13/01/2019

பெர்முடா முக்கோணம் போல பீதியை கிளப்பும் ஜப்பானில் பிசாசு கடல்...


பிசாசின் கடல்.. கேட்டாலே அதிர வைக்கும் பெயர். ஜப்பான் மக்களுக்கும் அப்படித்தான். உலக மேப்பில் இப்படியொரு கடல் உள்ளதா என்றால்.. இல்லை என்பது தான் உண்மை.

ஆனால் பசிபிக் கடலின் ஒரு பகுதியை தான் இப்படி அழைக்கிறார்கள். ஜப்பான்
கடற்கரை பகுதியில் உள்ள இந்த பிசாசின் கடலுக்கு இன்னொரு செல்லப் பெயரும் உண்டு. அது ‘டிராகன் டிரையாங்கிள்’. அதாவது டிராகன் முக்கோணம்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே 100 கி.மீ. தொலைவில் உள்ளது மியாகே தீவு. இப் பகுதியில் இருக்கிறது பிசாசின் கடல்.

ஜப்பானிய மொழியில் ‘மா-நோ-உமி’ என்கிறார்கள். இதன் வழியாக சென்ற யாரும் உயிரோடு திரும்பியது இல்லையாம்.

இப்பகுதியை கடந்து சென்ற பல கப்பல்கள், படகுகள் மர்மமான முறையில் மாயமாகியிருக்கின்றன. அதில் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவலும் இல்லை.

இப்பகுதியில் திடீர் திடீரென தீவுகள் உருவாவதும், இருக்கும் தீவுகள் மறைவதும் பீதியை ஏற்படுத்துகிறது.

அட்லான்டிக் பெருங்கடலின் வடமேற்கு பகுதி மற்றும் கரீபியன் கடல் பகுதியில் உள்ள பிரபலமான மர்ம பகுதி ‘பெர்முடா டிரையாங்கிள்’. இந்த வழியாக சென்ற கப்பல்கள், இப்பகுதியை கடந்து சென்ற விமானங்கள் போன்றவை இப்பகுதியில் மர்மமான முறையில் மாயமானதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையை ஒட்டியுள்ள பெர்முடா முக்கோணத்துக்கு நேராக பூமிப் பந்தின் மறு புறத்தில்தான் ஜப்பானின் பிசாசு முக்கோண பகுதி இருப்பதால் மக்களை அதிகம் பீதிக்கு உள்ளாக்குகிறது ‘மா நோ-உமி’ முக்கோணம்.

பெர்முடா முக்கோணம் போல, மாநோஉமி வழியாக செல்லும் கப்பல்கள், விமானங்களும் அடிக்கடி மாயமாகி இருக்கின்றன.

1952 - 1954 காலகட்டத்தில் டிராகன் முக்கோண கடல் பகுதி வழியாக சென்ற ஜப்பானின் ராணுவ கப்பல்கள் நிலை என்னவானது என்பது இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது. அந்த கப்பல்களில் பயணித்த 700 பேரின் நிலை பற்றியும் தெரியவில்லை.

இதை பற்றி கண்டுபிடிக்க 31 விஞ்ஞானிகள் அடங்கிய குழு டிராகன் முக்கோணத்தின் முக்கிய பகுதிக்கு கப்பலில் சென்றுள்ளனர். அவர்களும் திரும்பி வரவில்லை.

அதற்கு பிறகு, ஜப்பான் அரசு சுதாரித்துக் கொண்டு அப்பகுதியை அபாயகரமான பகுதியாக அறிவித்தது என்கிறார்கள் டிராகன் முக்கோணம் பற்றி ஆராய்ச்சி செய்து வருபவர்கள்.

விஞ்ஞானிகளில் ஒரு தரப்பினர் வேறு மாதிரி சொல்கிறார்கள்.

ஜப்பானிலும் அதனை சுற்றியுள்ள
பகுதிகளிலும் எரிமலைகள் வெடிப்பது, நில அதிர்வு ஏற்படுவது அடிக்கடி நடப்பது தான்.

கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைகள், நில அதிர்வுகள் காரணமாக கடலின் மேல் பகுதியில் திடீர் அலைகள் உருவாகின்றன. அதில் சிக்கும் கப்பல்கள் விபத்துக்குள்ளாகின்றன.

டிராகன் முக்கோண பகுதியில் சில தீவுகள் கூட திடீர் திடீரென மாயமாகின்றன. திடீரென புதிதாக தீவுகள் உருவாகின்றன.

இதற்கெல்லாம்கூட கடல் அடியில் ஏற்படும் நிலநடுக்கமும் எரிமலைகளும் தான் காரணம் என்கின்றனர். நெருப்பை கக்கும் டிராகன்கள் தான் இதற்கு காரணம் என்று நம்புபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஜப்பானிய புராண கதைகளை உதாரணம் காட்டுகின்றனர்.

மியாகே தீவுப்பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான டிராகன்கள் வாழ்ந்தன. அந்த இனம் அழிந்து விட்டாலும் அவற்றின் அமானுஷ்ய சக்தி இன்னமும் அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறது. மியாகே தீவுப்பகுதியை தங்களது சாம்ராஜ்யமாக அவை கருதுகின்றன. தங்களது சாம்ராஜ்யத்துக்குள் வருபவர்களை டிராகன் சக்திகள் விடுவதில்லை. அந்த வழியாக வரும் கப்பல்கள், படகுகளை அழிக்கின்றன என்கின்றனர் அவர்கள்.

பெர்முடா முக்கோணம் போலவே.. இன்னமும் மர்மமாக இருக்கிறது பிசாசு கடல்...

நாம் சாதாரண கோணிப்பைகளில் உள்ள உப்பையே வாங்குவோம்...


நம் தாய்மார்கள், பாட்டிகள், முப்பாட்டிகள் அனைவரும் அதைத்தான் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்தார்கள்.

அயோடின் என்பது ஒரு தாதுப் பொருளாகும். இந்த தாது உப்பு மண்ணிலிருந்து விளையும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் குறிப்பிட்ட அளவு அந்தந்த உணவுப் பொருளின் தன்மைக்கேற்ப கலந்துள்ளது.

தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியில் அமைந்துள்ள ஒரு சுரப்பியாகும். அது சுரக்கும் சுரப்பு நீர் தைராக்ஸின் ஆகும். இந்த தைராக்ஸின் இரத்தத்தில்  கலக்கிறது. இந்த சுரப்பு நீர் உடல் வளர்ச்சிக்கும் இயக்கத்திற்கும் இன்றியமையாததாகும். இந்த சுரப்பு நீர் அதிகமாக சுரந்தால் உடல் உறுப்புகளின் இயக்கம்  அதிகமாகும். தைராய்டு நீர் மிகவும் குறைந்து விட்டாலும், உடல் இயக்கம் குறிப்பாக இருதய இயக்கம் குறைந்து நின்று விடவும் வாய்ப்புண்டு.

நம் இரத்தத்தில் போதுமான அளவு அயோடின் இரந்தால் போதுமான அளவுக்கு தைராய்டு ஹார்மோன் சுரக்கும். அயோடின் அளவு அதிகரித்தால் அதிகளவு  ஹார்மோன் சுரந்து சுரப்பி வீக்கமடைகிறது. பின்னர் கடினமாகவும் மாறுகிறது. தைராய்டு நோய் உள்ளவங்க, இல்லாதவங்க என்று வித்தியாசம் இல்லாமல்  அனைவரும் அயோடின் கலந்த உப்பை சாப்பிடும் போது, அயோடின் உப்பு காரணமாக தைராய்டு ஹார்மோன், ஆரம்பத்தில் அதிகமாகி பின்னர் நாளடைவில்  வெகுவாக குறைந்து விடுகிறது.

அயோடின் உப்பையே நீண்டகாலமாக உட்கொண்டு வரும்போது தைராய்டு ஹார்மோன் சுரப்பி நின்று விடுகிறது. குறிப்பாக பெண்களின் குழந்தைகளின் நலமான வாழ்வைப் பாதிக்கும். பெண் குழந்தைகளுக்கு அயோடின் உப்பைக் கொண்டு சமைத்து பறிமாறப்படும் உணவு அவர்கள் பூப்பெய்தும் போது பல சிக்கல்களை ஏற்படுத்தும்...

இசைக் கருவி தம்புரா...


இதில் நான்கு தந்திகள் இருக்கின்றன. நடுத்தந்திகள் இரண்டும் ஆதார சட்ச சுரத்தை ஒலிக்கின்றன. நான்கு தந்திகளையும் ஒன்றாய் மீட்டி வரும்போது முதலாவது தந்தியில் வருவது அந்த ஆதார சட்ச சுரத்திற்குத் தாழ்ந்த பஞ்சம சுரத்தை ஒலிப்பதாக சுருதி செய்தல் வேண்டும்.

கடைசியில் உள்ள நான்காம் தந்தியில் ஆதார சட்ச சுரத்திலும் தாழ்ந்த ச-ஒலிப்பதாய்ச் சுருதி செய்தல் வேண்டும்.

எனவே தந்திகளை மீட்டி வரும்போது அவை “ ப [தாரஸ்தாயி low octave]-ஸ-ஸ-ஸ [தாரஸ்தாயி low octave]-” என்று ஒலிப்பதாய் இருக்க வேண்டும்.

இந்த நான்கு தந்திகளின் ஒலிகளும் தனித்தனியே பிரிந்து ஒலிக்காமல் ஒன்று சேர்ந்து ஒலிக்கும் போது, பிரதான மெட்டின் மேல் நான்கு தந்திகளுக்கும் மெட்டிற்கும் இடையே துண்டு நூல்கள் செலுத்தி வைத்துக் கொள்ளப்படும்.

இதற்கு “சீவா” என்று பெயர். இது வண்டின் ஒலிபோல ரீங்காரத்துடன் தொடர்ந்து ஒலியாக கேட்கப் பெறும்.

இந்த “சீவா” என்ற ரீங்கார ஒலியினால் நன்றாக சுருதி சேர்க்கப் பெற்ற தம்புராவானது  “ரிகரிக” என்று ஒலித்து செவிப்புலனாகும். இது மிகவும் இனிமையாக இருக்கும்.

தம்புராத் தந்திகளின் சுருதி நன்றாக சேர்ந்திருப்பதற்கு இங்குக் கூறப்பெற்ற “ரிகரிக” என்று ஒலிக்கும் சிறப்பே குறிகாட்டியாகும்.

தம்புராவைப் பயன்படுத்திக் கொண்டு பாடி வரும்போது, ஒவ்வொரு சுவரமும் அதன் தானத்தில் வருகின்றதோ  என்பதை இசைப் போர் தெரிந்துக் கொண்டு பாடி வரலாம்.

பாடுவோர் பாடி நிருத்தியிருக்கும் காலத்தில் இத்தம்புராவின் ஆதார சுருதி ஒலியானது “சீவா” வின் தொடர்பால் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருப்பதால் அவர் பாடிக் கொண்டிருப்பதைப் போலுள்ள ஓர் உயர்ச்சியையும் அது உண்டாக்குகின்றது...

மனிதர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதி வண்ண பவுடர்கள் வைத்து நடத்தப்படும் வட நாட்டான் ஹோலி பண்டிகையை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும்...


உளுந்தங்கஞ்சி...


விளையாட்டு வீரர்கள். ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கும் உழைப்பாளிகள் தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது.

மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது.

பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.

உளுந்தங்கஞ்சி தேவையான பொருட்கள்...

1.உளுந்தம்பருப்பு ஒரு டம்ளர் (கருப்பு உளுந்து நல்லது).

2.பச்சரிசி அரை டம்ளர்.

3.வெந்தயம் ஒரு தேக்கரண்டி.

4.பூண்டு 20 பல்லு.

5.வெல்லம் அல்லது கருப்பட்டி இனிப்புக்கு ஏற்றது போல்.

6.தேங்காய் ஒரு மூடி.

செய்முறை...

உளுந்தம்பருப்பு, பச்சரிசி, வெந்தயம், உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை விட வேண்டும்.

(குக்கரின் உள்ளே பாத்திரம் வைத்து தான் வைக்க வேண்டும். அப்படியே வைத்தால் அடிப்பிடித்துவிட வாய்ப்பு அதிகம். மேலும் தண்ணீர் வெளியே வந்துவிடும்).

இது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

எட்டு விசில் வந்தவுடன் இறக்கி உள்ளே இருக்கும் பாத்திரத்தை வெளியே எடுத்து சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துவிட்டு வெல்லப்பாகு, தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும். தேங்காய் துருவியும் போடலாம்.

(சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் வெல்லம் தேங்காய் இரண்டையும் தவிர்த்து விடலாம்,. செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் தேங்காயை மட்டும் தவிர்த்து விடலாம்.)...

சோழர் காலத்து கலையின் சிறந்த எடுத்துக்காட்டு...


கொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி - தெஹல்கா ஆசிரியர் வெளியிட்ட வீடியோ...


ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த மர்ம மரணங்களுக்கு பின்புலமாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல் வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த காவலாளி கொலை மற்றும் கொள்ளை விவகாரம், பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநர் கனகராஜ், விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு முக்கியக் குற்றவாளி சயான், கேரளாவில் தனது குடும்பத்தோடு காரில் செல்லும்போது, விபத்துக்கு உள்ளானதில், அவரின் மனைவி விஷ்ணுப்ரியா, மகள் நீத்து ஆகியோர் உயிரிழந்தனர். சயான் உயிர் பிழைத்தார். இவர்களைத் தவிர்த்து, கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார், தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து நடந்த இந்த மர்ம மரணங்களின் பின்னணியில் யார் இருக்கிறார் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில், பல காலமாக வாய் திறக்க மறுத்து வந்த சயான், தற்போது தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறியுள்ளார்.

இது, தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தெஹல்கா வீடியோவில் இருப்பது, உண்மையாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கொடநாடு கிராம ஊராட்சியின் முன்னாள் தலைவர் பொன்தோஸ் பேட்டி அளித்துள்ளார். இந்த தொடர் கொலைகளின் பின்னணி குறித்து, சி.பி.ஐ விசாரிக்க வேண்டுமென்று முன்பே கோரிக்கை விடுத்தவர், நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளரும் முன்னாள் அரசுக் கொறடாவுமான முபாராக். அவர் நம்மிடம் கூறுகையில், ``கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தின்போது ஒரு காவலாளி கொலை, அதை தொடர்ந்து, அங்கே கம்யூட்டர் பிரிவில் வேலை பார்த்த இளைஞர் ஒருவர் திடீர் தற்கொலை, ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் சேலம் மாவட்டம் எடப்பாடி ஏரியாவில் கார் விபத்தில் மர்ம மரணம், கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த சயானும் கார் விபத்தில சிக்கினார். அவரின் மனைவி, மகள் இறந்தனர். படுகாயங்களுடன் உயிர்பிழைத்தார் சயான். கனகராஜ் சொல்லி 10 பேர்களுடன் வந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாகப் போலீஸ் சொன்னது. இதை ஆரம்பத்திலிருந்தே கொள்ளை சம்பவமாகத்தான் போலீஸ் சொல்லி வந்தது. 

இதில் எங்களுக்கு உடன்பாடில்லை. `உண்மையில் நடந்தது என்ன என்பது பற்றி முழுமையான சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்று நாங்கள் அப்போதே வலியுறுத்தினோம். தற்போது சயான், டெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மாத்யூவிடம் கூறிய தகவல்களைக் கேள்விப்பட்டு அதிர்ந்தேன். இப்போதும் நாங்கள் சி.பி.ஐ விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிற்க வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’’ என்றார்.

இந்த வீடியோ கிளப்பியிருக்கும் அதிர்வுகள், எதிர்வரும் தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. அதனால், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுவதும் கேள்விக்குறியே. தற்போதைய நிலையில், அ.தி.மு.க-வுக்கு எதிராகப் பரப்புரை மேற்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு ‘வெயிட்டான மேட்டர்’ சிக்கியுள்ளது. கூடுதல் சீட்டுகளை மிரட்டிப் பெறுவதற்கு, பி.ஜே.பி-க்கும் இன்னொரு துருப்புச்சீட்டு கிடைத்துள்ளது. ஆளும் கட்சி இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதைத்தான் தமிழகமே உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது...

வணிகத்தை யார் எதிர்க்கிறார்களோ.. அவர்களை உலக வல்லாதிக்கங்கள் ஊடகத்தின் வழியாக தவறாக சித்தரிக்கும்...


வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், விலகி ஓடும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு...


'காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது' என்று கேள்விப்பட்டிருப்போம். இப்படி தண்ணீர் குடிப்பது...உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விசயம்தானே!

இது யப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல் பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.

காலையில் பல் துலக்கும் முன் 160 மிலி அளவு குவளை (டம்ளரில்) நான்கு குவளை தண்ணீர் குடிக்க வேண்டும். பிறகு, பல் துலக்கிவிட்டு, 45 நிமிடத்துக்கு பிறகுதான் உணவோ... பானங்களோ சாப்பிட வேண்டும்.

உணவு எடுத்துக் கொண்ட பிறகு, 2 மணி நேரம் வரை வேறு உணவுளையோ... பானங்களையோ சாப்பிடக் கூடாது.

இந்த முறையைக் கையாண்டால்... உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை 30 நாட்களிலும், காசநோய் 90 நாட்களிலும், புற்றுநோய் 180 நாட்களிலும் குணமாகிவிடுமாம். இதேபோல ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கால அளவையும் வைத்துள்ளனர்!

ஒன்று நிச்சயம்... இந்த சிகிச்சை முறையால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ... நிச்சயம் பக்க விளைவு இருக்காது. எனவே முயற்சித்துத்தான் பார்க்கலாமே...

வாழை இலையின் பயன்கள்...


1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

7. சோரியாசிசு(ஸ்), தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும்.

இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பொலீத்தின் (polythene) கடதாசிதான் இங்கு இருக்கும் உணவுவிடுதிகளில் உணவு கிடைக்கிறது.

இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம்.

இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.

வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்...

அண்ணன் சீமான் அண்ணி கயல்விழி ஆகியோருக்கு வாழ்த்துகள்...


மெட்டி அணிவது ஏன்....?


பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.

அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.. ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்

பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும்.

இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது.

கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: நீதிமன்றத்தில் முறையீடு...


அலங்காநல்லூரில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு.

முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகளில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது...

மராட்டிய ரஜினி பேட்ட கலாட்டா...


உங்கள் வாழ்க்கையை கொண்டாட்டமாக மாற்றுங்கள்...


உண்மையான கொண்டாட்டம் உங்கள் வாழ்க்கையிலிருந்து, உங்கள் வாழ்க்கைக்குள் வர வேண்டும்.

மேலும், உண்மையான கொண்டாட்டம் நாள்காட்டியைப் பொறுத்து அமைவதில்லை.

அதாவது ஜனவரி முதல் தேதியில் நீங்கள் கொண்டாடுவீர்கள் என அமையாது. இது விசித்திரமானது...

வருடம் முழுவதும் நீங்கள் துயரத்தில் ஆழ்ந்து இருப்பீர்கள்,  ஜனவரி முதலாம் நாள் நீங்கள் சட்டென துயரத்திலிருந்து விடுபட்டு நடனமாடுவீர்கள்.

அன்று உங்கள் துயரம் போலியானதாக இருக்க வேண்டும் அல்லது ஜனவரி முதல் தேதி போலியானதாக இருக்க வேண்டும்.

இரண்டுமே உண்மையாக இருக்க முடியாது.

மேலும், ஐனவரி முதல் தேதி கடந்து சென்ற பின்னர், நீங்கள் உங்கள் கருங்குழிக்குத் திரும்ப செல்கிறீர்கள்.

ஒவ்வொருவரும் தமது துயரத்திற்குள், ஒவ்வொருவரும் தமது கவலைக்குள் செல்கிறீர்கள்.

வாழ்க்கை ஒரு தொடர்ந்த கொண்டாட்டமாக அமைய வேண்டும். முழு வருடமும் ஒரு தீபங்களின் திருநாளாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் உங்களால் வளரமுடியும்,
மலரமுடியும்.

சிறிய விஷயங்களை கொண்டாட்டமாக மாற்றுங்கள்...

தமிழினம் தொலைத்தவை...


அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு: 16 பேரின் குண்டாஸ் ரத்து...


அயனாவரம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான 16 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்..

தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி 16 பேர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் நடவடிக்கை...

பூமியின் சுற்று வட்ட பாதையை வைத்து கால நிலகளை கணித்த தமிழர்கள்...


சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை ஐகோர்ட் அனுமதி...


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களுடன் ரூ.1,000 பரிசும் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் வசதிபடைத்தவர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்க தடை விதித்தனர்.

அதாவது சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கும், எந்த பொருளும் வாங்காத ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரொக்கப்பரிசு வழங்கக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து தடை உத்தரவை மாற்றியமைக்கக்கோரி உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை ஐகோர்ட், சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ஆயிரம் வழங்க அனுமதி அளித்துள்ளது. மேலும், இலவசங்களை அனைவருக்கும் வழங்கக் கூடாது என முடிவு எடுங்கள் எனவும் சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது...

எம் மக்களின் சுவாசம் சுயநலம்...


ஓவ்வொரு மனிதர்களும் பிறருக்காக தன்னை மாற்றிக் கொண்டு நடிக்கிறார்கள்...


தனக்காக எந்த மனிதனும் வாழ்வதில்லை..

நீங்கள் எப்பொழுதும் உங்கள் இயற்கை தன்மையில் இருங்கள்..

குழந்தை போன்று...

மனிதர்கள் நேற்றை வாழ்வை முடித்து விட்டார்கள்...


இனி நாளை எப்படி ரோபோ போல் வாழ்வது என்று யோசனை செய்து கொண்டு இருக்கிறார்கள்..

இன்றை மறந்து விட்டார்கள்...

தினமும் ஒருமுறை இரவு யோசனை செய்யுங்கள் இன்று எப்படி மகிழ்வுடன் வாழ்ந்தோம் என்று...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


இந்த அடிமை கூட்டமைப்பில் இருந்து மீள முடியுமா.?


தமிழகத்திற்கு தமிழ் தேசியம் மட்டுமே சரியானது...


கர்நாடகத்தில் கன்னடத் தேசியவாதம் எப்படி சரியோ..

கேரளாவில் எப்படி மலையாளத் தேசியவாதம் சரியானதோ..

ஆந்திராவில் எப்படி தெலுங்குத் தேசியவாதம் சரியோ..

அது போல தமிழ் நாட்டில் தமிழ்த் தேசியவாதம் பேசுவது சரியே...

மற்ற எல்லா மாநிலத்திலும் செல்லுபடியாகும் மொழிவழி இனத் தேசியவாதம், தமிழகத்தில் மட்டும் திராவிட வாதமாக ஏன் பேசப்பட வேண்டும்?

ஏனெனில் திராவிட வாதம் தான் இங்குள்ள பிற மொழி முதலாளிகளை, ஆட்சியாளர்களைக் காக்கும் அருமருந்து...