07/07/2018

மாதங்களின் பெயர்க் காரணம்...


ஜனவரி: ஜனஸ் என்ற ரோமானிய கடவுளின் பெயரால் இந்த மாதம் அமைந்தது. இவருக்கு கடந்தகாலம், எதிர்காலத்தைக் குறிக்கும் இரண்டு தலைகள் இருந்தன.

பிப்ரவரி: ரோமானியர்கள் இந்த மாதத்தின் 15ம் நாளை புனிதமாகக் கருதி பெப்ருய என்று பெயரிட்டனர். இதற்கு தூய்மை செய்து கொள்ளுதல் என்று பொருள். அதைக் குறிக்கும் வகையில் பெப்ருரியவஸ் என்று பெயரிட்டனர். இதுவே பிப்ரவரி என மாறியது.

மார்ச்: ரோமானிய போர்க்கடவுள் மற்றும் விவசாயக் கடவுளின் பெயர் மார்ஸ். ஈட்டி, கேடயத்துடன் காட்சியளிக்கும் இவரது பெயரால் தோன்றியது மார்ச்.

ஏப்ரல்: ஏப்பிரைர் என்ற லத்தீன் சொல்லுக்கு திறந்து விடு எனப்பொருள். ஆண்டின் செழிப்புக்கு வழிபிறக்கும் மாதம் என்பதால் இந்தச் சொல்லில் இருந்து ஏப்ரல் மாதம் தோன்றியது.

மே: உலகத்தை சுமக்கும் அட்லஸ் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இவரது மகளே மையா என்ற தேவதை. மையாவின் பெயரால் தோன்றிய மாதம் மே.

ஜூன்: ஜுனோ என்னும் தேவதையை இளமையின் சின்னமாக ரோமானியர்கள் வழிபட்டனர். இந்தப் பெயரால் வந்தது தான் ஜுன்.

ஜூலை: ஆரம்ப காலத்தில் இது ஐந்தாவது மாதமாக இருந்தது. ஐந்தை க்விண்டிஸ் என்பர். மார்க் ஆண்டனி இந்தப்பெயரை மாற்றி ஜுலியஸ் சீசரின் பெயரால் ஜுலி என்று பெயர் சூட்டினார். 19ம் நூற்றாண்டு முதல் ஜுலை என்றானது.

ஆகஸ்ட்: ஆரம்பத்தில் இது ஆறாவது மாதமாக இருந்தது. ஆறு என்ற எண்ணை செக்ஸ்டிலிஸ் என்ற கிரேக்க மொழியில் அழைத்தனர். ஜுலியஸ் சீசர் இதை எட்டாவது மாதமாக்கிய பிறகு ரோமானியர்கள் தங்கள் மன்னரான அகஸ்டஸை பெருமைப்படுத்தும் விதத்தில் அகஸ்ட்ஸ் என பெயரிட்டனர். அதுவே ஆகஸ்ட் என மாறியது.

செப்டம்பர்: மார்ச் முதல் மாதமாக இருந்த காலத்தில் செப்டம்பர் ஏழாவது மாதமாக இருந்தது. ஏழு என்ற எண்ணை ரோமானிய மொழியில் செப்டம் என்றனர். ஆனால், புதிய அமைப்பின்படி ஒன்பதாம் மாதமாக மாறி விட்டாலும் கூட பழையபெயரே நிலைத்து விட்டது.

அக்டோபர்: அக்ட்டோ என்றால் எட்டு. ஆரம்பத்தில் எட்டாவது மாதமாக அக்டோபர் இருந்தது. இதுவும் பெயர் மாற்றம் செய்யப் படாமல் பத்தாவது மாதமாகி விட்டது.

நவம்பர்: நவம் என்றால் ஒன்பது. ஒன்பதாம் மாதமாக ஆரம்பத்தில் இதைக் கணித்தனர். 11ம் மாதமாக மாறிய பிறகும் பெயர்மாற்றம் செய்யப்படவில்லை.

டிசம்பர்: டிசம் என்றால் பத்து பத்தாம் மாதமாக இருந்த டிசம்பர், 12ம் மாதமான பிறகும் பெயர் மாற்றப்படாமல் பழைய பெயரிலேயே அழைக்கப் பட்டது.

சனிக்கிரகத்தில் 10759 நாட்கள் ஒரு வருடம்.

வியாழனில் 4331 நாட்கள் ஒரு வருடம்.
செவ்வாயில் 687 நாட்கள் ஒரு வருடம்.
பூமியில் 365 நாட்கள் ஒரு வருடம்.
வெள்ளியில் 227 நாட்கள் ஒரு வருடம்
புதனில் 88 நாட்கள் ஒரு வருடம்...

திருட்டு ஊடகங்களும்.. உண்மைகளும்...


சீருடை...


பள்ளி மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வு என்ற பாகுபாடு இன்றி அனைவரும் சமம் என்ற சமத்துவத்தை போதிக்கும் எளிய ஆயுதம் சீருடை.

அரசே நீங்கள் எந்த வண்ணத்தில் சீருடையை மாற்றினாலும் அதன் படியே மாறிவிட நாங்கள் தயார்.

தரம் என்ற ஒற்றைச் சொல் உங்கள் ஆளும் வர்கத்திற்கு தெரிந்த சொல்லாகத்தான் இருக்க முடியும்.
ஏன் என்றால்...

நீங்கள் யாரும் குழாயடி நீரைக் குடிக்க குடத்தை தூக்கிக் கொண்டு கால் வலிக்க நின்றிருக்க மாட்டீர்கள் - தரமான சுத்தமான புட்டியில் அடைக்கப்பட்ட தூய நீரைத்தான் குடித்திருப்பீர்கள்...

நீங்கள் யாரும் நியாயவிலைக் கடையில் அரிசி வாங்க பொங்கி உண்டிருக்க மாட்டீர்கள் - தரமான பொன்னி, பாஸ்மதியை பொங்கி ருசிக்க  உண்டிருப்பீர்கள்...

நீங்கள் யாரும் அரசு பேருந்தில் குட்டத்தின் நடுவே நசுக்கப்பட்டு பயணித்திருக்க மாட்டீர்கள் - தரமான 20 லட்சத்திற்கும் குறையாத சொகுசு மகிழுந்தில் தான் பயணித்திருப்பீர்கள்..

நீங்கள் யாரும் வயிற்று பசிக்காக ஓடியிருக்க மாட்டீர்கள் - தரமான சத்தான உணவை உண்டு பெருத்த பருத்த வயிற்றை குறைக்க சொகுசு விடுதியில் தங்கி கடல் காற்று வாங்க ஓடியிருப்பீர்கள்...

நீங்கள் யாரும் வரிசையில் நின்று பொது மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க சென்றிருக்க மாட்டீர்கள் - சின்ன தலைவலி என்றாலும் கூட தரமான அ....லோ மருத்துவமனையைத் தேடித் தான் சென்று கொண்டு இருக்கின்றீர்கள்...

நீங்கள் யாரும் கசங்கிய ஆடையை உடுத்துபவர்கள் அல்ல - தரமான மினிஸ்டர் காட்டனை உடுத்தும் மிராசுகள் தானே...

இப்படி தரம்.. தரம்... என்று எல்லாவற்றிலும் தரமானதைத் தேடி அனுபவிக்கும் நீங்கள்.. உங்களுக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த வாக்காளர்கள் தரமான எதுவுமே கிடைக்காமல் தவிக்கும் ஏழையின் அழுகுரல் உங்களின் கேலா செவிக்கு எட்டவில்லையா... அவன் மழலைகள் போடும் சட்டைப் பொத்தான்கள் காரணம் இன்றி அவிழ்ந்து விழும் சத்தம் உங்கள் ஆளும் செவியை  தொடவில்லையா...

தரமான தலைமையே - தரமான ஆட்சியை தரும்.. அத்தரமான ஆட்சியே - மக்களின் தரத்தை உயர்த்தும். அந்த நன்நாளை எதிர்நோக்கி காத்திருக்கும் எளியோர்களில் ஒருவன்...

மக்களை திசை திருப்பி அழிக்கவே அரசு...


நீர் நிலைகள் மொத்தம் 47...


ஒரு சின்ன குழாயில் நீர் பிடிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47...

(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

(2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.

(4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.

(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.

(8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.

(12) கடல் (Sea) - சமுத்திரம்.

(13) கம்வாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

(15) கால் (Channel) - நீரோடும் வழி.

(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.

(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.

(18) குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.

(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.

(20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.

(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.

(23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.

(24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.

(25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.

(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.

(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.

(29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.

(30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.

(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாகக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.

(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.

(33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.

(34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.

(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.

(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.

(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.

(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.

(41) பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.

(42) மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

(43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.

(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால். (46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.

(47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள்...

தனியார்மயமாக்கல்...


தமிழக வரலாற்றை மாற்றிய இரு முக்கியமான போர்கள்...


வரலாற்றில் எத்தனையோ போர்கள் நடந்திருந்திருந்தாலும், சில போர்களால் தமிழகத்தின் வரலாறே மாறியுள்ளது, அப்படியான போரில் குறிப்பிட்டு நாம் பார்க்க வேண்டியது "தெள்ளாற்றுப் போர்". இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போர்களால் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

"தெள்ளாறு", இன்றைக்கு, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம், பல்லவர்கள் காஞ்சியை தலைநகராக கொண்டு கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் வலிமையுடன் ஆட்சி புரிந்தவர்கள்.

இவர்களை அழிக்க எத்தனையோ போர்கள் நடந்திருந்தாலும், குறிப்பாக சோழரும், பாண்டியரும் ஒன்றாக இணைந்து பல்லவ பேரரசின் சாம்ராச்சியத்தை அழிக்க நினைத்தது இங்கு தான், பாண்டியர்கள் பேரரசர்கள், சோழர்கள் அங்கும் இங்குமாய் சிற்றசர்களாகவே இருந்தனர், அப்போது ஆட்சி செய்த வந்த பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850 ) , இங்கு நடந்த போரில் சோழர் மற்றும் பாண்டிய கூட்டுப் படையை எதிர் கொண்டு அதில் வெற்றியும் கண்டான், அதுமட்டுமல்லாது அவர்களை கடம்பூர், வெறியலூர், வெள்ளாறு, பழையாறு ஆகிய இடங்களில் எதிர்கொண்டு பாண்டிய நாட்டு எல்லை வரை ஓட ஓட விரட்டினான், சோழர்கள் பல்லவர்களுக்கு கப்பம் கட்ட உடன்பட்டனர்.

அது முதல் நந்திவர்மன் "தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்" என போற்றப்பட்டான்.இந்த போர் குறித்து ஏராளமான கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன, அவன் மீது பாடப்பெற்ற " நந்திக் கலம்பகத்தில் ' இந்த தெள்ளாற்று வெற்றியினை பலவாறு புகழந்துரைக்கிறார்கள்.

இந்த போரின் வெற்றிக்குப் பிறகு பல்லவர்கள் பெரிதும் வலிமை பெற்றனர், இறுதிக்காலம் வரை பகைவர்கள் நந்திவர்மனை கண்டு அஞ்சியே இருந்தனர். பல்லவர்கள் தங்கள் வலிமையை நிலைநிறுத்திய போராக இது விளங்கியது. அடுத்தாக வடக்கே கங்கை வரையும், தெற்கே கடல் கடந்து கடாரம் வரை ஆட்சி புரிந்த சோழப் பேரரசு.

விச(ஜ)யலாயன் தொடங்கி,ராச(ஜ) ராச(ஜ)ன் சோழன் , ராசே(ஜே)ந்திரன் சோழன் என்று புகழின் உச்சிக்கே சென்ற சோழர்கள் கி.பி-1279 பிறகு எங்கே சென்றார்கள் ?

அவர்கள் வீழ்ந்த இடமும் இந்த "தெள்ளாறு" தான் . சோழப் பேரரசு மூன்றாம் ராச ராசனின் ஆட்சியின் போது அழிவின் விளிம்பில் இருந்தது, தெற்கே "சுந்தர பாண்டியன்" சற்றே வலிமை பெற்று, சோழர்களின் மீது போர் தொடுத்தான்,பாண்டியனுக்கு அஞ்சிய சோழன் காஞ்சிபுரத்தை நோக்கி ஓடினான், அவனை காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த தெள்ளாற்றில் இடைமறித்து போர் புரிந்தான், அதில் மூன்றாம் ராச ராசன் தோல்வியுற்றான், அது சோழர்களுக்கு பெரும் பின்னடைவாய் இருந்தது.

பின்னர் காடவ மன்னன் அவனது தலைநகரான சேந்தமங்கலத்திற்கு கொண்டு சென்று அங்கு சோழனை சிறை வைக்கப்பெற்றான். இதை அறிந்த பாண்டியனும், சோழனின் மாமனாரான மேலைச் சாளுக்கிய மன்னனும் சேந்தமங்கலத்தின் மீது போர் தொடுத்து சோழனை சிறை மீட்டனர், சேந்தமங்கலமும் அதன் கோட்டையும் முற்றிலுமாக அழிக்கப்பெற்றது, இங்கு தற்போது தமிழக அரசு தொல்லியல் துறை அகழாய்வு செய்து கோட்டைப் பகுதிகளையும், காடவர் தலைநகரையும் வெளிக்கொணர்ந்தது.

மூன்றாம் ராசா ராசனுக்கு பின், மூன்றாம் ராசேந்திரன் சிறிது காலம் ஆட்சி புரிந்தான், பின்னர் கி.பி-1279- ல் சோழப் பேரரசு தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போனது.

இவ்வாறு இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போருக்கு பின்னர் தமிழகத்தின் வரலாற்றின் பாதையே மாறியுள்ளது, ஒரு வேலை முதல் போரில் பல்லவர்கள் தோற்று பாண்டியர்கள் வெற்றி பெற்றிருந்தால், சோழ வம்சமே மீண்டும் வராமல் போயிருக்கும், அவர்கள் பாண்டியர்களுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாகவே இருந்திருப்பார்கள்.

தஞ்சை கோயில், கடாரம் வரை ஆட்சி என தமிழர்களின் புகழ் விரிவடையாமலே சென்றிருக்கலாம்.

ஒரு வேலை இரண்டாவதாக காடவர்களுடன் நடந்த போரில் சோழர்கள் வென்றிருந்தால்? இன்னும் அவர்கள் வலிமையுடன் தமிழகத்தை ஆண்டிருப்பார்கள், கடாரம் வரை கப்பலில் சென்று போர் புரிந்த சோழர்களுக்கு, ஆங்கிலேயர்களை விரட்ட எவ்வளவு காலம் பிடித்திருக்கும்...

மாநில அரசின் சட்டமன்ற அதிகாரங்களில் மத்திய அரசு தலையிடக் கூடாது, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் முடிவுகளுக்கு துணை நிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும் - யாருக்கும் அதிகாரம் என்பது தொடர்பாக டெல்லி ஆம் ஆத்தி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு...


துனை நிலை ஆளுனருக்கென்று தனி அதிகாரங்கள் எதுவும் கிடையாது எனினும் டெல்லிக்கு மற்ற மாநிலங்களை போன்று அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது...

மூக்குத்தி அணிவது ஏன்.....?


மூக்குத்தி அணிவது ஏன்? மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை, காற்றை வெளியேற்றுவதற்கு.

கைரேகை, யோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.

ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிசிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும்.

வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் கி(ஹி)ப்போதலாமசு(ஸ்) என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது.

இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும். இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது. பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும்.

இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.

அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது.

பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.

இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது.

மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது. ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர். உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது.

தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும். தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது.

இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்...

அறப்போர் இயக்கம் சார்பாக கேள்வி வைத்துள்ளனர்...


இப்படி ஒளித்து மறைத்து ஒரு சட்டத்தை இயற்ற வேண்டிய நோக்கம் என்ன? சட்டம் இயற்றும் முன் மக்கள் மத்தியில் அதை விவாதிப்பதற்கு என்ன பயம்? தைரியமா விவாதம் செய்ய வாங்க ஜெயக்குமார் சார்...

தமிழன் ஒரு தீர்க்க தரிசி...


சித்தர்களை கடவுளின் சீடராகவும்.. சித்தர் பாடல்களை கடவுளை தொழும் பாடலாகவும் நினைக்காமல் சிறிதளவு அறிவியல் கண்ணோடு பார்த்தால் தான் தெரியும் சித்தர்கள்தான் இந்த உலகின் இதுவரையில் யாராலும் தொடமுடியாத அளவில் அனைத்தையும் ஆராய்ந்த ஆய்வாளர்கள்.... மிக பழைய ஆராச்சியாலர்கள் என்று...

அதற்கு ஓர் உதாரணம்...

இன்று உலகம் தேடிகொண்டிருக்கும் ஆய்வாளர்கள் சொல்லாத ஒரு அறிய உண்மையை நாம் காண இருக்கிறோம் அதற்கு முதலில் பல ஆயிரம் ஆண்டு முன் வாழ்ந்த திருமூலர் சொல்லிய திருமந்திரத்தில் இருந்து ஒரு தொகுப்பு இங்கே பார்போம்..

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே
-திருமூலர்.

இவர் இங்கு குறிபிட்டுருப்பது சிவனுடைய வடிவை சொல்லவேண்டுமாயின் ஒரு பசுவின் முடியை(மயிரை) எடுத்து அதை நூறாக கூறிட்டு பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாக பிரித்து அதில் ஒன்றை நான்கயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறி இருக்கிறார்.

இப்பொழுது நாம் இதை அறிவோம் ஒரு ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு

0 .000000212 mm - ஹைட்ரோஜென்

சரி இப்பொழுது நாம் அவர் கூற்று படி கணக்கிட்டு பார்போம், ஒரு மனிதனின் முடியானது 30 -80 மைக்ரோன் (micron) அக உள்ளது, எனவே நாம் 50 மைக்ரோன் என்றே வைத்துகொள்வோம்

மயிரின் சுற்றளவு = 50 மைக்ரோன்
(size of an hair = 50 micron )

100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்
(100 micron = 0.1 millimeter)

50 மைக்ரோன் = 0.05 மில்லிமீட்டர்

இப்பொழுது அவர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்

0.05/100 = 0.0005 மில்லிமீட்டர் (MM)
அதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்

0.0005/1000 = 0.0000005 மில்லிமீட்டர் (MM)
இப்பொழுது நமக்கு கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தில் வகுத்தால் நான் சிவனின் வுருவத்தின் அளவை காணலாம் என்கிறார் திருமூலர்

0.0000005/4000 = 0.000000000125 மில்லிமீட்டர் (MM)

அகவே இவர் கடவுளின்(சிவனின்) அளவாக குறிபிடுவது சரசெரியாக 0 .000000000125 மில்லிமீட்டர் (MM) இப்பொழுது இந்த கடவுள் என கருதப்படும் அளவானது நாம் அறிவியல் ஆய்வாளர்களால் அளக்க பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவைவிட பன்மடங்கு சிறியதாக உள்ளானது. சரி அதை விட சிறியதாக என்ன இருக்கமுடியும் என்கிறிர்களா ... அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருகிறார்கள் . நாம் பொதுவாக சொல்லுவோம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று . இப்பொழுது ஹிக்க்ஸ் போசொனில் சொல்வதும் அணு தனியாக செயல் படவில்லை அதற்கு உல் அணு ஒன்று உள்ளது அது தான் காட்ஸ் பார்ட்டிகள் என்னும் போசோன் கண்டுபிடிப்பு. அதன் அளவு இன்னும் அறியப்படவில்லை . அறியபட்டால் புரியும் நம் தமிழரின் தனித்துவம்
ஹிக்க்ஸ் போசோன் உருவம் என்ன??

என் ஆராய்ச்சியின் அடுத்தகட்டமாக சிவனின் அளவை சொன்ன திருமூலர் சிவனின் வுருவதை சொல்லாமலா இருந்திருப்பார்?

அவ்வளவு சிறிய சிவனின் உருவம் எப்படி இருக்கும் என்று நமக்குள் ஒரு ஆர்வம் உண்டாகிறது அல்லவா, இதோ அவனின் உருவ அழகை சொல்லும் திருமூலரின் வார்த்தைகள்.

கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே
-திருமூலர்

இதில் அவர் கூறியிருப்பது என்னவெனில் அனைத்திலும் கலந்தும் கலக்காமல் இருப்பவன், கண்ணனுக்கு தெரியாதவன் பரந்த சடையுடையவன் பசும்போன்னிரத்தில் இருப்பவன் , நினைபவர்கேல்லாம் கிடைக்காதவன் , அனைவரயும் மயக்கும் வெண்ணிலவானவானே. இது தான் அவர் சிவனின் வுருவாக சொல்கிறார்.

இதில் இப்பொழுது நாம் சில வரிகளை மீண்டும் ஆராய்ந்து பாப்போம்...

பொதுவாக சிவ பெருமானை நாம் சடாமுடியன் , சடையான் , என்று கூறுவோம் , அதே போல் அவரும் பரந்த சடையுடையவானே என்று கூறியிருக்கிறார், இப்பொழுது உங்கள் கண்கள் முன்னே ஒரு மனிதனை பரந்த சிடியுடன் நினைத்து கொள்ளுங்கள், நாம் பேச்சு வழக்கில் பரட்டை தலை என்று சொல்லுவோம் அல்லவா அதைபோன்று, அனால் சற்று பெரிய அளவில் .

பின்பு அந்த வுருவம் பொன்னிறத்தில் உள்ளது போல் நினைத்து கொள்ளுங்கள், இப்பொழுது உங்கள் கண் முன்னே நாம் வழக்கமாக காணும் சிவ பெருமான் பொன்னிறத்தில் சடா முடியுடன் காட்சியளிப்பான். இப்பொழுது திருமூலர் கூறியவாறு அந்த வுருவத்தை கண்ணுக்கு புலப்படாமல் சிறியதாக மாற்றுங்கள் . சாரா செரியாக ஒரு அனுவலவிற்கு..

இப்பொழுது சொல்லுங்கள் ஹிக்க்ஸ் போசோன் சொல்லும் அந்த ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் எப்படி இருக்கும் என்று.....

இணையதளத்திலும் தொலைகட்சிகளிலும் நாம் தங்க நிறத்தில் படர்ந்த முடி போல காட்சி அளிக்கும் அந்த வடிவு தான் ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் என்றால் , அதை கண்டுவிட்டாரே திருமூலர் பல நூற்றாண்டு முன்னரே...

தனுஷ்கோடி....


ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன...


இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர். முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது.

கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற நாட்டவர் 2 மரங்களைப் பயன்படுத்த, தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். பாறைகளில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழட்டி விடும்படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர். பிற்காலத்தில்தான் தென்னிந்தியர்களிடம் இருந்து ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டனர். தெப்பம் என்ற சொல், பல்வேறு மொழிகளில் படகைக் குறிப்பதாகவே உள்ளது.

கிரேக்கத்தில் பாண்டியன்-1, 2 என்ற மன்னர்கள் ஆண்டுள்ளனர். அங்கு சிற்றரசர்களாக பல்லா என்ற வம்சத்தினர் ஆண்டுள்ளனர். பல்லா இனத்தவர் கிழக்கில் இருந்து வந்த வேளாண் தொழில் சார்ந்தவர்கள் என கிரேக்க பழம் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகடூரில் இரும்பு சார்ந்த நாகரிகம் இருந்துள்ளது. அப்பகுதியை ஆண்டவன் அதியமான். அவன் மகன் பெயர் எழினி. துருக்கியில் இரும்பு சார்ந்த பகுதி இன்றும் அதியமான் என அழைக்கப்படுகிறது. இரும்பு உருக்கும் ஆலைப் பகுதி எழினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன.

ஜப்பானில் குரில் என்ற பகுதியில் மருதை என்ற ஊர் உள்ளது. சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் அமைந்துள்ளன. பாண்டியன் என்ற சொல்லுக்கு சீனத்தில் வேர்ச்சொல் இல்லை. ஆகவே இது தமிழகம் சார்ந்த பெயர் என அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார். கி.பி. 45-இல் இந்தோனேசியாவை ஸ்ரீமாறன் என்ற தமிழ் மன்னன் ஆண்டுள்ளான். ஆஸ்திரேலியாவில், குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. பெரு, சிலியில் நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன.

பழந் தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன. ஆமைகளே தமிழரின் கடலோடும் வாழ்வுக்கு பெரும் உதவிகரமாக இருந்திருக்கின்றன. பாண்டியர்கள் காளை, மீன் ஆகியவற்றோடு ஆமை இலச்சினைகளையும் பயன்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமைச் சிற்பங்கள் உள்ளன. கிரேக்க, பாண்டிய நாணயங்களில் ஆமை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழக பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். இந்த வழக்கம் விலங்குகளில் ஆமைக்கு மட்டும் உண்டு.

இனப் பெருக்கத்துக்காக ஆமைகள் தாங்கள் பிறந்த பகுதிக்குச் செல்கின்றன. தமிழகத்தில் மட்டும் இந்த பண்பாட்டுக் கூறு உள்ளது ஆராயத்தக்கது. பிராங்ளின் ஜோசப், கொலம்பஸ் ஆகியோர் கண்டறிந்த கடல் வழித்தடங்களும், ஆமைகளின் கடல்வழித்தடமும் ஒன்றுதான். ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் கடலோரப் பகுதிகளே பழங்காலங்களில் துறைமுகமாகச் செயல்பட்டுள்ளன.

பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி கடலில் போட்டால் அவை தாமாகவே தனுஷ்கோடி வந்தடைந்துள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த கடல் நீரோட்டத்தைத் தமிழன் பயன்படுத்தியுள்ளான். கரையோரப் பகுதி வாழ்வியல்கள் இன்னும் ஆழ்ந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும்...

சாகர்மாலா - அனைத்தும் திட்டமிட்டே நடக்கிறது...


பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி...


நம் ஆழ்மனதில் ஆழ்ந்த நம் எண்ணத்தை விதைத்தால் தவறாது செயலுக்கு வரும். நல்லதை விதைப்போம். ஈர்ப்பு விதியை பொறுத்தவரை கால அளவுகள், விதிகள் போன்றவை எல்லாம் கிடையாது..

நீங்கள் ஒரு விசயத்தை ஆழமாக நம்பி காட்சிபடுத்தினால் மட்டும் போதும், அதை உங்கள் முன் கொண்டு வரும்...

பிரான்ஸ் நாட்டில் ஒரு கிராமத்து கடைக்காரப் பெண்மணி ஒரு சிறுவனிடம்  ஒருநாள் ஒரு கேள்வியைக் கேட்டாள்..

தம்பி, நீ படிச்சு என்ன வேலைக்குப் போகப் போற? அதற்கு அந்த சிறுவன் உடனடியாக சொன்ன பதில்; நான், பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தியாகப் போகிறேன்.

பிரான்ஸ் நாட்டின் வரலாற்றில் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சக்கரவர்த்தியாக முடியும். அதுதான் அன்றைய உலகின் நடைமுறை வழக்கம்.

அதை மீறுவது எந்த வகையிலும் எவருக்கும் சாத்தியமில்லை. ஒரு வேடிக்கை நிகழ்ச்சியாகவே அந்தப் பெண்மணி கருதினாள்.

அந்த சிறுவன் தன்னுடைய மனதில் போர்க்களங்களை உருவாக்கிப் போரிடும் முறைகளைக் கற்பனையில் வடிவப்படுத்திக் கொண்டே இருப்பான். அந்தப் பயிற்சிதான் பின்னாளில் அந்த சிறுவனை எல்லாப் போர் முனைகளிலும் வெற்றி பெறச் செய்தது.

அந்த சிறுவன் இளமையில் ஒதுக்கமான ஓரிடத்தில் கருங்கற்பாறையின் பிளவு ஒன்றில் அமர்ந்து பகற்கனவு காணுவது வழக்கம்.

மற்ற சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் அந்த சிறுவன் மட்டும் அங்கு அமர்ந்து சக்கரவர்த்தியாகத் தன்னை பாவித்து போர்களை வெல்வது போலவும் நாடுகளை பிடிப்பது போலவும் கற்பனை செய்வது வழக்கம்.

திரண்டு வரும் அலைகளைத் தன் எதிரிகளாகவும், எதிரிகள் தன்னருகே வந்து தோற்றுப் பின் வாங்குவது போலவும் கற்பனை செய்து கொள்வாராம் சிறுவன்.

சிறுவனின் ஆழ்மனதில் பதித்த அந்த கற்பனைகள் எல்லாம் பிறகு வரலாறாகியது.

பின்னாளில் சிறுவன் பிரான்ஸ் நாட்டின் வம்சாவழி வரலாற்றை மாற்றி அமைத்ததோடு மட்டுமல்லாமல் உலக வரலாற்றின் திசைப்போக்கையும் முழுக்க முழுக்க மாற்றி அமைத்தார் அவர் தான் நெப்போலியன்...

ஆசிரியர்களுக்கு நன்றி...


தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான்...


முக்கடலும் முத்தமிழும் மூவேந்தர் பரம்பரையும் கோட்டையிலே வில்,புலி,மீன் கொடிகள் நாட்டி செந்தமிழ் தாய் சீரிமை திறம் விளங்க சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியனும் அவன் அமைத்த தமிழ் சங்கத்திலே எழுத்தாணி ஏந்தி தலைமைப்புலவனாய் தமிழாய்ந்த புலவர்களில் ஒருவர் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் ஆவார்.

அதன்கோட்டின் அமைவிடம்...

தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்கள் வாழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க இடம்தான் அதங்கோடு. இவ்விடம் குமரி மாவட்டத்தின் மேற்கு திசையில் வள்ளுவன்கோடு என அழைக்கப்பட்டு பின்னர் விளவங்கோடு என மருவிய விளவங்கோடு தாலுக்காவில் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மெதுகும்மல் ஊராட்சியில் அமைந்துள்ளது.

அதன்கோட்டில் சூரியமுக்கு என்னும் இடமுண்டு. இவ்விடத்தின் அருகில் "பக்றுளி ஆறு" என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட குழித்துறை தாமிரபரணி ஆறு செல்கிறது. தொன்றுதொட்டே அதங்கோடு ஒரு ஆற்றங்கரை நாகரீகப் பகுதியாக இருந்து வந்துள்ளது. இந்த ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.

அதங்கோடு சூரியமுக்கில் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்களால் நடத்தப்பட்டு வந்த தமிழ் சங்கம் தண்ணீர் பெருக்கால் அழிக்கப்பட்ட காரணத்தினால் அவரும் அவரோடு சார்ந்த தமிழ்ப்புலவர்களும் பாண்டிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த 'கபாடபுரத்தில்' நடந்த தமிழ் சங்கத்தில் இணைந்தார்கள். கபாடபுர தமிழ்ச்சங்கத்தை கும்பவம்பக்குறுமுனி என்று அழைக்கப்பட்ட  அகத்தியர் தலைமை தாங்கி நடத்தி வந்தார். அவருடன் கீழ்க்கண்ட பன்னிரு பெரும் சீடர்களாயினர்.

தொல்காப்பியர்
அதங்கோட்டாசான்
துராளிங்கன்
செம்புத்செய்
வையாபிகன்
வாய்ப்பியன்
பணம்பாரன்
கலாரம்பன்
அவினயன்
காக்கை பாடினியன்
நட்டதன்
வாமணன்

இவர்களை அகத்தியரின் "பன்னிருமாணாக்கர்" என அழைக்கிறோம்.'கபாடபுரத்தில் ',"அகத்தியர்" தலைமையில் நடந்து வந்த தமிழ் சங்கத்திற்கு,முதல் தமிழ் இலக்கண நூலாக இருந்தது "அகத்தியம்" என்னும் இலக்கண நூல் ஆகும்."அகத்தியம்" கால வெள்ளத்தால் அழிந்த காரணத்தால் அதற்கு வழி நூலக ஒரு இலக்கண நூலை இயற்ற தனது தலை மாணாக்கரான தொல்காப்பியரை அழைத்துச்சொன்னார் அகத்தியர்.

இந்நிலையில் தொல்காப்பியர் தொல்காப்பியத்தை இயற்றினார்.மதுரை தமிழ்ச்சங்கத்தில் தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியம் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றப்பட்டது என்பது வரலாறு.

தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களிலும் எக்குற்றமும் இல்லை என அறுதி இட்டு கூறினார் அதங்கோட்டாசான்.

பணம்பாரரின் கருத்து...

தொல்கபியப் பாயிரத்திற்கு உரை எழுதிய பணம்பாரன் என்னும் தமிழ்ப் புலவர் தனது சிறப்புப் பாயிரத்தில்

"நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அரங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதன்கோட்டாசாற்கு அகில் தபத்தெரிந்து"

இதன் விளக்கம் யாதெனில் ,
மாற்றானது நிலத்தை தன் கீழ் வாழ்வார்க்கு கொண்டு கொடுக்கும் மன்னன் மாகீர்த்தியது அவையின் கண் நான்கு மறைகளையும் அதாவது ரிக், யஜூர் , சாம,அதர்வண எனும் நான்கு வேதங்களையும் முற்றும் உணர்ந்த "அதங்கோடு" என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என விரிவாக எழுதிஉள்ளார்.

இளம்பூரணரின் கருத்து...

தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திற்கு உரைப்பாயிரம் எழுதிய இளம்பூரணம் என்னும் தமிழ்ப்புலவர் நான்கு மறைகளையும் முற்றும் உணர்ந்த "அதங்கோடு" என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என்று எழுதி உள்ளார்.

அடைமொழி இன்றி தனிமொழியாக "அதங்கோடு" என்கிற ஊர் திகழ்கிறது. அதனால் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்தை அரங்கேற்றியவர் அதன்கோட்டில் பிறந்து தமிழ் ஆய்ந்த இடம் "அதங்கோடு" என உறுதி செய்யப்பட்டுள்ளது...

அதிமுக ஜெயக்குமார் கலாட்டா....


மாண்புமிகு நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்களே,
இரண்டு நாட்களாக உங்களை தொடர்பு கொள்ள எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டன.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பயந்து நீங்கள் சட்டசபையில் தாக்கல் செய்ய இருக்கும் லோக் ஆயுக்தா சட்டம் பற்றிய சில விளக்கங்களை உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

முதல்வரே ஊழல் செய்தால் கூட அவரை விசாரித்து தண்டனை கொடுக்கும் அதிகாரம் கொண்ட லோக் ஆயுக்தா சட்ட மாதிரி முன்வடிவு எங்களிடம் இருக்கிறது. அது குறித்து உங்களுக்கு விளக்கம் கொடுக்க விரும்புகிறோம்.

எங்கள் அழைப்பை எடுங்கள் அல்லது 7200020099 என்ற எண்ணில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்...

நீதிமன்றமே பதில் சொல்...


லோக் ஆயுக்தா சட்டமும்.. அதிமுக ஜெயக்குமாரும்...


ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் ஊழல் அதிகாரிகளை விரைவாக விசாரித்து தண்டனை கொடுக்கும் சிறப்பு சட்டம்.

இதை தயாரிப்பது யார்?

அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்.

அவர்களை தண்டிக்க அவர்களே சட்டம் தயாரிக்கிறார்களா?

ஆமாம்.

அப்போ இந்த சட்டம் வலுவில்லாமல் இருக்குமாறு அவர்கள் தயாரிக்க வாய்ப்பிருக்கிறதே?

கண்டிப்பாக இருக்கிறது. அதனால் தான் இந்த சட்டத்தை அமல்படுத்தும் முன்பு பொது மக்கள் பார்வைக்கு வைத்து அவர்கள் கருத்தை அறிந்து மாற்றங்கள் தேவைப்பட்டால் அந்த மாற்றங்களுடன் இந்த சட்டத்தை அமல்படுத்த சொல்கிறோம்.

இந்த சட்டம் இப்போ யார் பொறுப்பில் தயாராகிறது?

நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் தான் இதற்கு பொறுப்பு. அதனால் தான் அவர் மேற்பார்வையில் தயாரிக்கப்படும் இந்த சட்டம் குறித்த விவாதத்திற்கு அவரை அழைக்கிறோம்.

விவாதத்திற்கு வருவாரா?

அவர் தைரியமானவர். கண்டிப்பாக பயப்படாமல் வருவார்...

சாகர்மாலா திட்டமும் உண்மைகளும்...


வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் என்னும் ஊரில் பல்லவ மன்னர் ஆட்சி செய்த நேரத்தில், மார்கபந்தீஸ்வர் ஆலயத்தை கட்டியுள்ளனர்...


ஆலயத்தில்,, மணிகாட்டி கல் உள்ளது. சிறு குச்சியை  கல்லின் மேல் வைத்தால், சூரிய ஓளிக்கேற்ப - நிழல் மணி நேரத்தை காண்பிக்கிறது....

பாஜக மோடியின் மோசடி அரசாங்கம்...


தூத்துக்குடி துறைமுக விருந்தினர் மாளிகை அருகே வாலிபர் உடல் மீட்பு : கொலையா? என போலீசார் விசாரணை...


தூத்துக்குடி துறைமுக விருந்தினர் மாளிகை அருகே வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தெர்மல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் தூத்துக்குடி திரேஸ்புரத்தை சார்ந்த ஆனந்தன் மகன் குமார்(38) என்பது தெரிய வந்தது. கடலுக்கு மீன்பிடிக்கும் செல்லும் தொழிலாளியான இவர் என்பது தெரிய வந்தது. பின்னர் இறந்து கிடந்த குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தெர்மல் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

உதய் மின் திட்டமும் உண்மைகளும்...


நாங்கள் சொல்லும் பிராவைத்தான் அணிய வேண்டும்.. மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் உத்தரவு....


மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள விஷ்வசாந்தி குருகுல் பள்ளி. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு நிர்வாகம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி மாணவிகள் வெள்ளை நிற பிரா அல்லது ஸ்கின் நிறத்தில்தான் அணிய வேண்டும். வேறு நிறத்தில் பிரா அணிந்து வந்தால் அது பார்ப்பவர்களது கண்களை உறுத்தும்.

நாங்கள் சொல்லும் பிராவை அணிந்து வர வேண்டும். இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்   என்று எச்சரித்து உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் மற்றும் பெற்றோர் போராட்டம் நடத்தினர். ஆனால் அதனை எல்லாம் கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம் தனது முடிவில் உறுதியாக உள்ளது.

மேலும் வெள்ளை மற்றும் ஸ்கின் நிறத்தில் பிரா அணியாவிட்டால் அது மற்றவர்களின் கண்களை உறுத்துவதோடு, அது பாலியல் பலாத்காரத்திற்கு வழிவகுக்கும் என்று கூறி உள்ளது...

சேலம் 8வழி சாலையும் - அதிமுகவின் பயங்கரவாதமும்...


மூலிகை நீர்...


ஆவாரம்பூ நீர் : ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

கரிசாலை நீர்: சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.

செம்பருத்தி நீர்: செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.

காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

நன்னாரி நீர்: தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால் என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.

துளசி நீர்: குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து,தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.

வல்லாரை நீர்: யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். காய சித்திக்கு புளியாரை கபால கோளாறுக்கு வல்லாரை என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்...

வரலாறுகளும் உண்மைகளும்...


சுற்றுபுறசுழலில் நெகிழியின் தீமைகள்...