1956 ல் இழந்த இப்பகுதியில் இன்று தமிழரே தம்மை வந்தேறிகளாகக் கருதும் அளவுக்கு அடிமைப்பட்டுள்ளனர்.
தமிழரின் பெரும்பான்மைப் பூர்விக நிலப்பகுதி அன்றைய தமிழ்மக்களின் அரசியல் அறியாமையால் பிடுங்கிக் கொள்ளப்பட்டது.
வளமான இப்பகுதி மற்ற மாநிலங்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோதே தமிழர் எண்ணிக்கை பெரும்பாலான இடங்களில் 50% இருந்தது.
அந்நியர் கைக்குப் போன பிறகு இன்னும் குறைந்துவிட்டது.
எந்த உரிமையும் கிடைக்காமல் தமது பூர்வீக மண்ணிலேயே சிறுபான்மையாக்கப்பட்டு இனரீதியான பிரச்சனைகளுக்கும் தாக்குதலுக்கும் கலவரங்களுக்கும் முகம் கொடுத்துவருகின்றனர்.
வழக்கம் போல அனைத்துத் தமிழருக்கும் இவர்கள் போய்க் குடியேறியதாகவே காட்டப்பட்டு உள்ளது.
ம.பொ.சி , மார்சல் நேசமணி போன்ற தலைவர்களின் அரும்பெரும் முயற்சியாலும் போராட்டங்களினாலும் சென்னை, திருத்தணி, செங்கோட்டை மற்றும் கன்னியாகுமரி உள்ளடக்கிய இன்றைய தமிழகத்தின் 15% பகுதி மீட்கப்பட்டது அல்லது காக்கப்பட்டது.
இன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் தமிழர்கள் சில இடங்களில் நாற்பது சதவீதமும் சில இடங்களில் தொண்ணூறு சதவீதம் வரையிலும் கூட இருக்கின்றனர்.
( இடுக்கிமாவட்டத்தில் 95% தமிழர் இருக்கின்றனர்.
தமிழ்க் குடியரசின் வடபகுதி அதாவது, இன்று ஆந்திராவுடன் இணைக்கப்பட்டுள்ள நிலப்பரப்பில் தமிழர் 35% முதல் 70% வரை உள்ளனர்)
அதாவது, தமிழரின் நிலத்தில் வேற்றினத்தவர் குடியேறி குடியேறி தமிழரைவிட அதிகம் பெருகிவிட்டனர்.
ஆனால் இவையனைத்தும் தமிழரின் பூர்வீக மண் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.
(அதுவும் பல தடைகளை மீறி தமிழார்வலரின் தனிமனித முயற்சியாலும் தியாகத்தாலும் மட்டுமே பெரும்பாலும் வெளிக் கொணரப்பட்டவை) எனவே இந்த மண்ணை நாம் கோருவதில் தவறில்லை.
தடயங்களின் அடிப்படையில் நாம் முழு இந்தியாவையும் கோரலாம்தான்.
ஆனால் தமிழரின் தற்போதைய எண்ணிக்கையை கருத்தில் கொள்வதும் அவசியம் ஆகும்.
அதைப் போல் ஆக்கிரமிக்கப்பட்டத் தமிழ்நாடு பற்றி நாம் அறிய வேண்டியது நிறைய உள்ளது...