06/02/2019

தலித் பையனையா காதலிக்கிறே.. பெற்ற மகளை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை...


ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம் தாலூரு மண்டலம் கொத்த பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டா  வெங்கட் ரெட்டி. இவரது மகள் வைஷ்ணவி ஓங்கோலில் உள்ள  உள்ள  தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.

அவர் அதே வகுப்பில் படிக்கு மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் காதலித்து வந்த நிலையில் இவர்களது காதல் வைஷ்ணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது.

ஆனால் வைஷ்ணவியின் காதலன் தலித் என்பதால் அவர்களது காதலை ஏற்க பெற்றோர் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் நேற்று வைஷ்ணவி வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றார். ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லததால் மாலை  சீக்கிரமே வீட்டுக்கு திருப்பியுள்ளார். அப்போது வைஷ்ணவிக்கும் அவரது தந்தைக்கும் இடையே காதல் விவகாரம் தொடர்பாக பேச்சு எழுந்துள்ளது.

அப்போது காதலனையே திருமணம் செய்வேன் என குடும்பத்தாருடன் வாக்குவாதம் செய்து, வைஷ்ணவி உறுதியாக இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த கோட்ட வெங்கட் ரெட்டி வைஷ்ணவியை பெற்ற மகள் என்றும் பாராமல்  கழுத்ததை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

வைஷ்ணவி கொலை செய்யப்பட்டது பற்றிய தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓங்கோல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்...

சின்ன தம்பி யானையை காப்போம்...


காட்டை ஆக்கிரமித்துள்ள வந்தேறிகளால் துரத்தப்படும் சின்ன தம்பி யானை/சின்னதம்பி யானையை காப்போம்....

https://youtu.be/yzR-L3Se8LM

Subscribe the channel for more news...

பழக்கத்தின் வலிமை...


தனியாக வாழ்வது.. மிக மிக கடினம்.

அதுவும் இந்த உலகத்தோடு ஒட்டாமல் பழக வேண்டும்.

இது முதலில் சாத்திய மற்றதாகவே தோன்றும்.

ஆனால், யாருக்காவது சூழ்நிலையின் காரணமாக தனியாக இருக்க நேர்ந்தால்.
ஆரம்பித்தில் பல கஷ்டங்களை அனுபவித்திருப்பாா்,

பிறகு நாட்கள் ஆக, ஆக.. அதுவே பழகி போயிருக்கும்.

நீங்கள் அவா்கிட்ட போய் கேட்டீங்க என்றால்.

என்ன செய்வது, இதுதான் எனக்கு அமைந்தது, இதுவே பழகி போச்சு.
என்று தானே சொல்வாா்.

இது தான் பழக்கத்தின் வலிமை.

முதலில் கட்டாயமாக்க வேண்டும்.
மனம் எதிா்க்கும்.

பிறகு நீங்கள் வேறு வழியில்லாமல் அதை பொறுத்து கொள்வீா்கள்.

கடைசியில், மனம் உங்கள் வழிக்கு வந்து விடும்.

இது தான் பழக்கத்தின் பயிற்சி.

எதை திரும்ப திரும்ப செய்கிறீா்களோ
அதுவாகவே நீங்கள் ஆகி விடுகிறீா்கள்...

அவைகளது இருப்பிடத்தை அழித்து, அனாதையாக அலையவிட்டு வஞ்சிப்பது நியாயமா.?


சின்னதம்பி யானையை காக்க அனைவரும் முதலமைச்சருக்கு மின்னஞ்சல் அனுப்பவும்...



To
முதலமைச்சர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை - E-Mail : cmcell@tn.gov.in

Principal Chief Conservator of Forests (Head of Forest Force)
Email: tnforest@tn.nic.in

பொருள்: சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் முடிவைக் கைவிடக்கோரி

வணக்கம்

சில தினங்களுக்கு முன் கோயம்புத்தூரில் பேசிய வனத்துறை அமைச்சர் கோவை தடாகம் பகுதியில் சுற்றித்திரியும் "சின்னத்தம்பி" என்ற யானையை காட்டுக்குள் விரட்ட முடியாததால் அதை கூண்டில் அடைத்து கும்கியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் யானைகளுக்கு மொத்தம் 101 வழித்தடங்கள் உள்ளன, இந்த பாதைகள் அனைத்தும் மறிக்கப்பட்டு வீடுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அதனால்தான் யானைகள் ஊருக்குள் வந்து விடுகிறது. வழித்தடங்களை ஆக்கிரமித்தவர்கள் அவர்களாகவே பார்த்து திருந்த வேண்டும் என்றார். அமைச்சரின் இந்த பேச்சு முற்றிலும் காட்டின் பேருயிரான யானையின் அடிப்படை உரிமையை மீறுவதாகும்.

யானை என்பது ஒரு தனி உயிர் அல்ல. காட்டின் ஒட்டுமொத்த வளத்தின் குறியீடு. மேலும் யானையை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுவதன் மூலம் அப்பிரச்னையைத்தான் இடமாற்றம் செய்ய முடியுமே தவிர நிரந்தர தீர்வாக அமையாது. சின்னத்தம்பி இடமாற்றம் கூட அதைத்தான் உறுதி செய்கிறது. மேலும் சுதந்திரமாக சுற்றித்திரிந்த யானையைப் பிடித்து கூண்டில் அடைத்து அடிமைப்படுத்துவதென்பது பிற உயிரினங்கள் மீது மனிதன் தொடுக்கும் மிகப்பெரும் வன்முறை. யானையின் நினைவுகளில் காடு எப்போதும் நிலைத்திருக்கும். தப்பிக்கும் வாய்ப்பு அமைந்தால் அவை மீண்டும் காட்டை நோக்கியே நடைபோடத் தொடங்கும் என்பதும் நிரூபணமாகிருக்கிறது.

அதுமட்டுமின்றி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் யானைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் நிலையில் சின்னத்தம்பி போன்ற வீரியமிக்க இளம் வயது யானையை கும்கியாக மாற்றுவது காட்டில் யானைகளின் இனப்பெருக்கத்தை பாதித்து யானைகளின் எண்ணிக்கை குறைவதற்கு வழவகுக்கும். சின்னத்தம்பி யானைக்கு ஏற்கெனவே அதன் இருப்பிடத்தை அறிந்து கொள்வதற்கான கருவி பொருத்தப்பட்டுள்ளது அதன்மூலம் அது கிராமத்திற்குள் நுழையும் முன்பே மக்களுக்கு எச்சதிக்கை கொடுத்து அதனைத் திரும்ப காட்டிற்குள் அனுப்பும் முயற்சியில் வனத்துறை ஈடுபட வேண்டும்.

யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்தவர்கள் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து அந்த வழித்தடங்களை பாதுகாக்க வேண்டும்.

உடனடியாக சின்னத்தம்பி யானையை பாதுகாப்பாக காட்டிற்குள் அனுப்பு பணியை மட்டுமே அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்

(உங்கள் பெயர், ஊர்)...

பாஜக எச்.ராஜா சர்மா வை வெளுத்து வாங்கும் சீமான் காணொளி...


https://youtu.be/pTkF9aQRpJw

Subscribe the channel for more videos...

ஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு சமம்...


“ஒரு நாளைக்கு நீங்க எவ்ளோ சாப்பிடுவீங்க சார்? மிஞ்சிப்போனா ஒரு 5 கிலோ? எவ்ளோ தண்ணி குடிப்பீங்க? ரொம்ப அதிகமா ஒரு 8 லிட்டர்? நீங்க சாப்பிடுறதுனால, உங்களைத் தவிர வேற யாருக்காவது ஏதாவது நன்மை இருக்கா சார்..?”

யானைகள் அப்படி என்ன பெரிதாக செய்துவிடுகிறது என்று கேட்கும் அறிவாளிகளுக்கு இதைவிட எளிமையாக என்னால் பதிலளிக்க முடியவில்லை. யானைகள் மிக எதார்த்தமான குழந்தைகள்.

“ஒரே ஒரு யானை சாப்பிடுறதுல இருந்து ஒரு காடே உருவாகும் சார். ஒரு யானை, ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ உணவு சாப்பிடும் சார். சராசரியா அதனோட உடல் எடையில இருந்து 5 சதவிகித உணவை சாப்பிடும். ஒரு நாளைக்கு ஒரு யானை 100 - 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். இந்த 250 கிலோ உணவுங்கிறதுல, 10 சதவிகிதம் விதைகள் இருக்கும். அதாவது 25 கிலோ விதைகள், குச்சிகள் இருக்கும். அதுல கடைசிக்கும் கடைசியா 10 கிலோ விதைகளும் குச்சிகளும் திரும்ப மண்ணுல விதைக்கப்படும். நினச்சுப் பாருங்க, ஒவ்வொரு யானையும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 கிலோ விதைகளை விதைக்குது சார்! எண்ணிக்கையில சொல்லணும்னா, சராசரியா ஒரு யானை ஒரு நாளைக்கு 300 - 500 விதைகளை விதைக்குது…”

500 விதைகளில் குறைந்தது 100 விதைகளாவது முளைத்துவிடும். இது மிகவும் குறைந்தபட்ச எண்ணிக்கைதான். அப்படியென்றால், ஒரு யானை ஒரு மாதத்திற்கு 3000 மரங்களை நடுகிறது. வருடத்திற்கு 36 ஆயிரத்து ஐநூறு மரங்கள். மொத்தமாகப் பார்த்தால் ஒரே ஒரு யானை தன் வாழ்நாளில் 18 லட்சத்து 25 ஆயிரம் மரங்கள் வளரக் காரணமாகிறது. மீண்டும் சொல்கிறேன், இது மிகவும் குறைந்தபட்ச எண்ணிக்கைதான்!

இன்னும் ஆச்சரியங்கள் காத்திருந்தன.

“இப்போ இவ்வளவு சாப்பிடணும்னா அது எவ்வளவு பயணம் செய்யணும்? இப்பல்லாம் நம்மளால இந்த இத்துனூண்டு உடம்ப தூக்கிட்டு 10 கிலோமீட்டர்கூட சேந்தாப்புல நடக்க முடியல. ஆனா ஒரு யானையால ஒரு நாளைக்கு 190 கிலோமீட்டர் நடக்க முடியும்னு ஆய்வுகள் சொல்லுது. சராசரியா ஒரு நாளைக்கு 30 கிலோமீட்டர் தூரம் யானைகள் நடக்கும். அதுவும் 4-5 மணி நேரத்துல.”

அப்படியென்றால் சராசரியாக மணிக்கு 15 லிருந்து 20 கிலோமீட்டர் வேகம். யானைகள் இவ்வளவு வேகமாக நடக்குமா என்று வியக்கும்போதே இன்னொரு தகவலையும் சொன்னார். யானைகள் மிக வேகமாக ஓடும். யானைகள் துரத்தினால் மனிதர்களால் ஓடித் தப்பிக்க முடியாது. மனிதர்களைவிட 2 மடங்கு வேகத்தில் யானைகள் ஓடும்.

ஏன் 4-5 மணிநேரம் மட்டுமே நடக்கின்றன? மற்ற நேரங்களில் என்ன செய்யும்?

“சாப்புடும்”

அவ்வளவு நேரமுமா?

“ஒரு நாளைக்கு 12 - 18 மணி நேரம் சாப்பிட்டுகிட்டே இருக்கும் சார்.”

அப்போ தூக்கம்?

“யானைகள் இரண்டு மணிநேரம் மட்டுமே தூங்கும்.”

யானைகளை மிகவும் பிடிக்க ஆரம்பித்தது. இவ்வளவு பிரமிப்பானவையா அவை..?

“இன்னொரு சுவாரஸ்யமான தகவல் சொல்லட்டா சார்..? எந்த பாலூட்டிகளைவிடவும் அதிகமான பேறு காலம் கொண்டவை யானைகள்தான் சார். 22 மாசம்!”

அம்மாடி..!

காடுகளின் மூதாய் யானைகள் தான். பழங்காலத்திற்கும் இன்றைய நவீன உலகுக்கும் உள்ள ஆதி உயிர்த் தொடர்புச் சங்கிலியின் எச்சம் இந்த யானைகள் தான்.

மரங்களை நடுவதைவிட, சுற்றி இருக்கும் உயிர்களை பாதுகாப்போம். அவ்வுயிர்களைவிட நேர்த்தியாகவும் எளிமையாகவும் நம்மால் எதுவும் செய்துவிட முடியாது...

தமிழா விழித்துக்கொள்...


உடல் பருமனா? வயிற்று பிரச்சினையா.. கொள்ளு ரசம்...


கொள்ளு-600 கி.
வெந்தயம்-100 கி.
மல்லி-100 கி.
சுக்கு-100 கி.
சீரகம்-50 கி.
பட்டை-50 கி.

இவற்றை ஒவ்வொன்றையும் தனித்தனியே பொன்நிறமாக வறுத்து தனித்தனியே பொடி செய்து பின்னர் ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு 200 மில்லி நீரில் 2 டீஸ்பூன் பொடிய கலந்து 100 மில்லியாக சுண்டக்காய்ச்சி வெறும் வயிற்றில் காலை, மாலை (சாப்பாட்டிற்கு 45 நிமிடங்களுக்கு முன்பாக) இருவேளை அல்லது 3 வேளை குடித்தால் உடல் எடை குறைந்து தொப்பை குறைந்து வயிற்று பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

உடல் பருமனா? உங்களுக்கான டயட்...

20 வயது முதல் 30 வயது உடையவர்கள் தான் தற்போது ஒல்லியான உடலுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலைக் குறைப்பதற்காக மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொண்டு, பட்டினி கிடக்கின்றனர். பட்டினி கிடந்தால் உடல் குறைந்து விடும் என்பது தவறான கருத்து. இது உடலை பலவீனமாக்கி விடும். மாத்திரைகளும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். உடல்பருமனை குறைக்க முறையான உடற்பயிற்சியோடு உணவுக்கட்டுப்பாடு அவசியம்.

ஒருநாளைக்கு நம் உடலுக்குத் தேவையான சரிவிகித உணவு என்னென்ன?

காலை 6 மணி : டீ ,காஃபி அல்லது ஏடு நீக்கப்பட்ட பால் அரை கப் (100 மி.லி.) அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை மட்டுமே சேர்க்க வேண்டும்.

9 மணி : 2 இட்லி அல்லது இரண்டு தோசை, ஒரு கப் உப்புமா அல்லது ஒரு கப் பொங்கல். இதோடு தேங்காய் சேர்க்காத சட்னி வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

11 மணி : மோர் ஒரு கப், எலுமிச்சை ஜூஸ் ஒரு கப், தக்காளி ஜூஸ் ஒரு கப் இவற்றில் ஏதாவது ஒன்றை இரண்டு டீஸ்பூன் சர்க்கரை அல்லது சிறிது உப்பு கலந்து பருகலாம்.

மதியம் 1 மணி : எண்ணெய் இல்லாத சப்பாத்தி 2 அல்லது ஒரு கப் சாதத்தை கீரை, காய்களிகள் , ரசம் ஆகியவற்றோடு கலந்து சாப்பிடலாம். சாப்பிட்டு ஒருமணி நேரம் கழித்து இளநீர் சாப்பிடலாம்.

மாலை 4 மணி : காபி, டீ குறைந்த அளவு சர்க்கரையுடன் சாப்பிடலாம்.

மாலை 5.30 மணி : ஆப்பில், கொய்யா, மாதுளை இவற்றில் ஏதாவது ஒன்றுடன் வேகவைத்த சுண்டல் ஒருகப் சாப்பிடலாம்.

இரவு 8 மணி : காய்கறி சூப், எண்ணெய் இல்லாத சப்பாத்தி அல்லது பருப்பு, கோஸ் பொரியலுடம் ஒரு கப் சாதம் சாப்பிடலாம். படுப்பதற்கு முன் ஏதாவது பழம் சாப்பிடலாம். வாழைப்பழம் உடல்பருமனுக்கு நண்பன் என்பதால் அதை தவிர்த்து விடலாம்...

தமிழினமே... சின்ன தம்பியை காப்போம்...


இந்த சுவரொட்டியில் ஆதிக்க தலித்துகள் என்று குறிக்கப்படுவது தமிழர்களான பறையர்களை...


அதாவது தமிழர்களான பறையர்களை தலித்துகள் என்பது. அடையாளப்படுத்தியது ஆதி ஆந்திரர்கள்.

ஆனால் ஆதிஆந்திரர்களான தங்களை தமிழ்ப்புலிகள் என்றும் ஆதித்தமிழர் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.

தலித்தியம் பேசும் தமிழர்களின் கவனத்திற்கு... அதுவும் குறிப்பாக தலித்தியம் பேசும் தமிழர்களான பறையர்களின் கவனத்திற்கு...

கொங்கு மண்டல வெள்ளாளக் கவுண்டர்கள் மூவரோடு நான் தனித்தனியாக பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் மூவருமே...

திருமாவளவனின் ஆட்கள் கொங்குப் பகுதியில் கவுண்டனை வெட்டு கவுண்டச்சியை கட்டு என்றும் ஒவ்வொரு கவுண்டச்சி வயிற்றிலும் தலித்து வாரிசு வளரனும் என்று பேசியதாகவும் அதனால் கொங்குப்பகுதியில் அது பெரிய சிக்கல் ஆனது என்றும் சொன்னார்கள்.

அதிர்ச்சி அடைந்த நான் திருமாவளவனோ விசிகவில் இருக்கும் தமிழரோ அப்படி எங்கும் பேசியதில்லை என்றும் அவ்வாறு பேசியது ஆதிஆந்திரர் அமைப்புகளே என்றும் அவர்களை தூண்டிவிட்டது திக ராமகிருஷ்ணநாயுடு என்றும் அவர்களுக்கு எடுத்துக்கூறி ஆதிஆந்திர அமைப்புகள் கொங்கு வெள்ளாளக்கவுண்டரை எதிர்த்து பேசிய காணொளிகளை அனுப்பி வைத்தேன். அவர்களும் அதிர்ச்சி அடைந்தே போனார்கள்.

அந்த மூவரிடமும் நான் தனித்தனியாக வெவ்வேறு தருணங்களில் பேசியிருக்கிறேன். ஆனால் ஆதிஆந்திரர் பேசியது திருமாவளவன் பேசியதாக கொங்கு வெள்ளாளக் கவுண்டரிடம் திரித்து திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது தெரியவந்தது.

நாயுடுக்கள் வழக்கமாக கொங்கு வெள்ளாளக்கவுண்டரிடம் நேரடியாக மோத மாட்டார்கள். உதாரணத்துக்கு நாயுடுக்களின் நிறுவனங்ளுகக்கு போட்டியாக இருக்கும் கொங்கு வெள்ளாளக்கவுண்டர் நிறுவனங்களை மூட அங்குள்ள பணியாளர்களை திராவிடம் தலித்தியம் கம்யூனிசம் பேச வைத்து பல சிக்கல்களை உருவாக்கி மூட வைப்பார்கள்.

திராவிடத்தின் மூலம் கோபால்சாமி நாயுடுவும் தலித்தியம் மூலம் ராமக்கிருஷ்ண நாயுடுவும் கம்யூனிசம் மூலம் ராமக்கிருஷ்ண நாயுடுவும் இதை செய்து வைப்பார்கள். அதுக்கு ஆதி ஆந்திரர் துணை போவார்கள்.

இதன் மூலம் தமிழர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்ன என்றால்...

தமிழ்ச் சமூகங்கள் ஒன்றோடு ஒன்ற சண்டை இடாதீர்கள். அதிலும் குறிப்பாக கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களுக்கும் கொங்குப் பறையர்களுக்கும் திராவிடம் தலித்தியம் கம்யூனிசம் மதவெறி போன்றவற்றை பேசி பல கலவரங்களை வடுக நாயுடுக்களும் வட இந்திய பிராமண பணியாக்களும் தூண்டி விடுவார்கள்.

மிகவும் கவனமாக அதை எதிர்கொள்ள வேண்டிய தருணமிது...

பதிவு : Rajasubramanian Sundaram Muthiah

சோற்றுக் கற்றாழை...


லெவி ஸ்டாரஸ் லோகோவில் மறைந்துள்ள தகவல்கள்...


ஒவ்வொரு லோகோவுக்குப் பின்னால் வரலாறே இருக்கும். இன்றைக்கு ஜீன்ஸ் பேண்ட் என்றாலே லெவி ஸ்டாரஸ் பெயர் தான் நினைவுக்கு வரும்...

அந்த லெவி ஸ்டாரஸ் ஜீன்ஸின் பின் பக்கமிருக்கும் லோகோவில் மறைந்துள்ள தகவல்கள் தான் இது.

எண் 1 சுட்டிக்காட்டுவது,  லெவி ஸ்டாரஸ் அண்ட் கோ என்கிற பெயரை. 

1829-ல் ஜெர்மனியில் பிறந்தவர் லெவி ஸ்டாரஸ், தன்னுடைய குடும்பத்துடன் 1847-ல் 18 வயதில் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து வந்தார். அங்கு உலர் பொருட்கள் விற்கும் கடையை இவர் குடும்பம் நடத்தியது. அமெரிக்கா முழுவதும் தங்க வேட்டைக்காக சுரங்கங்கள் தோண்டிக் கொண்டிருந்த போது இவர் சான் பிரான்ஸ்சிஸ்கோவில் ஒரு சுரங்கம் அருகே தையல் கடை போட்டார். அப்போது  சுரங்கம் தோண்டுபவர்களுக்காக எளிதில் கிழியாத கூடாரத் துணியில் பேண்ட் தைத்து கொடுத்தார். இவரே ஜீன்ஸை உலகிற்கு அறிமுகம் செய்தவர். இவருடைய பெயரிலான கம்பெனி ஜீன்ஸே லெவி ஸ்டாரஸ் அண்ட்  கோ.

எண் 2 சுட்டிக்காட்டுவது, லெவி ஸ்டாரஸ் நிறுவன முகவரியை, ஏனெனில் அமெரிக்காவில் நிறைய லெவி ஸ்டாரஸ் என்கிற பெயரில் ஜீன்ஸ்கள் பவனி வரவே, லெவி ஸ்டாரஸ் தனது நிறுவனத்தின் பெயரை பேடன்ட் வாங்க முற்பட்டார்.

அப்போது தான் அதே பெயரில் வேறொருவர் வாங்கியிருப்பது தெரியவரவே தனது ஊரான சான் பிரான்சிஸ்கோவையும், மாநிலமான கலிஃபோர்னியாவின் ஆங்கில எழுத்தான சி.ஏ-வையும் லெவி ஸ்டாரஸ் பெயருக்கு கீழ் இணைத்து காப்புரிமை வாங்கியுள்ளார்.

எண்  3  சுட்டிக்காட்டுவது, இரண்டு குதிரைகளைக் கொண்டு இழுத்தாலும் லெவிஸ் ஜீன்ஸ் கிழியாது என்பதை உணர்த்துவதற்காக.

எண் 4 குறிப்பிடுவது, இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரின் பிரபல மில்லான அமோஸ்கெக்லிருந்தே லெவிஸ் ஜீன்ஸுக்கான துணிகள் வாங்கப்படுகிறது. அந்த மில்லில் லெவிஸ் நிறுவனத்துக்கான துணி பண்டல் எண் 501 என்றே குறிப்பிடப்படுமாம். 501 எண் கொண்ட துணி வகை வேறு யாருக்கும் விற்பனையில்லையாம்.

எண் 5 குறிப்பிடுவது, கடுமையான துணியினால் செய்யப்பட்ட ஜீன்ஸ் பேண்டை அணிவதற்கு எளிமைபடுத்த காப்பரில் ரிவிட் அடிக்கப்பட்டதைக் குறிக்கிறது.

எண் 6 குறிப்பிடுவது, அந்த மான்செஸ்டர் மில்லில் வாங்கப்பட்ட துணி என்பதைக் குறிக்க அந்த மில்லின் காப்புரிமை குறியீடான XX என்பதை குறிக்கிறது.

எண் 7 குறிப்பது, முதல் முதலில் லெவி ஸ்டாரஸ் ஜீன்ஸ் பேண்ட்டுக்கு காப்புரிமை வாங்கப்பட்ட தேதியான மே 20, 1873  ஆகும்.

ஒரு லோகோ லேபிளில் இவ்வளவு மேட்டர் இருக்கிறது...

5 Exercise will Increase Ur Height / உயரமாக வளர 5 உடற்பயிற்சிகள்...


 https://youtu.be/d00BPA3UcBU

Subscribe the channel for more tips...

திருட்டு திராவிடம்...


களப்பிரர்கள் பார்ப்பனர்களிடம் இருந்து நிலத்தைப் பிடுங்கி மக்களுக்குக் கொடுத்ததாகவும்...

அதை பாண்டிய மன்னன் களப்பிரர்களை வென்றபிறகு மீண்டும் பார்ப்பனர்களுக்கே கொடுத்ததாகவும்...

வண்டி வண்டியாக கட்டுரை எழுதும் திராவிட கம்யூனிச வலைகளே...

பாண்டியன் கொடுத்த அந்த நிலத்தில் (வேள்விக்குடி) இடையர், நாவிதர் உட்பட அனைத்து மக்களும் சேர்ந்து வாழ்ந்தனர் என்பதையும்...

பார்ப்பனருக்கு அதில் ஏகபோக உரிமை எதுவும் இருந்ததில்லை என்பதையும்..

அதில் பொதுவான சுடுகாடும் மேய்ச்சல் நிலமும் இருந்தன என்பதையும் பரம ரகசியம் போல மூடிமறைப்பது ஏனோ?

இன்னுமா இவர்களை நம்பி ஏமாற போகிறீர்கள்?


சுடுகாட்டில் எரியும் பிணத்தை கூறுபோட்டு சாப்பிடும் நபர்.. நெல்லை அருகே பரபரப்பு...


நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூருக்கு அருகிலுள்ளது டி.ராமநாதபுரம் கிராமம். இந்த கிராமத்திலுள்ள விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கனகசபாபதியின் மகன் முருகேஷன் (43). இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

முருகேஷனுக்கு கஞ்சா, மது உள்ளிட்ட போதை பழக்கம் உண்டாம். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

 இதனைத் தொடர்ந்து மனைவி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அங்குள்ள சுடுகாட்டில் எரியும் பிணங்களை யாரோ ஒரு மர்ம நபர் தின்று செல்வதாக தகவல் கிராமம் முழுவதும் வேகமாக பரவியது.

இந்த நிலையில் கிராமத்து மக்களிடையே பெரும் பீதியும்,பரபரப்பும் உருவானது. இந்த நிலையில் அந்த கிராமத்தில் மூதாட்டி ஒருவர் இறந்துள்ளார். அவரை உறவினர்கள் சுடுகாட்டில் தகனம் செய்து விட்டு திரும்பி உள்ளனர்.

இதனை தொடர்ந்து இறந்து போனவர்களின் உடலை சாப்பிடும் மர்ம நபர் யார் என தெரிய வேண்டும் என நினைத்த அப்பகுதியை சேர்ந்த சிலர் சம்பவத்தன்று இரவு சுடுகாட்டுக்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் காத்திருந்த வேளையில் பிணம்.

 எரிந்து கொண்டிருந்த போது அங்கு கையில் அரிவாளோடு வந்த முருகேசன் எரிந்து கொண்டிருந்த மூதாட்டியின் சடலத்தை கம்பால் விலக்கி கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்டி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதனைக்கண்ட மறைந்திருந்தவர்கள் குரல் எழுப்பி கற்களால் எரிந்துள்ளனர். பின்னர் அவர் ஓடியதாகவும் கூறுகின்றனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராமத்து மக்கள் இது குறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த போலீஸார் மனித மாமிசம் சாப்பிட்ட முருகேசனை பிடித்து விசாரணை செய்தனர்...

Weight loss / விரைவாக உடல் எடையை குறைப்பது எப்படி.?


https://youtu.be/I1gBxAOLYHU

Subscribe the channel for more tips...

கோபத்தை குறைக்க வழி....


கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடந்தது. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பதில் தந்திருந்தார்கள். ஒருவர் கூறினார், நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொல்ல, அவர்கள் ஒன்று செய்கிறார்கள்.

இதனால் கோபம் உடனே வந்து விடுகிறது என்றார். மற்றொருவர், யாராவது என்னை தவறாகச் சொல்லி விட்டார்கள் என்று உடனே கோபம் வந்துவிடும் என்றார். அடுத்தவர், நான் செயாத்தைச் செய்த மாதிரி சொல்லி விட்டார்கள் என்றால் அவ்வளவுதான் அவர்கள் என்கிறார்.

இன்னொருவர், சொன்னதைத் திரும்பத் திரும்பச் சொன்னால், நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று சொல்லுகின்றார். வேறோருவரோ, நினைத்தது கிடைக்கவில்லை என்றால் சும்மா விடமாட்டேன் என்றார்.

இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர். இப்படி அடுத்தவர்கள் எதாவது செய்தால் இவர்களுக்குக் கோபம் ஏற்படுமாம். அது சரி நீங்களே எதாவாது தவறு செய்தால் உங்கள் மீது கொபப்படுவீர்களா? என்பதற்கு, அது எப்படி நீங்கள் எங்கள் மேலேயே நாங்கள் கோபப்படுவோமா என்றனர்.

கோபம் என்றால் என்ன? கோபம் என்பது அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் தண்டனைக்குப் பெயர்தான் கோபம். அதுமட்டுமல்லாமல் நாம் நம் கோபத்தை குறைக்க அடுத்தவர்களிடம் இதே கோபத்துடன் செயற்பட்டால் நட்பு நசுங்கி விடும். உறவு அறுந்து போகும். உரிமை ஊஞ்சலாடும்.

நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் தண்டனை என்ன? சவுக்கு எடுத்து சுளீர் சுளீர் என்று எங்களையே அடித்துக் கொண்டால் மட்டும் அதற்குப் பெயர் தண்டனை இல்லை. கோபம் ஏற்படுவதால் பதட்டம் உண்டாகின்றது. இதனால் எங்கள் உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுகின்றது.

இந்தப்பாதிப்பால் நரம்புத்தளர்ச்சி, இரத்த அழுத்தம், மன உளைச்சல், நடுக்கம் போன்ற உபாதைகள் உண்டாகின்றது. இதைத் தடுக்க வைத்தியரிடம் சென்று மாத்திரை மருந்து சாப்ப்பிடுவோம். இதே நிலை நீடித்தால் ஒரு மன நோயாளி போல் ஆகி விடுவோம்.

இது பொய்யல்ல சத்தியமான உண்மை இது. இதெல்லாம் நீங்க சொன்னீர்கள் உண்மை மாதிரி தான் தெரிகிறது என்று நீங்கள் சொல்வதும். அப்படியே கோபத்தை குறைக்கிறதுக்கும் வழி சொல்வீர்கள் என்றால் நன்றாக இருக்கும் என்று புலம்புறதும் புரிகிறது.

அப்படி வாங்க வழிக்கு. அன்பின் வேறொரு விதமான வெளிப்பாடுதான் கோபம். முதலில் அடுத்தவர்களிற்குக் கோபம் வருகின்ற மாதிரி நீங்கள் நடக்காதீர்கள். அடுத்தவர்களை குறை சொல்லாதீர்கள். எதையும் அடுத்தவர்களிடம் எதிர்பார்க்காதீங்கள்.

அவர்கள் உங்கள் மேல் கோபப்பட்டால் முதலில் மன்னிப்புக் கேளுங்கள். ஈகோ பார்க்காதீர்கள். நீங்கள் கோபப் படுகின்ற மாதிரி அடுத்தவர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். முதலில் மன்னிப்புக் கேட்டு என்னைக் கொஞ்சம் யோசிக்க விடுங்கள் அமைதியாகி விடுங்கள். எவர்மேல் தவறு என்று சிந்தியுங்கள்.

கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாகி விடும். அப்படி இல்லை என்றால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லுங்கள். தனிமையாக உட்கார்ந்து யோசியுங்கள். அடிக்கடி யாரிடம் கொபப்படுகிறீர்களோ அவர்களிடம் மனம் விட்டு இன்பமாக சிரித்து பேசுங்கள். அடுத்தவர்களே தவறு    செய்திருந்தால் கூட நீங்க நல்லது பண்ணுங்க.

அடுத்தவங்க என்ன செய்து விட்டார்கள் என்று கோபப்படுகிறோம். என்ன நடந்துவிட்டது பெரிதாக. என்னத்தை இழந்துட்டோம். மரணம் ஒன்று தான் மாபெரும் இழப்பு. அதை தவிர வேறொன்றுமே இழப்பு கிடையாது. எல்லாத்தையும் சமாளித்து விடலாம் என்னும் முடிவுக்கு வாங்கள்.

வீட்டு பெரியவர்கள்  திட்டும் போது கவனித்திருப்பீர்கள் என்னத்த பெரிதாகச் சாதித்து விட்டீர்கள் என்று. நாட்காட்டியில் உள்ள தேதி பேப்பரை கிழித்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு நாளும் தூங்க செல்லும் முன் இன்றைக்கு என்ன சாதித்தோம் என்று யோசித்து விட்டு தூங்குங்க.

அடுத்தவர்களுக்கு நல்லது செய்யாவிடினும் கோபம் என்கிற கொடிய நோயை பரப்பாமல் இருந்தாலே நீங்க அவங்களுக்கு நல்லது செய்த மாதரி தான். தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்பவன் கூட. ஒரு வினாடி யோசித்தானால் தனது முடிவை மாற்றிக்கொள்வான்.

நமக்கோ ஆறு அறிவை ஆண்டவன் கொடுத்துள்ளான். இதில் ஆறாவது அறிவை அப்பப்ப யோசிப்பதற்கு உபயோகம்  பண்ணுவீர்கலானால்... கோபம் வரவே வராது. நாமெல்லாம் சாதிக்கப்பிறந்தவர்கள்.

கோபப்படாமல் இருப்பதே ஒரு மாபெரும் சாதனை தான். வாழ்வது இந்த பூமியில் ஒரு முறை தான். அதை கோபப்படாமல் சிறந்த முறையில் வாழ்ந்து சாதிப்போம்...

இந்து முறைப்படி திருமணம் செய்பவர்கள் திமுக உறுப்பினராகக் கூடாது என்று அறிவிக்க ஸ்டாலின் தயாரா?- சரத்குமார் சவால்


அமானுஷ்யம்...


பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும்.

பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்க கொள்ளவே விரும்பும்..

எனவே தான் அறைகளில் நறுமணம் அல்லது வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன....

பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காண முடியும்..

உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம். .

பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்க கொள்ளவே முயற்சி செய்யும்....

விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும். .

பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள்....

பேய்கள் அல்லது ஆவிகள் குளிர்மையானவை. அதனால் தான் அவைகளை நீங்கள் சந்திக்கின்ற பொழுது மிக குளிர்மையை உணர்வீர்கள். .

பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும்....

நல்ல பேய்கள் அல்லது ஆவிகள் பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக கொடூரமானதாக இருக்கும்....

பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது..

எப்பவுமே கோவில்கள்/ சர்ச்சுகளை வழிபாடு தலங்களை அண்டியே சுற்றியபடி இருக்கும். .

பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings)உண்டு.. ஆனால் உணர (sense) முடியாது. ....

பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முயற்சிக்கும். .

பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட] கொலை செய்ய முடியாது.. ஆனால் ஒருவன் தன்னை தானே கொலை செய்யும் அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு....

பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல..

எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும். .

பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்....

பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும். .

பேய்கள் அல்லது ஆவிகள் இறந்து போனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு...

மஞ்சள் இருக்க அஞ்சல் ஏன்?


மஞ்சளை 'ஏழைகளின் குங்குமப்பூ’ என்பார்கள். விலை உயர்ந்த குங்குமப்பூ தரும் பலன்களைக் குறைந்த விலையில் கிடைக்கும் மஞ்சள் தருகிறது. இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள் இது.

அழகு, ஆரோக்கியம், ஆன்மிகம் என மூன்றும் கலந்த முத்தான மூலிகை மஞ்சள்.

இதன் அறிவியல் பெயர், 'கர்க்குமா லாங்கா’ (Curcuma longa). இதில் உள்ள 'கர்க்குமின்’ (Curcumin)  என்ற வேதிப் பொருள்தான் மஞ்சள் நிறத்தைத் தருவதோடு, மஞ்சளின் நற்பலன்கள் அனைத்துக்கும் காரணியாகவும் விளங்குகிறது.

மஞ்சளின் மருத்துவக் குணங்கள்பற்றி சித்த மருத்துவர் வீரபாபு விளக்கமாகப் பேசினார்.

'கப்பு மஞ்சள், கறி மஞ்சள், மர மஞ்சள், விரலி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என மஞ்சளில் பல வகைகள் உள்ளன.

கப்பு மஞ்சள், புண்களை ஆற்றும்; சொறி, சிரங்கு, படை ஆகியவற்றுக்கு மேற்பூச்சாகவும் பூசலாம்.

கறி மஞ்சள் என்பது நாம் சமையலுக்குப் பயன்படுத்துவது.

விரலி மஞ்சளைப் பொடிசெய்து, தினமும் பாலில் கலந்து குடித்துவந்தால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

மர மஞ்சளை வேப்பிலையுடன் சேர்த்து அரைத்துப் பூச, அம்மை நோய் குணமாகும்.

கஸ்தூரி மஞ்சள் அழகுக்காகப் பயன்படுத்தப்படுவது. 

காய்கறி, கீரையுடன் மஞ்சளைச் சேர்த்துச் சமைக்கும்போது, புழு, பூச்சிகள் அழிக்கப்பட்டுவிடும்.

மஞ்சளும் சந்தனமும் கலந்து முகத்துக்குப் பூசிவந்தால், மினுமினுப்பு ஏறும். கரும்புள்ளிப் பிரச்னை இருக்காது.

மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி. எனவேதான், வீட்டைச் சுற்றிலும் மஞ்சள் கலந்த நீரைத் தெளிப்பார்கள். இதனால் பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுக்கள் பரவாது.

வெயிலில் அலைவதால் சிலருக்குத் தலையில் நீர் கோத்துக் கடுமையான தலைவலி ஏற்படும். மஞ்சளைத் தணலில் போட்டு, கரியாக்கும்போது வெளிவரும் புகையை நுகர்ந்தால், நீர்க்கோவை சரியாகும்.

வீக்கத்தைக் குறைக்கும். காயங்களை ஆற்றும்.

புற்றுநோய்க் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

அருகம்புல்லுடன் மஞ்சளைச் சேர்த்து அரைத்து வியர்க்குரு மற்றும் வேனல் கட்டிகளில் தடவி, இரண்டு மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இதுபோல் தொடர்ந்து செய்துவர சில நாட்களில் தொல்லை நீங்கும்.

மஞ்சள்தூளைப் போட்டுக் காய்ச்சிய நீரில் வாய் கொப்பளிக்க, தொண்டைப்புண் ஆறும். சளிப் பிரச்னையும் சரியாகும்.

பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் தங்களுடைய உணவில் மஞ்சளைச் சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

கர்ப்பக் காலத்தில் வயிற்றில் ஏற்பட்ட தளர்ச்சி குறைந்து, வயிறு இறுக இது உதவுகிறது.

குளவி, தேனீ போன்றவை கொட்டினால், வலி - கடுப்பு ஏற்படும்.

மஞ்சளுடன் வேப்பிலையைச் சேர்த்து அரைத்துக் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்; வலி குறையும்.

தீப்புண் ஏற்பட்டால் சிறிது வெங்காயச் சாற்றுடன் மஞ்சள்தூளைக் குழைத்துப் பூசினால் குணமாகும்.

சாதம் வடித்த நீரில் சிறிது மஞ்சள்தூளைக் கலந்து குடித்தால் வயிறு உப்புசம் சரியாகும்.

சம அளவு மஞ்சளையும் மிளகையும் அரைத்து மோரில் கலந்து குடித்தால், பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் வயிற்று வலி கட்டுப்படும். தலைவலி குணமாகும்.

மஞ்சளையும் சந்தனத்தையும் சம அளவில் அரைத்துப் பருக்களின் மீது தடவிவந்தால், சில நாட்களிலேயே பருக்கள் மறைந்துவிடும்.

அடிபட்ட காயங்களின் மீது மஞ்சளைப் பூச, ரத்தம் வெளியேறுவது தடுக்கப்படும்.

மஞ்சள் பூசினால் முடி உதிருமா?

பெண்கள் முகத்துக்கு மஞ்சள் பூசிக் குளிப்பதால்தான் அவர்களது முகத்தில் மீசை, தாடி வளர்வதில்லை என்ற நம்பிக்கை கிராமப்புறங்களில் உண்டு. இதனால் ஆண்கள் முகத்தில் மஞ்சள் பூசப் பயப்படுவார்கள்.

ஆனால், மஞ்சளுக்கும் முடி உதிரலுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுதான் உண்மை.

பெண்களுக்கு முகத்தில் முடி வளர்வது என்பது ஹார்மோன்களால் ஏற்படுவது.
பிறகு ஏன் பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசிக் குளிக்கிறார்கள்?

மஞ்சள் ஓர் அழகுசாதனப் பொருள். சருமத்தைப் பொலிவாக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு.

எனவே தான் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு அந்தப் பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது.

அதற்குப் பதிலாக மஞ்சள் சேர்க்கப்பட்ட அழகு க்ரீம்களைப் பயன்படுத்துகிறார்கள். காசு அதிகம் கொடுத்து ரசாயனங்களுடன் சேர்க்கப்பட்ட மஞ்சளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இயற்கையாகக் கிடைக்கும் மஞ்சளைப் பயன்படுத்தியே அழகைப் பெறலாமே...

உலகில் அனைத்து இடங்களிலும் அவர்கள் இனம், மொழி மற்றும் மண் சார்ந்தே அரசியல் வளர்கிறது, ஆனால் தமிழ்நாட்டில்..?


இறுதிப்பதிவு தமிழர்களின் கைகளில் தமிழ் தேசிய அரசியலும், அதிகாரமும் என்றே நிறைவு பெறும்...

தியானம் என்பது ஒரு பரிசோதனை...


கடவுளிடம் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..?

பரவாயில்லை.. தியானத்திற்கு அது ஒரு தடையாக இருப்பதில்லை.

ஆன்மா இருக்கிறது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா.....?

பரவாயில்லை.. தியானத்திற்கு அது ஒரு தடங்கலாக இராது.

எதிலுமே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா......?

நல்லது. அதுவும் ஒரு தடை அல்ல.

நீங்கள் தியானிக்க முடியும்.

ஏனெனில் உள் நோக்கிச் செல்வது எவ்வாறு  என்பதை மட்டுமே தியானம் தெரிவிக்கிறது.

ஆன்மா இருக்கிறதா இல்லையா என்பது ஒரு பிரச்சினையே இல்லை. கடவுள் உண்டா இல்லையா என்பது பற்றி கவலையே இல்லை.

நீங்கள் (உயிரோடு) இருக்கிறீர்கள்-இந்த ஒரு விஷயம் நிச்சியமானது.

சாவுக்குப் பிறகு நீங்கள் இருப்பீர்களா இருக்க மாட்டீர்களா என்பது முக்கியமான விஷயம் அல்ல.

இந்தக் கணத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற ஒரு விஷயம் மட்டுமே முக்கியமானது.

நீங்கள் யாராக-என்னவாக இருக்கிறீர்கள்.? அதற்குள் நுழைவதே தியானம் ஆகும்.

உங்கள் சொந்த உயிர்த்தன்மைக்குள் அதிக ஆழமாகச் செல்வதே தியானம் ஆகும்.

அது தற்காலிகமானதாகக்கூட இருக்கலாம். நீங்கள் நித்தியமானவராக இல்லாதிருக்கலாம். எல்லாவற்றையுமே சாவு முடிவு கட்டிவிடலாம்.

நீங்கள் நம்பியே ஆகவேண்டும் என்று எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. பரிசோதனை செய்து பாருங்கள் என்று மட்டுமே சொல்கிறேன்.

முயன்று பாருங்கள், ஒரு நாள் அது நிச்சியம் நிகழ்கிறது.

எண்ணங்கள் இல்லாது ஒழிகின்றன. எண்ணங்கள் மறைந்ததும், திடீரென்று, உடம்பும் நீங்களும் வெவ்வேறாக இருக்கிறீர்கள்.

ஏனென்றால், எண்ணங்களே இணைப்புப் பாலமாக இருக்கின்றன. எண்ணங்கள் வாயிலாகத்தான் நீங்கள் உடம்புடன் சேர்ந்திருக்கிறீர்கள். அதுவே இணைப்புக் கண்ணி.

திடீரென அந்த இணைப்புக்கண்ணி மறைகிறது. நீங்கள் ஓரிடத்தில் இருக்கிறீர்கள், உடம்பு ஓரிடத்தில் இருக்கிறது.

இவ்விரண்டிற்கும் இடையில் எல்லையற்ற இடைவெளி இருக்கிறது.

இந்த உடம்பு அழியும். ஆனால் நீங்கள் அழிய முடியாது. அழிவில்லை என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள்.

அதன்பின், அது ஒரு வறட்டுக் கோட்பாடு போன்ற ஒன்றாக இருப்பதில்லை. அது ஒரு மத நம்பிக்கையாகவும் இருப்பதில்லை.

அனுபவமாகவே தானே கண்டுணர்ந்து தெளிந்த அனுபவமாகவே இருக்கிறது.

அந்த நாளிலேயே மரணம் மறைகிறது.

அன்றே சந்தேகம் மறைகிறது.

ஏனென்றால் இனி நீங்கள் உங்களை ஓயாமல் தற்காத்துக் கொண்டிருப்பதில்லை.

யாராலும் உங்களை அழிக்க முடியாது.

நீங்கள் அழிக்கப்பட முடியாதவராக இருக்கிறீர்கள். அப்போது தான் விசுவாசம் உருவாகிறது.

நிரம்பித் ததும்புகிறது. அப்படிப்பட்ட விசுவாசத்தில் இருப்பதே பரவசத்தில் இருப்பதாகும்.

அப்படிப்பட்ட விசுவாசத்தில் இருப்பதே கடவுளில் கலந்து இருப்பதாகும்.

அம்மாதிரியான விசுவாசத்தில் இருப்பதே பூரண நிறைவடைந்து இருப்பதாகும்.

எனவே விசுவாசத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் என்றுகூட நான் கூறுவதில்லை.

தியானத்தில் பரிசோதனை மேற்கொள்ளுங்கள் என்றே சொல்கிறேன்...

உடனடியாக வெள்ளையாக மாற பேஸ் பேக்...


https://youtu.be/M8SQ0QGkUxM

Subscribe the channel for more videos...

மோடியின் 4 ஆண்டு ஆட்சியில், வங்கிக்கடன் மோசடி அதிகரிப்பு...


இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து ரூ.55,000 கோடியாக உள்ளது என ஆர்.டி.ஐ-இல் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது...

தமிழகத்தில் அஜினோ மோட்டோவை தடைச் செய்வோம்...


மர செக்கு எண்ணையின் மகத்துவம்...


மர செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள்...

நல்லெண்ணெய் , தேங்காய் எண்ணெய் , விளக்கெண்ணெய்..

ரசாயன கலப்பு உரங்கள் இல்லாமல் இயற்கையான உரங்கள் மூலமாக விளைந்த மூலப்பொருள்கள் கொண்டு செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள்.

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும். நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.

இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும் இருக்கும்.

இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான். இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில், கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..

இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன.

இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும், மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டுவலியின்றி கால்நடையாகவே சென்று வந்தனர்.

அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக நல்ல எண்ணெய் என்று சொன்னார்கள்.

வெளிநாட்டில் கூட இதை Queen of Oil  என்று அழைக்கிறர்கள்.

தேங்காய் எண்ணெய்..

இன்று நாம் அணைத்து விதமான சமையல் விருந்துகளுக்கும் ரீஃபைண்ட் ஆயில் தான் பயன்படுத்துகிறோம், அனால் இன்றளவும் கேரளா மக்கள் தேங்காய் எண்ணெயைத் தான் சமையலுக்கு பயன்படுதிகின்றனர்.

அதனால் தான் அவர்களுடைய தலை முடி கரு கருவென்று நீளமாக உள்ளது, ஆனால் அவர்களை விட வும் நமது முடி கருமையாக உள்ளது. ஏனெனில் கிட்டத்தட்ட எழுபது சதவீதம் மக்கள் தலைசாயத்தை உபயோகிகிறார்கள் இன்றைய தமிழ் நாட்டு மக்கள்.

ஆனால் நாமோ சமையலுக்கு  நல்ல மனத்தையும் , சுவையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் தேங்காய் எண்ணையை விடுத்து கண்ட கண்ட எண்ணைகளை நாடி செல்கிறோம். ஆனால் நமது மக்கள் அதிலும் ஒரு இரசாயன கலப்படத்தைச் செய்கின்றனனர்.அது தான்  சல்பர்.  (அதன் படம் இதில் இணைக்கப்பட்டுள்ளது).

அது ஏன் கலக்குகிறார்கள்- எண்ணெய் விரைவில் கெடாமல் இருக்கவும். வெண்மை நிறமாக இருக்கவும், சரி அது நல்லது தானே என்று சொல்லுகிறார்கள் சிலர்.

ஆனால் அதனால்  வரும் தீமையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

சல்பர் கலந்த தேங்காய் எண்ணெய் உபயோகிக்கும் போது தலை முடி அதிகம் உதிர்கிறது. மேலும்  கெட்டு போன தேங்காயும்  சேர்க்கபப்டுவதால்  வயிற்று உபாதைகளும் உண்டாகிறது.

ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் கொழுப்பு சத்து இல்லாத ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள் எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.

சரி., ரீஃபைண்ட் ஆயில் எப்படி  தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போமா..

மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள்.

பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கி விடுகிறார்கள்.

பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள்.

இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது.

திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் என்று
நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது
அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.

சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.

செக்கில் ஆட்டி எடுக்கப்படும் இயற்க்கையான எண்ணெய்யை சூடுப்படுத்தினால்... அது ரசாயன கலவையாக மாறாது. அதன் தாதுப் பொருள்கள் அப்படியே சிதையாமல் நமக்கு கிடைக்கும்.

எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால்
இன்று மக்கள் பலவிதமான் நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக.பெரிய தொகைகளை செலவளித்து கொண்டு
இருக்கிறார்கள்.

ரசாயன பொருட்களால் பாழ்படுத்தப்பட்டு., உடல் ஆரோக்கியத்திற்க்கு அவசியமான பொருட்கள் நீக்கப்பட்ட ஒருதிரவத்தை ரீஃபைண்ட் ஆயில் என்ற பெயரில் விற்பனை செய்ய அரசாங்கமும்., மெடிக்கல் கவுன்சில்களும் எப்படி அனுமதி அளிக்கின்றன...?

நாமும் யோசிக்கும் சக்தியை ஏன் இழந்து விட்டோம்.?

நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பதினால் மட்டும் தான் காரணம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.

கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. இதற்க்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது இந்த ரீஃபைண்ட் ஆயில்..

உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கும் இயற்கைக்கு மாறுவோம்...

நாளை நாம் சுவாசிப்பதும் நஞ்சாகி விடும்...


ஓகக் கலை (யோகா) தமிழர்களின் கலை...


தமிழர்களின் ஓகக் கலையை மீட்போம்... தமிழ்ச் சித்தர்கள் உலகிற்கு வழங்கிய ஒப்பற்ற ஓகக்கலைகளின் தமிழ்ப் பெயர்களை அறிவோம்...

ஓகம் (யோகம்).
ஓகக் (யோக) கலை.
ஓக இருக்கை (யோகாசனம்).

5000 ஆண்டுகளுக்கு முன் பண்டைய தமிழகத்தில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை ஓகக் (யோக) கலை ஆகும். அதில் ஓக இருக்கை (யோகாசனம்) குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும்.

ஓகம் என்ற சொல் தமிழ்ச் சொல் ஆகும்.

ஓகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்.

ஆசனம் என்ற சொல்லுக்கு ‘இருக்கை’ என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். தமிழில் இதை ஓக இருக்கை என்றழைக்கலாம்.

“யோக்” என்பது வடமொழிச் சொல். அதுவேதான் ஆங்கிலத்திலும் யோகா என்றாகியது. ஆனால் நம்முடைய தமிழில் “ஓகம்” என்ற சொல்தான், இந்த யோகா என்பதற்கான அடிப்படை மூலம். நெடுங்காலமாக இங்கே புதிர் ஒன்று நடந்துகொண்டு இருக்கிறது. நம்முடைய கலைகளை வடமொழி தனதாகக் கையகப்படுத்திக்கொண்டு மாற்றியமைத்து, திரித்து, தனது போலவும், இவற்றினுடைய மூலமே தங்களது போலவும் தமிழர்களிடம் உள்ள எல்லா நல்லவற்றையும் களவாடிக்கொண்டது. ஓகம் என்றால் முயற்சி, வினை, பாடு, கடினம், உழைப்பு, இது போன்ற பல்வேறு பொருட்கள் உண்டு. ஓகம் என்பதற்கு இணையான இன்னொரு சொல் தவம்.

தமிழனின் தொன்மைக்கும் பண்பாட்டுச் சிறப்பிற்கும் அறிவியல் மேன்மைக்கும் நிலைக்கலனாக நிற்பது ஓகக் (யோக) கலை. உடல்நலனை நல்ல இயங்காற்றலோடு வைத்திருப்பதற்கும் உள்ளுறுப்புகளின் வலிமைக்கும் அடிப்படையானது இந்த “ஓகக்கலை”. இந்தக் கலை முழுவதும் சமற்கிருத மயமாக்கப்பட்டிருக்கிறது. யோகா, யோகாசனம், அத யோகம், இராச யோகம் என்றெல்லாம் வடமொழியாகவே இருக்கிற இந்தக்கலை, நமது தமிழரின் அரிய கலைச்செல்வம், பரம்பரச் சொத்து என்று நிறுவுகிறார் அசித்தர்

“யோக்” என்பது வடமொழிச் சொல். அதுவேதான் ஆங்கிலத்திலும் யோகா என்றாகியது. ஆனால் நம்முடைய தமிழில் “ஓகம்” என்ற சொல்தான், இந்த யோகா என்பதற்கான அடிப்படை மூலம். நெடுங்காலமாக இங்கே புதிர் ஒன்று நடந்து கொண்டு இருக்கிறது. நம்முடைய கலைகளை வடமொழி தனதாக கையகப்படுத்திக் கொண்டு மாற்றியமைத்து, திரித்து, தனது போலவும், இவற்றினுடைய மூலமே தங்களது போலவும் தமிழர்களிடம் உள்ள எல்லா நல்லவற்றையும் களவாடிக் கொண்டது.

ஓகம் என்றால் முயற்சி, வினை, பாடு, கடினம், உழைப்பு, இது போன்ற பல்வேறு பொருட்கள் உண்டு. ஓகம் என்பதற்கு இணையான இன்னொரு சொல் தவம்.

ஓக வழிபாடு...

உலகு என்னும் சொல்லின் அடியாகப் பிறந்ததே ஓகம் எனும் சொல்லாகும். ஒன்றித்தல் – ஒன்றுதல், ஒருக்குதல் எனபதுதான் அதன் கருத்து மூலம்.

உகு > ஒகு > ஒக்கு.
ஒக்கு + தல் > ஒக்குதல் = ஒத்தல். ஒத்திருத்தல், ஒன்றாதல், ஒருமித்தல்.

உகு > ஒகு > ஓகு > ஓகம் = பொறி புலன்கள், மனம் முதலிய கரணங்கள் போன்றவற்றால் அமைந்த மெய்க்கூறுகளின்வழி வெளிமுகமாக உயிர்ப்பையும் ஆற்றலையும் வீணடிக்காமல் உள்முகமாகத் திருப்பி ஒருக்குவது ஓகம்.

ஓகம் எனும் கருத்தைச் சற்றும் மாறாமல் கொண்டுள்ளதைக் காண்க. இந்த ஓகு > யோகு எனவும் சொல்லப்படும். வடவர் நூள்களில் இந்த செந்தமிழ்ச் சொல்லை யோகம் > யோகா எனத் திரித்துக் கூறுவர்.

ஓகப்பயிற்சியை இருந்து செய்யும் இருப்பு நிலைகள் உள்ளன. அவற்றை இருக்கை, ஆதனம் (அ) ஆசனம் என்பர். ஆசனங்களைக் கொண்டமையும் பயிற்சி என்பதால் அதனை ஓகாசனம் (யோகாசனம்) என்பர். அது எட்டுவகைப் பயில்வுமுறைகளைக் கொண்டது. ஆகையால், எட்டங்க ஓகம் எனப்பெறும். அது வடநூல் புணர்ச்சியில் அஷ்டாங்க யோகம் எனப்படும்.

இத்தனை காலங்கள் நம்முடைய கலைகளை வடநாட்டு ஆரியர்கள் சமஸ்கிருத பெயர் சூட்டி அவர்கள் கலைகளாகவே மாற்றினர். தமிழகத் தமிழர்களும் இந்த ஓகக் கலைகள் யாவும் தமிழர்களுடைய கலைகள் அல்ல அவை ஆரியக் கலைகள் என்றே நம்பி வந்தனர்.

அதனால் இக்கலைகளின் தமிழ்ப் பெயர்களை மீட்க எந்த நடவடிக்கையும் தமிழ் ஆசிரியர்களே எடுக்க வில்லை என்பது வேதனையான விடயம். மேலும் சமஸ்கிருத மொழியில் ஓகக் கலைகளை சொல்லிக் கொடுப்பது தான் மேன்மையான அறிவு என்றும் கருதினர் சில தமிழ் ஆசான்கள்.

தமிழில் சொல்லிக் கொடுத்தால் அது எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்வார்கள் அதனால் தங்கள் தொழில் பாதிக்கப்படும் என்றும் சிலர் கருதினர். ஆரியர்களும் அவ்வாறே புரியாத மொழியில் ஓகக் கலைகளை மக்களுக்கு சொல்லிக் கொடுத்து வந்தனர். அதனால் ஒட்டுமொத்த ஓகக் கலைகளுக்கும் தாங்கள் தான் உரிமைதாரர்கள் என்றும் கூறிவருகின்றனர் ஆரிய மதத்தினர்.

இந்நிலையில் தமிழ்நெறி வாழ்வியல் ஆசான் திரு. குப்பு அசித்தர் தமிழர்களின் ஓகக் கலைகளின் பெயர்கள் முழுவதையும் இப்போது மீட்டு நமக்கு தந்துள்ளார் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். தமிழர்கள் யாவரும் இனி ஓகக் கலைகளை தங்கள் தாய்மொழியிலேயே எளிதில் பயிலலாம். இக்கலைகள் குறித்த ஐயங்களை திரு குப்பு அசித்தர் அவர்களை தொடர்பு கொண்டும் தெளிவடையலாம்.

ஓக இருக்கைகளின் தமிழ்ப் பெயர்களுக்கு இணையான பிற மொழிப் பெயர்கள் பட்டியல்...

தமிழ்ப் பெயர்கள் , வடமொழிப் பெயர்கள், ஆங்கிலப் பெயர்கள்...

1. ஞாயிறு வணக்கம் – சூரிய நமசுகாரம் – SALUTE TO THE SUN
2. ஒற்றைக்கால் ஞாயிறு வணக்கம்- ஏகபாத சூரிய நமசுகாரம் – SALUTE THE SUN ON ONE LEG
3. அரை நிலாவிருக்கை – அர்த்த சந்திராசனம் – CRESCENT POSTURE
4. மலையிருக்கை – மேரு ஆசனம் – MOUNTAIN POSTURE
5. மலை நிமிர்வு இருக்கை – தாடாசனம் – MOUNTAIN ERECT POSTURE
நிலைத்திணை / பயிர் உயிரிகள் – PLANTS
6. தாமரை இருக்கை – பத்மாசனம் – LOTUS POSTURE
7. எழும்பு தாமரை இருக்கை – உத்தித பத்மாசனம் – RAISED LOTUS POSTURE
8. பூட்டிய தாமரை இருக்கை – பத்த பத்மாசனம் – LOCKED LOTUS POSTURE
9. நாணல் முதுகு இருக்கை – பச்சிமோத்தாசனம் – BACK ERECTING POSTURE
10. மரவிருக்கை – டோலாசனம் – TREE POSTURE
11. மூங்கில் வளைவு இருக்கை, கை கால் இணைவிருக்கை / – பாத அசுதாசனம் – HAND AND FOOT POSTURE
விலங்கு – CREATURES
நீர் உயிரிகள் – AQUATICS
12. தவளை இருக்கை – பெக்காசனம் – FROG POSTURE
13. மீன் இருக்கை – மச்சாசனம் – FISH POSTURE
14. சுறவம் இருக்கை – மகராசனம் – SHARK POSTURE
15. முதலை இருக்கை – மக்கராசனம் – CROCADILE POSTURE
16. சங்கு இருக்கை /
உடல் முறுக்கும் இருக்கை – வக்ராசனம் – SEA SHELL POSTURE
17. ஆமை இருக்கை – கூர்மாசனம் – TORTOISE POSTURE 18. கை நீட்டிய ஆமை இருக்கை விக்சேபம் கூர்மாசனம் – HAND STRETCHED TORTOISE POSTURE
ஊர்வன – REPTILES
19. தேள் இருக்கை – விருச்சிக ஆசனம் – SCORPION POSTURE
20. பாம்பு இருக்கை – புசங்காசனம் – SERPENT POSTURE
நடப்பன – VERTEBRATE
21. ஆமுகவாய் இருக்கை – கோமுகாசனம் – COW FACE POSTURE
22. ஆவினிருக்கை – கோவாசனம் – COW POSTURE
23. பூனை இருக்கை – பில்லியாசனம் – CAT POSTURE
24. ஒட்டகவிருக்கை – உசர்ட்டாசனம் – CAMEL POSTURE
25. நாய்முக இருக்கை – அதோமுக சுனங்கனாசனம்- DOG FACE POSTURE
26. புலி இருக்கை – வியாகராசனம் – TIGER POSTURE
27. அரிமா இருக்கை – சிம்மாசனம் – LION POSTURE
28. மிடுக்கான குதிரை இருக்கை – கம்பீர அசுவினி தீரனாசனம்- BRA
29. முயல் இருக்கை – சசாங்காசனம் – RABBIT POSTURE
30. நரி இருக்கை – மார்சரி ஆசனம் – FOX POSTURE
பறப்பன – AVES & INSECTS
31. வெட்டுக்கிளி இருக்கை – சலபாசனம் – GRASSHOPPER (LOCUST) POSTURE
32. அரை வெட்டுக்கிளி இருக்கை – அர்த்தசலபாசனம் – SEMI GRASSHOPPER POSTURE
33. மயிலிருக்கை – மயூராசனம் – PEACOCK POSTURE
34. புறாவிருக்கை – கப்போட்டாசனம் – DOVE POSTURE
35. பறக்கும் புறாவிருக்கை – உடுத்தாஉவா கப்போர்ட்டா- FLYNG DOVE POSTURE
36. கொக்குவிருக்கை – பக்காசனம் – CRANE POSTURE
37. ஒற்றைக்கால் கொக்குவிருக்கை – ஏகபாத பக்காசனம் – SINGLE FOOTED CRANE POSTURE
38. கலுழன் இருக்கை – கருடாசனம் – EAGLE POSTURE
39. சேவல் இருக்கை – குக்குடாசனம் – COCK POSTURE
40. நிற்கும் மயிலிருக்கை – கடுடா மயூராசனம் – STANDING PEACOCK POSTURE
41. வாத்து இருக்கை – அம்சாசனம் – DUCK POSTURE
நடனம் – DANCE
42. நடன இருக்கை – நடனாசனம் – POSTURE OF NATARASA
43. களிக்கூத்து – ஆனந்த தாண்டவம் – PLEASURE DANCE POSTURE
44. கூத்தரசன் இருக்கை – நடராச ஆசனம் – KING OF DANCE POSTURE
45. வீர அடைவு இருக்கை – வீர அனுமான் ஆசனம் – BRAVE STEP POSTURE
1முத்திரை – GESTURE
46. ஓக முத்திரை – யோகமுத்ரா – OGAM GESTURE
47. பெரு முத்திரை – மகாமுத்ரா – GREAT GESTURE
48. படையல் முத்திரை – அஞ்சலி முத்ரா – HOMAGE GESTURE
49. குதிரை மலவாய் முத்திரை – அசுவினி முத்ரா – HORSE’S ANAL GESTURE
50. ஆறுமுக முத்திரை – சண்முக முத்ரா – HEXAGON GESTURE
கருவிகள் – TOOLS
51. நாற்காலி இருக்கை – உட்கட்டாசனம் – CHAIR POSTURE
52. அரசரிருக்கை – பூரண உட்கட்டாசனம் – THRONE POSTURE
53. சக்கரவிருக்கை – சக்ராசனம் – WHEEL POSTURE
54. அரைசக்கரவிருக்கை – அர்த்தகடி சக்கராசனம் – SEMI WHEEL POSTURE
55. வில்லிருக்கை – தனுராசனம் – BOW POSTURE
56. காதருகுவில்லிருக்கை – ஆகர்ண தனுராசனம் – EXTENDED BOW POSTURE
57. படகிருக்கை / நாவாய் இருக்கை – நவாசனம் – BOAT POSTURE
58. முக்கோணவிருக்கை – திரிகோனாசனம் – TRIANGLE POSTURE
59. பரிமாற்ற முக்கோணவிருக்கை – பரிவர்த்த திரிகோனாசனம்- TRANSFER TRIANGLE POSTURE
60. கலப்பை / ஏர் / உழவிருக்கை – அலாசனம் – PLOUGH POSTURE
தொழில் – ACTIVITIES
61. வழிபாட்டிருக்கை – சசாங்காசனம் – WORSHIP POSTURE
62. வீரவிருக்கை – வீராசனம் – BRAVE POSTURE
63. நெற்றிக்கண் வழியன் இருக்கை – வீரபத்ராசனம் – GLABELLA VIEW POSTURE
64. அம்மி அரைக்கும் இருக்கை – உபவிசுட்டகோணாசனம் – GRINDING POSTURE
65. காலணிதையலிருக்கை – பத்ராசனம் – SHOEMAKER POSTURE
66. தேரோட்டி இருக்கை – சாரதாசனம் – CHARIOT RIDER POSTURE
67. தலை முழங்கால் இருக்கை, பூத்தொடுக்கும் இருக்கை / – சானுசீராசனம் – HORIZONTAL U POSTURE , MAKING GARLAND POSTURE.
உடல் உறுப்புகள் – ORGANS OF HUMAN BODY
68. இணை காலடி இருக்கை – சமபாதாசனம் – PARRALLEL FOOT POSTURE
69. ஒரு காலூன்றி இருக்கை – நின்ற பாதாசனம் – SINGLE LEG POSTURE
70. கோண இருக்கை – கோணாசனம் – ANGLED POSTURE
71. விலாப்பக்க கோண இருக்கை – பார்சுவ கோணாசனம் – RIBSIDE ANGLED POSTURE
72. மண்டிவல்லிருக்கை – வச்சிராசனம் – FIRM KNEELING POSTURE
73. மழலை இருக்கை – பாலாசனம் – CHILD POSTURE
74. கிடைநிலை வல்லிருக்கை – சுப்த வச்சிராசனம் – SUPINE ANKLE POSTURE
75. குந்தி கைகூப்பு இருக்கை – உட்கட்டாசனம் – PERCH AND SALUTE WITH STRETCHED ARMS ABOVE HEAD
76. கை கூப்புகை தாமரை இருக்கை- பர்வட்டாசனம் – OVERHEAD RAISING OF ARMS AT LOTUS POSTURE
77. மாற்று அமர் இருக்கை – அர்த்தமத்ச்யேந்தராசனம் – CONTRA SITTING POSTURE
78. பூட்டிய கோணவிருக்கை – பத்தகோணாசனம் – LOCKED ANGLE POSTURE
79. நீள்காலடி இருக்கை – உத்தான பாதாசனம் – RAISED FOOT ERECT
80. ஓகத்துயில் – யோக நித்ரா – OGAM SLEEP
81. அரை உடல் இருக்கை – விபரீதகரணி – HIP STAND POSTURE
82. முழு உடல் இருக்கை – சர்வாங்காசனம் – SHOULDER STAND
83. பாதி முழு உடல் இருக்கை – பர்வதாசனம் – SEMI SHOULDER STAND
84. மேடை இருக்கை – பீடாசனம் – STAGE POSTURE
85. பகுதலை இருக்கை – அர்த்த சிரசாசனம் – SEMI INVERTTED
86. தலை இருக்கை – சிரசாசனம் – INVERTTED POSTURE
தூய்மை – CLEANSING
87. வளிகழித்தலிருக்கை – பவன முக்தாசனம் – WIND RELEASING TECHNIQUE
88. வளி எழுப்பிக்கட்டுவிருக்கை – உட்டியானபந்தம் – FLYUP LOCK
89. குடல் சுழற்றியிருக்கை – நௌலி – BOWEL CIRCULATING POSTURE
90. மூச்சொழுக்கம் – பிராணாயாமம் – ORDER OF BREATH
91. தலை தூய்மை – கபாலபாதி – CLEANSING OF BRAIN
92. துருத்தி மூச்சு – பசுதிரிகா – BELLOW BREATH
93. சீழ்க்கை – சீத்காரி – WHISTLING
94. நீர்த் தூய்மை – சலநேதி – WATER CLEANSING
95. குளிர் சீழ்க்கை – சீத்தளி – COOL WHISTLE
96. மூலக்கட்டு – மூலபந்தம் – ANAL CONTRACTION
97. நாடித் தூய்மை – நாடி சுத்தி – CLEANSING OF PULSE
98. தேனீ ஒலி – பிராமரி – HONEY BEE HISSING
99. கண் தூய்மை – திராடகா – EYE CLEANSING
100. பல்லிடுக்கில் காற்றுறிஞ்சல் – சதந்தா – INHALING THROUGH CLEANCHED TEETH
101. உள் மூச்சு – அனுலோமம் – INHALING
102. வெளி மூச்சு – விலோமம் – EXHALING
103. தொண்டை ஒலி – உச்சயி – HISSING OF PHARYNX
நிறைவு நிலை – PACIFICATION
104. இயல்பிருக்கை – சுகாசனம் – AT EASE POSTURE
105. அமைதி இருக்கை – சவாசனம், – LYING RELAX POSTURE...