20/08/2017
பாஜக மோடியால் உண்டான கேன்சர் கட்டி இந்த எடப்பாடி அரசு...
தமிழகத்தை சாய்க்குமுன் வெட்டி எறிய வேண்டும் அதனை..
தமிழக மக்கள், கட்சிகள், அமைப்புகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி அழைப்பு..
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன்அவர்கள் இன்று 19.08.2017 விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:.......
தமிழக மக்களின் உணர்வுக்கும் விருப்பத்துக்கும் மாறாக, அவர்கள் நிராகரித்த மோடியின் உணர்வுக்கும் விருப்பத்துக்கும் ஏற்பவே நடக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி.
உணவு, கல்வி, விவசாயம். மின்சாரம் என அடிப்படை வாழ்வியல் நல உரிமைகள் அனைத்தையும் நடுவண் பாஜக மோடி அரசுக்குப் பலியிட்டிருக்கிறார்.
அந்த வகையில் இப்போது தமிழகத்தின் உயிர்-நீர் ஆதாரமான காவிரிக்கும் முடிவுரை எழுதுகிறார்.
தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்கள் தொடர்பான பிரச்சனையில் எடப்பாடி அரசின் வழக்குரைஞர் சேகர் நாப்தே தமிழகத்துக்கு எதிரான, விரோதமான, துரோகமான வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்திருக்கிரார்.
காவிரி இறுதித் தீர்ப்பு தொடர்பான நான்கு மாநிலங்களின் மேல் முறையீட்டு விசாரணை கடந்த 17ந் தேதியன்று தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வின் முன் நடைபெற்றது.
அப்போது “தமிழகத்துக்குத் தர வேண்டிய தண்ணீரைத் தேக்கி வைக்கவே மேகதாதுவில் புதிய அணை” என வஞ்சதந்திரத்துடன் வாதிட்டது கர்நாடகம்.
கர்நாடகத்தின் இந்த வாதத்தை தமிழகம் ஏற்கலாம்தானே என்று நீதிபதிகள் சொல்ல; அதை எதிர்க்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டார் தமிழக அரசின் வழக்குரைஞர்.
தமிழகத்துக்கு தண்ணீர் தர தடையில்லையென்றால் மேகதாதுவில் புதிய அணை கட்டவும் தமிழகம் எதிர்க்காது என்றார் தமிழக வழக்குரைஞர்.
அதோடு புதிய அணையைக் கண்காணிக்க சிறப்பு ஆணையம் ஒன்றையும் அமைக்க வேண்டும் என்றார்.
தமிழக அரசு வழக்குரைஞர் சேகர் நாப்தேவின் இந்தக் கருத்துக்கள் தமிழகத்திற்கு எதிரானவை; காவிரி பிரச்சனை வழக்கில் தமிழக அரசு கொண்டிருக்கும் நிலைப்பாட்டிற்கும் எதிரானவை.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர்ப் பகிர்வு ஒழுங்காற்றுக் குழு ஆகிய இரு அமைப்புகளையும் சட்டப்படி நடுவண் அரசு அமைத்தாக வேண்டும் என்பதுதான் இறுதியும் அறுதியும் உறுதியுமான நிலை.
இந்த நிலையை சீர்குலைத்து காவிரி மேலாண்மை வாரியம், நீர் ஒழுங்காற்றுக் குழு, ஏன், நடுவர் மன்றத்தையேகூட ஒழித்துக்கட்ட முனைகிறது மோடி அரசு.
மோடி அரசின் இந்த வஞ்சகத் திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தமிழக வழக்குரைஞர் வாதிட்டிருக்கிறார்.
மேகதாதுவில் அணை கட்டுவது, மாநிலங்களுக்கிடையிலான தேசிய நதிநீர்த் தாவா சட்டப்படி மாத்திரமல்ல; நாடு விட்டு நாடு பாயும் நதிகள் குறித்த பன்னாட்டளவிலான சட்டப்படியும் கூடாது என்பது சட்டம் படித்த தமிழக வழக்குரைஞருக்குத் தெரியாதா என்ன?
இப்படி அவர் வாதிட்டிருப்பது தான்தோன்றித்தனமாகவா அல்லது பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கும் முதலமைச்சர் சொல்லித்தானா என்பது தமிழக மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.
எப்படி இருந்தாலும் தமிழக அரசின் நிலைப்பாடு உச்ச நீதிமன்றத்தில் பதிவாகிவிட்டிருக்கிறது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமிதான் முழு பொறுப்பு.
இதற்கு முன்னர் தமிழகத்தின் நல-உரிமை தொடர்பான விடயங்களில் மோடியின் உணர்வுக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப நடந்து கொண்டபடியே காவிரி பிரச்சனையிலும் முடிவுரை எழுதியிருக்கிறார் எடப்பாடி என குற்றம் சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
நோய் வந்தால் உடல்நலம் கெடும்; செயல்பாடு முடங்கும். தமிழகத்திற்கு வந்திருப்பதோ புற்றுநோய்; உயிர் குடிக்கும் நோய்; மோடியால் உண்டான “கேன்சர் கட்டி”; எடப்பாடி அரசு எனும் கேன்சர் கட்டி!
இந்த கேன்சர் கட்டி தமிழகத்தின் உயிரைக் குடிக்குமுன் அதனை வெட்டி எறிந்தாக வேண்டும்.
அதற்காக தமிழக மக்கள், கட்சிகள், அமைப்புகள் ஓரணியில் திரள வேண்டும் என அழைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி...
அமானுஷ்யம் - லிங்கனும் கென்னடியும்...
அமெரிக்க ஜனாதிபதி லிங்கனின் வாழ்க்கைக்கும், மற்றொரு ஜனாதிபதியான ஜான் எஃப் கென்னடியின் வாழ்க்கைக்கும் இடையே நிறைய ஒப்புமைகள் உள்ளன. நம்ப முடியாத நிஜங்களாக உள்ள அவற்றைப் பற்றிய தகவல்கள் கீழே…
ஆப்ரஹாம் லிங்கன்...
ஆப்ரஹாம் லிங்கன் காங்கிரஸ் மகா சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது 1846.
ஜான் எஃப் கென்னடி தேர்ந்தெடுக்கப்பட்டது 1946.
லிங்கன் துணை தலைவர் பதவிக்கான தேர்வில் தோற்றது 1856.
ஜான் எஃப் கென்னடி துணை தலைவர் பதவிக்கான தேர்வில் தோற்றது 1956.
லிங்கன் ஜனாதிபதி ஆனது 1860.
ஜான் எஃப் கென்னடி ஜனாதிபதி ஆனது 1960.
ஜான் எஃப். கென்னடி...
லிங்கன் தோற்கடித்த ஸ்டீபன் டக்லாஸ் பிறந்தது 1813.
கென்னடி தோற்கடித்த ரிச்சர்ட் நிக்ஸன் பிறந்தது 1913.
லிங்கன், கென்னடி இருவருமே சிவில் விவகாரங்களில் தொடர்பு கொண்டிருந்தனர்.
இருவரது மனைவிகளுமே வெள்ளை மாளிகையில் வசித்தபோது குழந்தையைத் தொலைத்தனர்.
இருவருமே சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு வெள்ளிக் கிழமையில்.
இருவருக்குமே காயம் பட்டது தலைப் பகுதியில்.
லிங்கனின் செயலாளர் பெயர் கென்னடி
கென்னடியின் செயலாளர் பெயர் லிங்கன்.
இருவருமே கொல்லப்பட்டது அமெரிக்காவின் தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களால்.
இருவருமே தோற்கடிக்கப்பட்டது அதே தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களால் தான்.
இருவருடைய துணைத் தலைவரது பெயரும் ஜான்ஸன் என்பது தான். லிங்கனின் துணைத் தலைவர் பெயர் ஆண்ட்ரூ ஜான்ஸன். அவர் பொறுப்பில் இருந்தது 1847. லிங்கனை வென்ற அவர் பிறந்தது 1808.
கென்னடியின் துணைத் தலைவர் பெயர் லிண்டன் ஜான்ஸன். அவர் பொறுப்பில் இருந்தது 1947. கென்னடியை வென்ற அவர் பிறந்தது 1908.
லிங்கனைக் கொன்ற ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1838ல்.
கென்னடியைக் கொன்ற லே ஹார்வி ஒஸ்வால்ட் பிறந்தது 1939ல்.
கொலையாளிகள் இருவரும் மூன்று விதமான பெயரில் அழைக்கப்பட்டார்கள்.
லிங்கனைக் கொன்றவர் ஜான் என்றும், வில்க்ஸ் என்றும், பூத் என்றும் மூன்று வகையாக நண்பர்களால், உறவினர்களால், தங்கள் அதிகாரிகளால் அழைக்கப்பட்டார்.
அதுபோல கென்னடியைக் கொன்றவர் லே என்றும், ஹார்வி என்றும், ஒஸ்வால்ட் என்றும் அழைக்கப்பட்டார்.
இருவருடைய பெயரிலும் மொத்தம் 15 எழுத்துக்கள் இருந்தன.
லிங்கன் கொல்லப்பட்ட தியேட்டரின் பெயர் ஃபோர்ட்.
கென்னடி கொல்லப்பட்டது லிங்கன் என்ற பெயர் கொண்ட ஃபோர்ட்’ தயாரித்த காரில்.
லிங்கனைக் கொன்ற ஜான் தியேட்டரிலிருந்து தப்பி ஓடி ஒரு கிடங்கில் பிடிபட்டான்.
கென்னடியைக் கொன்ற ஒஸ்வால்ட் ஒரு கிடங்கிலிருந்து தப்பி ஓடி தியேட்டரில் பிடிபட்டான்.
பூத் மற்றும் ஓஸ்வால்ட் இருவருமே தங்கள் தண்டனையை அனுபவிக்கும் முன்னரே கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவங்கள் எல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
இல்லை.. இல்லை.. இதெல்லாம் தற்செயல் தான் என்கிறீர்களா?
ஓரிரண்டு விஷயங்கள் வேண்டுமானால் தற்செயலாக இருக்கலாம். இவ்வளவு விஷயங்களும் தற்செயலாக இருக்குமா என்ன?
தோழர் பெ. மணியரசன் அவர்களை காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர்...
காவிரியின் குறுக்கே அணை கட்ட கன்னடனுக்கு பச்சைக்கொடி காட்டி மண்டியிட்ட தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியே காவிரிப்படுகையில் கால் வைக்காதே திரும்பி போ என கருப்புக் கொடி காட்டிய காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்...
படிக்காத ஏழை விஞ்ஞானி, வறுமையின் பிடியில்...
தனது கண்டு பிடிப்புக்காக டெல்லி செல்ல வழியின்றித் தவிக்கும் மதுரை விஞ்ஞானி அப்துல் ரசாக், உதவும் உள்ளங்களே; இவருக்கும் கொஞ்சம் உதவுங்களேன்...
தண்ணியிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்கும் கருவியைக் கண்டு பிடித்த மதுரை விஞ்ஞானி அப்துல் ரசாக்குக்கு அழைப்பு வந்தும் பண வசதி இல்லாததால் தில்லிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்.
தண்ணீரிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்கும் கருவியைக் கண்டு பிடித்த மதுரை விஞ்ஞானி அப்துல் ரசாக், அதனை விஞ்ஞானிகள் முன்பு செய்து காட்ட தில்லியிலிருந்து அழைப்பு வந்தும் பண வசதி காரணமாக செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
மின் விசிறியிலிருந்து குக்கர் வரை மக்களின் வசதிக்கு ஏற்றாற்போன்று உருவாக்கி வைத்திருக்கிறார். ஒற்றை மோட்டாரில் இரண்டு பக்கமும் பொருத்தப்பட்ட மின்விசிறியைக் கண்டு பிடித்துள்ளார்.
இதுபோன்று 45 பொருட்களைக் கண்டு பிடித்து காப்புரிமை பெற்றுள்ளார். தனது மனைவியின் உடல்நிலையைக் கருத்திற் கொண்டு உருவாக்கிய ரைஸ் குக்கர்தான் இவரது முதல் படைப்பு.
கடலில் கொட்டும் எண்ணெயை பிரித்தெடுக்கும் இயந்திரத்தை அண்மையில் உருவாக்கியுள்ளதுதான் அவரின் கண்டு பிடிப்பிலெல்லாம் மிக மையமானது.
வெறும் 7ஆம் வகுப்பே படித்துள்ள அப்துல் ரசாக், 'சென்னை துறைமுகத்துல ரெண்டு கப்பல் மோதி கொட்டிய எண்ணெயால அந்தப் பகுதி சுற்றுச்சூழலே ரொம்ப பாதிக்கப்பட்டிருச்சி... அதைவிட அதை அள்ளுறதுக்கு வாளிய பயன்படுத்துனது தான் எனக்குள்ள ஒரு தாக்கத்த ஏற்படுத்திருச்சு... அந்த வேகத்துல உருவாக்குனதுதான் சார் இந்த மிஷின்' என்கிறார்.
தனது நண்பர் கிருஷ்ணபிரசாத் செய்த பண உதவியால் இச்சிறு மாடல் கருவியை உருவாக்கியிருக்கிறார். பண வசதியின் பொருட்டு கருவியின் அளவை பெரிதாக்கலாம் என்கிற ரசாக். அது செயல்படும் விதத்தை நமக்கு டெமோ-வாகக் காட்டுகிறார்.
'இக்கருவியின் மூலம் 90 சதவிகித எண்ணெய் பிரிப்பு பணியைச் செய்துவிடலாம் என்றும் மிச்சம் மீதியுள்ள எண்ணெய்ப்படலத்தை மற்றொரு கருவியின் துணை கொண்டு முற்றிலுமாக நீக்கிடவிட முடியும்' என்று கூறும் ரசாக்கை, புதிய கண்டுபிடிப்புகளுக்கான தேசிய அறக்கட்டளை தில்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
அப்துல் ரசாக் கண்டுபிடித்துள்ள எண்ணெய் பிரிக்கும் இயந்திரத்தின் முழு மாடலோடு, வருகை, விஞ்ஞானிகள் மத்தியில் அதனை டெமோ செய்து காட்ட அழைப்புவிடுத்துள்ளது. 'இந்த இயந்திரத்தை அதன் முழு வடிவத்தோடு, தயாரிப்புச் செய்ய குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் செலவாகும். அது போக தில்லி செல்வதற்கான செலவுகள் என ஒரு லட்சத்திற்கும் மேல் தேவைப்படுகிறது' என்கிறார்.
கண்டுபிடிப்புச் செய்வதை மட்டுமே தனது வேலையாகக் கொண்ட அப்துல் ரசாக்கிற்கு, தில்லி செல்வதற்கான செலவுகள் அவருக்குள் மலைப்பை ஏற்படுத்திவிட்டது. இதற்காக மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையீடு செய்துள்ளார். அவர், இவரது கோரிக்கை மனுவை ஏற்று அம்மனுவை மதுரை மாவட்ட தொழில் மையத்திற்கு பரிந்துரை செய்துள்ளார். அந்நிறுவனம் இவரது வயது மற்றும் கல்வித்தகுதியைக் காரணம் காட்டி கடனுதவியையும் மறுத்துள்ளது.
'இக்கருவிக்கான அங்கீகாரத்தை இந்திய அரசாங்கம் வழங்கியதும் இதனை நாட்டுக்காக அர்ப்பணிக்கவே விரும்புகிறேன்' என்கிறார் ரசாக் ., மூன்று வயதில் தாயை இழந்தவர். அப்போதிருந்தே தனியாகவே வாழ்ந்து இது போன்ற கண்டுபிடிப்புகளுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.
தில்லியில் விஞ்ஞானிகள் முன்பு தனது கண்டுபிடிப்பு குறித்த சோதனையை நடத்திக் காட்டத் தயாராக இருக்கும் இந்த படிக்காத விஞ்ஞானியின் இன்றைய பரிதவிப்புக்கு, தமிழ் கூறு நல்லுலகம் எவ்வாறு கடமையாற்றப்போகிறது?
தொடர்பு எண்: 9894905268...
செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...
பண்டையக் காலத் தமிழர்கள் இலக்கியமும், வாழ்வியலும் மட்டுமின்றி அறிவியலிலும் சிறந்து விளங்கியிருக்க வேண்டும்..
இப்படி தான் சமைக்க வேண்டும் என்பதில் இருந்து அந்த உணவை எந்த வகையிலான பாத்திரங்களில் சமைக்க வேண்டும், எவ்வாறு சாப்பிட வேண்டும் என அனைத்தையும் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு அமைத்திருக்கின்றனர்.
ப்ளீஸ்... பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணி குடிக்காதீங்க, நாம் இன்று தண்ணீர் பருகப் பயன்டுத்தி வரும் பிளாஸ்டிக் உபகரணங்கள் 100% உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை.
முக்கியமாக ஆண்களுக்கு ஆண்மையை பாதிக்கும் தன்மை உடையவை.
நாண்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு ஆபத்து தான்.
ஆனால், நமது முன்னோர்கள் பயன்படுத்திய செப்புப் பாத்திரங்கள் இதற்கு நேர் எதிராக 100% ஆரோக்கிய நன்மைகளை தருபவையாக இருக்கின்றன. அதைப் பற்றி ஸ்லைடுகளில் விரிவாகப் பார்க்கலாம்...
பாக்டீரியாக்களைக் கொல்லும் : செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி வைத்து பருகுவதால் நீரில் இருக்கும் கிருமிகள் கொல்லப்படுகின்றன. முக்கியமாக வயிற்று உபாதைகள் மற்றும் வயிறு சார்ந்தப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் கிருமிகளை முற்றிலுமாக அழிக்கப் பயன்படுகிறது செப்புப் பாத்திரங்கள்.
தைராய்டு : தைராய்டு சுரப்பிகளை கட்டுப்படுத்த, சீரான முறையில் செயல் இயக்கம் நடைப்பெற, வெகுவாக உதவுகிறது செப்புப் பாத்திரங்கள். செப்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதனால் உங்கள் உடல்நலம் பாதுகாக்கப்படுகிறது.
மூட்டு வலி : செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் பருகுவதனால், மூட்டு வலியை குறைக்க, குணமடைய செய்ய முடியும்.
காயங்கள் விரைவில் குணமடைய
செப்பு உங்கள் உடலில் செல்கள் புதிதாக வளரவும், ஆரோக்கியமாக இருக்கவும் வழிவகுக்கிறது. இதனால், உங்களுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டாலும் அது விரைவாக குணமடைய செப்பு உதவுகிறது.
மூளையின் செயல்திறன் : மூளையில் நியூரான்களுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியை மையிலின் என்னும் உறை மூடிப் பாதுகாக்கிறது. இந்த மையிலின் உறைகளைப் பாதுகாக்க செப்பு உதவுகிறது. எனவே, செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
செரிமானம் : செப்புப் பாத்திரங்களில் நீரைப் பருகுவதனால் செரிமானப் பிரச்சனைகளில் இருந்து நல்ல தீர்வு காணக் இயலும்.
இரத்த சோகை : சிகப்பு இரத்த அணுக்கள் உடலில் பெருமளவில் உற்பத்தி செய்ய செப்பு நீர் பயன்படுகிறது. எனவே, செப்புப் பாத்திரங்களில் நீர் பருகுவதனால் இரத்த சோகை கோளாறுக்கு சீரான தீர்வு காண முடியும்.
பிரசவக் காலங்களில் : பிரசவக் காலங்களில் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதை சரி செய்ய செப்புப் பாத்திரங்களில் நீர் பருகுவது நல்ல தீர்வு அளிக்கும். மற்றும் பிரசவக் கால நோய் தொற்றுகள் அன்றாமல் பாதுகாக்கும்.
புற்றுநோய் : புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை உடலில் அண்டவிடாமல் தவிர்க்க செப்புப் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் நீர் உதவுகிறது. மற்றும் இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது.
முதிர்ச்சி : செப்பில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது. இதனால், உங்கள் சருமத்தின் முதிர்ச்சி அடையும் தன்மையைக் குறைத்து உங்களை என்றும் இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது...
மூவேந்தர் ஓரினமே...
இராசேந்திர சோழன் வெளியிட்ட தங்க காசு...
இந்த நாணயத்தில் சேர, சோழ, பாண்டிய சின்னங்களான மீன், வில், புலி மூன்றும் உள்ளன.
இது அகமதாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது,
அந்நாட்களில் தமிழ்நாட்டாண்மை (தமிழ் தேசிய) சிந்தனைக்கு எடுத்துக்காட்டு..
என்னதான் அடித்துக்கொண்டாலும் அவர்கள் தமிழனாகத்தான் இருந்தார்கள்...
தமிழ்நாட்டை வடமாநிலங்களோடு ஒப்பிடுவதே தவறு, முன்னேறிய நாடுகளோடு தான் ஒப்பிட வேண்டும்...
தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இந்தியாவின் மாநிலங்களில் நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது.
தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் 9.39 விழுக்காடு.
தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் மற்ற தென் மாநிலங்களை விட அதிகமாக உள்ளது.
தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவில் இரண்டாவது பெரிய மாநிலமாக உள்ளது.
தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில், இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் பெரும்பான்மையான இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் தமிழகத்தைப் போல மூன்று மடங்கு மக்கள் தொகை அதிகம். ஆனால், சுகாதார துறைக்கு ஒதுக்கப்படும் தொகையானது, தமிழகத்தைவிட மூன்றில் ஒரு மடங்கு தொகை குறைவு.
அந்தத் தொகையிலும் பெரும்பகுதி, ஹிந்துத்துவா வலியுறுத்தும் ஆயுர் வேதம் போன்ற பயனளிக்காத மாற்று மருத்துவ முறைகளுக்குத் தான் செலவிடப்படுகிறது.
இத்தனைக்கும் மத்திய அரசு வட மாநிலங்களுக்கு தான் அதிக நிதியை ஒதுக்குகிறது.
அவற்றை, கோசாலை, மாட்டுக்கு ஆம்புலன்ஸ், வேதகால அறிவியல் போன்ற பயன்படாத திட்டங்களுக்கு வெட்டி செலவு செய்கிறார்கள்.
மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கு சலுகை என எந்த ஏற்பாடுகளும் கிடையாது. அதனால் அங்கெல்லாம், தரமான மருத்துவ வசதி என்பது பெரும்பான்மை மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.
இது போக தென்மாநிலங்களில் உள்ளது போல பரவலாக உள்ள கிருஸ்துவ மிஷினரிகளின் மருத்துவ சேவைகளும் வட மாநிலங்களில் மிக மிக குறைவு.
எனவே தான் தமிழ்நாட்டை வடமாநிலங்களோடு ஒப்பிடுவதில்லை, முன்னேறிய நாடுகளோடுத்தான் தான் ஒப்பிட வேண்டும் என நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமெர்த்தியா சென் சொன்னார்.
தமிழகத்தின் மொத்த வருமானம், ஒட்டு மொத்த பாகிஸ்தான் நாட்டின் வருமானத்திற்கு சமம்.
ஒரு மாநிலத்தின் வருமானம் இந்தியாவிற்கே சவால் விடும் அண்டை நாட்டின் வருமானத்திற்கு நிகராக உள்ளதென்றால், அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்.
நம் தமிழ் மாநில கல்வியின் தரத்தை அளவிட இந்தியாவில் எவனுக்கும் அறிவோ, அருகதையோ கிடையாது...
கன்னட ஈ.வெ. ராமசாமியும் தமிழின அழிப்பும்...
அணுகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்த மாமனிதர் அப்துல் கலாம் தாய்மொழி கல்வியே சிறந்தது என்று கூறுகின்றார்.....
அப்துல் கலாம் அவர்கள ஆங்கிலம் கற்று ஆங்கில மொழியில் பேராசியர் செய்யும் திறன் கொண்டவர்...
ஆனால் விபசார விடுதி, காவேரிகரை என்று ஆராய்ச்சி செய்து வெற்றிகரமாக் 75 வயதில் 26 வயது வளர்ப்பு மகளை கட்டாயமணம் முடித்த கன்னட ஈ.வெ. ராமசாமி ஆங்கில மொழி கல்வியே சிறந்தது என்று கூறுகின்றார்......
கன்னட ஈ.வெ.ராமசாமி அவர்கள ஆங்கில மொழி அடிப்படை கூட தெரியாது, கற்று கொள்ளவில்லை மழைக்கு கூட பள்ளிகூடம் பக்கம் ஒதுங்கியது கிடையாது..
திராவிட புரட்சி என்பது பக்கத்து வீட்டுக்காரனை மட்டும் பலியாக்கி குளிர் காயும் திருட்டே...
திருட்டு திராவிடர்ஸ்...
இந்த எழுத்துச் சீர்திருத்தங்கள் ஈ.வெ. ராவினால் செய்யப்பட்டதாம்...
திராவிடப் புரட்டுக்கு ஓர் அளவே இல்லையா டா...
உண்மையில் குடியரசு செய்தித்தாளில் ஒரு நாள் அச்சுக்கோர்க்கும் போது 'ணை'யின் பழைய வடிவ எழுத்து இல்லாததால். ணை-இல் உள்ள இரண்டு குறிகளையும் சேர்த்து 'ணை' என்று போடச் சொன்னார் ராமசாமி.
இப்படித்தான் சீர்திருத்தத்தைக் கண்டு பிடித்தார்.
அன்று 'ணை'யின் பழைய வடிவ எழுத்து இருந்திருந்தால் அதையே பயன்படுத்தியிருப்பார்.
மற்றபடி இதெல்லாம் ஈ.வெ.ரா. செய்த சீர்திருத்தங்கள் இல்லை.
வழைமை போல் திராவிடக் கட்டுக் கதையே இது.
இந்த புதிய எழுத்து வகைகள் காலந்தோறும் தமிழறிஞர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறவையே.
அவற்றைத் திருடியும், சேர்த்து வெட்டி, ஒட்டியும் தனது சீர்திருத்தங்களாக குடியரசு -வில் எழுதினார் ராமசாமி. என்னவொரு கட்டுக்கதையப்பா..
ஈ.வெ.ரா. இந்தத் திருத்தங்கள் மட்டுமா செய்தார்?
தமிழையே ஆங்கில எழுத்துக்களில் எழுத வேண்டுமென்றல்லவா சொன்னார்..
திருத்தத்திற்கு தேவையே இல்லாமல் போய்விடும் கிழவனுக்கு.
தமிழை ஆங்கிலத்தில் எழுது என்பது, ஒருவன் தன் மனைவியை அடுத்த வீட்டுக்காரனிடம் அனுப்பி குழந்தை பெற்றுக்கொள் என்பது போன்ற விடயம்...
திராவிடக் கலப்பற்ற தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்புவோம்...
திராவிடத்தையும் ஈ.வெ.ரா.வின் கருத்தியலையும் தலையில் ஏற்றிக் கொண்டு தமிழ்த் தேசியம் பேசுகிற தமிழர்கள்..
தொன்மையான மொழி தமிழ்மொழி, தொன்மையான மாந்தன் தமிழ் மாந்தன்.
தொன்மையான கண்டம் குமரிக்கண்டம் எனப் புலப்படுத்திய பாவாணரின் உன்னதக் கோட்பாடு இருக்கும்போதே தமிழர்க்குத் தன்மானத்தையும் அறிவையும் ஊட்டியவர் ஈ.வெ.ரா.வே எனக் கதை அளக்கிறார்கள்.
தொன்மையான மொழியையும் இன அடையாளங்களையும் இலக்கண இலக்கியங்களையும் கொண்ட தமிழன்..
ஈ.வெ.ரா. வால்தான் தன்மானத்தையும் அறிவையும் பெற்றான் எனக் கூறுவது பேரிழிவில்லையா?
37ஆம் அகவையில் தன் மனைவியை இழந்த தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள்..
ஒரு பெண் தெய்வத்தைத் தொட்ட கைகளால் மற்றொரு பெண் தெய்வத்தைத் தொட மாட்டேன் என்று மறுமணத்தை மறுத்தவர்.
அம் மாமனிதரைத் தன்மானமும் அறிவும் உள்ளவர் என்பதா?
அல்லது தனது 72ஆம் அகவையில தான் வளர்த்த 26 அகவை இளம் பெண்ணை மறுமணம் புரிந்து கொண்டு அதற்குக் காரணங்களைக் கற்பித்த ஈ.வெ.ரா. தன்மானமும் அறிவும் உள்ளவரா?
உழவன் ஒருவன் பயிரின் மேலுள்ள நச்சுப் புச்சிகளுக்கு மருந்து அடிப்பதற்கு மாறாக மண்புழுவிற்கு மருந்து அடித்து மண்ணையே மலடு ஆக்குவதுபோல், ’பகுத்தறிவு’ என்ற பெயரில் தமிழரின் பண்புகளையும் மாண்புகளையும் இழித்தும் பழித்தும் பேசியதுடன்..
தமிழினத்தைத் தாழ்த்தி மலடாக்கிய பின்னர்த் தமிழர்க்குத் தலைமைதாங்க தமிழருள் தகுதியுள்ளவர்கள் எவரும் இல்லை என்று உளறியவாறு ’தமிழர்களுக்குத் தலைவர்’ தாமே எனத் தம்பட்டம் அடித்துக்கொண்ட ஈ.வெ.ரா. தன்மானமும் அறிவும் உள்ளவரா?
இமயமலைக்கும் விந்தியமலைக்கும், கங்கை ஆற்றுக்கும் சிந்து ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த ஆரியவர்த்திலிருந்த சூத்திரப் பட்டத்தைத் தமிழர்க்குச் சூட்டி இழிவுபடுத்தினார் ஈ.வெ.ரா.
தமிழர்களைப் பிராமணர்கள் ’சூத்திரன்’ என்று அழைத்ததாகக் கூறிய ஈ.வெ.ரா. தமிழர்களை ’சூத்திரர்’ ’சூத்திரர்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லித் தமிழரிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியதுடன், தமிழ் இலக்கியங்களையும் கூடக் கொச்சைப்படுத்தினார்.
தமிழ்மொழியையும் தமிழ்த் தேசிய இனத்தையும், மொழிவழித் தேசியத்தையும் சிதைத்துச் சீரழித்த ஈ.வெ.ரா. வையும் அவரது திராவிடக் கருத்தியலையும் முற்றும் முழுதாக மறுக்கும் துணிவில்லாத தமிழ்த் தேசியர்களால் தமிழ்த் தேசியத்தை ஒருக்காலமும் படைக்கவியலாது.
ஈ.வெ.ரா.வின் முழுமுதல் நோக்கமே தமிழ் மொழியை இழிவுபடுத்தித் தமிழ் இனத்தைத் ’திராவிட’ இனமாக்கித் தமிழ்நாட்டின் எல்லைகள் பறிபோகக் காரணமாயிருந்து..
தமிழர் மீது தெலுங்கர்கள் கொண்ட ஆளுமையை நிலை நாட்டுவதேயாகும்.
ஆகையால் தமிழர்களே.. 75 ஆண்டுக்காலம் தமிழினத்தைத் திராவிட இனமாகத் திரித்துரைத்துத் தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் பழித்துப் பேசியதுடன்..
தமிழ்நாட்டின் எல்லைகள் பறிபோன போது பச்சையாக காட்டிக்கொடுத்துத் தமிழ்நாட்டிற்கு இரண்டகம் செய்த ஈ.வெ.ரா. வையும் அவரது திராவிடக் கருத்தியலையும் முற்றாகப் புறந்தாள்ளுவோம்..
திராவிடக் கலப்பற்ற தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்புவோம்...
கன்னட ஈ.வெ.ரா அவரது பெருமைக்குரிய பெண்ணியம். அதைப் பின்பற்றுவோர் பலர் உண்டு...
ஆண்கள் கண்டிப்பாய்த் திருமணம், வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது.
ஆண்கள் மாத்திரம் நன்றாகப் படித்து, வாழ்க்கைக்குப் போதுமான நல்ல வருவாயுடன் வாழ்ந்தால், அதற்கேற்றபடி பெண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வந்து சுகம் கொடுத்து, சுகம் பெற்றுக் கொண்டு போவார்கள்.
ஒரு 10, 20-பேரிடையில் இப்பழக்கம் ஏற்பட்டால் இது பரவிவிடும். யாரும் தவறாகவும் கொள்ள மாட்டார்கள்.
-ஆதாரம்: விடுதலை 02.03.1969.
வேசி மகன் என்று பார்ப்பான் சொன்னதைவிட அருவருப்பாக இல்லை ஈவேரா பேசியது?
மேலும்..... விபச்சாரம் என்பது தப்பல்ல. அதைக் கட்டுப்படுத்துவதால் தான் திருட்டு, கோளாறு, கெடுதி எல்லாம் ஏற்படுகிறது. முன் காலத்தில் போதிய வைத்திய வசதி இல்லாததால் மேக வியாதி என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது வைத்திய வசதி வளர்ந்து விட்டது.
இளைஞர் கெட்டுப் போவார்கள் என்றால், ஏன் கெட்டுப் போவார்கள், கல்யாணம் ஆனவுடன் தானே திருந்தி விடுவார்கள்..
-ஆதாரம்- தந்தை பெரியார் 95ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் (1973).
கையில் பணத்தையும், பத்திரிகையையும் வைத்துக் கொண்டு ஒரு கேடி, ரௌடி..... அரசியல்வாதியாக விளங்கினால் பெண்ணியம் இப்படித்தான் பெருமைப்படும்...
Subscribe to:
Posts (Atom)