24/05/2018

இனப் படுகொலைகள் ஒரு சிறிய தொகுப்பு...


முதலாம் உலகப்போர் சமயத்தில் ஆர்மீனியாவில் துருக்கியர்களால் லட்சக்கணக்கில் ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டனர்.

ஈராக் மற்றும் துருக்கி பிராந்தியத்தின் ஆயிரக்கணக்கான குர்து இனமக்கள்  கொல்லப்பட்டனர்.

காப்பாற்ற ஆள் இல்லை.

இரண்டாம் உலகப் போரின் போது, பல லட்சம் யூதர்களை ஹிட்லர் கொன்று ஒழித்தார்.

[முதல் உலகப்போருக்கு வித்திட்ட யூதர்களை ஒழித்தால் தான் உலகம் நிம்மதியாக வாழும் என்பது அவரது சித்தாந்தம்].

அப்போது சோவியத் வீழ்ந்தால் மகிழ்ச்சி என்ற மனோ நிலையிலிருந்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதை தடுக்க முன்வரவில்லை.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, சோவியத் மற்றும் அதன் சில கூட்டணி நாடுகள் கம்யூனிசம் என்ற பெயரில் ஏராளமான மனித உரிமை மீறல்களை நடத்தின.

சீனாவில் கம்யூனிசம் நிறுவப்பட்ட பிறகு மாவோ காலத்திலும், அதற்குப் பிந்தைய காலத்திலும் நடந்த மோசமான மனித உரிமை மீறல்களையும், பெரும் பாய்ச்சல் திட்டம் என்ற பெயரில் நடந்த பட்டினிப் படுகொலைகளையும் தடுக்க ஆள் இல்லை.

ஈரானில் 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய பகாயிசம் என்ற திடீர் மதம்  சார்ந்த  மக்கள் சுமார் 25 ஆயிரம் பேரை அந்நாட்டு ஹியா அரசாங்கம் கொன்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது..

அது மட்டுமின்றி இந்த வரலாறுகளுக்கு முன்பு மங்கோலியர்கள் கொன்றவர்கள் எண்ணிக்கைளை கணக்கு எடுக்கப்படவே இல்லை..

இந்த மங்கோலியர்கள் பாக்தாதில் நுழைந்து அங்குள்ள 1 இலட்சம் மக்களை கொன்றோழித்து பிணக்குவியலில் தமது சந்தோசத்தை நிகழ்த்தி கொண்டு இருந்த நேரம் பெரும் மழை பொழிந்தது.

பின்னர் மழை தண்ணீரில் 1 இலட்சம் பாக்தாத் மக்களின் பிணங்கள் ஊறி அழுகிபோய் காலரா போன்ற தோற்று நோய்கள் பரவ ஆரம்பித்தவுடன் தான் இந்த மங்கோலியர்கள் அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினார்கள்.

ஆனால் இதை தடுப்பது யார்?

ருவாண்டா, சோமாலியா, எத்தியோபியா மற்றும் சூடான் போன்ற ஆப்ரிக்க ஏழை நாடுகளில் நடக்கும் இன மோதல்களால் மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டார்கள்.

இப்போது சில இடங்களில் கொல்லப்படுகிறார்கள்.

ஆனால் அதை யாரும் தடுக்கவில்லை. வியட்நாமில் அமெரிக்காவும், பிரான்சும் நடத்திய ஆட்டங்கள கொஞ்ச நஞ்சமில்லை

ஜப்பானியர்கள்  நாங்கள் சரணடைகிறோம் என்று அறிவித்த பிறகும் கூட தங்களது கர்வம் அப்பாவி மக்களின் மீது நாங்கள் காட்டி தான் ஆவோம் என்று ஹிரோஷிமாவை அழித்த கேடுகெட்ட அரசு தான் அமேரிக்கா.

இதையெல்லாம் மறுக்க முடியாது மறக்கவும் முடியாது...

இன்றைய காலகட்டத்தில் துற்குமான்சி தான் கஜகஸ்தான் போன்ற பகுதியில் சிறுபான்மையினராக இருக்கும் மக்களை இன்றைய ரஷ்யா சப்தமே இல்லாமல் அழித்து கொண்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

பர்மாவாக இருக்கட்டும் இலங்கையாக இருக்கட்டும் அத்தனைக்கும் காரணம் என்னவேண்டுமானால் இருக்கட்டும்..

ஆனால் வரலாற்றில் இவ்வளவு இனப் படுகொலைகள் நடந்தேறியுள்ளது என்பதை நாம் தெரிந்து
கொள்ள வேண்டும்..

இவ்வளவும் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் நடந்து இருக்க வேண்டும்..

முக்கியமாக நாடு பிடித்தல், அல்லது செல்வம், அல்லது செழிப்பான வாழ்க்கை, அல்லது பெருமை..

ஆனால் நீங்கள் ஆரமத்தில் படித்த ஹிட்லர் தொடக்கம் மங்கோலிய மன்னன் வரை எவரும் இன்று உயிருடன் இல்லை.

இதற்காகவா இவ்வளவு கொலைகள் நடந்தேறியது அது தொடரக்கூட இல்லை.

கத்தை கத்தையாக சேர்த்து போரில் கொன்று கொள்ளையடித்த பணம் கூட இவர்களுக்கு உதவவில்லை...

மங்கோலிய மன்னனின் பயம் கலந்த பெருமை அன்றையகாலத்தில் இருந்தாலும், இன்று இவருடைய கல்லறையை தேடிக்கொண்டு அலைகிறது சில குழு..

காரணம் இவரின் எலும்பு கூடுகளை அடித்து நொறுக்கியாவது தங்களது வரலாற்று ஆத்திரத்தை தீர்க்க வேண்டும் என்ற நோக்கில்..

இவ்வளவு  தான் வாழ்க்கை..

இதற்கு தான் இவ்வளவு களேபரங்கள்..

இப்பதிவு 5 வருட ஆட்சிக்கு அல்லோலப்படும் சில அரசியல் வாதிகள் சிந்திக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.