27/06/2018
வெள்ளியகரம் அரசுப்பள்ளி ஆசிரியர் பகவான் பணியிட மாறுதல் ரத்து...
திருவள்ளூர் வெள்ளியகரம் அரசுப்பள்ளி ஆசிரியர் பகவான் பணியிட மாறுதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் பகவானின் பணியிடமாறுதலை கல்வித்துறை ரத்து செய்துள்ளது.
வெள்ளியாகரத்திலிருந்து திருத்தணி அருங்குளம் பள்ளிக்கு 20ம் தேதி பகவான் மாற்றப்பட்டார். ஆசிரியர் பகவானை இடமாற்றக்கூடாது என்று அரசுக்கு மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். பல்வேறு தரப்பினர் கோரிக்கையை ஏற்று வெள்ளியாகரத்துக்கே மீண்டும் பகவான் மாற்றப்பட்டுள்ளார்.
மாணவர்களின் இந்த துணிச்சல் எதையும் சாதிக்கும். வாழ்த்துகள்...
நிஜத்தில் கடல் கன்னியாக வாழும் மனிதப் பெண் குறித்த பதிவு இது...
இவரின் பெயர் Hannah Fraser. வயது 36. சுழியோடும் நிபுணர். மாடல் அழகி. கலைஞர். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்.
மூன்றாவது வயதில் இருந்தே கடல்
கன்னியாக சுயம் உருவகித்துக்
கொண்டார்.
ஒன்பதாவது வயதில் பிளாஸ்டிக் மூலப் பொருளில் வால் ஒன்றை சரிப்படுத்தினார். கடல் கன்னியை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட Daryl Hannah என்கிற திரைப்படம்தான் இவரை நிஜ வாழ்க்கையில் கடல் கன்னி ஆக தூண்டியது.
இவர் சிறுவயதில் இருந்தே சுழியோடுதல், மூச்சை அடக்குதல் போன்ற பயிற்சிகளை வீட்டு தடாகத்தில் மேற்கொண்டார்.
2002 ஆம் ஆண்டு புதிய வால் ஒன்றை தயாரித்தார். இது முன்னைய வாலைக் காட்டிலும் நீளமானது.
அத்துடன் பழைய வாலின் பரிணாமமாக அமைந்தது. கூடுதல் வசதிகளை கொண்டிருந்தது. பிளாஸ்டிக் பூமரங், பிளிப்பர்கள், இரு கொக்கிகள் போன்றவற்றை பயன்படுத்தி அங்கி
உருவாக்கப்பட்டது. கொக்கிகளுக்குள் குழாய் ரேப்புகள் ஏராளம் நிறுவப்பட்டு இருந்தன.
இவர் டொல்பின்கள், சுறாக்கள், கடல்
சிங்கங்கள், ஆமைகள் போன்ற கடல் வாழ் உயிரினங்களுடன் திறந்த
சமுத்திரங்களில் ஏட்டிக்கு போட்டியாக
நீந்தி வருகின்றார்...
அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம்...
சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன் மொழிந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
மாநிலங்களை கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே சட்டத்தை இயற்ற வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தல்.
மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் விதமாக மசோதா உள்ளது என ஏற்கனவே பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார்...
தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்...
தமிழன் உணவே மருந்து என்று வாழ்ந்து வந்தவர்கள். தாம் உண்ணும் உணவை கூட எவ்வாறு இலையில் இட்டு உண்ண வேண்டும் என்று ஒரு முறையை கையாண்டவர்கள்.
இந்த படம் அந்த உணவு பரிமாறும் முறையினை விளக்கும் ஒரு சாட்சி... மேலும் இந்த பரிமாறும் முறையில் பல நல்ல விசயங்கள் உள்ளன. அவைகளை இங்கு காண்போம்.
1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது.
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்.
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்.
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்.
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்...
பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும்)...
இயக்குநர் கௌதமன் மீதான பொய் வழக்குகளைத் திரும்பப் பெற்று விடுதலை செய்க...
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்...
துடிப்புமிக்க தமிழர் உரிமைப் போராளி இயக்குநர் வ. கௌதமன், கொடிய சட்டப் பிரிவுகளின் கீழ் அநீதியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழ் – தமிழினம் – தமிழர் உரிமை என்றாலே ஒவ்வாமை கொண்டுள்ள மோடி அரசின் தமிழினப் பகையை செயல்படுத்தும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.
தமிழ்நாட்டின் காவிரி உரிமையை வலியுறுத்தி நடைபெற்ற தொடர் போராட்டங்களின் ஒரு பகுதியாக, கடந்த ஏப்ரல் 12 (2018) அன்று சென்னை ஐ.பி.எல். கிரிக்கெட் களியாட்டத்தை எதிர்த்து அமைதியான எழுச்சிமிக்க போராட்டம் நடைபெற்றது.
பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிரம் பேர் பங்கேற்ற அப்போராட்டம், முற்றிலும் அமைதியாகவே நடைபெற்றது. அப்போராட்டத்தில் பங்குபெற்ற தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம், கரூர் இரமேசு ஆகியோர் மீதும், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மீதும் காவல்துறை தேவையற்ற முறையில் கண்ணாடி இழைத் தடிகளால் கடுமையாகத் தாக்கி, எலும்பு முறிவு உள்ளிட்ட சேதங்களை உண்டாக்கியது.
ஆனால், அப்போராட்டத்தின்போது ஒரு காவலர் தாக்கப்பட்டார் என்று சாக்கிட்டு நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களின் பொறுப்பாளர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட கொடும் சட்டப்பிரிவுகளில் அடுத்தடுத்து வழக்குகளை தமிழ்நாடு காவல்துறை தொடுத்து வருகிறது.
அதேபோல், வன்முறையில் ஈடுபடாத – வன்முறை எதையும் தூண்டாத இயக்குநர் பாரதிராஜா மீது தமிழ்நாடு காவல்துறை இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இப்போராட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் கலந்து கொண்ட திரைத் துறையினரோடு இணைந்து பங்கேற்ற இயக்குநர் கௌதமன் எந்தவகை வன்முறையிலோ, சட்ட விரோதச் செயலிலோ ஈடுபடவில்லை என்பது அதுகுறித்து ஊடகங்களில் வெளியான காணொலிகளைப் பார்த்தாலே தெளிவாகத் தெரியும்.
ஆயினும், வேண்டுமென்றே தமிழின உணர்வாளர்களை ஒடுக்க வேண்டும் என்ற இனத்துரோக எண்ணத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசு, கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 14 கொடும் பிரிவுகளின் கீழ் 3 வழக்குகளை தொடுத்து 24.06.2018 அன்று சிறையிலடைத்துள்ளது.
ஒரே நிகழ்வுக்கு மூன்று வழக்குகள் என்பது சட்டத்திற்குப் புறம்பானது என்று தெரிந்தாலும், பழிவாங்கும் உணர்ச்சி தலைக்கு ஏறிட, முடிந்தவரை துன்பம் தர வேண்டும் என்ற வன் நெஞ்சத்தோடு இக்கொடிய வழக்குகள் புனையப்பட்டுள்ளன.
இயக்குநர் கௌதமன் மீது பொய் வழக்குத் தொடுத்து, அவரைக் கைது செய்துள்ளதை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு தொடரும் அடக்கு முறையினால் தமிழின உரிமைப் போராட்டங்களை முடக்கிவிட முடியாது என்ற அரசியல் அடிச்சுவடியை தமிழ்நாடு அரசு தெரிந்து கொள்ள வேண்டும்.
பா.ச.க.வோடு சேர்ந்து தமிழ்நாட்டு மக்களிடம் அ.தி.மு.க.வும் முற்றிலும் தனிமைப்படும் என்ற எளிய உண்மையைக் கூட உணராமல், பா.ச.க. கை நீட்டியவர்களை எல்லாம் கைது செய்யும் கண்மூடித்தனமான அடக்குமுறையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! இயக்குநர் கௌதமன் மீதும், இயக்குநர் பாரதிராஜா மீதும் போடப்பட்டுள்ள கொடிய பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். இயக்குநர் கௌதமன் அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்...
மல்லிகையும் மருத்துவ குணமும்...
மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். மல்லிகைப் பூவை பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள். காரணம் மல்லிகைப்பூவானது மணத்தைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணித்து மன ஆறுதலையும் அளிக்கிறது. மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும்.
கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும். கண் எரிச்சல், பார்வைக் கோளாறுகள் நீங்கும். பித்தத்தை தணித்து சீராக்கும். தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய் சிறந்தது. ஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு. மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.
உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள். இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.
தேங்காய் எண்ணெய் - 100 மி.லி.
உலர்ந்த மல்லிகைப்பூ - 5 கிராம்
கறிவேப்பிலை -10 இலை
எடுத்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.
மல்லிகை மணத்திற்கு மட்டுமல்ல, மருத்துவத்திற்கும் என்பதை புரிந்து அதனைப் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம்...
வீரப்பனாரும் புலிகளும்...
15-08-1995 வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த 43 புலிகள் (3 பெண் புலிகள் உட்பட) தப்பித்தனர்.
செய்தித்தாளில் செய்தியைப் படித்துக் கொண்டிருந்தார் மாறன்.புலித் தளபதி மாறன்.
அவருடன் 4,5 புலிகள் வேலூர் காட்டுப்பகுதியில் ஒரு குகையில் பதுங்கியிருந்தனர்.
ஊருக்குள் போய்விட்டு ஒரு புலி வந்தார்.
பழ.நெடுமாறன் ஐயாவுக்கு கடிதம் போட்டுவிட்டேன்.
தலைமைக்குத் தகவல் கொடுத்துவிட்டு நம்மை எப்படியும் அழைத்துச் சென்று விடுவார்.
பணம் எப்படி கிடைத்தது?
ஊருக்குள் சென்று பேசியதுமே பேசும் தமிழ்நடையை வைத்து ஈழத்தான் என்று கண்டுபிடித்துவிட்டனர்.உதவியும் செய்தனர்.உணவும் தேநீரும் கூட கிடைத்தது.
அடடா. தமிழ்நாட்டு மக்களின் பாசத்தை என்னவென்பது?நீ புலி என்று கூறிவிடவில்லையே?
இல்லை. ஆனால் ஊர் மக்களுக்கு நாம் தப்பித்த செய்தி தெரிந்துள்ளது.
அவர்களுக்குப் புரிந்திருக்கும்.
சரி, நாம் காட்டில் இருக்கும் வரை கவலையில்லை.
கையிலே பணமில்லை, உதவி வரும் வரை என்ன செய்வது?
காட்டிலே ஏதாவது பழம், கிழங்கு கிடைக்கக்கூடும்.
உணவு தேடி காட்டுக்குள் சென்றனர்.
காக்கி உடை தரித்த ஒரு கூட்டம் வருவது தெரிந்தது.
ஓடிப் போய் குகையினுள் பதுங்கிக் கொண்டனர்.
யாரது குகை உள்ளே? பயப்படாமல் வெளியே வாருங்கள்.நான் வீரப்பன் வந்திருக்கிறேன்.
வீரப்பன் என்ற பெயரைக் கேட்டதுமே புலிகளின் மனதில் நிம்மதி பிறந்தது.
புலிகள் வெளியே வந்தார்கள்.
யார் நீங்கள்?
நாங்கள் புலிகள்.
அடடே. நம் புலித்தம்பிகளா?
ஏது இந்த பக்கம்?ஓ சிறையில் இருந்து தப்பியவர்களா?
ஐயா. அதற்குள் உங்களுக்கு எப்படி தெரியும்?
காட்டில் இருந்தாலும் நாட்டு நடப்புகளை உடனுக்குடன் எனக்குத் தெரிந்துவிடும்.
நேற்று இரவு இங்கே சந்தேகத்திற்குரிய சிலர் நடமாடியதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.அதனால் தான் காண வந்தேன்.நீங்களாகத்தான் இருப்பீர்கள் என்று யூகித்தேன்.ஆமாம். அத்தனை வலிமையான கோட்டையில் இருந்து எப்படி தப்பித்தீர்கள்?
10 வாரங்களாகச் சுரங்கம் தோண்டி மதில் சுவர் ஏறிக்குதித்து தப்பித்தோம்.
அடேயப்பா புலிகள் புலிகள்தான்.
சரி, இது என் கட்டுப்பாட்டுப் பகுதியின் எல்லை.காட்டிற்குள் வந்தால் என்னுடன் பாதுகாப்பாக இருக்கலாம்.உங்களை நான் பத்திரமாக அனுப்பி வைக்கிறேன்.
இல்லை. இங்கேயிருப்பதாகத் தகவல் கொடுத்துவிட்டோம்.ஓரிரு நாட்களில் அழைத்துச் செல்ல வருவார்கள்.
யார் வருவார்கள்?
அனேகமான 'தமிழ்நாடு மீட்சிப்படை' சுப.முத்துக்குமார்.
ஓ. சரி கவனமாக இருங்கள்.
வீரப்பனாரின் தளபதி சேத்துக்குளி கோவிந்தன் ஒரு மஞ்சள் பையை கொடுக்க அதை மாறனிடம் கொடுத்தார்.
அது நிறையப் பணம் இருந்தது.
தேவையானவற்றை வாங்கிக் கொள்ளுங்கள்.பணம் தீர்ந்துவிட்டால் என் பெயரைச் சொல்லி பொருள் வாங்கிக் கொள்ளுங்கள்.நான் இரண்டொரு நாட்களில் மீண்டும் வருகிறேன்.அதற்குள் கிளம்பிவிட்டால் பிரபாகரனை நான் கேட்டதாகச் சொல்லுங்கள்.
நன்றி ஐயா, உங்களைச் சந்தித்ததே பெரிய பாக்கியம்.தலைவர் உங்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளார்.
நான்காண்டுகள் முன்பு காவிரிக் கலவரம் நடந்தபோது படையோடு போய் கன்னடவரைத் தட்டிக் கேட்டீர்களாமே.
அந்த செய்தி எத்தனை பெருமையாக இருந்தது தெரியுமா?
வீரப்பனார் சிரித்துக்கொண்டே ஏனப்பா இப்படியான வீரசாகசங்களை பிரபாகரன் மட்டும்தான் செய்ய வேண்டுமா?
உங்கள் அண்ணன் தம்பிகள் நாங்களும் சளைத்தவர்கள் அல்லர்.
வன்னிக்காடு அளவை ஒத்த காட்டுப்பகுதி என் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
ஆனால் பிரபாகரன் என்னைவிடப் பெரிய ஆளாக வருவான்.
காலம் வரும்போது கைகோர்ப்போம்.
சரி. கவனமாக இருங்கள்.
கூறிவிட்டு வீரப்பன் போய்விட்டார்.
இரண்டொரு நாட்கள் கழித்து காக்கி உடை தரித்த காவலர்கள் அங்கே வத்தனர்.
வீரப்பனார்தான் வருகிறார் என்று நினைத்து அசட்டையாக இருந்த புலிகள் பிடிபட்டனர்.மீண்டும் சிறையிலடைக்கப்பட்டனர்.
இவர்களைத் தவிர சுவர் ஏறிக் குதிக்கும்போது இருவர் கால் முறிந்து பிடிபட்டனர்.
மற்ற அனைவரும் சுப.முத்துக்குமார் அவர்களால் பத்திரமாக ஈழத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
படம்: வீரப்பன் ஃபேன்ஸ் அசோசியேசன் (கேரளா)...
உயரத்தையும் நிறையையும் மாற்றும் ESP திறன்...
அமெரிக்காவில்… மன்ஹட்டன் நகரத்தில் ஒரு ESP தொடர்பான ஆய்வுகூடம்… பல விஞ்ஞானிகள் கூடி இருந்தார்கள்… டாக்டர். ஷார்ல்ஸ் பேர்ட் அவர்கள் முன்னிலையில் சிறிது நேரம், ஆழ்மனதின் ஆற்றல்கள் பற்றியும்… மூளையின் விளங்க முடியாத தன்மைகள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். அவர்தான் அந்த கழகத்தின் தலைவர். சிறிது நேர உரையின் பின்னர்… ஒரு தளமான கட்டிலில் நேராகப் படுத்திருந்து கண்களை மூடினார்…
சிறிது நேரத்தில் எல்லாம் உடல் தானாக மேல் எழுந்தது… சுமார் 12 உயரம் வரை சென்ற உடல், அப்படியே யன்னல் ஊடாக வெளியேறியது… அனைவருக்குமே திகில் கலந்த ஆச்சரியம்… ஆம், உடல் வெளியேறியது 16 ம் மாடிக்கட்டிடத்தில் இருந்து… எந்த வித பாதுக்காப்பு ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை.
ஒரு ஜன்னல் வழியாக வெளியேறிய உடல் அப்படியே இன்னொரு ஜன்னலூடாக உள் நுழைந்து அடுத்த அறைக்குள் சென்று தரையில் இறங்கியது!!!
கண் விழித்த ஹார்ல்ஸ் பேர்ட்… மற்றைய அறையில் இருந்தவர்களிடம்… இடைஞ்சலுக்கு மன்னிக்கவும்… மற்ற அறையில் நாங்கள் ஆழ்மன ஆராச்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்று சாதாரணமாக சொல்லிவிட்டு தனது கூட்டத்துக்கு சென்றார்.
இந்த சம்பவம்…. ESP துறையில் ஒரு முக்கிய மயிற்கல்லாக அமைந்தது.
இப்படி ஒரு மனிதன் பறபதென்பது இதுவா முதல் முறை? என்ற கேள்விக்கு பதில், இல்லை என்று சொல்லலாம்…
அடுத்த சம்பவம்…
உண்மையிலேயே ஆச்சரியமானது தான்… இதுவும் இந்த துறையில் ஒரு மிகப்பெரிய பெளதீக மீறல்தான்…
(சம்பவ இடம்… மற்றும் பெயர்கள் நினைவில்லை… வரும் பதிவுகளில் தேடி உறுதிப்படுத்துகிறேன்).
நீண்ட காலமாக இந்த ESP துறையில் ஆராச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு பிரபல ஆய்வாளர்…. பல விஞ்ஞானிகளையும், அறிஞர்களையும் ஒரு நிகழ்ச்சிக்காக கூப்பிட்டிருந்தார்.
மேடையின் நடுவே இரண்டு தராசும்… மிகப்பெரிய ஒரு பலகை அலுமாரியும் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், ஆய்வாளர் மேடைக்கு ஒரு இளைஞனையும் அழைத்துவந்தார்.
முதலில், அலுமாரியின் நிறை அளக்கப்பட்டது… கிட்டத்தட்ட 200 kg (?) நிறையைக்காட்டியது தராசு.
அடுத்து அந்த குறிப்பிட்ட இளைஞனை தராசில் ஏற்றினார்கள்… 65 Kg (?) நிறையைக்காட்டியது தராசு.
இதில் ஒன்றும் அதிசயம் இல்லை…. அடுத்து நடந்ததுதான் எல்லோரையுமே உறையவைத்தது.
அந்த இளைஞன் ஒருதராசில் அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டான் (கிட்டத்தட்ட தியானிம் செய்வது போன்று.) சிறிது நேரத்தில்… அடுத்த தராசின் நிறைகாட்டி குறையத்தொடங்கியது. அதேவேளை… இந்த இளைஞன் இருந்த தராசின் நிறை காட்டி உயர்வடையத்தொடங்கியது…
மேலும் குறுகிய நேரத்தில்… அந்த அலுமாரி, அந்தரத்தில் மிதந்தது… அதே வேளை இளைஞனின் நிறை 200 kg ஐத்தாண்டியது… அனைவருமே அப்படியே சாக் ஆகிப்போனார்கள் ..
இப்படி, ஒரு மனிதனால்.. திடீரென தன் நிறையைக்கூட்ட முடியுமா? அதுவும் மிகக்குறுகிய நேரத்தில்… அனைவருமே வியந்தார்கள்… பெளதீகத்தால் விளக்கம் கொடுக்க முடியவில்லை… ஆனால், எமக்குள் பல சக்திகள் பொதிந்துள்ளது என்று மட்டும்… அனைவருமே ஒப்புக்கொண்டார்கள்.
அது இருக்கட்டும்… இப்படி, பாரமான பொருளைத்தூக்குவது , நிறையை அதிகரிப்பது என்பது இதுவா முதல் முறை? என்றால்… அதற்கு பதிலும் இல்லைத்தான்…
அப்படியானால், இதற்கு முதல் எங்கே நடந்தது?… அது எவ்வாறு? போன்ற பல வியப்பான சம்பவங்களுடனும்… ஒப்பீடுகளுடனும்… அடுத்த ESP பதிவில் சந்திக்கிறேன்…
இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவரா நீங்கள் ?
இவ்வுலகில் தூக்கம் என்பது ஒரு பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. நிம்மதியான தூக்கம் ஒவ்வொருவருக்கும் அவசியம். இத்தகைய தூக்கப் பிரச்சனை வருவதற்கு காரணம், அதிக வேளைப்பளுவின் காரணமாக மனஅழுத்தம் தான். எனவே இத்தகைய தூக்கப் பிரச்சனையை நீக்க ஒரு சில செயல்களை செய்வதால், சரிசெய்யலாம்.
அதுவும் மருந்து மாத்திரைகள் இன்றி ஆழமான, ஆரோக்கியமான, நிம்மதியான தூக்கத்தை தூங்கவும், புத்துணர்ச்சியுடன் எழுந்து வேலைகளை செய்யவும் சில வழிகள் உள்ளன. இப்போது அந்த செயல்கள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக தாமதமாக படுக்கைக்கு சென்று, தாமதமாக எழுந்திருத்தல் அல்லது சீக்கிரம் படுத்து, சீக்கிரம் எழுதல் என்பதை ஒரு முறையாக செய்தல் மிக அவசியம். அதிலும் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை பின்பற்றி வர வேண்டும். இதனையே வழக்கமாக தொடர்ந்தால், நன்றாக தூங்க வாய்ப்புள்ளது.
மேலும் எங்கு இடம் மாறி சென்றாலும், இந்த பழக்கத்தை தொடர வேண்டும். சிலருக்கு புது இடம் சென்றால் தூக்கம் வராது. ஆனால் நாம் சரியான நேரத்தில் தூங்க செல்வதாலும், சரியான நேரத்தில் எழுந்திருப்பதாலும், நாம் ஆரோக்கியமான தூக்கத்தைப் பெறலாம்.
காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தல் உடலுக்கு ஒருவகையான புத்துணர்ச்சியை கொடுக்கும். நடைபயிற்சி, ஓடுதல், வண்டியோட்டுதல் அல்லது பளு தூக்குதல் என்று வெறும் 20-30 நிமிடங்கள் ஏதாவது ஒரு வேலையை செய்தால், இரவில் உடலானது சோர்வடைந்து, நன்றாக தூங்க முடியும்.
அதே போல் நாம் இரவு தூங்கும் முன்னும், சாப்பிட்ட பிறகும் 20-30 நிமிடம் நடை நடத்தல், சூடான குளியல் போன்றவை அவசியம். இப்படி செய்வதால் உடல் தளர்த்து ஒரு விதமான புத்துணர்ச்சியுடன் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்பதில் சந்தேகம் இல்லை.
இரவில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டாம். பகலில் அதிகம் தண்ணீர் குடிக்கவும். இரவில் அதிக தண்ணீர் குடிப்பதால், நள்ளிரவில் சிறுநீரகம் கழிக்க எழுந்திருக்க வேண்டியிருக்கும். அதனால் தூக்கம் பாதியில் கெட்டு மீண்டும் தூங்க நேரமாகும். மேலும் காலையில் நல்ல தூக்கம் வந்து, பின் எழுந்திருக்க முடியாமல், வேலைகள் அனைத்தும் சோம்பேறித்தனமாகவும், நம் உடல் சோர்வாகவும் இருக்கும்.
நல்ல தரமான தலையணை மற்றும் மெத்தையை வாங்கி தூங்க வேண்டும். இதனாலும் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
இரைச்சல் மற்றும் வெளிச்சம் தூக்கத்தை கெடுக்கும். எனவே உறங்கும் அறையில் வெளிச்சம் மற்றும் இறைச்சல் இல்லாதவாறு செய்து கொண்டு, பின் தூக்கத்தை தொடர்ந்தால், நல்ல தூக்கத்தை பெற முடியும். எனவே அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிகளைத் தேடவும்.
இரவில் மாச்சத்து (Carbohydrate) கொண்ட எளிதான உணவை சாப்பிடுவது நல்லது. பால் மற்றும் ஒரு சிறிய கிண்ணத்தில் தானியம், என்று இரவில் சாப்பிடுவதால் நிம்மதியான தூக்கம் நிச்சயம். இரவில் கொழுப்பு மற்றும் புரதச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
ஏனெனில் அவை இரவில் செரிமானமாகாமல், தூங்க செய்யாமல் செய்துவிடும். எனவே இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வந்தால், நிம்மதியான மற்றும் அமைதியான தூக்கத்தைப் பெறலாம்...
தமிழ்க் கலாச்சாரத்தில் வாழை இலை...
தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை.
இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் . நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே.
விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு.
வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.
நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும்.
உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.
இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் .
குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன .
எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு. வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம்.
வாழை இலையினைக் குப்பையில் எறிந்தாலும் அதனால் பூமி மாசு அடைவதில்லை, தானாகவே மண்ணோடு மண்ணாக உக்கிவிடும்.
தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும்.
முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்...
உயர்நீதிமன்ற உத்தரவை காலில் மிதிக்கும் தூத்துக்குடி மாவட்டப் போலீசு. தொடரும் போலீசின் சித்திரவதை...
கடந்த மாதம் இறுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நெல்லை பகுதி ஒருங்கிணைப்பாளரும் நெல்லை மாவட்ட நீதிமன்ர வழக்கறிஞருமான தங்கபாண்டியன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசு மக்களின் வீடுகளுக்கு இரவில் சென்று தேடுதல் வேட்டை செய்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்தார்.சம்மன் அனுப்பியே விசாரிக்க வேண்டும் சந்தேகப்படுவோரின் வீடுகளுக்கு சென்று தொந்தரவு செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு வழங்குகிறது. இந்த உத்தரவை போலீசு எப்படி மதிக்கிறது என்பதற்கு சில சம்பவங்கள்.
சம்பவம் 1...
கடந்த வாரம் (தீர்ப்பு வழங்கி 20 நாட்கள் பின்னர்) கோவில் பட்டியைச்சேர்ந்த மாரிமுத்து என்ற மக்கள் அதிகாரம் உறுப்பினரின் வீட்டுக்கு இரவு இரண்டு மணிக்கு பத்துக்கும் மேற்பட்ட போலீசு திடீரென நுழைகிறது.
உறங்கிக்கொண்டு இருந்த அவரின் அம்மாவைப்பார்த்து “ தூங்கறீயா, ஒழுங்க எந்திரி, தலையிலேயே பூட்ஸ்கால்ல மெதிச்சுடுவேன்” என்று மிரட்டுகிறார் ஒருபோலீசு. என்ன புள்ளய வளத்து வச்சுருக்க, தூத்துக்குடியில 13 பேரை கொன்னுருக்கான், இவனை பெத்ததுக்கு நீ சாவணும் என்று கண்டபடி கத்துகிறார். மற்ற போலீசு சேர்ந்து கொண்டு வசை பாடுகிறது. பள்ளியில் படிக்கும் அவரது தம்பியின் முகவரியை வாங்கிக்கொண்டு டேய் மாரி வரல உன்னை நாளைக்கு தூக்கிக்கிட்டு போயிடுவோம் என்று மிரட்டல் விடுக்கிறது. வீட்டில் உள்ள பொருட்களை கலைத்துப்போடுகிறது. தொடர்ந்து வந்து வீட்டில் மிரட்டிக்கொண்டே இருக்கிறது. எந்த கெட்டப்பழக்கமும் இல்லாமத்தான நான் எம் மவன வளர்த்தேன், அவனை கொலைகாரன்னு சொல்றாங்களே என்று கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கிறார் அந்தத்தாய்.
சம்வம் 2...
தூத்துக்குடி இலுப்பையூரணி
ராமர் என்பவர் மக்கள் அதிகாரம் அமைப்பின் ஆதரவாளர். ராமரின் மனைவியும் அவரின் தம்பி மனைவியும் சிறு வயது குழந்தைகள் மட்டுமே இம்மாதம் 10ம் தேதி இரவு 3 மணி அனைவரும் உறங்கிக்கொண்டு இருக்கும் போது சுமார் 40 போலீசுக்காரர்கள். சுவரேறி குதிக்கிறார்கள். பெண்கள் உறங்கொக்கொண்டு இருக்கும் போது டார்ச் லைட் அடித்துப்பார்க்கிறார்கள். கதவுகளை ஓங்கி டமால் டமால் என்று அடிக்கிறார்கள். பதறி என்ழுந்த பெண்களை வெளியே வரச்சொல்லி வீடுகளுக்குள் சென்று துழாவுகிறார்கள். சுவரேறி குதித்து வந்த போலீசு வெளியே செல்வதற்கு கதவை திறந்து விடச்சொல்லியிருக்கிறது. எதுக்கு இந்த நேரத்துக்கு வந்தீங்க, பகல்ல தினமும் வரீங்க, பதில் சொல்றோமா இல்லையா , சுவரேறி குதிச்சு வரீங்கலே இதெல்லாம் சரியா இருக்கா என்று இரு பெண்களும் கேட்க, சரிம்மா இனிமேல் கேட்டை பூட்டாம வச்சிரு நாங்க வர வசதியாக இருக்கும் என்று தெனாவெட்டாக பேசியிருக்கிறது போலீசு. நாங்க எல்லாம் தெருவில படுத்துக்கிரோம் கேட்சாவி, வீட்டுசாவி எல்லாத்தையும் பூட்டாம வெக்கிறோம் என்று பதிலளித்து இருக்கிறார்கள். அடுத்த இரு நாட்கள் கழித்து மாறு வேடத்தில் வந்த போலீசு வண்டி வாடகை எடுத்துட்டு காசு தராம இருக்கான் உன் வீட்டுக்காரன், போனும் எடுக்க மாட்டேங்கிறான் என்று காலையில் சத்தம் போட்டு இருக்கிறது. பின்னர் குழந்தைகளை கூட்டிக்கொண்டு போய் தனியே விசாரிக்க ஆரம்பித்தவுடன், போலீசை கண்டறிந்த பெண்கள் கேள்விகேட்டவுடனேயே செல்கிறது. எப்போது போலீசு வீட்டுக்கு வருமோ என்ற பயத்தில் இரவெல்லாம் உறங்காமல் இருக்கிறார்கள் பெண்களும் குழந்தைகளும்.
இச்சம்பவம் நடந்த அடுத்த நாளில் ராமரின் வீட்டுக்கு 10 வீடு தள்ளி இருக்கும் ஜெபமாலை என்பவரை பிடித்துச்சென்று சித்தரவதை செய்கிறது அதனால் உடலெல்லாம் காயங்கள் ஏற்படுகின்றன. அவரை ரிமாண்ட் செய்கிறது.
சம்பவம் : 3 இடம் :ஒத்தகடை...
இப்பகுதியில் உள்ள எவர்சில்வர் தொழிலாளரான சரவணன் என்பவரது வீட்டின் கதவை இரவு 3 மணிக்கு ஓங்கி பலமாக அடிக்கிறது போலீசு. சரவணனின் மனைவி” யார் ” என்று கேட்கிறார். போலீசு வந்திருக்கோம், கதவைத்திற என்கிறார்கள். “நைட் 3 மணிக்கு வந்தா கதவைத்திறக்க முடியாது, பகல்ல வாங்க” என்கிறார். ஒரு மணி நேரம் அந்த ஏரியாவையே அதகளப்படுத்திவிட்டு செல்கிறது போலீசு. தொடர்ந்து பக்கத்து வீட்டுல் சரவணனின் போட்டோவை காட்டி யார் தெரியுமா என்று பீதியூட்டிக்கொண்டு இருக்கிறது போலீசு.
சம்பவம் : 4 இடம் திருமங்கலம்...
பரமன் வயது 55 மக்கள் அதிகாரம் அமைப்பின் ஆதரவாளராக இருக்கிறார். இவரை கடந்த 15 நாட்களுக்கு முன் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசு ஒரு நாள் முழுக்க விசாரித்துவிட்டு தூத்துக்குடிக்கு செல்லவில்லை என்பதை தெரிந்து கொண்டு விடுவித்தது. இந்த நிலையில் 22.06.2018 அன்று காலை 9 மணிக்கு தூத்துக்குடி போலீசு 7 பேர்கள் அவரின் வீட்டில் இருந்து கடத்திக்கொண்டு செல்கின்றனர். போலீசு வேனில் வைத்து பலமாக அடித்துள்ளனர். பின்னர் கண்ணில் துணியைக்கட்டி ஒரு காட்டில் இறக்கிவிட்டு துப்பாக்கியை கையால் தொட்டுப்பார்க்கச்சொல்லி அங்கேயும் அடித்துள்ளனர்.”டேய் அவுசாரி மவனே இந்தத்துப்பாக்கியிலதான் உன்னை சுடப்போறோம், எங்கடா குருசாமி ” என்று தொரந்து அடித்துள்ளனர். இரவுவரை வண்டியில் தூக்கிக்கொண்டு சென்ற போலீசு பின்னர் ஒரு லாட்ஜில் வைத்து இரவு 9 வரை அடித்துள்ளனர். பிறகு திருமங்கலம் தாண்டி ஒரு காட்டில் இறக்கிவிட்டுவிட்டு சென்றுள்ளனர். கிளம்பும் போது “உன்னை பாவம்னு மன்னிச்சுட்டேன், குருசாமி போன் செஞ்சா இந்த நம்பருக்கு சொல்லு என்று ” ராஜமாணிக்கம் என்ற எஸ்.ஐ சொல்லிவிட்டு சென்றுள்ளார். மகனோ ராணுவத்தில் உள்ள நிலையில் மாடு கன்றை பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ள அவரால் வீட்டை விட்டும் போக முடியாத நிலை. வீட்டில் இருந்தாலும் எப்போது வந்து போலீசு கடத்திக் கொண்டு செல்லும் என்ற நிலை...
மாந்திரீகம்...
பலர் மாந்திரிகம் என்ற பெயரில் ஏமாற்றப்படுகின்றனர். யாறும் கடவுளுக் இடைத் தரகராக இருக்க முடியாது. ஏன் நீங்களே முயற்சி செய்து பார்க்க கூடாது?. கடவுளை பணத்தாலோ, பொருள்களை கொடுத்தோ ஏமாற்ற முடியாது. மாந்திரீகத்தை விற்கவும் முடியாது, வாங்கவும் முடியாது.
மாந்திரீகம் என்ற பெயரில் ஒரு தகவல் பரிமாற்ற பகுதியா? இந்த பரிமாற்ற பகுதியை பார்த்த உடன் உங்களுக்கு வியப்பு ஏற்படலாம். இந்த தகவல் பரிமாற்றம் உங்களை ஒரு மந்திரவாதி ஆக்கவேண்டும் என்பது நோக்கமல்ல. இங்கு கொடுக்கப்பட்ட பல காரியங்கள் உங்களுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆன்மீகமும். மாந்திரீகமும் ஒரு மதத்தின் இரு பகுதிகள் ஆகும். எல்லா மதங்களிலும் மாந்திரீக பகுதி உள்ளது. மாந்திரீகம் என்றதும் மூன்று தன்மையை அடிப்படையாக கொண்டது.
1. மனதிரத்தால் செய்யப்படும் மந்திரங்கள் சார்ந்தது.
2. எந்திரம் சார்ந்த தாந்திரீக வேலைகள்.
3. தனது திறத்தால் செய்யப்படும் தாந்திரம் கைப் பிறட்டு வேலை.
மாந்திரீகத்தில் வெள்ளை மாந்திரீகம், கருப்பு மாந்திரீகம் என்ற இரு வகை உள்ளது. உலகெங்கிலும் மாந்திரீகம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. டிவி சேனல்களில் மாந்திரீகம் உண்டா? இல்லையா? என்ற சர்ச்சைகள் உருவாகி மாந்திரீகம் இல்லை என்ற தீர்ப்போடு முடித்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
அறியாமை, இயலாமை, பய உணர்வுகள், பேராசை ஆகியவைகள்
மனிதன் கடவுளைத் தேடும் காரணங்களாக அமைந்துள்ளது. இதேக் காரணங்கள் மாந்திரீகத்தின் மீதும் நாட்டம் அடையச் செய்கிறது. ஆன்மிகம் என்பது ஒரு சரியானத் தேர்வு. மாந்திரீகம் கூட ஆன்மீகத்தின் ஒரு அங்கம் என்று கூறலாம். இத்தகைய மாந்திரீகத்தில் மூன்று வகையான வேண்டுதல்கள்
உள்ளன.
1) ஒருவர் சுகமடைய வேண்டும் என்று வேண்டுதல். இது நன்மையைச் சார்ந்த வேண்டுதல் ஆகும்.
2) ஒருவர் நோய்வாய்ப்பட வேண்டும் அல்லது வறுமை அடைய வேண்டும் என தீமையான காரியங்களைச் சார்ந்த வேண்டுதல். ஒரு வகையாகும்.
3) தான் விரும்பியதைஅடைய வேண்டும் போன்ற காரியங்களை அடைய விரும்புவது மூன்றாவது வகையாகும் சுயநலம் காரியங்களைச் சார்ந்த வேண்டுதல்.
பொதுவாக மாந்திரீகம் என்பது ஒருவரின் விருப்பு வெறுப்பைச் சார்ந்தே இருக்கும்.
ஒரு அமெரிக்க யூதர் முனைவர் பட்டத்திற்க்காக மாந்திரீகத்தை கரு பொருளாக எடுத்து ஆய்வு (P.hd) செய்து கொண்டிருந்தார். அவர் உலகின் பல பாகங்களுக்கு மாந்திரீகம் பற்றி தெரிய சென்றிந்தார். அவ்வாறு தமிழ்நாடு வரும் பொழுது என்னிடம் நான்கு நாட்கள் தங்கி இருந்தார். நானும், அவரும் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள பல மந்திரவாதிகளை சென்று பார்த்தோம். அவர்களிடம் இருந்து பல கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். அவரிடம் எனது நண்பர் மாந்திரீகம் என்ற ஒரு கலை உண்டா? என்று கேட்டார். அதற்கு அவர் தற்பொழுது இது ஒரு அழிந்து வரும் கலை. இந்த யுகத்திற்கு ஏற்புடையது அல்ல. மாந்திரீகம் என்பது மனிதன் தன் மனதில் உள்ள அதி தீவிர சக்தியால் செயல்படுவது ஆகும். அதற்கு அதிக உடல், உள்ள பயிற்சிகள் தேவை என்று கூறினார். இப்பொழுது கூட சிலர் வாம சார தெய்வங்களை வழிப்பட்டு மனசக்தியுடன் நெருப்பில் இறங்குவது ஏன் ஒருவித மாந்திரீகம் என்று எடுக்கக் கூடாது? என்று கூறினார் “இன்று அறிவியலாக இறுப்பது நாளை அறிவியலாக
இருப்பதில்லை. அணுவைப் பிரிக்க முடியது என்று கூறிய அறிவியல் என்ன ஆகிவிட்டது?. நிருபிக்க பட்ட பல உண்மைகள் தோல்வியைச் சந்தித்து உள்ளன. அதேபோல் ஆன்மீகமும் பல இடங்களில் ஆன்மீகமாக இருப்பதில்லை. “ஒரு மனிதன் இறக்கிறான் என்றால்" அங்கு அறிவியலும் ஆன்மீகமும் தோல்வி அடைகிறது. உண்மையில் ஆன்மீகமும், அறிவியலும் எப்பொழுது ஒரு தேடலாகவே அமைகிறது..
வாருங்கள் தேடுவோம்" கடவுள் யார்? கடவுளின் பரிமானம் என்ன? என்பதைப் பற்றி எங்களின் வெப்சைட்டில் பார்க்கலாம்.
ஒரு பாதிரியார் என்னிடம் பேசும் பொழுது கூறியவைகள் அப்படியே உங்களுக்கு கொடுக்கிறேன். அவர் சபையைச் சார்ந்த ஒரு நபருக்கு பக்கத்து வீட்டுக்காரர் பல தொந்தரவுகள் கொடுத்தார். அதன் பொருட்டு அவர்கள் சபையைச் சார்ந்த எல்லோரும் ஒன்றுகூடி பக்கத்து வீட்டுக்காரர் தண்டிக்கப்படவேண்டும் என்று வேண்டுதல் செய்தோம். அதன் பலன் ஒரு வாரத்திலேயே அவர் இறந்து விட்டார் என்று கூறினார். அதற்கு நான் நீங்கள் ஏன் அவர் திருந்துவதற்காக வேண்டுதல் செய்து இருக்கலாமே என்று கூறினேன். இந்த நிகழ்வு உங்களுக்கு மாந்திரீகம் என்றால் என்ன என்று தெரிந்து இருக்கும் என்று எண்ணுகிறேன்.
எனக்குத் தெரிந்த சாமியார் ஒருவர் உண்டு. அவர் எப்பொழுதும் என்னை பகைத்தான், அதனால் அவன் பக்கவாதத்தில் விழுந்தான். என்னை தவறாக பேசினான் அதனால் அவன் விபத்தில் அடிப்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்கிறான் என்று எதிர்மறையான கருத்துக்களை எப்பொழுதும் கூறுவார். இவ்வாறு தீய உணர்வுடைய ஆன்மீகவாதிக்கும், மாந்திரீகம் செய்வதாக கூறி பணம் பறிக்கும் மந்திரவாதிகளுக்கும் வேறு எந்த வித்தியாசமும் கிடையாது.
வாமசார தெய்வங்களுக்கு படைக்கப்படும் பூஜை, பூஜைப் பொருள்கள் ஆகியவைகள் வேண்டுதல் செய்பவரின் நம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு வைதீகக் கருமமாகும். வாமசார தெய்வங்கள் சக்தி உள்ளவை என்று கருதப்படுகிறது. அப்படி இருக்க அவர்களுக்கு அடிபணிய வைக்க பூஜை பொருள் கொடுப்பது என்பது ஒரு வேடிக்கையின் வினோதமான நிகழ்வாக தெரிகிறது.
கடவுளை பணத்தாலோ, பொருள்களை கொடுத்தோ ஏமாற்ற முடியாது. மாந்திரீகத்தில் உயிர் பலி என்பது ஒரு சர்வ சாதாரண காரியமாகி விட்டது. சிறு பையன்கள், பிள்ளைகளை பலி இடுவது என்பது கண்கூடாக பார்க்கின்றோம். இப்படி இருக்க சிறு குழந்தைகளை நரபலி இடுதல் போன்றவைகளை தெய்வங்கள் ஏற்றுக் கொள்ளாது. தெய்வங்கள் அவ்வளவு கொடூரமானவர்கள் அல்ல.
பொதுவாக மாந்திரீகம் என்பது மந்திர உச்சாடனங்கள் கொண்டதாக உள்ளது.
காளி, சாமுண்டி, துர்க்கை, முருகன் போன்ற எல்லா தெய்வங்களும் தீமை செய்யும் அரக்கர்களையும், அசூரர்களையும், சூரர்களையும், அழித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தத்துவத்தை மேல் நோட்டமாக பார்க்கக்கூடாது. அசூரர், அரக்கர், சூரர், எல்லோரும் மனிதனுக்குள்ளே இருக்கும் தீய குணங்களாம். இவற்றை ஒழிக்க வேண்டும் என்பதைத்தான் தத்துவார்த்தமாக கூறுகின்றனர். எங்கேயாவது நரபலியை ஆதரித்து இந்து மதத்தில் காண முடியுமா? மக்களை காக்க வேண்டிய கடவுள் யாரையாவது நரபலி கேட்குமா? அப்படி கேட்டால் அவைகள் தெய்வமே அல்ல.
பொதுவாக சுடுகாடு என்பதற்கு வெறுமை என்பதாகும். பொதுவாக கொலை செய்யும் குடும்ப வாரிசுகளும் சிறப்பாகவும், செழிப்பாகவும் இருந்தது இல்லை. ஆகவே இத்தகைய தீமையான காரியங்கள் எங்கும் இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மாந்திரீகத்தை விற்கவும் முடியாது, வாங்கவும் முடியாது.
ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவருக்கு நன்மை செய்யும் கிரகங்களை செயல் படாதபடி ஆக்கி தனக்கும் எதிராளிக்கும் படுபச்சி நேரத்தை கணக்கிட்டு அஸ்டஅங்க இருதயத்தில் உள்ள பிரணவ சக்தியை எழுப்பி பஞ்ச காயம், பஞ்ச கவ்வியம், சுத்தி செய்து தனது பிராணனை கருவிற்கு கொடுத்து உயிரோட்டம் பெற வைத்து மந்திரங்களை உச்சாடனம் செய்து காரியத்தைச் சாதிக்கும் வாமசாரிகளாகிய மந்திரவாதிகளை இந்த யுகத்தில் காண்பது அரிதாகும்.
இவ்வாறு கூறிக் கொண்டு நான் சென்றால் முடிவில்லாத கதை ஆகிவிடும். ஆகவே மாந்திரீகம் என்று ஏமாறாதீர்கள். மாந்திரீகம் என்று ஏமாற்றாதீர்கள். நாம் அந்த யுகத்தைக் கடந்து அடுத்த யுகத்திற்கு வந்து விட்டோம்...
அதிமுக எம்.ஜி.ஆர் செய்த கொலைகள்...
அருப்புக்கோட்டை அருகே வாகைக்குளத்தில் மிகப்பெரிய ஆழ்துளைக் கிணறு தோண்டுவதை எதிர்த்து போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 2 பெண்கள் உட்பட 5 பேரைக் கொன்றார்.
நாராயணசாமி நாயுடு தலைமையில் நடந்த விவசாயப் போராட்டத்தில் காவல்துறையை ஏவி 14 விவசாயிகளைச் சுட்டுக் கொன்றார்.
தர்மபுரி, ஆற்காடு பகுதிகளில் நக்சலைட் ஒழிப்பு என்ற பெயரில் 21 இளைஞர்கள் தேவாரம் தலைமையிலான காவல்படை சுட்டுக் கொலை செய்தது.
வேப்பந்தட்டையில் பஸ் வசதி கேட்டு போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 3 பேரைக் கொன்றார்.
சென்னை வியாசர்பாடியில் விசாரணை என்ற பேரில் ஒரு அப்பாவி இளைஞனைத் துன்புறுத்திக்கொன்றது போலீஸ்.அதைக் கண்டித்துத் திரண்ட மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 5 பேரை கொன்றது.
நடு இரவில் சென்னை கடற்கரையில் மீனவர் குடியிருப்பை அடித்து நொறுக்கிய போலீஸ் பலரை சுட்டுக் கொன்றது.
விழுப்புரம் நகரில் பட்டியல் சாதியினர் 12 பேர் அ.தி.மு.க வினரால் வெட்டிக்கொலை.. ஒரு பட்டியல்சாதி பெண்ணை மதுராந்தகம் அ.தி.மு.க அலுவலகத்திற்கே தூக்கிவந்து கற்பழித்து கொன்று போட்டனர்.
நாகப்பட்டணம் எம்.பி யையே அ.தி.மு.க கொலை செய்தது.
திருச்செந்தூர் நகைக் கொள்ளை, அதை சரி பார்க்க வந்த அரசு அதிகாரி கொலை.
இன்னும் வெளிவராத அ.தி.மு.க குண்டர்கள் செய்த கொலைகள் பல உண்டு
நன்றி: வினவு தளத்தின் எம்.ஜி.ஆர் : முழு வரலாறு கட்டுரை..
இது போக தனித்தமிழ்நாடு போராளி தமிழரசன் மற்றும் கூட்டாளிகள் இந்திய உளவுத்துறை கொலை செய்தது இவர் ஆட்சியில் தான்..
இடவொதுக்கீடு போராட்டத்தின் துணை ராணுவம் வந்து 21 பேரைக் கொன்றதும் இவர் காலத்தில் தான்...
M.G.R ஒரு மலையாளியே...
Subscribe to:
Posts (Atom)