19/10/2020

ஈர்ப்பு விதி இரகசியம்...

 


ஈர்ப்பு என்ற விதி இல்லாமல் இந்த பிரபஞ்சமே இயங்காது...

அதே போல உயிருள்ள, உயிரற்ற, எந்த நிலையாயினும் அங்கே ஈர்ப்பு என்ற தன்மை இருந்து கொண்டே இருக்கின்றது.

ஈர்ப்பு என்பது ஒருவித விசை அந்த ஈர்ப்பு இல்லையேல் இயக்கம் இல்லை, ஜனனம் இல்லை, செயல் இல்லை, அசைவற்ற தன்மை ஆகி போய்விடும்.

படைத்தலுக்கு காரணமான சூட்சமத்தில் இந்த ஈர்ப்பு விசை ஒரு முக்கிய செயலாற்றி வருகிறது.

ஈர்ப்பு என்றால் புவிஈர்ப்பு மட்டுமே நமக்கு தோன்றும், சற்று தீவிரமாக சிந்தித்தால் ஈர்ப்பு பல பரிணாமங்களில் செயலாற்றி வருகிறது.

நகர்வற்ற ஒரு மரம் அதன் மலர், காய், பழம், இலை, இது போன்ற வடிவத்தால், அழகால் நம்மை பிரபஞ்சம் ஈர்க்க வைக்கின்றது.

ஒரு ஆண் ஒரு பெண் மேல் அவளது உடை, அழகு, குணம், போன்றவற்றால் ஈர்க்க படுகிறான்.

இந்த ஈர்ப்பு என்பது இடம், பொருள், இவற்றிற்கு தகுந்தால் போல் நம் உணர்வுகளை ஈர்க்கின்றன.

அவை காமம், காதல், ரசித்தல், ருசித்தல், அடைதல், போன்ற பல்வேறு ஈர்ப்பு தன்மையை நமக்கு ஏற்படுத்த செய்கிறது.

இத்தகைய தானாகவே உருவாகும் ஈர்ப்பை ஏன் உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் அதை உருவாக்கி பயன்படுத்த முயலகூடாது என்பதே எனது கேள்வி.

அதற்கு சாத்தியமா என்றால் ஆம்.. என்றே என்னுடைய பதில் இருக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.