அபாயம் என்பது அது தான் இருப்பதிலேயே மிகவும் வீரியம் வாய்ந்த செயல்முறை என்பதால்.
எது சக்தி வாய்ந்ததோ, அதைத் தவறாகப் பயன்படுத்தினால், அது பேராபத்தாய் முடிந்து விடும்...
இதைப் பற்றி முழுமையாய் அறிந்தவரின் தொடர் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையில் மட்டுமே இதை நாம் பயிற்சி செய்ய வேண்டும்.. இல்லையெனில் இதை செய்யாதிருப்பதே நல்லது..
இதனால் குண்டலினி யோகா செய்வது தவறு என்று இல்லை. முறையாய் செய்தால் அது போன்ற ஒரு அருமையான வழியில்லை, ஆனால் பிரச்சினை என்னவெனில், ‘சக்தி’க்கு என்று தனியாய் பிரித்தறியும் திறன் கிடையாது.
அதை வைத்து உங்கள் வாழ்வை உருவாக்கவும் செய்யலாம், அழித்தும் கொள்ளலாம், இன்று மின்சாரம் தான் உங்கள் வாழ்வை பல வழிகளிலும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது…
ஆனால் அதுவே மின்சாரக் கம்பியை கைகளால் தொட்டால், என்னாகும் என்று உங்களுக்கே தெரியும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.