28/04/2018

ஆற்றுநீர் வாதம் போக்கும். அருவி நீர் பித்தம் போக்கும். சோற்று நீர் இரண்டையும் போக்கும்...


மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக விளங்குவது வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும்.
இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும்Vநோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது.

ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும். ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப் பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும்.

மூலிகைகளின் மீது பட்டு இந்நீர் வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது. வாதநோய் தொடர்பாக நரம்புக் கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக
மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன.

இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவி நீரும் பயன்படுகின்றன. வாதம், பித்தம் இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது.

இத்தகைய மருத்துவகுணம் கருதியே
நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும் பழைய சோற்று நீரை அருந்துகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்
கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்...

அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த
ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா?

தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல... அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்....

அதாவது பழைய சோறு... அந்த உணவு,

1.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி
அதிகரிக்கிறது.
2.வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.
3.உடல் சோர்வை போக்குகிறது.
4.உடலில் உள்ள அனுச்சிதைவுகளை
தடுக்கிறது.
5.உடல் சூட்டை தணிக்கிறது.
6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை
விரைந்து வெளியேற்றுகிறது.
7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது.
8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும் சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு.

என்று பலவிதமான நன்மைகளைப்
பட்டியலிட்டனர்… இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளி வந்ததும் HOW to MAKE PALAYA SORU?... என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்திலும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்….

ஆனால் நாம் தான் இதை திண்ணால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும்
என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு
பழையதை பழித்து வருகிறோம். அது பெரிய தவறு…

சரி...பழைய சோற்றை எப்படி செய்வது?

1. நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில்
சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த பானம் தயார்..

2. இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர் கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய் ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்….

ஆகா… இதுதான் தேவாமிர்தம் என்பதை
நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்….

இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள்.

பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள் தேவர்கள்…….

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்..

இனியாவது குப்பை உணவான பர்கரையும், பீட்சாவையும், புரோட்டவையும் தேடி அலைவதை நிறுத்துவோம்... உடல் நலத்தை
பேணுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.