19/10/2020

ஈர்ப்பு விதி இரகசியம்...

 


ஈர்ப்பு என்ற விதி இல்லாமல் இந்த பிரபஞ்சமே இயங்காது...

அதே போல உயிருள்ள, உயிரற்ற, எந்த நிலையாயினும் அங்கே ஈர்ப்பு என்ற தன்மை இருந்து கொண்டே இருக்கின்றது.

ஈர்ப்பு என்பது ஒருவித விசை அந்த ஈர்ப்பு இல்லையேல் இயக்கம் இல்லை, ஜனனம் இல்லை, செயல் இல்லை, அசைவற்ற தன்மை ஆகி போய்விடும்.

படைத்தலுக்கு காரணமான சூட்சமத்தில் இந்த ஈர்ப்பு விசை ஒரு முக்கிய செயலாற்றி வருகிறது.

ஈர்ப்பு என்றால் புவிஈர்ப்பு மட்டுமே நமக்கு தோன்றும், சற்று தீவிரமாக சிந்தித்தால் ஈர்ப்பு பல பரிணாமங்களில் செயலாற்றி வருகிறது.

நகர்வற்ற ஒரு மரம் அதன் மலர், காய், பழம், இலை, இது போன்ற வடிவத்தால், அழகால் நம்மை பிரபஞ்சம் ஈர்க்க வைக்கின்றது.

ஒரு ஆண் ஒரு பெண் மேல் அவளது உடை, அழகு, குணம், போன்றவற்றால் ஈர்க்க படுகிறான்.

இந்த ஈர்ப்பு என்பது இடம், பொருள், இவற்றிற்கு தகுந்தால் போல் நம் உணர்வுகளை ஈர்க்கின்றன.

அவை காமம், காதல், ரசித்தல், ருசித்தல், அடைதல், போன்ற பல்வேறு ஈர்ப்பு தன்மையை நமக்கு ஏற்படுத்த செய்கிறது.

இத்தகைய தானாகவே உருவாகும் ஈர்ப்பை ஏன் உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் அதை உருவாக்கி பயன்படுத்த முயலகூடாது என்பதே எனது கேள்வி.

அதற்கு சாத்தியமா என்றால் ஆம்.. என்றே என்னுடைய பதில் இருக்கும்...

தெலுங்கன் விஜய் சேதுபதி படம் இனி தமிழர்கள் புறந்தள்ளுவார்கள்...

 


பாஜக மோடியின் வேளாண் மசோதா கொண்டு வந்தது கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக தான்...

 


போகர் பூமிக்கு திரும்பி வரும் நாள்...

 


பதினென் சித்தர்களில் ஒருவரும், பழநியில் ஜீவ சமாதியாகி இருப்பவருமான போகநாதர் பூமிக்கு மீண்டும் வருவதாக கூறியிருப்பதாகவும், எத்தகைய சந்தர்ப்பத்தில் அவர் மீண்டும் பூமிக்கு திரும்புவார் என்ற விவரத்தினை கோரக்கர் தனது சந்திரரேகை நூலில் விவரித்திருக்கிறார்.

தடம் பெரிய தாரணியில் கலகம் மெத்த

தட்டாமல் நடந்த்தேறி நரர்களெல்லாம்

இடம்விட்டு இடம்ஏகிப் போரால் மாள்வார்

இயம்பொணாப் பெரும்பஞ்சம் இடருண்டாகும்

திடமிகுந்த தேவபிரம ஆலயங்கள்

தினபூசை குறைந்து அருளின்றிப் போமே

ஆகுமந்த நாளதனில் போக நாதர்

அகில பரதேச வெளி விட்டு நீங்கி

வாகுறவே நமதுபுவி வருவதாக

வாக்களித்துச் சென்றார் அந்தநாள் தனில்

பாகுபெற எனதுரிய சமாதிக் கூடம்

பளபளத்து சோதிலிங்கம் தானாய்த் தோன்றி

நாகுபணசல படதி நவநீதங்கள்

நாட்டமுற்று மனுக்கள் வசமே ஓங்கும்.

- சந்திர ரேகை...

பூமியில் பல இடங்களில் அதிக கலகங்கள் விளைவதுடன், இடம் பெயர்வுகளாலும், போர்களாலும் மக்கள் பெரும் அளவில் மாண்டு போவார்கள், இதனால் பெரும்பஞ்சமும், துன்பங்களும் உண்டாகும்..

கோவில்களில் தினசரி பூசைகள் குறைந்து தெய்வ அருள் குறைவடையும் கால கட்டத்தில் போகநாதர் அகில பரதேச வெளி விட்டு நமது பூமிக்கு வருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்..

தற்போது சூட்சும சரீரத்தில் வாழும் போக நாதர் ஸ்தூல தேகமான மனித உருவில் பூமிக்கு வரும் அந்த நாளில் எனது சமாதி (கோரக்கர் சமாதி) பளபளத்து சோதிலிங்கம் ஒன்று தானாகத் வெளித் தோன்றும்..

அதன் பின்னர் அனைத்தும் மக்கள் வசமாகும் என்றும், அதன் பின்னர் மக்கள் செல்வச் செழிப்போடு நலமாக வாழ்வர் என்கிறார்.

இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

ஆனால் கோரக்கரின் இந்த நூல் நம்மை ஆச்சர்யங்களில் விளிம்பில் நிறுத்துகிறது என்பது மட்டும் உண்மை.

இந்த நூல் முழுமையாகக் கிடைக்கும் பட்சத்தில் மேலும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்..

கோரக்கர் மட்டுமல்லாது அகத்தியர், நந்திதேவர், சிவனேந்திர மாமுனிவர், வீரப்பிரமேந்திர சுவாமிகள் போன்றோரும் இம்மாதிரியான் எதிர் கூறல்களை கூறியுள்ளதாகக் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன...

தமிழின துரோகி G.K. வாசன் கலாட்டா...

 


ஆதார் எனும் டூபாக்கூர்...

 


தமிழா சிந்தித்துப் பார்...

 


மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பிறகும் அதன் அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் இல்லாத சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கி தமிழர்களின் வேலை வாய்ப்பினை தட்டிப் பறிப்பது அயோக்கியத்தனம் இல்லையா?

இதனை என்றாவது முற்போக்கு பிற்போக்கு முகமூடிகள் தட்டிக் கேட்டது உண்டா?

பாசிட்டிவ் எனர்ஜி...

 


உலகம் முழுமைக்கும் ஆக்க சக்திகளாக இருப்பவற்றை பாசிட்டிவ் எனர்ஜி என்கிறோம். ’நீங்க நல்லா இருக்கணும், வாழ்க வளமுடன்’ போன்ற வாழ்த்துச் சொற்கள் பலவும் பாசிட்டிவ் எனர்ஜியை சேர்ந்தவை.

வங்கி வாசலில் பேனா இல்லாமல் தவித்தும்போது உதவியவரிடம் புன்முறுவலிடம் நன்றி என சொல்வது, சாலையில் நடப்பட்ட மரத்திற்கு ஒருவாளித் தண்ணீர் ஊற்றுவது போன்ற பலவும் பாசிட்டிவ் எனர்ஜியை வெளிப்படுத்தும் செயல்கள் தான். நற்செயல்களின் மூலாதாரம், பாசிட்டிவ் எனர்ஜி. அது ஒன்றின் வளர்ச்சியை கூட்டும். அவ்வளர்ச்சியை பாதுகாக்கும்.

பாசிட்டிவ் எனர்ஜியின் பகையாளிதான் நெகட்டிவ் எனர்ஜி. ’அவன் அழியணும், அந்த குடும்பம் அழியணும், அவன் வீட்டு மாடு சாகணும், விவசாயம் பொய்க்கணும், பிசினஸ் நொடிக்கணும்’ போன்ற வசவு உணர்வுகள் நெகட்டிவ் எனர்ஜியை சேர்ந்தது. ஒன்றின் அழிவை, ஒருவரின் துயரத்தை நேசிக்கக்கூடியது. தீய நிகழ்வுகளின் தூண்டுகோலாக இருப்பது நெகட்டிவ் எனர்ஜி. இத்தகைய இரண்டு எனர்ஜிகளின் பிறப்பிடம், வாழ்விடம் எது? மனிதனின் சிந்தனை அறைதான்.

இரு சக்திகளும் ஒரே அறையில்தான் வித்தாக விழ்கிறது. அதில் எந்த விதை செடியாகும், எந்த விதை மரமாகும் என்பது அம்மனிதனுக்குக் கிடைக்கிற சூழ்நிலையே முதலில் முடிவு செய்கிறது.

மனிதன் தனக்குக் கிடைக்கிற சூழ்நிலையால் சிந்தனைகளைப் பெறுகிறான். இயல்பாகவே நல்ல சூழ்நிலையை பெறுகிறவன் பாக்கியசாலிதான். அவனுக்கு நற்சிந்தனை, நல்ல செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு எளிதில் கிட்டிவிடும். சமூகம் ’நல்லவர்’ என்ற பட்டியலில் சீக்கிரமே இணைத்துக் கொள்ளும்.

இவர், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, பொறுமை, சகிப்புத்தன்மை, மற்றவரை வாழ்த்தும் உணர்வு போன்ற பண்புகளால் கட்டமைக்கப்படுவார். இவரிடம் நெகட்டிவ் எனர்ஜி அடங்கிக் கிடக்கும். இவரது ஆளுமையில் மற்றவர்கள் கட்டுண்டு போவர். எதிர்பாராதவிதமாக நல்ல சூழ்நிலைகள் இவரை விட்டு விலகினாலோ, மாறினாலோ எனர்ஜியும் மாற்றம் அடையும். நெகட்டிவ் எனர்ஜி ஆளுமை செய்ய முற்படும். எனினும் அவரது நற்சிந்தனை அனுபவத்தால் அது நிரந்தரமாகி விடாமல் பாசிட்டிவ் எனர்ஜியை நோக்கி உடனுக்குடன் மீண்டு கொள்வார்.

கடலில் எவ்வாறு ஒவ்வொரு நாளும் நீர் தளும்பலில் உள்வாங்குதல், வெளி தள்ளுதல் ஏற்படுகிறதோ, அப்படி ஒரு நிகழ்வு போல மனிதனின் மன நிலையில் இத்தகைய ஏற்ற இறக்கங்களை சூழ்நிலைகள் நாளொரு பொழுதும் உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

இயல்பிலேயே நல்ல சூழ்நிலை, குடும்பநிலை அமையாதவர்கள், சூழ்நிலையின் பாதிப்பால் வாழ்வில் தன்னம்பிக்கை இழந்து, விரக்தி நிறைந்து, பயம், கோபம் மிகுந்து. மற்றவர்களை ஏக்கத்தோடும், பொறாமையோடும் காண்பவர்களாகவும், தன்னையே தனக்குள் தாழ்த்தி கொண்டும் வாழ்வர். இவரிடம் எளிதில் நெகட்டிவ் எனர்ஜி வெற்றி கொள்ளும். ஆளுமை செய்யும். பாசிட்டிவ் எனர்ஜி அடங்கிக் கிடக்கும். எதிர்பாராதவிதமாக தீய சூழ்நிலைகள் இவரை விட்டு விலகினாலோ, மாறினாலோ எனர்ஜியும் மாற்றமடையும். அடங்கிக் கிடந்த பாசிட்டிவ் எனர்ஜி துளிர்க்கும். எனினும் அது நிரந்தரமாக வளர்ந்து விடாமல் அதுநாள் வரை ஆதிக்கம் செய்த நெகட்டிவ் எனர்ஜி கண்காணிக்கும். ஒவ்வொரு நாளும் இந்த எனர்ஜி மாற்றம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

பலமுறை நிகழும் இத்தகைய மாற்றங்களில் அதிகமாக எந்த எனர்ஜி அவரை வழி நடத்துகிறதோ அதன் பலன்களை, பாதிப்புகளை அவரது வாழ்விலும், அவரைச் சேர்ந்தவர்கள் வாழ்விலும் எதிரொலிக்கும். உதாரணமாக பாசிட்டிவ் எனர்ஜி மிகுந்த ஒருவரை டிராஃபிக்கில் கெட்ட வார்த்தையால் ஒருவன் திட்டி விடுகிறான் என வைத்துக்கொள்வோம். திட்டியவனைத் திரும்ப மோசமான கெட்ட வார்த்தையால் திட்ட வேண்டும் என தோன்றும். முடியாது. அப்போது மனதில் நெகட்டிவ் எனர்ஜி எழும். திட்டியவன் மீது பாய வேண்டிய நெகட்டிவ் எனர்ஜி சம்மந்தமே இல்லாமல் அலுவலகத்தில் பணி செய்யும் எளிய ஊழியரின் சிறு தவறைச் சுட்டிக்காட்டி அவர் மீது பாய்ந்து விடும். அவர் என்ன செய்வார் அவருக்குச் சாதகமான இடத்தில் வெளியிடுவார். இப்படியாக இது பரவும்.

ஆக உள்வாங்கப்படும் எனர்ஜியைப் பொறுத்து சார்ந்தவர்களையும் பாதிக்கும், அல்லது பலனளிக்கும்.

மனிதர்கள் தங்களுக்குள் எழுப்பிக்கொள்ளும் எனர்ஜிகளில் ஒவ்வொரு நாளும் எந்த சக்தியின் ஆதிக்கம் அதிகரிக்கிறதோ, அதற்கான விளைவுகளை அவர் சார்ந்துள்ள சமூகமும், இந்த உலகமும் சந்திக்கிறது.

இத்தகைய பலப் பரிட்சை, அதனால் எழும் விளைவுகளால்தான் இந்த உலகம் பல ஆயிரம் ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த மனிதகுலம் அனைத்திற்கும் முழுமையாகவும், முழுநேரமும் பாசிட்டிவ் எனர்ஜி சூழ்ந்திருக்க உத்தேசித்தே மதங்களின் உபதேசங்கள், வழி நடத்தைகள் அமைந்திருக்கின்றன. உலகில் மதங்கள் அனைத்துமே நற்சிந்தனைகள், நற்செயல்களை வழிமொழிகின்றன.

நான் எப்போதோ படித்த நிகழ்வு ஒன்றை இங்கே நினைப்படுத்துகிறேன். ’மகிழ்ச்சியை விதைப்பவர்’ என்ற பெயரில் அதைப் படித்த நினைவு. ஒருவர் தினமும் காலையில் பத்து ரூபாய்க்கு ஒரு ரூபா நாணயங்களாக மாற்றிக்கொண்டு நடைப்பயிற்சிக்குச் செல்வாராம். செல்லும்போது வேண்டுமென்றே அங்கொன்றும், இங்கொன்றுமாக நாணயங்களை வேண்டுமென கிழே போட்டு வைப்பாராம். காலையில் அதைக் கண்டெடுக்கும் பிற மனிதர்கள் ’இன்று அதிஷ்ட நாள்’ என சிறு மகிழ்ச்சிக்கு உள்ளாவர் இல்லையா? அதற்காகத்தான் அப்படிச் செய்வாராம். ஏனெனில் அம்மகிழ்ச்சி அலைகள் சமூகத்திற்குத்தானே திரும்பவும் கிடைக்கும். அதற்காக அப்படி நடந்துகொள்வாராம் அம்மனிதர்.

சூழ்நிலை தான் ஒரு மனிதனுக்கு சிந்தனைத் தருகிறது. அச்சிந்தனையே அவனிடமிருந்து சொல்லாக வெளிவருகிறது. அச்சொல்லே அவனது செயலாகிறது. தொடர்ச்சியான செயலே பண்பாகிறது. அப்பண்பே அம்மனிதன் மரபணுவில் பதிவு பெறுகிறது. அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.

எனவே வாழும் வீட்டில் சமூகத்தில், நாட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை பரவ விடுங்கள். அதை உருவாக்குங்கள். உங்களுக்கும் சமூகம் பாசிட்டிவ் எனர்ஜியையே திரும்ப வழங்கும்...

ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கியதால் திமுகவின் மூத்த நிர்வாகி பொன்முடி மகனும் கள்ளக்குறிச்சி எம்.பியுமான கவுதம் சிகாமணியின் 8.6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்...

 


அடுத்த திட்டம்... அதான் கத்தி இருக்கா...

 


ஆன்மீக வாழ்வு...

 


காலகாலமாக உலகெங்கிலும் உள்ள மக்கள் யாவரும் தமக்கு பிரியமான வழியில் இறைவழிபாடு செய்து வருகின்றனர்.

இங்கு நான் உங்களுடன் பகிரவிருப்பது இந்து சமய தெய்வ வழிபாட்டு முறை பற்றி..

இந்து சமயம் பல நூற்றாண்டுகள் கடந்தும் உயிர்ப்புடன் இருந்து வருகின்றது.

அவ்வப்போது அது தன் வீரியத்தை இழக்கும் போதும், வேற்று சமயத்தவரால் தொல்லைகள் வந்த போதும் அதனை எதிர்கொண்டு மீண்டு வந்த வண்ணம் இருக்கிறது.

மற்ற எந்த சமயத்தைக் காட்டிலும் பல்லாயிரம் ஞானியரை, சித்தமஹா புருஷர்களையும், இறை அவதாரங்களையும் காலந்தோறும் தொடர்ந்து தோற்று விக்கும் இறை கற்பகவிருட்சம் இந்து தர்மம்.

ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், ஞானியர் இவர்களே இறைவன் எனும் கடலில் சிறிதேனும் நீந்தியவர்கள் அந்த கடல் நீரை பருகியவர்கள்.

நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் அந்த கடலை தள்ளி நின்று வேடிக்கை பார்த்து ஆச்சர்யப்பட்டு நிற்பவர்கள்.

நமது ஞானப் பெருமக்கள் அவர்கள் கண்ட ஆன்மா அனுபவத்தை நாமும் காண வழிவகைகளைக் கூறிச் சென்றுள்ளார்கள்.

அதை வைராக்யத்துடன் தொடர்ந்து அப்யாசித்தால் நாமும் இறைவனை  அடையலாம்.

ரிஷி என்ற வார்த்தையின் பொருள் மந்திர த்ரஷ்டா அதாவது மந்திரங்களை நேரில் கண்டவர்கள் என்று அர்த்தம்.

மந்திரங்கள் பிரபஞ்சத்தில் காலாகாலத்திற்கும் சாஸ்வதமாக இருப்பவை.

ரிஷிகளும் சித்தர்களும் தமது மனம் கடந்த நிலையில் இறைக் கருணையால் அதை உணர்ந்தவர்கள்.

எந்த மனிதனும் யாருக்கும் பணிந்து வாழ ஆசைப்படுவதில்லை அடிமையும் கூட..

அப்படியிருக்க நாம் சிறுவயது முதலே இறைவழிபாடு செய்து வருகிறோம்.

இத்தனை வருட பக்தியில் ஏதேனும் சொல்லிக் கொள்ளத்தக்க இறையனுபவம் நமக்கு உண்டா  என்று நமக்கு நாமே கேள்வி கேட்டுக் கொண்டால் வெட்கமின்றி சொல்வதானால் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.

வெறுமனே வேண்டுதல்கள் பலிப்பதும், செல்வமும் மட்டும் இறைவழிபாட்டின் பயன்களல்ல.

படைப்புகளில் எல்லா  ஜீவராசியின் வாழ்க்கையும் ஒரு கட்டுப்பாட்டிற்குட்பட்டது.

ஆனால் மனிதன் மட்டும் அதற்கு விதிவிலக்காக சிறிது அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டவன்.

ஏனென்றால் எந்த மரமும், விலங்கும், பறவையும் இன்ன பிறவும் விரும்பினால் வேறொன்றாக மாறச் சுதந்திரம் அற்றவை.

மனிதன் மட்டுமே நல்லவன், கெட்டவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், யோகி, ஞானி, மகான் என தான் விரும்பியபடி வாழவும், விரும்பிய யாவையும் முயற்சியால் அடையவும்  வல்லவன்.

அந்த சாய்ஸ் உடன் படைக்கப்பட்ட நாம் என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம் கடவுளாய் கூட..

இன்று நாம் வழிபட்டு வரும் பல தெய்வங்கள் மனிதர்களாய்ப் பிறந்து பின் உயர்ந்த நிலை அடைந்தவர்கள் தான்..

அது குறித்து பின்னர் விரிவாய் காண்போம்...

பிராடு பய மராட்டிய ரஜினி கலாட்டா...

 


பாஜக மோடியின் சாதனைகள்...

 


கண்டங்கத்திரியின் சிறப்பைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாமா?

 


கண்டங்கத்திரியும் அதன் மருத்துவ குணமும்..

கண்டங்கத்திரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு.

சித்த மருந்துகளில் புகழ் பெற்ற மருந்து 'தசமூலம்' என்பதாகும். இது பத்து மூலிகைகளின் வேர்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த பத்து வகை மூலிகைகளில் கண்டங்கத்திரியும் ஒன்றாகும்.

மருத்துவ பயன்கள்: கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாகக் காய்ச்சி வடித்துக்கொள்ள வேண்டும்.

இதனை உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசிவர நாற்றம் நீங்கும். கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து பக்குவமாகக் காய்ச்சி வடித்து தலைவலி, கீல்வாதம் முதலிய வாத நோய்களுக்கு பூசி வர அவை நீங்கும்.

காலில் ஏற்படுகின்ற வெடிப்புகளுக்கு இதன் இலையை இடித்து எடுத்து சாற்றுடன் ஆளிவிதை எண்ணெய் சமஅளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசிவர மறையும்.

கண்டங்கத்திரி பூவை சேகரித்து வாதுமை நெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி மூலநோய்க்கு பூசிவர நன்மை தரும்.

கண்டங்கத்திரி காயை சமைத்து உண்டுவர நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றும், பசியைத் தூண்டும். கழிச்சலை உண்டாக்கும்.

வெண் குட்டத்திற்கு இதன் பழம் சிறந்த மருந்தாகும்.

கண்டங்கத்திரி பழங்களை பறித்து சட்டியிலிட்டு நீர்விட்டு வேக வைத்து கடைந்து வடிகட்டிக் கொண்டு நான்கு பங்கெடுத்துக் கொண்டு அத்துடன் ஒரு பங்கு நீரடி முத்து எண்ணெய் சேர்த்து காய்ச்சி பக்குவத்தில் வடித்து வெண்குட்டம் உள்ள இடங்களில் பூசி வர வெண்புள்ளிகள் மறையும்.

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம்.

பல் வலிக்கும், பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும் கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும்.

இதன் பழத்தையும் உலர்த்தி பொடித்து நெருப்பில் போட புகை வரும். இதனாலும் பல் வலி, பல்லிலுள்ள கிருமிகள் நீங்கும்...

மருத்துவமனைகளே முக்கியம்...

 


மீண்டும் பேனர் கலாச்சாரத்தில் அதிமுக...

 


ஒரு காலத்தில் எப்போதும் 40 முதல் 50 நண்பர்கள் என் கூட இருப்பார்கள்...

 


ஆனால் கடந்த சில காலங்களாக ஒரு சிலரை தவிர மற்றவர்களை காணவில்லை...

அனைவரையும் மீண்டும் ஒன்றாக காண முடியுமா என்று கூட தெரியவில்லை...

தனி தனியாக தான் ஒவ்வொருத்தரை காணவே முடிகிறது...

அய்யோக்கிய பயலுங்க...

கல்யாணம் பண்ணாதீங்கடா பிரிஞ்சிடுவீங்கனு சொன்னேன்...

கேட்டீங்களடா... 😁😁😁

ஞாயிற்றுக்கிழமை வந்தா ஒரு கிரிக்கெட்  மெட்ச் போட்டு... ஊர் சண்டை எல்லாம் போட்டு ஏரியாவில் எவ்வளவு பெரிய மாஸா இருந்தோம்....

இப்போ பொண்டாட்டி திட்டு வா... 

பொண்டாட்டி அடிக்கிறானு.. 

ஊட்டுக்குள்ளேயே இருக்கீங்களேடா...

அதிமுகவின் வரலாறு குறித்து இணையத்தில் வைரல் ஆகும் கார்ட்டூன்...

 


தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமானது எப்படி?

 


பஞ்சவன் மாதேவி கோவில். பட்டீஸ்வரம். கும்பக்கோணம்...

 


ஷாஜகானின் 7 மனைவியில் 4வது மனைவிக்கு கட்டிய மண்டபத்தை விட சோழ மன்னவனின் ஒரே தாய்க்கு கட்டிய கோவில் இது...

பளிங்குக் கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமா?

ஐயா "பஞ்சவன் மாதேவி" பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்.... வழி.... என்று இழுத்ததும், அந்த பேர்ல இங்க எந்த கோயிலும் இல்லீங்களே, "ராமசாமி கோயில்” தான் ஒன்னு இருக்கு, அந்த கோயிலும் பூட்டியே தான் கெடக்கும், அங்க போகும் போது அந்த தெருவுல ஒரு பெரியவர் இருப்பாரு அவர கூட்டிட்டு போங்க அவர் தான் அந்த கோயில பாத்துக்குறாரு என்று வழிகாட்டினார் அந்த பெரியவர்.

பள்ளிப்படை கோயில் தான் இன்று பெயர் மாறி ராமசாமி கோயிலாகியுள்ளது.

உலகப் புகழ் பெற்று இருக்க வேண்டிய இடம், வழி கேட்டு செல்லும் நிலையில் உள்ளது.

பட்டீஸ்வரம். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம்.

இந்த ஊரின் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும், இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை நகரான "பழையாறை" செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மசூதி, அப்படியே இன்னும் நடந்தால் ஒரு சிமெண்ட் சாலை பிரிவு, அங்கே தான் பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரம் வருட அற்புதம்...

தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் மனைவி தான் இந்த "பஞ்சவன் மாதேவி" , தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த சிற்றன்னையின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான் கங்கை முதல் கடாரம் வரை வென்ற "ராஜேந்திர சோழன்".

உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும், அதுவும் அதை ஒரு தமிழ் மன்னன் கட்டியிருக்கிறான் என்பது நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம்.

தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவளின் நினைவாக எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை இந்த உலகமே கொண்டாடுகிறது, தாஜ் மஹாலை நான் குறை கூற வில்லை அதுவும் பாசத்தின் வெளிப்பாடு தான்.

ஆனால் தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா?

குறைந்த பட்சம் எத்தனை தமிழர்களுக்கு தெரியும்?

பளிங்குக்கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமாக கணக்கிடப்படுமா? வேதனை.

இந்த பட்டீஸ்வரத்தின்அருகில் தான் சோழர்களின் மாளிகை இருந்தது, ராஜ ராஜன் தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தன் கடைசி காலத்தை இங்கு தான் கழித்தார், தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்காமல் அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இன்றைக்கும் அந்த ஊரின் பெயர் "சோழன் மாளிகை". கேட்பாரற்று இடிந்து கிடந்த இந்த கோயிலை சில வருடங்களுக்கு முன் தான் புதுப்பித்து இருக்கிறார்கள்.

பஞ்சவன்மாதேவி எப்பேர்பட்ட சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த பெண்மணியாக இருந்தால் தன் அன்னை அல்லாத ஒரு பெண்ணுக்கு பள்ளிப்படை அமைத்து இருப்பார் ராஜேந்திர சோழர்.

தனது சிற்றன்னையின் மேல் எத்தனை அன்பு இருந்தால் இந்த எண்ணம் அவருக்கு தோன்றி இருக்கும்.

இது இந்த மண்ணில் வாழ்ந்த மகத்தான பெண்ணின் நினைவிடம் மட்டும் அல்ல, உண்மையான தாய் பாசத்தால் தனயன் எழுப்பிய புனித தளம்.

உங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்த புண்ணியவதி தரிசித்து விட்டு வாருங்கள், அப்படியே தனயன் ராஜேந்திர சோழனையும் நினைவு கூறுங்கள்...

நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவிலுமா ஊழல்?

 


பாஜக மோடியும் நீட் தேர்வு சதிகளும்...

 


மாண்டியாவும் தமிழும் மாலியமும்...

 


தற்போதைய கர்நாடகாவில் உள்ள மாண்டியாவுக்கும் தமிழுக்கும் தொடர்பில்லை என்பவர்கள்..

அங்கே பாண்டவபுரம் வட்டத்தில் "மேல்கோட்டை" எனும் ஊரில் உள்ள "செல்லப்பிள்ளை" கோவிலில் இராமானுசரால் ஏற்படுத்தப்பட்டு தாழ்த்தப்பட்டிருந்த மக்களை (தமிழரை) சிறப்பு செய்யும் வகையில் இன்றுவரைக்கும் கூட நடைபெறும்  'திருக்குலத்தார்' விழாவைப் பற்றி அறிந்துகொண்டு பிறகு சிந்திக்கவும்.

(இன்று கன்னடத்தில் மேல்கோட்டை மேலுகோட்டே ஆகி,

செல்லப்பிள்ளை செலுவநாராயணா ஆகி,

சமஸ்கிருதத்தை வளர்க்கும் நிறுவனங்கள் வந்துவிட்டன.)

அதே போல தெலுங்கனான குலோத்துங்கன் சோழநாட்டு அரியணையில் ஏறியபிறகு தில்லை நடவரசர் (நடராஜர்) கோயிலில் இருந்த கோவிந்தபெருமாள் சிலையை கடலில் தூக்கிப்போட்டு (தசாவதாரம் திரைப்படத்தில் கூட வரும்) வைணவ பூசாரிகளை விரட்டியடித்த போது அந்த தமிழ்ப் பார்ப்பனர்கள் இராமானுசரின் செல்வாக்கு நிறைந்திருந்த தமிழ் மண்ணின் வடமேற்கு பகுதிகளுக்கு (தற்போதைய தென்கன்னட பகுதிகளுக்கு) குடிபுகுந்தனர்.

அவர்கள் இன்றும் தமிழராகத்தான் வாழ்கின்றனர்.

பிறகு நாயக்கராட்சி வைணவத்தைக் கையிலெடுத்தபடி விந்தியம் முதல் குமரிவரை பரவியது.

இதனால் வடதமிழகத்தின் வைணவ தலங்கள் தெலுங்கர் கைக்குப் போயின.

ஆனால் தமிழ் வழிபாட்டு  முறைகள் இன்றும் எஞ்சியுள்ளன.

ஆனால் தமிழகத்தில் நாயக்கராட்சியை கடுமையாக கடைசிவரை எதிர்த்தவர்கள் சைவர்கள் என்று நினைக்க வேண்டாம்.

நாயக்கர்களை எதிர்த்து இறுதிவரை தமிழ் வழிபாட்டிற்காகப் போராடியவர்கள் தமிழினத்தின் பூர்வகுடிகளான முன்குடுமி பார்ப்பனர்கள்.

அதாவது வைணவ பார்ப்பனர்கள். அதிலும் குறிப்பாக தென்கலை வைணவர்கள்.

ஆக சிவனியம் (சைவம்), மாலியம் (வைணவம்) ஆகியனவும் தமிழர் மதங்களே.

ஒரு காலத்தில் சிவனியம் தமிழுக்காகப் போராடியது.

பிரிதொரு காலத்தில் மாலியம் தமிழைக் காக்கப் போராடியது.

மதம் எதுவாயிருந்தாலும் ஆளும் இனம் எது என்பது தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது...

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் அவசியம் தானா?

 


கற்பழிப்பு முதல் ஈவ் டீசிங் குற்றவாளிகளுக்கான கட்சி பாஜக...

 


தியாகிகள் ஓய்வூதியம் கோரி 99 வயது முதியவரை, நீதிமன்றத்தை நாடச் செய்த. செயலற்ற தன்மைக்காக வெட்கப்பட வேண்டும்... அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்...

 


தனது இறுதி மூச்சுக்கு முன் சுதந்திரப் போராட்ட வீரர் என அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்.

தியாகிகள் ஓய்வூதியம் வழங்க கோரி சுதந்திர போராட்ட தியாகி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

பாஜக மோடியின் நீட் பித்தலாட்டம் 😒

 


அதிமுக அமைச்சர்களின் ரிப்போர்ட் கார்டு - ஜெயக்குமார்...

 


ஆவாரம் பூ பற்றி தெரிந்துக் கொள்ளலாமா?

 

ஆவாரம் பூ சர்க்கரை நோய்க்கு அருமருந்து...

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ.. என்ற மருத்துவப் பழமொழி உண்டு..

ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது.

இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு.

அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மண்கலயத்தில் போட்டு அரைப்படி நீர் விட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேளை 1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்துவர மேக ஓட்டம் , ரத்த மூத்திரம், பெரும் தாகம் ஆகியவை குணமாகும்.

பூச்சூரண்த்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன்படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.

மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான். நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும். இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்...