24/05/2018

பல்லாயிரம் வருடங்களாக நாகரிகத்திலும் , பண்பாட்டிலும், விஞ்ஞானத்திலும் தலை சிறந்து விளங்கிய... பல்வேறு நாடுகளை ஆட்சி செய்த... தமிழ் இனம்....


நேற்று தோன்றிய சிங்களத்திடம்.... தோற்று அடி வாங்கி கொண்டு  அடிமையாக்... உலகம் முன்னிலையில் நாம் இருப்பது ஏன்..... 10 மைல் தொலைவில்  நாம் இருந்தும்.... நம்மால் சிங்களவனின் அட்டுழியங்களை அடக்க முடியாமல் இருப்பது ஏன்......

தமிழ் மண்ணில் தமிழன் இங்கு ஆட்சி செய்ய முடியாதது ஏன்.....
சொந்த மண்ணில் எதிர் கட்சியாக கூட வரமுடியாத மோசமான நிலை ஏன்..

இலங்கையில் வலுகட்டாயமாக அடிமையாக வைக்க முயல்கிறார்கள் ராணுவத்தின் மூலம்....

இங்கு தமிழ்நாட்டில் நாமே வலிந்து வலுகட்டாயமாக அடிமையாக இருப்பது ஏன்..

இனியும் நீங்கள் தமிழ் இனமாக ஒன்று பட்டு உணர்வு கொண்டு எழுச்சி பெற வில்லை என்றால்......

விரைவில் தமிழ் இனத்தின் இறுதி வரலாறு இலங்கையிலும்... பிறகு (தமிழகத்திலும்)  இங்கும் எழுதப்படும்......

அது வரை நீங்கள் பொறுமையாக தான் உண்டு தன் வேலை உண்டு நமக்கேன் என்று  இருக்க போகிறீர்களா....

போராட்டமே வாழ்கையாகவும் , வாழ்கையே போராட்டமாகவும் வாழும் ஈழ தமிழர்களுக்கு..... நீங்கள்  தர விரும்பும் பரிசு என்ன மரணமா , இல்லை விடுதலையா...

உங்களிடம் பணம் இல்லையா உதவ ..பரவா இல்லை

உங்களின் உயிரை கொடுக்க விருப்பம் இல்லையா , பரவாயில்லை ...

ஆனால் அனைவரும் உணர்வை.. தமிழன் என்று உணர்வை ... கொடுக்கலாமே... உங்கள் உணர்வை.... நீங்கள் அழுத்தமாக பதிவு செய்தால்....
உலகம்  திரும்பி பார்க்கும்... அவர்களுக்கு விடுதலை கிடைக்கும்....

உயிர் இருந்தால்.... மூளை செத்து போக வில்லை என்றால்..... உணர்வு கண்டிப்பாக இருக்கும்..... அதை வெளிபடுத்துவதில் உங்களுக்கு தயக்கம் ஏன்....

அதனால் உங்களுக்கு மரண தண்டனையா.....?

உங்கள்  பணம் விரயம் ஆகிறதா....?

உங்கள் தொழில் நஷ்டம் அடைகிறதா..?

இல்லை தமிழன் என்ற உணர்வு மட்டும் இல்லையா........

உணர்வை மட்டும் கொடுங்கள் தமிழினத்தின் உரிமையை பெற.

உங்களால் முடியும் உதவிகளையே கேட்கிறோம்....

அவற்றை தாராளமாக் கொடுங்கள்........

வருங்காலங்களில்  தேர்தலில் தமிழ் இன உணர்வு ஈழ ஆதரவு கூட்டனிக்கு வாக்களியுங்கள்.....

தமிழ் இன உணர்வு ஆதரவு போராட்டங்களில் பங்குகொள்ள பாருங்கள்....

உங்கள் நெருங்கிய நண்பர்கள் , உறவினர்களிடம்..  இன உணர்வை மேலோங்க செய்ய.... விழிப்புணர்வு உண்டாக்குங்கள்...... அவர்களிடம்  அவர்களின் நெருங்கிய நண்பர்களிடம், உறவினர்களிடம்... கொண்டு செல்ல சொல்லுங்கள்......

இது மக்கள் போராட்டமாக மாற வேண்டும்....

உங்களுக்கு நேரம் இருக்கும் போது,.

போராட்டம் நடை பெற்றால் அவசியம் பங்கு பெறுங்கள்...

மற்றவர்களுடன்  உரையாடும் பொது... .. தமிழ் இனத்தின்  விடுதலை பற்றி கொஞ்சம் உரையாடுங்கள்.....

உங்களிடம் பழகும் பிற மாநில , வெளிநாடு மக்களிடம் ஈழம் பற்றிய நிலையை எடுத்து கூறுங்கள்.... ஆதரவு கேளுங்கள்....

தமிழ் இனத்திற்கு தமிழனே உதவ முன்வரவில்லை என்றால் பிறகு மற்றவர்கள் எப்படி முன்வருவார்கள்.....

நீங்களும் உங்கள் சிந்தனைக்கு ஏற்ப ,போராட்டம் செய்யலாம்...., போராட்ட வடிவத்தை மாற்றலாம்.... இனத்தின் எழுச்சிக்கு.....

வித்தியாசமான முறையிலும் உங்களுக்கு  தோன்றும் வழியில் போராட்டம் செய்யலாம்.... மக்களிடம்  உலகத்திடம் .. ஈழத்தின் தேவையை உணர்த்த வேண்டும், சென்றடைய வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.