10/10/2017

கடவுள் படைத்தாரா ?


கடவுள் மனிதரை படைத்தாரா என்ற கேள்விக்கு பதில் இருக்கிறதோ இல்லையோ கடவுளை படைத்தது மனிதன் என்பது மட்டும் உண்மை.

அதிலும் மற்ற கடவுளைவிட பிள்ளையாருக்கும், அம்மனுக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது.

மற்ற எல்லா கடவுளுக்கும் குறிப்பிட்ட அவதாரமுண்டு. ஆனால் பிளேக் மாரியம்மன், மைதான மாரியம்மன், தண்டு மாரியம்மன், வேலை கொடுக்கும் பிள்ளையார், இரட்டை விநாயகர், வினை தீர்க்கும் பிள்ளையார் என தெருவுக்கு ஒரு அவதாரம் எடுப்பது இவர்கள் மட்டும்தான். இப்படி மனிதனுக்கு வழிபட கண்டிப்பாக ஒரு உருவம் தேவைப்படுகிறது.

கி மு 483 ல் புத்தர் இறந்தபோது, அவர் உடல் எரிக்கப்பட்டதாம். அதன் சாம்பலை மற்ற நகரங்களுக்கு அனுப்பியதாக ஐதீகம்.

புத்தரின் பல் ஸ்ரீலங்காவில் கண்டியில் மிகவும் ஆரதிக்கப்படுகிறது. ஏதோ ஒரு விதத்தில் வழிபட மனிதனுக்கு அடையாளம் தேவைப்படுகிறது. புதைத்த இடம், எரித்த இடம், மறைந்த இடம், பல், செருப்பு.... இப்படி ஒரு அடையாள ஸ்தலம் இல்லையென்றால் மனித மனம் தவிக்கிறது.

உங்கள் வாழ்க்கை சீராக Highway ல் கார் செல்வதுபோல் சென்றால் பதசஞ்சலிலும் வேண்டாம்; பாதராயணரும் வேண்டாம். ஆனால் அந்த பயணத்தில் சிறு பிரச்சனையை வரும்போதுதான் கடவுளை பற்றிக்கொள்ள மனம் பதப்பதக்கிறது. மனித மனத்தை பொறுத்தவரை, ஒரு கண் கண்ணாடி or ஒரு கைதடி போன்றது கடவுள்.

பக்தி vs ஆன்மீகம்...

பக்திக்கும், ஆன்மீகத்திற்கும் உள்ள வேறுபாடு பலருக்கும் தெரிவதில்லை.

பக்தி ஒன்றை பற்றிக்கொண்டு திரும்ப, திரும்ப அதையே செய்வது. பல ஆண்டுகளாக பக்தி பாடல்களையும், ஸ்லோகங்களும் பாடி பூஜை செய்யும் பலரை நமக்கு தெரியும்.

ஆனால் தாம் தினமும் சொல்லுகின்ற , ஸ்லோகங்களுக்கு அர்த்தம் அவருக்கு தெரியாது. இது போன்ற பக்தியைத்தான் கடவுள் நம்பிக்கையென்று நம் வருங்கால சந்ததிக்கு சொல்லிக் கொடுக்கிறோம்.

ஆன்மீகம் என்பது தன் நிலை உணர்தல். தனக்குள் இருக்கும் கடவுளை தேடுவதாகும் (அகம் பிரம்மாஸ்மி).

யார் கடவுள்...?

நம் மக்களிடையே எஞ்சி நிற்பது வெறும் பக்திதான். மற்ற மொழிக்கில்லதா தனிச் சிறப்பு தமிழுக்கு உள்ளது. தமிழை வளர்த்ததில் பெரிய பங்கு பக்திக்கு உண்டு. தமிழில் உள்ள சிறப்பான நூல்கள் யாவும் பக்தி இலக்கியங்களே. தேவாரம், திருவாசகம், திருப்புகழ், ஆண்டாள் பாசுரம் என தமிழை வளர்த்தது பக்திதான்.

இதுபோன்ற விஷயங்களை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து ஜோதிடம், ஜாதகம், வாஸ்து என மனிதரை பயப் படுத்துகின்றவற்றை தான் நாம் கட்டி காப்பாற்றுகின்றோம். மெள்ள ஒரு மதத்தின் ஆரம்பகால காரணங்கள் விலகிப்போய், அதன் சடங்குகள் மட்டும் மிச்சமிருக்கும்நிலை, எல்லா மததிற்க்கும் வெவ்வேறு அளவில் உண்டு.

கடவுளை எப்படி உணர்வது..

நாம் எப்படி கடவுளை வணங்குகின்றோம்? வழியில் கடந்து செல்லும்போது வருகின்ற பிள்ளையார்; வண்டியில் செல்லும்போது ஒரு நொடிப் பொழுதில் கடக்கும் முருகன்; சினிமா அரட்டை அடித்துக்கொண்டு கடவுளை தரிசிக்க செல்வது; பிரசாதத்திற்காக கோயிலுக்கு செல்வது இவைதான் பக்தியா ?

திருச் சிற்றம்பலம்..

மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என்
கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்த்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே.

கடவுளை பார்த்தவுடன் உடலும் மனமும் நடுங்கி உடலெல்லாம் வியர்த்து, கண்ணீர் ததும்ப்பி, பொய்களை தவிர்த்து கைகளை நெகிழ்ந்து கடவுளை கும்பிடுவதாக மணிக்கவாசகர் கூறுகிறார்.

இந்த உணர்வு எனக்கு கடவுளை பார்த்தவுடன் வரவில்லையே? ஆனால், ஒரு கிரிக்கெட் போட்டியில் ஒரு ஓவருக்கு 19 ரன்கள் தேவைப்படும் போதும், அந்த ஆட்டத்தை என்னுடைய அணி வெற்றிப் பெறும்போது என்னால் அதை உணர முடிகிறதே (மணிகவாசகருக்கு ஏற்பட்டதுபோல்). அப்போது கிரிக்கெட் தான் கடவுளா? எது ஒன்று மனிதனை மனம் நெகிழ செய்கிறதோ அதுதான் கடவுளாக இருக்க முடியும்.

பாரதியின் பார்வை..

நாம் எதையெல்லாம் கடவுள் வழிபாடு என்று நினைக்கிறோமோ அந்த எல்லாவற்றையும் உடைத்து எறிகிறான் பாரதி.

காவித் துணிவேண்டா,கற்றைச் சடை வேண்டா;
பாவித்தால் போதும் பரமநிலை யெய்துதற்கே.
சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங் ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா.
தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா.
சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தை செய்தாற்போதுமடா.

கடவுளை உணர்வதற்கு எந்த வகையான உடையோ , அணிகலனோ தேவையில்லை. உன்னை உணர்ந்தால் போதும் என்கின்றான் பாரதி.

எந்த தோத்திரங்கள் தேவையில்லை அவனை உன் மனதால் வணங்கி நின்றால் போதும் என்கிறான்...

கர்நாடக சங்கீதம் தமிழிசையே..


கர்நாடக சங்கீதம் தமிழிசையே..


நிறுவிய கிறித்தவரும்
ஆராய்ந்த இசுலாமியரும்

தமிழிசையே இப்போது 'தென்னிந்திய இசை' என்றும் 'கர்நாடக சங்கீதம்' என்றும் வழங்கப் படுகிறது..

வட இந்திய இசை அல்லது 'ஹிந்துஸ்தானி இசை' இந்தத் தமிழிசையின் ஒரு 'வளர்ச்சி நிலையே' என்றும் தெரிய வருகிறது..

தமிழ்நாட்டு வரலாற்றை நாம் கூர்ந்து பார்க்க வேண்டும்..

கி.பி. 3 ம் நூற்றாண்டு முதல் 6ம் நூற்றாண்டு வரை இங்கே களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது.

தொடர்ந்து 20 ம் நூற்றாண்டு வரை தமிழகம் மாறி மாறி பிறமொழி மன்னர் குலங்களால் தான் ஆட்சி செய்யப்பட்டு வந்தது.

இடைக் கால சோழர் ஆட்சியும் இடைக் கால பாண்டியர் ஆட்சியும் சிறு இடைவெளிகள் தான்.

இந்தப் பிறமொழி ஆதிக்கம் காரணமாக தமிழ்க்கலைகள் பல ஆதரிப்பார் இல்லாமல் அழிய நேரிட்டது.

பல்லவர்கள் வடமொழிக்கும், தெலுங்குக்கும் முக்கியத்துவம் அளித்தனர்.

நாயக்கர் காலம் தெலுங்கு காலகட்டம்.

பிறகு மாரட்டியரின் காலகட்டம்.

இந்தக் கால கட்டங்களில் பொதுவாக தமிழ்க் கலைகளுக்கு சரிவும், தொடர்ச்சியறுதலும் நிகழ்ந்தன..

பிற மொழியினர் ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் வடமொழியிலும், தெலுங்கிலும் எழுதினார்கள்.

வடமொழி என்பது இந்தியா முழுக்க தொடர்பு ஏற்படுத்தித் தரும் தொடர்பு மொழியாக இருந்தது. தெலுங்கு ஆட்சி மொழி. இன்று ஆங்கிலம் நமக்குக் கவர்ச்சியான மொழியாக இருப்பது போல வடமொழியும், தெலுங்கும் உயர்குடி மொழியாகவும் கருதப்பட்டன..

இசை முற்காலத்தில் அரச சபைகளையே பெரிதும் நம்பியிருந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

அரச சபை தெலுங்கிற்கும், வடமொழிக்கும் முக்கியத்துவம் தரும் போது பாடகர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் வேறு வழி இல்லை..

சரி, இந்த இசையமைப்பு தமிழ்நாட்டுக்கு உரியது என்பதற்கு என்னஆதாரம்?

நமது பண்டைய இலக்கியங்களே முதல் ஆதாரங்கள்.

ஆபிரகாம் பண்டிதர் அதை விரிவாக நிறுவியிருக்கிறார்.

நான்கு வகை நிலங்களாக இயற்கையைப் பிரித்தது தமிழ் மரபு.

நான்கிற்கும் கருப்பொருள், உரிப் பொருள் வகுத்தது.

இது நமது கலை இலக்கியங்களுக்கெல்லாம் பொதுவான இலக்கண அடிப்படையாகும்.

நான்கு நிலத்திற்கும் தனியாக நான்கு பெரும் பண்கள் கூறப்பட்டுள்ளன.

நான்கு பெரும் பண்களும்.நான்கு சிறு பண்களும் வகுத்துக் கூறப்பட்டுள்ளன.

நான்கு நிலங்களும், பாலையாகத் திரிபு கொள்ளும் போது அதற்கும் பெரும் பண் சிறு பண் வகுக்கப்பட்டுள்ளது.

பண்கள் தான் இராகங்களாக காலப்போக்கில் வளர்ச்சி அடைந்தன..

நான்குநிலத்திற்கும் உரிய பெரும்பண்களை பாலை
என்கிறோம்..

நமது பழந்தமிழ் இலக்கியங்களில் 'ஏழ்பெரும் பாலை' என்பது அடிக்கடி குறிப்பிடப் படுகிறது.

சிலம்பு (உரையாசிரியர்கள்) கூறும் வட்டப் பாலை முறையில் ஏழ் பெரும் பாலைகளை அமைத்து கூறியவர் பண்டிதரே.

ஏழ்பெரும் பாலைகளாவன:

1. செம்பாலை
2.அரும்பாலை
3.கோடிப்பாலை
4.மேற்செம்பாலை
5.படுமலைப்பாலை
6.செவ்வழி
7.விரிம்பாலை

இந்த ஏழு பண்களையும் வட்டப் பாலை முறையில் அமைத்துக் காட்டியவர் பண்டிதரே.

வட்டப் பாலை முறையில் ராகங்கள் எப்படி அமைகின்றன என்று கண்டடைந்து சொன்னதே பண்டிதருடைய முக்கியமான சாதனையாகும்..

எல்லாருக்கும் புரிகிற,தெரிந்த உதாரணம் சொல்கிறேனே.

சிலப்பதிகாரத்தில் 'ஆய்ச்சியர் குரவை' என்ற பாடல் பகுதி வருகிறது.

அது "முல்லைத் தீம்பாணி" என்று குறிப்பிடப் படுகிறது..

‘சரிகபத ‘ என்பது அதன் சுரம்.

இந்த முல்லைத் தீம்பாணி தான் இன்றைய"மோகனராகம்"

கர்நாடக இசை என்ற பெயர் எப்படி வந்தது?

தியாகராஜர் சென்னையைத் தாண்டிப் போனதே இல்லை.

ஒருமுறை திருப்பதி போனதாக தகவல்.

அவர் பாடியதெல்லாம் இங்கே இருந்துதானே?

கர்நாடக இசை என்ற பெயரெல்லாம் பிற்பாடு வந்தது.

பெயர் மாறினால் என்ன?

ருக்மிணி தேவி அருண்டேல் சின்னமேளம் அல்லது சதிர் கச்சேரியை பரதநாட்டியம் என்று பெயர் மாற்றினார்.

பெயர் மாறினால் மரபு மாறுமா?

கேரளத்திலிருந்து திருவிழா ஜெய்சங்கரும்,ஆந்திராவிலிருந்து லால்குடி ஜெயராமனும் ஒரே இசைதானே பாடுகிறார்கள்?

ஆபிரகாம் பண்டிதர் பற்றி...

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் மங்கியிருந்த தமிழ் மரபிசையை, தமிழ் இலக்கிய அறிவுடன் புதுப்பொலிவு செய்தவர் ஆபிரகாம் பண்டிதர்..

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இந்திய இசை ஆராய்ச்சி மற்றும் இலக்கிய ஆராய்ச்சியின் வழியாக,
தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிறபகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை என்று நிரூபித்த முன்னோடி ஆய்வாளர்..

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைகுறித்த செய்திகள் இன்றைய கருநாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதை பண்டிதர் சுட்டிக் காட்டினார்.

இன்றைய ராகங்கள் தான் அன்று பண்களாக இருந்தன என்று சுவர ஆய்வு மூலம் நிரூபித்தார்.

இராகங்களை உண்டு பண்ணும் முறை,பாடும் முறை ஆகியவற்றை
பழந்தமிழ் இசையிலக்கணத்தில் இருந்து ஆய்வு செய்து அறிந்து விளக்கிக் காட்டினார்.

அவையே இன்றும் இசையில் அடிப்படைகளாக உள்ளன..

பல்லாண்டு தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை 1917இல் பெரும் இசை நூலாகக் 'கருணாமிர்த சாகரம்' என்ற பெயரில் வெளியிட்டார்.

1395 பக்கங்கள் உடையது இந்நூல்.

இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது...

பழந்தமிழர் திருமண மரபு...


திருமணம் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது..

பழந்தமிழர் வாழ்க்கையில் களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகிய இருவகை ஒழுக்கங்களையும் கொண்டிருந்தனர்.

மணச்சடங்கினை பற்றி தொல்காப்பியம் கூறும் செய்திகளில், பழந்தமிழர்கள் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர்..

எண்வகை மணமுறைகள் நிகழ்ந்துள்ளன; பின்னர் இந்தச் செயல்பாட்டில் பொய்மையும், வழுவும் மிகுதிப்படவே அதனைக் களைய வேண்டி சில விதிமுறைகளை வகுத்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

மணத்தைக் குறிக்க பல்வேறு சொற்கள் பழந்தமிழரால் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடி, மணம், மன்றல், வதுவை, வதுவை மணம், வரைவு என அவை நீளும்.

சான்றாக, கல்யாணம் என்ற சொல் மணத்தைக் குறிக்கும் வகையில் நாலடியாரிலும், ஆசாரக் கோவையிலும் அமைந்துள்ளது.

கடி என்ற சொல்லுக்கு காப்பு என்று பொருள் கூறுவர். கடிமகள் வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து என்ற குறிப்பால் காப்பு என்ற பொருளில் கடி என்ற சொல் இடம் பெறுவதையும் காணலாம்.

சீவக சிந்தாமணியில் கடிசேர் மணமும் இனி நிகழும் காலமென்க' என்றும், கடிமணம் எய்தும் களிப்பினால் என்றும் வருகிறது.

சங்க இலக்கியங்கள் வாயிலாக தமிழரின் மணமாக மரபுவழி மணம், சேவை மணம், போர் நிகழ்த்தி மணம், துணங்கையாடி மணம், பரிசம் கொடுத்து மணம், ஏறு தழுவிய மணம், மடலேறிய மணம் ஆகிய மண முறைகளைக் காணமுடிகிறது.

காப்பியங்களில் காணப்படும் பண்டைத் தமிழரிடம் இடம்பெற்ற மண முறைகளைத்தவிர, பொருத்தம் பார்த்தல், மணநாள் குறித்தல், திருமண அழைப்பிதழ் அல்லது முரசு மூலமாக நகர மக்களுக்கு உணர்த்துதல், மணவினை நிகழும் இடத்தை அலகங்கரித்தல், சிறப்பு இறைவழிபாடு செய்தல், மங்கல ஒலி எழச்செய்தல், மணமேடை ஒப்பனை ஆகிய திருமண நிகழ்வுகள் காப்பியங்களிலும் இடம்பெற்றுள்ளன.

பழந்தமிழர் திருமணத்தை பெண் வீட்டில் நிகழ்த்துதலை மரபாகக் கொண்டனர்.

களவொழுக்கம் காரணமாக உடன்போக்கு நிகழும்பொழுது தலைவன் தலைவியைத் தன்னுடன் தனது இடத்திற்கு அழைத்துச் சென்று மணம் செய்துகொள்வதும் மரமாக இருந்துள்ளது.

கற்பு மணம் பெரும்பாலும் மணமகள் இல்லத்திலேயே நிகழ்ந்திருக்கிறது. இதை,

நும்மனைச் சிலம்பு கழீஇயயரினும்
எம்மனை வதுவை நன்மணங்கழிகெனச்
சொல்லி னெவனோ மற்றே வெண்வேல்
வையற விளங்கிய கழலடிப்
பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே!

என்ற ஐங்குறுநூறு பாடலால் அறியலாம்.

ஒரு பெண் மணவினை நிகழும் வரை பிறந்த வீட்டை விட்டு வெளியே வருதல் கூடாது.

பிறர் மனையில் தங்கவும் கூடாது என்ற கொள்கையின்படி பரிசம் போடுதலும், பெண் வீட்டில் திருமணம் செய்தலும் இடம்பெறுவது தமிழர் வழக்கமாக இருந்திருக்கிறது.

காப்பிய காலத்திலும் பெரும்பாலும் மணமகள் வீட்டிலேயே மணவினை நிகழ்ந்துள்ளது.

இன்று அவரவர் வசதிக்கு ஏற்ப இறைவன் முன்னிலையில், திருமணக்கூடம், மணமகன் இல்லம் ஆகிய இடங்களிலும் மணம் நிகழ்த்துதல் இடம்பெறுகிறது.

பழங்காலத் தமிழரின் மண மரபில் இடம்பெற்ற மணவினைச் செயல்கள் காப்பியங்களில் காணப்பட்டாலும் புதியவைகளும் இடம்பெற்றுள்ளன.

பழந்தமிழர்களிடம் இல்லாத வேள்வித் தீ வளர்த்தல் என்பது சிலப்பதிகாரம், பெருங்கதையில் காணப்படுகிறது. காப்பு நூல் கட்டுதல், மங்கல நீர் கொண்டு வருதல், மண மக்கள் ஒப்பனை, மணமகன் அழைப்பு, அம்மி மிதித்தல், பாத பூசை செய்தல், அருந்ததி காட்டல், அறம் செய்தல், மங்கல அணி, சீதனம் கொடுத்தல் முதலிய புதியவைகளும் இடம்பெற்றன.

தமிழர்கள் திருமண முறைகள் பலவாக இருந்தாலும், இருமணம் ஒத்தே வாழ்க்கை நடத்திக் குடும்ப முறைகளைப் பாரம்பரியமாகப் பறைசாற்றி வருகின்றனர் தமிழர்கள்...

இன்று பிறந்த நாள் காணும் நடிகர் வடிவேலுவுக்கு வாழ்த்துக்கள்...


பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்...


பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது..

காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீங்கும்.

சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும்.

புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.

ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் சிறுநீரக நோய்கள், ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.

வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும்.

பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் ரத்தக்கசிவை நிறுத்திவிடும்.

பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.

பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் ரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.

பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும் (தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்க வேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2_3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். தடையில்லாமல் சிறுநீர் வெளியேறும்.

பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக உண்டாகும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்த நோயைக் கண்டிக்கும். பித்த வாந்தியை நிறுத்தும்.

வெண்பூசணி லேகியம்...

நன்கு முற்றிய பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டிலும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு இதில் 3.500 கிராம் எடுத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்து மிக்சியில் நன்றாக மசியும்படி அரைத்துக்கொண்டு வடிகட்டி, நீரையும் கதுப்பையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். வடித்து எடுக்கப்பட்ட பூசணிச் சக்கையை 500 கிராம் நெய்யில் மொற மொறப்பாகும்படி வறுத்து எடுத்து, நெய்வேறு, பொறிக்கப்பட்ட சக்கை வேறாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பூசணிக்காய் பிழிந்த சாற்றில் கல்கண்டு சேர்த்து பாகுபதம் வரும்வரை காய்ச்சி, இந்த பாகில் வறுத்த பூசணிக்காய்த் தூளைக் கொட்டிக் கிளற வேண்டும்.

திப்பிலி, சுக்கு, சீரகம் இவற்றின் பொடிகள் தலா 70 கிராம், லவங்கப்பட்டை, ஏலரிசி, பச்சிலை, தனியா, மிளகு இவற்றின் பொடிகள் தலா 20 கிராம். இவைகளை மேற்கண்ட மருந்துடன் கலந்து, வடித்து வைத்துள்ள நெய்யையும் சேர்த்து, நன்றாக எல்லா மருந்துகளும் ஒன்று சேர கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி 2_4 வேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் இருக்காது. பொதுவாக உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும். ஈசனோபைல் நிவர்த்தியாகும். டான்சில்ஸ் தொல்லைக்குச் சிறந்தது.

பூசணிக்காயைச் சாறு எடுத்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை வைத்துக் கொண்டு இதில் தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து தினசரி கொடுத்து வந்தால், ஒல்லியான சிறுவர்களுக்கு சதைப்பிடிப்பு ஏற்படும். அழகான தோற்றத்திற்கும், எடை அதிகரிப்பதற்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கூடி ஆரோக்கியமான உடல் தேறவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

சிறுநீரகச் செயல்பாடு குறைந்தவர்களுக்கு பூசணிக்காயில் 25 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகச் செயல்பாடு சீராக அமையும்.

சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக நிவர்த்தியாகும்.

பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது. தனிப்பட்டவர்கள் மருந்து தயாரிக்க முடியாத நிலையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்திப் பயன்பெறலாம்.

இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு வந்தால், ரத்தபித்தம், சயம், இளைப்பு, பலவீனம், இதய நோய், இருமல் உள்ளவர்கள் நல்ல நோய் நிவாரணம் கிடைப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

வெண்பூசணி லேகியம்...

இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டால் காமாலை நோய், இரத்த சோகை,
எலும்புருக்கி நோய், அஸ்தி வெட்டை, பிரமேகத்தால் ஏற்பட்ட வெள்ளை நோய் தீரும். உடல் வலிமை பெறும். தாது விருத்தி ஏற்பட்டு காம இச்சை மிகுதியாகும். வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை நோய்கள் நிவர்த்தியாகும். தோல் நோய்கள், பெண்குறிப்புற்று முதலியன நீங்கும். உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும். அஸ்திவெட்டை, கிராணிக்கழிச்சல், எலும்புருக்கி (T.B.) முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகும்...

விஷமாக மாறிவரும் இட்லி தோசை மாவு.. உஷார் மக்களே...


கடந்த சில ஆண்டுகளாக இட்லி,தோசை மாவை கடைகளில் வாங்கும் பழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அதனால் ஏற்படப்போகும் பின்விளைவுகளை அறியாமல் மக்கள் இதை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். முன்பெல்லாம் பெண்கள் வேளைக்கு போகாமல் வீட்டில் இருப்பார்கள். அதனால் அவர்களால் வீட்டு வேலைகளை எளிதாக செய்யமுடிந்தது. அனால் இப்போது சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்துவதென்பது பெரும் கஷ்டம் என்பதால் பெண்களும் வேளைக்கு சென்று குடும்ப பாரத்தை சுமக்கின்றனர்..

இதன் விளைவு, சாதாரண இட்லி தோசைக்கான மாவை அரைப்பதற்கு கூட நேரம் இல்லை. கடைகளில் விற்கப்படும் மாவில் கலக்கப்படும் உளுந்து, அரிசி, அரைக்கப்படும் கிரைண்டர், பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனை. அனால் உண்மையில் மாவு சுகாதாரமாக தான் தயாரிக்கப்படுகிறதா?

மாவை வெள்ளை நிறமாக காட்ட அதில் பிளீச்சிங் பவுடர் கலப்பதில் இருந்து, அதில் புளிப்பு வாசனை வராமல் இருக்க பலவித கெமிக்கல்கள் கலக்கப்படுவதோடு அதில் ஆமணக்கு விதை, ஆப்ப சோடா, ஈஸ்ட், படிகாரம் போன்றவையும் கலக்கப்படுகின்றன என அவ்வவ்போது குற்றசாட்டுகள் எழுதவண்ணமே உள்ளன..

அதே போல் மாவை அரைக்க பயன்படுத்தும் தண்ணீர் சுத்தனமானதா என்பதும் ஒரு பெரிய கேள்விக்குறி தான். சுத்தமான தண்ணீரை கொண்டு மாவரைக்க வேண்டுமானால் ஒரு நாளைக்கே பல நூறு லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அனால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சமயங்களில் கூட மாவிற்கு தட்டுப்பாடு வருவதில்லை.

அப்படியானால் இவர்களுக்கு மட்டும் சுத்தமான தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது என்பதும் கேள்விக்குறியே..
சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் மாவை உட்கொள்வதால், சிறு குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பலருக்கும் தண்ணீரால் பரவும் நோய்கள், வயிற்று வலி உட்பட பல்வேறு பாதிப்புகள் வருகின்றன என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நீங்கள் வாங்கும் மாவின் தரம் குறித்து அறிவது மிகவும் முக்கியம்..

அடுத்த தலைமுறை பிள்ளைகள் ஆரோக்கியமாக வாழ்வதும் நோய்வாய்ப்பட்டு போவதும் பெற்றோர்கள் கையில் தான் உள்ளது. ஆகையால் முடிந்தவரை பாக்கெட்களில் விற்கப்படும் பொருட்களை வாங்குவதை தவிர்த்து. மிளகாய் தூளில் இருந்து மாவு வரை அனைத்தையும் நாமாக அரைத்துக் கொள்வதே சிறந்தது...

தமிழினத்தின் முதல் எதிரியே இந்தியா தான் என்பதை புரிந்துக் கொள்ளாதவரை தமிழனை யாராலும் காக்க முடியாது...


சூரிய கிரகணத்தை பற்றி நாங்கள் சொல்லும் போது கேலி செய்தவர்கள் ஒருவன் அதை கதை களமாக வைத்து ஒரு படம் எடுத்து வெளியிடுகிறான்...


அதுவும் நமது கருப்புகளை தவறாக சித்தரித்து வெளியிடுகிறான்...

எதிரி எவ்வளவு வேகமாக இருக்கிறான் என்று கொஞ்சம் யோசித்து பின்பு நாங்கள் சொல்லுவதை சிந்தித்து பாருங்கள்...

கலவரத்தை தூண்டு விதமான அறிக்கை , பாஜக எச். ராஜா சர்மா மீது வழக்கு பதிவு செய்யலாம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...


இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சொத்து தகராறில் கொலை செய்யப்பட்ட நபரை, ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தான் கொலை செய்தார்கள் என எச். ராஜா சர்மா அறிவிக்கை விடுத்தார்.

போலிஸ் விசாரனையில் கொலை சொத்து தகராறில் நடைபெற்றுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே இரு மதத்தினருக்கிடையே கலவரத்தை தூண்டும் விதத்தில் எச் ராஜா சர்மா அறிவிக்கை விட்டது கலவரத்தை தூண்டும் உள்நோக்கத்தோடு உள்ளது எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டது.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம் , புகாருக்கான முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் எச். ராஜா சர்மா மீது வழக்கு பதிவு செய்யலாம் என திருவல்லிக்கேணி காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது...

ஆன்மா, ஆன்மீகம், மன அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம் பற்றி அறிவோம்...


நம் ஆன்மா என்பது என்ன என்று கேள்வி கேட்பவர்கள் உள்ளனர்.

பலருக்கு  இது  குறும்புக் கேள்வி.

சிலருக்கு இது புரியாத புதிர்.

மிகக் சிலர் கொஞ்சம் புரிந்தவர்.

வெகு சிலர் அதிகம் புரிந்தவர்.

நன்கு புரிந்தவர்கள் சொற்பம்.

அவர்களிடமிருந்து கேள்விகள் வராது.

ஆன்மாவைப் பற்றி அறிய விரும்புவோர்க்கு இந்த பதில்...

இறந்த மனிதனிடம் எது இல்லையோ, அதுவே வாழும் மனிதனுக்கும், இறந்தவனுக்கும் உள்ள வித்தியாசம் -ஆன்மா..

அது மின்சாரம் போன்ற ஒரு சக்தி என்று வைத்துக் கொள்ளலாம்.

அது இல்லை எனில் உயிர் இல்லை.

சக்தி இல்லை எனில் சவம்.

இந்த ஆன்மாவை உணர்வது ஆன்மீகம்.

ஆன்மீகம் என்பது நம்மை உணர்வது.

கடவுள் வழிபாடு குறித்த நேரடி வார்த்தை அல்ல...

சர்க்கரை நோயின் ரகசியம்...


தமிழை சிதைப்பது சரியா?


நம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ தமிழை சிதைக்கின்றோம். பிற மொழி சொற்களை தமிழில் ஏற்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பிற மொழி எழுத்துக்களை தமிழில் ஏற்பது என்பது தமிழை சிதைக்கும் செயலாகும்.

பிற மொழி வார்த்தைகளை  தமிழில் எழுதும் பொழுது நாம்  'ஸ', 'ஜ', 'க்ஷ', 'ஷ' ,'ஸ்ரீ', 'ஹ'  என்ற கிரந்த எழுத்துக்களை பயன்படுத்துகிறோம்.

சமசுகிருத, பிராகிருத வார்த்தைகளுக்கு ஏற்ற ஒலியோசை கிடைக்க நாம் அந்த எழுத்துக்களை பயன்படுத்துகிறோம். இது அவசியம் அற்றது.

நீங்கள் ஆங்கிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள் பிற மொழி எழுத்துக்களை அவர்கள் ஏற்பதில்லை.

நாம்  கிரந்த எழுத்துக்களை எழுதி தமிழை சிதைக்க வேண்டாம் என்று அனைவரையும்  கேட்டுக் கொள்கிறேன்.

சமஸ்கிருதம்  என்று எழுதாமல் சமசுகிருதம்  என்றே எழுதலாம்..

மஹாத்மா என்று எழுதாமல்
மகாத்மா என்றே எழுதலாம்..

ஜப்பான் என்று எழுதாமல்
சப்பான் என்றே எழுதலாம்..

ஸ்ரீ ரங்கம் என்று எழுதாமல்
திருவரங்கம் என்றே எழுதலாம்..

பக்ஷி என்று எழுதாமல்
பட்சி என்றே எழுதலாம்..

ஹரி என்று எழுதாமல்
அரி  என்றே எழுதலாம்..

ஆயிஷா என்று எழுதாமல்
ஆயிசா என்றே எழுதலாம்...

உளுந்து - மருத்துவப் பயன்கள்:..


நோயின் பாதிப்பு நீங்க...

கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.

இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

உடல் சூடு தணிய:

இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தாது விருத்தியாக:

உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

உளுந்து வடை:

உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.

எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு:

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலுப்பெற:

சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.
இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு:

சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்கள்:

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்...

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் இருந்து பூமிக்கு அடியில் 20 அடி ஆழத்தில் பைப்லைன் அமைத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கேடுகெட்ட அரசாங்கம்...


மக்கள் குடிக்க தண்ணீர் கேட்டால் மவுனம் சாதிக்கிறது...

தமிழா விழித்துக் கொள்...


எண்ணமின் அலைகளின் பயணம்..


நம் மனம் மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ளது.

எனவே பிரபஞ்சமே மனம் என்பதால் நமக்கு வேண்டிய தகவலை எத்தனை கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும் அடுத்த கனமே பெற முடியும்.

அப்படி பெற்று அதை ஆழ்மனம் சீர்படுத்தி மூளையின் வழியாக பிரபஞ்சத்தில் எண்ணமின் அலைகளாக வெளிப்படுத்தும்.

அந்த அலைகளின் மின் ஆற்றலை பொருத்து அதன் தூரம் நிர்ணயிக்கபடும்.

அதற்கு தேவையான ஆற்றல்தான் நாம் மூச்சு பயிற்சியின் மூலமும் தியானத்தின் மூலமும் பெறும் பிராண சக்தி.

அபரிமிதமான பிராண சக்தி உடைய சித்தர்கள் எது நினைத்தாலும் நடப்பதற்கு இதுவே காரணம்.

எனவே நாம் செய்ய வேண்டியது நமக்கு தேவையானதை பற்றி ஆழமாக சிந்தித்து வலிமையான அலைகளை வெளிபடுத்த வேண்டும்.

அப்படி செய்யும் போது அந்த அலைகள் அதற்கு ஒத்தவற்றை ஈர்ப்பு விசையின் உதவியுடன் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்.

எழுத்து வடிவத்தில் இதை விளக்குவது சற்று கடினம் என்பதால் முடிந்தவரை விளக்கியுள்ளேன். கூடிய விரைவில் இதனை காட்சிகளாக காண்பிக்கிறேன்...

இலுமினாட்டி - பெட்ரோல் GST ல் சேர்காதது ஏன்?


பாஜக தமிழிசை கலாட்டா...


இலுமினாட்டி - பெட்ரோல் GST ல் சேர்காதது ஏன்?


பாஜக பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் கடிதம் எழுதி உள்ளார்...


முதலமைச்சருக்கு  எழுதியுள்ள  கடிதத்தில், 'கெயில் குழாய் பதிப்பு திட்டத்தை எதிர்ப்புகளைச் சமாளித்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும் காலதாமதம் கூடாது ' என்றும்..

மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'கெயில் குழாய் பதிப்பு திட்டத்தை தமிழகத்தில் விரைந்து  செயல்படுத்தப்பட வேண்டியுள்ளது.

இந்த திட்டத்தால்  தமிழ்நாட்டில் ஏற்படும் எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் நீங்கள் மழுங்கடித்து விடுவதன் மூலம் இந்த விஷயத்தில்  தமிழக அரசுக்கு உதவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்...

இலுமினாட்டிகளும் Vs ஹிட்லரும்...


பேய்மிரட்டி (ANISOMELES MALABARICA)...


1) மூலிகையின் பெயர் - பேய்மிரட்டி.

2) தாவரப்பெயர் - ANISOMELES MALABARICA.

3) தாவரக்குடும்பம் - LAMIACEAE.

4) வேறு பெயர்கள் - இரட்டைப் பிரமட்டை, இரட்டை பேய்மிரட்டி, எருமுட்டைப் பீ நாறி, சற்று வட்டமான இலையுடைய இனம் ஒற்றைப் பேய் மிரட்டி எனவும், வெதுப்படக்கி எனவும் அழைக்கப் படுகிறது.

5) தாவர அமைப்பு - இது தமிழகமெங்கும் தானே வளர்கிறது. எதிரடுக்கில் அமைந்த வெளிரிய வெகுட்டல் மணமுடைய நீண்ட இலைகளையும் வெளிரிய கருஞ்சிவப்பு மலர்க் கொத்தினையும் உடைய செடி. சுமார் மூன்றடி உயரம் வளரும். வரட்ச்சியைத் தாங்கக் கூடியது. விதை மற்றும் தண்டுகள் மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.

6) பயன் படும் பாகங்கள் - செடி முழுதும். (சமூலம்).

7) மருத்துவப் பயன்கள் - பசி மிகுத்தல், குடல்வாயு அகற்றல், வியர்வை பெருக்குதல், காச்சல் தணித்தல், சதை நரம்பு ஆகியவற்றை சுருங்கச் செய்தல், அசிவு தணித்தல் ஆகிய குணங்களை உடையது.

பேய் மிரட்டியினால் கணமாந்தம், பேதி, வயிற்று நோய், கரப்பான், கோரசுரம்
போகும்.

பேய்மிரட்டிப் பூண்டால் கழிச்சல், மாந்த சுரம், வீக்கம், பேய்மிரட்டு என்னும் படியான கிரக தோஷம் முதலியன போகும் என்க.

உபயோகிக்கும் முறை - இதன் சமூலம் கசப்புச் சுவையுள்ளது இதைக் கியாழமிட்டுக் கொடுக்க வாந்தி பேதி, இருமல், சீதசுரம் போம். ஒரு பலம் சமூலத்தைத் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு அரைப்படி சலம் விட்டு 1/8 படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் தினம் 2 வேளை கொடுக்கலாம். அல்லது கால் ரூபாய் எடை ஓமத்தையும் கால் ரூபாய் எடை மிளகையும் ஒரு புது சட்டியில் போட்டு அடுப்பிலேற்றி வறுத்துக் கரியான சமயம் கால் படி சலம் விட்டு ஒரு பலம் பேய்மிரட்டி இலையைக் குறுக வரித்து சேர்த்து நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் தினம் 3 வேளை கொடுக்கலாம். இத்தகையக் கியாழங்கள் குழந்தைகளுக்குப் பல் முளைக்கும் சமயம் காணுகின்ற பேதியைக் குணப்படுத்த இன்றியமையாத தாகும். இதன் மூலத்தை ஒரு பெரிய பாண்டத்தில் போட்டுச் சலம் விட்டு கொதிக்க வைத்து வேது பிடிக்கச் சுரம், தலைவலி முதலியன போம்.

இலையைக் கொதிக்க வைத்து வேது பிடிக்க விடாத வாதசுரம் தீரும்.

இலைச் சாற்றை 5 துளி வெந்நீரில் குழந்தைகளுக்குக் கொடுக்க பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி தீரும்.

இலையை நீரில் கொதிக்க வைத்துக் காலை, மாலை குடிக்கச் சீதவாதசுரம், முறை சுரம், மலக்கழிச்சல் தீரும்.

ஒரு பிடி நெற்பொறி, 2 இலை நீரில் காய்ச்சி மணிக்கு ஒரு முடக்குக் கொடுத்து வரக் காலரா தீரும்.

10 கிராம் மிளகையும் 3 கிராம் ஓமத்தையும் புது சட்டியிலிட்டு வறுத்துக் கருகிய சமயம் அரை லிட்டர் நீர் சேர்த்து கொதிக்கும் போது 40 கிராம் பேய் மிரட்டி இலைகளைச் சிதைத்துப் போட்டு 125 மி.லி. யாகக் காய்ச்சி 15 மி.லி. யாக மூன்று வேளை கொடுத்து வர குழந்தைகள் பல் முளைக்கும் போது காணும் மாந்தம் குணமாகும்.

இந்த இனத்தில் இலை நீளமாக இருப்பதை இரட்டைப் பேய்மிரட்டி என்றும் இலை வட்டமாக இருப்பதை ஒற்றைப் பேய் மிரட்டி என்றும் கூறுவதுண்டு. இவை முறையே ஆண் பெண் எனக் கருதப் படுகின்றன. ஆண் பிள்ளைகளுக்குக் காணுகின்ற நோயிக்கு பெண் இலையும், பெண்களுக்குக் காணுகின்ற நோய்களுக்கு ஆண் இலையும் சிகச்சைக்கு ஏற்றது என்பது அறிவாளர்களின் கருத்து.

பேய்பூதகண தோஷங்களுக்கு வேப்பிலையைக் கொண்டு மந்திரித்து அடிப்பதைப் போல் பேய் மிரட்டி இலைகளையும் கத்தையாகக் கட்டிக் கொண்டு அடிப்பது வழக்கம் ஆகையால் இது பேய் மிரட்டி எனக் கூறப்பட்டது.

பேய் மிரட்டியின் இலையானது வெதுப்படக்கும் என்றும் வெளுப்பான பேதி, கிலேஷ்மகிரகணி, தாபம், ரூட்சை அள்ளு மாந்தம், வாதாதிக்கம், உட்சுரம், ரத்த தாது விலுண்டாகின்ற மலினம் ஆகியவற்றைப் போக்கும் என்க.

பேய்மிரட்டியின் பச்சிலையை அகல் விளக்கில் திரியாகப் போட்டால் ஒளிரும்.

சமூலம் - ஒரு செடியின் வேர், இலை, தண்டு, பூ, பட்டை எல்லாம் சேர்த்து என்று பொருள். வையித்தியத்தில் உபயோகிக்கும் சொல்.

கோரசுரம் - கடுமையான சுரம் என்று பொருள்.

கியாழமிட்டு - திரவமாக கூழ் போன்று அரைப்பது என்று பொருள்.

அள்ளுமாந்தம் - குழந்தையின் வயறு எக்கி வியாதியால் துன்பப் படுவது.

ரூட்சை - என்பதும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு வித நோயாகும்...

வேப்பங்குச்சியில் பல் துவக்குங்கள்...


தமிழகத்தில் மக்கள் விரோத திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த முனைந்தால் மக்கள் புரட்சி வெடிக்கும்...


பொத்திகொண்டு போக இது வடநாடு கிடையாது இது எங்கள் தாய் தமிழ்நாடு...