அதன்படி முதலில் கும்பலாக கூடுவது சட்ட விரோதம் என அறிவித்து கலைந்து போகும்படி அறிவுறுத்த வேண்டும்.
கலைந்து போக மறுத்தால் கலெக்டர் பலாத்காரத்தை பயன்படுத்த கட்டளையை காவல்துறைக்கு பிறப்பிக்க வேண்டும்.
பலாத்காரத்தின் முதல்படி கண்ணீர் புகை
இரண்டாவது தடியடி
மூன்றாவது தண்ணீரை பீய்ச்சி அடித்தல்
இந்த மூன்றும் பயன்படவில்லை என்றால் தான் இறுதியாக துப்பாக்கி சூடு நடத்த வேண்டும்.
துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பாக, உயிரிழப்புகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்க வேண்டும். கும்பலின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கொம்பொலி பயன்படுத்த வேண்டும். கலவரக் கொடி கட்டாயம் ஏற்றப்பட வேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பான் வாயிலாக எச்சரிக்கை செய்ய வேண்டும்.
சுட முடிவு எடுத்து விட்டால்..
இடுப்புக்கு கீழேதான் குறி வைக்க வேண்டும்..
குறி வைப்பது கும்பலை பயமுறுத்துவதற்காக இருக்க வேண்டும்..
பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் காவல்துறைக்கு இருக்கவே கூடாது.
முதலில் வானத்தை நோக்கி தான் சுட வேண்டும்
ஆனால் நேற்று நடந்த கலவரத்தில் எதையும் பின்பற்றவில்லை காவல் துறையினர்.
மக்களின் வரி பணத்தில் ஊதியத்தை பெற்றுகொண்டு மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் மக்களின் உயிரை எடுக்கும் அளவிற்க்கு இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
இவர்களின் பின்னனியில் யார்?
மாநில அரசா?
மத்திய அரசா?
மாவட்ட கலெக்டரா?
அல்லது தனியார் நிறுவனமா?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.