சாத்தான்குளம் பற்றிய பதிவு இனி போட வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன்...
ஆனால் All media press club of Tamil Nadu என்ற பக்கத்தில் உள்ள பதிவை பார்த்தபின் அதனை பகிர்வதே இத்தனை நாள் நான் போட்ட பதிவுக்கு உண்டான கடமையாகும்.
அந்தப் பதிவின் பார்வை சற்று வித்தியாசமாக இருந்தாலும் ஏன் உண்மையாக இருக்கக் கூடாது என்ற சந்தேகம் அதிகமாகவே இருக்கிறது.
இதோ உங்கள் பார்வைக்கு..!
"ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்த பதிமூவரில் இருவர் பெனிக்ஸின் நண்பர்கள்,
சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவத்தின் பின்னனி குறித்த விசாரணை செய்து வரும் பத்திரிகையாளரும் சமூக ஆர்வலரும் பகிர்ந்துக்கொண்ட தகவல்கள் இக்கொலை சம்பவத்தின் பின்னனியை மூன்றாம் கோணத்தில் ஆராய்ந்து பார்த்ததில்..
உண்மையில் பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தை அவர்களது கடையில் இருந்து வலுக்கட்டாயமாக காவல் நிலையம் அழைத்து வரப்படவில்லை என்பது காவல் நிலைய சிசிடிவி பதிவுகளின் மூலம் தெளிவாகிறது.
பெனிக்ஸ் காவல் நிலையம் சென்ற சமயம் காவல் நிலையத்தில் ஒரு சென்ட்ரி மற்றும் ஃப்ரெண்ட் ஆஃப் போலீஸ் குழுவினர் மட்டுமே இருந்துள்ளனர்.
இவர்கள் தாக்கிதாலேயே பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தை காயமடைந்துள்ளனர்...
பெனிக்ஸ் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்ட காயம் காரணமாக மயக்கமடைந்துள்ளார் அதன் பிறகே கொரோனா பணியில் இருந்த காவல்துறை ஆய்வாளருக்கு தகவல் சொல்லப்படுகிறது. ஆய்வாளர் நிலவரத்தை அறிந்து வர துணை ஆய்வாளரை காவல் நிலையம் அனுப்பி வைக்கிறார்.
காவல் நிலையத்தில் ரத்த வெள்ளத்தில் கிடத்தப்பட்டிருந்த பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்த துணை ஆய்வாளர் ஃப்ரெண்ட் ஆஃப் போலீஸ் குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
இங்கே தான் திரும்பம்.... பெனிக்ஸை ஏன் எதற்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார்...?
ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்த பதிமூவரில் இருவர் பெனிக்ஸின் நண்பர்கள், நண்பர்களின் மரணத்திற்கு நீதி வேண்டி பெனிக்ஸ் பல ஆதரங்களை திரட்டியுள்ளார். அதில் முக்கியமான ஆதாரம் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலின் பொழுது திமுகவிற்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் செய்த உதவிகள் மற்றும் திமுக பிரமுகர்களுடனான ஸ்டெர்லைட் அதிகாரிகள் நடத்திய உரையாடல்கள்.
மேலும் தூத்துக்குடியில் கலவரம் நடத்திய திமுக வினர் குறித்த தகவல்களும் பெனிக்ஸ் மற்றும் அவரது நண்பர்களிடமும் சிக்கியுள்ளது.
இத்தகவல்களை பெனிக்ஸ் நேரடியாகவே ஸ்டாலினிடம் தெரிவித்து இளவரசி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி வந்துள்ளார்.
ஆனால் ஸ்டாலின் பெனிக்ஸ் மற்றும் அவரது நண்பர்களுக்கு பொய்யான நம்பிக்கையை கொடுத்து ஏமாற்றிவிட்டு, இளவரசியிடம் பெனிக்ஸ் குறித்த தகவல்களை வழங்கியுள்ளார்.
தான் வசமாக மாட்டிக்கொண்டோம் என கலக்கம் அடைந்த இளவரசி
தன் ஆதரவாளர்களுடன் தூத்துக்குடி எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் ஃப்ரெண்ட் ஆஃப் போலீஸ் என்ற பெயரில் திமுக வின் பினாமி அறக்கட்டளை அமைப்பு மூலம் திமுகவினரை அனுப்பி காவல்நிலைய விவகாரங்களை வேவு பார்த்து காவல்நிலைய செயல்பாடுகள் மற்றும் காவல் விவகாரங்களை கண்காணித்து வந்துள்ளார்..
இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று மதியம் ஃப்ரெண்ட் ஆஃப் போலீஸ் மூலம் பெனிக்ஸின் கடைக்கு சென்று ஆதாரங்களை கேட்டு மிரட்டி பேரம் பேசியுள்ளனர்.
சுதாரித்துக்கொண்ட பெனிக்ஸ் தூத்துக்குடி ஆளும் கட்சியினரை தொடர்புக்கொள்ள முயன்றுள்ளார்.
ஆனால் அன்றிரவே காவல் நிலையத்தில் வைத்து ஃப்ரெண்ட் ஆஃப் போலீஸ் மூலம் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
தன்னை சித்திரவதை செய்த போதும் கலங்காத பெனிக்ஸை கண்டு ஆத்திரமடைந்த ப்ரெண்ட் ஆஃப் போலீஸ் குழுவினர் பெனிக்ஸின் தந்தையை தாக்கி கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதனிடையே காவல் நிலையம் வந்து பார்த்து அதிர்ந்து போன எஸ்ஐ செய்வதறியாது இன்ஸ்பெக்ட்டரிடம் தகவலை கூற, பயந்து போன இன்ஸ்பெக்ட்டர் மேலதிகாரிகளிடம் கூற, மேலதிகாரிகள் மேஜஸ்ட்ரேட்டிடம் கூற .... இளவரசியின் அதிகாரமும் பண பலமும் கொலை சம்பவத்திற்கு சம்பந்தமேயில்லாத காவல்துறை அதிகாரிகளை பலியாடுகளாக்கி விட்டு பெனிக்ஸ் குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறுவதை போல நடித்து நாடகமாடி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆதாரங்களை தேடி வருகிறது.
இதில் எதிலுமே சம்பந்தப்படாத தமிழக அரசு ஏன் எதற்கென்றே தெரியாமல் பதட்டமாகி சொதப்போ சொதப்பு என சொதப்பி வருவது வேதனை.
போலீஸ் தாங்கள் தான் தவறு செய்து விட்டோமென செய்யாத தவறை மறைப்பதாக நினைத்து இன்னும் சிக்கலை பெரிதாக்கி வருகிறது.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெனிக்ஸ் ஜெயராஜ் மற்றும் காவல்துறையினர்.
ஏனைய அனைவரும் திமுக இளவரசி கொடுத்த காசுக்காக கொலை செய்த கூட்டு குற்றவாளிகள்.
எனது நோக்கம் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் நிரபராதிகள் காப்பாற்றப்பட வேண்டும், பெனிக்ஸ் சேகரித்த ஆதாரங்களை வைத்து தண்டிக்கப்பட வேண்டும், தடை செய்யப்பட வேண்டும்.
ப்ரெண்ட் ஆஃப் போலீஸ் எனும் அமைப்பு நிரந்தரமாக தடை செய்யப்பட வேண்டும்.
உண்மை தற்காலிகமாக உறங்கும் ஆனால் கண்டிப்பாக சாகாது.....
ரிக்கி ஆய்வுகள் முடியும் வரை காத்திருப்போம் மேலும் விபரங்களுக்கு...
நெறிமுறை பின்வருமாறு...
- விக்ரம் சூரிய வர்மா...
குறிப்பு : இப்படி ஒரு புறம் ஆளும் கட்சி ஆட்கள் கம்பு சுத்திட்டு இருக்காங்க...
ஆனால் நேரில் பார்த்த சாட்சியோ... நேரடியாக ஆய்வாளர் காவலர்கள் தான் வண்டியில் அழைத்து சென்றுள்ளனர் என்று சொல்லியுள்ளனர்...
மேலும் பிரண்ஸ் ஆப் போலீஸ் என்று அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். சின் சேவா பாரத் அமைப்பு சார்ந்தவர்கள்...