15/04/2018

ஆயுளை அதிகரிக்கும் அம்சமான உணவுகள்...


நாம் உண்ணும் உணவுதான் நம் ஆயுளை தீர்மானிக்கிறது. கொழுப்பு சத்துள்ள உணவுகள்தான் ரத்தநாளங்களில் படிந்து இதயத்தை செயல்படவிடாமல் தடுக்கிறது. இதனால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவும் காரணமாகிறது. இதயத்திற்கு இதம் தரும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியத்தோடு ஆயுளை அதிகரிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

ஆயுள் அதிகரிக்கும் தயிர்...

தயிர் அதிசயம் மிக்க உயிருள்ள உணவு. தயிரின் மகத்துவம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே 3000 வருடங்களுக்கு முன்பே மொஹஞ்சோதாரே ஹரப்பா நகரத்தில் தெரிந்துள்ளது. அமெரிக்காவில் ஜலர்ஜியா மாகாணத்தில் மட்டும் அதிகம் பேர் 100 வயதிற்கு மேல் வாழ்வதை ஆராய்ந்தபோது அவர்கள் அதிகம் உணவில் தயிர் சேர்த்துக் கொள்கின்றனர் என தெரிய வந்தது.

தயிரில் லேக்டோடைசில்ஸ் மற்றும் லெபிடா என்ற நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இவை நம் வயிற்றில் தீய கிருமிகள் வராமல் தடுக்கிறது. நமது கிராம மக்கள் கூறுவது போல் "ரத்தம் செத்துப்போகாமல்'' செய்து தயிரின் ஸ்பெஷல் ஆக்சன் குடல் சுழற்சி, குடல் புண், பெருங்குடல் புற்றுநோய் வராமல் தயிர் காப்பாற்றும்.

தயிரிலுள்ள கால்சியம் எலும்புகள் தேயாமல் காப்பாற்றுகிறது. எலும்பில் உள்ள மஜ்ஜையில் அதிக அளவில் செல் உருவாக தயிர் உதவுகிறது.

கொலஸ்ட்ரால் அளவை குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது. மலச்சிக்கல் இல்லாமல் வாழ ரத்தக்கசிவை தடுக்கும் விட்டமின் கே உருவாக உதவும். வழி வகுக்கிறது. இது பி. காம்ப்ளக்ஸ் வைட்டமின் குறைபாட்டை தவிர்க்கிறது. வயிற்றில் அதிக வாயு ஏற்படுவதை தடுக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. தோலை மினு மினுப்பாக வைக்கிறது.

இதயத்திற்கு ஏற்ற சாக்லேட்...

பனாமா நாட்டைச் சேர்ந்த சன்ப்ளாஸ் தீவில் வாழும் மக்களுக்கு உள்நாட்டு பகுதியில் வாழ்வோரைக் காட்டிலும் 6 மடங்கு குறைவாகவே இதயநோய் ஏற்படுகிறது. இதற்கு காரணம் நாம் தண்ணீர் சாப்பிடுவது போல அவர்கள் எக்கச்சக்கமாக தினம் கோகோ பானம் அருந்துவது தான். இதிலுள்ள இசபிளரனாய்ட்ஸ் என்ற பொருள்.

ரத்தக்குழாய்களை இளமையாக வைக்கிறது. இதனால் அவர்களின் உடலில் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி மடை திறந்த வெள்ளம் போல் உடலின் பல பாகங்களுக்கும் பாய்வதால் அவர்களிடம் ரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறு சர்க்கரை நோய் மூளைச்சிதைவு நோய் எட்டியும் பார்ப்பதில்லை. ஆனால் டார்க் சாக்லேட்தான் சாப்பிடவேண்டும். மில்க் சாக்லேட்டில் செறிவு கொழுப்பு இருப்பதால் அதனால் இதுபோன்ற நன்மைகள் கிடைக்காது.

கருப்பு திராட்சை சத்துக்கள்...

கருப்பு திராட்சையில் உள்ள சத்துக்கள் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும் உடலை ஆரோக்கியமாக வைக்கும். ஞாபகசக்தியை வளர்க்கும். தினம் தினம் கறுப்பு திராட்சை சாப்பிட்டால், தலைமுடி நரைக்காமல், இரும்பு போன்ற இதயத்துடன் வாழலாம். அதேபோல் பாதாம், முந்திரி, காரைப் பருப்பு, வால்நட் ஆகியவற்றில் செறிவற்ற கொழுப்பு உள்ளதால் அவை இதயத்தை பாதுகாக்கும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு...

அமெரிக்காவை விட ஒகினாவா என்ற ஜப்பானிய தீவில் 100 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 மடங்கு அதிகம். இதற்கு சர்க்கரை வள்ளிக்கிழங்குதான் காரணம் என்று கண்டறியப்பட்டது. ஆலிவ் எண்ணெய் அளவிற்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கு உடலை ஆரோக்கியமாக வைக்கின்றன. இவற்றில் வைட்டமின் தாதுப்பொருட்கள் மற்றும் அபூர்வமான ஆன்டி ஆக்சிடேன்ட்டு உள்ளன.

ஆலிவ் ( olive) என்பதிலேயே Live என்று ஆசிர்வாதம் செய்வதும் பொதிந்துள்ளது. 40 வருடங்கள் மேலைநாடுகளில் செய்த ஆராய்ச்சிகளில் ஆலிவ் எண்ணெயில் செறிவற்ற கொழுப்பு இருப்பதால் அது நம் உடலில் ஆக்ஸிகரணம் ஏற்படுவதை தடுத்து மூப்பு ஏற்படாமல் தடுப்பது தெரிய வந்துள்ளது. ஆலிவ் எண்ணெயை நாம் செய்யும் காய்கறி சாலட்களில் கலந்து சாப்பிடுவது நல்லது. இது இதயத்தை காக்கும்...

தூத்துக்குடியில் 23 வருடம் இல்லாத ஏப்ரலில் மழை...


தற்காலிகமாக ஸ்டெர்லைட்டை மூடியதற்கே இந்த மழை என்றால் நிரந்தரமாக மூடப்பட்டால்...

பறிபோன செங்கோட்டை காடு...


மொழிவாரி மாநிலங்கள் மாற்றியமைக்கப்பட்ட போது இரு மாநிலங்களுக்கு இடையே இயற்கையான எல்லையாக அமைந்துள்ள காடுகளைப் பங்கிடுவதில் சிக்கல் வந்தது.

அப்போது வகுத்த விதிப்படி ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 30% காடுகளாக இருக்க வேண்டும்

ஆனால் இதிலும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது.

தமிழகத்தின் மேற்கும் வடக்கும் மலைகளாலும் காடுகளாலும் சூழப்பட்டு இருக்கிறது.

 ஆனால் இந்த இயற்கையான எல்லையைத் தாண்டி மறுபக்கமும் தமிழர் வாழ்ந்தனர்.

அவை பறிபோனதுடன் காடுகளையும் கூட தமிழகத்துக்கு தராமல் ஆக்கிரமித்துக்கொண்டனர்.

இதில் கேரளா அளவுக்கதிகமான காடுகளை எடுத்துக்கொண்டது.

(அப்போது கேரளாவில் பாதிக்கு மேல் காடாக இருக்க, தமிழகத்தில் கால்பங்குகூட காடு இல்லை)..

 பறிகொடுத்த வரலாற்றில் சிறந்த எடுத்துக்காட்டு செங்கோட்டை தாலுகாவில் இருந்த (ஆரியங்காவு மற்றும் குளத்துப்புழா இருக்கும்) செங்குறிஞ்சி, பொன்முடி காடுகள்  பறிபோனது ஆகும்.

1931 மக்கட்தொகை கணக்கெடுப்பு செங்கோட்டை தாலுகா 100% தமிழர் வாழ்ந்த பகுதி்.

அன்றைய மலையாள இனவெறி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த தமிழர் பகுதிகளை மீட்க நேசமணி அவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக அவர் கேட்டதில் பாதி கிடைத்தது.

இதில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை அடங்கும்.

மீட்ட பகுதிகளை ஒரே மாவட்டமாக்கும்போது நேசமணியார் செங்கோட்டையை கன்னியாகுமரியின் ஒரு பகுதியாக வைத்திருப்பது மக்களுக்கு இடைஞ்சல் என்று அதை திருநெல்வேலிக்கே கொடுத்தார்.

இழந்த செங்கோட்டை வனப்பகுதி 1950களிலேயே ஆண்டுக்கு 5கோடி வருமானம் கொடுத்த வளமான பகுதியாகும்.

இதை நாம் இழந்தோம்...

வரைபடம்: அன்றைய செங்கோட்டை தாலுகா மீது இன்றைய எல்லை வரையப்பட்டுள்ளது...

தமிழா விழித்துக்கொள்...



புகையிலை பொருட்கள் விற்பது சட்டப்படி குற்றமாம்...


உபயோகிப்பவர்களை மட்டுமே தண்டிக்கும் காவல் துறையே...

இதோ அவனே விலாசம் கொடுத்துள்ளான் முடிந்தால் திராணி இருந்தால் கைது செய்...

குறிப்பு : அனைத்தும் வட இந்தியர்களின் தயாரிப்பு  என்பதால்  முடியாத ?

தமிழக வரலாற்று துரோகிகள்...


திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டுவிட்ட தமிழனின் கடல் சார் வளர்ச்சி...


உணவுக்காய் கடலில் மீன் பிடிக்க ஆரம்பித்த தமிழ் மக்கள் கடற்கலங்களின் பயன்பாட்டை அறிந்து கொண்டார்கள். அத்தோடு அவற்றினைக் கட்டவும் சுயமாகவே கற்றுக் கொண்டார்கள். அவர்களினால் அமைக்கப்பட்ட மாபெரும் கடற்கலங்கள் நாவாய்கள் என அழைக்கப்பட்டதாக பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

கடற்கலங்களில் கடலை அளக்க முயன்ற தமிழன் கடலை முழுதாய்க் கற்றுக் கொண்டான். இதனால்க் காற்று வீசும் திசைகளில் கடற்டகலங்களை செலுத்தவும் இரவினில் திசை மாறாது பயணிக்கவும் கற்றுக்கொண்டான். இதற்கு உதவியாக கலங்கரை விளக்குகளையும் அமைத்துக் கொண்டான்.

கடலில் பிரயாணம் செய்யத் தொடக்கி கடலில் அனுபவம் பெற்றுக்கொண்ட தமிழன் தன் கடற் பிரயாண எல்லைகளை அதிகரித்து ஏனைய நாடுகளுக்கும் செல்லத் தொடங்கினான்.இவை வர்த்தகம், ஆக்கிரமிப்பு, படையுதவி எனப் பல வடிவங்களில் விரிந்து நின்றது. ஆரம்ப காலங்களில் ஈழத் தமிழன் தன் தொப்புள் கோடி உறவான தமிழகத்துடனேயே பெரும்பாலும் கடல்வழியே ஆனா தொடர்புகளைக் கொண்டிருந்தான்.

ஆரம்பத்தில் மேற்கு நாடுகளுடனான வணிகத்தில் ஈழத் தமிழனும், தமிழகத்தவர்களும் மட்டுமே தொடர்புபட்டிருந்தார்கள். இவற்றுக்கு வசதியாக சேர நாட்டின் பெருந் துறைமுகம் புகாரும், பாண்டிய நாட்டின் முத்துக்குப் பெயர்போன மிகச்சிறந்த துறைமுகம் கொற்கையும் விளங்கின. இவற்றுக்கு நிகராக ஈழத்தின் மேற்கு கரையில் கற்பிட்டி முதல் யாழ்ப்பாணம் வரையான தமிழனின் துறைமுகங்கள் செயற்பட்டு வந்தன.

தூர கிழக்கு நாடுகளான சீனா, யா(ஜா)வா, அரேபியா, எகிப்து, உரோமாபுரி என்பவற்றுடன் ஆரம்ப வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்தியவர்கள் தமிழர்களே. பின் காலங்களில் சீனர்கள் மேலைத்தேய வணிகத்தில் பங்கு கொண்ட காலத்தில் இலங்கையின் வடகரையில் இருந்த துறைமுகங்கள் மேலும் முக்கியத்துவம் பெற்றன. அவற்றுள் மாதகல், மயிலிட்டி, காங்கேசன்துறை,தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, சாட்டி, பெரியதுறை, ஊர்காவற்துறை, பருத்தித்துறை, கச்சாய், கொழும்புத்துறை, பண்ணை, மணித்தலை, நாகர்கோவில், தாளையடி, வெற்றிலைக்கேணி என்பன குறிப்பிடத்தக்கனவாகும்.

7ஆம் நூற்றாண்டளவில் மாந்தையூடான வர்த்தகம் தடைப்பட்டு ஊர்காவற்துறைமுகம் மேற்கிலும், கிழக்கிலும் இருந்து வந்த கப்பல்களுக்கு பிரதான துறைமுகம் ஆனது. இதுவே போர்த்துக்கேயர் வரும் வரை ஐரோப்பிய முகமதிய வர்த்தகர்களால் பயன்படுத்தப் பட்டது.

இலங்கை சுகந்திரம் அடைந்து சிங்கள அரசு ஆட்சிக்கு வரும் வரை ஈழத்தின் வல்வெட்டித்துறையும், ஊர்காவற்துறையும் கடற்கலங்களை உருவாக்கும் இடங்களாகவும்; பழுது பார்க்கும் இடங்களாகவும் பிரசித்திபெற்றிருந்தன.

1938 இல் அமெரிக்காவின் மசாசுசெட் மாநிலத்தைச் சேர்ந்தவரால் வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட அன்னபூரணி என்னும் கப்பல் விரும்பி வாங்கப்பட்டது.இது அக்காலத்தில் தமிழன் கப்பல் கட்டும் தொழிலில் கொண்டிருந்த திறமைக்குச் சான்று பகிர்கின்றது.

1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்து பாராளுமன்ற ஆட்சி ஏற்பட்ட போது தமிழனின் கடல் மார்க்க அறிவையும், திறமையையும், அவனின் கடல் வணிக வளர்ச்சியையும் சிதைக்கும் நோக்குடன் வட இலங்கைத் துறைமுகங்களுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான கடற் போக்குவரத்துப் பாதை சட்டரீதியாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. இதனால் கொழும்புத் துறைமுகம் முக்கியத்துவம் பெற்றது. இதன் மூலம் தமிழனின் கடல் சார் உரிமைகள் பறிக்கப்பட்டு சிங்களவர்களிடம் அரச ஆதரவுடன் ஒப்படைக்கப்பட்டது.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். யுத்தங்கள் ஓய்ந்துவிட்ட நிலையில் வடக்கில் இயற்கையாக அமைந்த எண்ணற்ற துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதனைத் தவிர்த்துவிட்டு சிங்களவர்களாலேயே மிகப் பெரிய நீச்சல் தடாகம் என நகையாடப்படும் ஓர் துறைமுகத்தை செயற்கையாக நிர்மாணிக்க வேண்டியதன் அவசியம் தான் என்ன?

மேலும் கடற்கலன்களை கட்டவும், ஓட்டவும் உலகிற்கே கற்றுத் தந்த தமிழன் இன்று கப்பல்களில் என்ன செய்து கொண்டிருக்கிறான்? இதற்குக் காரணம் தான் என்ன?

விழித்துக்கொள் எம் தமிழினமே...


சித்தர் ஆவது எப்படி ? - 2...


சித்தம் என்ற பூதத்தின் இயல் தன்மை
சித்தத்தை சீர் செய்வதின் மூலம் மட்டுமே ஒருவர் சித்தர் ஆகமுடியும் என தெரிந்து கொண்ட நாம், சித்தம் என்ற நீர் பூதத்தின் சுய வடிவத்தை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது... நீர் இன்றி அமையாது உலகு என மறை பொருளால் வள்ளுவர் சொன்னார்.. புல்லாகி பூண்டாகி, மரமாகி பல்விருச்சமாகி பறவையாய் பாம்பாய் மனிதனாய் என அடுக்கி கொண்டே ஞான சம்பந்தர் சொன்னது போல் பல் பிறவிகளை எடுத்துள்ள நாம், அப்பிறவிகளை நமது மேல் மன நிலையில் அறியாது இருக்கின்றோம்.. நம் மேல் மன நிலையில் நம் குழந்தை கால நினைவுகளையும் அறியாது இருக்கின்றோம்..

ஆனால் அத்தனை பிறவிகளின் நினைவுகளை நம் ஆழ் மனதில் எண்ணப் பதிவுகளாக பதிக்கப் பட்டு இருக்கின்றன... ஆனால் இந்த பிறவியின் எண்ண ஆதிக்கத்தால் அமுக்கப் பட்ட ஆழ் மனதின் எண்ணங்கள் எழும்பி வர முடியாத நிலையில் நமது சித்தம் உள்ளது.. ஆனாலும் சித்தத்தில் அமுங்கி கிடக்கின்ற சில எண்ண பதிவுகளின் எழுச்சியின் காரணமாக நமது இன்றைய வாழ்வு வடிவமைக்கப் படுகின்றது..

இதை தான் விதி வழி வாழ்க்கை என்கிறார்கள்.. எல்லா விலங்குகளும் விதி வழி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருகின்றன... மனிதன் மட்டுமே அதை மாற்ற முயலுகின்றான்.... விதி என்பதே வ்+ இதி ஆகும்.. வ் என்ற வகர மெய் எழுத்து விண்ணின் அம்சமான அறிவினை குறிக்க இதி என்பது இல்லாத நிலையை குறிக்கிறது... அதாவது விதி எனபது அறிவு அற்ற நிலையாகும்... விதியின் எதிர் மறை சொல் தான் வாசி என்பது.. அறிவின் பலப்பட்ட உறுதி பெற்ற நிலையான மதியே வாசி.. அந்த வாசியான மதியால் மட்டுமே விதியை வெல்லலாம்...

சித்தர்கள் விதி வழி வாழ்க்கை வாழாமல், வாசி வழி வாழ்க்கை வாழ முயன்றார்கள்.. அதற்காகவே வாசி யோகத்தை கண்டு பிடித்தனர்... அதில் சித்தத்தை பூரணமாக அறிந்து சித்தத்தின் உள்ளே சதாசிவத்தை காண முயன்றார்கள்.. சித்தம் தரும் எதிர் மறை கட்டுபாடுகளை தகர்த்து எறிந்து, அவைகளை தங்கள் அறிவு கனலால் சுட்டெரித்து, அதிலிருந்து விடுபட்டு சித்தம் தரும் மிக பெரிய பயனை பயன் படுத்த முயன்றார்கள்... அதன் விளைவாக சித்தர் என்ற ஏற்றம் பெற்றார்கள்... இயல்பாகவே மனிதனுக்கு சித்தத்தில் எண்ண குவியல் இருக்கும்.. இந்த எண்ண குவியலிருந்து வலு பெற்ற எண்ணங்கள் தானாகவே வெளி பட்டு மனதில் பிரதிபலிக்கின்றன.. அதனால் மனதில் ஒரு குறிபிட்ட எண்ணம் என்று இல்லாமல், ஏதாவது எண்ணம் தோன்றும்.. எண்ண குவியலை சித்தத்தில் தாங்கிய மனிதன் தன் மனதில் தான் தோன்றிதனமாக தோன்றிய எண்ணங்கள் பிரகாரம் தான் பேசுவான் நடப்பான்.. அவன் நடை பாவனை எல்லாம் முன்னுக்கு பின்னும் முரணாகத்தான் தோன்றும்.. மனிதன் எதை நினைகின்றானோ அதுவாகவே ஆகிறான் என்ற சத்திய வார்த்தைகளை ஒரு போதும் மறக்கக் கூடாது... அதே போல் மனிதன் தான் நினைத்ததை தான் செய்ய தொடங்குவான் என்பது அசைக்க முடியாத விதியாகும்... யானை வரும் பின்னே மணி ஒசை வரும் முன்னே என்பது போல் முதலில் எண்ணம் தோன்றி அதன் பிறகே செயல் தோன்றும்...

ஆகவே தான், தான் தோன்றி தனமாக வரும் எண்ணங்களால் மனிதனின் செயல் பாடுகளில் மிகுந்த முரண் பாடுகள் உள்ளன..இந்த முரண்பாடுகள் சமுதாய சூழ்நிலைகளாலும் சமுதாய பயிற்சியினாலும் கட்டுப் படுத்தப் படுகிறது.. இந்த முரண்பாடுகள் ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் ஏதோ ஒரு நிலையில் கட்டுப் படுத்தப் படுகிறது.. அந்த ஒரு நிலையே அந்த சமுதாயத்தின் கலாசாரமாக கருதப் படுகிறது.. நிலை நிறுத்தப் பட்ட அந்த நிலைக்கு கீழே முரண் பாடுகளை நீக்கினாலும் மேலே கூடினாலும் சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை..
சமுதாயம் அங்கீகாரம் செய்து கொண்ட முரண்பாடுகளை ஒரு மனிதன் நீக்க முயற்சித்தால் அவனை சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது.. ஒரு மனிதன் புனிதனாக முடிவு செய்து சமுதாய முரண்பாடுகளை நீக்க முயன்றால், அவனை சமுதாயம் ஒதுக்கி வைத்து விடும்... அப்படியான சமுதாயம் யாரையும் தூய சித்தனாக்க விடாது..

அப்படியான சமுதாயம், சித்தனாக ஏற்றுக்கொண்ட ஒர் மனிதன் சமுதாய முரண் பாட்டிற்கு ஒத்து போனால் மட்டுமே சமுதாயத்தோடு வாழ முடியும்... அப்படியான மனிதன் தூய சித்தனாக எப்படி இருக்க முடியும் என்பது தான் கேள்வி... சமுதாயமா அல்லது புனிதமா என்பதில் புனிதத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பொழுது ஒரு மனிதன் தூய சித்தர் பாதையில் பயணப் படுகிறான்..
சித்தர் யார் என்ற கேள்விக்கு முக்கியமான பதிலை இங்கே உன்னிப்பாக கவனிக்குமாறு வேண்டுகிறேன்..

சித்தத்தில் உள்ள முரண்பாடுகளை நீக்கி, தான் மட்டுமே புனித பாதையில் பயணப் படும் சித்தன் தன்னை சூழ்ந்த சூழ்நிலை மனிதர்களை மாற்ற முயலுவதில்லை.. காரணம் தன்னிடம் ஆன்மா பலம் இல்லை.. அப்படி மாற்ற நினைத்தால், மனிதர்களிடமிருந்து பெரிய தொல்லைகள் வரும் என்பதை அறிந்து ஒதுங்கி கொள்ளவே முயலுகிறான்.. தான் மட்டுமே வாழ, தன்னை சூழ்ந்த மனிதர்கள் மாள ( இறந்து போக ) பயணப்படும் மனிதனை தர்மம் என்ற பிரபஞ்சம் ஒரு சித்தனாக ஒரு போதும் ஏற்றுக் கொள்வது இல்லை.. இது சத்தியமாக இருக்கிறது.. இந்த தர்மத்தின் பிரபஞ்சத்தின் பார்வையில், சித்தர்களாக உலக சமுதாய கருதப் படும்
சித்தர்கள், தங்கள் பதவிகளை இழக்கிறார்கள்.. தர்மம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஒருவர் சித்தர் ஆக முடியும்.. முரண் பட்ட உலகம் கருதும் சித்தர்கள் ஒரு போதும் சித்தர்கள் ஆக முடியாது.. இது மிக கசப்பான உண்மைதான்... பொறுத்துக் கொள்ளதான் வேண்டும்....

ஆகவே பிரபஞ்சத்தின், தர்மத்தின் பார்வை, முரண் பட்ட சமுதாய பார்வைக்கு எதிராக உள்ளது.. இனி வரும் பகுதிகளில் புனித சித்தனின் இயல்பையும், அவனது செயல் பாடுகளையும் ஆராய்ந்து முதல் பகுதியில் சொன்னது போல்,புனித சித்தனின் நேர் வழியில் புனித தூய வழியில் பயணப் பட முயல்வோமாக....

நீதிக்காக நாதியற்று நிற்கும் பாதிக்கப்பட்டவனின் மனக்குமுறலை அறியாது ஆளும் வர்க்கம்...


அளிக்கும் எலும்புத் துண்டெனும் காகிதத்திற்காக.. ஓர் மரண ஓலத்தின் வலியை கூறு போட்டு விற்கும் வேசித்துறையே..

நீங்கள் சட்டமெனும் பெயரில் மக்களின் அறியாமையைக் கொண்டு செய்யும்
அராஜகங்களையும் ஓர் நாள் கழுவேற்றுவோம்...

தமிழ் இலக்கியத்தில் நீர் மேலாண்மை...


வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது (குறள்-16) என்கிறார் வள்ளுவர். அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர். மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது. இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.

"இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப
மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்''
(வரி.26-28)

இப்பாடலடியில், "மழை பிணித்து ஆண்ட மன்னவன்' என்பதன் பொருள், முறையாகப் பெய்யும் மழை நீரை ஏரி, குளங்களில் சேமித்து அவற்றைத் தக்க முறையில் பயன்படுத்தி, நாட்டை வளம்பெறச் செய்யும் மன்னன் இவன் என்பதாகும்.

இதே போல மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாய கடமை என்பதைப் புறநானூற்றுப் பாடலில்,

"நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம இவன் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே''
(புறம்-18,28-30)

என்று புலவர் புலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துப் பாடியுள்ளார். இதன் பொருள், நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும்.

"அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ''
(புறம்.118)

எனக் குறிப்பிடுவதன் மூலம் ஏரி எந்த வடிவில் இருக்க வேண்டும் என்பதைப் புறநானூறு வழி அறிய முடிகிறது. ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால், அதிகநீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும்போது ஏற்படும். இது ஏரி வடிவமைப்பில் மிகவும் சிக்கனமான வடிவமைப்பாகும்.

சிறுபஞ்ச மூலத்தில் குளம் அமைக்கும் முறை பற்றி காரியாசான் கூறியுள்ளார். அதில், பொதுக்கிணறு அமைத்தல், வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் வெளியேறும் கலிங்கு, தூம்பு போன்றவைகளை அமைப்பவர் சொர்க்கத்துக்குப் போவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகத்தில், நீர் வரும் வரத்துக்கால் நன்கு அமையாத குளம் இருப்பின் அதனால் பயன் குறையும் என்ற செய்தியை,

"வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை யுண்ணாக் குழவியும்
சேய்மரபில் கல்விமாண் பில்லாத மாந்தரும்
இம்மூவர் நல்குரவு சேரப்பட்டார்''
(83)

என்று, தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அற்ற நிலையில் உள்ளவர்களும் எப்படி சிறக்க முடியாதோ, அதுபோல் வாய் நன்கு அமையாத குளமும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மிகுதியாக வரும் ஆற்று வெள்ளநீரை தம்முள் அடக்கிக் கொள்ளக்கூடிய பெரும் ஏரிகள் இருப்பது ஒரு நாட்டுக்குச் சிறப்புத் தரும் என்பதை, "யாறுள் அடங்குங் குளமுள வீறுசால்' என்று நான்மணிக்கடிகை குறிப்பிடுகிறது. இப்பாடலில் குறிப்பிடப்படும் ஆறு உள் அடங்கும் குளம் என்ற சொற்றொடர், நீர் மேலாண்மைத் திறத்தின் ஒரு முக்கிய வெளிப்பாடாகும்.

பெரு வெள்ளம் ஏற்படும் காலங்களில் அந்நீரை உரிய முறையில் சேமித்து, நீர் இல்லாத காலங்களில் பயன்படுத்தக்கூடிய நிகழ்வை இச்சொற்றொடர் எடுத்துக்காட்டுகிறது. கண்மாய்களையும், குளங்களையும் காத்து நின்ற அதாவது, முறையாகப் பராமரித்த செய்தியை அகநானூற்றுப் பாடல்,

"பெருங்குளக் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயில்
மறந்தனளே''
(25)

என்கிறது. அதாவது, பனியிலும், மழையிலும், அடர்ந்த இருள் சூழ்ந்த நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன்போல, குழந்தையைப் பாதுகாக்க அன்னை தன் தூக்கத்தை மறந்தாள் என்பது இப்பாடலின் பொருள்.

சிறு குழந்தையைத் தாயானவள் கண்ணை இமை காப்பதுபோல் காத்த செயலும், நீர் நிலைகளைக் காக்கும் செயலும் ஒன்றாகவே எண்ணப்பட்டு வந்துள்ளது.

பழந்தமிழ் நூல்களில் இத்தகு நீர்நிலைகளிலிருந்து மிகு நீரை வெளியேற்ற "கலிங்கு' என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். இக்கலிங்கு குறித்த தகவல்கள் மிகுதியாக இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன.

இத்தகு தொழில் நுட்பம் நம் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான "அறவணர் தொழுத காதை' என்னும் பகுதியில், புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,

"பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும்''
(1384-87)

என்கிறார். "சுருங்கை' என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய். அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும். அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருள்.

1,600 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே "குமிழித்தூம்பு' என்பதாகும். பழந்தமிழர்களின் நீர் மேலாண்மைச் செயல்பாட்டில் இந்தக் "குமிழித்தூம்பு' அறிவியல் சார்ந்த மிக நுட்பமான, நேர்த்தியான பயன்பாடுடைய படைப்பாகும்.

இதேபோல் பெருக்கெடுத்து மிகுவேகத்தில் ஓடிவரும் நீரை குறுக்கே தடுப்பணை அமைத்துத் தடுப்பதற்கு மிகுந்த தொழில்நுட்ப அறிவு தேவைப்படும். வருகிற நீரைக் கற்கள் கொண்டு தடுப்பதால், இத்தகு தடுப்பணை "கற்சிறை' எனும் அழகுத் தமிழ்ச் சொல்லால் வழங்கப்பட்டுள்ளது.

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், "பெருகிவரும் படையை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப் போராடுவதுபோல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது' (வரி:725-726) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர்.

தமிழ் இலக்கியங்கள் சுட்டும் நீர் மேலாண்மைச் செய்திகள் ஏதோ கற்பனையான ஒன்று என்று யாரும் எண்ணிவிட முடியாது. அதில் கூறப்படும் செய்திகள், அறிவியல் சார்ந்தவையாக இருப்பதை கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு உறுதி செய்ய முடிகிறது. பழைய தொழில்நுட்பங்களுடன் புதியவைகளையும் இணைத்து நீரைச் சேமித்தால் எதிர்காலத்தில் கவலைப்படும் அவசியம் இருக்காது...

சிரியா போர்...


பிடித்ததும் வெறுத்ததும்...


நமக்கு ஒரு விடயத்தையோ அல்லது நபரையோ பிடிப்பதற்கும்  வெறுப்பதற்கும் எந்த காரணமும் நமக்கு தேவைப்பட வேண்டியதில்லை.

முதன்முதலில் சந்திக்கும் நபரை பார்த்தவுடன் நம் ஆழ்மனம், இதுவரை சேர்த்து வைத்துள்ள மொத்த அறிவையும் பயன்படுத்தி, அவரை பற்றி நிறைய நுணுக்கங்களை அறிந்து கொள்கிறது.

அது அவரவரின் ஆழ்மனங்கள் பழக்கப்பட்ட விதத்தை பொருத்து மாறுபடும். எனவே அந்த முடிவு சரியாகவும் இருக்கலாம் அல்லது தவறியும் போகலாம்.

மேலும் நாம் இப்பிறப்பில்  சந்திக்கும் முக்கால்வாசி பேர்கள், நமது பூர்வ ஜென்ம உறவினர்கள், நண்பர்கள் மற்றும் எதிரிகளே.

ஆம் நாம் குழுக்களாகவே தான் மீண்டும் மீண்டும் பிறக்கிறோம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே முற்பிறப்பின் வாசனைகள் நம்மை தொடர்ந்தாலும் நாம் அனைவரையும் நேசிக்க பழகுவோம். அதுவே போக போக பழகிவிடும்...

நேத்து டிவிட்டர்ல பாஜக மோடிய ரவுண்டு கட்டுனது எல்லாம் கண்ணு முன்னாடி வரத்தானே செய்யும்...


தமிழர் கெட்டது யாரால்...?


தமிழ் நாட்டில் மட்டும் தான் தமிழ் பேசுகிறவன் அனைவரும் தமிழர்கள் என்று தமிழர்களே நினைத்து கொள்வார்கள்..

தான் யாரென்பதும் தன் இனம் எது என்பதும் தெரியாதபடி சிந்தனை மழுங்கி இருக்கிறான்.

அதனால் தான் தமிழினத் தலைவர் என்று சொல்லி கொள்வோறேல்லாம் மிக நுட்பமாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி நம்மை ஏமாற்றுகின்றனர்.

தமிழர்களிலே இன்னமும் தான் திராவிடன் தான் என்று நினைத்து வாழ்கின்றனர்.

அதனால்தான் வந்தேறி கூட்டதாரெல்லாம் ஏமாற்றி வாழ்கின்றனர்.

இனமான உணர்வு இல்லாத தமிழர்களிடம் எப்படி புரிய வைப்பது.

முத்துகுமரன் உள்ளிட்டோர் நெருப்பில் மாண்டனர், அவர்களின் மூலம் படிப்பினை பெற்றிருக்க வேண்டும் .

அதை உணராமல் ஆளுகிறவர்களின் எண்ணத்திற்கேற்ப தமிழர்கள் குழம்பி விட்டனர்.

தமிழர்களின் நாட்டை தாசி வீடாக கருதிவிட்ட வந்தேறிகளின் அடிமையாக படித்த தமிழர்களே இருகின்றனர்.

சும்மா இருந்தால் சொறிநாய் கூட நம் மீது மூத்திரம் பெய்து விட்டு தான் செல்லும்..

ஈழத் தமிழர்களின் வீரத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது... அவர்கள் களப் போராளிகள்..

ஆனால் இங்கு நிலைவேறு..

தமிழனே தமிழனை பார்த்து தீவிரவாதி, பிரிவினைவாதி, பார்பன அடிவருடி, சாதி தலைவன், வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கி கொண்டு தமிழகத்தை துண்டாட பார்கின்றனர் என்று தவறான அடையாளமிட்டு அழித்துவிட நினைகின்றனர்.

தமிழர் அல்லதார்களின் சூழ்ச்சி வலைக்குள் சிக்குண்டு கிடக்கிறான், அதிலிருந்து விடுதலை பெறுவது எப்போது?

அமெரிக்காவால் சிரியா அபாய நிலையில்...


மற்ற பிரச்சினைகள் ஒருபுறம் இருக்கட்டும் நமது விவசாயிகள் உயிர் வாழ்வாதார பிரச்சினையை மறந்திடாதே...


காவிரி உரிமையை மீட்க களம் காண்போம் வாருங்கள் திருவண்ணாமலை  ஞாயிற்றுக்கிழமை (15.4.2018 ) நாளை காலை 9.30 மணிக்கு திருவண்ணாமலை இளைஞர்கள்  முன்னெடுக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம்..

இடம் : அண்ணா சிலை
நேரம் :காலை 9.30 மணி

களம் காத்து கொண்டுள்ளது தமிழராய் ஒன்றிணைவோம் வாருங்கள்...

இதில் நீங்கள் யார்..? என்பதே உங்கள் முடிவுகளுக்கே விட்டுவிடுகிறேன்...


திராவிட இயக்கம் தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வந்த பின் செய்த சாதனைகள்...


கீழ வெண்மணிப் படுகொலை,
குறிஞ்சாக்குளம் படுகொலை,
உஞ்சனை, மேலவளவு,
கொடியன்குளம்,
தாமிரபரணி,
பரமக்குடி என்று எண்ணிலடங்காப் படுகொலைகளும் …..

சாதி மற்றும் இன ஒடுக்குமுறைகளும் திராவிடத்தின் ஆட்சியில் அரங்கேறிய அலங்கோலங்கள்தானே..

பார்ப்பன எதிர்ப்பு என்ற போர்வையைக் போர்திக்கொண்டு வந்த திராவிட இயக்கங்கள் தமிழரல்லாத தெலுங்கு, கன்னட, மலையாள ஆதிக்கத்தைத்தானே தமிழ்நாட்டில் காலூன்ற வைத்திருக்கிறது..

தமிழ் தமிழ் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த … திராவிட இயக்கங்களின் அரை நூற்றாண்டுகால ஆட்சிக்குப் பிறகும் தமிழ் எங்கே இருக்கிறது?

பெயர்ப்பலககையில் இருக்கிறதா?
ஆட்சி மொழியாக இருக்கிறதா?
வழக்குமன்ற மொழியாக இருக்கிறதா?
பள்ளியில் பயிற்று மொழியாக இருக்கிறதா?

இந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் ஆங்கிலத்துக்குத் தாரை வார்த்ததுதானே திராவிட இயக்கங்களின் சாதனை...

ஸ்டெர்லைட் போராட்டத்தை கலைக்க அதிமுக அரசின் சதி ஆரம்பம்...


நீ எந்த சாதிக்காரனாக இருந்தாலும். உன் குல தெய்வம் சிவபெருமான் தான்...


பறையர்...

பறை = இசைக்கருவி.
இசை = நாதம். நாதமையமானவன் சிவபெருமான். பறை நாதத்தை விரும்புபவன் தான் சிவபெருமான். பறை நாதத்தை விரும்பும் ஈசனுக்கு அடியவர் தான் பறையர்.

ஐயர்...

ஐயன் = உயர்ந்தவன்.
எல்லாவற்றையும் விட உயர்ந்தவர் ஈசன். எல்லாவற்றையும் விட உயர்ந்த ஈசனுக்கு அடியவர் தான் ஐயர்.

வன்னியர்...

வன்னி மரத்தை தலவிருட்சமாக கொண்டவர் ஈசன். வன்னி மரத்தை தலவிருட்சமாக கொண்ட ஈசனுக்கு அடியவர் தான் வன்னியர்.

செட்டியார்...

கொழுந்து விட்டு எரியும் சோதியை போன்ற சென்நிற (சிவந்த நிறம்) மேனியை கொண்டவன் சிவபெருமான். சென்நிற மேனி உடைய ஈசனுக்கு அடியவர் தான் சென்நியர். சென்நியர் என்ற பெயரே காலப்போக்கில் செட்டியார் என்றானது.

செம்படவர்.

செழிப்பான வாழ்வை தந்தருள்பவர் தான் ஈசன். செழிப்பான வாழ்வை தந்தருளும் ஈசனுக்கு அடியவர் தான் செம்படவர்.

குயவர்...

அன்பால் அடியவரின் உள்ளத்தை குழைப்பவர் தான் ஈசன். அன்பால் அடியவரின் உள்ளத்தை குழைக்கும் ஈசனுக்கு அடியவர் தான் குயவர்.

வெள்ளாளர்...

வெற்றியை தன்வசம் வைத்திருப்பவர் தான் ஈசன். வெற்றியை தன்வசம் வைத்திருக்கும் ஈசனுக்கு பிள்ளையான அடியவர் தான் வெள்ளாளர்.

முதலியார்...

தோற்றத்திற்கு வித்தானவர் சிவ பெருமான். எல்லாவற்றிற்கும் முதலான சிவபெருமானுக்கு அடியவர் தான் முதலியார்.

கோனார்...

கோமகனார் என போற்றப்படுபவர்.
கோ - கோவில், பசு காப்பவர்.

வேதியர்...

வேதத்தை தந்தருளியவர் ஈசன். வேதத்தை தந்தருளிய சிவ பெருமானுக்கு அடியவர் தான் வேதியர்.

நாயக்கர்...

எச்செயலுக்கும் நாயகமாக திகழ்பவர் சிவபெருமான். அத்தகைய நாயகனுக்கு அடியவர்தான் நாயக்கர்.

நாடார்...

தென்னாடுடைய சிவனே, எந்நாட்டவர்க்கும் இறைவன். தென்னாட்டை தன்நாடாக கொண்ட ஈசனுக்கு அடியவர் தான் நாடார்.

தேவர்...

தேவையை தீர்த்து வைப்பவர் தான் தேவன். அத்தகைய தேவன் தான்  சிவ பெருமான். தேவையை தீர்த்து வைக்கும் ஈசனுக்கு அடியவர் தான் தேவர்.

கள்ளர்...

அடியவர் உள்ளத்தை கவரும் கள்வர் சிவபெருமான். அத்தகைய சிவ பெருமானுக்கு அடியவர் தான் கள்ளர்.

பத்தர்...

பத்திநெறி அறிவிப்பவர் சிவபெருமான். பத்திநெறி அறிவிக்கும் ஈசனுக்கு அன்பர் தான் பத்தர்.

அப்படியாக..... நீ எக்குலத்தவனாக இருந்தாலும், குலத்திற்கேற்பதோர் நலமிக கொடுப்பது நமச்சிவாயவே.

உன் குல தெய்வம் சிவபெருமான் தான் என்பதை மறந்து வாழ்வது மறு பிறவிக்கு வித்தாகும்.

சிவபெருமான் தான் எம் குலதெய்வம். சிவபெருமான் தான் எம் குலம் காக்கும் தெய்வம்.
சிவபெருமான் தான் முழு முதற் கடவுள் என்று உணர்ந்து, சிவபெருமானை வணங்கி வாழ்வதே வாழ்க்கை. அத்தகைய வாழ்வே வழிபாடு..

நற்செயல் உன் வாழ்தலே இனிய வழிபாடு. நமச்சிவாய..

அடுத்த பிறவில் இதே சாதியில் தான் பிறப்போமா?... உத்திரவாதம் உள்ளதா?

சண்டை, சச்சரவுகளை விடுத்து இறைவனை போற்றி அன்புடன் வாழ்வோம்.

சாதி இறைவனுக்கு சேவை செய்ய உருவாக்கப் பட்டதே தவிர... தலை விரித்து ஆட அல்ல..

இறையே அறம்..

சில சாதிகள் விடுபட்டிருக்கும். குறிப்பு தந்தால் சேர்க்கப்படும்...

கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும்...


அம்பேத்கர் ரசிகர்களுக்கு...


அம்பேத்கர் பற்றிய மூட நம்பிக்கைகள் மற்றும் அதன் உண்மைத்தன்மை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

அம்பேத்கர் இடவொதுக்கீடு பெற்றுத் தந்தார்...

1882ல் அதாவது அம்பேத்கர் பிறக்கும் முன்பே பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடங்கிய கோல்ஹாப்பூர் அரசாட்சியில் பிராமணரல்லாத சாதிகளுக்கு முதன்முதலாக இடவொதுக்கீடு ஷாஹு எனும் அரசரால் வழங்கப்பட்டது.

1893 ல் (அதாவது அம்பேத்கர் இரண்டு வயது குழந்தையாக இருந்தபோதே) அன்றைய தமிழர் பெரும்பான்மை மாநிலமான சென்னை மாகாணத்து தலைவர்கள் ஆங்கிலேயருக்கு கோரிக்கை வைத்து 49 சாதிகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலக் கல்வியில் இடவொதுக்கீடு வழங்கச் செய்தனர்.

1927 லேயே இடவொதுக்கீடு அன்றைய தமிழர் பெரும்பான்மை மாநிலமான மெட்ராஸ் மாகாணத்தில் நடைமுறைக்கு வந்துவிட்டது.

இதைப் பெற்றுத் தந்தது சுப்பராயக் கவுண்டர் மற்றும் முத்தையா முதலியார்.

(அதாவது அம்பேத்கர் காந்தியுடன் பூனா ஒப்பந்தம் போட்டு தேர்தலில் 18% தனி தொகுதிகள் வாங்கித் தருவதற்கு 5 ஆண்டுகள் முன்பே)

1935ல் எம்.சி.ராஜா அவர்கள் தெளிவாக வரையறுத்து அதை சட்டமாக்கினார்.

SC 14%,

BC 14%,

Non Brahmin 44%,

Brahmin 14%,

Christian 7%,

Muslim 7%

என்றவாறு 100% இடவொதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.

(அதாவது அம்பேத்கர் ஆங்கில அரசுடன் பேசி 8.33% இடவொதுக்கீடு கொண்டு வந்ததற்கு 7ஆண்டுகள் முன்பே)

தற்போதும் இந்திய ஒன்றியம் முழுவதும்

SC=15%

ST=7.5%

OBC=27.5

என 50% இடவொதுக்கீடு உள்ள நிலையில்,

தமிழகத்தில் மட்டும் தான்..

BC=26.5%

BCM=3.5% (பிற். இசுலாமியர்)

MBC=20%

SC=15%

SCA=3% (அருந்ததியர்)

ST=1%

என 69% இடவொதுக்கீடு உள்ளது.

(இதற்கு முக்கிய காரணம் பா.ம.க முன்னெடுத்த போராட்டம் ஆகும்)..

அம்பேத்கர் தலித் என்ற அடையாளத்தின் கீழ் மக்களை ஒன்று திரட்டினார்..

அம்பேத்கர் ஓரிரு முறை தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தாலும் அவர் 'தீண்டத்தகாதோர்' என்ற சொல்லாலேயே எப்பொதும் குறிப்பிடுவார்.

ஆவணங்களில் 'சாதியற்ற இந்துக்கள்' என்று குறிப்பிட முன்மொழிந்தார்.

தலித் என்ற வார்த்தை அவர் விரும்பாதது.

(தமிழகத்தில் 'தலித்' என்ற வார்த்தையும் 'தாழ்த்தப்பட்ட' என்ற வார்த்தையும் 1981ல் இருந்து தடை செய்யப்பட்டுள்ளன).

அம்பேத்கர் சுதந்திரத்திற்காக போராடினார்...

அம்பேத்கர் இறுதிவரை ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்தவர்.

காந்தியை எதிர்கொள்ள ஆங்கிலேயர் அவரை பயன்படுத்தினர்.

ஆங்கிலேயர் வெளியேறியதும் அவர் இந்துத்துவத்திற்கு மாறினார்.

அம்பேத்கர் இந்து மதத்தை அதன் சாதிய கட்டுமானத்தை எதிர்த்தார்...

தொடக்கத்தில் அவ்வாறு இருந்தாலும் பிறகு நிறம் மாறினார்.

இசுலாமியரை நம்ப முடியாதவர்கள் என்றும் இந்துக்களின் எதிரி என்றும் கூறி பாகிஸ்தானை பிரிக்கவும் முழு ஆதரவளித்தார்(9).

ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி என்ற இந்துத்துவ - இந்திவெறி கொள்கையை முன்வைத்தார்(5).

பௌத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்களை இந்துமதத்தின் பிரிவுகள் என்றாக்கி அவர்களை சட்டபடி இந்துக்களாக ஆக்கினார் (சட்டம்-25).

சமஸ்கிருதத்தை ஆட்சிமொழி ஆக்க முயற்சிகளை மேற்கொண்டார் (6,7,8).

அம்பேத்கர் சாதி அடையாளத்தை உதறியவர்...

நிச்சயமாக இல்லை.

தனது சாதி பட்டத்தை மறைத்து அம்பேத்கர் எனும் உயர்சாதி பட்டத்தைப் போட்டுக்கொண்டாலும்.

இறுதிவரை தமது சாதியான மகர் சாதிக்கு முடிந்தவரை போராடினார்.

அவருக்கு முதலில் கிடைத்த பெரிய பதவி 1941ல் 'பாதுகாப்பு ஆலோசனை வாரிய உறுப்பினர்' பதவியாகும்.

அவர் செய்த முதல் வேலை ராணுவத்தில் மஹர் படையணி என்று ஒன்றை உருவாக்கியது ஆகும் (1941).

அது இன்றும் உள்ளது.

அம்பேத்கர் மொழி இன அடையாளங்களைக் கடந்தவர்...

இதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் முழுமையாக அப்படி கூறமுடியாது.

பாம்பே (மும்பை) நகரம் குஜராத்தியர் கைக்கு போக இருந்தது.

தன் இனத்தின் தலைநகரமான அதை தனது இனமான மராத்தியர்களுக்கே கிடைக்கச் செய்ததில் அம்பேத்கரின் பங்கு குறிப்பிடத்தக்கது.

அப்போது அந்நகரம் குஜராத்திய பெரும்பான்மை மாநிலத்துடன் இணைந்திருந்தது.

சொத்துகள் அனைத்தும் குஜராத்தியர் வசமிருந்தன.

மராத்தியர் எண்ணிக்கை அந்நகரில் பாதி கூட இல்லை.

அதற்கு முந்தைய மராத்திய பேரரசிலும் அந்நகர் இல்லை.

மாநில எல்லைகள் புனரமைப்பின்போது மராத்திய மொழிவழி மாநிலம் அமைவது பற்றி அவர் சமர்ப்பித்த ஆவணம்(3) மராத்தியருக்கு மும்பையை பெற்றுத்தந்தது.

அதன் வரலாற்றுப் பெயரான மகாராஷ்ட்ரா என்ற பெயரும் அவரால் பரிந்துரைக்கப்பட்டு சூட்டப்பெற்றது.

அம்பேத்கர் தமிழ் மீதும் தமிழர் மீதும் அன்பு கொண்டிருந்தார்...

இல்லை. தமிழ் மூத்தமொழி என்று கூறினார் தான்(4).

ஆனால் மூத்த குடி என நாகர் எனும் இல்லாத இனத்தைக் கூறினார்.

தமிழகம் உட்பட மொழிவழி மாநிலம் அமையவிருந்த போது எதிர்த்தார்.

மொழிவழி மாநிலங்கள் இந்தியாவை துண்டுதுண்டாக உடைக்கும் என்று எச்சரித்தார்.

மொழி உரிமைகளை அவர் வழங்கக்கூடாது என்று கூறினார்.

காஷ்மீருக்கு தன்னாட்சி வழங்கும் சிறப்பு சட்டத்தை (பிரிவு- 370) நேரு சொல்லியும் எழுதித்தர அவர் மறுத்தார் (பிறகு கோபாலசாமி ஐயங்கார் எழுதினார்).

தமிழ் ஆட்சிமொழி ஆக காயிதே மில்லத் அவர்கள் வாக்கெடுப்பு நடத்தி தமிழ் 72ம் இந்தி 73 வாக்குகளும் பெற்றதை அதிர்ச்சியுடன் குறிப்பிட்டு இந்தியை நாடு முழுவதும் திணிப்பதற்கு முழு ஆதரவு வழங்கினார்(2).

அம்பேத்கர் இந்தியா முழுவதற்குமான தலைவர்...

அம்பேத்கர் அவரது வாழ்நாளில் மக்கள் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தது இல்லை.

தேர்தலிலும் கூட தோற்றுதான் போனார்.

அவர் தொடங்கிய இயக்கங்களும் பரவலான ஆதரவைப் பெறவில்லை.

அவருக்கு கிடைத்த பதவிகள் ஆங்கிலேயரோ அல்லது காங்கிரசோ அளித்த வாய்ப்பு தான்.

அம்பேத்கர் ஒழுக்கமானவர்...

அம்பேத்கர் தமது 57 வயதில் தமக்கு மருத்துவம் பார்த்த தன்னை விட 19 வயது இளையவரான ஒரு பிராமணப் பெண்ணை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து கொண்டவர்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இறந்தும் போனார்.

அம்பேத்கர் சாதியொழிப்பில் முன்னோடி...

முதல் சாதி ஒழிப்பு மாநாடு தமிழகத்தில் 1891ல் அயோத்திதாசர் அவர்களால் நீலகிரியில் நடத்தப்பெற்றது.

சாதி ஒழிப்பில் தமிழகமே முதலடி எடுத்து வைத்தது.

எம்.சி.ராஜா 1927ல் எழுதிய 'ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' எனும் நூலை அப்படியே நகலெடுத்து

'The Untouchables' எனும் நூலாக 1948ல் வெளியிட்டார் அம்பேத்கர்.

இதேபோல 1907 ல் அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய 'புத்தரும் அவரது ஆதிவேதமும்' எனும் நூலை அப்படியே நகலெடுத்து..

'The Buddha and his dhamma' என்ற புத்தகமாக அம்பேத்கர் எழுதி (அவர் இறந்த பிறகு அது) 1957ல் வெளிவந்தது.

நகலெடுத்து தமது பெயரில் போட்டுக் கொண்டது கூட பரவாயில்லை.

அந்த சிந்தனை எங்கே கிடைத்தது என்று பின்னிணைப்பில் கூட அவர் மேற்கண்ட தமிழர்களை மேற்கோள் காட்டவில்லை.

அம்பேத்கர் தீண்டாமையை எதிர்த்ததில் முதல் ஆள்...

வடயிந்தியா அளவு தமிழகத்தில் தீண்டாமை இல்லை என்றாலும்.

1923 ல் சென்னை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ரெட்டமலை சீனிவாசன் பொது இடங்களில் பட்டியல் சாதியினர் நடமாட தடையில்லை என்று அரசாணை வெளியிட்டது தீண்டாமைக்கு எதிரான குறிப்பிடத் தகுந்த முதல் நடவடிக்கை ஆகும்.

அம்பேத்கர் வந்த பிறகு தான் பறையர் முன்னேறினர்...

நிச்சயமாக இல்லை.

அம்பேத்கர் அரசியலுக்கு வரும் முன்பே பறையர்கள் கல்வியிலும் அரசியலிலும் வேலை வாய்ப்பிலும் சிறந்து விளங்கினர்.

சொல்லப் போனால் அம்பேத்கருக்கு முன் அவரது இடத்தில் இருந்தவர் எம்.சி.ராஜா எனும் பறையர் தான்.

அம்பேத்கர் ஆரியர்களை எதிர்த்தார்...

அம்பேத்கர் ஆரிய கட்டுக்கதையை நிராகரித்தவர்.

பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து மனுஸ்மிருதி எரிப்பு போராட்டத்தை நடத்தியவர்.

பிராமணர் ஆரியர் என்பதையோ வேற்றினம் என்பதையோ அவர் ஏற்றுக் கொள்ளவில்லை (4, தொகுதி 7, பக். 85).

அம்பேத்கர் புத்தமதத்தை சாதியை ஒழிக்கும் தீர்வாக முன்வைத்தார்...

அம்பேத்கர் இயற்றிய சட்டப்படி புத்தமதம் இந்து மதத்தின் பிரிவே.

ஒரு இந்து புத்தமதத்திற்கு மாறினாலும் சட்டப்படி அவரது சாதி மாறாது.

உயர்சாதி இந்துக்களுடன் சண்டை போடுகிறேன் அதற்காக நான் இந்து இல்லை என்று ஆகாது.

பாகிஸ்தான் முஸ்லீம்களால் ஆபத்து வந்தால் இந்தியாவிற்காக உயிரைக் கொடுத்து போராடுவேன் என்றும் கூறியுள்ளார் (9).

இறப்பதற்கு 50 நாட்கள் முன்பு அவர் லட்சக்கணக்கான மக்களோடு புத்த மதத்தைத் தழுவியபோது எடுத்த 22 உறுதிமொழிகளில் சாதி பற்றி எதுவுமே இல்லை...

அம்பேத்கருக்கு ஃபேர் அண்ட் லவ்லி போட்டு வெள்ளையாக்கி கோட்சூட்டுடன் வரைந்து..

தம்மை உயர்த்திய தலைவர் அவரென்றும் தம்மை தலித் என்றும் கூறிக்கொண்டு,

வரலாறும் உண்மையும் தெரியாமல்,

மற்ற எந்த சாதிவெறி கும்பலுக்கும் சளைக்காத அலப்பறை செய்யும் அம்பேத்கர் ரசிகர்களே..

இனியாவது திருத்துங்கள்...

இதிலுமா வடக்கத்திய மோகம்...

1. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 2.

2. Thoghts on linguistic states

3. Maharashtra as linguistic

4. Who were the untouchables?

5. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 1. page: 213 & 214..

6. Statesmen, 11th September 1949.

7. The National Herald (11.09.1949).

8. The Hindu (11.09.1949).

9. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 15. page: 130 - 143...

இது வேண்டுமென்றே நடத்தப்படும் நாடகம்...


உலக வல்லாதிக்கமே உன்னைப்பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும்...


நீ எப்படி..? உனக்கேற்றால் போல் உலக நாடுகளை உன்னுடன் சேர்த்துக் கொள்வாய் என்று..

உன் அதிகார பசிக்கு இன்னும் எத்தனை மக்கள் இறக்க போகிறார்களோ..?,

அனைவரும் வருக! நமக்கு இழைக்கபட்ட அநீதியை அறவழியில் கண்டனத்தை பதிவு செய்வோம்...


பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை...


பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் வெளியே வரும் அளவிற்கு ஆண் குழந்தைகள் மீதான குற்றங்கள் வெளி வருவதில்லை.

வள்ளியூர் அருகே இருக்கும் சின்னமாள் புரம் கிராமத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் நடத்திய இங்கிலாந்து பாதிரியார் ஜோனதான் ராபின்சன் அங்கு தங்கியிருந்த 15 சிறுவனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு இப்போது நீதிமன்றத்தின் மூலம் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

உள்ளூர் காமக்கொடூரர்களிடம் இங்குள்ள குழந்தைகள் சிக்கி சீரழிவது போதாது என்று ஊழியம் செய்வதாக சொல்லி இந்தியா வந்து சீரழிக்கும் பாவிகளை அந்த ஆண்டவர் என்னதான் செய்வார்.. ?

- பாலா கார்ட்டுனிஸ்ட்...

நாங்கள் கிரிக்கெட்டிற்கு பின்னால் செல்லும் கூட்டம் அல்ல... போராட்டத்தை முன்னெடுத்த சென்னை வாசிகள்...


இந்திய ராணுவத்தின் லட்சனம் இது தான்...


காஷ்மீரில் இந்திய ராணுவத்தால், ஏழு முதல் 77 வயதுள்ள பத்தாயிரம் பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஐ.நா சபை மனித உரிமை கமிஷன் அதிகாரி தாக்கல் செய்தபோது தன்னையறியாமல் உடைந்து அழுத காட்சி.

பார்த்தவர்களுக்கே இப்படி என்றால்? பட்டவர்களுக்கு?