எந்த பள்ளியில் எந்த சிலபஸில் படித்தார் ? எவ்வளவு மதிப்பெண் பெற்றார் ?
நீட் தேர்வு எழுதினாரா ? அதில் எவ்வளவு மதிப்பெண் பெற்றார் ?
அவர் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில், அவருக்கு சீட் கிடைக்காமல் போய் விடும் என்று அவர் கோரினாரா / கூறினாரா ?
அப்படி அவர் கோரி இருந்தால், அந்த கோரிக்கையை எந்த நீதிமன்றமாவது பரிசீலனை செய்ததா ?
அவ்வாறு பரிசீலனை செய்திருப்பின், எந்த ஆவணங்கள் / பட்டியல்களின் அடிப்படையில் பரிசீலனை செய்தனர் ?
ஆதார ஆவணமே இல்லாத நிலையில் காவ்யாவின் வழக்கே செல்லாது என்று ஏன் தமிழக அரசு தலைமை வக்கீல் முத்துக்குமாரசாமி வாதிடவில்லை ?
காவியாவின் தகப்பன் யார் ?
அவரின் வருமானம் என்ன ?
இப்போது காவியா என்ன ஆனாள் ?
MBBSல் சேர்ந்தாளா இல்லையா ?
எந்த கல்லூரியில் சேர்ந்துள்ளாள் ?
வழக்கு தொடுக்கவே தகுதி இல்லாத சூழலில், ஒரு முகாந்திரம் இல்லாத, நிலைக்கத்தக்க வழக்காக இல்லாத ஒரு வழக்கில் எப்படி 3 நீதிமன்றங்களும் நீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கின ?
இந்த கேள்விகளுக்கு விடை பெற எந்த செய்தி நிறுவனமானது முயலுமா ?
இல்லை ஸ்டுடியோவில் உட்கார்ந்து கொண்டு, ரிப்போர்ட்டர்களும் அரசும் கொடுக்கும் தகவல்களை, செய்திகள் என்ற பெயரில் தொடர்ந்து ஒளிபரப்பி மக்களை ஏமாற்றுவீர்களா ?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.