சீர்திருத்தங்கள் மேற்கொள்ள முன்வருபவர்கள் கடவுள் மறுப்பாள திராவிடவாதிகளாகவும், வர்க்க பேதத்தை ஒழிக்க உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்று சொல்பவர்களாக மட்டுமே இருந்து.... எந்த நாட்டில், எந்த இடத்தில், எந்த ஊரில் சீர்திருத்தம் வந்திருக்கிறது?
கடவுளைக் கற்பிக்கிற பிராமணியப் பார்ப்பனியத்தை, உருவ வழிபாட்டை உடைத்தாரா பெரியார்?
பழனியாண்டவர் கோவிலுக்கு எல்லா சொத்துகளையும் எழுதிவைத்து விட்டு சென்ற பெரியாரின் தந்தையின் சொத்துகளை மீட்க பிராமணியர் இராஜாஜியின் அறிவுரையின் பேரில் வீட்டு வளாகத்தில் பழனியாண்டவர் கோயில் கட்டி அதற்கு டிரஸ்டி ஆகி சொத்தைத் திரும்பப் பெற்றவர் யார்?
கோவில் பெயரில் உள்ள சொத்தை நான் தொடமாட்டேன் என்றல்லவா பெரியார் சொல்லியிருக்க வேண்டும்?
வள்ளலார் கட்டிய சத்திய ஞான சபை பொதுச் சொத்து, அறிவும் தருகிறது - பசியும் ஆற்றுகிறது.
தன் உருவச் சிலை ஒன்றை உருவாக்கித் தன்னிடமே அளித்த போது அதை வாங்கி நிலத்தில் வீசி உடைத்தவர் வள்ளலார். ஆனால் ஊரெல்லாம் பெரியாருக்கு சிலைகள்.
வைகுண்டர் எனும் வழிபாட்டுப் பதியில் வணங்க வைகுண்டர் இட்டுச் சென்றது தன் உருவத்தை அல்ல, தன் கைத்தடி, தலைப்பாகை, கண்ணாடி.
காரணம் கைத்தடிக்கு வரி, மீசைக்கு வரி (அதனால்தான் நாடார்கள் பெரு மீசை இன்றும் வைக்கிறார்கள்) தலையில் அல்ல மேலாடையே ஆணும், பெண்ணும் அணியக் கூடாது என்ற மநு வின் திருவாங்கூர் சமஸ்தான ஆட்சியின் கொடுமைகளுக்குப் பதிலடி கொடுக்கவே தலைப்பாகை அணிவது, நெற்றியில் நேர் மேல் நோக்கி திருநீறு அணிவது.... என்ற வைகுண்டரின் புரட்சி சீர்திருத்தங்களே அந்த சமூகத்து மக்களைத் தலை நிமிரச் செய்தது.
நாட்டுக்குள் இருந்து போராடியவர்கள் வள்ளலார், தண்டபாணி சுவாமிகள், வைகுந்தர் எல்லாம்.
இடது சாரிகள் நாட்டை விட்டு வெளியேறி ரஷ்யாவிலும், கியூபாவிலும் போராடினோம்.
பெரியார் இன்றும் தன் முரண் சீர்திருத்தவாதியாகவே தொடர்ந்து நிலையில்லாத புகழிலில் தத்தளிக்கிறார்...