16/02/2018

Clover field paradox அறிவியல் விரும்பிகளுக்கான மற்றுமொரு படம்...


கதை படி ஒரு ஸ்பேஸ் ஷிப் குழு ஒன்று space இல் ஆய்வு ஒன்று செய்கிறது.

அதாவது பூமியில் energy sorce தீர்ந்து வரும் நிலையில் free energy பெற துகள் முடக்கி (particle accelator ) கொண்டு ஆற்றலை பெற முயற்சிக்கிறது.

பூமியில் நாம் வைத்துள்ள மிக பெரிய ஆய்வு கூடம் அல்லது ஆய்வு கருவி எது என்றால் அது hadron collieder எனும் துகள் முடக்கி தான்.

கிட்ட தட்ட 20 கிமி சுற்றளவு கொண்ட பிரமாண்ட ஆய்வு கருவி அது (படத்தில் அல்ல நிஜத்தில்) அந்த collider இன் மினி வடிவம் ஒன்றை அந்த ஸ்பேஸ் ஷிப் இல் வைத்து இருக்கிறார்கள் அதை வைத்து தான் இந்த ஆய்வு செய்கிறார்கள்.

பல முறை தோல்விக்கு பின் வெற்றிகரமாக அது ஆற்றலை உமிழ்கிறது...

அப்படினு.. நினைத்து சந்தோஷ படுவதற்குள் அந்த கருவி over load ஆகி துகள் களை ஆற்றல்களை வெடித்து சித்தறடிக்கிறது.

அந்த கருவி மிக ஆற்றல் வாய்ந்த ஒன்று எந்தளவு என்றால் அது space time யை யே கிழித்து ரியாலிட்டி யை மாற்றி வேற வேற டைம் லைன்களை இணைத்து மல்டி வெர்ஸ என்று சொல்ல கூடிய பல பரிமாணம் கொண்ட வெவ்வேறு இணை பிரபஞ்சம் அல்லது இணை உலகங்களை ஒன்றாக்கி குழப்பம் விளைவித்து விடுகிறது.

விளைவு ? இங்கே செத்தவன் அங்கே உயிரோடு இருக்கான் அங்கே இருந்து ஒருத்தி இங்க வரா... இன்னோரு டைம் லைன்ல உலக போர் அரம்பிக்குது..
இன்னோரு டைம் லைன்ல மான்ஸ்டர் விலங்குகள் எல்லாம் கிளம்புது...

ஏற்கனவே வந்த clover field படங்களின் தொடர்ச்சியாகவும் அதில் நடந்த நிகழ்வுகளுக்கு லாஜிக் சொல்லும் படியாகவும் இருக்கிறது இந்த பார்ட்.
ஆனாலும் பல பரிமாண கலப்பு ..வேற வேற டைம் லைன் இணைப்பு..
மல்டி வெர்ஸ்... ஸ்பேஸ் டைம் ல ஓட்டை னு செம விஷயங்களை கையில் எடுத்து உள்ள இந்த படம் இன்னும் நிறைய விதமாக அதை அறிவியல் கற்பனை காட்சிகள் கொண்டு பிரமாண்டமாக கொடுத்து இருக்கலாமோ என்று படுகிறது.

சாதாரணமான ஆக்ஸன் சண்டைகள்
காட்சி அமைப்புகளுக்கு  இவ்வளவு அறிவியல் பின்புலம் கொண்ட கதை எதற்கு என்ற கேள்வி வருகிறதே..

சரி இனி வரும் clover field பாகங்கள் அதை பூர்த்தி செய்கிறதா என்று பார்ப்போம்...

தாமரை மொட்டு மலர்ந்தவுடன் இலங்கையில் தமிழினம் அழிக்கப்பட்டது (ராஜபக்சே கட்சி கொடி) தற்போது..?


சிந்தியுங்கள் இளைஞர்களே...


கப்பற்படையே வைத்து உலகையே ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழப் பேரரசு...


கப்பலோட்டி உலகை வென்ற இராசராச சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்...

இராசராச சோழன் என்றாலே காலாற்படை முதல் யானை படை வரை நடுநடுங்கிப் போகும். வானுயர் வெற்றிகளை முடிசூடிய மாமன்னன் என்றால் சாதாரணமா என்ன..

பண்டையக் காலத்திலேயே கப்பற்படை வைத்து உலகை ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழப்பேரரசு...

ஆயிரம் வருடம் ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல, ஆயிரம் வருடங்களாக கப்பற்படையை வைத்து அரசு நடத்தியப் பெருமை உலகிலேயே சோழ பேரரசிற்கு மட்டும் தான் இருக்கிறது.

கனம்...

இந்த கப்பற்படையில் நிறைய போர் வீரர்களை கொண்ட குழு ஒன்று பிரிக்கப்பட்டிருக்கும், அவர்களை "கனம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களை தலைமை தாங்கி இருந்தவரை, "கனாதிபதி" என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.

கன்னி...

தமிழில் "கன்னி" என்பதற்கு இளம் மங்கை என்று மட்டும் பொருள் அல்ல, "பொறி" என்ற மற்றொரு பொருளும் இருக்கின்றது. எதிரிகளை பொறி வைத்துப் பிடிக்கும் கப்பற்படை வீரர்களை, "கன்னி" என்று அழைத்திருக்கின்றனர். இவர்கள் தான் சிறப்பு பணியில் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை நிர்வாகிப்பவர், "கலபதி" என்று அழைக்கப்படுவார்.

ஜதளம் அல்லது தளம்...

கப்பற்படையில் சக்தி வாய்ந்த குழுவாக திகழ்பவர்களை, ஜதளம் என்பார்கள். சுருக்கமாக இவர்களை "தளம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவர்களை நிர்வகிப்பவர், "ஜலதலதிபதி" என்னும் நபர் ஆவார்.

மண்டலம்...

கப்பற்படையின் பாதி நிரந்திர போர் குழுவை, மண்டலம் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களை தலைமை வகிக்க மண்டலாதிபதி என்பவர் நியமிக்கப்பட்டிருப்பார். இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும். இவர்கள் தனி, தனியாகவும், குழுவாகவும் சென்று போர் புரிவதில் வல்லமைப் பெற்றவர்கள்.

நிரந்திர போர் பிரிவு நாம் முன்பு குறிப்பிட்டிருந்த, "கனம்" பிரிவை சேர்ந்தவர்கள் தான் நிரந்திர போர் பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களிடம் 100 இருந்து 150 கப்பல்கள் வரை இருக்கும். மூன்று "மண்டலம்" குழுவை உள்ளடக்கி இருக்கும் குழுவானது "கனம்" என்று கூறப்படுகிறது.

அணி...

பெரிய போர்களில் ஈடுபட மட்டுமே உபயோகப்படுத்தப்படும் குழுவை "அணி" என்று கூறுகின்றனர். ஒரு அணியில் மூன்று "கனம்" குழு உள்ளடங்கி இருக்கும். 300-500 கப்பல்கள் வரை இந்த குழுவில் இருக்கும். மாபெரும் அணியான இதை தலைமை தாங்குபவர், "அணிபதி" என்று அழைக்கப்படுவர்.

அதிபதி...

இதெல்லாம் போக இந்த அனைத்து குழுக்களையும் தலைமை தாங்கும் நபர் தான் "அதிபதி". இவரின் கட்டளைகளுக்கு இணங்க அனைத்து குழுக்களும் இயங்கும். இவர் இளவரசருக்கு கீழ் இருப்பவர்.

கைப்பற்றிய பகுதிகள்...

இந்த மாபெரும் கப்பற்படையை வைத்து தான், இந்தோனேசியா, யா(ஜா)வா, மாலத்தீவு, சிங்கப்பூர், இலங்கை, ஆங்கோர், கடாரம் போன்ற பல பகுதிகளை வென்றுள்ளது சோழப் பேரரசு.

"நாவாய்" பண்டைய தமிழர்களின் "நாவாய்" என்ற கப்பற்படையின் பெயர் தான் ஆங்கிலத்தில் "நேவி" (Navy) என்று அழைக்கப்படுகிறது...

ஜல்லிக்கட்டு போராட்டம் கொடுத்த அடி பாஜக வுக்கு இன்னும் வலிக்குது போல...


கொடைக்கானலில் வனத்துறையினர் கொடூரமாக தாக்கியதாக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் கை கால் எலும்பு முறிந்த நிலையிலும், படுகாயத்துடனும் 9 பேர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை...


மன்னவனூர் அருகே உள்ள வருவாய் நிலத்தில் சுற்றுலாவை மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருந்தவர்களை இது வனப்பகுதி என்று சொல்லி பணம் கேட்டதால்

தனியார் விடுதி ஊழியர்களுக்கும் வனத்துறைக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து 12 பேரை வனத்துறை அதிகாரிகள் வனப் பகுதிக்குள் அழைத்துச் சென்று சரமாரயாக தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு.

பயங்கரமாக தாக்கி துப்பாக்கி முனையில் வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கியதாகவும் குற்றச் சாட்டு.

இவர்களை விடுவிக்க லட்சக் கணக்கில் மாவட்ட வன அலுவலரின் பெயரைச் சொல்லி வனத்துறையினர் லஞ்சம் கேட்டதாகவும் குற்றச்சாட்டு.

தாக்குதலில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை...

அமெரிக்கா போர் புரிவதற்கான காரணம் ஒரு நாட்டின் சுதந்திரத்திற்காக இல்லை, தன்னைத்தவிர வேறெந்த நாடும் வல்லரசு என்ற வளையத்திற்குள் வரக்கூடாது என்பதற்காக மட்டும் தான்...


லஞ்சம் வாங்கி பிழைப்பு நடத்தும் சமூக விரோதிகளே.. உழைத்து உண்ணும் இவரை பாருங்கள்....


ஊனமுற்றோர் என்ற சான்றிதழ் வழங்குவதற்கு கூட உன் சுயரூபத்தை இவரிடமும் காண்பித்துயிருப்ப்பீர்கள்...

அரசாங்கத் தேவையை நிறைவேற்றும் மூன்று துறைகள்...


பழந்தமிழர் வாழ்வில் முக்கிய பங்கு வகித்த கருப்பட்டி இன்று தமிழர்களால் முற்றிலும் மறக்கப்பட்டு வருகிறது...


ஆளுக்கொரு பனங்கருப்பட்டி பயன்படுத்தினால் பல லட்சம் பனைமரங்கள் வெட்டாமல் காக்கப்படும் என்பதே மறைமுக உண்மை.

பனை வளர்ப்பு பற்றி பெரிதாக பேசும் நாம் இருக்கும் பனைகளை காப்பதற்கு அதை சார்ந்து வாழும் மக்களை வளப்படுத்துவோம்.

பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.

வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.

கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன.

கருப் பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும்.

சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதி கமாக இருக்கிறது.கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது...

இந்தியா ஜனநாயக நாடா ?


68 ஆயிரம் காஷ்மீரிகளைக் கொன்ற ஒரு இந்திய ஒன்றியத்தை  ஜனநாயக நாடு என்று கூற உரிமையில்லை..

குசராத்தில் 2500 இசுலாமியர்களை இனப்படுகொலைச் செய்த ஒரு நாட்டிற்கு மதசார்பற்ற நாடு என்றும் கூற தகுதியில்லை..

இலங்கையுடன் கூட்டு சேர்ந்து 2 இலட்சத் தமிழர்களை கொன்று குவித்த இந்தியம் அமைதிக்கான தேசமும் அல்ல...

இந்தியன் என்பது அவமானம்..
தமிழன் என்பதே அடையாளம்...

அட மானங்கெட்ட தமிழா.. இது தான் உன் இந்தியா...


இந்திய இராணுவத்திற்கு ஆயுதம் வாங்குவதே.. தமிழனை அழிக்க தான்...

கூடாங்குளத்திற்கு அனுமதி.
கெயிலுக்கு அனுமதி.
மீத்தேனுக்கு அனுமதி.
சார்ட்டிலைட்க்கு அனுமதி.
நியூட்ரீனோக்கு அனுமதி.
சாகர்மாலாக்கு அனுமதி.

கடைசித் தமிழன் சாகும் வரை விட மாட்டான் இந்தியன்.

உலகாண்ட இனம் உருக்குலைந்து போகட்டும்.

அயலாருக்கும் அன்னமிட்ட இனம் அழிந்து போகட்டும்.

தமிழா நாயினும் கீழாய் தாழ்ந்து போ..

நக்கிக் குடி அதை நல்லதென்று சொல்..

இழந்து வாழ் இந்தியன் என்று கூவு....

மானங்கெட்ட ஜென்மங்களா...
இன்னுமா டா நீங்கள் இந்தியன்...

பறிபோன செங்கோட்டை காடு...


மொழிவாரி மாநிலங்கள் மாற்றியமைக்கப்பட்ட போது இரு மாநிலங்களுக்கு இடையே இயற்கையான எல்லையாக அமைந்துள்ள காடுகளைப் பங்கிடுவதில் சிக்கல் வந்தது.

அப்போது வகுத்த விதிப்படி ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 30% காடுகளாக இருக்க வேண்டும்.

ஆனால் இதிலும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது.

தமிழகத்தின் மேற்கும் வடக்கும் மலைகளாலும் காடுகளாலும் சூழப்பட்டு இருக்கிறது.

ஆனால் இந்த இயற்கையான எல்லையைத் தாண்டி மறுபக்கமும் தமிழர் வாழ்ந்தனர்.

அவை பறிபோனதுடன் காடுகளையும் கூட தமிழகத்துக்கு தராமல் ஆக்கிரமித்துக் கொண்டனர்.

இதில் கேரளா அளவுக்கதிகமான காடுகளை எடுத்துக் கொண்டது.

(அப்போது கேரளாவில் பாதிக்கு மேல் காடாக இருக்க, தமிழகத்தில் கால்பங்குகூட காடு இல்லை).

பறிகொடுத்த வரலாற்றில் சிறந்த எடுத்துக்காட்டு செங்கோட்டை தாலுகாவில் இருந்த (ஆரியங்காவு மற்றும் குளத்துப்புழா இருக்கும்) செங்குறிஞ்சி, பொன்முடி காடுகள்  பறிபோனது ஆகும்.

1931 மக்கட்தொகை கணக்கெடுப்பு செங்கோட்டை தாலுகா 100% தமிழர் வாழ்ந்த பகுதி்.

அன்றைய மலையாள இனவெறி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த தமிழர் பகுதிகளை மீட்க நேசமணி அவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக அவர் கேட்டதில் பாதி கிடைத்தது.

இதில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை அடங்கும்.

மீட்ட பகுதிகளை ஒரே மாவட்டமாக்கும் போது நேசமணியார் செங்கோட்டையை கன்னியாகுமரியின் ஒரு பகுதியாக வைத்திருப்பது மக்களுக்கு இடைஞ்சல் என்று அதை திருநெல்வேலிக்கே கொடுத்தார்.

இழந்த செங்கோட்டை வனப்பகுதி 1950களிலேயே ஆண்டுக்கு 5கோடி வருமானம் கொடுத்த வளமான பகுதியாகும்.

இதை நாம் இழந்தோம்.

வரைபடம்: அன்றைய செங்கோட்டை தாலுகா மீது இன்றைய எல்லை வரையப்பட்டுள்ளது...

சாதியை மட்டுமே வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் விசிக திருமா.. தனக்கு தானே அறிவுரை சொல்லிக் கொள்கிறார்...


மனம் தான் மனித வாழ்வின் விளைநிலம்...


அதை செம்மையாக வைத்துக் கொண்டால் வாழ்வு வளம் பெறும்.

மனதை அடக்க நினைத்தால் அலையும்.

அதை அறிய நினைத்தால் அடங்கும்.

தவறு செய்வதும் மனம் தான்.

இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் மனம் தான்.

அன்றாடம் மனம் பலவிதமான விஷயங்களில் அலையவிட்டு தடுமாற்றம் பெறுகிறது.

குறிப்பிட்ட நேரம் தியானம் செய்து மனதை தூய்மைப்படுத்தினால் மனநலம் மேம்பாடு அடையும்.

வாழ்வில் இடையிடையே சிக்கல்கள் ஏற்படுவது இயற்கையே.

அதைக் கண்டு மிரள்வது அறிவுடைமை ஆகாது.

அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்து தீர்வு காண்பதே சிறந்தது.

கவலைப்படுவதால் மட்டுமே சிக்கலில் இருந்து மீளமுடியாது.

இன்னும் சொல்லப் போனால் கவலையின் போது பிரச்சனை மேலும் பெரிதாகிவிடும்.

தீர்க்க முடியாத துன்பம் என்ற ஒன்று வாழ்வில் கிடையவே கிடையாது.

தீர்க்கும் வழிவகைகளை அறியாமல் தான் நாம் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறோம்.

திறக்க முடியாத பூட்டு எதுவுமில்லை அதற்கான சரியான சாவியைத் தேடிப் பிடித்தால் போதும்...

உசார் மக்களே.. பஸ் வராத மாதிரி.. கரன்ட்டையும் நிறுத்திருவானுங்க...


விளைச்சலை கண்ணு வைத்து விடக் கூடாது என்பதற்காக பிரபல நடிகையின் புகைப்படத்தை கண் திருஷ்டி பேனராக வைத்த ஆந்திர மாநில நெல்லூர் விவசாயி...


செஞ்சு ரெட்டி என்ற விவசாயி கூறுகையில் , இந்த ஆண்டு நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. அதை பார்த்து பொதுமக்கள் யாரும் கண்ணு வைத்து விடக் கூடாது என்பதற்காக அவர்களின் பார்வையை திருப்புவதற்காக இந்த புகைப்படத்தை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்...

இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் உங்களையெல்லாம் திருத்த முடியாது...


RMS Queen Mary - கப்பலில் ஆவிகள் உலவும் திகில் மர்மம்…


RMS குயின் மேரி.. இது டைட்டானிக் கப்பல் கட்டப்பட்டுவதற்கு முன்பே கட்டப்பட்ட பிரம்மாண்ட கப்பல்..

இது இப்போது கலிபோர்னியாவின் லாங் பீச் கடற்கரை மணல் திட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட ஹோட்டல்.

இந்த கப்பலில் இரவு தங்கும் சூயுட்ஸ்கள் (365) , டைனிங் ஹால்கள், பங்விட் [Banquet ] எனப்படும் இரவு நினைவு பார்டிகள், வரலாற்று தேடல்களுக்கான சுற்றுலா, எல்லவற்றிற்கும் மேலாக ஆவி மற்றும் பிசாசு அனுபவங்களை பெற அழைப்பு விடுக்கிறார்கள்.

இந்த ஹோட்டலுக்கு ஆண்டுக்கு 1.4 மிலியன் பேர் வந்து செல்கிறார்கள்..

ஹவுண்டேட் பகுதியாக சொல்லப்படுகிற இந்த பிரம்மாண்ட கப்பல் குறித்த தகவல்களை காண்போம்..

ஜான் ப்ரெளண் கம்பெனி (ஸ்காட்லாந்து) மற்றும் குனார்ட் ஸ்டீம்சிப் நிறுவனத்தால் பொருளாதார நெருக்கடியினால் முக்கால் பாகம் கட்டி முடிக்கப்பட்டு ஒன்பது தளங்கள் கொண்டு முழுமையாக முடியாத நிலையில் 1931 ல் இருந்தது..

பின்னர் இந்த நிறுவனம் வைட் ஸ்டார் லைன் கம்பெனியுடன் இணைந்து இந்த கப்பலை 1936 ல் உருவாக்கினார்கள்..

இந்த வைட் ஸ்டார் லைன் தான் புகழ் பெற்ற டைட்டானிக் கப்பலை நடத்தி வந்த நிறுவனம்..

அதனுடைய சாயல்கள் இந்த கப்பலில் பார்க்கலாம்.. அதை விடவும் இது பெரியது.

இந்த பிரம்மாண்ட கப்பலின் நீளம் 1019.5 அடி, உயரம் 181 அடி புகைகூண்டு வரை,எடை 81,237 டண்கள், இதன் எஞ்சின் 1,60,000 குதிரைதிறன் கொண்டது. 3000 பேர் சொகுசாக பயணிக்கலாம். இக்கப்பலுக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் கிரே கோஸ்ட்…

மே 27, 1936 ல் வெள்ளோட்டத்தை துவக்கி சிறப்பித்தவர்கள் எட்டாம் எட்வர்ட் அரசர், ராணி மேரி, இளவரசி எலிசபத், டச்சு பிரபுக்கள்.

1001 அட்லாண்டிக் பயணங்களை முடித்து செப்டம்பர் 19, 1967 ல் ஓட்டத்தை நிறுத்தியது அதாவது 31 வருடங்கள் உழைத்தது.

இதனுடைய பெரிய உருவம் காரணமாக பனாம கால்வாய் வழியாக செல்ல முடியவில்லை.

அமானுஸ்யம் மற்றும் ஆவிகள் [ஸ்ப்ரிட்] குறித்த ஆராய்சியாளர் பீட்டர் ஜேம்ஸ். 1991 இல் இருந்து இக்கப்பலில் இது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவர்.

அவர் இப்படி கூறுகிறார்...

எனது ஆராய்சியின் படி குயின் மேரி அதித பேய்கள் நடமாட்டப் பகுதியாக கருதுகிறேன். பேய் குறித்த ஆராய்சிகள் உலகின் பல பகுதிகளில் மேற்கொண்டேன்.

இந்த கப்பலில் 600 பேய்கள் ஆக்டிவாக இருக்கு, அநேக துர் மரணங்கள் இந்த கப்பலில் ஏற்பட்டது காரணமாக இருக்கலாம்.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் 16000 துருப்புகளை ஏற்றி இறக்கி உள்ளது.

இந்தியப் பெருங்கடலின் அதிக வெப்பத் தாக்குதல் காரணமாக அதிக அளவில் இறந்துள்ளனர்.

இறப்பு எண்ணிக்கை அச்சமயத்தில் ஒருமணியில் 7 நிமிடங்களுக்கு ஒருவர் இறந்ததாக நம்பப்படுகிறது.

மேலும் U.S கூட்டணி துருப்புகள் பிடித்த ஜெர்மன் மற்றும் இத்தாலிய போர்க்கைதிகள் இதில் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

சிறைக்கொடுமைக்கு பயந்து அநேகர் தற்கொலை செய்து கொண்டனர்.

சரியான மருத்துவ வசதி மறுக்கப்பட்டும் பலர் இறந்தனர். [ எண்ணிக்கை தெரியவில்லை…] அந்த கால கட்டங்களில் சர்வீஸ் ராணுவத்தின் கையில் இருந்திருக்கிறது.

இதன் குராகோ எனும் பாதுகாப்பு [எஸ்கார்டு போட்டுகள்] கப்பல்களின் மேல் மோதி 300 பேர் வரை அப்போர் சமயத்தில் மூழ்கி இறந்தனர்.

இக்கப்பலில் விநோத சப்தங்களும்.. காப்பாற்றச் சொல்லும் கூக்குரல்களும் ஓலங்களும் சில பகுதிகளில் கேட்கிறது.

இதில் இருந்த நீச்சல் குளத்தில் பல பேர் செத்துள்ளார்கள். 13 நம்பர் அறை காற்று புகாவண்ணம் அடைக்கப்பட்டுள்ளது.

கப்பலின் மையப்பகுதியில் முதல் தர நீச்சல் குளத்தின் அருகில் 4 – 5 வயதுள்ள சிறுமி தன்னோடு பேசியதாகவும்.. கப்பலின் மற்றொரு நீச்சல் குளத்திற்கு அழைத்ததாகவும்.. இச்சிறுமியின் பெயர் ஜாக்கி எனவும்.. சில சமயங்களில் இவளைத் தேடி சாரா எனும் நடுத்தர பெண்மணி ஒருவரும் வந்து சென்றதாகவும் கூறுகிறார்.

அந்த குறிப்பிட்ட நீச்சல் குளம் மூடப்பட்டுள்ளது. மேற்படி இருவரும் அந்த நீச்சல் குளத்தில் முழ்கி இறந்தவர்கள்… கப்பலின் கேப்டன் ஸ்டார்க் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டதாகவும்.. ஸ்பிரிட் சிறுமி ஜாக்கி நகர்த்திய பொம்மை பற்றிய வீடியோ டேப் பதிவு உள்ளதாகவும். இச்சிறுமியை தான் மட்டுமல்ல நூறுபேர் ஒரே சமயத்தில் பார்த்துள்ள சாட்சி இருக்கிறது என்கிறார்…

சாரா நகத்தால் கையில் பிராண்டியது…
இப்படி பல தகவல்களை பீட்டர் ஜேம்ஸ் அடுக்குகிறார்..

ரூபின் வாக்னர் எனும் பெண்மணி, இதன் மார்கெட்டிங் கம்யூனிகேசன் டைரக்டர்..

ஒரு கால கட்டத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைவு, விமான பயண அதிகரிப்பு, அதிகரித்த செலவு இவை காரணமாக இக்கப்பல் பயணம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கிறார்.

ஐரோப்பா மற்றும் யூனைடேட் மாகாணத்திற்கிடையே இக்கப்பல் இயங்கிவந்ததாகவும் இதன் பெரிய உருவம் காரணமாக பனாமா கால்வாய் கடல் பகுதியில் நுழையாமல் போனதாலும் இதன் இயக்கம் நிறுத்தப்பட்ட தாகவும் தெரிவிக்கிறார்.

அவருக்கு ஸ்ப்ரிட் அணுபவங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் ஆனால் சக ஊழியர்களுக்கு ஏற்பட்ட பல அனுபவங்கள் தன்னோடு பகிர்ந்து கொள்ளப்ப்பட்ட தாகவும் சொல்கிறார்.

அலுவலக ஜன்னல்கள் அடைக்கப்பட்ட நிலையில் தானாக திறந்து மூடும் கதவுகள். பழங்கால உடையணிந்த உருவங்களின் நடமாட்டம். கப்பலின் வெவ்வேறு இடங்களில் துண்டிக்கப்பட்ட தலைகள். கை. கால்கள். உருவங்கள் தோன்றி மறைதல்… என பல சம்பவங்கள் சொல்லப்படுகின்றன.

முனுமுனுக்கும் குரல்கள், அடித் தொண்டையில் வெளிப்படுத்தப்பட்ட சப்தங்கள்.. சர்சில் சூயூட் பகுதியில் ரூமின் சுவரில் அவரின் நேம் போர்டு தோன்றி மறந்த நிகழ்வு. [கப்பலில் புகைப்பது தடை செய்யப்பட்டுள்ளது] சுருட்டு புகை.. வாசனை நடுநிசி மர்மங்கள். சில்லிட்ட உணர்வு.. சில ரூம்களில் கட்டில் நகர்வு… சுவரினுள்ளிருந்து வெளியே தோன்றி மறைந்த உருவங்கள்.. அணைக்கப்பட்டிருந்த விளக்குகள் எரிந்து அணையும் மர்மம்..

இவையெல்லாம் கேட்பதற்கு ஏதோ சினிமா காட்சிகள் போலவே இருக்கிறது. ஆனால் உண்மை என்கிறார்கள் சென்று அனுபவப்பட்டவர்கள்...

தூத்துக்குடியில் புற்றுநோய் நிறைந்த ஸ்டெர்லைட் ஆபத்து.. என்ன செய்ய போகிறோம்.?


மகாபாரதப் போரும் தமிழர்களும்...


மகாபாரதப் போரானது பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் கவுரவர்கள் நூற்றுவருக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

வியாசர் இயற்றிய மகாபாரத நூலின்படி இந்த பாண்டவர்கள் ஐந்து பேரும் பாண்டு மன்னனின் பிள்ளைகள் என்றும் கவுரவர்கள் நூற்றுவரும் திருதராட்டிரனின் மக்கள் என்றும் சொல்லப்படுகிறது.

குருசேத்திரம் என்னும் இடத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்த பெரும்போர் உண்மையிலேயே நடந்ததா? கற்பனையாகக் கூறப்படும் ஒன்றா?

உண்மை என்றால் எந்த அளவிற்கு அதில் உண்மை கலந்துள்ளது என்று காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

உண்மையில் இந்த மகாபாரதப் போரானது தொல் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து தமிழ் மன்னர்களுக்கும் வேற்றினத்தாருக்கும் இடையில் நடந்த போராகும்.

இந்த வேற்றினத்தாருக்கு என்ன பெயர் வைப்பது?

ஏற்கெனவே ஆரியர் என்ற சொல் புழக்கத்தில் இருந்தாலும் இச்சொல் பல குழப்பங்களையே தோற்றுவித்துள்ளது.

எனவே இந்த வேற்றினத்தவருக்கு 'நூற்றுவர்' என்ற பெயரையே கொள்ளலாம்.

இந்த மகாபாரதப் போரானது பல நாட்கள் நீடித்ததாகச் சொல்லப்படுகிறது.

என்றால், ஒரு ஐந்து பேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல பல நாட்களாகுமா?. என்ற ஐயம் மனதில் எழலாம்.

அதுமட்டுமின்றி, வெறும் ஐந்துபேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல முடியுமா? என்ற கேள்வியும் கூடவே எழலாம்.

இக் கேள்விகளுக்கான விடைகளை மட்டுமின்றி இப் போரில் பங்கேற்ற அந்த ஐந்து தமிழ் மன்னர்கள் யார் யார்? என்றும் கீழே காணலாம்...

தமிழ் மன்னர்கள்...

தொல் தமிழகத்தில் இருந்ததாகக் கூறப்படும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களையும் ஆண்டு கொண்டிருந்த ஐந்து தமிழ் மன்னர்கள் தாம் இந்த மகாபாரதப் போருக்குத் தலைமையேற்றவர்கள் ஆவார்.

இவர்கள் ஐவரின் தலைமையில் பல்லாயிரக் கணக்கான தமிழ் வீரர்களும் நூற்றுவர் தலைமையில் பல்லாயிரம் எதிரி வீரர்களும் நிலம் அதிரப் பொருத 'தும்பை' வகைப் போரே மகாபாரதப் போர் ஆகும்.

இப்போரில் பங்கேற்ற ஐந்து தமிழ் மன்னர்கள் தான் பிற்காலத்தில் பாண்டவர்களாகிய தருமன், அர்ஜுனன், பீமன், சகாதேவன், நகுலன் என்று அழைக்கப்பட்டனர்.

இப் பெயர்கள் இம் மன்னர்களின் இயற்கைப் பெயர்கள் அல்ல; பட்டப்பெயர்கள்.

ஒவ்வொரு நிலத்தில் இருந்தும் வந்த இம் மன்னர்களுக்கு அவர்களின் தனிச்சிறப்பு கருதி இடப்பட்ட தமிழ்ப் பெயர்களே வடமொழியில் இவ்வாறு திரிபுற்று வழங்கப்படுகின்றன.

தருமன் : பாண்டவர் ஐவரில் முல்லை நிலத்து மன்னனாக வந்தவனே தருமன் ஆவான். கற்பு நெறியும் ஒழுக்கமும் சான்ற முல்லை நிலத்தில் இருந்து வந்தமையால் இம் மன்னனுக்கு தருமன் என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது.

தருமன் என்ற தமிழ்ப் பெயரே தர்மா என்று வடமொழியில் வழங்கப்பட்டது.
தருமன் -----> தர்மா

மேகத்தை தெய்வமாகக் கொண்டது முல்லை நாடு. இந்த மேகம் தரும் மழையோ தருமத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நாட்டில் தருமம் பிறழும் போது மழையில்லாமல் போவதை நாம் அறிவோம். திருவள்ளுவரும் இக் கருத்தை பல இடங்களில் வலியுறுத்தி உள்ளார். இப்படி முல்லை நிலமானது தருமத்தையே தலைமேற்கொண்டு விளங்குவதால் இந் நாட்டில் இருந்து வந்த மன்னனுக்கு அவரது நாட்டின் சிறப்பான தருமம் பற்றி 'தருமன்' என்ற பெயரை சூட்டியிருக்கலாம்.

அர்ஜுனன் : குறிஞ்சி நிலத்தில் இருந்து வந்த மன்னனே அர்ஜுனன் ஆவான். இவனது பட்டப்பெயர் அருஞ்சுனையன் என்பதாகும். அரிய பல சுனைகளை உடைய மலைநாட்டில் இருந்து வந்தமையால் இவன் அருஞ்சுனையன் எனப்பட்டான். இவன் சிறந்த வேடன் ஆவான். வில் எய்வதில் நிகரற்ற ஆற்றல் உடையவனாக அறியப்பட்டான். அருஞ்சுனையன் என்ற தமிழ்ப் பெயரே அர்ஜுனா என்று வடமொழியாக்கப் பட்டிருக்கலாம்.

அருஞ்சுனையன் -----> அர்ஜுனா.

பீமன் : மருத நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே பீமன் ஆவான். இவனது பட்டப்பெயர் பருமன் என்பதாகும். ஓங்கிய உருவமும் அதற்கேற்ப ஈடான உடலும் வலிமையும் கொண்டவனாக இருந்ததால் பெருமை கருதி பருமன் எனப்பட்டான். பருமம் உடையவன் ஆதலால் பருமன் எனப்பட்டான். இப் பருமன் என்ற தமிழ்ப் பெயரே வடமொழியில் பீமன் என்று வழங்கப்படுகிறது.

பருமன் ----> ப்ரமன் ---> பீமன் ----> பீமா.

அதுமட்டுமின்றி, ஐந்து பூதங்களில் வலிமை மிக்கது காற்று ஆகும். மெல்லிய தென்றலாய் வருடிக் கொடுப்பதும் புயலாய் மாறி பொருட்களை புடைபெயர்த்து இடுவதும் காற்றே ஆகும். வலிமையின்றி தொய்ந்து கிடக்கும் ஒரு டயருக்குள் காற்றினை அடித்தவுடன் அது ஒரு வண்டியையே தாங்கி நிற்கும் ஆற்றலைப் பெறுகிறது. இந்த காற்றின் ஆற்றல் சிறப்புற்று விளங்கும் மருதநிலத்தில் இருந்து வந்தவன் என்பதாலும் காற்றைப் போல எதிரிகளை தனது உடல் வலிமையால் பந்தாட வல்ல பலசாலி மன்னன் என்பதாலும் இவனுக்கு இப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.

பருமன் என்ற சொல்லில் இருந்து தோன்றிய ப்ரமன் என்ற சொல்லே பிரம்மாண்டம் (பெரியது) என்ற சொல்லுக்கும் வலிமை மிக்க சுழல் காற்றினைக் குறிக்கும் பிரமம் என்ற சொல்லுக்கும் ஆதாரமாய் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ப்ரமன் ----> பீமன் (பருமையும் வலிமையும் கொண்டவன்)
ப்ரமன் ----> ப்ரமாண்டம் (பெரியது)
ப்ரமன் ------> ப்ரமம் (வலிமையான சுழல்காற்று).

சகாதேவன் : நெய்தல் நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே சகாதேவன் ஆவான். இவனது பட்டப்பெயர் சகடதேவன் ஆகும். இப் பெயரே சகாதேவ் என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.

சகடதேவன் ------> சகாதேவா.

வண்டிச் சக்கரங்களைச் (சகடம்) செய்வதில் பெயர் பெற்றிருந்தவர்கள் இந் நிலத்து மக்கள் ஆதலால் அச் சிறப்பு கருதி இவனுக்கு இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். ஐந்துநில மக்களிலும் கடலில் செல்லும் மரக்கலங்களை முதலில் கண்டறிந்தவர்கள் நெய்தல் நில மக்களே ஆவர். கடலில் இருந்து விளைவிக்கப்பட்ட உப்பினை ஏற்றிச் செல்லத் தேவையான வண்டியையும் சக்கரங்களையும் முதலில் கண்டறிந்ததும் நெய்தல் மக்களாகவே இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அதிக விளைபொருட்களை உடைய மருத நிலத்தில் பொருட்களைக் கடத்த மாடுகள் இருந்தன. முல்லை நிலத்திலோ குறிஞ்சி நிலத்திலோ வண்டிகளில் ஏற்றிக் கடத்த வேண்டிய அளவுக்குப் பொருட்பெருக்கம் இல்லை. பாலைநிலத்தில் கொள்ளையடிப்பதைத் தவிர வேலை எதுவும் இல்லை. எஞ்சியுள்ள நெய்தல் நிலத்தாருக்கு மட்டுமே பெரும் அளவிலான மீனையும் உப்பினையும் கடத்த வேண்டிய சூழல் இருந்ததால் அவர்களே வண்டிகளைக் கண்டறிந்திருக்கலாம். முதன்முதலில் கையால் தள்ளப்பட்ட இந்த வண்டிகளில் மாடுகளைப் பூட்டி இழுக்கும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டிருக்க வேண்டும்.

நகுலன் : பாலைநிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே நகுலன் ஆவான். இவனுடைய பட்டப்பெயர் நற்குலன் என்பதாகும். இப் பெயரே நகுலா என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.

நற்குலன் -----> நகுலா.

முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை என்னும் நான்கு நிலங்களுக்கும் தனித்தனியே சிறப்பு உண்டு. ஆனால் பாலை நிலத்து மக்களுக்கு என்ன சிறப்பு உள்ளது? பிறரது பொருட்களை கொள்ளையடிப்பதைத் தவிர அவர்கள் வேறெதுவும் அறியாதவர்கள். இருந்தாலும் தமிழருக்கு எதிரான போர் என்றதும் தானாகவே வந்து தனது ஆதரவைக் காட்டினான் இந் நிலத்து மன்னன்.

தொல்காப்பியர் கூறியதைப் போல இம் மன்னன் கடைக்குலத்தவனாகவே இருந்தாலும் ஆதரவு தந்து போர் புரியத் தயாராக இருந்ததால் அவனுக்கு 'நல்ல குலத்தவன்' என்ற பொருளில் 'நற்குலன்' என்ற பட்டப்பெயரைச் சூட்டியுள்ளது தமிழரின் பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது.

இதுவரை கண்டவற்றை கீழ்க்கண்டவாறு தொகுத்து வழங்கலாம்.

போர் நடந்த இடம்...

இந்தியாவின் தற்போதைய அரியானா மாநிலத்தில் உள்ள குருசேத்திரம் என்ற ஊரில் தான் இப்போர் நடந்ததாகக் கூறப்படுகிறது.

தொல் தமிழகப் பகுதிகளில் தமிழ் மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த பொழுது ஆஃப்கானிஸ்தானில் இருந்து கைபர் போலன் கணவாய் வழியாக இந்த வேற்றினத்தாராகிய நூற்றுவர்கள் இந்தியாவிற்குள் நுழையத் தலைப்பட்டிருக்கக் கூடும். அப்பொழுது அவர்களுக்கும் தமிழ் மன்னர் ஐவருக்கும் இடையில் இந்த குருசேத்திரம் என்னும் இடத்தில் வைத்து நடந்த பெரும்போரே இந்த மகாபாரதப் போராகும்.

இந்த நூற்றுவர்கள், தமிழரின் போர்வீரத்தைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருக்கக் கூடும். அதனால் தான் அவர்களது படைக்கு நூறு பேர் தலைமை தாங்கி பெரும் படையாக வந்துள்ளனர்.

போர்க்காலத்தில் இப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர் ஐவரின் படை வீரர்களுக்கும் தேவையான உணவினை அளித்தான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்னும் தமிழ் மன்னன் என்று புறநானூறு கூறுகிறது.

அப்படியென்றால் இம் மன்னனுடைய நாடும் தொல் தமிழகத்தில் தான் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் இவனால் படை வீரர்களுக்கு குருசேத்திரத்தில் உணவளித்திருக்க முடியும். இப்போதுள்ள தமிழகத்தில் இருந்து கொண்டு இதைச் செய்திருக்க சாத்தியமில்லை.

ஆதாரங்கள்...

மேலே நாம் பல புதிய செய்திகளைக் கண்டோம். இவை உண்மை என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன என்று காண்போம்.

மேலே கண்ட பல புதிய செய்திகளில், பாரதப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர்கள் ஐவரின் பெயர்களில் வேண்டுமானால் மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மகாபாரதப்போர் என்பது தமிழ் மன்னர்கள் ஐவருக்கும் வேற்றினத்தார் நூற்றுவருக்கும் இடையில் நடந்த போர் தான் என்பதில் எந்தவித மாறுபாடுமில்லை. இதை உறுதிசெய்யும் வண்ணம் தமிழ் இலக்கியங்களில் இப் போர் பற்றிய குறிப்புக்களும் உள்ளன.

அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

- புறநானூறு - 2

பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தில் பெருஞ்சோறு அளித்த நிகழ்ச்சியை இப்பாடல் விவரிக்கிறது.
ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து அவியப்
பேரமர்க் கடந்த கொடிஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல

- பெரும்பாணாற்றுப்படை - 415-417...

தமிழ் நாட்டில் தமிழ் வழக்காடும் மொழியாக ஆதரவளியுங்கள்...


அலைகழிப்பு...


நீங்க ஒரு செயலுக்காக பல முறை அலைகழிக்கபட்டால் உங்கள் மனம் வெறுத்து போய் " சே என்னப்பா ஒரு சின்ன விஷயத்திற்கு இத்தனை அலைகழிப்பு என்று மனம் வேதனையோடு எதிர்மறையான சொற்களை பயன்படுத்துவது வழக்கம்.

அதனால் உங்கள் மனதில் தேவையற்ற எதிர்மறை அதிர்வுகள் உருவாகும் அது இதோடு நில்லாமல் உங்கள் பிற விஷயங்களிலும் தடை, ஏற்படுத்தும்.

மனம் எப்போதும் அந்த ஒரு விஷயத்தில் முன்னிருத்தும்.

அதனால் இன்று ஒரு காரியமாக சென்றோம் நாளை வர சொன்னார்களா , சரி ஐயா மகிழ்ச்சி நன்றி என்று சொல்லி வாருங்கள்.

முதலில் உங்கள் மனம் சாந்தமாகும்,

இரண்டாவது உங்களை மறு தினம் வர சொன்ன நபரின் எண்ணம் உங்கள் மகிழ்ச்சி நன்றி என்ற வார்த்தையை பற்றி யோசிக்கும்.

மூன்றாவது உங்களை நாளைக்கு வாருங்கள் என்று சொன்ன அந்த நபரே ஐயா தாங்க இப்போதே முடித்து தருகிறேன் என செயல் பட தொடங்கி விடுவார்.

நல்ல நேர்மறை எண்ண அலைகள் நம்மை சுற்றி இருப்பவர்களை நம்மோடு ஒன்றினக்க செய்யும்.

முயன்று பாருங்கள் வெற்றி நம்ம பக்கம் தான்...

என்று மாறும் இக்கொடுமை... இது தான் டிஜிட்டல் இந்தியாவா...


வைகோ நாயூடு ஈழத் தமிழர்களை கொன்ற பித்தலாட்ட துரோகி...


கொன்று ஒழிக்கப்பட்ட ஈழத்தின் இறுதி நிமிடம் வரை அண்ணன் நடசேன் அவர்களும் இன்ன பிற தலைவர்களின் நேரடி உரையாடலில் இருந்த ஒருவர் இந்த பித்தலாட்ட வைகோ.

ஒரூ தலைவனின் திறமை தோல்வி வரும் பொது அதற்கு முழு பொறுப்பு ஏற்கும் பக்குவத்தில் உள்ளது .

புலிகளின் அரசியல் தோல்விக்கு மிக பெரிய பொறுப்பு இந்த பித்தலாட்ட வைகோவிற்கு உண்டு .

ஆனால் அதனை இவர் இன்னும் மறுத்து மீண்டும் போர் வெடிக்கும் , ஈழப் படை ஆயத்தம் ஆகி கொண்டு இருக்கிறது என்று உதார் விட்டுக் கொண்டு தனக்கு வர வேண்டிய நிதிகள் அடிபடாதவாறு கிளறி விட்டு கொண்டு இருக்கிறார்.

அரசியலில் கில்லாடியான கலைஞரையே தூக்கி சாப்பிட போன காரணாத்தால் இவரை விரட்டி அடித்தார் கருணாநிதி...

தமிழகத்தில் ஈழ வேட்கை பற்றி எரிந்த எண்பதுகளில் தமிழர்களுக்கு தனி நாடு கிடைக்கும் எனும் வேளைகளில் ஈழத் தலைவர்களுடன் நெருக்கம் பேணிய வைகோ ஈழ ஆதரவையே தனது அரசியல் சக்தியாக மாற்றி காட்டியவர் .. இந்த ஈழ ஆதரவு வெளிப்பாடு பிறப்பால் இவர் தினமும் தெலுங்கு பேசும் நாயக்கர் என்பதை பலரும் மறக்க உதவியது..

இவர் ஒன்றும் கரை படியாத கரங்களுக்கு சொந்தகாரார் கிடையாது.

இவர் பலமாக பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் பொது திண்டிவனம் ராமமூர்த்திக்கு வலது கரமாக விளங்கிய இவர் மச்சினன் மூலம் இவர் அடித்த கோடிகள் தாராளம்.

திண்டிவனம் இராமமூர்த்தி ஒருகாலத்தில் பதவி இறக்கம் செய்யப்பட்டது பலருக்கும் நினைவு இருக்கும். அன்றைய கால கட்டத்தில் இவர் சகாயத்தால் நாயகர்கள் பலரும் பல அரசு பணிகளில் அமர்ந்தனர் , இவர் பினாமிகள் பலரும் பல்வேறு வகைகளில் சொத்து, கல்லூரி என செல்வ செழிப்பு ஆனார்கள்.

பலம் இருக்கும் போதும் , பதவி இருக்கும் போதும் பல இனத்து மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டியது ஒரு நல்ல தலைவரின் கடமை ஆனால் இந்த பிதலாட்டக்காறார் தனது சமூகத்திற்கு மட்டும் சகாயம் செய்வதால் இவர் கட்சி பல இடங்களில் மூன்றாம் நிலை, நான்காம் நிலை கட்சியாக ஒரு ஜாதி ரீதியான ஒட்டு வங்கியாக இருந்து வருகிறது..

இவர் பின்னால் வந்த இவர் சார்ந்த சமூகத்து விஜயகாந்து பல இனத்தவரையும் அணைத்து செல்வதால் அபார வளர்ச்சியை எட்ட முடிந்தது... இவரின் வீழ்ச்சிக்கு இவரே காரணம் அன்றி வேறு யாரையும் குறை கூறுவது நல்லது அல்ல..

சரி விசயத்துக்கு வருவோம் ....

இந்த அரசியல் விளம்பரதாரி முத்து குமார் மரண மேடைகளில் செய்த செப்படி வித்தைகள் யாவரும் அறிந்ததே ..

சட்ட கல்லூரி மாணவர் பலரது எதிர்ப்பையும் மீறி மேடை ஏற முனைந்தது , அங்கு மீடியாக்கள்ளுக்கு தன்னை மைய படுத்தி பேட்டி கொடுத்தது என அலப்பறை செய்து அந்த கணத்தில் உருவாக இருந்த மூன்றாவது அணியை முளையிலே கிள்ளி விட்டவர்..

இவருக்கு ஈழம் என்பது ஒரு ஊறுகாயை போல.. இவர் நலம் சார்ந்த விடயங்களுக்காக மட்டுமே ஈழ பிரச்சனையை வைத்து அரசியல் செய்பவர்..

சாகும் நிலையில் இருந்த தமிழர்களை ஒரு சர்வதேச பார்வையில் எடுத்து செல்ல விடாமல் பாராளுமன்ற தேர்தலில் இமாலய வெற்றி பெறுவோம் என இறுமார்பு கொண்டு இறுதி வரை இந்திய தேர்தலை மையமாக வைத்து ஈழ பிரச்சனையின் இறுதி நாட்களை கொண்டு சென்றவர்...

மேடைக்கு மேடை பெருமையாக நடேசனிடம் பேசினேன், அவரிடம் பேசினேன் , இவரிடம் பேசினேன் என சொல்லும் இவர் நடந்த விபரீத விளைவுகலுக்கு என்ன பதில் சொல்ல போகிறார் ..

தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும் என சீறியவர் இறுதியில் என்ன ஆனது ? இவர் பின்னால் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் தமிழ் பற்று, இன பற்று இல்லையே....

நாள் முழுதும தெழுங்கு பேசும் இவர் படை தமிழுக்கு என்ன பெரிதாக செய்து சாதிக்க முடியும் ..

விரட்டி விட்டவனுடன் ஒட்டி கொண்டது , ஜெயிலில் தள்ளியவருடம் உறவாடியது என இவர் செய்த கூட்டணி  வித்தைகள் அருவருப்பு நிறைந்தது ..

இவருக்கு என்று என்ன கொள்கை இருந்து விட முடியும்?

ஈழத்தை கொன்ற காங்கிரசை விட, வஞ்சித்த கலைஞரை விட கடைசி வரை இருந்து கழுத்தை அறுக்கும் இவர் மகா கொடியவர் ..

தமிழா விழித்து கொள்..

இவர் சின்ன கலைஞர் ..

நம்புவோர் துரோகம் செய்யப்படுவர்...

பாஜக மோடியும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் கூட்டணியும்...


இப்பத்தானே புரியுது...

அந்த மோடியை தப்பிக்க விடாவிட்டால்...


இந்த மோடி தப்பிக்க முடியாதுல்ல..

மொதலாளி விசுவாசம் இருக்கணும்...


அதவிட முக்கியமா, மொதலாளி மேலே ஒரு பயமும் இருக்கணும்ல...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆபத்து...








அழியாத கோட்டுருவங்களும்… அழிந்துபோன நாஸ்க்கா இனமும்...


இன்றும் உயர் பாலைவனப் பகுதியாக இருக்கும் இந்த பகுதியில் நாஸ்க்கா இன மக்கள் உருவாக்கிவிட்டுப் போன பல உருவங்கள், வரைப்படங்கள் போன்ற கோடுகள் என 1500 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இரைந்து கிடக்கின்றன.

தரையில் இருந்து இவைகளைப் பார்த்தால் உருவங்கள் புலப்படுவதில்லை.


ஒவ்வொரு படமும் 200 முதல் 500 அடி நீள அகலங்களில் விஸ்தாரமாக இருக்கின்றன.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோட்டுப்படங்கள், திமிங்கிலம், மீன், சுருள் வட்டங்கள், சிட்டுக் குருவி,கருடன், கடற்பாசி, சிலந்தி, குரங்கு, மரம், பூ, உடும்பு, ஓணான், கொக்கு, கைகள்,ஏலியன்ஸ் இப்படி இதன் உருவங்கள் நீள்கின்றன.


படங்கள் தவிரவும், விமான ஓடு பாதை போல பட்ட பட்டையான கோடுகளும் கிழக்கு மேற்க்காக, தென் வடலாகவும் வரையப்பட்டுள்ளன.

இவையெல்லாம் எப்படி வரையப்பட்டன?
எதற்கு வரையப்பட்டன ?
இத்துணை காலம் எப்படி அழியாமல் இருந்தன ?
எப்போது அறியப்பட்டது ?


இப்படி பல கேள்விகள் பார்க்கும் அணைவருக்கும் மனதில் தோன்றும்.

தரையில் ஒரு சிறிய படம் சுலபமாக வரைந்து விடலாம். ஆனால் அதையே சங்கர் படத்தில் வருவது போல பிரம்மாண்டமாக வரைய வேண்டுமானால்… சரி வரைந்த படத்தை சரிபார்ப்பது ?


இதன் முழு பரிமாணத்தையும் வானத்தில் இருந்தே பார்க்க முடியும். ஆனால் இவை எல்லாம் எப்படி சாத்தியம்.. ஆச்சர்யமாக இருக்கிறது.

இப்பகுதியின் நிலப்பரப்பு பழுப்பு சரளைக் கற்களால் நிரம்பியது… இக்கற்களை விலக்கினால் அதன் கீழ் பகுதியில் வெள்ளை நிற மணற்பகுதி.


கையில் ஒரு சிறிய ஸ்கெட்ஸ் வைத்துக் கொண்டு ஆங்காங்கே ஆப்பு வடிவ கற்களை நட்டு அவற்றிடையே கயிற்றைக்கட்டி வைத்து அல்லது கோடு போட்டுக் கொண்டு சரளைக்கற்கள் மண்களை சுவர் போல கரையாக கட்டி நடுவில் வண்டிப் பாதை போல உருவாக்கி இயற்கையான வெள்ளை திட்டு வரும் வரை சமன்படுத்தி இருக்கிறார்கள்.  இறுதியில் ஸ்கெட்சின் உருவம் பிரம்மாண்டமாக.


சுருள் வட்ட வடிவங்களும் துள்ளியமாக சரிவிகித ஆரங்களில் உள்ளன.

வானத்திலிருந்து பார்பதற்கு பழுப்பு கேன்வாசில் வரைந்த வெள்ளை ஓவியங்கள் போல இருக்கின்றன.


நாஸ்க்கா படங்கள் 1920 ல் பெருவில் விமான போக்குவரத்து துவங்கும் பொழுதே வெளி உலகிற்கு தெரிய வந்தன.

அதற்கு முன் இல்லையா என்றால் ஆய்வு இருந்திருக்கிறது ஆனால் தெளிவாக விளங்கிக் கொள்ளப்படவில்லை.


இந்த உருவங்கள் கோடுகள் குறித்து பலவித கருத்துகள் ஆய்வாளர்களால் சொல்லப்படுகின்றன, அவைகள்...

வேற்றுகிரக வாசிகள் தரையிறங்க அமைக்கப்பட்ட ஓடு பாதைகள்.  இதற்கு ஏலியன்ஸ் உருவம் மற்றும் குறுக்கும் நெடுக்குமான பாதைகள் புரியாத சின்ன உருவங்களை காட்டுகிறார்கள்.

பாதைகளாக தெரிவன பாசனக்கால் வாய்களாக இருந்திருக்கும்.


வானியல் குறியீடுகள் இவை என்கின்றனர் ஒருசாரர்.

கடவுள் உருவ வழிபாட்டு பகுதிகள். இயற்கை இவர்கள் கடவுள் எனவே அவற்றின் உருவங்கள்.

இந்த இனத்தின் பல பிரிவுகள் இருந்திருக்கலாம் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு உருவங்கள் அதன் மையம் அவர்கள் கூடி வழிபாடு சடங்குகள் அமைவிடங்களாக இருந்திருக்கலாம். 


பூசை, தலை வாங்கும் சடங்குகள்  பலியிடமும் அதுதான் என்கிறார்கள் ஆராய்சியாளர்கள்.

இதற்கு சான்றாக ஆங்காங்கே இருக்கும் மேடைத்திட்டுகள் மண்டைஓட்டு குவியல்கள் என்கிறார்கள்.

ஒவ்வொரு குலத்திற்கும் ஒவ்வொரு உருவ அடையாளம் அதனால் பல உருவங்கள்.

இவ்வளவு காலத்திற்கும் இவை எப்படி அழியாமல் இருந்தன?.  மழையற்ற பலைவனமான பகுதி என்பதால் இப்பகுதி குளிராலும் வெயிலாலும் கெட்டிப்பட்டிருக்கலாம். தடங்கள் மறையவில்லை.

நாஸ்க்கா இன மக்கள் இவ்வுலகத்திற்கு விட்டு சென்ற தடயங்கள் சொல்லும் பொதுவான கருத்து இதுவா ?

மரங்கள் இயற்கை அழிவே ஒரு இனம் அழிந்து போனதற்க்கான சாட்சி நாங்கள்… என்பதா?

மரங்களை வெட்டி காடுகளை அழிப்பது. இயற்கை வளங்களை சுயநலத்திற்காக சுரண்டுவது. ஆறுகளை குப்பை மேடாக்குவது. நம் நிலமும் இதுபோல நீரில்லாத பாலைகளாக மாறாமல் காக்கப்பட வேண்டும்...