20/01/2018

பாஜக எச். ராஜா சர்மாவை சும்மா வச்சி செஞ்சிடானுங்க.. முடியலடா.. மரண கலாய்...


லஞ்சம் தர மறுத்ததால் பைக்கை போலீசார் சேதப்படுத்தியதாக புகார்.. டி.எஸ்.பி அலுவலகம் முற்றுகை...


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் லஞ்சம் தர மறுத்ததால் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பைக்கை போலீசார் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டைக் கிளப்பி டி.எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, வீரவாஞ்சிநகரைச் சேர்ந்தவர் வேல்சாமி. தள்ளுவண்டியில் பழ வியாபாரம் நடத்தி வருகிறார். இவரது ஒரே மகன் சதீஷ் என்பவர் இரண்டாம் ஆண்டு பாலிடெக்னிக் படிக்கிறார். கடந்த ஜனவரி 1-ம் தேதி இதே வீரவாஞ்சி நகர் பகுதியில் சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் கேக் வெட்டி ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கொண்டாட்டத்தின் போது இப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்ததாக கூறப்படுகிறது. இது சம்மந்தமாக அந்த வீட்டின் உரிமையாளர் மேற்கு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து, உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையில் போலீசார் அப்பகுதியில் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது சதீஷ் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்திவிட்டு, சதீஷின் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை எடுத்துச் சென்றுள்ளனர் போலீசார்.

இதனைத் தொடர்ந்து, காவல்நிலைத்தில் வேல்சாமி பைக்கை கேட்டதற்கு, "நீதிமன்றத்தில் வந்து உரிய ஆவணங்களைக்காட்டி பைக்கை எடுத்துக் கொள்ளலாம்." என போலீசார் கூறினாராம்.

ஆனால், மறுநாள் நீதிமன்றத்திற்கு பைக் கொண்டு வராததால் மீண்டும் காவல்நிலையத்தில் வேல்சாமி மீண்டும் கேட்டபோது, காவல்துறையினர் எவ்வித பதிலும் சொல்லவில்லையாம். இந்நிலையில் கோவில்பட்டி அருகில் உள்ள இடைச்செவல் காட்டுப்பகுதியில் அநாதையாக கிடந்ததாக மாணவன் சதிஷின் பைக்கினை போலீசார் தாசில்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பைக் என்ஜீன் எண், பைக்கின் முக்கிய பாகங்கள் அனைத்தையும் சேதப்படுத்தி, பைக்கினை பயன்படுத்த முடியதாத நிலையில் இருப்பதை கண்ட வேல்சாமி மற்றும் அவரது உறவினர்கள் கோவில்பட்டி டி.எஸ்.பி. அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், எவ்வித தவறும் செய்யாத மகனின் பைக்கினை எடுத்து வந்து, பணம் பறிக்கும் பைக்கை நோக்கில் தரமால், நீதிமன்றத்தில் ஒப்படைக்காமலும், பைக்கினை சேதப்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

இதையடுத்து முற்றிலுமாக சேதமடைந்த பைக் சதிஷின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்புகாரால் டி.எஸ்.பி அலுவலகம் முற்றுகையிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது...

தமிழகத்தை அழிக்க.. கார்பரேட்களின் சாகர்மாலா திட்டம்...


பச்சைத் தமிழர் (மராட்டிய கன்னடன்) ரஜினி தற்போது தமிழர்களுக்கு ஆதரவாக வாயைத் திறப்பாரா ?


வழக்கறிஞர்கள் யாராவது தமிழக அரசு மீது பொதுநல வழக்கு போட்டு.. கட்டண உயர்வை திரும்ப பெற வைக்க முயற்சிக்கலாமே...


உன்னுள் நுழைய தியானம்...


எந்த எண்ணத்தையும் உன்னுள் நுழைய விடாமல்.. ஆச்சரியத்துடனேயே
இருப்பது தான் தியானம்...

நீ ஆச்சரியமாக இருக்கும் போது.. உன் மனதில் எண்ணம் புகுந்தால்.. நீ யோசிக்க ஆரம்பித்து விடுகிறாய்..

இந்த உலகம் முழுக்க ஆச்சரியம் நிறைந்து இருக்கிறது.. நீ ஆச்சரியத்தில் சாதாரணமாக இருக்க முடியவில்லை என்பதால் கேள்விகள் கேட்கிறாய்..

கேள்விகளுக்கும் பதில்களுக்கும் முடிவே கிடையாது..

ஒரு கேள்வி ஒரு பதிலுக்கு இட்டுச் செல்லும்..

ஒரு பதில் ஆயிரம் கேள்விகளுக்கு இட்டுச் செல்லும்..

ஆச்சரியம் அற்புதத்துக்கு இட்டுச் செல்கிறது..

அதற்கு ஓர் ஆன்மீகப் பெயர் தான் கடவுள்..

கடவுள் என்பது அறிந்து கொள்ள முடியாத ஓர் அற்புதம்..

கேள்விகள் கேட்பதை விட்டு விட்டு.. ஆச்சரியத்தின் மீது கவனம் செலுத்து..

வெகு விரைவில் ஆச்சரியம் மறைந்து போய் அற்புதம் தோன்றி விடும்..

ஆச்சரியம் என்பது ஒரு சிறு அலை..

அற்புதம் என்பது பெருங் கடல்..

நீ ஆச்சரியத்திலேயே இருக்கும் போது.. அது உன்னை அற்புதத்திற்கு இட்டுச் செல்கிறது..

அற்புதம் எல்லையற்றதற்கு இட்டுச் செல்கிறது.. அது கடவுளுக்கு இட்டுச் செல்கிறது..

ஆனால் உடனே சிந்திக்க மட்டும் ஆரம்பித்து விடாதே...

உனக்கு ஏதாவது ஆச்சரியம் தோன்று மானால்.. அதனுடனேயே தங்கி விடு..

அப்போது ஆழ்ந்த மௌனம் உன்னைச் சூழ்ந்து கொள்ளும்..

ஒரு நாள் அந்த ஆச்சரியம் அற்புதத்திற்குள் கரைந்து போகும்..

அந்த ஆச்சரியத் தோடு நீயும் கரைந்து போவாய்..

யோசிக்க ஆசை வரும்..

உன்னுடைய மனது அந்த ஆச்சரியத்தை சிந்தனையாக்கி விடும்..

அதனால் அந்த யோசிக்கும் ஆசையிலிருந்து விடுபட்டு நில்..

நீயும் ஒரு அற்புதமாகி விடுவாய்...

தமிழன் விழித்து விட்டான் என்று நம் பாரம்பரியத்தையே நமக்கு வியாபார ரீதியாக விற்க தொடங்கி விட்டான்...


உலகின் முதல் ஹைட்ரஜன் எரிவாயு சைக்கிளின் விலை என்ன தெரியுமா.. கேட்டால் மயங்கிவிடுவீர்கள்...


நம்மூரில் ஒரு சைக்கிளின் விலை என்னவாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பிரான்ஸ் நாட்டில் வெளிவந்துள்ள புதிய மாடல் சைக்கிளின் விலை என்ன தெரியுமா? 9100 அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ.6 லட்சம். அப்படி என்ன இருக்கின்றது இந்த சைக்கிளில் என்று பார்ப்போம்..

இந்த சைக்கிள்தான் உலகில் முதன்முதலாக ஹைட்ரஜன் எரிவாயு உதவியால் இயங்கும் சைக்கிள். பிரான்ஸ் நாட்டின் பிராக்மா என்ற நிறுவனம் இந்த சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

உலகின் மிக அதிக விலையுள்ள சைக்கிள் என்ற பெருமையை பெற்றுள்ள இந்த சைக்கிளில் இரண்டு லிட்டர் ஹைட்ரஜனை நிரப்பினால் 100 கிமீ வரை பயணம் செய்யலாம்.

சுற்றுச்சூழல் சிறிதும் கெடாத வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சைக்கிளில் பயணம் செய்வது சொகுசான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சைக்கிளுக்கு நார்வே, அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து ஆர்டர்கள் குவிகிறதாம். ஆனால் இந்த நிறுவனம் வருடத்திற்கு 150 சைக்கிள்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...

புதிய பேருந்துகளும் கட்டணமும் உங்களுக்காக...


தமிழா என்ன செய்ய போகிறோம்...


இந்தியம் - திராவிடம் - தலித்தியம் - கம்யூனிசம் என்று பேசி ஏமாற்றி பிழைப்பவனின் சட்டையை பிடித்து கேள்வி கேள்...

பாஜக பினாமி தேர்தல் ஆணையம் கலாட்டா...


நாம் இன்னும் இதே பாதையில் சென்றால் இருக்கும் கொஞ்ச இயற்கை காய்கறிகளையும் அழித்து விடுவோம்...


தமிழ்நாட்டில் திராவிட ஆட்சியில், தமிழினம் அரசியல் பாதுகாப்பற்ற அனாதை இனமாகத்தான் இருக்கிறது...


நமது இந்த “அனாதை”த்தன்மையை அண்டை இனங்கள் பயன்படுத்தி, தமிழ் – தமிழர் என்ற அடையாளங்களை - மொழிவழித் தாயகத்தை சீர்குலைக்க தொடர்ந்து முயல்கின்றன.

தமிழ்நாட்டில் மீண்டும் விசயநகர நாயக்க மன்னர்களின் ஆட்சியைக் கொண்டு வர, ஆந்திரப்பிரதேச – தெலங்கானா தெலுங்கர்கள்  இந்திய ஆட்சியாளர்கள் விடா முயற்சி செய்கிறார்கள்...

பெங்களுரில் தமிழர்களுக்கு எதிரான போராட்டம் - செய்தி...


யார் தமிழர்கள் என்று கேள்வி கேட்ட அத்தனை அயோக்கியனுங்களும். போய் கேளுங்க எப்படி இவங்கள தமிழர்கள்னு கண்டு புடுச்சிங்கன்னு..

கன்னடன் சொல்லுவான் உங்களுக்கு பதில்...

ஒரு நாள் பள்ளிக்கு லீவு போட்டா, ரூ. 1000 அபராதமாம். சென்னை Doveton ஸ்கூல் அநியாயம்...


BIMSTEC எனும் திட்டத்திற்காக தமிழினத்தை திட்டமிட்டு அழித்துக் கொண்டிருக்கின்றனர்...


2004 - 2005ஆம் ஆண்டுகளிலிருந்து திட்டமிடப்பட்டு, இன்று வரை தமிழ்நாடும், தமிழீழமும் சந்தித்துக் கொண்டுள்ள பேராபத்துகளை - சந்திக்கவுள்ள பேராபத்துகளை - எதிர்கொள்ளவுள்ள இராணுவமயமாக்கல் நடவடிக்கைகளை - சூழலியல் அழிப்புத் திட்டங்களை - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நாம் பெற்ற விடைகளை - அரசின் ஆவணங்களிலிருந்து கிடைத்த அதிர்ச்சித் தகவல்களை தொகுத்து நூலாக்கியுள்ளேன்.

பிம்ஸ்டேக் - பேரழிவில் தமிழர் தாயகங்கள் - நூலின் பெயர்...

பன்மை வெளி வெளியீட்டகம் வெளியிட்டுள்ள இந்த புதிய நூல்...

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” - சிறப்பு அரங்கம்  B (அரங்கு 42 - 43க்கு எதிரில்) விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சூழலியல் செயல்பாட்டாளர்களும், தமிழின உணர்வாளர்களும் வாங்கிப் படித்து, நாம் இனி வரப்போகும் எதிர்காலத்தை சரிவரத் திட்டமிட்டுக் கொள்ள - செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.

நூலெழுதும் போது, கருத்துகள் கூறி - செமைப்படுத்தி - வழிநடத்திய - தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைவர்  ஐயா பெ. மணியரசன், பொதுச் செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன், நூலை வெளிக் கொண்டு வந்த பன்மை வெளி வெளியீட்டகம் பொறுப்பாளர் தோழர் பாலகுமரன் அறிவன் தமிழ், மெய்ப்பு திருத்தி உழைத்த தோழர் ஆனந்தன் இலக்கியன், அட்டை வடிவமைத்த பாவலர் Kavi Baskar, தகவல்கள் அளித்து உதவிய Rathish Kumaran உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியும் நேசமும்!

தோழமையுடன்,
க. அருணபாரதி,
தலைமைச் செயற்குழு உறுப்பினர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
18.01.2018
பேச: 9841949462...

மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள்...


ஏனென்றால் அது ஒன்று தான் நீ தற்கொலை செய்து கொள்வதிலிருந்து உன்னை காக்கிறது..

நீ இங்கே யாருடைய எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதற்கு பிறக்கவில்லை.

யாருடைய எதிர்ப்பார்ப்புக்கும் நீ பலி ஆகாதே.

உன் எதிர்பார்ப்பிற்கு எவரையும் பலியாக்காதே.

இதைத் தான் நான் தனித்தன்மை என்கிறேன்.

உன் தனித் தன்மையை மதி.

பிறர் தனித் தன்மையையும் மதி.

எப்போதும் எவரையும் உன் தனிப்பட்ட வாழ்வில் குறுக்கிட அனுமதியாதே.

அதே போல் எவருடைய தனிப்பட்ட வாழ்விலும் நீ குறுக்கிடாதே.

அப்போது தான் நீ ஒரு நாள் ஆன்மிகத்தில் மலரமுடியும்.

மாறாக 99 சதவீத மக்கள் வெறுமே தற்கொலை செய்து கொண்டே இருக்கிறார்கள்.

அவர்களுடைய மொத்த வாழ்வும் மிக மெதுவான தற்கொலையன்றி வேறில்லை.

மற்றவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொண்டே இருப்பது...

சில நாட்கள் அப்பாவின் எதிர்பார்ப்பு..

சில நாட்கள் அம்மாவின் எதிர்பார்ப்பு..

ஒரு நாள் மனைவி மற்றொரு நாள் கணவன், குழந்தைகள்.. அவர்களும் எதிர்பார்க்கிறார்கள்..

பின் சமூகத்தின் எதிர்பார்ப்பு.. அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு..

மத குருமார்களின் எதிர்பார்ப்பு.. சுற்றிலும் யாவரும் எதிர்பார்ப்புடனேயே உள்ளனர்..

நீயோ பாவம் எளிய மனிதன் மொத்த உலகமும் உன்னிடம் இதை செய் அதை செய் என்று எதிர்பார்க்கிறது..

உன்னால் அனைவரின் அனைத்து எதிர்பார்ப்பையும் நிறைவேற்றவே முடியாது.

அனைவரும் உன்னிடம் கோரும் எதிர்பார்ப்புகளை பார்த்து நீ பைத்தியம் அடைந்து விட்டாய்.

உன்னால் யாருடைய எதிர்ப்பார்ப்பையும் முழுதாக நிறைவேற்றவே முடிவதில்லை.

யாருமே திருப்தி அடைவதேயில்லை. யாருமே திருப்தி அடையாததால் நீ வீணானவன் தோற்றவன்.

தனக்குள் திருப்தியாக மகிழ்ச்சியாக இருக்க இயலாதவர்களால் மகிழ்ச்சியாக சந்தோசமாக இருக்க முடிவதேயில்லை.

எதை நீ செய்தாலும் மற்றவர்கள் உன்னுடன் திருப்தியடையாமல் இருப்பதற்கு வழி காண்பார்கள்.

ஏனென்றால் அவர்களால் திருப்தி அடைய முடியாது. சந்தோசமாக இருக்க முடியாது.

மகிழ்ச்சி திருப்தி என்பது ஒரு கலை. அதை ஒருவன் கற்றுக் கொள்ள வேண்டும்.

நீ எதை செய்கிறாய் எதை செய்யவில்லை என்பதை பொருத்தது அல்ல அது.

மற்றவர்களை மகிழ்விப்பதை விட... நீ மகிழ்ச்சியாக இருக்கும் கலையை கற்றுக் கொள்...

சம்பளம் ஏத்துன அடுத்த நாளே எலக்சன் அறிவிப்பா...


குடிப்பழக்கத்தை ஏன் நிறுத்த முடிவதில்லை?


குடிப்பழக்கம் மட்டுமல்ல வேறு எந்த பழக்கத்தையும் உடனே நிறுத்த முடியாது.

பாதிப்பு அதிகம் என்பதால், நாம் குடிப்பழக்கத்தைப் பற்றி அதிகம் பேசுகிறோம்.

மற்றபடி டீ குடிக்கும் பழக்கத்தைகூட நிறுத்துவதென்பது கடினமான ஒன்று தான்.

நாம் ஏற்படுத்திக் கொள்ளும் பழக்கங்கள் நம் நரம்பு மண்டலத்தில் சில தூண்டுதல்களை ஏற்படுத்துகிறது.

அந்த தூண்டுதல்களுக்கு பழக்கப்பட்டு விட்ட நமது நரம்பு மண்டலம். மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட அந்த செயலை செய்யுமாறு நம்மை தூண்டுகிறது.

எனவே சரியான ஆலோசனை மற்றும் அதற்குண்டான பயிற்சியினால் மட்டுமே ஒரு பழக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

மற்றபடி ஒரு முறை குடித்துவிட்டு ச்சே இனிமேல் குடிக்கவே கூடாது என நினைப்பதெல்லாம் குற்ற உணர்வால் ஏற்படும் சிந்தனைகள்...

அப்புறம் என்ன பொருளாதார அறிஞரே சொல்லிட்டாரு...


கன்னட தெலுங்கர் ஈ.வே. ராமசாமியின் சாதி வெறி...


முதுகுளத்தூர் கலவரத்திற்கு பிறகு - பசும்பொன் முத்துராமலிங்க தேவரை கைது செய்ய காமராசருக்கு யோசனை சொன்ன  ஈ.வே. ராமசாமி நாயக்கர்...

கீழ்வெண்மணி படு கொலைகளுக்கு பிறகு கோபாலகிருஷ்ணன் நாயுடுவை கைது செய்ய சொல்லி அண்ணாதுரைக்கு ஆணையிடவில்லை.

காரணம் - நாயக்கரின் சாதி பாசம்.

நாயுடுவுக்கு நாயக்கர்வாள் உதவாமல் யார் உதவுவார்கள்.

இந்த அப்பட்டமான வடுக தெலுங்கு திராவிட சாதி வெறி கும்பல் தான், முத்துராமலிங்க தேவரை சாதி வெறியர் என்று ஏசுகிறது...

தமிழகத்தில் சாகர்மாலா திட்டத்தை செயல்படுத்த.. நம்மை திசை திருப்புகிறார்கள்.. தமிழினமே விழித்துக்கொள்...


நீதி மன்றம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து மடத்தை ஆய்வு செய்ய வேண்டும்...


நம் நாட்டின் குழந்தைகள் நல சட்டம்
நித்தி மடத்தை ஆய்வு செய்து குழந்தைகளை காக்க வேண்டும்...

எச்ரிக்கை சாகர்மாலா திட்டத்திற்கான ஏற்பாடுகளே இத்தகைய திட்டங்கள்...


தமிழக மீனவர்கள் அழிப்பும் இதன் அங்கமே...

நம்மை இங்கு பல மாயையில் ஊடகங்கள் மூலம் திசைத்திருப்பிவிட்டு சாகர்மாலா திட்டத்தை அரங்கேற்றுகிறது அரசு...

கமல் ஹாசன் ஒரு கன்னட பிராமணன்.. அதாவது திராவிடன்...


கமல் ஹாசன் என்பவர் ஹாசன் என்ற குலப் பட்டப் பெயரைக் கொண்ட கர்நாடகத்தை சேர்ந்த ஒய்சல பேரரசின் வடுக பிராமணர்..

எனவே இவர் தன்னை திராவிடர் என அடையாளப்படுத்துவதில் தவறில்லை...

விசயநகர படையெடுப்பால் ஊடுருவியவர்கள் திராவிடர்கள் அவர்களுக்கும் தமிழர் நாட்டின் தொல் குடியான தமிழகத்தை தாயகமாக கொண்ட தமிழருக்கும் எந்த தொடர்பும் இல்லை...

தமிழர் முன்னெடுக்கும் தமிழிய தமிழர் ஆளுமையை மட்டும் தான் ஏற்போம்...

தமிழக அரசு.. சர்க்கஸ் பாலம் அமைத்து சாதனை...


வாழப்பாடி அருகே ஆத்தூர் டி.எஸ்.பி. சென்ற ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது...


இந்த விபத்தில் ஜீப்பில் சென்ற டி.எஸ்.பி. பொன் காத்திக்குமார் உள்பட 3 பேர் காயமடைந்துள்ளனர்...

தமிழக அரசின் புதிய பேருந்து கட்டணமும்.. பழைய பேருந்தும்...


சனவரி 26 கிராமசபை கூட்டம்...


அதிகாரமிக்க மக்களால் தன் கிராமத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல முடியும் நல்ல திட்டங்களை தீர்மானமாக நிறைவேற்றுங்கள்...

ஊராட்சிகளில் ஊழலற்ற உண்மையான வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்..

தன்னலமில்லாத இளைஞர்களால் லஞ்சம் ஊழலற்ற கிராமத்தை உருவாக்க முடியும்...

தமிழக ஊழல் அரசே பதில் சொல்...


ராமநாதபுரம் மாவட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...


வடமாநில திருடர்கள் அதிகமாக வந்து உள்ளனார். இதனை அடுத்து மக்கள் பாதுகப்பாக இருக்கும்படி  மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் உத்தரவுவிட்டுள்ளார்....