அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்ற அதிகார வரம்பு உயர்நீதிமன்றத்திற்கு தெரியாதா?
மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோரிய மனுவை, அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று கூறி இதே நீதிமன்றம் தள்ளுபடி செய்தது ஏன்?
தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலம். இங்கு பள்ளிகள் அளவுக்கதிகமாகவே உள்ளன. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைவரும் படிக்கக்கூடிய வகையில் பரவலாகவே உள்ளது. அடிப்படை கல்வியை பெறுபவர்கள் கிட்டத்தட்ட 100%. இப்படிப்பட்ட தலைசிறந்த கல்வி கட்டுமானம் தமிழகத்தில் இருக்கும் போது நவோதயா பள்ளிகள் எதற்கு?
ஏற்கனவே நீட் தேர்வு என்ற பெயரில் தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவ கட்டமைப்பை இந்தியா கொள்ளையடிக்கிறது. தற்போது கல்வியிலும் கைவைக்கிறது.
தமிழ்நாடு சுயமாக கட்டமைத்த கல்வி மருத்துவம் என்ற இரண்டு துறைகளையுமே இந்திய அரசு கொள்ளையடிக்கப் பார்க்கிறது.
மேலும் இது இந்தியை திணிக்கும் செயல் கூட.
ஏனென்றால் நவோதாய பள்ளிகளில் இந்தி கட்டாயம். கல்வியை காவிமயமாக்கும் செயலும் கூட.
இன்று அரசு பள்ளிகளில் இலவசமாக கிடைக்கும் கல்வி, WTO ஒப்பந்தந்தின் அடிப்படியில் வணிகமாக்குவதற்கான முயற்சி தான் இந்த நவோதயா பள்ளிகள்.
ஜெயலலிதாவிற்கு பிறகான அதிமுக அரசு கிட்டத்தட்ட பாஜக அரசாகவே செயல்படுகின்றது. ஜெயலலிதா எதிர்த்த நீட் தேர்வு, GST, உதய் மின் திட்டம், உணவுப் பாதுகாப்பு சட்டம் என்ற அனைத்தையும், அம்மாவின் வழியில் ஆட்சி செய்கிறோம் என்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் பார்ப்பன பாஜக பினாமியாக செயல்பட்டு அனைத்தையும் ஏற்றுக்கொண்டு விட்டனர்.
இதோ நவோதயா பள்ளிகளையும் எந்த எதிர்ப்பும் இன்றி ஏற்றுக்கொள்வார்கள்.
நீட் தேர்வின் மூலம் ஏழை எளிய மக்களின் மருத்துவ கனவு தகர்க்கப்பட்டுள்ளது. இப்போது நவோதய பள்ளிகள் மூலம் ஏழை எளிய மக்களின் அடிப்படை கல்வியே கேள்விக்குறியாக உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக மட்டுமல்ல, நவோதயா பள்ளிகளுக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்த வேண்டியது கட்டாயம். இல்லை தமிழகம் அழிக்கப்படும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.