நமக்குள் இருக்கும் இயற்கையான ஆற்றல்கள் தான் நோய்களை குணமாக்கும் உண்மையான பிணிநீக்குனர்கள - ஹிப்போகிரெட் (Father of Western Medicine).
எண்ணங்கள் மூலமும், வியாதிகளை கவனித்து அதற்கு கவனம் அளிப்பதன் மூலமும் நாம் நம் உடலில் வியாதிகள் நிலைத்திருக்க வழி வகுக்கிறோம்.
உங்களுக்கு எப்போதாவது உடல்நலக் குறைவு ஏற்பட்டால் , அது குறித்துப் பேசாதீர்கள். அவ்வியாதி மேலும் பெருக வேண்டுமென்றால் மட்டும் பேசுங்கள்.
மக்கள் வியாதி பற்றிப் பேசுவதைக் கவனிக்கும் போது நீங்கள் அதற்கு ஆற்றல் அளிக்கிறீர்கள்.
மாறாக உரையாடலை நல்ல விஷயத்திற்குத் திருப்புங்கள்.
அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக உங்கள் மனத்தில் உருவகப்படுத்தி, அந்தச் சக்திமிக்க எண்ணங்களை பிரபஞ்சத்திற்கு அனுப்புங்கள்..
எண்ணங்கள் மூலமாக , ஈர்ப்பு விதி மூலமாக நமது ஆரோக்கியத்தை பேணவேண்டும் என்பதற்கான சாரம்சம்சங்களை ஏற்கனவே நாம் கண்டுள்ளோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.