30/01/2018
தொடரும் வன்முறை, கண்டு கொள்ளுமா தமிழக அரசு...
காரைக்குடி மண்டலம், மதுரை கிளை சார்ந்த பேருந்து திருவாரூர் லெட்சுமணன் குடியிருப்பு அருகே சென்று கொண்டிருந்த போது பயணியிடம் டிக்கேட் கேட்ட நடத்துனர் ரவிச்சந்திரன் முற்படுகையில் பயணியுடன் வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது.
அதை கண்டு முருகன் ஓட்டுநர் பயணியை சமாதானம் செய்து கொண்டு இருக்கும் போது பயணி ஓட்டுநர் முருகனை மூர்க்கத்தனமாக தாக்கியதில் அவரது வலது காலில் முறிவு ஏற்ப்பட்டுள்ளது...
தொடரும் இதுபோன்ற வன்முறைகளை கண்டு நடவடிக்கைகள் எடுக்குமா..
ஓட்டுனர், நடத்துனர்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்குமா.. இந்த அரசு......
திருடர்களுக்கு அட்வைஸ்...
ஹலோ திருடாஸ்.. கம்பம் கனரா வங்கிக்குப் போங்க. இங்க டைம் வேஸ்ட் பண்ணாதீங்க...
கம்பம்: வீட்டில் நகைகள் இல்லை என்றும் நகைகள் அனைத்தும் குறிப்பிட்ட வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளது என்றும் வித்தியாசமான முறையில் தேனி மாவட்டத்தில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
கொஞ்சம் அசந்தா கோவணத்தையே உருவிவிடும் இந்த காலத்தில் பளபளப்பாக ஒரு வீடு பூட்டியிருந்தால் விட்டு விடுவார்களா என்ன. கரெக்டா நோட்டம் போட்டு வீட்டையே காலி செய்து வாங்களே. இதனாலேயே வீட்டை பூட்டி விட்டு எங்கு போனாலும் பொழுது சாய்வதற்குள் வந்துவிடுவார்கள்.
இல்லாவிட்டால் உறவினர்களிடம் சாவியை கொடுத்து வீட்டில் படுக்க சொல்லி விடுவார்கள். இன்னும் சிலரோ காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துவிட்டு பூட்டை பூட்டிக் கொண்டு சென்றுவிடுவார்கள். ஆனால் இங்கு ஒருத்தர் என்ன செய்துள்ளார் தெரியுமா.
திருடர்கள் கவனத்துக்கு என்று ஒரு பலகையில் எழுதியுள்ளார்கள். அதில் இந்த வீட்டில் உள்ள நகைகளெல்லாம் கம்பம் கனரா வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் நகை திருட வருபவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காதீர் என்று குறிப்பிட்டுள்ளனர்...
கோவையில் பட்டதாரிகள் உருவாக்கிய புதிய டாக்ஸி சேவை...
கோவையைச் சேர்ந்த 6 பட்டதாரிகள் OLA மற்றும் UBER டாக்ஸி நிறுவங்களுக்கு போட்டியாக, புதிய டாக்ஸி சேவையை தொடங்கவுள்ளனர்.
கோவை ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 6 பட்டதாரிகள் ஒன்று சேர்ந்து, “MyDriverz” என்னும் புதிய டாக்ஸி சேவையை தொடங்கவுள்ளனர். இந்த டாக்ஸி சேவையை OLA மற்றும் UBER ஆகியவை நிறுவனகளுக்கு கடுமையான போட்டியை விளங்க வாய்ப்பு உண்டு.
சமீபத்தில், தனியார் டாக்ஸி நிறுவனத்தின் டாக்ஸி டிரைவர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்கள், நியாயமான கட்டணத்தில், மக்களுக்கு சிறந்த சேவை வழங்க “MyDriverz” தொடங்க இந்த இளம் பட்டதாரிகளை தூண்டியது.
“OLA” மற்றும் “UBER” டாக்ஸி சேவை நிறுவங்கள்,வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூல் செய்கிறார்கள். எனவே,கமிஷன் வாங்காத டாக்சி சேவை ஆப்பை உருவாக்க முடிவு செய்தோம். டாக்ஸி ஓட்டுனர்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு சவாரிக்கும், எந்த கமிஷனும் வசூலிக்கப்படமாட்டாது.
ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும்.மேலும் டாக்ஸி ஓட்டுனர்கள், அந்த குறிப்பிட்ட தொகையை மட்டும் நிறுவனத்திற்கு செலுத்தவேண்டும். தற்போது ஆட்டோ ரிக்க்ஷாவின் ஓட்டுநர்கள், ஒவ்வொரு மாதத்திற்கு 700 ரூபாயும், டாக்ஸி ஓட்டுனர்கள் 1,000 ரூபாயும் செலுத்தவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர்களுக்கு அடையாள அட்டைகள், மற்றும் Zero Balance Bank Account இருக்கும்.
“MyDriverz” டாக்ஸி சேவையில் நிலையான கட்டணம் இருக்கும்.கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படமாட்டாது. மேலும்,ஆட்டோரிக்ஷா மற்றும் டாக்ஸிகளுக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் குறித்து நாங்கள் ஓட்டுனர்களுடன் கலந்துரையாடிய பிறகு முடிவெடுக்கப்பட்ட கட்டணங்கள் இருக்கும் என்று நிர்வாக இயக்குனர் என். வரதராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும்,இந்த பட்டத்தாரிகள் “Lakshmi People Service” என்ற நிறுவனத்தை தொடங்கி பள்ளி மேலாண்மை பயன்பாடு மென்பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த மென்பொருளை ரூ15,000க்கு பள்ளிகளுக்கு விற்பனை செய்தார்கள். தற்போது,இந்த மென்பொருள் சேலம் நகரிலுள்ள சுமார் 120 பள்ளிகளில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது...
பல்லாவரம் 11 வார்டு மலை மகள் தெருவில் நித்தியானந்தா கும்பலால் பறிக்க பட்ட மக்களின் அடிப்படை உரிமை...
கடந்த 15 நாட்களாக சாக்கடை கழிவு கூட வெளியேறாமல் தவிக்கும் அப்பகுதி மக்கள்.
எந்த ஒரு அரசியல் கட்சியும் இந்த மக்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் காரணம் ஏனோ ?
படத்தில் வரும் அத்திப்பட்டி போல திகழ்கிறது இந்த இடம்.
காவி கபோதிகளுக்கு விலை போன அரசாங்க அதிகாரிகளால் நிகழ்த்த பட்ட கொடுமை இது.
அந்த பகுதியில் இருக்கும் தமிழ் தேசிய உறவுகள் இந்த மக்களுக்கு உதவுங்கள்...
உருவாக்குங்கள்...
நீங்கள் ஒரு உலகம் புகழும் கலைஞரா ஆகிறீர்களா? என்பது முக்கியமான விடயமல்ல. ஆனால் எதையாவது உருவாக்குங்கள் – ஒரு அழகிய பாடல், சிறிதளவு இசை, ஒரு நடனம், ஒரு சித்திரம், ஒரு தோட்டம்.
ரோஜாக்கள் பூக்கும் பொழுது, அத்தனை மலர்களுக்கிடையில் வாழ்க்கை சலிப்பூட்டுகிறது என்று உங்களால் சொல்ல முடியாது.
ஒரு அழகான ஓவியம் – வாழ்க்கை சலிப்பூட்டுகிறது என்று உங்களால் சொல்ல முடியாது. ஏனெனில் இந்த ஓவியம் முதல் முறையாகவும் கடைசி முறையாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதை இதற்கு முன் யாருமே செய்ததில்லை, யாருமே இதை மீண்டும் செய்யப் போவதில்லை. அதை செய்ய உங்களால் மட்டுமே முடியும்.
நீங்கள் என்ன செய்தாலும் அதில் உங்கள் தனித்தன்மை வெளிப்படுத்துங்கள்.
உங்களை பற்றி உயிர் வாழ்தல் பெருமை அடையட்டும். வாழ்க்கை சலிப்புட்டுவதாக உணராது; அது ஒரு நறுமணம் ஆகும்.
உங்கள் வாழ்க்கையை வெறுமனே சாதாரணமாக வாழுங்கள். ஒவ்வொரு அனுபவத்திற்குப் பின்னாலும் ஒரு கேள்விக்குறியைப் போடாதீர்கள். மனிதர்கள் உங்களைப் பைத்தியம் என்று நினைக்கலாம். ஆனால் நீங்கள் பைத்தியம் என்றால் இந்த உயிர் வாழ்தல் மொத்தமுமே பைத்தியமாக இருக்கவேண்டும். என்ன செய்வது? இது நமது சக்திக்கு அப்பாற்பட்டது.
தினமும் காலையில் ஏன் சூரியன் உதிக்கிறது? ஒரு நாள் கூட விடுமுறை இல்லை. ஒரே ஒரு நாள் கூட அது மேற்கிலிருந்து உதிப்பது இல்லை -- ஒரு மாற்றத்திற்காகவேனும் " நான் கிழக்கிலிருந்து உதிப்பதில் சலிப்படைந்து விட்டேன்" என்பதுமில்லை. விஷயங்கள் வெகு சாதாரணமாக எளிதாகச் சென்றுகொண்டிருக்கின்றன. மனிதன் மட்டுமே தொந்தரவில் இருக்கிறான்.
நீங்கள்கூட ஒரு ரோஜாப் புதரைப் போல வாழத் தொடங்கும்போது, சூரியனைப் போல உதித்துக் கொண்டு, ஒரு வெண் மேகத்தைப்போல மிதந்து கொண்டு வாழும்போது, அந்த மர்மமான, அற்புதமான, உயிர்வாழ்தலின் உண்மையை மிக ஆழமாகப் புரிந்து கொண்டுவிட்டீர்கள்.
வாழ்க்கை ஒரு மகிழ்ச்சி வதனமும் மட்டுமல்ல, ஒரு உருவாக்கும் நபருக்கு, ஒரு தியானம் செய்யும் நபருக்கு, மரணம் கூட உயர்வானதாக மாற்றமடையும்...
பெட்ரோல்.. டீசல் இது இல்லாமல் உன்னால் வாழ முடியுமா...
நம் நாட்டு மக்களின் தற்சார்பு வாழ்வியல் எந்த நிலையில் உள்ளது என்பதை பற்றி அறிய போர் வர தேவையில்லை.
ஒரு 20 நாட்களுக்கு பெட்ரோல்,டீசல் பங்க் மூடப்பட்டால் போதும் தெரிந்து விடும்.
நாம் எந்த அளவு அதை மையமாக கொண்டு நகரத்தப்பட்டுள்ளோம் (நகரத்தை நோக்கி) என்பதை எண்ணி பார்க்க:
தினமும் வேலைக்கு சென்றால் (நாள், வார, மாத சம்பளம் வாங்குபவர்கள்) தான் அடுத்த வேளை உணவு என்பவர்கள் வாழ்க்கை..?
காய்கறி,கனி வகைகள்,உணவு பொருட்கள் முக்கியமான ஒன்று குடி தண்ணீர் இவை எல்லாம் பேருந்து, சரக்குந்து,கனரக வாகனங்கள் கணமே இல்லாத வாகனங்கள் என எதுவும் நகராமல் நமக்கு கிடைக்காது...
அவசர தேவையான மருந்து பொருட்கள், உயிர் காக்கும் சிகிச்சையும் நமக்கு கிடைக்காது (நமக்கு மூலிகை வைத்தியம், கைவைத்தியம்னு எதுவுமே தெரியாதுல என்ன செய்ய நாம தான் வயசான பாட்டி, தாத்தா வை முதியோர் இல்லத்துல விட்டுவிட்டோம் ).
அதற்கு மாற்றுமூலம் எவ்வளவு வந்தாலும் அதை வெளிக்கொணர விட மாட்டார்கள்.
வரும்காலங்களில் இன்னும் நாம் நகர்த்தப்படுவோம்! எனில் அவன் கச்சா எண்ணெயை கொடுக்க எதை கேட்டாலும் (எதை கேட்டாலும்) நாம் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்போம்...
சரி இந்த கொடுமையை புலம்பலாம் என பார்த்தால் அப்பா,அம்மா , சொந்தம் என உறவுக்காரன் ஒரு பய கூட பக்கத்தில் இல்லை~ ஏனெனில் நாம் நகரத்தை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளோம். நகரம் பெட்ரோல்,டீசல் இதை மட்டும் நம்பி இருக்கிறது.
சோறு , குடி தண்ணீர்,மருத்துவம், அவசரமாக உறவுகளை பார்க்க என ஒட்டு மொத்த வாழ்வியல் கச்சா எண்ணையை நம்பியே உள்ளது. அவை அவன் கட்டுப்பாட்டில் எனில் அவன் நிர்ணயிப்பது தான் விலை..
தீர்வை நீயே சிந்தி தோழா...
சிட்லபாக்கம் மக்கள் தங்கள் ஏரியை சுற்றி இருக்கும் பாதையில் விளக்கு ஏரியாததால் அங்கு வரும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பல வாரங்களாக புகார் கொடுத்து வந்துள்ளனர்...
விளக்கை சரி செய்யாததால், இன்று பலரும் மெழுகுவர்த்தி ஏந்தி தங்கள் புகாரை நூதனமான முறையில் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
ஏரியில் குப்பைக் கிடங்கும் அகற்றப்படாமல், சாக்கடைக்கு கழிவும் நிறுத்தப்படாமல் ஏற்கனவே சில புகார்கள் நிலுவையில் உள்ளது.
ஆக்கிரமிப்புகள் சில அகற்றப்பட்டுவிட்ட நிலையில் , ஏரியை மக்கள் பொழுதுபோக்க பயன்பெறும் வகையில் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை.
பஞ்சாயத்து செயல்படுமா?
ஆரியன் எச்சி இலையில் உருண்டு புரள்வது தமிழனா? திராவிடனா?
ஆரியன் எச்சி இலையில் தமிழன் உருள்கிறான் என ஒரு பதிவைப் பார்த்தேன்..
அது என்னய்யா...
ஆரியன் எச்சி இலையில் திராவிடன் உருள்கிறான் என்று எழுத வேண்டியது தானே...
மற்ற நேரமெல்லாம் திராவிடன் என மூச்சுக்கு முன்னூறு முறை கூவுறீங்க.. இழிவு நிலையை பேசும்போது மட்டும் தமிழன் என்று சொல்லிட்டு வாயில வந்தபடி திட்டுறீங்க?
அடுத்து, தமிழன் என்றாலே ஆரியனும் வந்து விடுவான் என்று சொல்லுறீங்க.. தமிழ் என்றாலே சாதி என்று சொல்லுறீங்க..
அப்புறம் எதுக்கு 'தமிழர் தலைவர்' என்று பட்டம்?
சாதிய தலைவர் அல்லது ஆரிய தலைவர் என மாற்றியமைக்க வேண்டியது தானே...
வாய்புண் மருத்துவம்...
கோடை காலம் என்றால் வெப்பம் அதிகமாவது மட்டுமில்லாமல் பல தொந்தரவுகளும் சேர்ந்தே தொற்றிக் கொள்கிறது...
பெரும்பாலோனோருக்கு வாய்ப்புண் தொந்தரவு ஏற்படுவதும் இந்த கோடையில் தான்.
வாய்ப்புண் பல காரணங்களால் வருகிறது அவை ஜீரணக்கோளாறு, உடல்சூடு, மன அழுத்தம் போன்றவைகளினால் அதிக அளவில் வாய்ப்புண் ஏற்படுகிறது.
இதனால் பேசவும், உணவு உட்கொள்ளவும் சிரமம் ஏற்படுகிறது.
வாய்ப்புண்ணுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதாக குணப்படுத்தலாம் என்று நம் முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர்.
உங்களுக்கு வாய்ப்புண் இருந்தல் நீங்களும் நீங்களும் இவைகளை உபயோகித்துக் கொள்ளுங்கள்...
மஞ்சள்...
எந்த வகை நோய்களுக்கும் சரி அழகிற்கும் சரி முக்கிய பங்கு வகிப்பது மஞ்சள் தான். அனைத்துவகை புண்களையும் குணமாக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் சிறு துண்டு மஞ்சள் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப் புண் இருப்பின் குணமடையும். தொடர்ந்து சாப்பிடுவதால் நோய் தொற்று ஏற்படாது என்கின்றனர்.
நன்கு பழுத்த தக்காளியை கூழாக்கி அதை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம் அல்லது வெறும் தக்காளியை நன்றாக மென்று சாப்பிடலாம்.
புதினா இலை...
புதினா இலைச் சாற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். எரிச்சல், வலி குணமாகும். எலுமிச்சை தோலை நன்கு அரைத்து வாய்ப்புண் உள்ள இடத்தில் பூசலாம் நிவாரணம் கிடைக்கும். நெல்லிக்காயை விதை நீக்கிவிட்டு பேஸ்ட் போல அரைக்கவும். அதை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்ய வாய்ப்புண் குணமாகும்.
வெந்தைய இலை...
வாய்ப்புண் ஏற்பட்டிருந்தால் தேங்காயை அரைத்து பால் எடுத்து ஒருநாளைக்கு மூன்று முறை கொப்பளிக்க வேண்டும். இதனால் வாய்ப்புண் சரியாகும். இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவைக்க வைத்து அதில் வெந்தய செடியின் இலைகளை போட்டு ஊறவைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து வெந்தைய இலைகளை எடுத்து போட்டுவிட்டு அந்த தண்ணீரில் வாய்க்கொப்பளிக்க வேண்டும். தினசரி சாப்பிட்ட உடன் இதை செய்து வர வாய்ப்புண் குணமாகும்.
துளசி இலை...
ஒரு சில துளசி இலைகளை பறித்து கழுவிய பின் வாயில் போட்டு நன்கு மெல்லவும். அதன் சாறு வாய்ப்புண் உள்ள பகுதிகளில் படவேண்டும். துளசி இலைகளை முழுவதுமாக மென்று அப்படி விழுங்கிவிடவேண்டும். சில நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம். வாய்ப்புண் எரிச்சல் குணமாகும்.
கொய்யா இலையை பறித்து மென்று சாற்றினை விழுங்கவேண்டும். தினசரி மூன்று முறை இதுபோல செய்ய சில தினங்களில் வாய்ப்புண் குணமாகும்.
துவர்ப்பு தன்மை கொண்ட வாழைப்பூ...
துவர்ப்பு தன்மை கொண்ட வாழைப்பூ வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். வாழைப்பூவை வேக வைத்து சூப் வைத்து குடிக்கலாம். இதனால் வாய்ப்புண் சரியாகும். வயிற்றில் ஜீரணக் கோளாறு ஏற்பட்டாலும் நிவாரணம் கிடைக்கும்.
வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிடலாம் இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும்.
வாய்ப்புண் இருப்பின் விரைவில் குணப்படுத்த விரும்பினால் பாட்டி வைத்தியத்தை கடைபிடியுங்கள்...
வளிமண்டலத்தை (ozone) பற்றி 2000 வருடங்களுக்கு முன்பே உணர்ந்த தமிழ் முன்னோர்கள்...
Ozone என்பது இன்றைய அறிவியலின் கூற்றின்படி சூரிய கதிர்களின் நேரடி தாக்குதலை மட்டுப்படுத்தி பூமியில் வாழும் உயிரனங்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தும் ஒரு மண்டலம் ஆகும்.
பூமியில் இருந்து ஆறு பகுதிகாளாக பிரிகிறது ஆகாயம் நோக்கிய நீளம் என்கிறது இன்றைய விஞ்ஞானம்.
பூமியில் இருந்து ஒன்றின் மேல் ஒன்றாக தொட்ரகிறது இந்த ஆறு பகுதிகளும்.
அவை ட்ரோபோஸ்பியர், ஸ்ட்ரோஸ்பியர், மீசசோஸ்பியர், தெர்மொஸ்பியர், எக்ஸ்சோஸ்பியர், நத்திங்கனஸ் என்பதாகும்.
2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வளிமண்டலத்தைப் பற்றியும், ஆகாயத்திற்கும் பூமிக்குமான இடையில் உள்ள பகுதிகளையும் தெளிவாக விளக்குகிறது நமது முன்னோர்கள் படைத்த இலக்கியங்கள்.
“இருமுந்நீர்க் குட்டமும்வியன் ஞாலத்து அகலமும் வளிவழங்கு திசையும் வறிதுநிலை இயஆகாயமும்.” (புறநா – 20).
இந்த பாடலில் பூமிக்கு மேல் மூன்று பகுதிகள் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
“செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் சூழ்ந்த மண்டிலமும் வளிதரு திசையும் வறிதுநிலை காயமும்.” (புறநா -30).
இந்த பாடலில் பூமிக்கு மேல் ஐந்து பகுதிகள் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
“மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக இயங்கிய இருசுடர் கண்ணெனப் பெயரிய வளியிடை வழங்கா வழக்கறு நீத்தம்.” (புறநா -365).
இப்பாடலில் உள்ள “நீத்தம்” என்பது எதுவும் இல்லாதது என்று குறிப்பிடுகிறது. ஆக “நீத்தம்” என்பது இன்றைய அறிவியல் கூறும் நத்திங்கனஸ் என்பதே ஆகும். பூமிக்கு மேல் உள்ள இரண்டாவது பகுதியில் தான் சூரியக்கதிரில் இருந்து பூமியை காக்கும் வளிமண்டலம் அமைந்துள்ளது.
இந்த ozone சூரிய கதிரின் வெப்பத்தை தாங்கி அதனை மட்டுப்படுத்தி அதன் நேரடி தாக்கத்தில் இருந்து நம்மை காக்கிறது.
இந்த செய்தி நிச்சயம் உங்களை வியப்பில் ஆழ்த்தும். தமிழனின் அறிவியில் வின்னியல் புவியியல் அறிவு நம்மை மட்டுமல்ல உலகத்தவர்களையும், இன்றைய நவீன அறிவியலாளர்களையும் சற்றே மூர்ச்சை அடையத்தான் செய்யும்...
Subscribe to:
Posts (Atom)