24/05/2018

பூமியின் (அ)பூர்வ கதை - 4...


நீரின்றி அமையாது உலகு...

கிரகங்களின் உயிரின சாத்தியங்கள் அளக்க படுவது அங்கே இருக்கும் நீர் சாத்தியத்தை வைத்து தான்.

நீர் இருக்கும் எந்த கிரகத்திலும் உயிர்கள் இருக்க சாத்தியம் உண்டு.

நமது கால இயந்திரம் இப்போது 380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிற்கிறது.

பூமி பந்து 460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருந்தாலும் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு தண்ணீர் என்பதை பார்க்காமலே இருந்தது.

அன்றைய கட்டத்தை பொறுத்த வரை பூமி ஒரு மெகா சைஸ் சூடான பாறை. தொடர்ந்து வல்க்கேனோ எரிமலை குழம்பை கக்கி கொண்டிருக்கும் ஒரு கிரகம்.

தொடர்ச்சியாக எரிமலை கக்களில் பூமி க்கு உள்ளே இருந்து சில வாயுக்கள் வெளியேறி கொண்டே இருந்தன... அந்த வாயுக்கள் நீராவிகாண மூல கூறுகளை கொண்டிருந்தன. அவை தொடர்ச்சியாக வெளியேறி பூமியை சுற்றி மேக படலங்களை உண்டு பண்ணி கொண்டே இருந்தன.

மேகங்கள் உலவும் இடத்தில் வளிமண்டலம் கொஞ்சம் குளிர தொடங்கியதும் தான் பூமியின் முதல் மழை பெய்தது.

ஆனால் அந்த ஆரம்ப கால மழைகள் தொடர்ந்து ஆயிர கணக்கான ஆண்டுகளுக்கு பெய்து கொண்டே இருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பெய்யும் அளவு அவ்வளவு மேகங்களா சேர்ந்து இருந்தது என்றால் இல்லை.

பூமியின் மேல் பகுதி தான் குளிர்ந்து இருந்ததே தவிர கீழ் பகுதி இன்னும் தகித்து கொண்டு தான் இருந்தது. விளைவு... பெய்யும் மழை தரையை தொடாமலே வானத்திற்கு மீண்டும் நீராவியாக அனுப்ப பட்டது. அவைகள் மீண்டும் மழையாக பெய்ய தொடங்கின. பிறகு மீண்டும் ஆவியாகின .

இந்த சுழற்சி மீண்டும் மீண்டும் நடந்ததால் ஆயிர கணக்கான ஆண்டுகளுக்கு அந்த 'தொடாத 'மழை  தொடர் மழையாக திரும்ப திரும்ப பெய்து கொண்டே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பூமியின் தளத்தை குளிர்விப்பதில் வெற்றி கண்டு முதல் முறையாக பூமியை தொட்டது

தொடர்ந்து பெய்த மழை நீர் பள்ளமான இடம் நோக்கி ஓடின... தொடர்ந்து ஓட தமக்கென பாதைகளை வகுத்து கொண்டன (ஆறுகள்) பிறகு பூமியின் பள்ளமான பகுதியில் நீர் ஒன்று சேர்ந்து தேங்க தொடங்கின அவைகள் தான் இன்று நாம் பார்க்கும் கடல்கள். இது நடந்த அந்த கால கட்டம் 380 கோடி ஆண்டுகளுக்கு முன். தொடர்ச்சியாக நிலத்தில் இருந்து ஆறுகள் மூலமாக அடித்து வர பட்ட உப்புகளால் கடலில் படி படியாக உப்பு சேர்ந்தது.

380 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தனக்கென ஒரு துணை கோளையும் தனக்கென ஒரு நிரந்தர கடல் பரப்பையும் கொண்டிருந்தது. ஆனால் அந்த கடலின் பரப்பு.. கடலின் நீர் அளவு... இன்றைய கடலின் நீரை போல் பாதி அளவே இருந்தது. அப்போ  இவ்வளவு பெரிய கடல் உண்டானது எப்படி ? அவ்வளவு தண்ணீர் வந்தது எங்கிருந்து?

பொதுவாக கடல் நீரில் உள்ள நீரும் பூமியின் மற்ற பகுதிகளில் கிடைக்கும் நீரும் ஒரே போன்றவை அல்ல. (நான் அதன் உப்பு தன்மையை பற்றி சொல்ல வில்லை) கடல் நீரின் மூலக்கூறுகளை ஆராய்ந்த நவீன கால விஞ்ஞாணிகள் அதில் ஒரு விசித்திரத்தை கண்டார்கள்
அதாவது கடல் நீரில் உள்ள ஹைட்ரஜனில் குறிப்பிட்டளவு மூலக்கூறுகள் சாதாரண ஹைட்ரஜனாக இல்லாமல் ஹைட்ரஜனில் ஐசோடோப்புகளாக இருக்கின்றன. அதாவது டியுடேரியமாக. கடல் நீரில் 6420 ஹைட்ரஜன் அனுவிற்கு ஓரு டியூடேரியம் காண படுகிறது.

(டியுடேரியம் என்றால் என்ன....?
ஹைட்ரஜனில் ஐசோடோபான இதன் அணு அமைப்பில் நடுவே ஒரு புரோட்டானும் நியுட்ரானும் இருக்கும் பொதுவாக சாதாரண ஹைட்ரஜன் அணுவில் நியூட்ரான் இருக்காது .).

அந்த தனிப்பட்ட நீர் அணுக்கள் பூமிக்கு சொந்தமானவை அல்ல அவை தொலை தூரத்தில் இருந்து வால் நட்சத்திரங்கள் மூலமாக பூமிக்கு சுமந்து வர பட்ட தன்னீர்கள். நீண்ட நாளாக ஆய்வாளர்கள் வால் நட்சத்திரத்தின் மூலம் கடல் நீர் வந்திருக்குமா என சந்தேகத்தோடு ஆராயந்து வந்தார்கள். அப்போது தான் hartley 2  என்ற வால் நட்சத்திரம் அவர்களுக்கு கிடைத்தது.

Hartley 2 என்பது Kupir belt இல் இருந்து வந்திருந்த ஒரு வால் நட்சத்திரம். (Kupir பெல்ட் என்பது நெப்டியூனை எல்லாம் தாண்டி இருக்கிற ஒரு ஏரியா)
அந்த வால் நட்சத்திரத்தில் உறைந்திருந்த உறை பணி நீரை  ஆராய்ந்த விஞ்ஞாணிகள்  அதன் மூல கூறு அமைப்பு வேதியியல் கட்டமைப்பு
எல்லாம் நம் கடலில் உள்ள நீரினை போலவே ஒத்ததாக இருப்பதை கண்டு அதிசயித்தார்கள்.

ஆதி கடலில் பாதிக்கு மேற்பட்ட நீர் வால் நட்சத்திரங்கள் மூலம் வந்தது என்ற கருத்த்துக்கு வலு சேர்க்கும் நேரடி ஆதாரமாக இது அமைந்தது.

ஆரம்ப கால பூமியில் இப்படி பட்ட வால் நட்சத்திர தண்ணி லாரி காரர்கள்  நெறய பேர் வந்து மோதி மோதி... கடல் மட்டத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.

இது வரை கண்ணி பெண்ணாக இருந்த பூமி எனும் பூவையர் கடல் எனும் கர்ப்ப பை கிடைக்க பெற்ற பின் தாய் ஆவதற்கான தகுதியோடு தயாராக இருந்தாள்...

பூமியின் முதல் உயிர்.....
அடுத்த அத்தியாயத்தில் பிறக்கும்.....

- பூமி இன்னும் சுழலும்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.