23/01/2019

சீன மலாய் மக்கள் கலந்து கொண்ட மலேசிய தைப்பூச திருவிழா...


தைப்பூசத்தையொட்டி மலேசியா முருகன் கோயிலில் பக்தர்கள் காவடி சுமந்து வந்து தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

தைப்பூசத் திருவிழா இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றான மலேசியாவிலும் களைகட்டியது. மலேசிய வாழ் இந்துக்களின் இரண்டாவது மிகப்பெரிய பண்டிகையாகத் திகழ்வது தைப்பூசம். தமிழகத்திற்கு அடுத்து, மிகப் பெரிய முருகன் கோயில் கோலாலம்பூர் பத்துமலை சுப்ரமணியர் ஆலயமாகும். மிகவும் பழமை வாய்ந்த பத்துமலை குகைக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவிக்கு சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

தைப்பூசத்தை முன்னிட்டு மலேசியாவில் பொதுவிடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. அதிலும் குறிப்பாக இவ்வருடம் வார தொடக்கத்தில் தைப்பூசம் என்பதால், வார விடுமுறையோடு சேர்த்து நீண்ட விடுமுறையில் தைப்பூசத்தை மலேசிய தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தைப் போன்று மலேசியாவிலுள்ள பினாங்கு தண்ணீர்மலை ஆலயம், ஈப்போ கல்லுமலை, கெடா சுங்கை பட்டாணி ஆலயங்களும் தைப்பூசத்திற்கு பெயர்பெற்ற முருகன் திருத்தலங்களாகும். அங்கும் அலகு குத்தியும் காவடி எடுத்தும் பால்குடங்களை சுமந்து வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பத்துமலை தைப்பூசம் மயில்காவடிகளுக்கு பிரசித்தி பெற்றது. அந்த வகையில் பக்தகோடிகள் தங்களின் நேர்த்திக் கடனை செலுத்த பத்துமலை திருத்தலத்திற்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். இவ்வருடமும், மலாய்காரர்கள், சீனர்கள், வெளிநாட்டினர் என பலரும் இந்துக்களுடன் சேர்ந்து தைப்பூச விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இந்தத் தைப்பூசத் திருவிழா மலேசியர்களின் ஆன்மிக கலாசாரம் எதிர்காலத்தில் மேன்மையுற்று விளங்கும் என்பதைக் காட்டுகிறது...

பாஜக மோடியின் வாக்கு பதிவு இயந்திர இரகசியம்...


தமிழ் நாட்டுக்கு பிழைப்பு தேடி வந்தவன் எல்லாம் தமிழனாக போலி முகத்திரையில்...


தமிழ் நாட்டில் பிழைபதற்கு தன்னை தமிழன் என்று அறிமுகம் செய்துக் கொண்டான்..

இதனை நம்பி ஏமாந்த தமிழன்..

வந்தவன் பிழைத்து கொண்டான்...

இதில் யாரை குற்றம் சொல்லுவது ?

பிழைப்பு தேடி வந்தவனா?
வந்தவனை பிழைப்பதற்கு வழி விட்ட தமிழனையா ?

அந்த வகையில் தமிழனை இளித்த வாயனாக மாற்றி பிழைத்தவர்கள் பிழைத்து கொண்டு இருபவார்கள்..

தமிழா சிந்தித்து செயற்பட முன் வா..

பிழைப்புக்கு வந்தவனை புறக்கணிக்க வேண்டாமா ?

தமிழன் அழிந்து கொண்டு இருபது வந்தவனால் மட்டுமே..

இதனை புரிந்து கொண்டு தமிழன் செயற்பட வேண்டும்..

தமிழர்கள் நாம் தமிழர்களையே ஆதரிக்க வேண்டும்...

ஆய கலைகள் அறுபத்து நான்கு...


அன்று தமிழன் வாழ்ந்து காட்டி விட்டுச் சென்ற வாழ்கையைத் தான், அறிவியல் கண்டு பிடிப்புகள் என இன்றைக்கு தினமும் ஒன்றாய் விஞ்ஞானம் தந்து கொண்டு உள்ளது...

இன்றைக்கு நாம் இந்த அறுபத்து நான்கையும் கற்க முடியாது என்றாலும், இதன் பெயரும் அது எதற்காக பயன்பட்டது என்பதையாவது தெரிந்து
கொள்வோமே...

லயோலா கல்லூரி ஓவியம்...


இந்து மதத்தை லயாலோ கல்லூரி விமர்சிக்கவில்லை...

இந்து மதத்தை பயன்படுத்தி அந்த பெயரில் இந்துபெண்களையே கற்பழித்து கொன்ற இந்து முன்னனியினரயே விமர்சித்தது.

இந்துக்களின் பெயரால்  இந்துமதத்தை கேவலப்படுத்தி கொண்டு இருக்கும்.
பாஜக ஆர்எஸ்எஸ் ஸை கேள்வி எழுப்பாமல்  இவர்களை கேள்வி எழுப்பி என்ன பயன்…?

அவன் கொடுத்த குரல் இந்துக்களுக்குமானது தான்…

கரூர் மாவட்டம் ப.உடையாப்பட்டியில் பிறந்தவர் தமிழ் ஆசிரியர் வீரப்பன்...


1965-ல் நடைப்பெற்ற இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் போது தனது உடலை தீக்கு இரையாக்கி...

ஹிந்தி.. ஒழிக..
தமிழ்.. வாழ்க...

என  கரும்பலகையில் எழுதி அவர் பணியாற்றிய பள்ளி அருகே 11.02.1965-ம் நாள்..

கடவூரை அடுத்த அய்யம்பாளையத்தில் வீரமரணம் அடைந்தார்.

இவரது உடல் மணப்பாறை மாமுண்டி ஆற்றங்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 2015 ம் ஆண்டு இவ்வாசிரியருக்கு வெண்கலசிலை உருவாக்கி ஊர் பகுதியில் நிறுவ முயன்று விழா ஒன்றை 30.01.2016 அன்று ஏற்பாடு செய்தனர்.

இதற்கு அரசு தடை விதித்ததால் வீடு ஒன்றில் சாக்கில் கட்டியவாறு சிலை வைக்கப்பட்டு படத்திறப்பு மட்டுமே நடந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் அரசு அனுமதி அளிக்காதல் இன்றும் அதே நிலையே.. நிலவுகிறது..

மேலும் தற்போது பெய்த மழையினால் சிலை வைப்பதற்கு பல லட்சம் செலவில்  உருவாக்கப்பட்ட மணிமண்டபத்தில் செடிகள் வளர்ந்துவிட்டுன.

எனவே  எதிர்வரும் தலைமுறையினர் மொழியுணர்வை  ஊட்டும் வழிகாட்டியாகவும் விளங்க..

மொழிப்போர் தியாகிகள் தினத்திற்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில்..

இந்த ஆண்டாவது மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்பது ஊர்பொதுமக்கள் & தமிழ் ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோளாக தெரிவிக்கின்றனர்.

எனவே அரசு உடனே நடவடிக்கை எடுக்குமா...?

ஆங்கிலேயனிடம் சுதந்திரத்தை வாங்கி விட்டு அவனுடைய பொருட்களையே இன்று வரை பயன்படுத்தினால் நாம் எப்போது வல்லரசு ஆவது...


உடனே என்னிடம் நீ மட்டும் யோக்கியனா என்று வரிந்து கட்டி வர வேண்டாம், நாங்களும் உங்களில் இருப்பவர்களே.

ஆனால் நாம் வளர்ச்சி அடைந்து வருகிறோம் என்று நம்மை நம்பவைத்து இத்தனை வருடத்தை ஓட்டிவிட்டார்கள்

அனைவருக்கும் 2019 ஆண்டின் குடியரசு தின வாழ்த்துகளை முன்பே கூறிக்கொள்கிறோம்...

சாப்பிடும் போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?


நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு செரிமானமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்து கொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.

நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட காலநிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை. அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை செரிமானம் செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், அந்த தண்ணீர் செரிமானத் திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் செரிமானப் பணியை பாதித்துவிடும்.

“இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது; செரிமான வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர்” என்று ஆதங்கப்படுகிறார்.

உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் நோயாளிகள்தான் என்று கூறுகிறார்வைத்தியர்.

அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில டிப்ஸ்கள் இதோ:

நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும். அதேபோன்று உ ணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள். அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே உணவு வாயில் மெதுவாக மென்று செரிமான சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால், அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக செரிமானமடைய வைத்துவிடும்...

நடிகர் அஜித்குமார் அவர்களின் அறிக்கை...


என் பெயரோ, புகைப்படமோ எந்த அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை நான் விரும்பவில்லை - நடிகர் அஜித்குமார் அறிக்கை.

அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு, அதை யார் மீதும் திணிப்பது இல்லை - அஜித்.

மற்றவர்கள் கருத்தை என் மீது திணிக்கவிட்டதும் இல்லை, இதையே தான் என் ரசிகர்களிடமும் எதிர்பார்க்கிறேன் - அஜித்.

எனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை - அஜித்.

என் ரசிகர்களை குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ, வாக்களியுங்கள் என்றோ நிர்பந்தித்ததும் இல்லை, நிர்பந்திக்கவும் மாட்டேன் - அஜித்...

ஊஞ்ச மரத்தின் மருத்துவ குணங்கள்...


தமிழ்நாடு ராணுவ மயமாகிறது...


சென்னை, திருச்சி, கோவை, சேலம், ஓசூர் நகரங்கள் இணைக்கப்பட்டு ராணுவ தளவாட தொழில் சாலைகளாகின்றன.

ராணுவ தளவாட தொழில்சாலைகள், வெளிநாடுகளுக்கு ஆயுத உற்பத்தி, இதை ஏற்றுமதி செய்ய ராணுவ வழிப்பாதைகள் என தமிழ்நாடு  ராணுவ மயமாகும். இந்த இடங்கள் அதி உயர் பாதுகாப்பு இடங்கள், தமிழ்நாட்டு உரிமைகள் இங்கு செல்லாது என அறிவிக்கப்படும்.

நிலம், நீர், இயற்கை வளம் ராணுவ தளவாட உற்பத்தி என சுரண்டப்படும். வட நாட்டு மக்கள் லட்சக்கணக்கில் குவிக்கப்படுவர்.

20 ஆண்டுகளுக்கு பின் அரசியல் உணர்வு பெற்று போராடும் தமிழர்களை உணர்ந்து, இன்றே தமிழ்நாட்டை ராணுவ மயமாக்கும் பார்ப்பன பனியா இந்தியாவின் திட்டம் நிறைவேறுகிறது.

கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் வராத ராணுவ தளவாட மையம் தமிழ்நாட்டில் ஏனென்று கேட்க இங்கு நாதி இல்லை.

எதிர்க்க வேண்டிய தமிழக கட்சிகள், இந்த தமிழ்நாட்டு அழிவுக்கு இந்தியாவின் கங்காணிகள் ஆகின்றன.

அடுத்த தமிழ் சந்ததிகளை காக்க தமிழர்களே திரள வேண்டும்...

விளம்பர படுத்தப்படும்/படாத பாக்கெட் பால் அனைத்தும் தீங்கு விளைவிக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை...


பால் பண்ணைகளில் இருந்து பெறப்படும் சுத்தமான பாலை ஒரு முறை காய்ச்சிய பின்பு 8/10 மணி நேரம் கழித்து சுடு பண்ணி வைத்தாலும் சில சமயம் கெட்டு போய் விடும்.

மூன்று நாள் வரை கெடாமல் குளிர்சாதனப்பெட்டியில் அடைத்து வைத்து விற்பனை செய்யும் பால், பாலா/விஷமா ?

நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...

மனமற்ற நிலை...


இருபத்து நான்கு மணி நேரமும் மனமற்ற நிலைபெறுவது தான் இறுதிச் சாதனை...

இப்படிச் சொல்வதால், மனதை பயன்படுத்தவே கூடாது என்பதல்ல.

மனமற்ற நிலை பற்றி எதுவும் தெரியாதவர்களே அப்படிச் சொல்வார்கள்.

அது பொய்..

மனமற்ற நிலை என்றால், மனம் உன்னைப் பயன்படுத்தக் கூடாது என்று பொருள்...

மனமற்ற நிலை என்றால், மனதை அழித்து விடுவது அல்ல. மனதை ஒரு பக்கமாய் ஒதுக்கி வைப்பது.

அது உலகத்தோடு தொடர்பு கொள்ளும் எந்த வினாடியும் மனதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது உன் பணியாளாக இருக்க வேண்டும்.

நீ சும்மா இருந்தால் கூட 'கடக்கடக் கடக்கடக்' என்று போய்க் கொண்டே இருக்கும். அப்போது உன்னால் எதுவுமே செய்ய முடியாது.

பரிதாபமாக நின்று விடுவாய்..

மனமற்ற நிலை என்பது, மனதைச் சரியான இடத்தில் ஒதுக்கி நிறுத்தி வைப்பது. அது ஒரு வேலையாள் என்ற முறையில் மனம் பெரிய கருவி தான். ஆனால், எஜமானனாகி விடுவது துரதிர்ஷ்டம். அது ஆபத்தானது. உன் வாழ்வையே ஒழித்துக் கட்டிவிடும்.

மற்றவர்களோடு தொடர்பு கொள்ள நீ விரும்பும் போது மனம் ஒரு ஊடகம் மட்டுமே.

ஆனால் நீ தனித்திருக்கையில் மனம் தேவையில்லை. எப்பொழுது பயன்படுத்த வேண்டுமோ அப்பொழுது மட்டும் பயன்படுத்தினால் போதும்.

இன்னொன்றையும் நினைவில் வைத்துக்கொள்.

மனம் பல மணி நேரம் மௌனமாக இருந்தால், அது புத்துணர்ச்சி பெற்று விடும். இளமை துடிப்புடன், படைப்பாற்றலுடன், உணர்வுகளுடன், புதுப்பிறவி எடுத்து விடும். அந்த ஓய்வில் ஏற்படுபவை இவை...

கருத்தரிக்க உதவும் இயற்கை மருத்துவம்...


பகுத்தறிவும், போலித்தனமும்...


வலைபதிவுகளில் ஒரு கும்பல் இருக்கு, பகுத்தறிவு, பெரியார், மூட நம்பிக்கை, பார்ப்பான் அது இதுன்னு இஷ்டத்துக்கும் எழுதுவாங்க. குறிப்பா இந்து சமயத்தை தாக்கித் தான் அவங்களோட பதிவுகள் இருக்கும்.

இந்த கோஷ்டிகளுக்காகத் தான் இந்த பதிவு..

நாத்திகம், ஆத்திகம்... என்னது இது?

தைரியமா கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டா அது ஆத்திகம்..

அதுவே திருட்டுத்தனமா வீட்டுலேயே கும்பிட்டா அது நாத்திகம்..

இப்படி பட்ட போலித் தனமான பகுத்தறிவு ஜீவிகள் தான் இப்ப ரொம்ப ஜாஸ்தி..

அது மட்டுமல்ல, பெரியாரே, காசி யாத்திரைக்கு சாமி கும்பிட போன போது, சாப்பாடு மடத்துல பாப்பானுக்கு தான் அனுமதின்னு சொன்னதால தான், இப்படி பார்ப்பன எதிர்ப்பு கொள்கையை ஆரம்பிச்சார்..

சரி, அப்படியாப் பட்ட பகுத்தறிவாளிகளின் கருத்துக்கள் தான் என்ன?

யார் பகுத்தறிவாளி?

கிறித்துவை கும்பிடலாம்
இஸ்லாமை பின்பற்றலாம்
இவங்க எல்லோரும் பகுத்தறிவாளிகள்..

இந்து சமயத்தை பின்பற்றுகிறவன் மூடன், பைத்தியக்காரன். பிற்போக்கு சிந்தனை கொண்டவன்..

ஹஹ...இது தானாயா பகுத்தறிவு?

கஞ்சா ஒரு இயற்கை மருந்து...


பள்ளி மாணவர்களே.. கல்லூரி மாணவர்களே சிந்தித்து பாருங்கள்...


மக்களை கெடுக்கும் மானமில்லா திரை உலகினருக்கு தேசிய விருதுகள்...

மக்களுக்கு உணவை கொடுக்கும் உழவர்களுக்கு நாம் கொடுக்கும் உயரிய விருது வறுமை மட்டுமே...

நடிகர் நடிகைகள், தாங்கள் நடிக்கும் திரைப்படங்களுக்கு கோடி கணக்கில் ஊதியம் நிர்ணயித்து வாங்குகின்றனர்...

ஆண்டு முழுக்க வியர்வை சிந்தி உழைக்கும் உழவர்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் உணவு பொருள்களுக்கு அவர்கள் விலை நிரனயிப்பது இல்லை.. அரசு விலை நிர்ணயம் செய்கிறது..

பூமி பந்தில் இந்தியாவில் மட்டுமே இந்த நிலை...

உடல் நோகாமல் நடிப்பவர்களுக்கு இந்த நாட்டின் உயரிய தேசிய விருது...

உடல் வலிக்க உழைப்பவர்களுக்கு வறுமையும், பசியும், பட்டினியும் , தற்கொலை மட்டுமே நாம் அவர்களுக்கு கொடுக்கும் தேசிய விருது...

ஒரு கிலோ அரிசியின் விலை வைத்து அதனை மதிப்பிடாதீர்கள். அதற்கு பின்னால் உழவனின், ஏழைத் தமிழனின் அவனின் வறுமையான வாழ்வு இருக்கிறது என்பதை மறவாதீர்கள்...

உங்களுக்கு உயர் தர அரிசியை விளைவித்து கொடுத்து விட்டு இலவச அரிக்கு கையேந்தி நிற்கும் அவலத்தை எண்ணி பாருங்கள்...

உழைத்து உழைத்து உடலின் வலியை போக்க குடித்து சீரழியும் அவன் வாழ்க்கையை நினைத்து பாருங்கள்...

நீங்கள் உண்பது உணவல்ல அவனின் ரத்தமும், சதையையும் உழைப்பாக மாற்றி, நாம் உயிர் வாழ அவன் விளைவித்து கொடுக்கும் உணவால் நம்மை வாழ வைத்து தன்னை அழித்து கொள்ளும் உயரிய மாந்தன் நம் உழவன்...

பள்ளி மாணவர்களே கல்லூரி மாணவர்களே சிந்தித்து பாருங்கள்..

நீங்கள் உயிர் வாழ உழவன் உணவை அளிக்கிறான்...

நீங்கள் உங்கள் நடிகருக்கு, உங்கள் உழைப்பையும் கொடுத்து, உங்கள் பணத்தால் பாலபிசேகம், விளம்பர தட்டிகள் என்று செலவழிக்கிரீர்களே சிந்தித்து பாருங்கள்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


இயற்கை மருத்துவம்...


இயற்கை  மருத்துவத்தில் நீரிழிவு, சளி, இருமல் மற்றும் ஜலதோஷம் போன்றவற்றிற்கு எந்த மூலிகைகளை பயன்படுத்தினால் நல்லது என்பதைப் பற்றி பார்ப்போமா...

நீரிழிவிற்கு...

கறிவேப்பிலை: உணவுகள் அனைத்திலும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு பொருள் தான் கறிவேப்பிலை. அத்தகைய கறிவேப்பிலை ஒரு சூப்பரான மருத்துவகுணம் கொண்டது. அதிலும் நீரிழிவிற்கு நல்லது. ஆகவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மூன்று மாதம் தினமும் 8-10 இலைகளை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், உடல் எடையையும் குறைத்துவிடும்.

இலவங்கப்பட்டை: இது பெரும்பாலும் பிரியாணிக்கு பயன்படுத்துவார்கள். இத்தகைய இலவங்கப்பட்டையை தினமுத் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு குறைந்துவிடும். மேலும் சில காரத்திற்கு பயன்படுத்தும் உணவுப் பொருட்களான பே இலைகள், மஞ்சள் மற்றும கிராம்பு போன்றவையும் நீரிழிவை சரிசெய்யும்.

நெல்லிக்காய்: நெல்லிக்காய் சாப்பிட்டால், கூந்தல் நன்கு வளரும் என்று அனைவருக்கும் தெரிந்தது. அத்தகைய நெல்லிக்காய் ஒரு சிறந்த மூலிகைப்பொருள். இதனால் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். அதற்கு இந்த நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாகற்காய் ஜூஸ் உடன் கலந்தும் சாப்பிடலாம். மேலும் இந்த நெல்லிக்காயை தொடர்ந்து 2-3 மாதத்திற்கு சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

இருமல் மற்றும் சளிக்கு...

துளசி: உடலில் அதிக குளிர்ச்சியின் காரணமாக வரும் சளி மற்றும் இருமல் போன்றவற்றிற்கு துளசி இலைகளை பச்சையாகவோ, ஜூஸ் அல்லது துளசி டீ-யாகவோ செய்து சாப்பிட்டால், நல்லது.

இஞ்சி: சளி மற்றும் இருமலுக்கு இஞ்சி மற்றொரு சிறந்த மூலிகைப் பொருள். ஆகவே சளி அல்லது இருமல் ஏற்படும் போது ஒரு துண்டு இஞ்சியை தேனுடன் தொட்டு சாப்பிடலாம். இல்லையெனில் அதனை இஞ்சி டீ போட்டும் குடிக்கலாம்.

ஏலக்காய்: உணவுகளில் நறுமணத்திற்கு சேர்க்கும் ஏலக்காயும், சளி மற்றும் இருமலுக்கு சிறந்தது. ஆகவே இதனை டீ செய்து குடித்தால், இருமலால் தொண்டையில் ஏற்படும் அரிப்பு நீங்கும்.

எலுமிச்சை: வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் விட்டு கலந்து குடித்தால், சளி மற்றும் இருமல் சரியாகும். இதனை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம்...

பாஜக மோடியின் அடுத்த ஊழல் அம்பலம்...


மூன்றாவது கண்...


ஒருவனது இரண்டு புருவங்கள் இடையே புரியாத கதவு ஒன்று திறக்க இருக்கிறது என்று நம்முடைய மெய்ஞானிகள் கண்டு பிடித்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியாவில் இதை மூன்றாவது கண் என்று அழைப்பார்கள்.

சாதாரணமாக மனிதனின் இரண்டு கண்களும் வெளியில் தெரியும்.

ஆனால், இந்த மூன்றாவது கண் சரியாக இரண்டு புருவ மத்தியில் உணர்வுமயமாக அமைந்துள்ளது.

அது திறந்தால் உங்களுடைய உள் உலகம் இந்த வெளி உலகம் போல் தெளிவாக உணரப்படும்.

அப்பொழுது நீங்கள் உடலாகவும் இல்லை, மற்றும் மனமாகவும் இல்லை என்பது உங்களுக்கு புரியும்.

முதன் முதலில் நீங்கள் ஒரு சாட்சியாக இருப்பதும் புரியும்.

அதாவது உங்கள் உயிர்த் தன்மை சாட்சியாக இருக்கிறது.

இது உங்களை மனதிற்கு அப்பால், புரியாத, அதற்கு அற்புதமான அதிசயம்மிக்க உலகுக்கு அழைத்து செல்லும்.

அதற்கு பிறகு உங்கள் வாழ்க்கை ஆனந்த மயமானது தான்.

ஆடல், பாடல் நிறைந்தது தான்.

நீங்கள் சுத்த தங்கம் போல ஆனந்த மிகுதியில் ஜொலித்து ததும்பி வழிவீர்கள்.

ஏனெனில், நீங்கள் புதையளிலேயே சிறந்த புதையலை அடைந்திருக்கிறீர்கள்.

இதைத் அறிவுக் கூர்மை படைத்தவர்கள் அனைவரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்...

உடலிலுள்ள கட்டி கரைய...


உணர்தல்...


உணர்தல் என்பது நீங்கள் உங்கள் தன்மையில் இருப்பதை குறிப்பது ஆகும்.

மனிதனை தவிர.. இந்த இயற்கை முழுவதும் யாருக்கும் எந்த வழிபாடுகளுக்கும் அடிமையாக இருப்பது கிடையாது, இருக்க போவதும் இல்லை..

இயற்கை யாரையும் அடிமை படுத்துவதும் கிடையாது, அடிமை படுத்த போவதும் இல்லை..

அவை ஓவ்வொன்றும் அந்த அந்த நாளில் அதன் தன்மையை சரியாக நோக்கி செல்கிறது..

ஆனால் ஓவ்வொரு வழிபாடுகளையும் சற்று கவனியுங்கள் அது எப்படியோ உங்களை உங்கள் இயற்கை தன்மையை அடிமை படுத்தி விடுகிறது..

காரணம்: இந்த சமுதாயம் குழந்தை முதல் உங்களுக்கு போதித்த உணர்வு அவ்வாறு..

ஒரு நிமிடம் சற்று உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் உங்களுக்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கும்..

தனிமனித உணர்வை எப்படியெல்லாம் இந்த சமுதாயம் கட்டமைக்க பட்டுள்ளது என்று தெரியும்..

இயற்கை எதுவுமே கட்டமைக்க படவில்லை அது அதன் இயல்பில் இருக்கிறது இயற்கை முழுவதும்...

இனங்கள்,வழிபாடு,மதங்கள்,ஜாதிகள், சமுதாயம் சொந்தம் பந்தம் இவையெல்லாம் உங்களின் பெயர் மட்டுமே ஆனால் உங்களின் உணர்வு இயற்கை தன்மை  அல்ல அதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்...

உணருங்கள் உங்கள் இருப்பின் மூலம்...

உணர்வுகள் தொடரும்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...