27/10/2020

ஈர்ப்பு விதி...

 


எண்ணங்களுக்குக் காந்த சக்கி இருக்கிறது.

அவற்றிற்குக் குறிப்பிட்ட அலைவரிசைகளும் உண்டு.

எண்ணங்களைச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது அவை பிரபஞ்சத்திற்குள் அனுப்பப்படுகின்றன எண்ணங்கள் பௌதீகப் பொருட்களாக உருப்பெறும்.

விரும்பியவற்றை மூன்று எளிய படிகள் மூலமாக உருவாக்க...


1.கேளுங்கள் (ASK)

2.நம்புங்கள் (BELIEVE )

3.பெறுங்கள் ( RECEIVE)


1. கேளுங்கள் (ASK)...

உங்களுக்கு வேண்டியதைப் பிரபஞ்சத்திடன் கேட்கும்போது, விருப்பம் குறித்த தெளிவை பெறுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. அத்தெளிவு நீங்கள் கேட்டதற்குச் சமானம்.

2.நம்புங்கள் (BELIEVE)...

கேட்டது ஏற்கனவே கிடைத்துவிட்டது போல நடந்து கொள்வது, பேசுவது, மற்றும் சிந்திப்பது ஆகியவை நம்பிக்கை கொள்வதாகும்.

கிடைத்துவிட்டது என்ற அலைவரிசையில் ஒளிப்பரப்பும் போது அதை பெற்றிட ஈர்ப்பு விதி மக்களை, நிகழ்வுகளை மற்றும் சந்தர்ப்பங்களை ஒருங்கிணைக்கும்.

3.பெறுங்கள் (RECEIVE )...

வேண்டும் என்று விரும்புபவற்றிற்கு, முன்னதாக நன்றி தெரிவிக்கும் செயல் ஆசைகளை முடுக்கிவிட்டு, பிரபஞ்சத்திற்கு இன்னும் சக்தி வாய்ந்த சமிக்கையை அனுப்பும்.. வேண்டியதை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியை மனத்தில் உருவாக்குவதுதான் அக்க்காட்சிப்படைப்பாகும்.

அகக்காட்சிப் படைப்பில் ஈடுபடும் போது அவற்றை இப்போதே கொண்டிருக்கும் உணர்வையும் சக்திமிக்க எண்ணங்களையும் உருவாக்கும்.

மனக்கண்ணால் என்ன பார்த்தீர்களோ அதே யதார்த்தத்தை ஈர்ப்பு விதி உங்களுக்கு திருப்பி அளிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.