02/08/2020

தாமரை என்ற பெயரை இனி சமஸ்கிருத மொழியில் தான் சொல்ல வேண்டுமாம்...


கன்னட ஈ வெ ராமசாமி நாயக்கரின் கொள்கைகளும் திருகுதாளங்களும்...



ஈ வெ ராமசாமி (பெரியார் எனப்படுபவர்) வட இந்திய ஆரியரை எதிர்க்க திராவிடம் பேசினார் எங்கிறீர்கள்..

இன்று தமிழக திராவிட கழகங்கள் வட இந்திய ஆரியக் கட்சிகளுடன் ஒத்துழைத்து தமிழருக்கு எதிராகச் செயற்படவில்லையா..?

அதை போன்றே ராமசாமி காந்திஜியிடம் அரசியல் நடத்த பேரமும் பேசியவர். இதுதான் திராவிட வாதத்தின் ஆரிய எதிர்ப்பின் தார்ப்பரியமா..?

இப்படி சொந்த மக்களையே ஏமாற்றி அடுத்தவருக்கு அடிபணிந்து பிழைப்பு நடத்த ஏன் ஒரு திராவிடக் கொள்கை.?

அது இனியும் நமக்கு அவசியம் தானா..?

தமிழன் என்ற இன உணர்வை ஊட்டவல்ல தமிழ் தேசிய எழுச்சி தான் இன்றைய உலகில் தமிழரின் இருப்புக்கு அவசியாமனது...

இது தான் வாயில் வடை சுடுவதா.. பிராடு பாஜக மோடி 😂😂


தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்தால் மட்டுமே தப்பிக்க முடியும்...


தமிழர் விரோத அதிமுக எடப்பாடி அரசுக்கு எச்சரிக்கை...



ஏற்கெனவே  தமிழகத்தில் உள்ள SC  பட்டியலிலும், BC பட்டியலிலும் தமிழரல்லாத பல  சாதிகள்  உள்ளன.  இதனால், தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பல வாய்ப்புகளை பிற மொழியினர் அபகரித்து விடுகின்றனர்.

இந்த நிலையில், ஈழவா, தீயா  ஆகிய மலையாள சாதிகளையும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பதை, வன்மையாக கண்டிக்கிறோம். தமிழக அரசின் இந்த செயல், பிற்பட்டோர் பட்டியலில் இருக்கும் தமிழர்களுக்கு செய்யும் மிகப்  பெரிய துரோகம் ஆகும். 

இதனால், லட்சக்கணக்கான தமிழர்கள், தங்கள் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளை இழக்க வேண்டி வரும்.

எனவே தமிழக அரசு,

ஈழவா, தீயா சாதிகளை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்த அரசாணையை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும்.

சட்ட நாதன் குழு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள தமிழ் சாதிகளுக்கு மட்டுமே தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு என்று சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழகத்தில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் தள்ளிப் போகுமேயானால், மீண்டும் ஒரு இட ஒதுக்கீடு போராட்டத்தை தமிழகம் சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கிறோம்..

எடப்பாடி ஆட்சியின் சாதனை, வட இந்தியாவாக மாறி வரும் தமிழகம் 😡


தமிழர் விரோத பாஜக வை அடித்து விரட்டுவோம்...



வடநாட்டு பீடா வாயன்கள் வாழ எம் தமிழ் நாட்டின் வளத்தையும், உயிரையும் தியாகம் செய்ய வேண்டும் அப்படிதான ? தெரியும்டி நீ எம் மாநில GST வரியை ஏப்பம் விடும்போதே...

தனித் தமிழ் நாடே தீர்வு...

தமிழருக்கென ஓர் அரசியல் அமைப்பு ஏற்ப்படுவதைப் கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கர் எவ்வாறு வஞ்சகமாய் தடுத்தார் என்பதை இங்கே காண்போம்...



சேலத்தில் 1944ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மாநாட்டில் 'நீதி கட்சி' எனப்பட்ட தென்னிந்தியா நலவுரிமைக் கழகத்தின் பெயரைத் 'திராவிடர் கழகம்' எனப் பெயர் மாற்றினார் பெரியார். ஆனால், கி.ஆ.பெ விசுவநாதன், அண்ணல் தங்கோ, மு.தங்கவேலு, சவுந்திர பாண்டியன் ஆகியோர் நீதி கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என மாற்றுவதற்கு மாறாகத் 'தமிழர் கழகம்' என்று பெயரிட வேண்டும் என்று எவ்வளவோ போராடிப் பார்த்தனர். பெரியார் அடாவடித் தனமாக அதை ஏற்க மறுத்துவிட்டார்.

திராவிடர் என்பதற்கு மாறாகத் 'தமிழர்கள்' என்று ஏன் வழங்கக்கூடாது என்று சிலர் கேட்கிறார்கள். தமிழர்கள் என்று சொன்னாலே பார்ப்பனர்கள், நாங்களும் தமிழர்கள் தாம் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள். 'நாங்களும் தமிழ்நாட்டில் பிறக்கிறோம்;வளர்கிறோம்; அப்படி இருக்கும்போது எப்படி எங்களைத் தமிழர்கள் அல்லர் என்று நீங்கள் கூற முடியும்?' என்று கேட்கிறார்கள். ஒரு காலத்தில் தமிழர் என்பது 'தமிழ் (திராவிட) பண்புள்ள' மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்க கூடுமானாலும், இன்று அது மொழிப் பெயராக மாரிவிட்டிருப்பதால், அம்மொழியைப் பேசும் 'ஆரியப் பண்புடைய' மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்ற உரிமை பாராட்ட முன்வந்துவிடுகிரார்கள். அதோடு, ஆரியப் பண்பை நம்மீது சுமத்த, அந்த சேர்க்கையைப் பயன்படுத்தி விடுகிறார்கள். (பெரியார் ஈ.வே.ரா, சிந்தனைகள், முதல் தொகுதி, பக் 556).

என்பதே பெரியாரின் கருத்தாக இருந்தது.

திராவிடர் என்று நம்மைக் சொல்லிக்கொள்ளவே பெரும்பாடாக இருக்கும்போது, தமிழர் என்று எல்லாரையும் ஒர்மையாக்க முயற்சிஎடுப்பதால் இன்னல்கள் கூடும். இங்கேயே பாருங்கள், கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர் (தெலுங்கர்)  இனி எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். என்னைப் பொருத்தவரையில், நான் தமிழன் எனச் சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன். ஆனால், எல்லா கனடியர்களும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள், தெலுங்கரும் அப்படியே. எனவே 'திராவிடக் குமுகத்தின்' உறுப்பினர்கள் நாம்; நம் நாடு திராவிட நாடு' என்று வரையறுத்து கொள்வதில் இவர்களுக்கு மறுப்பு இருக்காது. அது நன்மை பயக்கும்.

(பெரியார் ஈ.வே.ரா, சிந்தனைகள், முதல் தொகுதி, பக் 550).

இவ்வாறாக தமிழர்க்கென ஒரு வலுவான அரசியல் அமைப்பு உருவாவதை பெரியார் முறியடித்தார். பெரியாரின் 'திராவிட நாடு' கொள்கையை கன்னடர்களோ, தெலுங்கர்களோ, மலையாளிகளோ தொடக்கத்தில் இருந்தே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பெரியாருக்கு நன்கே தெரியும். இதனால், தமிழகத்தில் மட்டுமே அத்திராவிட கொள்கைக்கு கடை விரிப்பது என்னும் தெளிவு பெரியாருக்கு அப்போதே இருந்தது கண்கூடு!

தமிழர் பெரும்பாலாக உள்ள கூட்டங்களில் எல்லாம் 'தமிழராகிய நாம்' என்று பேசும் பெரியார், 'நான்' என்று சொல்லும் போதெல்லாம் 'கன்னடராகவே' இருந்தார். இதனை 'நமது மொழி தமிழ் என்றார்;
எனது மொழி கன்னடம் என்றார்" (சு.அரசு திராவிட கயமை) என்ற பாடல் வரிகள் உணர்த்தும்...

தமிழர்களுள் எந்த சாதியும் உயர்ந்ததும் அல்ல, எந்த சாதியும் தாழ்ந்ததும் அல்ல...



தமிழ்ச் சாதிகள் அனைத்தும் சமமே என்றே கருத்தை ஆதி காலம் தொட்டே நம் முன்னோர்கள் முன்மொழிந்து வந்துள்ளனர்.

சாதிகள் இரண்டொழிய வேறில்லை என்று ஒளவையும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று நம் வள்ளுவனும் மனிதர்களுள் ஏற்றத் தாழ்வுகள் இல்லை என்று தெளிவுபட உரைத்துள்ளனர்.

எனினும் ஆரியம் தமிழ்ச் சாதிகளிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்க, அதை திராவிடம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி சாதி இறுக்கத்தை உருவாக்கி தமிழர்கள் ஒன்றிணைய விடாமல் பார்த்துக் கொண்டது.

இதன் விளைவாகத் தான் தமிழ் சாதிகள் ஒன்றோடு ஒன்று மோதி தங்களுக்குள் அடித்து சாகிறது...

புள்ளய மலர வைக்கிறது தான் நடக்க போகுது 😂


அதானே எதுக்கு இந்த சமஸ்கிருதம்..? 😟


தமிழர் பண்பாட்டில், மொழியில், வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத அறிவர் பட்டினத்தார்...


தமிழ் இலக்கியங்களில் நான் அதிகம் படித்தது பக்தி இலக்கியங்கள் தான். அதிலும் அதிகமாக படித்தது சித்தர் பாடல்கள். அவற்றுள் நான் விரும்பி படித்தது பட்டினத்தார் பாடல்கள் தான். கடவுள் இருப்பு மறுப்பு என்பதை கடந்து தமிழர்கள் யாவரும் படிக்க வேண்டிய படைப்பு பட்டினத்தார் பாடல்கள்.

தமிழின் அருஞ்சுவை, தமிழர் பண்பாட்டின் சாரம், மனதின் மாய விளையாட்டுகள், மெய்யறிவின் திறனாய்வு என பன்முக கோணங்களில் பாடப்பெற்ற பாடல்கள் தான் பட்டினத்தாரின் ஒப்பற்ற படைப்புகள்.

எல்லாவற்றிக்கும் மேலாக தாயை நேசிக்கும் எவரும் படிக்க வேண்டியது, தாயை குறித்த பட்டினத்தாரின் உணர்வுகள் மற்றும் நெஞ்சை உள்ளிருந்து உருக்கும் அவரது பாடல்கள்.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்.

போன்ற பாடல்கள் நெகிழ்ச்சியின் உச்சகட்டம். மனிதன் கருவில் உருவாதல் முதல் பாடையில் சென்று முடிவில் சாம்பல் ஆகும் வரை வாழ்க்கையை அங்குல அங்குலமாக அளந்து பாடிய பாடல் வரிகள் நிச்சயம் படிப்பவரை மெய்சிலிர்க்க வைக்கும். சிந்திக்கத் தூண்டும்.

ஒரு கணப் பொழுதில் தனக்கு அறிவை ஊட்டி மறைந்த தனது புதல்வனின் இதயத்தை தைக்கும் வார்த்தைகள்.

'காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே' என்னும் வரிகள் தமிழர்களின் ஈடு இணையில்லா மெய்யியல் வாசகம்.

பகட்டான ஆரியப் பண்பாட்டினை, சடங்குகளை, நூல்களை சாடாமல் இல்லை பட்டினத்தார். தமிழர்களுக்கே உரிய அரிய சித்தர் ரகசியங்களை இவர் பாடல்கள் உள்ளடக்கி உள்ளது.

சாதி மதம் கடந்து தமிழர் மெய்யியல் விரும்பும் ஆர்வலர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் பட்டினத்தார் பாடல்கள். இன்றும் தமிழர்கள் இறந்தால், சுடுகாட்டில் இறுதி சடங்கு செய்பவர் பாடும் பாடல்கள் பட்டினத்தார் பாடல்கள் தான்.

ஒவ்வொரு ஊருக்கும் உள்ள சிறப்பியல்புகளை விளக்கும் பாடல்கள். உடுக்க ஒரு உடைக் கோவணத்தோடு தமிழர் நிலப்பரப்பு முற்றிலும் தன் காலால் நடந்தே அளந்து முடித்து ஓய்ந்து முடிவில் திருவொற்றியூருக்கு வந்து நிலை கொண்டார் பட்டினத்து அடிகள்.

அவர் இறுதியில் அடக்கமான இடம் இன்றும் அங்கு இருக்கிறது. பல முறை அங்கு சென்று பட்டினத்தாரை நினைவு கூர்ந்துள்ளேன். அவரது பாடல்கள் என்றும் நினைவில் விட்டு நீங்காதவை.

தமிழும், தமிழர் பண்பாடும் இவ்வுலகில் வாழும் வரை பட்டினத்தாரும் இணைந்தே வாழ்வார். தமிழர் பண்பாட்டில், மொழியில், வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத ஒரு மாமனிதர் பட்டினத்தார்.

யாருக்கும் அடங்காத வீரம், மண்டியிடாத மானம், சமரசம் இல்லா அறிவு போன்ற பண்புகளை தன்னகத்தே கொண்ட கருணையின் ஊற்றாக விளங்கிய பட்டினத்தாரை பற்றி ஒவ்வொரு தமிழனும் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்...

இது தான் பாஜக வின் அரசியல்...


கொண்டை கடலை எங்கடா 😂🤣


தமிழினத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும்...



மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா...

தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

02.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

06."ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."

07."பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

08.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!

10.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

11.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

13.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

15.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!

16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

17.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!

20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

21.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"

23."ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!

24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

25.‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்...

பிராடு பாஜக வின் நவீன பாட்டு...


மக்கள் விரோத பாஜக வை பற்றி அன்றே சொன்ன தேவர் ஐயா...


தேசம் என்றால் என்ன ?



சேர்ந்தாற் போன்ற நிலப்பகுதியில் ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப் பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்து விட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் ஜே.வி.ஸ்டாலின்.

ஒரு தேசத்திற்கு முதல் தேவை தாயக மண், இரண்டாவது தேவை பொது மொழி, மூன்றாவது தேவை பொதுப் பொருளியல், நான்காவது தேவை பொதுப் பண்பாட்டில் உருவான நாம், நம்மவர் என்ற தேசிய இன ஒருமை உணர்வு.

ரசியப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவரான ஜே.வி.ஸ்டாலின் தேசம் குறித்துச் சொன்ன மேற்கண்ட வரையறைகள் பொதுவாக உலகு தழுவிய பொருத்தம் உடையது.

இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு..

பொது மொழி உருவாகாத நாகர்கள் தாயகம், பொருளியல், பண்பியல் அடிப்படையில் தேசிய இனமாகவும் நாகாலாந்து அவர்கள் தேசமாகவும் விளங்குகிறது.

இது போன்ற சில விதிவிலக்குகளும் உண்டு...

கல்வில கூட GST வசூலிக்கிற ஒரு கேவலமான அரசாங்கத்தை பாத்து இருக்கீங்களா? இதோ பாஜக கொள்ளைகாரன் மோடி அரசு...


பாஜக பிராடு மாரிதாஸ் கலாட்டா...



ரெய்டுக்கு வந்த அதிகாரிகள் உத்தரவு போட்ட அதிகாரிகள் எல்லாரும் பாகிஸ்த்தானோட தொடர்பில் உள்ளவர்கள் அப்டின்னு வீடியோ போடுவான்... காத்திருப்போம்...

யார் இந்த ஆரியர்கள் - 2...



இவ்வாறு கி.பி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவில் திகழும் ஒரு அரசியல் குழப்பமான தருணத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அது வரை இந்தியாவை வெவ்வேறு தருணங்களில் படையெடுத்து வந்து ஆண்டு பின்னர் மக்களுடன் கலந்த அன்னியர்கள் ராஜ்புட்ஸ் என்ற பெயரில் ஒன்று சேருகின்றனர். நீண்ட நாட்கள் இந்தியாவினை அவர்கள் கண்டு இருக்கின்றனர். இந்தியா மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கின்றது. ஆன்மீக ரீதியிலும் சரி அரசியல் ரீதியிலும் சரி. நிலைமை அவர்களுக்கு தோதாக இருக்கின்றது. வட இந்தியாவினை அவர்கள் கைக்கு கொண்டு வருகின்றனர். வட இந்தியாவில் அவர்களின் ஆட்சியை அமைக்கின்றனர்.

அந்த ஆட்சி தான் ஆரியவர்தம். ராஜஸ்தானில் உள்ள அபு மலையில் தான் ஆரியவர்த்தம் தொடங்கப்பெருகின்றது. இந்தியாவின் மீது படை எடுத்து வந்த சகர்கள், குசானர்கள், ஹுன்னேர்கள், பெர்சியர்கள், கிரேக்கர்கள் ஆகியோரின் வம்சத்தினரும் இந்தியாவுடன் வணிகம் செய்ய வந்து அங்கேயே தங்கி இருந்த ரோமர்களும் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் இந்த ஆரியவர்த்தம் என்றும் அவர்கள் தான் ஆரியர்கள் என்றும் இக்காலத்திலேயே மனு தர்மமும், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என்றப் பிரிவுகளும் பிறந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பிராமணர்கள் - மத சம்பந்த செயல்களைச் செய்யும் ஆரியர்கள்.
சத்திரியர்கள் - யுத்தம் செய்யும் ஆரியர்கள்.
வைசியர்கள் - வணிகம் செய்யும் ஆரியர்கள்.
சூத்திரர்கள் - இந்தியர் அனைவரும்.
என்பதே அந்தப் பிரிவுகளின் அர்த்தம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

இப்பிரிவுகளைக் கொண்டே சதிகளால் மக்களை ஏமாற்றி அவர்களின் சமயங்களைப் பிடித்து இந்திய மக்களை அடிமையாக்க அவர்களுக்கு அமைதியான ஐநூறு கால ஆண்டுக் காலங்கள் கிடைக்கின்றன என்றும் அக்காலங்களிலேயே சமய நூல்களின் அர்த்தங்களும் சரி வரலாறும் சரி மாற்றப் படுகின்றது, மேலும் காலப்போக்கில் சூத்திரர்கள் என்ற பிரிவுகளில் தங்களுக்கு ஏற்றார்ப்போல் பல பிரிவுகளை உருவாக்கிக் கொள்கின்றனர் அதாவது,

சிவாச்சாரியார் - பிராமண மயமாக்கப்பட்டவர்கள்.
சற்சூத்திரர் - ஆரியருக்கு துணை போனவர்கள்.
சூத்திரர் - ஆரியருக்கு அடிபணிந்தவர்.
பஞ்சமர் - ஆரியரை எதிர்த்தவர்கள்.
மலை சாதியினர் - மலைக்குத் தப்பி ஓடிப் போனவர்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதற்கு அவர்களுக்கு துணை போகும் பல விடயங்களில் ஒன்று தமிழர்கள்/இந்தியர்கள் உருவாக்கிய சமசுகிருத மொழியும் அவர்கள் உருவாக்கிய சைவ வைணவ சமயங்களுமே.

பல இனத்து மக்கள் கூடி இருக்கும் இந்தியாவில் கருத்துக்களைப் பரப்புவதற்கு தோதாக அனைத்து மொழிகளையும் கலந்த ஒரு மொழியை இந்தியர்கள் உருவாக்குகின்றனர் என்றும் அம்மொழியே பின்னர் அவர்களுக்கு எதிராய் பயன்படுகின்றது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூற்றினை மெய்ப்பிப்பது போல் கி.பி நூற்றாண்டுகளிலேயே அதுவும் ஐந்தாம் நூற்றாண்டுக்கு பின்னரே தெளிவான சமசுகிருத படைப்புகள் நமக்கு கிடைக்கின்றன. மேலும் சமசுகிருதத்தில் பல மொழிச் சொற்கள் இருப்பதும் அவர்களின் கூற்றுக்கு சான்றாகத் தான் அமைகின்றது. அதாவது சமசுகிருதத்தில் தமிழ், பாலி, அர்த்தமாகதி, கிரேக்கம், லத்தின், பாரசீகம் மற்றும் அரமேயச் சொற்கள் இருப்பது இது அந்த மொழிகளின் கலப்பில் உருவாக்கப்பட்ட ஒரு மொழியே ஆகும் என்றும் நாம் கருத வழி செய்கின்றது. சரி...

இம்மொழியினை தங்களுக்கு உதவுமாறு ஆரியர் எவ்வாறு பயன்படுத்தினர் என்பதனை நாம் ஆராய்ந்துப் பார்க்க வேண்டியிருக்கின்றது.

எனவே இந்தியாவின் மீது படை எடுத்து வந்த சகர்கள் (Scythian), குசானர்கள் (Kushan), ஹுன்னேர்கள் (Huns), பெர்சியர்கள் (சுங்கர்கள் கன்வர்களை நினைவில் கொள்க), கிரேக்கர்கள் ஆகியோரின் வம்சத்தினரும் இந்தியாவுடன் வணிகம் செய்ய வந்து அங்கேயே தங்கி இருந்த ரோமர்களும் தான் ஆரியர்கள் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்...

துரோக அரசியலே திமுக அச்சாணி என்று நிரூபித்து வரும் திமுக ஸ்டாலின்...



மாஞ்சோலை சம்பவம் குறித்து திருமாவளவன் கருத்துத் தெரிவித்ததற்காக, கூட வைத்துக் கொண்டே தைலாபுரத்துக்கு பிறந்த நாள் தூதுவிட்டு அதை ட்விட்டரிலும் டமாரம் அடித்துக் கொண்ட திமுக...

A1 ரயில் நிலையம்னு வச்சிருக்கலாம் 😂


அசோகர் - வரலாற்றின் கரும்புள்ளி - மறைக்கப் பட்ட உண்மைகள்...



வரலாறு  என்பது எப்போதுமே கடந்த காலத்தின் முழு பிரதிபலிப்பாக மட்டுமே இருக்க வேண்டும், அது மிகவும் சரியானதுமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும்.

ஆனால் பல வேலைகளில் அது எழுதுபவர்களின் திறமைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுகிறது.

அதற்க்கு மாபெரும் சான்று அசோகர் என்றால் யாராவது நம்புவீர்களா?

அசோகர் என்றால் நமக்கு என்னென்ன தெரியும்?

சிறிது ஞாபகப்படுத்துங்களேன்.

அசோகர் என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது கலிங்கப் போர் தான். இந்தியாவின் மிகச்சிறந்த, பெரிய பேரரசர். பிறகு அவர் தனது தமையனை போரில் வென்று பட்டம் சூட்டிக் கொண்டார், கலிங்கப் போருக்குப் பிறகு அவர் போரினை துறந்து புத்த மதத்தைத் தழுவி அற வழியில் சென்றுவிட்டார் என்றே அனைத்து நூல்களும் கூறுகிறது.

பிறகு அவர் மக்களுக்கு பயன்பட சாலைகள் அமைத்தார், இருபுறங்களிலும் நிழல் தரும் மரங்கள் நட்டார் என்றே அனைத்து நூல்களும் கூறுகிறது,

ஆனால் அசோகருக்கென்று ஒரு கரிய சரித்திரம் உள்ளது. அது திட்டமிட்டே அனைத்து சரித்திர புத்தகங்களிலும், வரலாற்றிலிருந்தும் மறைக்கப் பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது இந்திய அரசும் மற்றும் புத்த அமைப்புக்களும்..

அது  என்னவெனில் பேரரசர் அசோகர் பார்ப்பதற்கு மிகவும் அவ லட்சனமாகவும், கரிய நிறமாகவும் அழகற்றவராகவும் இருந்தார்,

ஒருமுறை அவர்  அந்தப்புரத்திற்கு சென்றபோது அவரை மற்ற பெண்கள் அனைவரும் கேலி செய்துவிட்டனர், அதனால் அவர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட  பெண்களை கழுவில் ஏற்றி கொடுமை செய்து கொன்று விட்டார்.

அவர் ஒரு ஆண் மகனாக இருந்திருந்தால் தனது ஆண்மையை அந்த பெண்களிடம் அவர் நிரூபித்திருக்க வேண்டும், அதனை விட்டு அவர் தனது அதிகாரத்தினால் அனைவரையும் கொடுமை செய்து கொலை செய்வது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்?

மேலும் அவர் எப்படி அரியணை ஏறினார் என்பதை அனைத்து நூல்களும் தனது தமையனுடன் போரிட்டுவென்றார் என்றே கூறுகிறது.

ஆனால் அவர் தனது சகோதரர்கள் 99 பேரை வஞ்சகமான முறையில் கொன்றே அவர் ஆட்சி பீடத்தில் ஏறினார்.  ஏனோ தெரியவில்லை அவர்  திஷ்யா என்ற ஒரு சகோதரியை மட்டும் கொல்லவில்லை.

மேலும்  இவன் தனது அரண்மனையில் அந்தப்புரத்துடன் ஒரு சித்தரவதைக் கூடாரத்தைம் நிறுவி எதிர்ப்போரை சித்தரவதை செய்து கொன்றுல்லான்.

அரச பதவி ரத்த சொந்தம் அறியாது என்று கூறுவார்கள்" இதற்க்கு எடுத்துக் காட்டாக அனைவரும் ஔரங்கசீப்பை மட்டுமே கூறுகின்றனர். ஏனெனில் அவர் தனது நான்கு சகோதரர்களை கொன்றிப்பார். ஆனால் தனது 99  சகோதரர்களைக் கொன்ற இந்த அசோகனை எங்கே, எதில் சேர்ப்பது?

வரலாறு எப்போதுமே உண்மையை கூற மறுக்கிறது, அது எழுதுபவர்களின் வசதிக்கேற்ப, அவர்களின் விருப்பம், இனம், மொழி ஆகியவற்றை வைத்தே ஒவ்வொரு அரசர்களின் வரலாறும் எழுதப்படுகிறது என்பது மிகவும் வேதனை தரும் செய்தி.

அதிலும்  நியாயம், தர்மமே இல்லாத அரசனின் படைப்பில் இருக்கும் சக்கரத்தை தர்ம சக்கரமாக கூறி, இந்திய தேசியக் கொடியில் போட்டிருப்பது மிகப் பெரியக் கேவலமாகவும் உள்ளது..

அதை தான் இந்தியன் என்று நெஞ்சில் குத்திக் கொண்டு திரிகிறார்கள்...

பாஜக சங்கிகளின் அடுத்த திட்டம் இதுவா இருக்குமோ 😁


பாஜக மோடி எனும் பொய் பித்தலாட்ட வித்தக்காரர்...