கலைஞர் ஆட்சியில் இலவச டிவி , ஜெயா ஆட்சியில் இலவச கிரைண்டர், மிக்ஸி. இன்று எடப்பாடி ஆட்சியில் இலவச மரணம். அடிப்படை உரிமைகளுக்கும் தேவைகளுக்கும் கை ஏந்தும் நிலையில் தமிழர்கள்.
சிங்களவன் அடித்து விரட்டியது போல், நாமும் விரட்ட படுவோமா ? நம் இனத்தின் பண முதலைகள் வெறி தீரும் வரை அடித்து ஒடுக்க படுவோமா? அதற்கு நடக்கும் ஒத்திகைதானா? நாங்கள் பேச்சு வார்த்தை கேட்டோம் ஆயுதம் ஏந்தி வந்தீர்கள், நாங்களும் ஆயுதம் ஏந்தி வந்தால் பேச்சு வார்த்தை என்று வருவீரரோ?
ஸ்டெர்லைட்...
1996 முதல் முடியா போராட்டம். திசை திருப்பி மக்கள் மறக்கடிக்க பட்ட ஓர் போராட்டம். மீண்டும் உயிர்த்துஎழ 100 நாட்கள் தன்னலம் இல்லாமல் மக்கள் ஒன்று கூடி போராடினர். ஏன் இன்று குறி வைத்து 10 உயிர் காவு வாங்க வேண்டும்? அதுவும் ஓர் கார்ப்பரேட் நிறுவனத்திற்காக? இவர்கள் உயிர் போனால் போராட்டம் முற்று பெற்றிருமா? இல்லை பத்து லட்சம் என்று உயிர்க்கு விலை பேசினால் போதுமா?
இன்று நாம் நினைவில் நிறுத்தி பழி தீர்க்க வேண்டியோர் யார் யார் தெரியுமா?
கச்சிதமாய் 10 அப்பாவி உயிர்க்கு பேரம் பேசியோர்,
அணில் அகர்வால் ( வேதாந்தா குழுமம்)
நிர்மலா சீதாராமன்
குருமூர்த்தி ( அன்று சோ , இன்று இந்த பார்ப்பான்)
கிரிஜா வைத்தியநாதன்
எடப்பாடி பழனிசாமி
ராஜேந்திரன் (DGP)
வெங்கடேஷ் (IAS)
மஹேந்திரன் (SP)
இதில் என்ன ஆதாயம் தேட போகிறார்கள்? குடிக்க தண்ணீரும் சுவாசிக்க காற்றும் இன்றி ? ஸ்டெர்லைட் இணையத்தளத்தில் அவர்கள் பெருமைகள் பேசி இருப்பதை நீங்களே பாருங்கள், https://www.sterlitecopper.com/ .
இன்று மட்டும் அல்ல இத்தனை போராட்டங்கள், உயிர் சேதங்கள் இந்த மண்ணில் அனைவரின் உயிர் காக்கத்தானே ?
வா தமிழா, வீதியில் ஒன்று சேரு போராடுவோம் என்று பேசும் தலைவர்கள் ஏனையோர் சாமானியன் பின் ஒளிந்து கொள்ளும் தந்திரம், என் இதற்கு இன்னும் பலியாகி போகிறோம் நாம்? போராட்டங்கள் கடந்து அடுத்த படி எப்படி செல்வது? இல்லை அடுத்து என்னதான் யோசிப்பது?
இன்னும் எத்தனை போராட்டம்! தமிழ்நாடு முழுதும். மறந்துவிட்டோமா ??
நியூட்ரினோ
காவேரி
சாகர்மாலா
கதிராமங்கலம் ONGC
விவசாயிகள் போராட்டம்
கொடைக்கானல் பாதரசநஞ்சு
கூடங்குளம்
இன்னும் போராட்டங்கள் தண்ணீர் கேட்டும், அடிப்படை உரிமை கேட்டும் நாள் தோறும், அவை நாளிதழின் மூலையில் ஒரு துணுக்கு செய்தியாகவோ, இல்ல வைரல் மீம் ஆகவோ கடந்து போகிறது. சாகர் மாலா என்ற பெருந்திட்டம் சிறு சிறு படியாக முன்னேறுவதை என் நாம் உணரவில்லை?
ஏன் எந்த புது திட்டமும் தமிழகத்திலே சோதிக்க படுகிறது? உயிர் கொள்ளும்தொழிற்சாலைகள் ஏன் இங்கு அதிக அளவில்? எளிதில் கிடைக்கும் அனுமதி? அத்தனை மாநிலம் மறுத்த ஆலைகள்,அணுஉலை எல்லாம் தமிழகத்தில் மட்டும்.
இன்னும் கூறு போட்டு விற்க எங்களிடம் எங்கள் உடல்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன.
தண்ணீர் கேட்டு காவிரி போராட்டம் ஆட்சிகள் பல மாறி இன்றும் தீர்வில்லாமல். மோயாறு என்ற தீர்வை கண்டும் காணமல் ஏன் ? யாரை கேட்பது?
இன்னும் நம்மை அழிவில் தள்ள அடுத்து என்ன? இல்லை மீண்டும் CSK, BigBoss 2, காலா என்று திசை மாறி கூத்தாடிகளுக்கு சொம்பு தூக்கி நிற்க போகிறோமா? தண்ணீர்,, காற்று,நிலம் இப்படி அடிப்படை உரிமைகள் அனைத்தும் இழக்கிறோம், சொந்த நாட்டில் அகதியாய்...
நம் எதிர்காலம் நாம் தான் தீர்மானிக்க வேண்டும். விழித்துக்கொள்ள இன்னும் காத்திருக்க வேண்டுமா?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.