28/04/2018

இராமன் சீதை இந்த உறவு முறை திருமணம் சரியா?


பாஜக கார்ப்பரேட்க்கான அரசு மக்களுக்கான அரசல்ல இவர்கள் செய்து கொண்டு இருப்பது பொது சேவை அல்ல வியாபாரம்...


காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்திடு  மத்திய அரசே..

தமிழகம் , தமிழக மக்களின்‌ வாழ்க்கை, விவசாயிகள் வாழ்வாதாரம், விவசாய நிலங்கள்  உனக்கு பலிகடா வா இல்லை விளையாட்டு மைதானமா?

விழித்துக்கொள் எம் தமிழினமே...


அமானுஷ்யம் - பங்கார் கோட்டை, இராஜஸ்தான், இந்தியா...


இந்தியா இராஜஸ்தானில் உள்ள பங்கார் கோட்டை பற்றி அறிந்திருப்பீர்கள்.

இந்தியாவின் முக்கிய பயங்கரமான இடமாக கருதப்படும் இது 1573ல் கட்டப்பட்டது.

ஒரு மந்திரவாதியால் சபிக்கப்பட்ட அங்கு வாழ்ந்தவர்கள் மர்மமான முறையில் இறந்ததாகவும்.. அவர்களின் ஆவி காலங்காலமாக அங்கே உலாவி வருவதாகவும் செய்திகள் பரவுகிறன்றன.

இரவு நேரத்தின் அங்கே தங்க யாருக்கும் அனுமதி கிடையாது.

கதறல் சுரங்கம், ஒந்தாரியோ, கனடா எதிர்பாரா மரணம் அடைந்த இளம் பெண்ணிலிருந்து கதை
தொடங்குகிறது.

பழங்காலத்தில் இந்த தென்பகுதி சுரங்கத்திற்கு அருகே ஒரு பண்ணை வீடு இருந்துள்ளது. ஒரு நாள் அப்பண்ணை தீக்கிரையாகிறது. அதில் சிக்கிய பெண் தீயுடன் உதவிக் கோர இறுதியில் இந்த சுரங்கத்தினுள் இறந்துள்ளாள்.

அன்று முதல், இந்த சுரங்கத்தில் இரவு நேரத்தில் தைரியமாக நுழைந்து மரக்குச்சியால் தீயேற்றுபவர்கள் இறவா நிலை அடைவர் என்ற கருத்து நிலவி வருகிறது.

ஆனால் அவ்வாறு செய்தவர்கள் கதறி கொண்டே சுரங்கத்திலிருந்து வெளி வந்துள்ளனர்.

மொன்தே கிரிஸ்தோ, ஆஸ்திரிலியா ஆஸ்திரிலியாவின் மிகவும் பயங்கரமான இடம் இது.

இவ்விடம் 1855-1948 வரை கிரவ்லி
குடும்பத்திற்குச் சொந்தமானது. அங்கிருக்கும் போது அக்குடும்பம் பல இறப்புகளைக் கண்டுள்ளது.

கிரவ்லியின் மரணத்திற்கு பின் அவரின் மனைவி மேல்தளத்திற்குச் சென்று தாழிட்டு கொண்டதாகவும் அவரின் அடுத்த 23 வருடங்களுக்கு வீட்டை விட்டு
வெளியேறவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஒரு தடவை மட்டுமே வெளியில்
வந்ததாகவும் கூறப்படுகிறது.

அவர் அந்த வீட்டிலேயே இறந்து விட்டதாகவும் அவரின் ஆவி இன்று வரை அங்கேயே உலாவி வருவதாகவும் அறியப்படுகிறது.

ஆவி சம்பந்தப்பட்ட காணொளிகள் இங்கே படமாக்கப்பட்ட போது விநோத வெளிச்சங்கள் தென்பட்டதாகவும் பெண்ணின் குரல் கேட்டதாகவும் அறியப்படுகிறது.

லாவாங் சேவு, இந்தோனேசியா டச்சு கிழக்கு இந்தியா ரயில்வே கம்பெனியால் 1917ல் கட்டப்பட்ட
கட்டிடம் இது.

லாவாங் சேவு என்றால்.. ஆயிரம் கதவுகள் என்று அர்த்தம்.

இரண்டாம் உலக போரின் போது இவ்விடம் ஜப்பானியர்களால் சிறையாக பயன்படுத்தப்பட்டு ஆட்கள் சித்திரவதை
செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்விடத்தில் பொந்தியானாக் எனும் இறந்த கர்ப்பிணி பெண்ணின் ஆவி சுற்றுவதாக நம்பிக்கை உண்டு.

அதோடு இங்கே தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படும் டச்சு பெண்ணின் ஆவியும் சுற்றுவதாக நம்பிக்கை உண்டு.

ஒரு படப்பிடிப்பின் போது அவரின் ஆவி படமாக்கப்பட்டுள்ளது.

பொம்மைகளின் தீவு, மெக்ஸிகோ மர்மமான முறையில் இறந்த ஏழைப் பெண்ணுக்காக அர்பணிக்கப்பட்டது இத்தீவு.

இத்தீவிற்கு அருகில் உள்ள கால்வாயில் அந்த பெண் மூழ்கி இறந்ததாக நம்பப்படுகிறது.

டோன் ஜூலியன் சந்தன் அந்த பெண்ணின் ஆவியால் தாக்கப்பட்டார். ஆவியை மகிழ்ச்சிப்படுத்த பழைய பொம்மைகளை வாங்கி வந்து தீவில்
தொங்கவிட்டுள்ளார். தன் குடும்பத்தினரிடம் அந்த பெண்ணின் ஆவி வாழ்விற்குப் பின் தன்னோடு வந்து விடுமாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.

2001ம் ஆண்டில் அந்த பெண் இறந்த அதே இடத்தில் அவரும் இறந்து கிடந்தார்.

அங்கே செல்லும் சுற்றுப்பயணிகள் அங்கே உள்ள பொம்மைகளின் கண்கள் தங்களைத் தொடர்வதாகவும் சிரிக்கும் குரல் கேட்பதாகவும் கூறியுள்ளனர்...

நம் வளங்களை அழித்து.. யாருக்காக பசுமை சாலை சிந்தியுங்கள்...


இதுபோன்ற கேள்விகளை நாம் இதுவரைக்கும் அரசாங்கத்திடம் என்றைக்கும் கேட்பதில்லை...


ஏனெனில் நாம் பணம் என்ற பொருளாதாரத்தில் நம் வாழ்க்கையை அடிமையாக மாற்றிக்கொண்டோம்..

அதன் விளைவே நாம் இதுபோன்ற கேள்விகளை கேட்க மறுப்பது...

குஜராத் மாதிரி இந்தியாவ மாத்துவேன்னு பாஜக மோடி சொன்னப்பவே நாம உசாரா இருந்திருந்தா...


ஆளி (யாளி) - தமிழர் பழமைக்குச் சான்று...


இதை கோவில் தூண்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். எல்லா கோவில் தூண்களிலும் இருக்கும்.

(தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் இல்லை)...

யானையை விட பெரிய உருவம், சிங்கத்தைப் போன்ற முகமும் உடலும்,
அதோடு துதிக்கையும் தந்தமும் இருக்கும் அதிசய விலங்கு யாளி.
இந்த யாளி யானையைக் கொன்ற குறிப்புகள் இலக்கியங்களில் வருகின்றன.

ஆளி நன்மான் அணங்குடை யொருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப
ஏந்தல் வெண்கோடு வாங்கிக் குருகு அருந்தும்
அஞ்சுவரத் தகுந ஆங்கண்

ஆளியாகிய நல்ல விலங்கினது வருத்துதலையுடைய ஏறு, வலியுடைய யானையின் தலைவனான களிறு வருந்த,
அதன் நிமிர்ந்த வெள்ளிய கோட்டினைப் (தந்தம்) பறித்து,
குருத்தினைத் தின்னும் அச்சம் தரும் அச்சுரத்திடத்தே.

- மதுரை இளங்கெளசிகனார் (அகநானூறு 381: 1-4)..

மூரித்தாள் ஆளி யானைத் தலை
நிலம் புரள வேண்டுகோடு
உண்டதே போன்று

யானையின் தலை நிலத்தில் புரள (அதைக் கீழே தள்ளி) அதன் தந்தத்தைப் பறித்து யாளி உண்ணும்.

-(சீவகசிந்தாமணி 2554 :1-2)...

மீளி முன்பின் ஆளி போல,
உள்ளம் உள் அவிந்து அடங்காது, வெள்ளென
நோவாதோன்வயின் திரங்கி,
வாயா வன் கனிக்கு உலமருவோரே.

யானையை வேட்டையாட எண்ணிய ஆளி யானை கிடைக்கவில்லை என்று எலியை வேட்டையாடக் குறி பார்க்காது.
நான் பாடிய பாடல் இளவெளிமான் செவியில் ஏறிவிட்டது.
பலன் கிடைக்கப்போகிறது என எண்ணியிருந்தேன்.
ஆனால் சோறு சமைத்த பானை நெருப்பைத் தருவது போல் இவன் தருகிறான்.
ஆறு போல் பாய்ந்து வேறு இடத்தில் பரிசில் பெற்றுக்கொள்ளலாம்.

- பெருஞ்சித்திரனார் (புறநானூறு 207 : 8)...

வந்து ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி வெண்கோடு புய்க்கும்

ஆளியானது (யாளி) பாய்ந்து வந்து உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி, அதன் வெண்ணிறத் தந்தத்தினைப் பறித்தெடுக்கும்.

– நக்கண்ணையார், (அகநானூறு 252 : 1-4)...

இரத்தச் சேறெழ தேர்பரி யாளிகள்
கெடுத்திட் டேகடல் சூர்கிரி தூள்பட கண்டவேலா

இரத்த சேற்றில் தேர்ப்படை, குதிரைப்படை, யாளிப்படை மூன்றையும் ஒழித்து கடல்சூழ்ந்த சூரமலையை தூளாக்கிய வேலன்..

- (திருப்புகழ் 477)...

கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
கயிலை யாளி காபாலி கழையோனி

யானையைக் கொன்று அதன் உடுத்திய கயிலை மலை (அதாவது கைலாசமலையின்) யாளி என்று சிவனைக் கூறுகிறது.

-(திருப்புகழ் 577)..

இதே போல யானையையே விழுங்கும் மாசுணம் (அல்லது அசுணமா) என்ற பாம்பு (அல்லது விலங்கு) பற்றியும் குறிப்புகள் உள்ளன.

அனகோன்டா என்ற சொல்லானது 'யானைகொன்றான்' என்ற (ஈழத்)தமிழ்ச் சொல்லை ஆங்கிலேயர் எடுத்துக்கொண்டது.

(ஆனகொன்டான் என்றே உச்சரிப்பர்)

சான்று...

Ophidia Taprobanica or the Snakes of Ceylon, Wall, Frank (1921).

The deriviation of "Anaconda", Ferguson, Donald (1897)...

உங்கள் பிள்ளைகளின் இன்றைய நிலை...


வழக்கமாக ஒரு திட்டம் என்றால் சாலை என்றாலோ, கட்டடம் என்றாலோ அதுபற்றிய திட்ட வரைபடத்தை அரசே வெளியிடும்...


அந்தத் திட்டம் நிகழும் இடங்கள் அரசால் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு, பொதுமக்கள் கருத்துக் கேட்பு, இழப்பீடு அறிவிப்பு என்றெல்லாம் நடக்கும்.

ஆனால், இப்போது பசுமை வழிச் சாலை பற்றிய வரைபடத்தை ரகசியமாக வைத்திருக்கிறது அரசாங்கம்.

ஆதாரமாகத் திட்ட வரைபடம் வேண்டுமே என்று நாம் தேடித் தேடி துருவியதில் கடுமையான முயற்சிக்குப் பின் நம் கையில் கிடைத்தது...

தமிழக அரசை செருப்பால் அடிக்காத குறையாக கேள்வி கேட்ட உயர்நீதிமன்றம்...


உடல்சூடு தணிக்கும் நார்த்தம்பழம்...


நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது.

இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும்.

புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும்கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது.

நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர், மலர், கனிகள் பயன்கொண்டவை. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள்,கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அசு(ஸ்)கார்பிக் அமிலம், அலனைன்,நியசின்,வைட்டமின் பி, அசு(ஸ்)பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல், லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம் மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது.

மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும். வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது.

நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம்.

கனிந்த கனிகள் வலுவேற்றி, ஊக்குவி, இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசி தூண்டுவி, தசை இறுக்கி குளிர்ச்சி தரும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம்.

உடல் சூடு தணியும்...

உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.

பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

உடல் வலுப்பெற...

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடு பட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது.

சுகமான பிரசவம்...

கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு கரண்டி தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்

சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம்

நார‌த்த‌ங்கா‌ய் இலைகைளை நர‌ம்பு ‌நீ‌க்‌கி ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி, அதனுட‌ன் வெ‌ள்ளை உளு‌ந்த‌ம் பரு‌ப்பு, கடலை‌ப் பரு‌ப்பு, தே‌ங்கா‌ய் துருவ‌ல் வறு‌த்து சே‌ர்‌த்து ‌மிளகா‌ய், உ‌ப்பு, பு‌ளி, பெரு‌ங்காய‌ம், க‌றிவே‌ப்‌பிலையு‌ம் சே‌ர்‌த்து துவையலாக அரை‌த்து சாத‌த்துட‌ன் ‌பிசை‌ந்து சா‌ப்‌பிடலா‌ம்.

இ‌ப்படி சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌ம் குறையு‌ம். க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் நா சுவை‌யி‌ன்மை, கும‌ட்ட‌ல், வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம். ப‌யி‌‌ன்‌மை குறை‌ந்து ந‌ன்கு ப‌சி‌க்கு‌ம். பொதுவாக உணவுட‌ன் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் சே‌ர்‌த்து‌க் கொ‌ண்டா‌ல் செ‌ரியாமை ‌பிர‌‌ச்‌சினை வரவே வராது.

சா‌ப்‌பி‌ட்டது‌ம் ஏ‌ப்ப‌ம் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தாலு‌ம்,செரிமானம் நெடுநேர‌ம் ஆனாலு‌ம் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகாயை சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடனடி பல‌ன் ‌கி‌ட்டு‌ம். வ‌யி‌ற்‌றி‌ல் வாயு‌ப் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் ‌நிலை‌யி‌ல் ஒரு ஊறுகா‌ய் து‌ண்டை எடு‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று ‌தி‌‌ன்றால் வாயு‌க் கோளாறு ‌விரை‌வி‌ல் ‌நீ‌ங்கு‌ம்.

வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. நா‌ர‌த்த‌ங்காயை வ‌ட்ட வ‌ட்டமா‌ய் நறு‌க்‌கி உ‌ப்பு சே‌ர்‌த்து ஒரு ம‌ண் பானை‌யி‌ல் இ‌ட்டு வாயை து‌ணியா‌ல் மூடி ‌விடவு‌ம். இதனை அ‌வ்வ‌ப்போது வெ‌‌யி‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வரவு‌ம்.

இ‌ப்படி 40 நா‌ட்க‌ள் செ‌ய்து ‌பிறகு அ‌தி‌ல் இரு‌ந்து ‌தினமு‌ம் ஒரு து‌ண்டை எடு‌த்து காலை‌யிலு‌ம், மாலை‌யிலு‌ம் சா‌ப்‌பி‌ட்டு வர வ‌யி‌ற்று‌ப் பு‌ண் குணமாகு‌ம். நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம்.

ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம். நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம். நார‌த்தை பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌த்து வர உட‌ல் வெ‌ப்ப‌த்தை போ‌க்‌கி கு‌ளி‌ர்‌ச்‌சி தரு‌ம். வா‌ந்‌தியையு‌ம், தாக‌த்தையு‌ம் த‌ணி‌க்கு‌ம்...

விழித்துக்கொள் தமிழா...


ஆழ்மன உணர்வு நிலை...


ஆழ்மன சக்திகளை அடைவதும், அதைப் பயன்படுத்துவதும் சாதாரண மேற்போக்கான உணர்வு நிலையில் எந்த மனிதனுக்கும் சாத்தியமல்ல.

ஏனென்றால் ஆழ்மன சக்திகள் உயர்ந்த, ஆழமான உணர்வு நிலைகளில் இருப்பவை. அந்த உணர்வு நிலைகளிலேயே சாத்தியமானவை.

எனவே ஆழ்மன சக்திகளை அடைய விரும்புபவர்கள் அந்த உயர் உணர்வு நிலைகளை அறிந்து, அந்த உயர் உணர்வு நிலைகளுக்குச் செல்வது அவசியம்.

எனவே தான் யோகிகளும், சித்தர்களும் உணர்வு நிலை மாற்றமே (Shift in consciousness level) ஆழ்மன சக்திகள் என்னும் ரகசியக் கருவூலத்திற்குக் கதவு என்று சொல்கிறார்கள். அதைத் திறந்து உள்ளே சென்றால் மட்டுமே அந்த பிரம்மாண்டத்தை அறிவது கூட சாத்தியம் என்று அவர்கள் சொல்கிறார்கள்..

அரவிந்தர் போன்ற யோகிகள் அந்த உயர் உணர்வு நிலைகளை மிக நுண்ணிய அளவில் சில வகைகளாகப் பிரித்து பெயரிட்டு ஒவ்வொரு உணர்வு நிலையினையும் விவரித்து அதில் சாத்தியமாகக் கூடியவற்றை விவரித்து இருக்கின்றனர். நம் தற்போதைய நோக்கத்திற்கு அந்தப் பெயர்கள், நிலைகள், செயல்பாடுகள் ஆகிய விளக்கங்கள் மிகவும் அவசியம் இல்லை என்பதால் ஒட்டு மொத்தமாகவே உயர் உணர்வு நிலை என்றே என்றே குறிப்பிட நினைக்கிறேன்.

அந்த உயர் உணர்வு நிலைக்கு சென்றால் பின் அதுவே ஆழப்பட்டு அதற்கு மேம்பட்ட நுண்ணிய நிலைகளை அடைவது நிச்சயம் என்பதால் அதற்கு பெயர்களிட்டு வாசகர்களை அதிகம் குழப்ப நான் விரும்பவில்லை. ஆனால் விருப்பம் உள்ளவர்கள் அரவிந்தர் இந்த உணர்வு நிலைகள் (States of Consciousness) குறித்து எழுதியதை புத்தகங்கள் மூலமாகவோ, இணையத்திலோ படித்து அறிந்து கொள்ளலாம்.

மேற்போக்கான உணர்வு நிலையில் நாம் யார் என்பது கூட நம் பெயர், தோற்றம், தொழில், செல்வநிலை, நாம் மேற்கொண்டிருக்கும் சித்தாந்தங்கள், நம்மை பற்றி அடுத்தவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே நாம் அறிகிறதாக இருக்கிறது.

அவையெல்லாம் மாறும் போது அந்த ‘நாம்’ தானாக மாறி புதிய அவதாரம் எடுக்கிறது. இப்படி நாம் யார் என்பதும் ஆழமில்லாமல், மாறிக் கொண்டே இருப்பதாக இருக்கிறது. சில ‘நாம்’கள் நம்மை சந்தோஷப்பட வைக்கின்றன. சில ‘நாம்’கள் துக்கப்பட வைக்கின்றன. நாம் இதில் வாழ்நாள் முழுவதும் அலைக்கழிக்கப்படுகிறோம்.

மேலும் நம் தினசரி வாழ்க்கையில் சாதாரண உணர்வு நிலையில் வெளி உலகின் நிகழ்ச்சிகள் தரும் செய்திகளும், அது பற்றிய நம் எண்ணங்களுமே நம் மனதில் மேலோங்கி இருக்கின்றன. புதிய நிகழ்ச்சிகள் நடக்கும் வரை அவை நம்மிடம் தங்குகின்றன. புதிய நிகழ்வுகள் நடந்த பின் அவையே நம் மனதின் பிரதான இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன. பழையன காணாமல் போகின்றன.

இதில் ஆழமாக என்று எதுவும் இல்லை. பெரும்பாலான நேரங்களில் செயல்படும் மனிதர்களாக இருப்பதை விட வெளியுலகச் செயல்களால் பாதிக்கப்படும் மனிதர்களாக அல்லது உந்தப்படும் மனிதர்களாக நாம் வாழ்கிறோம். பெரும்பாலாக எல்லோரும் அப்படியே வாழ்வதால் நமக்கு அது இயல்பாகவே தோன்றுகிறது.

இப்படி மேற்போக்கான உணர்வு நிலைகளில் தன்னையே அறியாத காரணத்தினால் தெளிவின்மையும், வெளியிலிருந்தே முக்கியமாக இயக்கப்படுவதால் தனித்துவம் இன்மையும் இருக்கின்றன. இதனாலேயே மேற்போக்கான சாதாரண உணர்வுநிலை பலவீனமானதாக கருதப்படுகிறது.

ஆழ்மன சக்தியை அடையத் தடை செய்யும் பண்புகளான அவசரம், அவநம்பிக்கை, அமைதியின்மை மூன்றும் இந்த பலவீனமான மேற்போக்கான உணர்வுநிலையின் வெளிப்பாடுகளே.

எனவே தான் “உன்னையே நீ அறிவாய்” என்ற புராதன காலத்திலேயே கிரேக்கம், இந்தியா, எகிப்து போன்ற நாடுகளின் சான்றோர்களால் அதிமுக்கியமான அறிவுரையாக வழங்கப்பட்டது. ஆன்மீகத்திற்கும் சரி, ஆழ்மன சக்திக்கும் சரி இந்த வாக்கியம் ஆரம்பப் பாடமாக இருக்கிறது.

(இது மட்டுமல்ல, இனியும் தொடர்ந்து நாம் கற்கவிருக்கும் சில பாடங்களும், பயிற்சிகளும், ஆன்மீகத்திற்கும் ஆழ்மன சக்திகளுக்கும் ஒரே போலத் தான் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை இரண்டிற்குமான பாதை ஒன்றே. பின்பு தான் ஆழ்மன சக்திகள் அடைந்த கட்டத்தையும் தாண்டி ஆன்மீகத்தின் பாதை முன்னேறிச் செல்கிறது.)

தன்னை அறிய மனிதன் தன் உணர்வு நிலையின் ஆழத்திற்குச் செல்ல வேண்டி இருக்கின்றது. என்னை முதலில் கவனி என்று ஏகப்பட்ட விஷயங்கள் நம் கவனத்தைக் கவர முயற்சிக்கும் இந்த நவீனகாலத்தில், இருக்கின்ற 24 மணி நேரங்களே போதாமல் இருக்கின்றனவே என்று மனிதர்கள் புலம்பும் இந்தக் காலத்தில் தனியாக ஒரு சமயத்தை அதற்கென ஒதுக்குவது என்பது பெரும்பாலோருக்கு எளிதானதல்ல.

ஆனால் உண்மையாகவே ஆழ்மன சக்திகள் பெறவும், தன்னை அறியவும் விரும்புபவர்கள் அதற்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவதும், சோம்பலின்றி அதற்குத் தேவையான பயிற்சிகளைச் செய்வதும் மிக மிக அவசியமே.

முன்பே குறிப்பிட்டது போல மேற்போக்கான சாதாரண உணர்வுநிலை நம் பெயர், தோற்றம், தொழில், செல்வநிலை, நாம் மேற்கொண்டிருக்கும் சித்தாந்தங்கள், நம்மை பற்றி அடுத்தவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே அமைந்திருப்பதால் உயர் உணர்வு நிலைகளுக்குச் செல்ல, உணர்வு நிலை மாற்றம் (Shift in consciousness level) ஏற்பட, நம்முடைய இந்த பொய்யான அடையாளங்களை நாம் கைவிட வேண்டியிருக்கிறது. நாம் ஒவ்வொன்றையும் உணர ஐம்புலன்களையே பயன்படுத்தும் அந்த இயல்பான பழக்கத்தையும் விட்டு விடுதல் அவசியமாக இருக்கிறது.

இந்த ஐம்புலன்களின் துணையில்லாமல் காண, கேட்க, அறிய, அறிவிக்க முடிவது என்பது இத்தனை தகவல்கள் படித்த பின்பும் சிலருக்கு சிரமமாக இருக்கலாம். மரண விளிம்பு அனுபவங்கள், உடலை விட்டு வெளியேறிச் செல்லும் சமாச்சாரங்கள் எல்லாம் கட்டுக்கதைகளாகச் சிலருக்கு இன்னமும் தோன்றலாம். அவர்களுக்கு முன்னமே சொல்லி இருக்க வேண்டிய, ஆனால் சொல்லாமல் விட்டுப் போன, தினசரி வாழ்க்கையில் நடக்கிற இன்னொரு எளிய உதாரணத்தைச் சொல்கிறேன்.

எல்லோரும் உறங்கும் போது கனவு காண்கிறோம். கனவில் பல இடங்களுக்குச் செல்கிறோம், பலரிடம் பேசுகிறோம், பலதையும் காண்கிறோம், பலதையும் கேட்கிறோம். இல்லையா?

ஐம்புலன்களும் ஒடுங்கி இளைப்பாறிக் கொண்டிருக்கும் அந்த வேளையில் கனவில் நம்மால் துல்லியமாக பார்க்க, பேச, கேட்க, அறிய, உணர முடிகிறதே, அது எதனால்? சிந்தித்துப் பாருங்கள்...

என்னடா இந்த பாஜக வுக்கு வந்த சோதன...


நீண்ட ஒரு கல்லறையா சீனப் பெருஞ்சுவர்?


சந்தேகமில்லாமல் சீனப் பெருஞ்சுவர் ஒரு உலக அதிசயம் தான்.ஒவ்வொரு வருடமும் இதை பார்ப்பதற்கென்றே 40 லட்சம் பயணிகள் வருகிறார்கள்.

சீனாவின் கிழக்கு மேற்காக 9000 கிலோ மீட்டர் நீள்கிறது.

இவை தவிர சீனப் பெருஞ்சுவருக்கு வேறு ஒரு முகமும் உண்டு.அது அந்த சுவரில் புதையுண்டு இருக்கும் ரகசியங்கள்.

கி.மு.2014ல் கின்(qin) சக்கரவர்த்தி சீனாவை இணைத்தபோது இந்தச் சுவரை எழுப்ப உத்தரவிட்டார்.அந்தப் பகுதியின் பண்டைய இனத்தவர்கள் தனது எல்லைக்கள் ஆக்கிரமிப்பதைத் தொடரக் கூடாது என்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.

சீனப் பெருஞ்சுவர் எப்படி காலத்தையும் தாண்டியும் நிற்கிறது?

இந்தக் கேள்விக்குக் கிடைக்கும் பதிலும் உலகத்தையே திகைக்க வைக்கும் ஒருவித அரிசிக் கஞ்சியை எலுமிச்சை கலவையில் கலந்துதான் சுவரின் கற்களை இணைத்துள்ளனர்.

முழுச் சுவரும் ஒரே சமயத்தில் கட்டப்பட்டது அல்ல. அடுத்தடுத்து வந்த சாம்ராஜ்ய மன்னர்கள் ஆளாளுக்கு கொஞ்சமாக சுவரை நீட்டித்தனர்.

சுவரை எழுப்புகையில் 10லட்சம் பேர் இறந்தனர்.(இதன் காரணமாகவே உலகின் நீளமான சுடுகாடு என்றும் சீனப் பெருஞ்சுவர் அழைக்கப்படுகிறது)

நிலவிலிருந்து பார்த்தால் உலகில் சீனப் பெருஞ்சுவர் தெரியும் என்பது பரவலாகப் பரவியுள்ள தவறான நம்பிக்கை.

சீனப் பெருஞ்சுவரை எழுப்ப பல உழைப்பாளிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். அந்த பகுதியில் ஒரு நந்தவனமும் இருந்தது. அந்த நந்தவனத்தின் உரிமையாளரின் மகள் மெங் ஜியாங் என்பவர். அந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான் இளைஞன் பான் குயிலியாங் என்பவன்.

காதல் வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால்  அதில் நேர்ந்தது ஒரு சோகமான திருப்பம்.
சீனப் பெருஞ்சுவரை எழுப்புவதற்காக கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டான் அந்த இளைஞன்.

அவன் வருவான் என்று காத்திருந்தாள் காதல் மனைவி.கணவன் வருவதாக தெரியவில்லை பொறுமையிழந்த அந்த இளம் மனைவி சீனப் பெருஞ்சுவரின் கட்டுமானப் பணி நடக்கும் இடைத்தை அடைந்தாள்.

ஆனால் அங்கு எவ்வளவு தேடிப் பார்த்தும் அவள் கணவன் கிடைக்கவில்லை.

அப்போது சில கட்டுமான கலைஞர்கள் அவரை அணுகினார்கள். யாரைத் தோடுகிறாயா பெண்ணே என்று கேட்டார்கள்.என் கணவன் பான் குயிலியாகைத் தேடுகிறேன் என்றால்.

சுற்றுமுற்றும் பாார்த்தபடி ரகசியமான குரலில் உன் கணவன் இறந்து விட்டான்.

இரவு, பகல் என்று தொடர்ந்து அவனை வேலை வாங்கியதில் இதயம் வெடித்தே இறந்து விட்டான் என்றார்கள்.

மெங் ஜியாங் கதறினாள்.

வெகு நேரம் அழுதபின் என் கணவரின் உடல் எங்கே என்று கேட்டாள்.

அவன் உடலை இந்த பெருஞ்சுவருக்கு நடுவே புதைத்து கட்டிவிட்டார்கள் என்றபடி மெல்ல நகர்ந்தனர்.

இதுபோன்ற துயர சம்பவங்களை நேரில் பார்த்து பார்த்து அவர்கள் மனம் இறுகியிருந்தது.

இளம் மனைவி நாள் கணக்கில் அழுது தீர்த்தாள். பெருஞ்சுவரை ஆங்காங்கே ரகசியமாக தோண்டிப் பார்த்தாள். ஆங்காங்கே பல உடல் எலும்புகள் தெரிந்தன.

தன் கைகளை சுவரில் மோதினாள் அந்த ரத்தம் சற்று தள்ளியிருந்த ஒரு குறிப்பிட்ட எலும்பின் மீது பட்டது அதுவே தன் கணவணின் எலும்பு என்பதை உணர்ந்து கொண்டாள்.

இந்த நிகழ்வு திரைப்படமாக எடுக்கப்பட்டு புகழ் பெற்றது.

இனி சீனப் பெருஞ்சுவர் குறித்துக் கேள்விப்படும் போதெல்லாம் வியப்போடு கொஞ்சம் வேதனையும் எழும் அல்லவா?

பசுமைச் சாலையின் ப்ளூ பிரின்ட் இது தான்...


இந்த சமூகத்தால் ஒடுக்கப்பட்டவனின் கோபத்தையும், அவன் உழைப்பையும், அதிகாரத்தையும் இந்த உலகம் ஒருநாள் கண்டிப்பாக பார்க்கும்...


அவன் அதிகாரம் மக்களுக்கானது..

அடையாறமற்ற அவனின் முயற்சி இந்த சமூகத்திற்காகவும், அவனின் அடுத்த தலைமுறைக்காவும்..

அவன் இந்த சமூகத்தை அதிகம் நேசிக்கிறான்..

ஏனெனில் இந்த சமூகம் அவனை எப்போதும் ஒட்டுமொத்தமாக ஒரங்கட்டுகிறது..

வெறுப்பு இருக்கும் இடத்தில்தான் ஆழமான காதல் நேசிப்பு இருக்கும்...

சென்னையில் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்த மாநகர காவல்துறை அனுமதி அளித்துள்ள இடங்கள்...


உயிர் எங்கே உள்ளது?


குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்து, இந்த மண்ணைத் தொட்டதும் அது அழுதே ஆகவேண்டும்.

இல்லையேல் மற்றவர் அழத் தொடங்குவர். அழுகையே பிறக்கும் ஒவ்வருவரும் செய்யும் முதல் காரியம்.

குழந்தை அழும்போது முதல் முதலாக காற்று உடலின் உள்ளே புகுகிறது.

உயிரும் சுவாசத்துடன் கலந்து உள்ளே செல்கிறது.

உள்ளே சென்ற உயிர் உடலில் எங்கே சென்று அமர்வதாக சித்தர்கள் கூறியிருக்கிறார்கள் என்று பார்ப்போமா?

உச்சிக்குக் கீழே உண்ணாக்கு மேலே
வச்ச பொருளின் வகையறிவாரில்லை
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே...

இவ்வாறு உச்சிக்குக் கீழே, உண்ணாக்கு மேலே உயிர் இருப்பதாக நம் சித்தர்கள் கூறுகிறார்கள்.

மேலும் அது 1008 இதழ்த் தாமரை மலரில் வீற்றிருப்பதாகக் கூறுகிறார்கள்.

அங்கே வீற்றிருந்தாலும் அதன் வடிவம் எத்தகையது என யாருக்காவது தெரியுமா என்றால் அதையும் கூறுகிறார்கள் நம் சித்தர்கள்.

மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று
உற்றிந்து பாரடா உள் ஒளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே...

இவ்வாறு அணுவுக்கு அணுவாக நீல நிற ஒளிவட்டமாக விளங்கும் சக்தியின் பீடத்தின் நடுவில் தீபச் சுடராக சிவம் விளங்குகின்றது எனவும்...

அந்தத் தீப வடிவே உயிரின் வடு எனக் கூறப்படுகிறது.

இதையே திருமூலர் உயிர்தான் சிவலிங்கம் எனத் தெளிவாகக் கூறுகிறார்.

தெள்ளத் தெளிவோர்க்குச் சீவன் சிவலிங்கம்...

வடிவத்தைக் கூறிய நம் சித்தர்கள், உயிரின் அளவைப் பற்றி மட்டும் கூறாமலா விட்டிருப்பார்கள்.

ஒரு பசுவின் உடலில் இருந்து ஒரு மயிரை எடுத்து, அதை ஒரு லட்சம் பிரிவாக பிரித்தால், அதன் ஒரு பிரிவின் அளவே உயிரின் அளவாகுமாம்...

பசுமை சாலை எதற்காக.?


விவசாயத்தை பாதுக்காக்க வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு 28.04.2018(சனிக்கிழமை) மதியம் 12.00 மணிக்கு நடத்தும் சோறு உண்ணும் போராட்டத்திற்கு ஆதரவு தரும் இயங்கங்கள்...


இழந்தமிழர் முன்னணி கழகம்
தமிழக மக்கள் கழகம்
மக்கள் பாதை
இளைய தலைமுறை  அமைப்பு
டிசம்பர் 3
உலக வள்ளலார் பேரவை
தமிழ்நாடு இளைஞர் கட்சி
ஓட்டுநர் சங்கம்
சமூக ஆர்வலர்கள்

இடம்:வள்ளுவர்கோட்டம்
தேதி:28.04.2018(சனிக்கிழமை)
நேரம்:மதியம் 12.00 மணியளவில்...

ஆமெரிக்காவின் மருத்துவக் கப்பல்...


அரசே ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்...


சீனப்பயணியின் தமிழ்க் கல்வெட்டு தென்னிலங்கையில்...


கி.பி. 1409 ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு தென்னிலங்கையில் காலி (Galle)யில் எஸ்.எச்.தொம்லின் என்பவரால் 1911ல் கண்டெடுக்கப்பட்டது.

இது செங் ஹெ (Zheng He) எனும் சீன கடலோடி சீனம், தமிழ், பாரசீகம் என மூன்று மொழிகளில் காணப்படுகிறது.

சிங்களத்தில் இல்லை.

சிவனொளிபாதமலை மீது இருக்கும் அல்லா,
தமிழர் கடவுளான தேனாவரை நாயனார்,
மற்றும் புத்தர் கோவில்களுக்கு கொடுத்த கொடை பற்றி கூறுகிறது.

அதாவது புத்தமதம் பற்றி இருக்கிறதே தவிர சிங்களவர் பற்றி எதுவுமே இல்லை.

செங் ஹே எனும் சீனக் கடற்படைத் தளபதி மற்றும் நாடுகாண் பயணி ஒரு இசுலாமியர் ஆவார்.

இவர் சிவனொளிபாத மலையின் (Adam's peak) அல்லா என்று குறிப்பிடுவது இறைவன் எனும் பொருளில் இருக்கலாம்.

ஏனென்றால் 1766ல் தான் முதன்முதலாக சிவனொளிபாதமலை பௌத்தர்களுக்கும் திறந்துவிடப்பட்டது.
அதுவரை அது சைவர்களின் புனிதத்தலமே.

தேனாவரை நாயனார் கோயில் தென்னிலங்கையின் தொண்டீஸ்வரம் (donra) ஆகும்.

இது போர்த்துகேயர்களால் இடிக்கப்பட்டுவிட்டது.

இது இருந்த தேவேந்திரமுனை (தேவிநுவர)யில் பெருமாள் கோவில் ஒன்று சிங்களவர்களால் கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இவர்கள் வைணவ பற்றாளரான நாயக்கர் வம்சாவழி சிங்களவராக இருக்கலாம்.

தென்னிலங்கையில் தற்போதைய தலைநகரம் கொழும்பு அருகே  கோட்டை கட்டி ஆண்ட அழகேஸ்வரன் என்ற மன்னன் அழகேஸ்வரன்.

இக்கோட்டை ஸ்ரீ ஜயவர்த்தன கோட்டை என்று அழைக்கப்படுகிறது.

அழகேஸ்வரன் என்ன காரணத்தாலோ செங் ஹே வருகையை எதிர்த்துள்ளான்.

செங் ஹே படையுடன் அவன் நாட்டில் இறங்கி போர் செய்து தோற்கடித்து கைது செய்து சீனாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பிறகு விடுவித்துவிட்டனர் என்றாலும் அழகேஸ்வரனின் கோட்டை அரசு (kotte kingdom) சிங்களவர் கைக்குப் போனது.

பிறகு இந்த கோட்டை அரசின் காலமே சிங்கள மொழியின் பொற்காலம் எனுமளவு சிங்களம் வளர்ச்சியடைந்தது.

அதாவது 1400களில் சிங்களவர்கள் மொழியாலும் நாகரீகத்தாலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்துள்ளனர் எனலாம்.

600 ஆண்டுகள் முன்பு வரை கூட தென்முனை வரை தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். ஆண்டுள்ளனர்.

இதற்கு அசைக்க முடியாத சான்று செங் ஹே அவர்களின் காலி மும்மொழி கல்வெட்டு ஆகும்...

குழந்தைகளை கேன்சர் நோயிலிருந்து காப்பாற்றுவோம்...


குழந்தைத் திருமணம் என்பது தெலுங்கின திராவிடர் கொள்கையே...


பெண்கள் மீதான அடக்கு முறைகளிலேயே தலையானது குழந்தைத் திருமணம்.

அதில் முன்னணியில் இருந்தது தெலுங்கு இனமே.

1931 ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கட்தொகை கணக்கீட்டில் உள்ள ஒரு பக்கத்தை இங்கே தருகிறேன்.

அப்படியே ஈ.வே.ரா முதலில் திருமணம் செய்த பெண்ணின் வயதையும்,
இரண்டாம் திருமணத்தில் அவரது வயதையும் பொருத்திப் பார்த்தால் உண்மை விளங்கும்.

தமிழினம் எப்போதும் பெண்ணடிமை சிந்தனைக்கு இடமளித்ததில்லை...

75 நாள் ப்ளட் டெஸ்ட் எடுக்காம தான் ட்ரீட்மெண்ட் பன்னியா...


சித்தர் ஆவது எப்படி ? - 15...


பேரருளை உணர்த்தாத குருவருள் பாழ்...

அன்பே சிவம் என யாரும் அறிகிலர் என சித்தர் பாடிய பாட்டின் படி, அன்பை பற்றி சதா பேசிக் கொண்டே இருக்கும் மனித வர்க்கம் அதன் உண்மை தன்மையை உணராது இருக்கிறது..

அது முக்தியில் மட்டுமே தோற்றத்திற்கு வரும்.. விளக்கம் கிடைக்கும்... அந்த மூன்று இணைக்கக் கூடிய ஒளி நிலை பெறவே முதலில் முனைய வேண்டும்... அந்த மூன்று கிடைத்த ஒளி நிலையில் மட்டுமே மரணமற்ற நீங்காத பேரன்பு கிடைக்கும்.. முதலில் பேராற்றல் மிகுந்த பேரருளின் தோன்றா நிலையின் தொடர்பு..

அப்படி அப்படி பெற்ற ஆற்றலை உருவ சக்தியாக மாற்றும் வல்லமை வாய்ந்த ஒரு ஊடகமான குருவருளின் தொடர்பு.. அது இரண்டாம் நிலை..

பின் குருவின் தொடர்புடன் உருவ பொருள்களுடன் உலகத்தோடு தர்மமாக வாழுதல்.. இது மூன்றாம் நிலையான திருவருள்..

பேரருள் குருவருள் திருவருள் இந்த மூன்று நிலைகளையும் ஒரே நேரத்தில் பூரணமாக பெற்று இயங்குகிற அந்த தருணம் தான் முக்தி அடைந்த நிலை என்பர்..

அந்த நிலை தான் நிகழ் கால தொடர்பாகிய அன்பு என்பர்..

அந்த நிலையில் வற்றாத சக்தியை பிரபஞ்சமாகிய தோன்றா நிலையில் பெற்று பெற்று, அதனை சத்திய பொருளாக குருவின் துணையால் உருவமாக மாற்றி உலக சார்புகளோடு, சத்திய வாழ்க்கை தர்ம வாழ்க்கை, கருணையோடு வாழும் தகுதி பெறுகிறோம்.

முக்தி ஆனது தோன்றா நிலையாகிய பேரருளையும், அந்த பேரருளை வேண்டிய வண்ணம் பொருளாக மாற்றும் ஒரு ஊடகமான குருவருளையும், அதனால் உண்டான சத்திய நிலையில் ஏற்படும் உலக பந்தங்களில் பயன் தூய்ப்பு என்ற அனுபவநிலையும் ஒன்று சேர்ந்த நிலையில், இணைந்த நிலையில், இருக்கும் தன்மையாகும்..

அதாவது மூன்றும் பூரணமான செயல் நிலைதான் முக்தி என்பது..

இதில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டோ நீங்கிய நிலையில் குறைவு பட்டவர்களாக உள்ளோம்..

பேரருளும் குருவருளும் குறைவு பட்ட காரணத்தால், தொடர்பு மையமாகிய உலகியலில் பல வேதனைகளை சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்...

தோன்றா நிலையாகிய பேரண்டமும் பேரறியும் அதன் பேராற்றலும் உணர்த்த வேண்டிய மதங்கள், இடையில் உள்ள குருவருளை மற்றுமே பற்றிக்கொண்டு, முயன்று முயன்று மூல ஆதார சக்தியை பற்ற முடியாமல், விதிக்கப் பட்ட சக்தியையும் செலவு செய்து தோற்றுப் போய் கொண்டே இருக்கின்றன..

சூரிய வெளிச்சத்தை முறைபடுத்தி குவித்து ஒரு குவி ஆடி ( lense ) தன் கீழ் உள்ள பஞ்சை எரிய வைக்கிறது.. இதில் சூரிய வெளிச்சம் பிரபஞ்ச ஆற்றல் என்ற பேரருள் என்றால், குவி ஆடி குருவருள் ஆகும்..

பஞ்சு என்பது உலக சம்பந்த பட்ட சார்புகளான திருவருள் ஆகும்.. இந்த மூன்றும் சேர்ந்த பூரணமாக பெற்ற நிலையே முக்தி என்பதாகும்..

இன்று நிழலிலே குவி ஆடி வைத்துக் கொண்டு பஞ்சை எரிக்க, படாதபாடு அனைவரும் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்..

எல்லா மதங்களும் யோக பயிற்சிகளும் இன்று மூல ஆதாரத்தை விட்டு விட்டு வெறும் வழிபாட்டிலும், வெற்று பயிற்சியிலும் ஈடுபட்டு, இருக்கும் விதிக்கப் பட்ட ஆற்றலையும் இழந்து இழந்து நாசமாகி போய் கொண்டு இருக்கிறது.. எல்லாமே சூரிய ஒளி படாத குவி ஆடிகளாக இருக்கின்றன..

ஆனால் சில அற்புதங்கள் மதங்களில் நடக்கின்றனவே என்று வாதாடலாம்.. அற்புதங்கள் நடந்தபின், அதன் பின் வந்த நிலையை யாரும் வெளிப் படுத்துவது இல்லை..

அற்புதங்கள் நடந்த ஆனந்தத்தில் பின்னால் தொடர்ந்து வரும் அவல நிலையை மறைக்கப் பட்டு விட்டது..

காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை போல் நடந்த அற்புதங்கள் பின், ஏற்படும் அவலங்களை சொல்லாமலே போய் விட்டனர்..

அற்புதங்கள் நடந்த போது பெருமை பட்ட போது, அந்த பெருமையே தனக்கு ஏற்பட்ட அவல நிலையை சொல்ல தடையாக இருந்தது..

சித்தர்களை தவிர எந்த மதவாதிகளுக்கும் எந்த அற்புதமும் நடக்கவே இல்லை..

உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் ஒன்றுக்கு நூறாக மிகை படுத்தப் பட்ட அந்த அற்புதங்கள் பொய்யாகவே இருக்கும்..

முக்தி என்ற ஞான நிலையில் மட்டுமே அவைகளின் உண்மை தோற்றம் புலப்படும்..

தோன்றா நிலையில் உள்ள பேரருளின் துணை இல்லாமல் சத்தியமாக எந்த அற்புதமும் நடக்காது.. அந்த மூலாதார சக்தியின் துணையின்றி எந்த அற்புதமும் நடக்கவே நடக்காது..

மூலசக்தியின் துணையின்றி எல்லை கடந்து பலப்படுத்தப் பட்ட குருவருள் நாசத்தையே உருவாக்கும்.. பெருகி வரும் கோவில்களும் மசூதிகளும் சர்ச்களும், பேரருளுக்கு எதிரானவை.. பேரருளை பெற மிகப் பெரும் தடையாக உள்ளன..

அவைகள் எல்லாம் நிழலில் பயன் படுத்தப் படும் குவி ஆடிகள்.. எந்த கனலையும் எழுப்ப தகுதி அற்றவை.. மாறாக இருக்கின்ற கனலையும் கிரகித்து மனிதனை சக்கையாக செய்து விடும்.. இன்றைய குருமார்களும் அப்படியே இருக்கின்றார்கள்.. அதனால் தான் நிலைதடுமாறிய நிலையில் மனிதன் எண்ண செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறான்...

இந்த தோன்றாநிலையை உணர்த்தாத எதுவும் பலன் அளிக்காது..

மூலக்கனலோடு தொடர்பு அற்ற எதுவும் வெறும் சடப் பொருளே..

தோன்றும் நிலையில் உள்ள தொடர்பு, தோன்றா நிலையை உணர தடையாக இருப்பதால், தோன்றும் நிலையில் உள்ள குருவருள் மறைந்திருந்து ஒருவனுக்கு தோன்றாநிலையை உணர்த்த வேண்டும்.. அப்படி எதுவும் இன்றைய சூழ்நிலையில் நடப்பது இல்லை...

தானே கடவுள் என பிரகடனப் படுத்தி மனித குலத்திற்கு நாசமே விளைவிக்கின்றனர்..

தோன்றா நிலையில் பெறப்பட்ட மூல சக்தியால் மட்டுமே முக்தியின் விளைவாக ஒருவர் அன்பு உடையவராய் ஆகி திருவருளான உலக சார்புகளுக்கு, அதாவது உலக உயிர் இனங்களுக்கு நன்மை செய்ய முடியும்..

மற்றபடி மற்றவர்கள் அன்பை பற்றி பேசிக் கொண்டு இருக்கலாமே தவிர அன்பாய் இருக்க முடியாது..

ஆகவே இன்றைய மனிதக் குலத்திற்கு தோன்றா நிலைக்கு அழைத்து சென்று பேராற்றல் என்ற மூலக் கனலை பெற வேண்டிய கட்டாயம் அவசியம் உள்ளதால், தோன்றா நிலைக்கு அழைத்து செல்லும் பயிற்சியே தலை சிறந்த பயிற்சி என்பது சத்தியமான உண்மை..

தோன்றா நிலையில் இருக்கும் மூலதார மூலக்கனலுக்கு அழைத்து செல்லாமல், தோன்றும் நிலையில் உள்ள பொய்யான மூலாதாரத்தினை காட்டி காட்டி பயிலும் இன்றைய முறையற்ற வாசி பயிற்சி நாசம் மட்டுமே விளைவிக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்...

தோன்றா நிலை என்பது எண்ண ஆதிக்கங்கள் இல்லாத கனல் பொருந்திய சுத்த மனம் ஆகும்..

அம்மனம் ஒன்றே தோன்றா நிலையில் அகப்படும் கனலை ஈர்த்து வைக்கக் கூடிய ஆற்றல் உடையது..

எண்ண ஆதிக்கங்களால் ஆளப் படும் அசுத்த மனம் இருக்கின்ற ஆற்றலை எண்ணங்களில் விரையம் செய்து கொண்டிருக்கும்....

தோன்றா நிலையில் மட்டுமே இறைவனும், இறை ஆற்றலும், இருப்பதால் தோன்றா நிலையில் இருக்கும் அந்த தருணம் மட்டுமே இறைவன் வழிபாடு பயன் உள்ளதாக இருக்கும்..

மற்றபடி எண்ண ஆதிக்கங்களான வேண்டுதல்களை முன் வைத்து சிலைகளுக்கு முன் செய்யும் எந்த பிரார்தனையும் தகுந்த பலனை தராது..

எண்ணியவாறு எண்ணிய வண்ணம் எதுவும் உடனே நடைபெற தோன்றா நிலையில் நின்றால் மட்டுமே சாத்தியமாகும்...

தோன்றா நிலையில் முன் வைக்கப் படும் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப் படும்.. காரணம் அங்கே மட்டுமே பேரண்ட பேராற்றலின் கனல் என்ற கடவுளின் கருணை சுலபமாக அகப்படும்...

ஆகவே முக்தியின் முன் நின்ற நிலையான பேரருளின் ஆசியை பெற வாசியோகத்தில் தோன்றா நிலை அனுபவப் பட வேண்டும் என வற்புறுத்தப் படுகிறது..

தோன்றா நிலையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்ட அந்த தருணம் முதல் மனிதனுக்கு வாழ்வு உயர நல்ல தருணம் தொடங்கி விட்டது என்பது சத்தியமான உண்மை...

ஆகவே தான் பேரருள் பொருந்திய தோன்றா நிலையை முன்வைத்து விளக்கத் தவறிய எந்த ஒரு மதமும் யோகமும் மன்னிக்க முடியாத ஒழுங்கின்மையை செய்கிறது என சொல்லப் படுகிறது..

எல்லாமே ஒழுங்கின்மையாக உள்ள நிலையில் சுவாச ஒழுங்கு என்ற மிக அற்புத மிக மிக சாதாரணமான பயிற்சியை, செய்ய மனித குலத்திற்கு மிக மிக கடினமாக உள்ளது...

உலகமயமாக்கல் என்றால் என்ன.?


ஆற்றுநீர் வாதம் போக்கும். அருவி நீர் பித்தம் போக்கும். சோற்று நீர் இரண்டையும் போக்கும்...


மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக விளங்குவது வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும்.
இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும்Vநோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது.

ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும். ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப் பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும்.

மூலிகைகளின் மீது பட்டு இந்நீர் வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது. வாதநோய் தொடர்பாக நரம்புக் கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக
மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன.

இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவி நீரும் பயன்படுகின்றன. வாதம், பித்தம் இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது.

இத்தகைய மருத்துவகுணம் கருதியே
நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும் பழைய சோற்று நீரை அருந்துகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்
கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்...

அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த
ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா?

தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல... அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்....

அதாவது பழைய சோறு... அந்த உணவு,

1.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி
அதிகரிக்கிறது.
2.வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.
3.உடல் சோர்வை போக்குகிறது.
4.உடலில் உள்ள அனுச்சிதைவுகளை
தடுக்கிறது.
5.உடல் சூட்டை தணிக்கிறது.
6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை
விரைந்து வெளியேற்றுகிறது.
7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது.
8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும் சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு.

என்று பலவிதமான நன்மைகளைப்
பட்டியலிட்டனர்… இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளி வந்ததும் HOW to MAKE PALAYA SORU?... என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்திலும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்….

ஆனால் நாம் தான் இதை திண்ணால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும்
என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு
பழையதை பழித்து வருகிறோம். அது பெரிய தவறு…

சரி...பழைய சோற்றை எப்படி செய்வது?

1. நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில்
சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த பானம் தயார்..

2. இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர் கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய் ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்….

ஆகா… இதுதான் தேவாமிர்தம் என்பதை
நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்….

இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள்.

பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள் தேவர்கள்…….

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்..

இனியாவது குப்பை உணவான பர்கரையும், பீட்சாவையும், புரோட்டவையும் தேடி அலைவதை நிறுத்துவோம்... உடல் நலத்தை
பேணுவோம்...