30/03/2018

இதோ அடுத்த போராட்டம் தொடங்கியது...



ஸ்டெர்லைட்.ஐ தொடர்ந்து தூத்துக்குடி dcw ரசாயன தொழிற்சாலை...

திருச்செந்தூா் அருகில் ஆறுமுகநோியில், ஆசியாவிலேயே இரண்டாவது பொிய (ஆசிட்) ரசாயன நிறுவனமான (DCW) தாரங்கதாரா செயல்பட்டுவருகிறது,.



இதன் ரசாயன கழிவுகளை மேற்படி நிறுவனம் 30 க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் நிலத்தில் தோட்டம் அமைத்து அவற்றில் தேக்கி வருகிறது...

இதன் விளைவு, சுற்றுபுற கிராமங்களில், குடிதண்ணீா், வீட்டு உபயோகம் மற்றும் விவசாயத்திற்கு எங்கு கிணறு தோண்டினாலும் மேற்படி ரசாயனம் இலவசமாக பொங்கி வருகிறது,.



மேற்படி நிறுவனத்தின் சட்ட விரோத ரசாயன தொட்டங்களை, தடைகளை தாண்டி கிராமத்தாா்களின் உதவியோடு நோில் சென்று பாா்வையிட்ட போது எடுத்த படம்...

கன்னட கமல் தமிழனை திசை திருப்பி அழிக்க உருவாக்கப்பட்டவன்.. விழித்துக்கொள் தமிழா...


அப்படியே செத்துடுங்கடா...


சாதி இருக்கா.? இல்லையா.?


கொடுக்கப்பட்ட சலுகைகளை சரியாக பயன்படுத்தினால்.. மிகப்பெரிய உயரத்தை அடையலாம் என்று.. எந்த அரசியல்வாதியும் தன்னை நம்பும் தொண்டனுக்கு அறிவுறுத்துவதே இல்லை..

ஏன்னா அவனுக்கு அறிவே இல்லை.  அறிவு இருக்கிறத வெளியில காட்டினானா பொழப்பு போயிடும்.. அதனால அவன் உண்மையைப் பேசவே மாட்டான்.

படிக்கறப்பசங்கள பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி..
தாழ்த்தப்பட்டோர் மாணவர் விடுதி..

என்று பிரித்ததில் தான் தமிழகத்தின் சாதி அரசியலே அடங்கியிருக்கு..

சாதி இல்லாமல் எல்லோரும் வாழ முடியும்..

ஆனால் அரசியல் ஒரு நாள் கூட வாழாது..

எப்ப ஒரு கட்சி சிறுபான்மையினர் அணி,
தாழ்த்தப்பட்டோர் அணியினு மக்களைப் பிரிக்குதோ..

அப்பவே நீங்க உணர்ந்திருக்கனும் அரசியல் மக்களை ஒற்றமையா இருக்க விடாதுனு.

யானையெனும் மக்கள் பலத்தை
பொம்பள என்னும் அங்குசத்தக் காட்டியே
தலைவன் எனும் பாகன் ஏமாற்றி வருகிறான்.

பாகனை அடிச்சி விரட்டுங்க.. அப்பறம் அங்குசத்திற்கு வேலையே இருக்காது...

பாஜக வில் உள்ளவர்களை எல்லாம் அடித்து விரட்டுங்கள்.. தனிமை படுத்துங்கள்... தமிழகத்திற்கு விடிவு வரும்...


எது வளர்ச்சி? உன்னால் ஆறுபது ஆண்டு காலம் நோய் இல்லாமல் வாழ முடியுமா...


அமானுஷ்யம் - இறந்தவர்களை மீண்டும் தோண்டியெடுத்து 3 ஆண்டுக்கு ஒருமுறை மேக்கப் போடும் திகில் சடங்கு...


டொராஜன் என்ற் அழைக்கப்படும் இந்தோனேஷிய சுலாவெசி பகுதி மலைவாழ் மக்களிடம் ஒரு வித்தியாசமான சடங்கு உள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் குடும்பத்தின் இறந்தவர்களின் சடலங்களை தோண்டி எடுத்து அவற்றிற்கு மேக்கப் போட்டு மரியாதை செலுத்தும் விநோத பண்டிகை ஒன்றை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.


இந்த மக்களுக்கு இந்தப் பண்டிகைதான் மிக முக்கியமான பண்டிகை ஆகும். தங்கள் இனத்தின் முன்னோர்களின் ஆன்மா தங்களுடன் வாழ்வதாகவும், மனித வாழ்வில் மரணம் ஒரு முடிவல்ல என்றும் அவர்கள் நம்புவதால் இந்தப் பண்டிகையை கொண்டாடுவதாக தெரிவிக்கின்றனர்.

இவர்கள் தங்கள் குடும்பத்துக்கு உள்ளேயே திருமணம் செய்து கொள்வதாலும், வெளியூர் போய் அங்கே இறந்து போனால் தனது உடல் இச்சடங்கை தவற விட்டு விடக்கூடும் என்பதாலும் அவர்கள் அந்தப் பகுதியைவிட்டு எங்கும் வெளியேறுவதில்லை.


இக்காரணங்களால் இப்படி ஒரு இன மக்கள் இந்தோனேஷியாவில் வாழ்வதே கடந்த 46 ஆண்டுகளுக்கு முன் வரை யாருக்கும் தெரியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

1970-இல் அங்கு வந்த டச்சு கிறிஸ்தவ மிஷனரிகளே இவர்களின் இருப்பை கண்டறிந்து உலகம் அறிய செய்தது...

பாஜக வில் இருப்பவர்கள் அனைவருமே தமிழின துரோகிகள் தான்...


பெரியார் - அம்பேத்கர்.. ரெண்டு பேருமே வடுகனுங்க...


பெரியார் கன்னட தெலுங்கு நாயக்கர்...

அம்பேத்கர் உயர்ந்த சாதி ராவ்...

பெரியார் திராவிடன்னு  சொல்லி ஒரு மாநிலத்தை ஏமாற்றினான்..

அம்பேத்கர் தலித்துன்னு சொல்லி ஒட்டுமொத்த இந்தியாவையே ஏமாற்றினான்..

பெரியார் இன்டர்னல் பிராடு..
அம்பேத்கர் இண்டெர்நேஷனல் பிராடு..

போங்கடா ஐய்யோக்கிய பயலுங்களா...

ஸ்டெர்லைட்டுக்குக் கண்டனக் குரல்.. காவிரிக்குக் கறுப்புச் சட்டை...


காவிரியில் இந்திய அரசு நமக்குப் பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பதன் மூலம் அது நடுநிலை தவறிவிட்டது. இதை நாம் கண்டிப்பதன் அடையாளமாக ஸ்டெர்லைட் கண்டனக் குரலுக்குக் *கறுப்புச் சட்டை* அணிந்து வருவோம்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராகக் கண்டனக் குரல்...

இயற்கை காக்க மட்டுமல்ல மக்கள் உயிர் காக்கவும் ஸ்டெர்லைட்டை விரட்டியடிப்போம்... என குரல் கொடுக்க வாருங்கள்.. வரும்போது காவிரி உரிமைக்காக் *கறுப்புச் சட்டை* அணிந்து வர கேட்கிறோம்.

நீங்கள் நான் நம் பிள்ளைகளின் நோயற்ற அச்சமற்ற எதிர்காலத்திற்காக நாம் ஒன்றுபட்டே ஆக வேண்டும்..

மார்ச் 30, வெள்ளி மாலை 3 மணி, கே.கே.சாலை, சோழிங்கநல்லூர் சந்திப்பு, சென்னை...

ஸ்டெர்லைட் எதிர் தமிழ்நாடு...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


JIO SIM Card வைத்திருபவர்கள் உடனடியாக அதை புறக்கணிக்கவும்...


ஏனெனில் Aircel & Airtel &  Vodafone என அனைத்தும் நாம்  இழந்தால்.. பின்பு மோடியின் கார்பரேட் நிறுவனமான அம்பானியின் JIO.

இது வைப்பதே கால்ரேட் , தகவல் , வலைதளசேவை என அனைத்திலும் விலை நிர்ணயிக்கும்.

இதற்கும் மேலாக  தேர்தல் நேரம் , சமூக பிரச்சினைகள். என வரும் போது  jio தனது சேவைகளை முடக்கும்.
 
சிந்தித்து முடிவெடுங்கள் உடனடியாக.

தோழர்களே.. வேண்டாம் வேண்டாம் jio வேண்டாம்..

ஏற்கனவே idea, tata DoCoMo காணாமல் ஆகிவிட்டது புரிந்து கொண்டு விழித்தெழு...

கொஞ்சநாள் ஆறப் போட்டா நீர்த்து போகும் போராட்டம் அல்ல அதிகார வர்க்கமே...


பாஜக அதிமுக இனைந்து.. மக்களின் எதிர்பையும் மீறி சீர்காழியில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது...


சீர்காழி பழையார் சாலையில் பழையப்பாளையம்&மாதானத்தில் மீத்தேனுக்காக சுமார் ஆயிரக்கணக்காண ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி அப்பகுதியில் உழவை நாசப்படுத்தி வேலைவாய்ப்பை பறித்து..

மக்களின் தற்சார்பு வாழ்க்கையை சிதைத்துவிட்டனர் என்றும்..

இம்மீத்தேனை கொண்டுச் செல்ல ஏதுவாக பழையார்-நாகப்பட்டின கிழக்கு கடற்கரைச்சாலை திட்டத்தை துரிதப்படுத்துகின்றனர் என்றும்..

தொடக்கத்தில் மீத்தேனை எடுக்க ஆறுத்தொட்டிகளை அமைத்து மக்களை சமாதானப்படுத்திய பின்பு சிறிய இடைவெளியில் 6யை 18 ஆக கூட்டியுள்ளனர் என்றும் பதிவிட்டிருந்தோம்..

தற்போது அடுத்தக்கட்டமாக 29 கிலோமீட்டர் தொலைவுக்கு ராட்சச குழாய் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளதாக தகவல், இவையனைத்தும் விளைநிலங்கள் வழியாகத்தான் அமைக்கப்படுகிறது..

தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் பாலைவனமாக்கப்பட்ட நேரத்தில் காவிரிப்படுகை பகுதிகளில் விளைவிக்கப்படும் உணவுப்பொருட்கள் நாட்டின் உணவுத்தேவையை பெரும்பகுதி நிவர்த்தி செய்தது...

பாஜக தமிழிசையெல்லாம் ஒரு தலைவரா ? தமிழ்நாட்ல இருந்துக்கிட்டு இப்படி யாராச்சும் பேசுவாங்களா ? - காவிரி விவகாரத்தில் சரத்குமார் தாக்கு...


கொங்கு மண்டலம் இராணுவ மயமாக்கல் எச்சரிக்கை தமிழா...


பேஸ்புக்கில் வைரலாகும் அதிமுக எம்பிக்கள் புகைப்படம்...


அண்டை மாநிலத்தில் இருக்கும் அரசின் செயல்பாடு தமிழக அரசிடம் இதுவரை இல்லை ? உங்களின் இணக்கம் கொடுத்த நம்பிக்கை போதும் மக்களுக்கு...

வாரியம் அமைகாத மத்திய அரசை எதிர்த்து நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற தயாரா? மக்கள் கேள்வி ?

காவிரி பிரச்சனை தீராது...


காங்கிரஸ் பாஜக இரண்டும் ஒன்னு இது புரியலனா நம்ம வாயில விழும் மண்ணு...


தயாராக இரு இந்திய அரசே தமிழகம் தழுவிய மிகப்பெரிய போராட்டத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் எச்சரிக்கை...

தமிழக மக்களின் வாழ்வதார பிரச்சனையை துட்சமாக கரும் மத்திய அரசிற்கு தமிழக மக்கள் ஏன் வரி செலுத்த வேண்டும் , தமிழக அரசு மத்திய அரசிற்கு வரி செலுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும் - வேல்முருகன்...


அந்த ஊர், இந்த ஊர் என்று பிரச்சினையை பிரித்து பார்க்காதீர்கள்..


நீங்கள் பிரிக்கும் நேரத்தில் அவர்கள் ஏதாவது ஒரு திட்டத்தை நிறைவேற்றி விடுகின்றனர்..

தஞ்சாவூரில் எரிவாயு எடுத்தால் நமக்கு எப்படி நெல் வருமென்று கேள்வி எழுப்புங்கள்..?

தூத்துக்குடியில் இதே சுற்றுப்புற சூழல் கேடு அடைந்தால் நமக்கு எப்படி சுத்தமான உப்பு வரும் என கேளுங்கள்..?

இப்படி ஒவ்வொரு பிரச்சனைகளையும் எதிர்த்து கேள்வி கேட்டுக்கொண்டே இருங்கள்..

இறுதியில் நாம் அனைவரும் ஒரு புள்ளியில் இணைவோம் என்ற நம்பிக்கையோடு...

ஆழ்மனம் இரகசியம் - மனச்சங்கிலி...


நாம் அனைவரும் கோவிலில் யானையை பார்த்திருப்போம். அதன் காலில் ஒரு சங்கலி கட்டபட்டிருக்கும். பாகன் கையில் ஒரு கம்பை வைத்து குத்தி அடக்கி வைத்திருப்பான்.

யானை மனிதனை விட பல மடங்கு பலம் வாய்ந்தது. ஆனால் சிறிய பாகனுக்கு பயந்து கட்டுப்பட்டு நடக்கிறது. அவன் சொன்னால் ஆசீர்வாதம் கொடுக்கிறது, காசு வாங்குகிறது.

உண்மையில் யானையை கட்டுபடுத்துவது அதன் ஆழ் மனதில் பதிந்த எண்ணம்.

யானை சிறுவயதில் இருக்கும் போதே பாகன் சங்கிலியால் கட்டி வைத்து கட்டுபடுத்துகிறான். யானை சங்கிலியை உடைக்க முயன்று முடியாமல் முயற்சியை கைவிட்டிற்கும்.

இப்போது அது வளர்ந்து பெரிய யானையாக இருக்கும். ஆனால் அது சங்கிலியை உடைக்க இப்போது முயற்சி செய்யாது.

நீங்கள் உற்று நோக்கினால் அவ்வப்பொழுது தன் கால்களை அசைக்கும் யானை சங்கிலி கட்டிருக்கும் காலை அசைப்பது இல்லை.

சங்கிலிக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற எண்ணம் யானையின் ஆழ்மனதில் நன்கு பதிந்துவிட்டது. அதனால் தான் கட்டுப்பட்டு நிற்கிறது.

யானைய போல நம்மில் பலபேர் நிறைய மன சங்கிலிகளை கட்டி கொண்டிருக்கிறோம்.

உதாரணத்திற்கு.. எனக்கு கணக்கு வராது, அது ரொம்ப கஷ்டம், அது என்னால் செய்ய முடியாது முதலியன.

இந்த சங்கிலிகளை நாம் உடைத்து எரிய வேண்டும்.

தியானம் பழகினால் இந்த சங்கிலிகளை உடைத்து எரிந்து விடலாம்.

நாம் தியானம் செய்யும் போது எண்ணங்களின் வேகம் குறைந்து மனம் பீட்டா நிலையில் இருந்து அல்ஃபா நிலைக்கு வருகிறது. நமது ஆழ்மனம் திறக்கபடுகிறது.

இந்த அல்ஃபா நிலைதான் முன்னோர்கள் கூறும் துரிய நிலை ஆகும்.

தியானம் ஆழ் மனதை திறக்கும் அற்புத சாவி...

திமுக - காங்கிரஸ் MLA போர்வையிலுள்ள குண்டர்களின் அராஜகம்...


திராவிடம் என்றால் என்ன?


திராவிடம் என்னும் பெயர் எதனால் வந்தது? 

ஏன் வந்தது யாரால் வைக்கப்பட்டது?

திராவிடர் என்றால் யார்?

திராவிடத்துக்கும் தமிழுக்குமான, தமிழருக்குமான தொடர்பென்ன ?

ஏன் திராவிட இனம் என்று தமிழினத்தை கூறவேண்டும்?

பதில் கூற முடியாது இணைப்பை துண்டித்து இல்லாத திராவிடம் வளர்பவர்கள் தமிழர்களாக ஒருபோதும் இருக்க வாய்ப்பில்லை.

நான் என்னை தமிழன் என்கிறேன்
இல்லை இல்லை...

நீ திராவிடன் என்கிறது ஒரு திருட்டு கூட்டம்...

இங்கு விவசாய நிலத்தையே அவர்கள் பாலைவனமாக மாற்றியவர்கள், மணலாக இருக்கும் பாலைவனத்தை எப்படி விட்டு வைப்பார்கள்..?


திருப்பூர் குமரன் சாலையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடத்திற்க்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்...


திருப்பூர் குமரன் சாலையில் இயங்கிவந்த சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடுத்த வழக்கில் கட்டிடத்திறக்கு சீல் வைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து 3வது மண்டல துணை ஆணையர் சபியுல்லா சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடத்திற்கு சீல் வைத்தார்...

இராணுவ மயமாகும் தமிழகம்...


சாத்திர மச்ச யோக பலன்கள்...

     
1.இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.

2. நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.

3. வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.

4. வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.

5.வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.

6.வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.

7. இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.

8. இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.

9. இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.

10. இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.

11. இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.

12 இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.

13 மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.

14. மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.

15. மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.

16. மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.

17. மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.

18. நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள் நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.

19. மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.

20. மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.

21. மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.

22. மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.

23. வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

24. இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.

25. வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.

26. இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.

27, இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.

 28,தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.

29. கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.

30. கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.

31. இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.
32. வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.

33. மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.

34. வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.

35. வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

36. வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.

37. தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.

38. வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.

39. வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.

40. இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்.

41. முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.

42. முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.

43. முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்...

Sterlite Vedanta... MALCO...?




தமிழன் கிட்ட வெச்சுகிட்ட உன் எல்லா வண்டவாளத்தையும் தண்டவாளத்துல ஏத்தமா விடமாட்டோம்...

ஊருக்குள் நாங்க வந்தால் விரட்டியடிக்கிறீங்க, நீங்க மட்டும் ஏண்டா காட்டுக்குள்ள வர்றீங்க?


சிசேல்ஸ் தீவு தமிழர்கள்...


சிசேல்ஸ் தீவில் தமிழர்கள் மிகவும் சிறுபான்மையினர் ஆவார்கள்.

அவர்கள் தங்கள் மொழியை முற்றிலுமாக இழந்து கிரியோலி மொழி மட்டுமே பேசுகிறார்கள்,

ஆனால் சிசேல்சில் வாழும் தமிழர்களில் 30 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் சற்று திரிபடைந்த தமிழ்ப் பெயர்களையே சூட்டிக் கொண்டுள்ளனர்...

கார்பரேட் மற்றும் வங்கிகள் பயந்து நடுங்க வேண்டுமா..? நூதன போர் தொடுங்கள்...


வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்...


வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது.

விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்.

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்...

விவசாயி குடும்பம் அழியனும் கார்ப்பரேட் குடும்பம் நடத்தனும்.. வாழ்க பாரதம்...


நாம் ஏன் பொய் சொல்கிறோம்?


இதுக்கான பதிலை ஒரு வரியில சொல்லணும்னா, நமக்கும் நல்லவனா இருந்துக்கிட்டு, மத்தவங்களுக்கு முன்னாடியும்  நம்மை நல்லவனா காட்டிக்கிறதுக்காகவும் தான்னு  உளவியல் ஆய்வாளர்கள் சொல்றாங்க..

பொய் சொல்வது எனும் செயல் ஒருவரின் சுயமரியாதையுடன் நெருங்கிய தொடர்புடையது.

ஒரு மனிதன் எப்போது தன் சுயமரியாதைக்கு பங்கம் வருகிறது என்று பயப்படுகிறானோ, அப்போதே அவன் அதிகமாக பொய் சொல்கிறான் அப்படீன்னு சொல்றாரு அமெரிக்காவின் ‘மசாச்சூசெட்ஸ் பல்கலைக்கழக’ உளவியல் ஆய்வாளர் திரு.ராபர்ட் ஃபெல்டுமேன்.

பொய் குறித்த உளவியல் காரணங்கள்/கருத்துக்கள்...

உங்களுக்கே தெரியும்  நாம சொல்கிற எல்லாப் பொய்களுமே தீமையானது அல்ல என்று! சில/பல சமயங்கள்ல நம்முடைய மற்றும் நம்மைச் சார்ந்தவர்களுடைய சுயமாரியாதையை காப்பாற்றிக்கொள்ள அல்லது நடக்கப் போகும் ஒரு அசம்பாவிதத்தை தடுக்க பொய் சொல்வதை விட ஒரு சிறந்த வழி இல்லைன்னு சில ஆய்வாளர்கள் சொல்றார்கள்..

தன்னைப் பற்றி உயர்வாக சொல்லிக்கொள்ள, அல்லது தான் ஒரு எளிமையானவன் என்பது போல காட்டிக்கொள்ள வேண்டி சொல்லும் பொய்கள் ஒன்றும் பெரிய குற்றமல்ல.

ஆனால், அப்பட்டமான (முழு நீள) பொய்கள், உதாரணமாக உண்மைக்குப் புறம்பான அல்லது உண்மையை மறைத்துச் சொல்லும் கருத்துகள் போன்றவை, ஒருவர் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், நெருக்கத்தையும் குலைத்து விடுபவை என்பதால் சமுதாயத்தின் பார்வையில் அவை குற்றங்களே.

தன்னையும் ஏமாற்றிக் கொண்டு, பிறரையும் ஏமாற்றும் குணாதிசயம்..

பல விலங்குகள் தங்களுடன் வாழும் சக விலங்குகளை ஏமாற்றுவது இயற்கை தான் என்றாலும், தன்னையும் ஏமாற்றிக் கொண்டு, பிறரையும் ஏமாற்றி விளையாடும் (?) குணாதிசயம் என்பது மனிதர்களுக்கே (மட்டுமே) உரித்தான பண்பு என்கிறார்கள் உளவியலாளர்கள்!

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், மனிதர்கள் பிறர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள்/எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதிலேயே அதிக நேரம் மூழ்கிப்போய்விடுவதால், நாம் பிறரிடம் சொல்வது உண்மையா இல்லை முற்றிலும் (அபத்தமான ஒரு) பொய்யான விஷயமா, என்பதை தாங்களே இனம்பிரித்து பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்று ஃபெல்டுமேனின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஒரு ஆய்வில் முன்பின் அறிமுகமே இல்லாத இருவரை ஒரு அறையில் தங்க வைத்து, அவர்களின் உரையாடலை காணொளியாக பதிவு செய்தனர். பின்னர், அவ்விருவரையும் தனித்தனியாக, அக்காணொளியைக் கண்டு அதில் அவர்கள் பேசியவற்றில் முற்றிலும் உண்மையல்லாத (பொய்யான) ஒரு விஷயம் கூறப்பட்டுள்ளதா என்று கண்டறிந்து சொல்லுமாறு கேட்டதில், தனக்கு சுத்தமாக பிடிக்காத ஒருவரை மிகவும் பிடித்தவர் என்று சொல்வதில் தொடங்கி, தான் ஒரு பிரசித்தி பெற்ற பாப் பாடகர்/இசையமைப்பாளர் என்பது போன்ற அபத்தமான விஷயங்களை தாங்கள் சொல்லியதாக ஒப்புக்கொண்டார்களாம்? அடப் பாவிகளா…

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் குறிப்பிட்ட அந்த உரையாடல் காணொளியைக் காணும் முன்பு, அச்சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இருவரையும், நீங்கள் பேசிய அனைத்தும் உண்மைதானா எனக்கேட்டதற்க்கு, ஆம் நாங்கள் பேசிய அனைத்தும் முற்றிலும் உண்மையே என்றார்களாம். அட….இது நல்லாருக்கே.

சமீபத்திய ஒரு ஆய்வின்படி, ஒரு 10 நிமிட உரையாடலில் 60% மக்கள், சராசரியாக 2.92 பொய்களை சொல்லியிருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அப்படிப்போடு…. ஃபெல்டுமேன் அவர்களின் ஆய்வுக் கூற்றுகளின்படி, மக்கள் தன்னிச்சையாக பொய்களை சொல்லுகிறார்களாம், சமுதாயத்தில் அவை ஏற்படுத்தும்  விளைவுகளைப் பற்றி கண்டுகொள்ளாமலேயே
இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவதுபோல இருக்கிறது இது..

நாம் மற்றவர்களை ஈர்ப்பதில் ஆர்வம் காட்டுவதைவிட, மற்றவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புவார்களோ, அப்படி இருப்பதற்காகவே பெரிதும் முயல்கிறோமாம்?

ஒரு சுமூகமான சமூக சூழலை ஏற்படுத்தவேண்டியும், பிறரின் கருத்துக்கு மறுப்பு தெரிவிப்பதன் மூலம், அவர்களின் மனதைப் புண்படுத்தாமல் இருப்பதற்காக வேண்டியும், நாம் பெரும்பாலும் மற்றவர்களுடன் (எண்ணங்களுடன்) ஒத்துப்போகவே விழைகிறோமாம்.

பெண்களை விட ஆண்களே அதிகம் பொய் சொல்கிறார்களாம். ஆண்களின் பொய்கள் பெரும்பாலும் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ளவும், ஆனால் பெண்களின் பொய்கள் பிறரை மகிழ்ச்சிகொள்ளச் செய்யவுமே சொல்லப்படுகிறதாம்..

கூச்ச சுபாவமுள்ளவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வெளிப்படையானவர்களே பெரிதும் பொய் சொல்கிறார்களாம்..

தமிழா என்ன செய்ய போகிறோம்..?


கியூபாவில் பாடிஸ்டா அரசை அகற்றியவுடன், பிடல் காஸ்ட்ரோவும், சே குவேராவும் தோற்று வித்த முதல் இயக்கம், எழுத்தறிவு இயக்கம்...



தெரியாதவர்கள் கற்றுக் கொள்ளுங்கள்..

தெரிந்தவர்கள் கற்றுக் கொடுங்கள்..

இது தான் எழுத்தறிவு இயக்கத்தின் தாரக மந்திரம்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடும் மக்கள் புரட்சி வெல்லட்டும்.. உலகமே அதை பேசட்டும்...


தாமரை இல்லை, இலை பூ கூட வராது தமிழ்நாட்டில்.. ஞாபகம் வச்சிக்கோங்க தமிழின துரோகி பாஜக தமிழிசையே...


நாங்க அவனுங்கள கலாய்ப்போம் நீங்க அமைதியா கோர்ட் சொன்னத செய்ங்க என்ன புரியுதா பரட்டை ? விமர்சனமாம் விமர்சனம்...

பாஜக மோடிக்கு உலகத் திரையரங்கு நாள் வாழ்த்துக்கள்...


குண்டலினி யோகா தான் இருப்பதிலேயே மிக அபாயகரமான யோகமுறை...


அபாயம் என்பது அது தான் இருப்பதிலேயே மிகவும் வீரியம் வாய்ந்த செயல்முறை என்பதால்.

எது சக்தி வாய்ந்ததோ, அதைத் தவறாகப் பயன்படுத்தினால், அது பேராபத்தாய் முடிந்து விடும்...

இதைப் பற்றி முழுமையாய் அறிந்தவரின் தொடர் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையில் மட்டுமே இதை நாம் பயிற்சி செய்ய வேண்டும்.. இல்லையெனில் இதை செய்யாதிருப்பதே நல்லது..

இதனால் குண்டலினி யோகா செய்வது தவறு என்று இல்லை. முறையாய் செய்தால் அது போன்ற ஒரு அருமையான வழியில்லை, ஆனால் பிரச்சினை என்னவெனில், ‘சக்தி’க்கு என்று தனியாய் பிரித்தறியும் திறன் கிடையாது.

அதை வைத்து உங்கள் வாழ்வை உருவாக்கவும் செய்யலாம், அழித்தும் கொள்ளலாம், இன்று மின்சாரம் தான் உங்கள் வாழ்வை பல வழிகளிலும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது…

ஆனால் அதுவே மின்சாரக் கம்பியை கைகளால் தொட்டால், என்னாகும் என்று உங்களுக்கே தெரியும்...