24/05/2018

மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?


விழாக்களின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் மக்கள் அதிகம் கூடுவர்.கும்பல் பெருகுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. தூய்மை கெடுகிறது. சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது.

காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும் பாக்டீரியாக்களும், மக்களைத் தாக்குகின்றன. உடல் நலத்தைக் கெடுக்கின்றன.

மக்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத் துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மா இலைகளிலும் அதன் சக்தி குறையாது.

மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும்.

இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்...

எண்ணமின் அலைகளின் பயணம்...


நம் மனம் மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ளது.

எனவே பிரபஞ்சமே மனம் என்பதால் நமக்கு வேண்டிய தகவலை எத்தனை கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும் அடுத்த கனமே பெற முடியும்.

அப்படி பெற்று அதை ஆழ்மனம் சீர்படுத்தி மூளையின் வழியாக பிரபஞ்சத்தில் எண்ணமின் அலைகளாக வெளிப்படுத்தும்.

அந்த அலைகளின் மின் ஆற்றலை பொருத்து அதன் தூரம் நிர்ணயிக்கபடும்.

அதற்கு தேவையான ஆற்றல்தான் நாம் மூச்சு பயிற்சியின் மூலமும் தியானத்தின் மூலமும் பெறும் பிராண சக்தி.

அபரிமிதமான பிராண சக்தி உடைய சித்தர்கள் எது நினைத்தாலும் நடப்பதற்கு இதுவே காரணம்.

எனவே நாம் செய்ய வேண்டியது நமக்கு தேவையானதை பற்றி ஆழமாக சிந்தித்து வலிமையான அலைகளை வெளிபடுத்த வேண்டும்.

அப்படி செய்யும்போது அந்த அலைகள் அதற்கு ஒத்தவற்றை ஈர்ப்பு விசையின் உதவியுடன் நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும்.

எழுத்து வடிவத்தில் இதை விளக்குவது சற்று கடினம் தான்...

மாரடைப்பை தவிர்க்க....


தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள்.

அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள்.

உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ?

எதிர்பாராதவிதமாக வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்.

உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக வலிமையாக இரும வேண்டும்,

ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு பிராணவாயு சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்.. பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்...

மனிதம் - குணப்படுத்த முடியா நோய்...


வெளி உலகம் மட்டும் வாழ்க்கை என்று இருக்காதீர்கள்...


நம்மை நம்பி  ஒரு குடும்பம் உள்ளது அவர்களுக்கும் நேரத்தை ஒதுக்குங்கள்...

இவ்வுலகத்தில் பணம் மட்டுமே வாழ்கை என்று மூழ்கிவிடாதீர்கள்...

திரும்ப அந்த வாழ்க்கை கிடைக்காது...

உலக அரசியலை புரிந்துக் கொள்...


இலுமினாட்டி கார்ல் மார்க்ஸ் - 2...


தனியார் சொத்து பறிக்கப்பட்டு பொதுவில் வைக்க வேண்டும் என்று முதலில் வாய்திறந்தவர் Hess.

நல்ல விசயம் தானே என்று நினைத்து மேலும் இவரைப் பற்றிப் படித்தால் இதை யூத மதம், இனவெறி மற்றும் வர்க்க போராட்டித்தின் வழி சாதிக்க வேண்டும் என்கிறார்.

இந்த தனியார் சொத்து பறிப்பு பொதுவில் வைக்கும் சங்கதியெல்லாம் யூதர்களுக்கு பொருந்தாது என்கிறார்.

புதிய உலக அதிகாரத்தை இவர் குறிப்பிடும் சோசலிசத்தின் மூலம் வென்றெடுக்க முடியும் என்கிறார்.

புதிய உலக அதிகாரம் (New World Order) என்பது சாத்தானிய வழிபாடு செய்யும் இலுமினாட்டிகள்  இந்த உலகத்தை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முன்னெடுக்கும் திட்டம்.

Hess சோசலிசத்தின் மூலம் உலக மக்கள் அனைவரையும் நாடுகளின் எல்லைகளில் இருந்து விடுவித்து ஒரேத் தலைமையின் கீழ் கொண்டு வருவதன் மூலம் புதிய உலக அதிகாரத்தை சாதிக்க முடியும் என்கிறார். 

இதற்கு சமூகத்தை வர்கங்களாக பிரித்து அவைகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு அவற்றுக்கிடையே ஒற்றுமை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று வலியுருத்துகிறார்.

இந்த சமூக பாட்டாளி வர்க போராட்டத்தை எதிர்பவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நான் வாலை கையில் எடுப்பேன் என்கிறார்.

உலகம் முழுவதும் இத்தகைய சமூக பாட்டாளி வர்க போராட்டங்களை முன்னெடுக்க Rothschilds பொருளதவி செய்யும் என்றும் சொல்கிறார்..

யார் இந்த Rothschilds ? என்றுப் பார்த்தால் ஜெர்மனியின் மிக மிக பாகாசுர வங்கி குழுமம். Mayer Amschel Rothschild என்கிற யூதரால் ஜெர்மனியில் 1760-களில் தொடங்கப்பட்ட வங்கி வணிக குழுமம்.

இன்றைக்கும் இந்த குழுமமே ஐரோப்பாவின் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மறைமுகமாக கட்டுப்படுத்தும் கரங்களில் ஒன்று.

இதையெல்லாம் படித்ததும் மேலும் ஒரு சந்தேகம் கிளம்பிவிட்டது.

ஒருவேளை இலுமினாட்டி குறித்த புத்தகங்கள் யூத வெறுப்பு பிரச்சாரங்களையும் செய்கின்றனவோ என்று.

இதற்கும் அவைகள் ஒரு துப்பைத் தருகின்றன அது தால்முட்.

யூதர்களின் புனித நூல்களில் ஒன்று.

இந்த நூல் உலக வளங்கள் எல்லாம் யூதர்களின் கரங்களுக்குள் வரவேண்டும் என்கிறது.

இதை சாதிக்க பாட்டாளி வர்க போராட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்கிறார் மார்க்சின் மற்றொரு வழிகாட்டி Levi Baruch.

உலக அரசாங்கங்களை கட்டுப்படுத்தி தனியார் சொத்துக்களை பறித்து தங்கள் (யூத) கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் அதற்கு மார்க்சிய சித்தாந்தத்தை மறைமுகமாக  பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இவர் கைப்பட மார்க்சுக்கு எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த உடனடியாக அந்த கடிதம் விவகாரம் மெளனமாக்கப் பட்டுவிட்டது என்கின்றன இலுமினாட்டிக் குறித்த புத்தகங்கள்..

அந்த கடிதத்தில் Baruch மேலும் உலக எல்லைகளை உடைத்து, வெவ்வெறு இனம் மொழி கலாச்சாரம் போன்ற வரையரைகளைத் தகர்த்து, அரச குடும்பங்களையும் அரசுகளையும் இல்லாமல் செய்து ஒட்டுமொத்த உலக அதிகாரத்தை நம் கைகளில் (யூத) கொண்டு வர வேண்டும் என்று எழுதியிருந்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கு ஆதாரமாக வைக்கப்படும் புத்தகம் Les origines secretes du bolchevisme.

வலுத்தது பிழைக்கும் (Survival of the fittest) என்பது மார்க்சிய சாராம்சங்களில் ஒன்று.

இதுதான் டார்வினின் பரிணாமக் கொள்கையின் சாராம்சமும்.

ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் இது தால்முத்தின் சாராம்சங்களில் ஒன்றும் கூட.

மார்க்ஸ் வெளிப்படையாகவே இதுக் குறித்துப் பேசுகிறார்.

1856 ஏப்ரல் 16 தேதியிட்ட People’s Paper-ல் மார்க்ஸ் இப்படி எழுதுகிறார்….

“The classes and the races too weak to master the new conditions of life must give way……They must perish in the revoluitonary Holocaust”

இதில் சுவாரசியமான விசயம் டார்வினின் வலுத்தது பிழைக்கும் என்கிற பரிணாமக் கொள்கையும் இலுமினாட்டிகளின் சதி என்கிற குற்றச்சாட்டிற்கு உள்ளாகும் கொள்கை..

விழித்துக்கொள் தமிழினமே...


அகத்திக் கீரையீன் சிறப்பு...


அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..

சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு மருந்திடுதல் எனும் ஒரு பழக்கம் தமிழ் மக்களை ஆட்டி வந்திருக்கிறது;

கணவனின் அன்பு தொடர மனைவியும், மனைவியின் அன்பு தொடர கணவனும், விலை மாதர்கள் தங்களுக்கு தொடர்ந்து வாடிக்கையாளர் கிடைக்கவும் இந்த மருந்திடுதலை பயன் படுத்தினர்.

உள்ளுக்குல் ஒரு சில கூட்டு மருந்துகளை சேர்த்து கொடுத்து விட்டால் அதை அருந்தியவர் கொடுத்தவரிடம் தொடர்ந்து அன்புடன் இருப்பார் என்பது ஒரு நம்பிக்கை .

அத்தகைய மருந்திடுதல் எனும் தோஷத்தை நீக்கும் சத்தி அகத்திக்கு உண்டு .

அகத்திக் கீரையை உண்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். பித்த தொடர்பான நோய்கள் நீங்குகும்,

வாரத்துக்கு ஒரு முறையேனும் தவறாமல் அகத்தி கீரையை சமைத்து சாப்பிடடால் தேகத்தில் உஷ்ணம் தணியும் கண்கள் குளிர்ச்சி பெறும். குடல் புண் ஆறும் சிறு நீர் மற்றும் மலம் தாரளமாக கழியும். பித்து எனும் மனக் கோளாறும் நீங்கும்,
அகத்தி கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும் .

இதற்கு அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து நான்கு பங்கு சின்ன வெங்காயம் சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினசரி ஒரு வேளை குடிக்கலாம்.

அகத்தி கீரையையும் மருதாணி இலையையும் சம அளவில் எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையும்.

அகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.

உடம்பில் காண படும் தேமலுக்கு அகத்தி கீரையீன் இலையை தேங்கா எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.

அகத்தி கீரையை சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிடலாம்..

அகத்தி கீரையை ஏகாதசி அன்று விரதமிருந்த பிறகு துவாதசியன்று உணவில் அகத்தி கீரை உடன் நெல்லிக்காயையும் சேர்த்துக் கொள்வது சிறப்பு, எதையும் அர்த்ததுடன் தான் நம் முன்னோர்கள் வகை படுத்தியுள்ளனர்.

நாம் அதை மதித்து நடக்க வேண்டும்..

அகத்தி கீரைக்கு எல்லா மருந்துகளின் வீரியத்தையும் முறிக்கும் சக்தி உண்டு .எனவே சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்..

வாரம் ஒரு முறை மட்டுமே அகத்தியை உபயோகிக்க வேண்டும் .. அதிகம் உபயோகித்தால் சொறி சிரங்கு வரும்...

காங்கிரஸ் அயோக்கியனு நெனச்சா அத விட ரெண்டு மடங்கு அயோக்கியனா பா.ஜ.க இருக்கான்...


நோய் தீர்க்கும் ஆடாதோடா...


சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும்.

ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என அழைக்கப்படுகிறது.

ஆடா தோடைவின் முருத்துவ பெயர் ( Adhatoda zeylanicaணீ) ஆகும்.

இது உடலில் தசைப்பகுதிகளில் ஏற்ப்படும் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள் இதில் இருக்கும் வாசிசின் என்னும் வேதிப்பொருள் நுரையீரல் செல்களில் புகுந்து வேலை செய்து விரிவடைய செய்வதால் ஆஸ்த்மா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை இது குணப்படுத்துகிறது.

நீண்ட நாள் தொடந்த சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகும். இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்க வைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.

இவைகளுடன் திப்பிலி, ஏலம், அதிமதுரம், தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க இருமல், இளைப்பு, சுரம் தீரும். இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும்.

இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக் கொடுக்க இருமல் தீரும். இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.

ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்...

எந்த தொழிற்சாலையையும் இனி இந்த மண்ணில் விடாதீர்கள்...


இனப் படுகொலைகள் ஒரு சிறிய தொகுப்பு...


முதலாம் உலகப்போர் சமயத்தில் ஆர்மீனியாவில் துருக்கியர்களால் லட்சக்கணக்கில் ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டனர்.

ஈராக் மற்றும் துருக்கி பிராந்தியத்தின் ஆயிரக்கணக்கான குர்து இனமக்கள்  கொல்லப்பட்டனர்.

காப்பாற்ற ஆள் இல்லை.

இரண்டாம் உலகப் போரின் போது, பல லட்சம் யூதர்களை ஹிட்லர் கொன்று ஒழித்தார்.

[முதல் உலகப்போருக்கு வித்திட்ட யூதர்களை ஒழித்தால் தான் உலகம் நிம்மதியாக வாழும் என்பது அவரது சித்தாந்தம்].

அப்போது சோவியத் வீழ்ந்தால் மகிழ்ச்சி என்ற மனோ நிலையிலிருந்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதை தடுக்க முன்வரவில்லை.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, சோவியத் மற்றும் அதன் சில கூட்டணி நாடுகள் கம்யூனிசம் என்ற பெயரில் ஏராளமான மனித உரிமை மீறல்களை நடத்தின.

சீனாவில் கம்யூனிசம் நிறுவப்பட்ட பிறகு மாவோ காலத்திலும், அதற்குப் பிந்தைய காலத்திலும் நடந்த மோசமான மனித உரிமை மீறல்களையும், பெரும் பாய்ச்சல் திட்டம் என்ற பெயரில் நடந்த பட்டினிப் படுகொலைகளையும் தடுக்க ஆள் இல்லை.

ஈரானில் 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய பகாயிசம் என்ற திடீர் மதம்  சார்ந்த  மக்கள் சுமார் 25 ஆயிரம் பேரை அந்நாட்டு ஹியா அரசாங்கம் கொன்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது..

அது மட்டுமின்றி இந்த வரலாறுகளுக்கு முன்பு மங்கோலியர்கள் கொன்றவர்கள் எண்ணிக்கைளை கணக்கு எடுக்கப்படவே இல்லை..

இந்த மங்கோலியர்கள் பாக்தாதில் நுழைந்து அங்குள்ள 1 இலட்சம் மக்களை கொன்றோழித்து பிணக்குவியலில் தமது சந்தோசத்தை நிகழ்த்தி கொண்டு இருந்த நேரம் பெரும் மழை பொழிந்தது.

பின்னர் மழை தண்ணீரில் 1 இலட்சம் பாக்தாத் மக்களின் பிணங்கள் ஊறி அழுகிபோய் காலரா போன்ற தோற்று நோய்கள் பரவ ஆரம்பித்தவுடன் தான் இந்த மங்கோலியர்கள் அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினார்கள்.

ஆனால் இதை தடுப்பது யார்?

ருவாண்டா, சோமாலியா, எத்தியோபியா மற்றும் சூடான் போன்ற ஆப்ரிக்க ஏழை நாடுகளில் நடக்கும் இன மோதல்களால் மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டார்கள்.

இப்போது சில இடங்களில் கொல்லப்படுகிறார்கள்.

ஆனால் அதை யாரும் தடுக்கவில்லை. வியட்நாமில் அமெரிக்காவும், பிரான்சும் நடத்திய ஆட்டங்கள கொஞ்ச நஞ்சமில்லை

ஜப்பானியர்கள்  நாங்கள் சரணடைகிறோம் என்று அறிவித்த பிறகும் கூட தங்களது கர்வம் அப்பாவி மக்களின் மீது நாங்கள் காட்டி தான் ஆவோம் என்று ஹிரோஷிமாவை அழித்த கேடுகெட்ட அரசு தான் அமேரிக்கா.

இதையெல்லாம் மறுக்க முடியாது மறக்கவும் முடியாது...

இன்றைய காலகட்டத்தில் துற்குமான்சி தான் கஜகஸ்தான் போன்ற பகுதியில் சிறுபான்மையினராக இருக்கும் மக்களை இன்றைய ரஷ்யா சப்தமே இல்லாமல் அழித்து கொண்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

பர்மாவாக இருக்கட்டும் இலங்கையாக இருக்கட்டும் அத்தனைக்கும் காரணம் என்னவேண்டுமானால் இருக்கட்டும்..

ஆனால் வரலாற்றில் இவ்வளவு இனப் படுகொலைகள் நடந்தேறியுள்ளது என்பதை நாம் தெரிந்து
கொள்ள வேண்டும்..

இவ்வளவும் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் நடந்து இருக்க வேண்டும்..

முக்கியமாக நாடு பிடித்தல், அல்லது செல்வம், அல்லது செழிப்பான வாழ்க்கை, அல்லது பெருமை..

ஆனால் நீங்கள் ஆரமத்தில் படித்த ஹிட்லர் தொடக்கம் மங்கோலிய மன்னன் வரை எவரும் இன்று உயிருடன் இல்லை.

இதற்காகவா இவ்வளவு கொலைகள் நடந்தேறியது அது தொடரக்கூட இல்லை.

கத்தை கத்தையாக சேர்த்து போரில் கொன்று கொள்ளையடித்த பணம் கூட இவர்களுக்கு உதவவில்லை...

மங்கோலிய மன்னனின் பயம் கலந்த பெருமை அன்றையகாலத்தில் இருந்தாலும், இன்று இவருடைய கல்லறையை தேடிக்கொண்டு அலைகிறது சில குழு..

காரணம் இவரின் எலும்பு கூடுகளை அடித்து நொறுக்கியாவது தங்களது வரலாற்று ஆத்திரத்தை தீர்க்க வேண்டும் என்ற நோக்கில்..

இவ்வளவு  தான் வாழ்க்கை..

இதற்கு தான் இவ்வளவு களேபரங்கள்..

இப்பதிவு 5 வருட ஆட்சிக்கு அல்லோலப்படும் சில அரசியல் வாதிகள் சிந்திக்க வேண்டும்...

இதன் அரசியலை புரிந்துக்கொண்டு இதே பேசுங்கள்...


மறுபடியும் உங்களை கட்சி அரசியலுக்குத் உங்களை சிக்க வைப்பார்கள்..

மக்கள் தங்கள் சாதி, மத, அடையாளங்களை மறந்து இது என் மண், எனக்காக உரிமை என ஒருமித்த கருத்துகளால் ஒன்றிணையுங்கள்..

அதுதான் ஆகச்சிறந்த வலிமைமிகுந்த சக்தியாக இருக்கும்..

நானும் தமிழன்தான் என கூறுபவர் எவனும் உங்களுக்காக களத்திற்கு வரமாட்டான்...

நமக்காக யாரும் வர மாட்டார்கள்.. இது நம்முடைய மண்...


இது இனம் சார்ந்த பதிவு இல்லை, என் இனத்தின் பெயரைச்சொல்லி எங்களை இத்தனை ஆண்டுகளாக ஏமாற்றியவர்களுக்காக இந்த பதிவு..

நமக்கு எது தேவை என்று நாம் முடிவு செய்ய வேண்டும்...


அதுவரை  அனைத்திலும் தோல்வி மட்டுமே காண முடியும்...

தமிழின துரோகிகள் பாஜக பொன். ராதா மற்றும் தமிழிசை போன்றோர்களிடம் விழிப்போடு இருங்கள்...


சென்னை தலைநகரே, உங்களிடம் கைகூப்பி கேட்கிறோம்...


சென்னை பொருளாதாரத்தை நிலைகுலைய செய்தாலே, அதிகார வர்க்கத்திற்கு பெரும் அடியாக அமையும், அதுவே நீங்கள் செய்கின்ற ஆகச்சிறந்த உதவி..

நீங்கள் தூத்துக்குடி உப்பை சாப்பிட வேண்டுமென்றால் இதை செய்யுங்கள்..

இல்லையேல் இனி நீங்கள் சாப்பிடுவது உப்பு இல்லை, எங்கள் ரத்தத்தில் ஊறிய உப்பாக தான் இருக்கும்...

தமிழினமே ஒருங்கிணைய தயாராகுங்கள்...


முடிவில்லா போராட்டங்கள் அதிகாரவர்கத்தின் அடக்குமுறை...


கலைஞர் ஆட்சியில் இலவச டிவி  , ஜெயா ஆட்சியில் இலவச கிரைண்டர், மிக்ஸி. இன்று எடப்பாடி ஆட்சியில் இலவச மரணம். அடிப்படை உரிமைகளுக்கும் தேவைகளுக்கும் கை  ஏந்தும் நிலையில் தமிழர்கள்.
சிங்களவன் அடித்து விரட்டியது போல், நாமும் விரட்ட படுவோமா ? நம் இனத்தின் பண முதலைகள் வெறி தீரும் வரை அடித்து ஒடுக்க படுவோமா? அதற்கு நடக்கும் ஒத்திகைதானா? நாங்கள் பேச்சு வார்த்தை கேட்டோம் ஆயுதம் ஏந்தி வந்தீர்கள், நாங்களும் ஆயுதம் ஏந்தி வந்தால் பேச்சு வார்த்தை என்று வருவீரரோ?

ஸ்டெர்லைட்...

1996 முதல் முடியா போராட்டம். திசை திருப்பி மக்கள் மறக்கடிக்க பட்ட ஓர் போராட்டம். மீண்டும் உயிர்த்துஎழ 100 நாட்கள் தன்னலம் இல்லாமல் மக்கள் ஒன்று கூடி போராடினர். ஏன் இன்று குறி வைத்து 10 உயிர் காவு வாங்க வேண்டும்? அதுவும் ஓர் கார்ப்பரேட் நிறுவனத்திற்காக?  இவர்கள் உயிர் போனால் போராட்டம் முற்று பெற்றிருமா? இல்லை பத்து லட்சம் என்று உயிர்க்கு விலை பேசினால் போதுமா?

இன்று நாம் நினைவில் நிறுத்தி பழி தீர்க்க வேண்டியோர் யார் யார் தெரியுமா?
கச்சிதமாய் 10 அப்பாவி உயிர்க்கு பேரம் பேசியோர்,

அணில் அகர்வால் ( வேதாந்தா குழுமம்)
நிர்மலா சீதாராமன்
குருமூர்த்தி ( அன்று சோ , இன்று இந்த பார்ப்பான்)

கிரிஜா வைத்தியநாதன்
எடப்பாடி பழனிசாமி
ராஜேந்திரன் (DGP)
வெங்கடேஷ் (IAS)
மஹேந்திரன் (SP)

இதில் என்ன ஆதாயம் தேட போகிறார்கள்? குடிக்க தண்ணீரும் சுவாசிக்க காற்றும் இன்றி ? ஸ்டெர்லைட் இணையத்தளத்தில் அவர்கள் பெருமைகள் பேசி  இருப்பதை நீங்களே பாருங்கள், https://www.sterlitecopper.com/ .

இன்று மட்டும் அல்ல இத்தனை போராட்டங்கள், உயிர் சேதங்கள் இந்த மண்ணில் அனைவரின் உயிர் காக்கத்தானே ?


வா தமிழா, வீதியில் ஒன்று சேரு போராடுவோம் என்று பேசும் தலைவர்கள் ஏனையோர் சாமானியன் பின் ஒளிந்து கொள்ளும் தந்திரம், என் இதற்கு இன்னும் பலியாகி போகிறோம் நாம்? போராட்டங்கள் கடந்து அடுத்த படி எப்படி செல்வது? இல்லை அடுத்து என்னதான் யோசிப்பது?

இன்னும் எத்தனை போராட்டம்! தமிழ்நாடு முழுதும். மறந்துவிட்டோமா ??

நியூட்ரினோ
காவேரி
சாகர்மாலா
கதிராமங்கலம் ONGC
விவசாயிகள் போராட்டம்
கொடைக்கானல் பாதரசநஞ்சு
கூடங்குளம்

இன்னும் போராட்டங்கள் தண்ணீர் கேட்டும், அடிப்படை உரிமை கேட்டும் நாள் தோறும், அவை நாளிதழின் மூலையில் ஒரு துணுக்கு செய்தியாகவோ, இல்ல வைரல் மீம் ஆகவோ கடந்து போகிறது. சாகர் மாலா என்ற பெருந்திட்டம் சிறு சிறு படியாக முன்னேறுவதை என் நாம் உணரவில்லை?

ஏன் எந்த புது திட்டமும் தமிழகத்திலே சோதிக்க படுகிறது? உயிர் கொள்ளும்தொழிற்சாலைகள் ஏன் இங்கு அதிக அளவில்? எளிதில் கிடைக்கும் அனுமதி? அத்தனை மாநிலம் மறுத்த ஆலைகள்,அணுஉலை எல்லாம் தமிழகத்தில் மட்டும்.

இன்னும் கூறு போட்டு விற்க எங்களிடம் எங்கள் உடல்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன.

தண்ணீர் கேட்டு காவிரி போராட்டம் ஆட்சிகள் பல மாறி இன்றும் தீர்வில்லாமல். மோயாறு என்ற தீர்வை கண்டும் காணமல் ஏன் ? யாரை கேட்பது?

இன்னும் நம்மை அழிவில் தள்ள அடுத்து  என்ன? இல்லை மீண்டும் CSK, BigBoss 2, காலா என்று திசை மாறி கூத்தாடிகளுக்கு சொம்பு தூக்கி நிற்க போகிறோமா? தண்ணீர்,, காற்று,நிலம் இப்படி அடிப்படை உரிமைகள் அனைத்தும் இழக்கிறோம், சொந்த நாட்டில் அகதியாய்...

நம் எதிர்காலம் நாம் தான் தீர்மானிக்க வேண்டும். விழித்துக்கொள்ள இன்னும் காத்திருக்க வேண்டுமா?

தூத்துக்குடி மக்களை காக்க...


ஒருநாள் இந்த மக்களதிகாரம் வெற்றி பெறும்..


காத்திரு அதிகார வர்க்கமே.. எங்களின் அதிகாரத்தை பார்ப்பதற்கு..

தூத்துக்குடி ஆட்சியாளர் மாற்றம்.. கண்துடைப்பு...


இது தற்பெருமையின் பதிவு இல்லை...


பல்லாயிரம் ஆண்டுகளாக இதுதான் நிதர்சனம்..

கருணாக்களை நீங்கள் எத்தனை ஆண்டுகள் தான் உடலை விற்பீர்கள்,

ஒருநாள் உங்கள் உடல் அவர்களுக்கு ஒத்துழைக்காத பட்சத்தில், உங்களை கொன்று விடுவார்கள்...

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களை அடைய வேண்டும்...


தமிழகத்திற்கு ஆதரவாக ஜார்கண்டிலும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம். நன்றி தோழர்களே...


Save Tamilnadu என்று பதாகைப் பிடித்திருக்கும் அந்த இளம்பெண்ணின் கைகளைப் பற்றி கண்ணீ்ர்மல்க நன்றி சொல்கிறோம்..

மக்கள்தான் மக்களின் பக்கம் நிற்பார்கள். இதுதான் வரலாறு. இதுதான் இனியும் நடக்கும்...

அரசு பயங்கரவாதம்...


உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு வேர்க்கடலை...


வேர்க்கடலை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான், இதனால் உடல் பருமன் கூடும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் வரும் என்ற நம்பிக்கை தான் இருந்துவருகின்றது ஆனால் வருகின்ற ஆராய்ச்சிகளில் இந்த நம்பிக்கைகளுக்கு எந்த ஒரு ஆதாரமுமில்லை என்றே தெரிகிறது .

காரணம் வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்றபடியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான உணவாகும்.

ஏனெனில் இதிலுள்ள சர்க்கரையின் அளவு இரத்தத்தில் மிக மிக குறைந்த அளவே சேருவதால் பயமில்லாமல் சாப்பிடலாம். மேலும் இதில் இருக்கும் மக்னீசியம் என்ற வேதிப்பொருள் இன்சுலினை சுரக்கச் செய்யும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகளில் உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகளில் துரிதப்படுத்தி சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துகிறது. ஆகவே இவர்கள் அன்றாட உணவில் தைரியமாக வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம்.

வேர்க்கடலையில் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக காணப்படுவதால் வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காது. மாறாக ரத்த கொதிப்பு குறையும். வேர்க்கடலையில் நைட்ரிக்(nitric)அமிலம் என்ற வேதிப் பொருள் உள்ளது.

இவை வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரிக் (nitric) அமிலத்தின் கிரியையினால் கிடைக்கும் உப்பு (Nitrate)ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது , மேலும் இதில் காணப்படும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்சு போன்ற உயிர் வேதிப் பெருட்கள் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் உருவாக்காமல் தடுக்கிறது. வேர்க்கடலை நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது ஆகவே கர்ப்பிணிகள் கூட வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லது.

வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும் ஏனெனில் அதில்தான் நிறையச் சத்துகள் அடங்கியுள்ளது. மேலும் வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடுவதால் சிலருக்கு ஏற்படும் அஜீரணத்தை தவிர்க்கலாம்.பொதுவாக உடல் எடையை குறைப்பவர்கள் சிற்றுண்டிக்குப் பதிலாக வேர்க்கடலையை சாப்பிடலாம், ஏனெனில் இவை சாப்பிட்ட திருப்தி விரைவிலேயே கிடைப்பதால் மேலும் மேலும் எதையாவது சாப்பிட்டு உடல் எடையை கூட்டும் நிலை வராது.

ஆனாலும் இதில் உடல் எடையைக் கூட்டும் புரத சத்து அதிகமிருப்பதால் அளவோடு சாப்பிடுவது தான் இவர்களுக்கு நல்லது.இதிலுள்ள சுண்ணாம்புச்சத்து மற்றும் உயிர்ச்சத்து டி ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் முதுமையில் ஏற்படும் ஆசு(ஸ்)டியோபோரோசிசு(ஸ்) என்ற எலும்பு சம்பந்தமான நோயையும் தடுக்க உதவுகிறது

வேர்க்கடலையில் இருக்கும் சில வேதிப் பொருட்கள் புற்றுநோய், உருவாகக் காரணமாகும் செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மலக்குடல் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது. மேலும் பார்க்கின்சன், அல்சீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவுகிறது.வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன.

அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுவதால் அது தொடர்புடைய நோய்கள் குறைந்து விடுகிறது.இதில் முக்கியமாக தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், சிறு நீராக கோளாறு மற்றும் ஒவ்வாமை பிரச்சனைகள் உள்ளவர்கள் இக்கடலையை தவிர்த்துவிடலாம் அல்லது மருத்துவரின் ஆலோசனையை கேட்பது நல்லது.

உலகம் முழுவதும் எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருள்களுள் நிலக்கடலையும் ஒன்றாகும்.வேர்க்கடலையில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்திருக்கிறது. எனவே, குழந்தைகள் வளர்ச்சி தடையின்றி இருக்க நிலக்கடலை நல்லது.

சோயா மொச்சையிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம், வேர்க்கடலையில்தான் இருக்கிறது. முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் வேர்க்கடலையில் இருக்கிறது.மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பொசுபரசு, உப்பு, பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, உயிர்ச்சத்து ஈ, நியாசின் போன்ற உயிர்ச்சத்துக்களும் வேர்க்கடலையில் உள்ளன.

இதனால்தானோ என்னவோ எளிமையாக வாழ்ந்த காந்தி தேவையான அளவு உடலுக்கும், மனதிற்கும் சக்திபெற வேர்கடலையும் ஆட்டுப்பாலும் சாப்பிட்டு வந்தார்.எல்லாவிதமான இரத்தப்போக்குகளையும் இது தடுக்கும். பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவு வேர்கடலையாகும்.

பெருந்தீனிக்காரர்களும், உடல் பருமன் உள்ளவர்களும், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சீனி சேர்க்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. இதன் பொருட்டு உடல் எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.

வயிற்றுப்போக்கு உடனே கட்டுப்படவும், பற்கள் பலம் பெறவும் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது. எல்லாவற்றையும்விட முக்கியமானது உடல் அழகும், இதயப் பாதுகாப்பும்.வேர்க்கடலையில் உள்ள நியாசின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆறவும், இவை வராமல் முன்கூட்டியே தடுப்பதுடன், பளபளப்பான தோலையும் ஏற்படுத்தித் தருகிறது.

படிக்கும் மாணவ, மாணவியர் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஞாபக மறதி ஏற்படாது என்கிறார்கள், உணவு ஆய்வாளர்கள். வேர்க்கடலையில் உள்ள உயிர்வேதிப்பொருட்கள் நரம்பு செல்களை நன்கு செயல்படத் தூண்டும். இதனால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புள்ள பார்க்கிசன், அல்சமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்கும்.

மேலும், நரம்பு சம்பந்தமான நோய்களை வராமல் தடுக்கும் ஆற்றலும் வேர்க்கடலைக்கு உண்டு. வேர்க்கடலையில் 30 விதமான ஊட்டச் சத்துக்கள் உள்ளன.

இதில் புரதம் அதிகம். வேர்க்கடலையில் மேல் இருக்கும் தோலில் அதிக சத்துக்கள் உள்ளதால் அதனை நீக்காமல் சாப்பிடுவது அவசியம்.நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் இருந்து ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவை `கிளை செமிக் இன்டெக்சு’ என்பார்கள். இது வேர்க்கடலையில் மிகவும் குறைவு என்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.

மேலும், வேர்க்கடலையின் மேல் உள்ள இளஞ்சிவப்பு நிறம் தோலுக்கு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.அதுமட்டுமின்றி, வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலின் சுரக்கும் ஊக்கிகளை துரிதப்படுத்தும் சக்தி உள்ளது.

கர்ப்பிணிகள் வேர்க்கடலையை சாப்பிடுவதால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்படாது. வேர்க்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான உயிர்ச்சத்து ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய உயிர்ச்சத்து  பி3 போன்றவை அதிகம் உள்ளன. ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் வேடியம் சோடியம் வேர்க்கடலையில் குறைவு.

இதனால் வேர்க்கடை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது. வேர்க்கடலையில் ஆன்டி ஆக்சிடென்ட்சு இருப்பதால் உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றிவிடும். தினமும் 50 கிராம் வேர்க்கடலை அவித்து அல்லது வறுத்து சாப்பிடவும். எண்ணையில் பொரித்து சாப்பிட வேண்டாம்.

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா ?

ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்? வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.

ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் உண்கின்ற  நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம். வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்சின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் சீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம் புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்...

ஒடுக்குமுறை தொடங்கிவிட்டது போராட முடியாதவங்க.நிலத்தை விட்டு வெளியேறுங்க...


கவனமாக இந்த நிகழ்வை கடந்து செல்லுங்கள்...


எல்லா கட்சிகளும் விலை போய்விட்டன..

உங்கள் வீடுகளில் உட்கார்ந்து பேசுங்கள்..

ஒருமித்த கருத்துக்களால் அனைவரையும் ஒன்றிணைக்க முயலுங்கள்...

பாஜக - அதிமுக திட்டமிட்டே தூத்துக்குடி மக்களை கொலை செய்கிறது...


800 அரசு ஆரம்ப பள்ளிகள் மூடப்பட்டால் ஏழைகளின் கல்வி வாய்ப்பு கருகி விடும் - பாமக நிறுவனர் ராமதாஸ்...

                       
தமிழ்நாட்டில் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள 800-க்கும் கூடுதலான அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவர்களின்  இடைநிற்றலைக் கட்டுப்படுத்த அதிக எண்ணிக்கையில் புதிய பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும்  என்ற கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில் அரசின் இந்த முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் 33 தொடக்கப்பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை. பல நூறு பள்ளிகளில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். இன்னும் சில  தொடக்கப் பள்ளிகளில் சில வகுப்புகளில் ஒரு மாணவர் கூட இல்லை என்று கூறப்படுகிறது. இந்த பள்ளிகளின் பட்டியலைத் தயாரித்துள்ள தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை எந்த நேரமும் அதற்கான அரசாணையை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கூறி பள்ளிகளை மூடுவது என்பது காலணியின் அளவு குறைவாக இருந்தால் அதற்கேற்ற வகையில் கால்களை வெட்டி குறைக்கும் முட்டாள்தனத்திற்கு இணையான செயலாகும்.

தமிழகத்திலுள்ள அரசாங்க பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது உண்மை தான். ஆனால், அதற்கு ஆசிரியர்களையோ, மாணவர்களையோ குறை கூறி பயனில்லை.  அரசு பள்ளிகளில் மாணவர்கள் போதிய அளவில் சேராததற்கு அரசாங்கம் தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்க்குறை நிலவுவதாலும், கட்டமைப்பு வசதிகள் போதிய எண்ணிக்கையில் இல்லாததாலும் தான் பெற்றோர் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். தமிழகத்திலுள்ள பல அரசு பள்ளிகளில் கல்வித்தரம் தனியார் பள்ளிகளை விட சிறப்பாக இருந்தாலும் கூட, அரசு பள்ளிகள் என்றால் அங்கு கல்வித் தரமாக இருக்காது என்ற  தவறான எண்ணம் கடந்த 25 ஆண்டுகளாக மக்களின் பொதுப் புத்தியில் பதிவாகி விட்டது. இந்த மாயையை அகற்றவும், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அரசு எதுவும் செய்யவில்லை.

உதாரணமாக, தமிழகத்தில் உள்ள கிராமப்புற தொடக்கப் பள்ளிகளில் 48 சதவீத பள்ளிகள் இரு ஆசிரியர்களைக் கொண்ட பள்ளிகள் என்றும், தொலைதூரங்களில் உள்ள பள்ளிகளில் ஓர் ஆசிரியர் நிர்வாகப் பணிகளுக்காக வெளியில் செல்ல வேண்டியிருப்பதால் மீதமுள்ள இன்னொரு ஆசிரியர் மட்டுமே மாணவர்களை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதாகவும் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. மொத்தம் 5 வகுப்புகளுக்கான மாணவர்களை பெரும்பாலான நேரங்களில் ஓர் ஆசிரியர் மட்டுமே கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால், அவர்களால் எப்படி மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியும்? அத்தகைய பள்ளிகளில் கல்வி எப்படி தரமாக இருக்கும்?

ஒரு மாணவர் கூட இல்லாத அரசு பள்ளிகள், பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அரசு பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் தனியார் பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஆனால், அவற்றில்  இடம் கிடைக்காது என்று கூறும் அளவுக்கு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதற்குக் காரணம் அந்த பள்ளிகளில் போதிய அளவில் ஆசிரியர்களும், கட்டமைப்பு வசதிகளும் இருப்பது தான். அதே போன்ற வசதிகள் அரசு பள்ளிகளில் இருந்தால் அங்கும் மாணவர்கள் அதிகமாக சேருவார்கள். அவ்வாறு செய்ய ஆட்சியாளர்கள் தவறியதால் தான் அரசு பள்ளிகளில் போதிய அளவில் மாணவர்கள் சேரவில்லை. அரசு பள்ளிகளின் இன்றைய நிலைக்கு அரசு தான் காரணம் என்னும் நிலையில், அந்த பள்ளிகளை மூடி மாணவர்களை தண்டிப்பது எந்த வகையில் நியாயம்?

5 வயது நிறைந்த அனைத்துக் குழந்தைகளும் தொடக்கப்பள்ளியில் சேருவதை உறுதி செய்ய, அருகமைப் பள்ளி தத்துவத்தின்படி,  ஒவ்வொரு குடியிருப்பிலும் ஓர் அரசுப் பள்ளி இருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், இப்போது ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி என்ற நிலை தான் உள்ளது. இந்த நிலையை மாற்ற இன்னும் கூடுதலாக அரசுத் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட வேண்டிய நிலையில், இருக்கும் பள்ளிகளையும் மூடத் துடிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஊரகப்பகுதிகளில் மேல்நிலை வகுப்புகளில் 30-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடப்பிரிவுகள், நகர்ப்பகுதிகளிலும், ஆங்கில வழிக் கல்வி முறையிலும் 15-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடப்பிரிவுகள் ஆகியவற்றை மூடவும் தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. தமிழக அரசின் இந்த திட்டங்கள் செயல்வடிவம் பெற்றால் கிராமப்புற மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிக்கப்பட்டுவிடும்.  இது அனைவருக்கும், அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானது ஆகும். இந்த அநீதியை அனுமதிக்க முடியாது.

எனவே, மாணவர்கள் இல்லாததையும், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதையும் காரணம் காட்டி 800 தொடக்கப் பள்ளிகளை மூடும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, அந்த பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்தல் ஆகியவற்றின் மூலம் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்...

சிந்தித்து விழித்துக்கொள் எம் தமிழினமே...


சாகர்மாலா திட்டத்திற்கான முன்னோட்டம் தான் இது...


கப்பல் கட்டுமானத்தில் வல்லுனர்கள் கம்மியர்கள்...


கப்பல் கட்டுமானத்தில் சிறந்து விளங்கியவன் தமிழன். இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர்.

கடலில் பயணம்செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்?

காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன். உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராசஇராசசோழனும் அவன் மகன் ராசேந்திர சோழனும் ஆவான்.

கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில், கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும்.

ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும். ஆனால் இவ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோது ஆமைகள் கடல் நீரோட்டங்கள் (Ocean currents) எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன் பல்லாயிரம் கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மைதெரிந்தது.

.இப்படி பயணம்செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன் பின்தொடர்ந்தபோது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன.ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும், மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில் தமிழின்தாக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.

உதாரணம்...

தமிழா-------------மியான்மர்.
சபா சந்தகன்-----மலேசியா
ஊழன், சோழவன், வான்கரை, ஒட்டன்கரை, ஊரு--------அவுசுத்திரேலியா
கடாலன்------------சு(ஸ்)பெயின்
நான்மாடல் குமரி----------பசிபிக் கடல்
சோழா, தமிழி--------மெக்சிக்கோ
திங்வெளிர்--------------------ஐசுலாந்து
கோமுட்டி----------------------ஆப்பிரிக்கா.

இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்து அதன்மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.

இதேபோல் தென்பசிபிக்மாகடலில், அவுசுத்திரேலிய கடல் பகுதியில்கடல் அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கப்பலை ஆராய்ந்துபார்த்ததில் அது 2500 வருடங்களுக்கம் மேல் பழமையானது என்றும், இது தமிழருடையது என்றும்தெரிவித்தனர்.

நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இன்னும்உலகில் உள்ள கப்பல் மற்றும், கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவிய பெயர்களே உள்ளன...

காப்பரேட் கைகூலி மக்கள் விரோதி காவல்துறையே...


சட்ட விரோத கும்பல்களை எப்படி கலைக்க வேண்டும் என்று "தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் பிரிவு 703 லும், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, கவாத்து மற்றும் பயிற்சி கையேடு பிரிவு 123 லும் கூறப்பட்டுள்ளது...


அதன்படி முதலில் கும்பலாக கூடுவது சட்ட விரோதம் என அறிவித்து கலைந்து போகும்படி அறிவுறுத்த வேண்டும்.

கலைந்து போக மறுத்தால் கலெக்டர் பலாத்காரத்தை பயன்படுத்த கட்டளையை காவல்துறைக்கு பிறப்பிக்க வேண்டும்.

பலாத்காரத்தின் முதல்படி கண்ணீர் புகை
இரண்டாவது தடியடி
மூன்றாவது தண்ணீரை பீய்ச்சி அடித்தல்

இந்த மூன்றும் பயன்படவில்லை என்றால் தான் இறுதியாக துப்பாக்கி சூடு நடத்த வேண்டும்.

துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பாக, உயிரிழப்புகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்க வேண்டும். கும்பலின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கொம்பொலி பயன்படுத்த வேண்டும். கலவரக் கொடி கட்டாயம் ஏற்றப்பட வேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பான் வாயிலாக எச்சரிக்கை செய்ய வேண்டும்.

சுட முடிவு எடுத்து விட்டால்..

இடுப்புக்கு கீழேதான் குறி வைக்க வேண்டும்..

குறி வைப்பது கும்பலை பயமுறுத்துவதற்காக இருக்க வேண்டும்..

பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் காவல்துறைக்கு இருக்கவே கூடாது.

முதலில் வானத்தை நோக்கி தான் சுட வேண்டும்

ஆனால் நேற்று நடந்த கலவரத்தில்  எதையும் பின்பற்றவில்லை காவல் துறையினர்.

மக்களின் வரி பணத்தில் ஊதியத்தை பெற்றுகொண்டு மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் மக்களின் உயிரை எடுக்கும் அளவிற்க்கு இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

இவர்களின் பின்னனியில் யார்?

மாநில அரசா?
மத்திய அரசா?
மாவட்ட கலெக்டரா?

அல்லது தனியார் நிறுவனமா?

ஸ்டெர்லைட் - சாகர்மாலா திட்டத்திற்காக தூத்துக்குடி மக்களை அச்சுறுத்த மீண்டும் துப்பாக்கி சூடு...


உயிரணுக்களின் (Cellular memory) ஊடே தொடரும் நினைவுகளும் குணங்களும்...


பொதுவாக மனிதனின் மூளையே நினைவுகளை சேர்த்துவைத்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் மூளையுடன் நமது உயிரணுக்களும், நினைவுகளையும், குணங்களையும் எடுத்துச்செல்கிறது என்பது உறுப்புதானம் வழி தெரிய வந்திருக்கிறது.

இதயத்தை தானம் பெற்றவர்களிடம் காணப்பட்ட மாறுபட்ட குணநலன்கள், விருப்பங்கள், சிந்தனைகள் ஆகியவற்றைக்கொண்டு உயிரணுக்கள் நினைவுகளைச் சுமக்கின்றனவா என்ற ஆராய்ச்சிக்கு துவக்கமாக அமைந்தது.

ஒருவரிடமிருந்து உறுப்புதானம் பெறும்பொழுது, தானம் கொடுத்தவரின் குணநலன்களின் ஒரு பகுதியும் தானம் பெற்றவருக்கு சென்றிருக்கக்கூடுமா?

வளர்ச்சியடைந்த நாடுகளில் இத்தகைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனால் அந்த நாடுகளில் தானம் கொடுப்பவருடைய விபரங்கள் சட்டப்படி ஒளிவு மறைவாகவே வைக்கப்பட்டுள்ளது.

எனவே உறுப்புதானம் கொடுப்பவருடைய முழு குண நலன்களைப்பற்றிய விபரங்களைப் பெறுவது கடினமான காரியம்.

இத்தகைய சூழலில் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சியைத் தொடர்கின்றனர்.

1970-ல் “கிளாரியா சில்வியா” என்ற பெண்மணி, இதயம் மற்றும் நுரையீரலை 18 வயது ஆடவரிடமிருந்து தானமாகப் பெற்றார். தானம் கொடுத்த இளைஞன், ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்தவர். அவர் இறந்ததனால் அவரது உறுப்புக்கள் தானமாக கொடுக்கப்பட்டன.

தானம் கொடுத்தவரைப்பற்றி கிளாரியாவுக்கு எந்தவிதமான விபரமும் தெரியாது. மாற்று உறுப்பு ஆபரேஷன் முடிந்தவுடன், சிக்கன் உருண்டைகள், மது, குடமிளகாய் முதலிய உணவுகளை உட்கொள்ள தன் மனம் மிகவும் ஏங்கியதாக கூறியுள்ளார்.

ஆபரேஷனுக்கு முன் அவருக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. திடீரென்று தன்னுடைய உணவுப் பழக்கங்களில் மிகுந்த மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டதை அவர் உணர்ந்துள்ளார். தன்னுடைய உணர்வுகளை “A change of heart“ என்று ஒரு புத்தகமாகவும் எழுதியுள்ளார்.

அறிவியலாளர்கள் அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்த, உயிரணுக்களின் நினைவுகளின் தொடர்ச்சி எட்டு வயது சிறுமிக்கு நிகழந்தது. எட்டு வயது சிறுமி, பத்துவயது சிறுமியிடமிருந்து இதயத்தைப் பெற்றாள். இதய மாற்று ஆபரேஷனுக்குப் பிறகு, தொடர்ச்சியாக ஒரு சிறுமியை ஒருவர் கொலை செய்வதுபோன்று அந்த எட்டு வயது சிறுமிக்கு கனவுகள் தொடர்ந்தன.

மனோதத்துவ நிபுணர், உயிரணுவின் நினைவுகள் பத்து வயது சிறுமியிடமிருந்து தொடர்வதால் கனவுகள் தொடர்வதாக நம்பினார். 

உண்மையில், தானமாக பெற்ற இதயத்தைத் கொடுத்த சிறுமியை, யாரோ கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள். இதயத்தைப் பெற்ற சிறுமி, கனவில் தான் கண்ட கொலைகாரனின் அடையாளங்களை காவல் துறையிடம் கூறியிருக்கிறாள். அந்த அடையாளங்களின் உதவியுடன், காவல்துறையினர் கொலைகாரனை நீதியின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள்...

பாஜக - அதிமுக சதி அம்பலமானது...


தொடர்ச்சியாக களத்தில் போராடும் தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லயோலா மணி மீது போடப்பட்ட பொய் வழக்குகள்...


அவரின் செயல்பாட்டை தடுக்க காவல்துறை முயற்சி...

கலவரத்தை உண்டாக்கியது மக்கள் விரோத துறையான காவல்துறையே...


உடல்சூடு தணிக்கும் நார்த்தம்பழம்...


நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது.

இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும்.

புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும்கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது.

நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர், மலர், கனிகள் பயன்கொண்டவை. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள்,கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அசு(ஸ்)கார்பிக் அமிலம், அலனைன்,நியசின்,வைட்டமின் பி, அசு(ஸ்)பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல், லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம் மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது.

மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும். வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது.

நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம்.

கனிந்த கனிகள் வலுவேற்றி, ஊக்குவி, இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசி தூண்டுவி, தசை இறுக்கி குளிர்ச்சி தரும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம்.

உடல் சூடு தணியும்...

உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.

பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

உடல் வலுப்பெற...

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடு பட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது.

சுகமான பிரசவம்...

கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு கரண்டி தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்

சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம்

நார‌த்த‌ங்கா‌ய் இலைகைளை நர‌ம்பு ‌நீ‌க்‌கி ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி, அதனுட‌ன் வெ‌ள்ளை உளு‌ந்த‌ம் பரு‌ப்பு, கடலை‌ப் பரு‌ப்பு, தே‌ங்கா‌ய் துருவ‌ல் வறு‌த்து சே‌ர்‌த்து ‌மிளகா‌ய், உ‌ப்பு, பு‌ளி, பெரு‌ங்காய‌ம், க‌றிவே‌ப்‌பிலையு‌ம் சே‌ர்‌த்து துவையலாக அரை‌த்து சாத‌த்துட‌ன் ‌பிசை‌ந்து சா‌ப்‌பிடலா‌ம்.

இ‌ப்படி சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌ம் குறையு‌ம். க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் நா சுவை‌யி‌ன்மை, கும‌ட்ட‌ல், வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம். ப‌யி‌‌ன்‌மை குறை‌ந்து ந‌ன்கு ப‌சி‌க்கு‌ம். பொதுவாக உணவுட‌ன் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் சே‌ர்‌த்து‌க் கொ‌ண்டா‌ல் செ‌ரியாமை ‌பிர‌‌ச்‌சினை வரவே வராது.

சா‌ப்‌பி‌ட்டது‌ம் ஏ‌ப்ப‌ம் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தாலு‌ம்,செரிமானம் நெடுநேர‌ம் ஆனாலு‌ம் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகாயை சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடனடி பல‌ன் ‌கி‌ட்டு‌ம். வ‌யி‌ற்‌றி‌ல் வாயு‌ப் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் ‌நிலை‌யி‌ல் ஒரு ஊறுகா‌ய் து‌ண்டை எடு‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று ‌தி‌‌ன்றால் வாயு‌க் கோளாறு ‌விரை‌வி‌ல் ‌நீ‌ங்கு‌ம்.

வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. நா‌ர‌த்த‌ங்காயை வ‌ட்ட வ‌ட்டமா‌ய் நறு‌க்‌கி உ‌ப்பு சே‌ர்‌த்து ஒரு ம‌ண் பானை‌யி‌ல் இ‌ட்டு வாயை து‌ணியா‌ல் மூடி ‌விடவு‌ம். இதனை அ‌வ்வ‌ப்போது வெ‌‌யி‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வரவு‌ம்.

இ‌ப்படி 40 நா‌ட்க‌ள் செ‌ய்து ‌பிறகு அ‌தி‌ல் இரு‌ந்து ‌தினமு‌ம் ஒரு து‌ண்டை எடு‌த்து காலை‌யிலு‌ம், மாலை‌யிலு‌ம் சா‌ப்‌பி‌ட்டு வர வ‌யி‌ற்று‌ப் பு‌ண் குணமாகு‌ம். நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம்.

ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம். நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம். நார‌த்தை பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌த்து வர உட‌ல் வெ‌ப்ப‌த்தை போ‌க்‌கி கு‌ளி‌ர்‌ச்‌சி தரு‌ம். வா‌ந்‌தியையு‌ம், தாக‌த்தையு‌ம் த‌ணி‌க்கு‌ம்...

உவன் அப்போதே கூறி இருந்தான், இந்த அரசாங்கம் மக்கள் மனதில் உளவியல் தாக்குதல் நடத்துகிறது...


அந்த உளவியல்...

போராட்டம் செய்தால், வன்முறை வெடிக்கும், அதனால் யாரும் போராட வர்றாதீர்கள். நீங்கள் எப்போதும் போல் அடிமை வேலையை பாருங்கள் என்று...

பல்லாயிரம் வருடங்களாக நாகரிகத்திலும் , பண்பாட்டிலும், விஞ்ஞானத்திலும் தலை சிறந்து விளங்கிய... பல்வேறு நாடுகளை ஆட்சி செய்த... தமிழ் இனம்....


நேற்று தோன்றிய சிங்களத்திடம்.... தோற்று அடி வாங்கி கொண்டு  அடிமையாக்... உலகம் முன்னிலையில் நாம் இருப்பது ஏன்..... 10 மைல் தொலைவில்  நாம் இருந்தும்.... நம்மால் சிங்களவனின் அட்டுழியங்களை அடக்க முடியாமல் இருப்பது ஏன்......

தமிழ் மண்ணில் தமிழன் இங்கு ஆட்சி செய்ய முடியாதது ஏன்.....
சொந்த மண்ணில் எதிர் கட்சியாக கூட வரமுடியாத மோசமான நிலை ஏன்..

இலங்கையில் வலுகட்டாயமாக அடிமையாக வைக்க முயல்கிறார்கள் ராணுவத்தின் மூலம்....

இங்கு தமிழ்நாட்டில் நாமே வலிந்து வலுகட்டாயமாக அடிமையாக இருப்பது ஏன்..

இனியும் நீங்கள் தமிழ் இனமாக ஒன்று பட்டு உணர்வு கொண்டு எழுச்சி பெற வில்லை என்றால்......

விரைவில் தமிழ் இனத்தின் இறுதி வரலாறு இலங்கையிலும்... பிறகு (தமிழகத்திலும்)  இங்கும் எழுதப்படும்......

அது வரை நீங்கள் பொறுமையாக தான் உண்டு தன் வேலை உண்டு நமக்கேன் என்று  இருக்க போகிறீர்களா....

போராட்டமே வாழ்கையாகவும் , வாழ்கையே போராட்டமாகவும் வாழும் ஈழ தமிழர்களுக்கு..... நீங்கள்  தர விரும்பும் பரிசு என்ன மரணமா , இல்லை விடுதலையா...

உங்களிடம் பணம் இல்லையா உதவ ..பரவா இல்லை

உங்களின் உயிரை கொடுக்க விருப்பம் இல்லையா , பரவாயில்லை ...

ஆனால் அனைவரும் உணர்வை.. தமிழன் என்று உணர்வை ... கொடுக்கலாமே... உங்கள் உணர்வை.... நீங்கள் அழுத்தமாக பதிவு செய்தால்....
உலகம்  திரும்பி பார்க்கும்... அவர்களுக்கு விடுதலை கிடைக்கும்....

உயிர் இருந்தால்.... மூளை செத்து போக வில்லை என்றால்..... உணர்வு கண்டிப்பாக இருக்கும்..... அதை வெளிபடுத்துவதில் உங்களுக்கு தயக்கம் ஏன்....

அதனால் உங்களுக்கு மரண தண்டனையா.....?

உங்கள்  பணம் விரயம் ஆகிறதா....?

உங்கள் தொழில் நஷ்டம் அடைகிறதா..?

இல்லை தமிழன் என்ற உணர்வு மட்டும் இல்லையா........

உணர்வை மட்டும் கொடுங்கள் தமிழினத்தின் உரிமையை பெற.

உங்களால் முடியும் உதவிகளையே கேட்கிறோம்....

அவற்றை தாராளமாக் கொடுங்கள்........

வருங்காலங்களில்  தேர்தலில் தமிழ் இன உணர்வு ஈழ ஆதரவு கூட்டனிக்கு வாக்களியுங்கள்.....

தமிழ் இன உணர்வு ஆதரவு போராட்டங்களில் பங்குகொள்ள பாருங்கள்....

உங்கள் நெருங்கிய நண்பர்கள் , உறவினர்களிடம்..  இன உணர்வை மேலோங்க செய்ய.... விழிப்புணர்வு உண்டாக்குங்கள்...... அவர்களிடம்  அவர்களின் நெருங்கிய நண்பர்களிடம், உறவினர்களிடம்... கொண்டு செல்ல சொல்லுங்கள்......

இது மக்கள் போராட்டமாக மாற வேண்டும்....

உங்களுக்கு நேரம் இருக்கும் போது,.

போராட்டம் நடை பெற்றால் அவசியம் பங்கு பெறுங்கள்...

மற்றவர்களுடன்  உரையாடும் பொது... .. தமிழ் இனத்தின்  விடுதலை பற்றி கொஞ்சம் உரையாடுங்கள்.....

உங்களிடம் பழகும் பிற மாநில , வெளிநாடு மக்களிடம் ஈழம் பற்றிய நிலையை எடுத்து கூறுங்கள்.... ஆதரவு கேளுங்கள்....

தமிழ் இனத்திற்கு தமிழனே உதவ முன்வரவில்லை என்றால் பிறகு மற்றவர்கள் எப்படி முன்வருவார்கள்.....

நீங்களும் உங்கள் சிந்தனைக்கு ஏற்ப ,போராட்டம் செய்யலாம்...., போராட்ட வடிவத்தை மாற்றலாம்.... இனத்தின் எழுச்சிக்கு.....

வித்தியாசமான முறையிலும் உங்களுக்கு  தோன்றும் வழியில் போராட்டம் செய்யலாம்.... மக்களிடம்  உலகத்திடம் .. ஈழத்தின் தேவையை உணர்த்த வேண்டும், சென்றடைய வேண்டும்...

TERRORISM - என்ற வார்த்தைக்கு இன்று முழுவதுமாக அர்த்தத்தை புரிந்து கொண்டேன்...


தீவிரவாத அதிகார வர்க்கத்திற்கு.. அடிமையாக செயல்படும் பயங்கரவாத அரசாங்கம்...

காப்ரேட்களின் கைகூலிகள் தான்.. காவல்துறையும்.. அரசாங்கமும்..


தீவிரவாதிகளை  துப்பாக்கியால் சுட்டு பிடிப்பதில்லை..

ரளவுடிகளை  சுட்டு பிடிப்பதில்லை..

விலங்குகளை  சுடுவதில்லை..

கொள்ளை, கடத்தல் கும்பலை சுடுவதில்லை..

கற்பழிப்பவனை  சுட்டு பிடிப்பதில்லை..

கோடி கோடியாய் கொள்ளையடித்து தப்பியவனை சுட்டு பிடிப்பதில்லை..

ஏன் தேடப்படும் குற்றவாளி S.v சேகரை சுட்டு பிடிப்பதில்லை..

தாம் வாழும் இடத்திற்காக போராடிய மக்களை  சுட்டு கொல்லுராங்க..

என்ன தேசம் டா...

ஒருபோதும் நீங்கள் சிந்திக்க கூடாது என்பதில் அதிகார வர்க்கம் தெளிவாக இருக்கின்றன...


நீங்களும் அதற்கேற்றாற் போல்
என் வாழ்க்கை,
என் குடும்பம்,
என் காதல்,
என் பணம்,
என் வேலை
என சிறந்த அடிமைகளாக இருக்கிறீர்கள்...

பூமியின் (அ)பூர்வ கதை - 4...


நீரின்றி அமையாது உலகு...

கிரகங்களின் உயிரின சாத்தியங்கள் அளக்க படுவது அங்கே இருக்கும் நீர் சாத்தியத்தை வைத்து தான்.

நீர் இருக்கும் எந்த கிரகத்திலும் உயிர்கள் இருக்க சாத்தியம் உண்டு.

நமது கால இயந்திரம் இப்போது 380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிற்கிறது.

பூமி பந்து 460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருந்தாலும் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு தண்ணீர் என்பதை பார்க்காமலே இருந்தது.

அன்றைய கட்டத்தை பொறுத்த வரை பூமி ஒரு மெகா சைஸ் சூடான பாறை. தொடர்ந்து வல்க்கேனோ எரிமலை குழம்பை கக்கி கொண்டிருக்கும் ஒரு கிரகம்.

தொடர்ச்சியாக எரிமலை கக்களில் பூமி க்கு உள்ளே இருந்து சில வாயுக்கள் வெளியேறி கொண்டே இருந்தன... அந்த வாயுக்கள் நீராவிகாண மூல கூறுகளை கொண்டிருந்தன. அவை தொடர்ச்சியாக வெளியேறி பூமியை சுற்றி மேக படலங்களை உண்டு பண்ணி கொண்டே இருந்தன.

மேகங்கள் உலவும் இடத்தில் வளிமண்டலம் கொஞ்சம் குளிர தொடங்கியதும் தான் பூமியின் முதல் மழை பெய்தது.

ஆனால் அந்த ஆரம்ப கால மழைகள் தொடர்ந்து ஆயிர கணக்கான ஆண்டுகளுக்கு பெய்து கொண்டே இருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பெய்யும் அளவு அவ்வளவு மேகங்களா சேர்ந்து இருந்தது என்றால் இல்லை.

பூமியின் மேல் பகுதி தான் குளிர்ந்து இருந்ததே தவிர கீழ் பகுதி இன்னும் தகித்து கொண்டு தான் இருந்தது. விளைவு... பெய்யும் மழை தரையை தொடாமலே வானத்திற்கு மீண்டும் நீராவியாக அனுப்ப பட்டது. அவைகள் மீண்டும் மழையாக பெய்ய தொடங்கின. பிறகு மீண்டும் ஆவியாகின .

இந்த சுழற்சி மீண்டும் மீண்டும் நடந்ததால் ஆயிர கணக்கான ஆண்டுகளுக்கு அந்த 'தொடாத 'மழை  தொடர் மழையாக திரும்ப திரும்ப பெய்து கொண்டே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பூமியின் தளத்தை குளிர்விப்பதில் வெற்றி கண்டு முதல் முறையாக பூமியை தொட்டது

தொடர்ந்து பெய்த மழை நீர் பள்ளமான இடம் நோக்கி ஓடின... தொடர்ந்து ஓட தமக்கென பாதைகளை வகுத்து கொண்டன (ஆறுகள்) பிறகு பூமியின் பள்ளமான பகுதியில் நீர் ஒன்று சேர்ந்து தேங்க தொடங்கின அவைகள் தான் இன்று நாம் பார்க்கும் கடல்கள். இது நடந்த அந்த கால கட்டம் 380 கோடி ஆண்டுகளுக்கு முன். தொடர்ச்சியாக நிலத்தில் இருந்து ஆறுகள் மூலமாக அடித்து வர பட்ட உப்புகளால் கடலில் படி படியாக உப்பு சேர்ந்தது.

380 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தனக்கென ஒரு துணை கோளையும் தனக்கென ஒரு நிரந்தர கடல் பரப்பையும் கொண்டிருந்தது. ஆனால் அந்த கடலின் பரப்பு.. கடலின் நீர் அளவு... இன்றைய கடலின் நீரை போல் பாதி அளவே இருந்தது. அப்போ  இவ்வளவு பெரிய கடல் உண்டானது எப்படி ? அவ்வளவு தண்ணீர் வந்தது எங்கிருந்து?

பொதுவாக கடல் நீரில் உள்ள நீரும் பூமியின் மற்ற பகுதிகளில் கிடைக்கும் நீரும் ஒரே போன்றவை அல்ல. (நான் அதன் உப்பு தன்மையை பற்றி சொல்ல வில்லை) கடல் நீரின் மூலக்கூறுகளை ஆராய்ந்த நவீன கால விஞ்ஞாணிகள் அதில் ஒரு விசித்திரத்தை கண்டார்கள்
அதாவது கடல் நீரில் உள்ள ஹைட்ரஜனில் குறிப்பிட்டளவு மூலக்கூறுகள் சாதாரண ஹைட்ரஜனாக இல்லாமல் ஹைட்ரஜனில் ஐசோடோப்புகளாக இருக்கின்றன. அதாவது டியுடேரியமாக. கடல் நீரில் 6420 ஹைட்ரஜன் அனுவிற்கு ஓரு டியூடேரியம் காண படுகிறது.

(டியுடேரியம் என்றால் என்ன....?
ஹைட்ரஜனில் ஐசோடோபான இதன் அணு அமைப்பில் நடுவே ஒரு புரோட்டானும் நியுட்ரானும் இருக்கும் பொதுவாக சாதாரண ஹைட்ரஜன் அணுவில் நியூட்ரான் இருக்காது .).

அந்த தனிப்பட்ட நீர் அணுக்கள் பூமிக்கு சொந்தமானவை அல்ல அவை தொலை தூரத்தில் இருந்து வால் நட்சத்திரங்கள் மூலமாக பூமிக்கு சுமந்து வர பட்ட தன்னீர்கள். நீண்ட நாளாக ஆய்வாளர்கள் வால் நட்சத்திரத்தின் மூலம் கடல் நீர் வந்திருக்குமா என சந்தேகத்தோடு ஆராயந்து வந்தார்கள். அப்போது தான் hartley 2  என்ற வால் நட்சத்திரம் அவர்களுக்கு கிடைத்தது.

Hartley 2 என்பது Kupir belt இல் இருந்து வந்திருந்த ஒரு வால் நட்சத்திரம். (Kupir பெல்ட் என்பது நெப்டியூனை எல்லாம் தாண்டி இருக்கிற ஒரு ஏரியா)
அந்த வால் நட்சத்திரத்தில் உறைந்திருந்த உறை பணி நீரை  ஆராய்ந்த விஞ்ஞாணிகள்  அதன் மூல கூறு அமைப்பு வேதியியல் கட்டமைப்பு
எல்லாம் நம் கடலில் உள்ள நீரினை போலவே ஒத்ததாக இருப்பதை கண்டு அதிசயித்தார்கள்.

ஆதி கடலில் பாதிக்கு மேற்பட்ட நீர் வால் நட்சத்திரங்கள் மூலம் வந்தது என்ற கருத்த்துக்கு வலு சேர்க்கும் நேரடி ஆதாரமாக இது அமைந்தது.

ஆரம்ப கால பூமியில் இப்படி பட்ட வால் நட்சத்திர தண்ணி லாரி காரர்கள்  நெறய பேர் வந்து மோதி மோதி... கடல் மட்டத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.

இது வரை கண்ணி பெண்ணாக இருந்த பூமி எனும் பூவையர் கடல் எனும் கர்ப்ப பை கிடைக்க பெற்ற பின் தாய் ஆவதற்கான தகுதியோடு தயாராக இருந்தாள்...

பூமியின் முதல் உயிர்.....
அடுத்த அத்தியாயத்தில் பிறக்கும்.....

- பூமி இன்னும் சுழலும்....