12/09/2017
பிற மாநில மொழிப் பற்றாளர்கள் அவர்கள் மாநில வங்கியில் பணம் செலுத்தும் போது அவர்களின் மொழியில் படிவத்தை நிரப்புகிறார்கள்...
இதில் என்ன அதிசயம் உள்ளது என்று நினைகிறீர்கள் அல்லவா?
ஒரு உதாரணம் கர்நாடக மாநிலம்...
அவர்கள் எழுத்துக்களை மட்டும் கன்னடத்தில் எழுதவில்லை.
வங்கிக் கணக்கு எண்ணையும் கன்னடத்தில் எழுதி உள்ளதை கவனியுங்கள்...
தமிழகத்தின் இந்தி வங்கிகளில் தமிழில் படிவத்தை நிரப்பிக் கொடுத்தாலே நம்மை ஏற இறங்க பார்க்கிறார்கள் வங்கி ஊழியர்கள்.
இந்த நிலையில் நாம் தமிழில் எண்களை நிரப்பினால் நம் படிவத்தை வாங்கவே மாட்டார்கள் வங்கி அதிகாரிகள்.
ஆனால் கர்நாடகத்தில் அந்த வங்கிப்படிவத்தை வாங்கிக் கொண்டு ஒப்புதலும் கொடுத்துள்ளது வங்கி.
கர்நாடகம் அல்லது தமிழகம், எந்த தேசமாக இருந்தாலும் இந்தி அரசு அலுவலகங்களில் அவரவர் மாநில மொழியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதை மாநில அரசுகள் உறுதி செய்யாதவரை இந்தியின் ஆதிக்கம் தொடரும்.
இது போன்ற செய்கைகள் மூலமாக நாம் நமது மொழி மற்றும் மாநில உரிமையை நிலைநாட்டலாம்...
முதுமையை போக்கி என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி...
நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.
உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.
ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.
கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.
தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.
பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.
கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.
கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.
நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.
எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும்.
நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.
ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.
பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?
அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.
கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.
கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:
கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.
இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...
காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே..
காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.
எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.
கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்...
திருட்டு திராவிடர்ஸ்...
ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ்மொழிக்காக அரும்பாடுபட்டவர் என்றெல்லாம் இன்று ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய்த் தோற்றத்தைத் தமிழகத்திலே உருவாக்கி வந்தனர்.
இன்னும் உருவாக்கி வருகின்றனர்...
ஆனால் ‘தமிழர் தலைவர்’ என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரை சொல்கின்றார்களே – அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா?
கண்ணப்பர் தெலுங்கர், நான், கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர் (ஆனால் அண்ணாத்துரை ஒரு தெலுங்கர்) (பெரியார் ஈ.வே. ரா. சிந்தனைகள் – முதல் தொகுதி).
என்றும்,
நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன் (குடியரசு 22.08.1926).
என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
‘நான் கன்னடியன்’ என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக் கொண்டவரைத்தான் ‘தமிழர்’ என்றும், ‘தமிழர் தலைவர்’ என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்...
தமிழனுக்கு ஏன் சாதி அடையாளம் வேண்டும்?
மேனன் இந்த சாதியானது கேளராவில் மட்டுமே உள்ளது.
ராஜகோபல மேனன் என்று ஒருவன் தன்னை அறிமுகம் செய்யும் போது அவனுடைய அடையாளத்தினை கண்டு கொள்ள முடியும்.
இது தமிழ்நாட்டிலும் வழக்கமாக இருந்தது. அதை அழிக்கவே திராவிடர்கள் சாதியை பின்னால் சேர்க்க கூடாது என்று கூறினார்கள்.
இப்போது பாருங்கள் தமிழனை ஆளும் பெருங்கட்சிகளின் தலைவர்கள் யாரும் தமிழர்களே இல்லை.
தமிழ் கட்சிகள் என்பதே இல்லை என்ற நிலைக்கு வழி வகுத்த குள்ள நரிகள் இப்போது மீண்டும் அதையே காரணமாக சொல்லுகின்றன.
சிங்கத்தினைப் பார்த்து நீ ஆடு என்று சொல்லும் திராவிடர்களே, சிங்கம் எப்போதும் சிங்கமாகவே இருக்கும்.
சில சிங்கங்கள் திராவிடர்கள் சொல் கேட்டு தன்னை ஆடு என நினைத்துக் கொள்ளலாம்.
ஆனால் அந்த சிங்கத்திற்கு தான் யார் என்பது தெரிய வரும் போது திராவிட ஓநாய்கள் நாட்டை விட்டு ஓடித்தான் ஆக வேண்டும்.
உங்கள் சாதியை பெருமையாக நினையுங்கள்.
யாரோ சொல்லுவதற்காக நீங்கள் ஆடுகளாக ஆவதில்லை.
சிந்தனை செய்யுங்கள்...
கோவலன் பொட்டல்...
கோவலன் பொட்டல் என்ற இடம் தென்மதுரையை சேர்ந்த பழங்கனாதம் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது.
இந்த இடத்தின் சிறப்பம்சம் என்னவெனில் சிலப்பதிகாரத்தில் மதுரை மன்னனின் ஆணை படி கோவலனின் தலையை இந்த இடத்தில் தான் துண்டிக்கப்பட்டு தண்டனையை நிறைவேற்றி உள்ளனர்.
இதை ஆராயும் வகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1980'களில் இங்கு தங்களது ஆராய்ச்சியை தொடங்கி உள்ளனர்.
அப்பொழுது அவர்கள் அங்கு முன்று பெரிய முதுமக்கள் தாழிகளையும் அதன் உள்ளே மனிதனின் மண்டை ஓடுகளும் இதர எலும்புகளும், மேலும் ஒரு பக்கம் மீனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள பண்டைய பாண்டிய அரச வட்டவடிவ செப்பு நாணயங்களையும் கண்டறிந்துள்ளனர்.
மேலும் இந்த இடம் அமைந்துள்ள பகுதிகள் கிமு 300 - கிபி 300 இடைப்பட்ட இருந்த சங்க காலத்தில் சுடுகாடாக உபயோக படுத்தியுள்ளனர்...
பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்ட பாகுபலி மகிழ்மதி கோட்டை...
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த பாகுபலி 2 திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையே திரும்பிப்பார்க்க செய்தது.
இந்த படத்திற்காக பல கோடி செலவில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் மிகவும் பிரமாண்டமாக வரலாற்று சிறப்பு வாய்ந்தது போலவே, 'மகிழ்மதி கோட்டை', 'தேர்', 'போர் படை' மற்றும் பல்வேறு பொருட்களை கலை இயக்குனர் சாபுசிரில் மிகவும் துல்லியமாக வடிவமைத்திருந்தார்.
இந்த அனைத்து செட்டுகளும், படப்பிடிப்பு முடிந்த பிறகும் கலைக்கப்படாமல் அப்படியே இருந்தது. இத்தனை நாட்கள் பூட்டியே கிடந்த இந்த இடத்தை, தற்போது பொது மக்கள் பார்வையிட அனுமதி கொடுத்துள்ளனர் ராமோஜி பிலிம் சிட்டி உரிமையாளர்கள்.
இதன் மூலம் படத்தில் வியந்து பார்த்த 'ராணாவின் மிக பெரிய சிலை', 'பிளேடு ரத்தம்', 'போர் கருவிகள்', 'யானைகள்' என அனைத்தையும் பொதுமக்கள் நேரில் பார்த்து ரசித்து வருகின்றனர்...
காவேரி புஷ்கரம்...
குரு எந்த எந்த இராசியில் இடம் பெயருகிறாரோ அந்த இராசிக்கு ஏற்ற நதிகளில் நீராடுவது தான் புஷ்கரம் அது இந்த முறை காவேரியில் வருகிறது...
இதில் நமக்கு தேவையான தகவல்..
12 இராசிகள்
12 நதிகளில்
12 வருடங்களுக்கு ஒரு முறை
12 × 12 வருடம் - 144
144 (மாமாங்கம்) வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுவதால் இதன் பெயர் மகாபுஷ்கரம்.
இது ஒரு நிகழ்வில் உள்ள எடுத்துக்காட்டு மட்டுமே இதே போல எடுத்தால் அனைத்தும் 12 அடிப்படையில் தான் அமையும்.
இதன் மூலம் நாம் அறிவது 12 ன் அடிப்படையில் ஏதோ கணக்கீட்டு முறை கணிக்கப்பட்டுள்ளது என..
உண்மையான நகரத்தார்கள் தான் 12 ன் அடிப்படையில் கணக்கீட்டு முறையை பயண்படுத்தினார்கள் அதன் எச்சம் இப்போது நகரத்தார் என்ற பெயரில் இருக்கும் கார்காத்த வெள்ளாள கலப்புகளிடம் இப்போதும் உள்ளது...
உண்மையான நகரத்தார் கணக்கில்
ஒன்று - 1..
பத்து - 12 (ஆதாரம் இருக்கிறது).
இது போன்ற கணக்கீட்டு முறைகள் மாயன்நாகரீகத்திலும் பயண்படுத்தப்பட்டது குறிப்பிடதக்கது...
இந்த 12 என்பது சூரியனை மிகதுல்லியமாக கணிக்கும் ஒரு முறை...
சூரியவழிபாடு என்பது கையெடுத்து சூரியனை வணங்குவது அல்ல அது ஒரு கணக்கு முறை என்பது பலருக்கு விளங்கியிருக்கும்...
நீட்டை எதிர்த்து நளினி சிதம்பரத்தை அமர்த்தி 3 முறை உயர்நீதிமன்றத்தையும் உச்சநீதிமன்றத்தையும் நாடி, லட்சக்கணக்கில் செலவு செய்த "காவ்யா நக்கீரன்" என்கிற மாணவி யார் ?
எந்த பள்ளியில் எந்த சிலபஸில் படித்தார் ? எவ்வளவு மதிப்பெண் பெற்றார் ?
நீட் தேர்வு எழுதினாரா ? அதில் எவ்வளவு மதிப்பெண் பெற்றார் ?
அவர் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில், அவருக்கு சீட் கிடைக்காமல் போய் விடும் என்று அவர் கோரினாரா / கூறினாரா ?
அப்படி அவர் கோரி இருந்தால், அந்த கோரிக்கையை எந்த நீதிமன்றமாவது பரிசீலனை செய்ததா ?
அவ்வாறு பரிசீலனை செய்திருப்பின், எந்த ஆவணங்கள் / பட்டியல்களின் அடிப்படையில் பரிசீலனை செய்தனர் ?
ஆதார ஆவணமே இல்லாத நிலையில் காவ்யாவின் வழக்கே செல்லாது என்று ஏன் தமிழக அரசு தலைமை வக்கீல் முத்துக்குமாரசாமி வாதிடவில்லை ?
காவியாவின் தகப்பன் யார் ?
அவரின் வருமானம் என்ன ?
இப்போது காவியா என்ன ஆனாள் ?
MBBSல் சேர்ந்தாளா இல்லையா ?
எந்த கல்லூரியில் சேர்ந்துள்ளாள் ?
வழக்கு தொடுக்கவே தகுதி இல்லாத சூழலில், ஒரு முகாந்திரம் இல்லாத, நிலைக்கத்தக்க வழக்காக இல்லாத ஒரு வழக்கில் எப்படி 3 நீதிமன்றங்களும் நீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கின ?
இந்த கேள்விகளுக்கு விடை பெற எந்த செய்தி நிறுவனமானது முயலுமா ?
இல்லை ஸ்டுடியோவில் உட்கார்ந்து கொண்டு, ரிப்போர்ட்டர்களும் அரசும் கொடுக்கும் தகவல்களை, செய்திகள் என்ற பெயரில் தொடர்ந்து ஒளிபரப்பி மக்களை ஏமாற்றுவீர்களா ?
ஜிமிக்கி கம்மல் பாடலின் உண்மையான அர்த்தம் தெரியுமா.?
என்டம்மெட ஜிமிக்கி கம்மல்!
என்டப்பன் கட்டொண்டு போயே!
என்டப்பன்டெ பிராந்தி குப்பி!
என்டம்மா குடிச்சு தீர்த்தே!
எங்கம்மா ஜிமிக்கி கம்மல்!
எங்கப்பன் எடுத்துட்டு போயிட்டான்!
எங்கப்பனோட பிராந்தி புட்டி!
எங்கம்மா குடிச்சு தீர்த்தா!
அதாவது அம்மாவோட ஜிமிக்கி கம்மல அப்பன் எடுத்துட்டு போய் வெச்சு சரக்கு வாங்கிட்டு வந்தான்
கடுப்பான அம்மா அந்த பாட்டில எடுத்து குடிச்சிட்டா
லல்லல்லா லால லல்லாலா
ஐய்ய்ய்ய் ஜாலிஈஈஈஈஈஈ
ஜிமிக்கி கம்மல் பாட்ட ஏம்ப்பா திட்றீங்கனு கேட்ட அப்பாவிகள்,அதோட அர்த்தம் புரியாமலே வைரலாக்கிய தமிழர்கள் கவனிக்கவும்...
சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தமிழரசன்...
ஆயதக் கொள்ளையர்களை பொதுமக்கள் வெறுங்கையாலேயே அடித்துக்கொன்ற சம்பவம் உலகில் எங்கேயாவது நடந்ததுண்டா?
ஆனால் வங்கியில் நுழைந்து தம் கண்முண்ணே ஒருவரை சுட்டுக் கொன்று விட்டு வரும் ஆயுதம் தாங்கிய 5 கொள்ளையர்களை வெறுங்கையால் சாதாரண மக்கள் தாக்கிக் கொன்றனர்..
தமிழகத்தில் அந்த அதிசயம் நடந்தது..
ஆம். தமிழ்நாடு ஹிந்திய அரசிடம் இருந்து விடுதலை அடைய 'தமிழ்நாடு விடுதலைப் படை' என்ற இயக்கம் நிறுவி ஆயுதம் தாங்கி போராடிய தமிழரசன்,
கர்நாடகா விதிமுறையை மீறி கட்டிய ஹேமாவதி அணையைத் தகர்க்க திட்டமிட்டார்.
அதற்கு தேவைப்பட்ட நிதியை திரட்ட அரசு வங்கியைக் கொள்ளையடித்தார்.
ஆனால் இந்த தகவல் முன்பே உளவுத்துறைக்கு தெரிந்திருந்தது.
தமிழரசனை தடுத்து நிறுத்த ஒரே வழி அவரைக் கொல்வதுதான் என்று முடிவு கட்டிய ஆளும் வர்க்கம்,
நேரடியாக மோத பயந்துகொண்டு அவரது பலவீனம் எது என ஆராய்ந்தார்கள்.
அவர் ஒரு மனிதநேயம் கொண்ட போராளி.
எனவே வெறுங்கையாலேயே குறிப்பிட்ட இடங்களில் அடித்து நொடியில் கொலை செய்யும் பயிற்சியளிக்கப்பட்ட உளவுத்துறை ஆட்கள் பொதுமக்கள் போல வேடமிட்டு வங்கியில் காத்திருந்தனர்.
தமிழரசன் வந்தார், கொள்ளையடித்து விட்டு வாசலை நெருங்கும்போது அந்த உளவுத்துறையினர் திடீரென பாய்ந்தனர்.
மக்கள்தான் தாக்குகிறார்கள் என்று தமிழரசனும் அவரது கூட்டாளிகளும் ஆயுதத்தை பயன்படுத்த தயங்கியதால் சில நொடிகளிலேயே தமிழரசன் உயிரைவிட்டார்.
குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்த அவரது தோழர்களும் இவ்வாறே அடுத்தடுத்து சில நொடிகளில் கொல்லப்பட்டனர்.
உடனடியாக புகைப்படம் எடுத்து ஏதோ மக்களே இதைச் செய்தது போல ஊடகங்களில் பரப்பப்பட்டது.
இதையெல்லாம் திட்டமிட்டு வெற்றிகரமாகச் செய்தது அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் அவரது ஏவல்துறை.
ஆம். முல்லைப்பெரியாறு அணை உரிமையைத் திட்டமிட்டு தன் இனத்திற்கு தாரைவார்த்த அதே மலையாளி ராமச்சந்திரன் தான்.
காவிரி நீரைத் தடுத்து தமிழர்களின் கழுத்தை நெறித்துக்கொண்டு இருக்கும் ஹேமாவதி அணையையும் உடையாமல் பார்த்துக்கொண்டவர்.
அது மட்டுமல்லாது நக்சலைட் வேட்டை என்று கூறிக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டுப் பற்றுகொண்ட இளைஞர்களைக் கொன்று தமிழ்நாட்டின் ஆயுத எழுச்சியை அடக்கியது மலையாளி எம்.ஜி.ஆர் ஆட்சி.
தமிழர்களில் விடுதலை எழுச்சி தமிழரசன் மரணத்தால் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
ஆனாலும் தமிழரசன் வழியில் தொடர்ந்து இயங்கிய தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) வீரப்பனாருடன் கைகோர்த்து, கன்னட உச்ச நடிகர் ராஜ்குமார் கடத்தல் மூலம் மீண்டும் தமிழர் உரிமைக் குரலை ஹிந்தியம் அதிர எழுப்பியது.
பிறகு வீரப்பனாரும் வயது முதிர்ந்து தளர்ந்த நிலையில் கன்னடர் ஜெயலலிதாவால் சூழ்ச்சி வலையில் கொலை செய்யப்பட்டார்...
சமைத்த உணவை ஒரு வாரம் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உண்ணும் குடும்பங்களின் கவனத்திற்கு...
உணவின் மூலம் பரவும் "லிஸ்டிரியா" என்ற ஒரு நுண்கிருமி பல நாட்களாக குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள சமைத்த உணவில் வளரத் துவங்கும். அந்த உணவை உண்ணுபவர்களின் குடல் பாதைக்குள் நுழைந்து "லிஸ்டிரியோசிஸ்" என்ற நோயை உருவாக்கும். இதனால் அவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற பல அறிகுறிகள் மட்டுமல்லாது சிறிது நாட்களில் குடலை பாழாக்கியதொடு நிறுத்தாமல் இரத்ததின் மூலமாக அருகிலுள்ள உறுப்புகளையும் தாக்கத் துவங்கும்.
இந்தக் கிருமியினால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பம் தரித்த பெண்கள்.
லிஸ்டிரியா வளர்வதைத் தடுப்பதற்கான வழிமுறைகள்...
1. குளிர்சாதனப் பெட்டியில் வைத்த சமைத்த உணவை இரண்டு நாட்களுக்குள் உபயோகப்படுத்தி விட வேண்டும். உபயோகப்படுத்துவதற்கு முன் உணவை சூடாக்குவது மிக அவசியம்.
2. குளிர்சாதனப் பெட்டிக்குள் உள்ள வெப்பநிலை எப்போதும் 4°C கீழே இருத்தல் மிக முக்கியம். உறைவிப்பான் அடுக்கில் இருக்கும் வெப்பநிலை -18°C இருத்தல் வேண்டும். ஏனெனில் அந்த வெப்பநிலையில் லிஸ்டிரியாவினால் வளர முடியாது.
3. வாரத்துக்கு ஒரு முறை குளிர்சாதனப் பெட்டியை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சிந்திய உணவுப் பொருட்களை உடனே அகற்றி துடைத்து விடுவதன் மூலம் கிருமி அதில் வளர்ந்து மற்ற உணவுகளில் பரவுவதை தடுக்கலாம்.
முடிந்த வரை.. அன்று சமைத்த உணவை அன்றே முடித்துவிடுங்கள்.. வியாதிகளை நாமே மாலைபோட்டு வரவேற்க வேண்டாமே...
தமிழ்நாடு பள்ளி (NSS) சாரணர் இயக்க தலைவராக பாஜக எச்ச. ராஜா சர்மாவை நியமித்துள்ளது கேடுகெட்ட அதிமுக டயர் நக்கி அரசு...
இவனுக்கும் அந்த பதவிக்கும் என்ன சம்மந்தம்?
இவனுக்கும் தமிழக அரசுக்கும் என்ன சம்பந்தம்?
ஏன் இந்த பதவியை கொடுக்க அதிமுகவில் யாருக்குமே தகுதி இல்லையா?
சாணியில் முக்கி அடிக்க வேண்டிய நாய்க்கு சாரணர் பதவியா?
NSS இயக்கத்தை RSS தீவிரவாத பயிற்சி மூகமாக மாற்ற இந்த அயோக்கியன் தேர்வு. இதற்கு அதிமுக டயர் நக்கிகள் ஆதரவு.. தூ..மனங்கெட்டவனுங்களா..
புலிகள் ஆதரவு, தனித் தமிழ்நாடு, ராஜீவ் கொலைக்குப் பாராட்டு - 1992ல் பாமக இராமதாசு ஐயா முன்னெடுத்த தமிழ்தேசியம்...
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைப் பாராட்டியும்..
புலிகளுக்கான ஆதரவு தெரிவித்தும்..
தனித் தமிழ்நாடு பற்றியும்..
இனப்பற்றுடன் வெளிப்படையாகப் பேசிய போது அதைக் கண்டித்து எழுதப்பட்ட கட்டுரை..
ஏடு: செங்கோல்
நாள்: 20.09.1992
தலைப்பு:- ராஜீவைக் கொன்றவன் என் தோழன் தமிழகப் பிரிவினையும் கோருவோம் பா.ம.க தலைவரின் தேசத் துரோகம்..
நன்றி: சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் (முகநூல்)...
ஊட்டச்சத்து நிறைந்த துரியன் பழம்...
துரியன் பழம் நிறைய மக்களிடம் மிகவும் பிரபலமான பலமாக உள்ளது. நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம் இனிப்பு சுவையை கொண்டுள்ளது. ஆரோக்கியம் தரும் துரியன் பழம் பல உடல் சுகாதார நலன்களை கொண்டுள்ளது. பழங்கள் மட்டும் மருத்துவ பலன்களை கொண்டுள்ளாமல் இலைகளும் மருத்துவ பலன்களை கொண்டு செயல் படுகிறது. சில துரியன் பழம் நோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது என கருத்தும் வெளியாகிறது..
உண்மையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை துரியன் பழம் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் மற்றும் உயர்நிலை கொழுப்பை அதிகரிக்கும் என்பதால் கூறுகின்றனர். போதுமான அளவு துரியன் பழம் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான உடல் நிலைக்கு மிகவும் நல்லது. துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்பு, ரிபோப்லாவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் அமிலம், வைட்டமின் சி, நார்ச்சத்து , துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் உள்பட பல சத்துகளை கொண்டுள்ளது.
வாழை பழத்தை விட 10 மடங்கு இரும்பு, பாஸ்பரஸ் அதிகம் கொண்டுள்ளது. ஒரு 100 கிராம் துரியன் பழத்தில் 520 கிராம் உற்பத்தி திறன், 1 கிராம் நார்ச்சத்து, கொழுப்பு 2.5 கிராம், புரதம் 28 கிராம், கார்போஹைட்ரேட் மற்றும் நீர் 66 கிராம் கொண்டுள்ளது. துரியன் பழத்தின் சதை மஞ்சள் காமாலை நோயால் அவதி படுபவர்களுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. துரியன் பழத்தின் வேர்கள் நகம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருந்தாவும் பயன்படுகிறது-. துரியன் பழத்தில் உள்ள மாங்கனீசு நிலையான இரத்த அளவை பராமரிக்க உதவுகிறது.
துரியன் மரத்தின வேர், இலை, போன்றவற்றை தண்ணீருடன் சேர்த்து பருகுவதால் சுரவெதிரியில் இருந்து குணம் பெறலாம். துரியன் பழம் கொண்டுள்ள பி வைட்டமின், பொட்டாசியம், கால்சியம், மூட்டுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. துரியன் பழத்தின் தோல் கொசுக்கடியை தடுக்க உதவுகிறது. துரியன் பழம் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகளவு கொண்டுள்ளதால் இரத்த சோகையை சரிசெய்கிறது. கருப்பை பலவீனமாக இருந்தால் கருத்தரிக்காது. அப்படி கருத்தரித்தாலும் சில வாரங்களில் கலைந்துவிடும்.
இத்தகைய பிரச்சனை உடைய பெண்கள் துரியன் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். கருப்பை பலம் பெறும். மேலும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவால் குழந்தையின்மை குறை இருக்கும். துரியன் பழம் அணுக்களின் எண்ணிக்கயை அதிகரிக்க வல்லது. எனவே துரியன் பழம் சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.இந்த பழத்தில் கொண்டுள்ள பாஸ்பரஸ் பல் சுகாதாரத்திற்கு உதவுகிறது. துரியன் பழத்தில் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருளான வைட்டமின் சி உள்ளதால் முதிர்ச்சியை தடுத்து இளமையை தக்க வைத்துக்கொள்கிறது.
துரியன் பழம் பைரிடாக்சின் உள்ளடக்கத்தை கொண்டுள்ளதால் தளர்ச்சி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.. உடலில் ஏற்படும் கட்டிகளை தடுக்கிறது. காப்பர் மற்றும் ரிபோப்லாவின் கொண்டுள்ளதால் தைராய்டை பராமரித்து ஒற்றை தலைவலிக்கு நிவாரணம் அளித்து ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கிறது. துரியன் பழத்தின் இலை மலச்சிக்கலுக்கு தீர்வு வழங்குகிறது. தயாமின் மற்றும் நியாமின் கொண்டுள்ளதால் பசியை தூண்டுகிறது. படை சொறி சிரங்கு ஆகியவற்றிற்கு துரியன் பழத் தோல் மருந்தாக பயன்படுகிறது...
பழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம் - பொறிவினை அதாவது எந்திரங்கள் (MACHINERY AND ROBOT MACHINERY)...
எந்திரங்கள் அக்காலத்தில் மிக அதிக அளவில் செய்யபட்டுள்ளன அவை மனிதர்கள் இயக்கும் எந்திரம் மற்றும் தானியங்கி எந்திரம் என பலவகையாக உருவாக்கியுள்ளனர்.
அரசர்கள் நீராடுவதற்க்கு அரண்மனை பின்பகுதியில் நீர்பொறியமைந்த சோலை அமைந்திருந்தது.அரசன் அங்கு சென்று நின்றவுடன் நீர் தானாக குழாயில் நிறைந்து அவன் மேல் விழும் அவன் சென்றவுடன் நீர் நிறைவது தானாக நின்றுவிடும். இப்போதை AUTOMATIC SHOWER போல இதை இலக்கியத்தில் இலவந்திகை பொறி என அழைக்கிறார்கள்..
கீழே சற்று ஆதாரங்களை காண்போம்...
“ இலவந் திகையின் எயிற்புறம் போகி ”
சிலப்பதிகாரம் புகார்காண்டம் 10:31 ல் இலவந்திகை இருந்ததாக கூறுகிறார் புலவர்.
நிறைகுறின் நிறைத்துப் போக்குறின் போக்கும்
பொறிப்படை யமைந்த பொங்கில வந்திகை.
என்று கொங்குவேளிர் என்ற புலவர் தனது பெருங்காதை என்ற நூலில் 1:40;311-2 ஆகிய பாடல் வரிகளில்..
(நிறை)ஆள் இருந்தால் நிறைந்து என்றும் போக்குறின் அதாவது சென்றால் போக்கும் பொறி அமைந்த இலவந்திகை என்று குறிப்பிடுகிறார்.
கோட்டைக்கு பாதுகாப்பாக எதிரிகள் யாரும் நுழையாமல் இருக்க எந்திரங்களால் ஆன வாயில் அமைப்புகள் அமைக்கபட்டிருந்தன
மேலும் அவை ஆள் இல்லாமல் இருந்தன. குறிப்பிட்ட தூரத்தில் ஆட்கள் வரும் போது சந்திரனின் ஒளி பட்டு அவர்களுடைய நிழல் தரையில் பதித்து இருக்கும் குறிபிட்ட ஆடியில்விழும் போது அது தானாக அம்புகளை விடுவித்து கொள்ளுமாறு பொறி அமைத்தனர்.
எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்
- ( பதிற்றுப்பத்து, 53:7)
திங்களும் நுழையா எந்திரப் படுபுழை
- (புறநானூறு 177: 5)
நெடுமதில் நிரைஞாயில்
அம்புஉமிழ் அயில்அருப்பம்
- (மதுரைக்காஞ்சி : 66,67)
நெடிய சுவர்களில் குருவி தலையை போன்ற தனிதனி பகுதிகள் அமைத்து அங்கிருந்து அம்பு,வேல் வீசும் அரண்கள் செய்யபட்டன அதிலுள்ள ஆட்கள் மற்றவர் கண்ணுக்கு தெரியமாட்டார்.
சங்க காலத்தில் கரும்பை பிழிவதற்கு எந்திரங்கள் அதிகமாக பயன்படுத்தபட்டன. அவை எப்போதும் ஆலைகளில் உபயோகத்தில் இருந்தன. அவ்வாறு கரும்பு ரசம் பிரித்தெடுக்கும் போது எந்திரங்கள் யானை பிளிறுவது போல் சப்தம் வரும் என்பதை கீழ்காணும் நூல்கள் மூலம் அறியலாம்.
கனஞ்சால் வேழங் கதழ் வுற்றாஅங்கு
எந்திரம் சிலைக்கும்
- (பெரும்பாணாற்றுபடை, 259,260)
கரும்பின் எந்திரம் சிலைப்பி னயல
- (புறநானூறு – 322:7)
கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்
- (ஐங்குறுநூறூ- 55:4)
இவ்வாறு பல இடங்களில் எந்திரம் அல்லது தானியங்கி எந்திரம் அல்லது பொறிவினை அல்லது பொறிபடை அமைத்து நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர். எந்திரம் என்பது எப்போதோ கண்டுபிடித்துவிட்டனர்.
இதில் பொறிபடையில் நிறைய பொறிகள் உள்ளன. பதிவின் நீளம் கருதி சிந்தாமணியில் பல பொறிகளும் சிலபதிகாரத்தில் பலபொறிகளும் கூறியுள்ளதை நான் இங்கு கூறவில்லை. மேலும் சிந்தாமணியில் யவனர் அமைத்த பொறி பற்றி கூறுவார் ஆனால் சிலப்பதிகாரம் அதற்கு முன்பே உள்ளது கவனிக்கதக்கது.
அவை சிலபதிகாரம் அடைகலகாதை 207 to 216 மற்றும் சீவக சிந்தாமணி 1ல் 101 முதல் 104 வரை அவற்றின் பொறி பெயரை காணவும்.
எந்திரம் மற்றும் தானியங்கி எந்திரம் அமைப்பதில், நாமே முன்னோர்கள் என்பதை இனி உறக்க சொல்லுவோம்.
பதிற்றுப்பத்து மற்றும் புறநானூறு கூறும் பொறிகளை கீழே உள்ள திரைபடத்தில் காணலாம்.
திங்களும் நுழையா எந்திரப் படுபுழை..
சந்திர நிழலை வைத்து செய்வது அல்லது தீபந்த நிழலை வைத்து செய்வது கீழே லிங்க்...
https://youtu.be/w_HmOsZbJ7c
பாத வெடிப்பு போவதற்கான டிப்ஸ் - இயற்கை வைத்தியம்...
பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.
மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.
வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.
தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.
வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.
இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.
குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்...
பயிர்களும் பட்டங்களும்.. பட்டம் என்றால் என்ன?
பட்டம் என்பது காலநிலையின் குறியீட்டு வார்த்தை ஆகும்.
பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம் ஆகும்.
பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யவும் மாட்டார்கள்.
வருடத்தில் எந்தெந்தப் பட்டத்தில் என்னென்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டுமோ அந்தந்தப்பட்டத்தில் அந்தந்தப் பயிர்தான் சாகுபடி செய்வார்கள்.
ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள், தவிரக் காய்கறிப் பயிர்களும் பெரும்பாலான வைற்றைச் சாகுபடி செய்வார்கள்.
மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம் என்றும் தமிழ் மாதங்களைக் கணக்கிட்டும் அந்தந்தப் பட்டத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்வார்கள்.
ஆடிப்பட்டத்தில் பாதி நிலத்தில் மானாவாரியாகச் சாமை விதைத்து கார்த்திகை, மார்கழி மாதங்களில் அறுவடை செய்யலாம்.
மீதிப் பாதி நிலத்தில் மாசி, பங்குனி மாதங்களில் சோளம் விதைத்து ஆனி மாதவாக்கில் அறுவடை செய்யலாம்.
மறு வருடம் சாகுபடி செய்யும்போது முந்தைய வருடம் சாமை விவசாயம் செய்த நிலத்தில் சோளமும், சோளம் விவசாயம் செய்த நிலத்தில் சாமையும்தான் சாகுபடி செய்வர்.
நிலத்தில் ஒரு பயிர் செய்தால் அந்தப் பயிரின் ஆயுளுக்குப் பின்னால் அவற்றின் கழிவுகளும் அவற்றில் அண்டி வாழ்ந்து வந்த நோய்க் கிருமிகளும், அடுத்து அதே பயிர் செய்யும்போது புதிதாகச் செய்யும் பயிரையும் பாதிக்க ஏதுவாகிறது.
மாற்றுப் பயிர் செய்யும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகளும் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை.
நோய்களும் நோய்க்கிருமிகளும் பயிருக்குப் பயிர் வேறுபடுகின்றன. அதனால் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. மாறாக கிருமிகளை அழிகின்றன.
குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னால் வேறெரு பயிர் செய்த பின்னால் மீண்டும் பழைய பயிர் சாகுபடி செய்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படுவது இல்லை.
இடைக்காலத்தில் அவை பெரும்பாலும் அழிந்து விடுகின்றன.
பயிர்களுக்கு ஏற்ற பட்டங்கள்..
வெங்காயம் - வைகாசி, புரட்டாசி, மார்கழி
பீர்க்கங்காய், புடலை, பாவை - சித்திரை, ஆடி, ஆவணி
அவரை – சித்திரை, ஆடி, ஆவணி, தை, மாசி
கத்தரி – ஆடி, மாசி
வெண்டை – மாசி, பங்குனி
மிளகாய், கொத்தவரை – வைகாசி, ஆனி, ஆவணி புரட்டாசி, கார்த்திகை. தை, மாசி
முருங்கை – புரட்டாசி, ஐப்பசி
எள் - ஆடி, சித்திரை
சூரியகாந்தி, ஆடி, கார்த்திகை, மாசி
சுண்டல் - ஐப்பசி, கார்த்திகை
நெல் - புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை
ஊளுந்து – ஆடி, மாசி
கம்பு – மாசி, பங்குனி
நாட்டுச்சோளம்- சித்திரை, மாசி, கார்த்திகை
தென்னை- ஆடி, ஆனி, கார்த்திகை, மார்கழி
கரும்பு- கார்த்திகை, தை
வாழை - கார்த்திகை, மார்கழி.
மரவள்ளி – கார்த்திகை
பருத்தி - ஆவணி, புரட்டாசி, மாசி
தட்டப்பயறு, பாசிப்பயறு, துவரை, மொச்சை – ஆடி
ஆண்டு முழுவதும் பயிரிடலாம் - ஆமணக்கு, தக்காளி, பொரியல் தட்டப்பயறு, மக்காச்சோளம், பட்டு வளர்ப்பு, கார்/குருவை/சொர்னவரி/ஆடி பட்டம் (வைகாசி – ஆனி முதல் ஆவணி – புரட்டாசி வரை)
சம்பா/தாளாடி/பிஷானம் (ஆவணி – புரட்டாசி முதல் தை – மாசி வரை)
குறிப்பு : மிளகாய், தக்காளி, வெங்காயம், நெல். கொத்தவரை, வாழை, தென்னை, போன்ற பயிர்கள் கார்த்திகை மார்கழி பட்டத்தில் நடவு செய்யலாம்...
நவோதயா பள்ளிகள் திறக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்ற அதிகார வரம்பு உயர்நீதிமன்றத்திற்கு தெரியாதா?
மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோரிய மனுவை, அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று கூறி இதே நீதிமன்றம் தள்ளுபடி செய்தது ஏன்?
தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலம். இங்கு பள்ளிகள் அளவுக்கதிகமாகவே உள்ளன. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைவரும் படிக்கக்கூடிய வகையில் பரவலாகவே உள்ளது. அடிப்படை கல்வியை பெறுபவர்கள் கிட்டத்தட்ட 100%. இப்படிப்பட்ட தலைசிறந்த கல்வி கட்டுமானம் தமிழகத்தில் இருக்கும் போது நவோதயா பள்ளிகள் எதற்கு?
ஏற்கனவே நீட் தேர்வு என்ற பெயரில் தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவ கட்டமைப்பை இந்தியா கொள்ளையடிக்கிறது. தற்போது கல்வியிலும் கைவைக்கிறது.
தமிழ்நாடு சுயமாக கட்டமைத்த கல்வி மருத்துவம் என்ற இரண்டு துறைகளையுமே இந்திய அரசு கொள்ளையடிக்கப் பார்க்கிறது.
மேலும் இது இந்தியை திணிக்கும் செயல் கூட.
ஏனென்றால் நவோதாய பள்ளிகளில் இந்தி கட்டாயம். கல்வியை காவிமயமாக்கும் செயலும் கூட.
இன்று அரசு பள்ளிகளில் இலவசமாக கிடைக்கும் கல்வி, WTO ஒப்பந்தந்தின் அடிப்படியில் வணிகமாக்குவதற்கான முயற்சி தான் இந்த நவோதயா பள்ளிகள்.
ஜெயலலிதாவிற்கு பிறகான அதிமுக அரசு கிட்டத்தட்ட பாஜக அரசாகவே செயல்படுகின்றது. ஜெயலலிதா எதிர்த்த நீட் தேர்வு, GST, உதய் மின் திட்டம், உணவுப் பாதுகாப்பு சட்டம் என்ற அனைத்தையும், அம்மாவின் வழியில் ஆட்சி செய்கிறோம் என்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் பார்ப்பன பாஜக பினாமியாக செயல்பட்டு அனைத்தையும் ஏற்றுக்கொண்டு விட்டனர்.
இதோ நவோதயா பள்ளிகளையும் எந்த எதிர்ப்பும் இன்றி ஏற்றுக்கொள்வார்கள்.
நீட் தேர்வின் மூலம் ஏழை எளிய மக்களின் மருத்துவ கனவு தகர்க்கப்பட்டுள்ளது. இப்போது நவோதய பள்ளிகள் மூலம் ஏழை எளிய மக்களின் அடிப்படை கல்வியே கேள்விக்குறியாக உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக மட்டுமல்ல, நவோதயா பள்ளிகளுக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்த வேண்டியது கட்டாயம். இல்லை தமிழகம் அழிக்கப்படும்...
ஆர்கிமிடீஸ் தத்துவம் -பல அறிவியல் கண்டு பிடிப்புகளை அனாயசமாய்க் கண்டவன் தமிழன்...
கோச்சடையானுக்கு ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் என்கின்ற பெயரும் உண்டு. ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் பாண்டிய நாட்டை சேர்ந்தவர்.
சோழர்கள், சேரர்கள், மற்றும் ஆந்திரர்கள் இவர்களை எல்லோரையும் போரில் வென்று தமிழகத்தை விரிவாக்கி பாண்டிய நாட்டு ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.
சோழர்களை போரில் வென்றதன் விளைவாக நானூறு நாட்டுகளாக அவர்கள் சேர்த்து வைத்திருந்த விலை மதிப்பில்லா செல்வங்கள் அனைத்தும் ஜடாவர்மனுக்குக் கிடைத்தது.
ஆனால் ஜடாவர்மனோ கிடைத்த செல்வங்களை தானே எடுத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தென்னகத்தில் இருந்த பல கோவில்களுக்கு நன்கொடையாக தந்து விட்டார்.
குறிப்பாக தொண்டை நாட்டிலுள்ள கோவில்களுக்கு நிறைய திருப்பணிகள் செய்தார். இந்த திருப்பணிகளால் அதிகம் பயன்பெற்ற கோவில்கள் என்றுப் பார்த்தால் சிதம்பரத்தில் இருக்கின்ற நடராசன் பெருமான் கோவிலும் திருவரங்கத்தில் இருக்கக்கூடிய இரங்கநாதர் கோவிலும் தான்.
திருவரங்கத்தில் இருக்கின்ற இரங்கநாதர் கோவிலுக்கு சுந்தரப் பாண்டியன் ''துலாபார தானம்'' செய்தார்.
துலாபார தானம் என்றால் தராசு கட்டியில் ஒருவரை அமர செய்து அவரின் எடைக்கு சமமான தங்கத்தை நன்கொடையாக கொடுப்பதாகும்.
ஆனால் சுந்தரப் பாண்டியன் செய்த ''துலாபார தானம்'' சற்று புதுமையானது. ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் தனது பட்டத்து யானையை நன்கு அலங்கரித்து அந்த யானைக்கு மேல் கனமான அம்பாரி, அந்த அம்பாரிக்கு மேல் பூரண கவசத்துடன் தன் பட்டத்தரசியுடன் தானும் அமர்ந்துக் கொண்டார். முன்புறம் யானையின் பாகன் அமர்ந்துக் கொண்டான். யானை, அம்பாரி, அரச தம்பதியர் மற்றும் யானைப் பாகன் இவர்களின் எடைக்கு சமமான தங்க ஆபரனங்களை திருவரங்கக் கோவிலுக்கு நன்கொடையாக தந்தான்.
இப்பொழுது கேள்வி என்னவென்றால் எப்படி ஜடாவர்மன் பாண்டியன் இவர்களின் எடை சரியாக அளந்து அதை சமமான தங்க ஆபரணங்களை தானமாக கொடுத்தான் ?
ஒரு வேளை யானை அளவிற்கு ஒரு தாராசுக் கட்டியை செய்து அளந்திருப்பானோ ? அதுதான் இல்லை.
முதலில் ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் காவிரிக் கரையாரில் ஒரு நீராழி (குளம்) மண்டபத்தை காட்டினான். அந்த மண்டபத்திருக்குப் பக்கத்தில் ஒரு தெப்பத்தை (நீரில் மெதக்கும் ஒரு பெரிய பலகைப் போன்றது) கட்டினான். அந்த தெப்பதற்கு மேல் அம்பாறிப் பூட்டப்பட்ட பட்டத்து யானையின் மீது பாண்டியனும் அரசியும் மற்றும் பாகனும் அமர்ந்தவாறு ஏறினார்கள்.யானை தெப்பத்தின் மீது ஏறியவுடன் அந்த தெப்பம் சிறிதளவு தண்ணீரில் அமிழ்ந்தது. பிறகு அதிலிருந்து யானையை இறக்கி விட்டு தங்க ஆபரங்களை வைக்க ஆரம்பித்தார்கள். யானை நின்ற பொழுது எவ்வளவு தூரம் தெப்பம் அமிழ்ந்ததோ அந்த அளவு வரும் வரை தங்க ஆபரணங்களை வைத்துக்கொண்டே இருந்தார்கள். கடைசியாக யானை நின்ற பொழுது அமிழ்ந்த அளவும் வந்தது. பிறகு செல்வங்களை எடுத்து கோவிலுக்கு கொடுத்தார்கள்.
ஆர்கிமிடீஸ் தத்துவத்தை தமிழன் என்றோ தெரிந்து வைத்திருக்கின்றான் என்று நினைக்கும் பொழுது நமக்கு வியப்பாக இருக்கும்...
தலித்தியம் என்ற சாத்தான்...
தலித்தியம் என்பது 90 களில் இந்திய அரசால் திட்டமிடப்பட்டே உருவாக்கப்பட்டு போற்றி வளர்க்கப்பட்ட ஒரு கருத்தியல் ஆகும்.
ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலையே இதன் அடிப்படை நோக்கம் என்று சொல்லப்படுகிறது.
ஆனால், இதை நன்கு உள்வாங்கியவர்கள் 'SC / BC ' என்ற வகுப்பு வாத அடிப்படையில் மக்கள் பிரிவினைகளை ஊக்குவித்த பிராமணியம், மேற்ப்படி வகுப்ப்வாத மக்களிடையே அடுத்தக்கட்டமாக குழப்பத்தையும், பதட்டத்தையும், ஒற்றுமை இன்மையையும் உருவாக்கவே தயாரிக்கப்பட்டது என்றும் எளிதில் விளங்கும்.
சுருக்கமாக, தலித்தியம் என்பது பிராமணியத்தின் இன்னொரு குழந்தை.
அம்பேத்காரை ஏற்காத பிராமணியம், திட்டமிட்டே அம்பேத்கார் தான் ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதி என்று பரப்புரை செய்யும் நோக்கம், அந்த அந்த தேசிய இனங்களில் உள்ள ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளை ஓரம் கட்டி விட்டு, அம்பேத்காரை அவர்களின் அடையாளமாக மாற்றுவதே ஆகும்.
இதன் மூலம் தலித்தியம், அதன் அடையாளம் என அனைத்தையும் தனது பிடியில் வைத்திருந்து ஆட்டுவிப்பதே பிராமணியத்தின் நோக்கம்.
தமிழர்கள் நாம் செய்ய வேண்டியது என்ன..?
தலித்தியம் முதலில் தமிழ் நாட்டில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும்.
திராவிடம் தமிழர்களுக்கு ஒரு துரோகி என்பதை உணர வேண்டும்.
அது முழுக்க முழுக்க பிராமண அடிமை கருத்தியல் என்பதை உள்வாங்க வேண்டும்.
திராவிட அரசியலை வேரோடும் மண்ணோடும் பிடுங்கி ஏறிய வேண்டும்.
பிராமணர்களுக்கு உதவ ஆரியம், தெலுங்கருக்கு உதவ திராவிடம் என்பது போல, தமிழருக்கு என்று ஒரு கருத்தியல் உருவாக்கப்பட வேண்டும்.
தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சி அமைய தமிழர்கள் ஒருங்கிணைய வேண்டும். இதுவே தமிழன் என்ற தேசிய இனத்துக்கான விடுதலை.
மேற்ப்படி இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து தேசிய இனங்களின் விடுதலைக்கும்,
ஆரிய கதையின் பிடியில் இருந்து அவர்களை விடுவிக்க எதிர்காலத்தில், பாடுபட வேண்டும்.
இதன் மூலம் ஆதிக்கம் என்பது அந்த அந்த தேசிய இனத்தின் பிடியில் வருவதால், தனித்து ஆதிக்கம் செய்யும் பிராமணர்கள் அந்த அந்த தேசிய இனத்துடன் கலக்கவோ, பிரியவோ வர்புருத்தப்படுவார்கள்.
இது பிராமணியம் என்ற கருத்தியல் அழியவும், அவர்களுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்பை உடைக்கவும் வழி செய்யும்...
Subscribe to:
Posts (Atom)