கேள்வி:- பாதுகாப்பு கேட்கும் வீரமிக்க போலீஸ் ரேவதி அவர்களுக்கு, தப்பு செய்த போலீசார் மூலம் பாதுகாப்பு தரப்படுமா? அந்த பாதுகாப்பு சரியாக இருக்குமா? இல்லை அவர்களுக்கு வேறு துறையின் மூலம் பாதுகாப்பு கொடுப்பார்கள்? என்று தெளிவு படுத்த வேண்டும்.
பொதுமக்களும், பத்திரிகை துறையும், வழக்கறிஞர்களும், நீதித்துறையும், அரசாங்கமும் வீரமிக்க போலீஸ் ரேவதிக்கு துணை நிற்க வேண்டும்*
அந்த காவலர் கேட்கவும் கோரிக்கைகள்...
எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்படக் கூடாது..
என் பணிக்கு எந்தவித பிரச்சனையும் உருவாக்க ஏற்படக்கூடாது..
எனக்கு மன உளைச்சலாக இருக்கிறது ஆதலால் எனக்கு கவுன்சிலிங் தேவைப்படுகிறது..
போலீஸ் உயர்அதிகாரிகள் மிரட்டல் இருக்கக் கூடாது..
நான் பணிக்கு சென்று வரும்போது எனக்கு எந்தவித மான அசம்பாவிதம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்..
குறிப்பு: (அவர் இந்த ஆடியோவில் பேசும் போது மிகவும் பதற்றமாக உள்ளார்)..
நான் என் பணிக்கு நேர்மையாக இருந்து சாட்சி கூறியிருக்கிறேன் ஆதலால் நான் கேட்கும் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்..
ஆதலால் பொதுமக்களும், வழக்கறிஞர்களும், பத்திரிகைத்துறையும், நீதி அரசர்களும், அரசாங்கம் அவருடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வழிவகைகள் செய்ய வேண்டும்..
குறிப்பு : (தமிழக காவல் துறையின் தலைவர் டிஜிபி அவர்கள் தன் கீழ் பணிபுரியும் வீரமிக்க காவலர் ரேவதியின் பாதுகாப்புக்கும் அவருடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் இது அவருடைய கடமையாகும்).
பா. டில்லி கணேஷ்
வழக்கறிஞர்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.