ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள SC பட்டியலிலும், BC பட்டியலிலும் தமிழரல்லாத பல சாதிகள் உள்ளன. இதனால், தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பல வாய்ப்புகளை பிற மொழியினர் அபகரித்து விடுகின்றனர்.
இந்த நிலையில், ஈழவா, தீயா ஆகிய மலையாள சாதிகளையும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பதை, வன்மையாக கண்டிக்கிறோம். தமிழக அரசின் இந்த செயல், பிற்பட்டோர் பட்டியலில் இருக்கும் தமிழர்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம் ஆகும்.
இதனால், லட்சக்கணக்கான தமிழர்கள், தங்கள் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளை இழக்க வேண்டி வரும்.
எனவே தமிழக அரசு,
ஈழவா, தீயா சாதிகளை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்த அரசாணையை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும்.
சட்ட நாதன் குழு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள தமிழ் சாதிகளுக்கு மட்டுமே தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு என்று சட்டம் இயற்ற வேண்டும்.
தமிழகத்தில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் தள்ளிப் போகுமேயானால், மீண்டும் ஒரு இட ஒதுக்கீடு போராட்டத்தை தமிழகம் சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கிறோம்..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.