24/12/2017

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், ஓகேனக்கல் க்கு சுற்றுலா வந்த போது காவிரி ஆற்றில் முழ்கி 3 கல்லூரி மாணவர்கள் பலி...


கர்நாடக மாநிலம் பெங்களுரு மாவடி பகுதியை சேர்ந்தவர் லட்சுமண் இவருடைய மகன் சந்தோஷ் வயது (18 பெங்களுரு உத்தர அள்ளி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் இவருடைய மகன் எஸ்எஸ் 18 இவர்களுடைய நண்பர் கள் நந்தகுமார்  , சூர்யா, அருள், பிரதீல், காத்திக், இவர்கள் அனைவரும் ரகுனஅள்ளி பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தனர்.

இந்த நிலை நேற்று முன்தினம் பாலிடெக்னிக் தேர்வு முடிவடைந்து, 8 பேரும் நேற்று ஓகேனக்கல் சுற்றுலா வந்தனர்  பின்னர் அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு நண்பர்கள் 8 பேரும் காவிரி ஆற்றில் உற்சாகமாக குளித்து கொண்டு இருந்தனர்...

அப்போது மாணவர் சந்தோஷ் ஆற்றின் ஆழமான பகுதிக்கு  தண்ணிரில் இலுத்து செல்லப்பட்டு  தத்தளித்தார், இதனால் பாலாஜி எஸ் எஸ் ஆகியோர் அவரை காப்பாற்ற சென்றனர் இதில் நன்பர்கள் 3 பேரும் அடுத்து அடுத்து தண்ணீரில் முழ்கினர் இதைக் கண்ட மற்ற நண்பர்கள், காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர்,

மேலும் இது குறித்து ஓகேனக்கல் தீயணைப்பு நிலையத்திற்கும் போலிஸ் நிலைத்திற்கும் அவர்கள் தெரிவித்தனர்...

அதன் பேரில் போலிசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து 3 பேரையும் பரிசல் ஓட்டிகள் மீனவர் கள் உதவியுடன் பரிசலில் சென்று தேடினர் காவிரி ஆற்றில் 3 கல்லூரி மாணவர்கள் மூழ்கிய சம்பவம் குறித்து தகவல் அறிந்தும் பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அன்புராஜ், தாசில்தார் சேதுலிங்கம் , போலீஸ் இன்பெக்டர் முனுசாமி ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு நண்பர் களிடம் விசாரனை நடத்தினர்...

மேலும் அவர்கள் தேடும் பணியை துரிதப்படுத்தி ஆலாம்பாடி பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டன, பின்னர் அவர்களுடைய உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர் இது குறித்து ஓகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.