24/07/2021

ஹாய் மெகா ஆஃபர் மிஸ் பண்ணிடாதீங்க...

 



லக்ஸ் ஒரு சோப்பின் விலை 1ரூபாய்....

லைபாய் ஒரு சோப்பின் விலை
 1ரூபாய்....
 
மெடிமிக்ஸ் ஒரு சோப்பின் விலை 1ரூபாய்...
 
சந்தூர் ஒரு சோப்பின் விலை
1 ரூபாய்...
 
இந்த ஆஃபர் தினமும்  குளிக்கிறவங்களுக்கு மட்டும் தான்...

உங்களுக்கு இல்ல சாரி...

நீங்க போய் தூங்குங்க.. 😂😂

வாழ்க்கையே கண்ணீரில்...

 




உனக்காக காலமெல்லாம்
காத்திருப்பேன் என்றாய்....

என் கரம் பிடிக்க ஓடிவா என்றாய்....

உன்னை தவிர 
வேறு பெண்ணை நான் பார்த்தாலே 
அந்த பெண்ணை அடிப்பேன் என்றாய்... 

கண்ணுக்குள் உன்னை வைத்தேன்....

உன் கரம் பற்ற தயாரான போது 
நீ மண்ணுக்குள் மறைந்துவிட்டாய்....

என் இதயத்தின் அழுகுரல்
கேட்கிறதா ?

மீண்டும் வந்துவிட மாட்டாயா ?

தினம் என் கண்ணீரால் கழுவுகிறேன்
உன் கல்லறையை.....

என் கண்ணீரை துடைக்க
நீ வரமாட்டாயா...

மண்வாசனை என்றால் என்ன?

 




1960ல் ஆஸ்த்திரேலியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் மண்வாசனைக்கான (Earthy Smell) காரணத்தை 1000 ஆண்டுகளுக்கு முன்னரே பாடிய சேக்கிழார் (Botany science).

நன்கு மழை பெய்வதற்கு முன் நம்மால் மண்வாசனையை நன்றாக உணர முடியும். அந்த வாசனை மண்ணில் வந்துக்கொண்டிருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அது தவறு.

மரங்களில் பூக்கும் பூக்கள் வெளியிடும் நறுமன எண்ணையின் கலவைதான் அந்த வாசனை. இதை என்ன அழகாக சேக்கிழார் உவமையுடன் கூறுகிரார்.

“நனைமருவும் சினை பொதுளி
நறுவிரைசூழ் செறிதளிரில்
நினகரமண் டலம் வருடும்
செழுந்தருவின் குலம்பெருகிக்
கனம் மருவி அசைந்தலையக்
களிவண்டு புடைசூழப்
புனல் மழையோ மது மழையோ
பொழிவு ஒழியா பூஞ்சோலை”

(பெரிய புராணம்; திருநாளைப் போவார் நாயணார் புராணம்: 1048)


பொருள்:


மலரும் அரும்புகளின் நறுமனம் சூரிய மண்டலத்தை வருட, செழுமையான மரங்கள் வானுயர்ந்து மேகங்களை தழுவ, தேன் உண்ணும் வண்டுகள் யாவும் ரீங்காரமிட பெய்யும் மழை தேன் மழையோ, மது மழையோ என்று சுவைத்திட பூஞ்சோலைகள் எங்கும் பூத்துக் குலுங்குகிறது.


அறிவியல்:


சில மரங்கள் அதிகம் இருக்கும் இடத்தில் தான் மழை வளம் அதிகம் இருக்கும். அது எத்தகைய மரங்கள் எனில் அதிக நறுமனத்தை தரும் பூக்களுடைய மரங்கள் இருக்கும் இடம்.


அதாவது புங்கை, சந்தனம், ஆலம், போன்றவை. இவ்வகையான மரங்கள் ஒரு வகையான நறுமன எண்ணெயை (petrichor) வெளிவிடும். அந்த எண்ணெய் மழை பெய்யும் முன் வரும் நீர்த்தன்மையுள்ள காற்றில் கலந்து மண் வாசனையாக வெளிப்படுகிறது. இந்த வாசனையானது காற்றில் பயனிப்பதால் நெடு தூரத்திற்க்கு பயணிக்க வல்லது.
ஆதலால் மழை வளத்தை பெருக்கும் இவ்வகையான மரங்களை வீதிகள் தோறும் வளர்ப்போம்..
மழை வளத்தை பெறுவோம்...

இது என்னடா போலீஸாருக்கு வந்த சோதனை...

 


மூனுசுழி ண , ரெண்டுசுழி ன என்ன வித்தியாசம்?


படிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத்தந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம்.

என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம் - தமிழ் வளரவே கூடாதாய்யா?

ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம்
4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?

தமிழ் எழுத்துகளில்..

ரெண்டுசுழி ன என்பதும் தவறு.
மூனுசுழி ண என்பதும் தவறு.

ண இதன் பெயர் டண்ணகரம்,
ன இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ட வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு டண்ணகரம் னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகரஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ற வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு றன்னகரம் னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க?)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..

(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து சேர்ந்தே வருவதைப் பாருங்களேன், இது புரியாம இதுகள  நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)

வேற மாதிரி சொன்னா
இதுவும் வர்க்க ஒற்றுமைதான்.

(வர்க்க எழுத்து-ன்னா, சேர்ந்து வரும் எழுத்து, அவ்ளோதான்)

இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம்) இந்த ண, ன எழுத்துகளை அறிந்து கொண்டால் எழுத்துப் பிழையும் குறையும்.

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ட இருக்கா, அப்ப இங்க மூனு சுழி ண தான் வரும். ஏன்னா அது டண்ணகரம்.

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ற இருக்கா, அப்ப இங்க ரெண்டு சுழி ன தான் வரும். ஏன்னா அது றன்னகரம்.

என்று புரிந்து கொள்ளலாம்...

திருட்டு திமுக Vs திருட்டு அதிமுக கலாட்டா...

 


ராமு Vs சோமு கலாட்டா...

 




ராமு வும் சோமுவும் காரில் போய்டு இருந்தாங்க... அப்போ..

ராமு : ஏன்டா சோமு சோகமா இருக்க...

சோமு : இல்லடா ராமு.. எங்க குடும்பத்திற்கே தூங்குற வியாதி இருக்குடா...

ராமு : என்னடா சொல்லுற...

சோமு : ஆமா டா ராமு...

ராமு : அப்போ உங்க தாத்தா எப்படி செத்தார்...

சோமு : எங்க தாத்தா தூக்கத்துலேயே நிம்மதியா செத்து போயிட்டாரு... தாத்தா நண்பர்கள் 4 பேர் அலரியே செத்தாங்க டா... 

ராமு : நல்ல சாவு டா சோமு... உங்க அப்பா எப்படி செத்தார்...

சோமு : அவரும் தூக்கத்திலே நிம்மதியா செத்துட்டாரு... அவர் நண்பர்கள் 2 பேரு அலரியே செத்தாங்க டா...

ராமு : அது ஏன்டா நண்பர்கள் மட்டும் அலரிட்டே செத்து போறாங்க...

சோமு : அதுவா டா..  தாத்தா வும்.. அப்பா வும்.. ஓட்டின கார்ல இருந்த நண்பர்கள்  தான் அலரிகிட்டே செத்தானுக லூசுப்பயலுக...

ராமு : அட பிக்காலிப்பயலே... 😳

சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு விற்க தயார் செய்யும் பாஜக...

 


திமுக செய்த தாமிரபரணி படுகொலைகள்...

 


சதிகாரியே...

 




உன் காதல் நிஜமென்று
நினைத்து....

என் நிழலைவிட்டு நடந்தேன்....

உன் பார்வை என்மீது
என்று நினைத்து...

நான் பார்வையை இழந்தேன்....

உன் வார்த்தை வேதமென்று நினைத்து
நான் வாய்பேச மறந்தேன்.....

உணர்ந்தேன்....

பெண்ணின் பார்வையில்
மூழ்கியவன்...

கரை சேர்வது சிலர் தான் என்று...

சோலார் சைக்கிள் தயாரித்து அசத்திய சிவகங்கை சகோதரர்கள்...

வீர ரகுகிருஷ்ணன்(12) மற்றும் சம்பத்கிருஷ்ணன் (11) என்ற சகோதரர்கள் சூரிய ஒளியில் இயங்கும் மிதிவண்டியை தயாரித்து அசத்தியுள்ளனர்...

வானவியலில் தமிழரின் பெருமை...

 




பெரும்பாலான உலக மக்கள் தாலமியின் தவறான அறிவியல் கண்டுபிடிப்பை நம்பி கொண்டிருந்த பொழுது அதே தாலமியின் காலகட்டத்திற்கு முன்பே தமிழரின் சரியான, புரட்சியான விஞ்ஞான கண்டுபிடிப்பை ஒருவரும் அறியவில்லையே?

தாலமி இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு {கி.மு 1(க)-ம் நூற்றாண்டில்} வாழ்ந்த எகிப்து வானவியலாளர் ஆவார்.

இவர் பூமியை சுற்றியே சூரியன், கோள்கள், ஏன் விண்மீன்கள் கூட சுற்றிவருகின்றன தன் கண்டுபிடிப்பாக அறிவித்தார்.

இந்த அறிவியல்! கண்டுபிடிப்பானது கோபர் நிக்கஸ், கலீலியோ வரும் வரை அதாவது கிட்டதட்ட கி.பி 1500 வருடங்கள் கோலோச்சியது

ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழ் புலவரான கடியலூர் உருத்திரங்கண்ணனா் பட்டினப்பாலையில் சூரியனையே ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றன என்று தெளிவாக எழுதியுள்ளார்.

நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல,
மலர் தலை மன்றத்தும் பலருடன் குழீகிக்,
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப்,
பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ, திருஞ்செருவின் இகன்மொய்ம்பினோர்.
சூரியனை சுற்றி வரும் கோள்களை போன்றே இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான் இப்பாடலில் மாவீரமும், “மாவிஞ்ஞானமும்” வெளிப்படுகிறது...

கணவன் பரிதாபங்கள்...

 




கல்யாணம் முடிந்து இரண்டாவது நாள்
மணப்பெண்ணை அலங்காரம் செய்த 
பியூட்டி பார்லருக்கு கணவன் சென்று
என் மனைவிக்கு அலங்காரம் செய்த
உங்களுக்கு என்னுடைய இந்த அன்பளிப்பு என்று, apple I phone -7 கொடுத்தார்,?

பியூட்டி பார்லர் அக்காவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை?,

சிரிச்சுக்கிட்டே பிரிக்கையில்.. அதன் உள்ளே nokia-1100 இருந்துச்சு, [box only apple phone]. 

அக்கா பேந்த பேந்த விளிக்க, .?

இப்படித்தானே எனக்கும் இருந்திருக்கும் என்று...

மாப்பிள்ளை எரிச்சலோடு கூறிவிட்டு சென்று விட்டார்.?

நீதிபதி கலாட்டா...

 


தடுப்பூசி பற்றி தேசத்தந்தை மகாத்மா காந்தி சொல்வதே கேளுங்க 😁