எனது வயது 54 கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலமாக திராவிட மற்றும் ஜாதி கட்சி அரசியலை பார்த்து பார்த்து சலித்துப் போய் தான் கடைசியில் ஒரு குரல் கேட்டது அது தமிழனுக்கென்று ஒலித்த குரல் வந்ததால் தான்.
இன்று உங்களின் பாதையில் நடக்கத் தொடங்கி இருக்கிறோம் எனக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு வருத்தம் இருந்தது அதாவது நடுத்தர வயதிற்கு மேற்பட்டவர்கள் நாம் தமிழர் கட்சியை இன்னும் புரிந்து கொள்ளவில்லையே என்ற எண்ணம் இருந்தது.
அது இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மாறி உங்களுடைய பரப்புரைகள் நீங்கள் எடுக்கின்ற ஒரு தீர்க்கமான முடிவுக்கு நாங்கள் பெரும் ஆதரவு தரத் தொடங்கி உங்களிடம் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.
இந்த சூழ்நிலையில் ஈழத் தமிழர்களுக்கு உங்களைப் போல் ஒரு உறுதுணையாக அவர்களுக்கு நன்மை செய்யக்கூடிய வகையில் தலைமை தாங்கி நிற்பவர்கள் தமிழ்நாட்டில் யாருமே இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
அப்படி இருக்கின்ற தாங்கள் ஈழப்பிரச்சினையில் முற்றிலுமாக நம் மக்கள் அழிந்ததற்கு காரணமானதிமுகவும் காங்கிரசும் தான் என்பது நன்றாகத் தெரியும் அதே சூழ்நிலையில் இன்று நம் எதிரி உடனான திமுகவில்.
அங்கம் வகித்துக் கொண்டு இருக்கின்ற திருமாவளவனுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக நீங்கள்தான் குரல் கொடுக்கிறீர்கள் கிட்டத்தட்ட உங்கள் மீது இன்று 100 வழக்குகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இது அத்தனையும்தமிழன் நலன் சார்ந்த குறிப்பாக ஈழத் தமிழர்கள் பிரச்சனைக்காக எடுக்கப்பட்ட போராட்டங்களுக்காக உங்களுக்கு கிடைத்த வழக்குகள் இத்தனை வழக்குகள் உங்கள் மீது போடப் படும் போதெல்லாம்.
இதே திருமாவளவன் உங்களுக்காக ஒரு வார்த்தை கூட பேசவில்லை அதுமட்டுமில்லாமல் அவர் இன்றுவரை திமுகவில் தான் இருக்கிறார் இதையெல்லாம் விட அவர்இன்று வரை திமுக கூட்டணியில் தான் இருக்கிறார்.
திமுகவில் இருந்து ஒரு குழுவாக இலங்கைக்கு சென்றபோது அதில் உடன் சென்றதில் திருமாவளவனும் ஒருவர் உங்களுக்கு இது எப்படி என்று விளங்கி நாள்சரிதான் நாம்திமுகவை எதிர்த்து கொண்டிருக்கும் போது..
அதே கட்சியை கூட்டணியாக இருக்கும் திருமாவளவன் நம்முடைய தமிழ் தேசியத்துக்கு எப்படி ஆதரவாக இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் திருமாவளவன் வாக்கு அரசியல் செய்து கொண்டிருக்கிறார் அவர் தற்போது நடத்துகின்ற நாடகம் அனைத்துமே.
நம்முடைய தமிழ் தேசியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தான் அவர் இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து அவருக்காக நாம் குரல் கொடுப்பது தவறு என்றே எனக்குப் படுகிறது.
அதுமட்டுமல்ல திருமாவளவன் ஒரு ஜாதியை கொள்கையுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார் நாம் ஒட்டுமொத்த ஜாதிகளின் அடையாளமே இல்லாமல் ஒரு இயக்கத்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.
சில நேரங்களில் திருமாவளவன் பேசுகின்ற பேச்சுக்கள் எல்லாம் உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய ஜாதி கலவரத்தை கொண்டுபோய் தான் விடும் அந்த அளவுக்கு பெண்களை இழிவாகப் பேசக்கூடியவர் ஏதோ மனு தர்மம் என்ற ஒரு போர்வையில் இன்று பிரச்சினை செய்வது இவர்கள் தேர்தலை மனதில் வைத்தே செய்து கொண்டிருக்கிறார் என்பதை முதலில் நாம் அறிந்து அதை பரிசீலிக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
தமிழ் தேசியத்திற்கு அதுவும் நாம் தமிழருக்கு நேர் எதிரியாக இருப்பது இரண்டு விஷயங்கள்தான் ஒன்று பெரியாரிய கொள்கையை இரண்டு திருமாவளவன் போன்றோருடைய கொள்கைகளும் நமக்கு என்றுமே ஒத்துப் போகாதது அவர்களும் நம்முடன் ஒத்து வர மாட்டார்கள் அவர்களை உடன் வைத்திருப்பது நமக்கு பேராபத்தில் தான் கொண்டு போய் முடியும் சிந்தித்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறோம்...
- தமிழன் வெள்ளைச்சாமி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.