர் மின்திட்ட ஊழல்,
15. குளோப் தியேட்டர் வாடகை சட்டத் திருத்த ஊழல்,
16. பிராட்வே டைம்ஸ் ஊழல்,
17. சர்க்கரை ஆலை ஊழல்,
18. கூட்டுறவு சங்க ஊழல்,
19. மது ஆலை ஊழல்,
20. கொடைக்கானல் & பழனி சாலை ஊழல்,
21. தி.மு.க. அறக்கட்டளைகள் ஊழல்,
22. நில ஆக்கிரமிப்பு & கொலை குற்றச்சாட்டு,
23. ஊழல், கிரிமினல் குற்றவாளிகளுக்கு ஆதரவு,
24. தொழிற்சங்க ஊழல்,
25. ஊடகங்களுக்கு மிரட்டல்,
26. மின் திருட்டு,
27. எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல்,
28. இழப்பீட்டு தொகை ஊழல்.

ஆகிய குற்றச்சாற்றுகளுக்கு ஆதாரம் இல்லாத வகையில் விஞ்ஞான முறையில் திமுகவினர் ஊழல் செய்துள்ளனர் என்று தான் சர்க்காரியா ஆணையம் கூறியதே தவிர, ஊழலே நடக்க வில்லை என்று கூறவில்லை..

கைவலிக்குது ஆதலால் ..... ஆதலால் அடுத்த பதிவில் பார்க்கலாம்... 

கன்னட தெலுங்கர் ஈ.வே. ராமசாமி நாயக்கர் எனும் பெரியாரும்... இந்தி எதிர்ப்பும்...


இந்தியை எதிர்க்கும் 'காலி'களைச் சுட்டுத் தள்ளுங்கள்...

ஈ.வே.ரா எழுதுகிறார்...

ஆரம்பத்தில் நான்கு காலிகளைச் சுட்டு இருந்தால் இந்த நாசவேலைகளும், இத்தனை உயிர்ச் சேதமும் உடைமைச் சேதமும் ஏற்பட்டிருக்காது.

எதற்காக சட்டம்?
எதற்காக போலீஸ்?
எதற்காக போலீஸ் கையில் தடி? துப்பாக்கி எதற்கு?
முத்தம் கொடுக்கவா வைத்துள்ளாய்?
இது என்ன அரசாங்கம்?
வெங்காய அரசாங்கம்.

நூல்: கிளர்ச்சிக்குத் தயாராவோம் - ஈ.வே.ரா..

மேற்கண்டது இந்தியெதிர்ப்பு நடந்து முடிந்த பிறகு ஈ.வே.ரா எழுதிய நூல்..

இந்தி எதிர்ப்பு நடந்த போது ஈ.வே.ரா தமிழ் மாணவர்களுக்கு எதிராகவும் கொலைகார அரசுக்கு ஆதரவாகவும் எழுதிய கட்டுரைகளின் தலைப்புகள்...

இன்றும் மாணவர்கள் காலித்தனம். பஸ்ஸைக் கொளுத்தினர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் - 16.1.1965.

அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களின் அத்துமீறிய வன்செயல் - 28.1.1965.

திருச்சியில் மாணவர்கள் காலித்தனம். பஸ்க்கு தீ. தபால் நிலையம் கொள்ளை - 10.2.1965.

போலீசார் அத்து மீறியதாக கூறப்படுபவை அபாண்டமே - 4.3.1965.

பொள்ளாட்சியில் போராட்டத்தை இராணுவம் அடக்கியது. காலிகள் மீது சுட்டதில் 10பேர் மாண்டனர் - 13.2.1965.

ஈ.வே.ரா வுக்கு தமிழ் மீது இருந்த வெறுப்பையும் தமிழர் மீது இருந்த கொலை வெறியையும் இதன் மூலம் அறியலாம்.

மூலக்கட்டுரை: 1965ஆம் ஆண்டு மொழிப்போரும் - பெரியாரின் எதிர்ப்பும்...

நாம் தமிழர் கட்சியின் வழிகாட்டி கன்னட தெலுங்கர் பெரியாருக்கு நினைவைப் போற்றுகிறார்களாம்...


தமிழினத்தை முட்டாளாக்கி அடிமையாக்கி சொத்து சேர்த்து... சாகும் நேரத்திலும் அந்த சொத்துக்கள் தமிழர்களிடம் போய் விடக் கூடாது என்று பாடுபட்ட உத்தமர்...

இன்னும் பல தீமைகளை செய்த கன்னட தெலுங்கர் பெரியாரின் நினைவை நல்லா போற்றுங்கள்...

மராட்டிய கன்னட ரஜினி கலாட்டா...


நிலம் தாரேன்.. என் பிள்ளைக்கு சிலை வையுங்களப்பா... தமிழக புரட்சியாளன் தமிழரசன் தாயார் உருக்கம்...


கண்ட நாய்களுக்கு சிலை வைக்கின்ற தேசத்தில்...

தமிழக புரட்சியாளனுக்கு சிலை வைக்க துப்புக்கெட்டு போய் விட்டோம்...


வெக்கி தலைகுனிய வேண்டும்...

பாஜக கலாட்டா...


கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு...

       
கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

1990-ம் ஆண்டு நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ்.காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்து முதல்-மந்திரி ஆனார். அப்போது கால் நடை தீவன ஊழலை அவருக்கு எதிராக பூதாகரமாக எதிர்க்கட்சிகளால் கிளப்பப்பட்டது.  இதையடுத்து பாட்னா ஐகோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக 1997-ம் ஆண்டு லல்லு பிரசாத் யாதவ் பதவி விலகி தனது மனைவி ராப்ரி தேவியை முதல்-மந்திரியாக்கினார். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மாட்டுத்தீவன ஊழல் களும், லல்லு பிரசாத் யாதவ் ஆட்சியில் 1991 முதல் 1993-ம் ஆண்டு வரை நடந்த ஊழல்களும் தனித்தனியாக வெவ்வேறு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டன.

பீகார் முன்னாள் முதல்-மந்திரி ஜெகநாத் மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் உள்பட மொத்தம் 34 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் விசாரணை காலத்தில் 11 பேர் இறந்து விட்டதால் மீதம் உள்ளவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.

கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ஒரு வழக்கில் லல்லு பிரசாத் யாதவுக்கு சி.பி.ஐ. கோர்ட்டு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

லல்லு பிரசாத் உடனடியாக கோர்ட்டிலேயே கைது செய்யப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவர் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

ஜெயிலில் தண்டனை அனுபவித்த 2 மாதங்களில் லல்லு பிரசாத் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து ஜாமீனில் விடுதலையானார்.  லாலு பிரசாத் யாதவ் மீதான அரசு கருவூல பணம் ரூ.30 கோடி ஊழல் வழக்கு விசாரணை ராஞ்சி சி.பி.ஐ. கோர்ட் டில் நீதிபதி சிவபால் சிங் முன்னிலையில் தொடர்ந்து நடந்து வந்தது.

தீர்ப்பு விவரம்:

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, லாலு பிரசாத் யாதவ் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். பிற்பகல் ஏறக்குறைய 3.45 மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார்.

அதேவேளையில் பீகார் முன்னாள் முதல் அமைச்சர் ஜெகந்நாத் மிஸ்ரா  உட்பட 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

குற்றவாளிகளுக்கு எதிரான தண்டனை விவரம் ஜனவரி 3 ஆம் தேதி வழங்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார்.

கால்நடை தீவின வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால், லாலு பிரசாத் யாதவ் சிறைக்கு செல்ல உள்ளார்...

பாஜக எச்ச. ராஜா சர்மா கலாட்டா...


தமிழிசையில் ஐந்து வகைக் கருவிகள்உள்ளதாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது...


தோல்கருவி (தோலால் செய்யப்பட்டவை), துளைக்கருவி (துளையிடப்பட்டவை), நரம்புக் கருவி (தந்தி அல்லது கம்பிகள் பொருத்தப்பட்டவை), மிடற்றுக்கருவி (வாய்ப்பாட்டு), கஞ்சகருவி (சேகண்டி, ஜாலரா போன்ற தட்டுக்கருவிகள்). தமிழ் இசையில் (புல்லாங்) குழல், யாழ் பிரபலமானவை. தோலிசைக் கருவிகள் எண்ணிறைந்தவை. அவற்றில் அழிந்துவிட்ட, அரிய சில கருவிகள் தொகுக்கப்பட்டுள்ளன.


யாழ் :  பண்டைய நாகரிகங்கள் எல்லாவற்றிலும் யாழ் என்ற கருவியோ, யாழ் போன்ற தந்தி அல்லது கம்பி இசைக் கருவியோ இருந்துள்ளது. கிரேக்க பாரம்பரியத்தில் இதைக் காணலாம். தமிழகத்திலும் ஒவ்வொரு திணைக்கும் தனித்தனி யாழ் இருந்திருக்கிறது. இன்று அந்தக் கருவி இல்லை. பொதுக் காலம் (கி.பி.) 10ம் நூற்றாண்டில் இந்தக் கருவி மறைந்து ருத்ர வீணை, கின்னாரி, கச்சபி, பின்னர் சிதார், சாரோட், சரஸ்வதி வீணை போன்றவை பிரபலம் ஆகின. சீரியாழ் என்பது வீணை போன்ற ஒரு கருவிதான். யாழ் பார்ப்பதற்கு வில்லைப் போல் இருப்பதால் அப்பெயர் பெற்றது. யாழ் கருவியின் நவீன வடிவம் மயில் யாழ். கம்பி இசைக் கருவிகளில் ஒன்றான இது, மயில் வடிவில் வடிவமைக்கப் பட்டிருப்பதால் அப்பெயர் பெற்றது.


சிறு கொம்பு : கொம்பு போன்ற இந்த இசைக் கருவிகள் காற்று கருவிகள். ஆங்கில எஸ் வடிவில் வளைந்த இந்தக் கருவிகள் நான்கு பாகங்களைக் கொண்டவை. இவற்றிலேயே பிறை போன்று வளைந்திருப்பவை கோயில் திருவிழாக்கள், கிராமத்து கொண்டாட்டங்கள், பொது நிகழ்ச்சிகளின் போது பயன்படுத்தப்படும். சாதாரண மக்களின் கொண்டாட்டங்கள், துக்க நிகழ்ச்சிகள் அனைத்திலும் தாரை-தப்பட்டை, கொம்பு ஊதுவது வழக்கம். இன்றளவும் நாட்டார் தெய்வ திருவிழாக்களில் கொம்பு ஊதுவதைப் பார்க்கலாம்.


நகரா : பெரிய அரைவட்டச் சட்டி போன்ற தோலிசைக் கருவி. பழங்கால முரசைப் போலிருக்கும். கோயில்களின் முன் மரக்கதவுகளை அடுத்துள்ள பகுதிகளில் இந்தக் கருவிகள் வைக்கப்பட்டிருக்கும். கோயில் நிகழ்ச்சிகள், முக்கிய நிகழ்வுகள், திருவிழாக்களை தூரத்தில் இருப்பவர்களும் அறிவிக்க நகரா இசைக்கப்படுகிறது. தாமிரம், பித்தளையால் ஆன அடிப்பகுதியில் தோல் இழுத்து கட்டப்பட்டு, இரும்பு சட்டத்தால் இறுக்கப்பட்டிருக்கும். வளைந்த குச்சிகளால் இசைப்பார்கள். சில நேரம் யானையின் மீது இந்தக் கருவியை வைத்து இசைத்துச் செல்வதும் உண்டு.


பஞ்சமுக வாத்தியம் : மிகப் பெரிய இசைக்கருவிகளில் ஒன்று என்று இதைக் குறிப்பிடலாம். தமிழகத்தில் இன்னும் ஓரிரு இடங்களில் மட்டுமே எஞ்சியுள்ளது. ஐந்து முகங்கள் கொண்ட இந்த தோலிசை கருவி கோயில்களில் பயன்படுத்தப்பட்டது. வெண்கலத்தால் செய்யப்பட்ட இந்தக் கருவியை எடுத்துச் செல்ல சக்கரம் பொருத்திய இரும்புச் சட்டங்கள் இருக்கும். ஐந்து முகங்களில் தோல் இழுத்து கட்டப்பட்டிருக்கும். இதை வாசிப்பது தனிக்கலை. இந்தக் கருவியைப் பற்றி அருணகிரிநாதர் குறிப்பிட்டுள்ளார். குடபஞ்சமுகி என்ற வேறொரு பெயரும் உண்டு. இவற்றை இசைப்பவர்கள் பற-சைவர்கள் என்றழைக்கப்படுகின்றனர்.

மயூரி : சிதாரை போன்றிருக்கும் இந்த (பால)சரஸ்வதி வீணை, மயிலின் அகவலைப் போல் ஒலியெழுப்பும். ஒலி மென்மையாக இருக்கும். இந்த வீணையின் வடிவமும் நின்று கொண்டிருக்கும் மயிலைப் போன்றிருக்கும். வயலினை இசைப்பது போல் ஒரு வில்லைக் கொண்டே இதை இசைக்க முடியும். இந்த வீணையின் தண்டுப் பகுதியை இடது தோளுக்கு நேராகப் பிடித்து, வலது கையால் வில்லைப் பிடித்து இசைக்க வேண்டும். இதற்கு மயூரி, மயில் சிதார், மயில் வயலின் என்றும் பெயர்கள் உண்டு. நாகவீணை எனப்படும் இந்த வீணையின் சிற்பங்கள் புதுக்கோட்டை, கர்நாடக மாநிலம் பேலுரில் உள்ளன. வீணையின் அடிப்பகுதிகள் பாம்பின் தலை போல் செதுக்கப்பட்டிருக்கும்.


ஜலதரங்கம் : பல வெளிநாட்டு கருவிகள் நமது இசைக்கருவிகளாக மாறிவிட்டன. அப்படிப்பட்ட ஒரு கருவி ஜலதரங்கம். இதற்கு நீர் அலைகள் என்று பொருள். பெரியதிலிருந்து சிறிதாகும் வகையில் 18 பீங்கான் கிண்ணங்கள் இந்த கருவியை கட்டமைக்கின்றன. இவற்றை அரைவட்ட வடிவில் அடுக்கி, தண்ணீரின் அளவை வரிசைகிரமமாக கூடுதலாகவோ, குறைவது போலவோ ஊற்ற வேண்டும். குச்சியால் அடித்து இசைக்கப்படும். காலி கிண்ணங்கள்கூட வித்தியாசமான அலைவரிசை ஒலியை எழுப்பும். வீட்டிலுள்ள பாத்திரங்களைக் கொண்டே இக்கருவியை நீங்கள் உருவாக்கலாம்.


கண்ணாடி டோலக் : டோலக் என்பது தோல் இசைக்கருவி. வட மாநிலங்களில் புகழ்பெற்றது. மிருதங்கத்தைப் போலிருக்கும் இந்த சிறப்புவகை டோலக் கண்ணாடியால் செய்யப்பட்டது. இரு கண்ணாடி பூந்தொட்டிகளை பின்பக்கம் இணைத்தது போலிருக்கும். உள்புறம் ஏதுமற்ற இந்த கண்ணாடிக் கருவி எழுப்பும் இசை வித்தியாசமாக இருக்கும். இது அலங்கார இசைக்கருவி.


கஷ்டதரங் : மரப் பலகையால் செய்யப்பட்ட இந்தக் கருவியை இரண்டு மர சுத்தியல்களால் அடிக்க வேண்டும். இடது புறத்திலிருந்து வலது புறமாக குறுகிச் செல்லும் வகையிலான செவ்வக மரப்பலகைகள் ஒரு சட்டத்தில் பொருத்தப்பட்டிருக்கும். வெளிநாட்டு ஸைலபோன் கருவியைப் போன்றது...