30/01/2018

பெட்ரோல்.. டீசல் இது இல்லாமல் உன்னால் வாழ முடியுமா...


நம் நாட்டு மக்களின் தற்சார்பு வாழ்வியல் எந்த நிலையில் உள்ளது என்பதை பற்றி அறிய போர் வர தேவையில்லை.

ஒரு 20 நாட்களுக்கு பெட்ரோல்,டீசல் பங்க் மூடப்பட்டால் போதும் தெரிந்து விடும்.

நாம் எந்த அளவு அதை மையமாக கொண்டு நகரத்தப்பட்டுள்ளோம் (நகரத்தை நோக்கி) என்பதை எண்ணி பார்க்க:

தினமும் வேலைக்கு சென்றால் (நாள், வார, மாத சம்பளம் வாங்குபவர்கள்) தான் அடுத்த வேளை உணவு என்பவர்கள் வாழ்க்கை..?

காய்கறி,கனி வகைகள்,உணவு பொருட்கள் முக்கியமான ஒன்று குடி தண்ணீர் இவை எல்லாம் பேருந்து, சரக்குந்து,கனரக வாகனங்கள் கணமே இல்லாத வாகனங்கள் என எதுவும் நகராமல் நமக்கு கிடைக்காது...

அவசர தேவையான மருந்து பொருட்கள், உயிர் காக்கும் சிகிச்சையும் நமக்கு கிடைக்காது (நமக்கு மூலிகை வைத்தியம், கைவைத்தியம்னு எதுவுமே தெரியாதுல என்ன செய்ய நாம தான் வயசான பாட்டி, தாத்தா வை முதியோர் இல்லத்துல விட்டுவிட்டோம் ).

அதற்கு மாற்றுமூலம் எவ்வளவு வந்தாலும் அதை வெளிக்கொணர விட மாட்டார்கள்.

வரும்காலங்களில் இன்னும் நாம் நகர்த்தப்படுவோம்! எனில் அவன் கச்சா எண்ணெயை கொடுக்க எதை கேட்டாலும் (எதை கேட்டாலும்) நாம் கொடுக்க  வேண்டிய நிலையில் இருப்போம்...

சரி இந்த கொடுமையை புலம்பலாம் என பார்த்தால் அப்பா,அம்மா , சொந்தம் என உறவுக்காரன் ஒரு பய கூட பக்கத்தில் இல்லை~ ஏனெனில் நாம் நகரத்தை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளோம். நகரம் பெட்ரோல்,டீசல் இதை மட்டும் நம்பி இருக்கிறது.

சோறு , குடி தண்ணீர்,மருத்துவம், அவசரமாக உறவுகளை பார்க்க என ஒட்டு மொத்த வாழ்வியல் கச்சா எண்ணையை நம்பியே உள்ளது. அவை அவன் கட்டுப்பாட்டில் எனில் அவன் நிர்ணயிப்பது தான் விலை..

தீர்வை நீயே சிந்தி தோழா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.