04/10/2017

கரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எடப்பாடி பேச்சை கேட்க மக்கள் மறுப்பு, மக்கள் வெளியேறுவதை தடுத்தது போலீஸ்...


கஞ்சா வியாபாரி ஜக்கி நதிகளை காத்த போது...

குலக்கல்வி என்ற அவதூறு...



ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பக்  கூறிக் கொண்டே இருந்தால் அது காலப்போக்கில் உண்மையாகி விடும் என்பது கோயபல்ஸ் பரப்புரை அரசியல் உத்தி ஆகும்..

இராஜகோபாலாச்சாரி மீது பரப்பப்பட்ட அவதூறுகள்..

1)இராஜாஜி குலக்கல்வியைக் கொண்டு வந்தார்.

2)நிதி பற்றாக்குறையைக் காரணம் காட்டி 600 பள்ளிகளை மூடினார்.

3)பிராமணருக்கு வேத பாடசாலைகளைத் திறந்தார்.

மூன்றுமே வடிகட்ட பொய்கள்..

முதல் பொய் இராசாசி குலக்கல்வியைக் கொண்டு வந்தார் என்பது.

அவர் பார்ப்பனராம், மனிதர்கள் எந்த குலத்தில் பிறந்தார்களோ அந்த அந்த தொழிலைச் செய்யவேண்டும் என்று மனுதர்மம் கூறுவதை நடைமுறைப்படுத்தப் பார்த்தாராம்.

உண்மை என்ன வென்றால் அது இராசாசி வகுத்த திட்டமே கிடையாது.

அதிலே குலம் பற்றி எதுவுமே விதிகள் இல்லை.

அவர் செய்தது நேரச் சீர்திருத்தம் மட்டும்தான்.

Hereditary Education Policy என்ற இந்த திட்டம் ஏற்கனவே 1949-50 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த பி.எஸ்.குமாரசாமிராஜாவின் ஆட்சியில் சில பகுதிகளில் செயல் படுத்தப்பட்டது.

அதை தமிழகம் முழுவதும் இராசாசி நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.

ஆசிரியர்கள் அப்போது குறைவு.

புதிய ஆசிரியர்களை நியமிக்க அரசிடம் பணமில்லை.

அதனால் ஆசிரியரின் 8 மணிநேர வேலை நேரத்தை ஒவ்வொரு வகுப்பிற்கும் மூன்று மூன்று மணி நேரமாக பிரித்துக் கொடுப்பது தான் திட்டம்.

சாதி பற்றியோ பிறப்பு பற்றியோ எதுவுமே கூறப்படவில்லை.

இத்திட்டத்தால் ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்தது.

மூன்றுமணி நேரம் போக மீதி நேரம் மாணவர்கள் என்ன செய்வார்கள் என்று ஒரு பேட்டியில் கேட்டார்களாம்.

இராஜாஜி மீதி நேரங்களில் பெற்றோருக்கு உதவி செய்யலாம் என்று கூறினாராம்.

இதை அண்ணாதுரை பிடித்துக் கொண்டு 'பெற்றோரின் வேலையைத் தான் பிள்ளைகள் செய்யவேண்டும் என்று பார்ப்பனர் இராசி கூறிவிட்டார்' என்று அவதூறு பரப்பினார்.

இதற்கு 'குலக்கல்வித் திட்டம்' என்று பெயர் சூட்டி திராவிடவாதிகள் பொய்ப் பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டனர்.

இன்றுவரை இந்தப் பொய்ப் பெயரால் தான் இந்தத் திட்டம் அறியப்படுகிறது.

600 பள்ளிகளை அவர் மூடினார் என்பதும் பச்சைப்பொய்.

அன்று கல்வி சேவை செய்யும் சில கிராமிய அமைப்புகளைக்கு அரசு நிதி கொடுத்துவந்தது.

அந்த நிதி முறையற்ற வகையில் செலவு செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதை இராசாசி நிறுத்தக்கூட இல்லை.

அது சரியாக நடக்கிறதா என்று முறைப்படுத்த ஆணை பிறப்பித்தார்.

ஆந்திராவுக்குக் கிடைக்கும் நிதி போய்விடுமோ என்ற பயத்தில் நீதிக்கட்சி எனும் திராவிடக் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

உடனே ஈ.வே.ரா, ஆந்திராவில் இந்த நிதி இல்லாமல் போனால் 600 'பள்ளிகள்' மூடவேண்டி வரலாம் என்று உண்மைக்குப் புறம்பாக எழுதினார்.

அதையும் கோயபல்ஸ் பரப்புரை செய்து வருகின்றனர்.

நன்றி : எழுத்தாளர் .திரு. ஜெயமோகன்...

அன்று இராசாசி எதைச் செய்தாலும் திராவிடவாதிகள் அதை எதிர்த்தனர்.

எடுத்துக்காட்டாக..

அன்று அவர்அரும்பாடு பட்டு மதுவிலக்கை அமல்படுத்தினார்.

உடனே ஈ.வே.ரா முழுமூச்சாக குடிக்கும் உரிமை கேட்டு மது ஆதரவுப் பிரச்சாரம் செய்தார்.


25 ஆண்டுகள் குடியை மறந்திருந்த திராவிடம் மீண்டும் சாராயக்கடைகளைத் திறந்தது.

திராவிடம் என்பது அன்றைய ஆங்கிலேய ஆட்சியின் B-அணி ஆகும்...

பாஜக மோடி ஏழைகளின் எதிரி...


குஜராத் பாஜக. கவுன்சிலரை மரத்தில் கட்டி வைத்து அடித்த மக்கள்...


வதோதராவில் உள்ள மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தின் முன்னால் இருந்த சில குடிசைகளை அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக கூறி அதிகாரிகள் நேற்று இடித்து தள்ளினர். மாநகராட்சியின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், முன் கூட்டியே நோட்டீஸ் அனுப்பாமல் எப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி பா.ஜ.க. கவுன்சிலர் ஹஸ்முக் படேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஹஸ்முக் பட்டேல் சமாதானம் செய்ய முயற்சித்தார்.

ஆனால், பா.ஜ.க. கவுன்சிலர் கூறியதை அவர்கள் ஏற்கவில்லை. ஆத்திரமடைந்த மக்கள் ஹஸ்முக் படேலை திடீரென தாக்கத் தொடங்கினர். அதோடு அவரை அருகிலுள்ள மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பா.ஜ.க. கவுன்சிலர் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 30க்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்...

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்...


தாய் மொழியில் பேசுவதன் முக்கியத்துவம்...


ரோம் நகரில் கி.பி.1427 இல் ஒரு சர்க்கஸ் கம்பெனி செயல் பட்டுவந்தது..

அந்த சர்க்கஸ் கம்பெனியின் சிறப்பு யானைதான்!

அந்த யானையின் பாகன் அந்த கம்பெனியிலேயே தங்கியிருந்து, யானைக்குப் பயிற்சி கொடுக்கிறான்.

குட்டியாக இருந்த யானை மிகுந்த உற்சாகத்துடன் பாகன் கற்றுக் கொடுத்ததை சரியாகச் செய்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்துகிறது.

மூன்று கால்களில் நிற்பது, முக்காலியில் ஏறுவது, சைக்கிள் ஒட்டுவது என அந்த யானை செய்யும் சாகசங்களால் சர்க்கஸீக்கு வரும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நாட்கள் நகர்கின்றன..

ஒருநாள் அந்த யானைப்பாகன் இறந்து விடுகிறான்..

அதில் இருந்து அந்த யானை சரிவர சாப்பிடுவது இல்லை.. அதன் கண்களில் இருந்து சாரை சாரையாக கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருக்கிறது.

அதன் உடல் சில நாட்களிலேயே மெலிந்து சோர்ந்து போனது.

சர்க்கஸ் முதலாளி கால்நடை மருத்துவர்களை அழைத்து வந்து காட்டுகிறார்.

அவர்கள் மருந்து, மாத்திரைகளை கொடுக்கிறார்கள். ஆனாலும், அதன் உடல்நிலையில் எந்த சிறு முன்னேற்றமும் ஏற்படவில்லை..

அப்போது அங்கு வந்த வழிப்போக்கன் சர்க்கஸ் முதலாளியிடம், யானையை நான் குணப்படுத்தட்டுமா? என்று கேட்கிறான்..

அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து தான் பார்ப்போமே என முடிவு செய்கிறார்.

அந்த வழிப்போக்கன் யானையின் அருகில் சென்று, அதன் காதருகே நின்று யானையிடம் ஏதோ சொன்னான்..

யானையின் கண்களில் உற்சாகம் தெரியத் துவங்கியது.. உடனே அது எழுந்து போய் சாப்பாடு வைக்கப்பட்ட இடத்திற்குச் சென்று சாப்பிட்டது..

சர்க்கஸ் முதலாளி,அந்த நபரிடம் சென்று, நீங்கள் அதன் காதருகே எதையோ சொன்னதும் சாப்பிட்டதே அப்படி என்னதான் சொன்னீர்கள்? என்று கேட்டார்.

அந்த வழிப்போக்கன், இந்த யானை தமிழகத்தில் இருந்து வந்துள்ளது..

யானைப்பாகன் தமிழில் பேசி அதை பராமரித்து வந்தான்.

பாகன் இல்லாததால் இந்த யானைக்கு அவன் பேசிய மொழியை கேட்காமல் வருத்தப்பட்டது.

நானும் தமிழகத்தில் இருந்து வருகிறேன்.. அதனால் யானைக்கு என் தமிழ் மொழியில், ‘அட முட்டாள் யானையே இப்படி சாப்பிடாமல் கிடந்தால் உடல் மெலிந்து செத்துவிடுவாய்’ என்று சொன்னேன்’ அவ்வளவ ுதான்  என்றான்..

ஒரு யானைக்குக் கூட அதைப் பழக்கியவனின் மொழி என்பது முக்கியமாக இருக்கிறது..

ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமே ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே மரியாதை என்ற அடிமைப்புத்தி பரவிவிட்டது.

மரபும், தொன்மையும் கொண்ட தமிழ் மொழியின் பெருமைகளை நாமே புரிந்து கொள்ளவில்லை..

உலகத்திலேயே எந்த நாட்டிலும் தாய்மொழியைத் தெரியாமல் எந்த துறையிலும் முன்னேற முடியாது..

ஆனால், இங்கே மட்டும் தான் அது நடக்கிறது..

இங்கே தாய்மொழியைக் கற்றுக் கொள்ளாமலேயே எந்தத் துறையிலும் உயர் கல்வியைக் கற்றுவிட முடியும்..

ஆனால், அது வாழ்க்கைச் சார்ந்ததாக இருக்குமா? என்பது கேள்விக் குறியே..

நாம் அனைவருமே வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்..

அதற்கு நமது தாய்மொழியின் பெருமையும், அதன் தொன்மையையும் தெரிந்திருப்பது அவசியம்...

பாவாணர் போற்றும் பார்ப்பனர்கள்...


பாவாணர் நீலகண்ட சாஸ்திரியை எவ்வளவு கடுமையாக சாடுகிறார் பாருங்கள்..

ஆரியத்தை எதிர்த்துத் தமிழைப் பேணிய நக்கீரர், பரிதிமாற் கலைஞர், ஸ்ரீநிவாச ஐயங்கார், கிருட்டிணசாமி ஐயங்கார் முதலிய பிராமணர் பலர் வையாபுரி பிள்ளையினும் தெ.பொ.மீ.யினும் சிறந்த தமிழரே.

ஆதலால் இனிமேல் பிராமணர் அனைவரும் பிணக்கின்றித் தமிழரோடு பிணைந்து வாழ்ந்து தமிழ்நாட்டரசிலும் தலைமை தாங்கித்.. தமிழையே பேணித் தமிழராகவே விளங்குவாராக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் தமது இறுதிக் கட்டுரையில் - செந்தமிழ்ச் செல்வி, டிசம்பர் 1980..

பாவாணர் நீலகண்ட சாஸ்திரியை இனவெறியர் மொழிவெறியர் என்கிறார்..

இதனால் அவர் தமிழரல்லாதார் என்று அறியலாம்..

தமிழ் வரலாற்றிற்கெட்டாத தொன்முது பழைமையான உலக முதன் மொழியாதலால்,
கிறித்துவிற்குப் பிற்பட்ட காலத்து முக்கழக வரலாற்றிற் பல காலமுரண்பட்ட குழறுபடைகள் குழம்பிக் கிடப்பது இயல்பே.

அச் சிக்கல்களைக் களைந்து உண்மைகளை வடித்தெடுத்தல் வரலாற்றாராய்ச்சியாளன் கடமையாகும்.

அக் கடமையை மேற்கொண்டே,
திரு. (P.T.)சீநிவாசய்யங்காரும் பேரா.(V.R.)இராமச்சந்திர தீட்சிதரும்
தமிழரின் தென்னாட்டுப் பழங்குடிமையைத் தத்தம் நூல்களில் ஐயந்திரிபற நாட்டிச் சென்றனர்.

ஆயினும், எல்லையற்ற இனவெறியும் மொழிவெறியும் பித்தொடு கலந்த பேய்கோள் போல் வருத்துவதால், பேரா. (கே) நீலகண்ட சாத்திரியாரும் அவர் மாணவரான பர். (Dr.) (N.) சுப்பிரமணியனாரும், பிறரும்,
இடைக்காலத்தில் தீத்திறமாகவும் தெற்றுமாற்றாகவும் புகுத்தப்பட்ட சமற்கிருத மேம்பாட்டை என்றும் போற்றிக் காத்தற்பொருட்டு, தமிழரின் குமரிநாட்டுத் தோற்றத்தை விடாப்பிடியாய் மறைத்து வருகின்றனர்..

பி.தி.சீநிவாசையங்கார் 'இந்தியக் கற்காலம்' (Stone age in India),

'ஆரியர்க்கு முன்னைத் தமிழ்க் கலை நாகரிகம்' (Pre-Aryan Tamil Culture),

'தமிழர் வரலாறு' (History of the Tamils)

முதலிய நூல்களையும்..

வி.ரா. இராமச்சந்திர தீட்சிதர்
'தமிழர் தோற்றமும் பரவலும்' (Origin and Spread of the Tamils),

'வரலாற்றிற்கு முன்னைத் தென்னிந்தியா' (Pre-Historic South India)

முதலிய நூல்களையும், எவரும் மறுக்க முடியாதவாறு திறம்பட எழுதிப் போயினர்.

ஆயின், அவர் மறைந்தபின்,
பேரா. கே. நீலகண்ட சாத்திரியார் அவர் கொள்கைக்குங் கூற்றிற்கும் நேர்மாறாக,

ஆரிய வேதத்தையே அடிப்படையாகக் கொண்டு இந்திய வரலாற்றை வடக்கினின்று தொடங்கி, உண்மைக்கும் உத்திக்கும் ஒவ்வாவாறு பேரன் பாட்டனைப் பெற்றான் என்பதுபோல், தமிழர் வரலாற்றைத் தலைகீழாக வரைந்துள்ளார்.

தமிழன் பிறந்தகம் தெற்கில் முழுகிப் போன குமரிநாடென்னும் அடிப்படையிலேயே, தமிழின் சிறப்பையும் தமிழன் உயர்வையும்,
உண்மையாக உணர்தலொண்ணும்.

'வரலாற்றிற்கு முன்னைத் தென்னிந்தியா' என்னும் வரலாற்றுப் பொத்தகம் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாயிருந்தும்,
அதைப் படியாமையாலோ, தம் இயற்கையான அடிமைத் தனத்தாலோ, வையாபுரித் தன்மையாலோ, தலைமைப் பதவித் தமிழ்ப் பேராசிரியரும் பேராசிரியர் நீலகண்ட சாத்திரியாரை எதிர்க்கத் துணிவதில்லை.

அதனால், தமிழின் தொன்மையும், முன்மையும், தாய்மையும், தலைமையும் தமிழ்நாட்டிலும் ஒப்புக்கொள்ளப்படாமலே யிருக்கின்றன - செந்தமிழ்ச் செல்வி திசம்பர் 1980..

பி.கு:- நீலகண்ட சாஸ்திரி ஒரு தெலுங்கர் என்று நரசய்யா தமிழ்நாட்டு வந்தேறியான தெலுங்கு வடுகர் தமிழ்நாட்டுக்குச் செய்தது என்ன? என்ற (மின்தமிழ்) கூகுள் இழையில் கூறியுள்ளார்.

ந.பிச்சமூர்த்தியும் கு.ப.ரா உம் கூட தெலுங்கர்களாம்.

வருவான் தமிழ்ப் பார்ப்பான் தமிழ்த்தேசியம் நோக்கி...

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவோம்...


தமிழகத்து தர்கா வழிபாடு...


பள்ளிவாசல் வேறு தர்கா வேறு..

பள்ளிவாசலில் சமயகுரு 5 வேளை பாங்கு கூறி அழைப்பார்.

பிறகு கூட்டு வழிபாடு நடைபெறும்.

இங்கே பிற சமயத்தினரும் இசுலாமியப் பெண்களும் பள்ளிவாசல் செல்வதில்லை.

இந்த குறையை நிவர்த்தி செய்வதே 'தர்கா' வழிபாடு.

தர்கா என்பது இறையடியார் ஒருவர் உடல் அடக்கமான இடத்தைச் சுற்றி எழுப்பப்படும் கோவில்.

(திறந்தவெளிக் கல்லறைகளும் உள்ளன)

பள்ளிவாசலில் இருந்து வேறுபடுத்திக் காட்ட பச்சை நிறத்தில் வெள்ளைநிறப் பிறை நிலாவும், விண்மீனும் கொண்ட கொடி ஏற்றப்பட்டிருக்கும்.

இங்கே அந்த இறையடியாரை யாரும் வணங்குவதில்லை.

அந்த இறையடியாருக்காக ஆண்டவனிடம் வேண்டுகிறார்கள்.

இங்கே பல்வேறு சமயத்தவரும் இசுலாமியரும் வந்து போகிறார்கள்.

நேரக்கட்டுப்பாடு இல்லை.
வழிபாட்டு விதிகள் இல்லை.

அதாவது தமது ஊரில் ஒரு பெரிய மனிதர் மறைந்தபிறகு (அவர் இசுலாமியராய் இருந்தாலும்) அவ்வூர் மக்கள் (பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள்) அவரது நினைவைப் போற்றும் நாட்டார் வழிபாட்டு முறையே தர்கா வழிபாடு..

சீறாப் புராணம் எழுதிய உமறுப்புலவரின் திறந்தவெளி தர்காவை சுற்றி (பிள்ளைப்பேறு நேர்த்திக் கடனுக்காகக்) கட்டிடம் எழுப்பியவர் 'பிச்சையாக் கோனார் என்பவராவார்.

இறையடியார்கள் இறைவனடி சேர்ந்த நாளில் 'சந்தனக்கூடு' விழா நடக்கிறது.

பத்து நாட்களுக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட மூங்கில் கம்பில் பச்சைநிறத்தில் பிறை மற்றும் விண்மீன் கூடிய துணி கட்டி ஊர்வலமாக எடுத்துச்சென்று தர்காவின் வாசலில் கட்டுவார்கள்.

(இது தமிழர்கள் அனைவரும்  திருக்கோவில்களில் விழா எடுக்கும் முன்பு கொடியேற்றும் வழக்கம்தான்.

தமிழக கத்தோலிக்க தேவாலயங்களிலும் இத்தகைய கொடியேற்றம் உண்டு).

பிறகு பத்துநாட்கள் கல்லறையைச் சுற்றி அமர்ந்து தமிழிலும் அரபியிலும் இறையடியாரின் புகழைப் பாடுவார்கள்.

பத்தாம் நாளில் சந்தனத்தைக் குழைத்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் சந்தனக்கூடை சுமந்து ஊர்வலமாக எடுத்துச்செல்வர்.

இதற்கு பரம்பரை பரம்பரையாக மாடும் வண்டியும் தருவோர் பல்வேறு சமயத்தையும் சேர்ந்தவர்களாக இருப்பர்.

இவ்வூர்வலத்தில் சிலம்பாட்டம் கழியாட்டம் போன்ற தமிழ் கலைகளும் இடம்பெறும்.

பிறகு சுமந்துவந்த குடத்திலிருந்து சந்தனத்தை கல்லறை மீது பூசுவர்.

பிறகு சிறிதளவு சந்தனத்தை வீடுகளுக்கு எடுத்துச்செல்வர்.

பிறகு கந்தூரி விருந்து நடைபெறும்.

இதற்கான செலவு அவ்வூர் மக்கள் அனைவரிடமும் பெறப்பட்ட வரியிலிருந்து கிடைக்கிறது.

(நன்கொடை அதிகம் கிடைக்கும் சில பெரிய தர்காக்கள் விதிவிலக்கு).

இரவு அவ்வூரார் அனைவரும் மதவேறுபாடின்றி அமர்ந்து இறைச்சி விருந்து உண்பார்கள்.

தமிழகத்தில் மிக பழமையான தர்கா இராமேஸ்வரத்திலுள்ள ஆபில் காபில் தர்கா.

இவர்கள் ஆதாமின் மகன்கள் ஆவர்.

(ஆபெல், கெய்ன் என்று பைபிள் கூறுகிறது).

மிகவும் புகழ்பெற்ற தர்கா 'நாகூர் தர்கா' ஆகும்.

இவரை 'முகைதீன் ஆண்டவர்' என்று எல்லா மதத்தினரும் அழைக்கின்றனர்.

இதுபோல குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பீர்முகமது தர்கா,

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கு அருகிலுள்ள ஏர்வாடி செய்யது இப்ராகிம் தர்கா,

திருச்சியிலுள்ள நத்தார்வலி தர்கா,

ஆகியன குறிப்பிடத்தகுந்த தர்காக்கள்.

இது தவிர வட்டார ரீதியாக புகழ்பெற்ற பல தர்காக்கள் உள்ளன.

நாகூர் தர்கா விற்கு அச்சுதப்பநாயக்கர் எனும் தெலுங்கு மன்னர் முப்பது வேலி நிலம் வழங்கியுள்ளார்.

இதே தர்காவிற்கு தஞ்சை மராட்டிய மன்னர் 'துக்கோசி' 131 அடி கோபுரம் கட்டித்தந்து இளங்கடமனூர் எனும் ஊரையும் நன்கொடை அளித்துள்ளார்.

இன்று தஞ்சை மராட்டிய மன்னர் கந்தூரி அன்று குடும்பம் சந்தனமும் பட்டுசால்வையும் அனுப்பி வைக்கின்றனர்.

இந்த நாகூர் தர்காவின் கல்லறை மீது போர்த்தப்படும் போர்வை சென்னையைச் சேர்ந்த 'பழனியாண்டிப் பிள்ளை' என்பவரது பரம்பரையினர் அனுப்பி வைக்கின்றனர்.

கோரிப்பாளையம் தர்கா விற்கு கூன்பாண்டியன் (சுந்தரபாண்டியன்) எனும் பாண்டிய மன்னன் 15000 பொன் வழங்கியுள்ளான்.

இதில் ஏற்பட்ட ஒரு பூசலை தீர்த்து பொறிக்கப்பட்ட நாயக்கர்கால கல்வெட்டுச் சான்று உள்ளது.

அருப்புக்கோட்டை பள்ளிவாசல் கட்ட நிலம் கொடுத்தவர்கள் (தெலுங்கு) நாயக்க மக்கள்.

ஏர்வாடி தர்கா விற்கு 'முத்துக்குமார் விஜயரகுநாத சேதுபதி' எனும் சேதுபதி மன்னர் விளை நிலங்களையும் சில வரிகளைகளையும் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.

இதே மன்னர் 1745ல் புதுக்குளம் ஊரை 'ஆபில் காபில் தர்கா'வுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இத்தர்காவில் 19 வலிமார்கள் சமாதிகள் உள்ளன.

இங்கே பல்வேறு சாதியார் பரம்பரை பரம்பரையாக சில பங்களிப்புகளைச் செய்து வருகின்றனர்.

இங்கே சந்தனக்கூடு குடம் கொண்டு செல்லும் மரக்கூட்டினை வழங்குவோர் ஆசாரிகள்.

கூடுகட்ட கயிறு, நார் போன்றவை நாடார்கள் பொறுப்பு.

கூடு அலங்கரிப்பு பறையர் மற்றும் கோனார் பொறுப்பு.

நெய்பந்தத்துணி வண்ணார்கள் பொறுப்பு.

சந்தக்கூடு விழாவில் அனைத்து மதத்திலிருந்தும் 2லட்சம் பேர் கூடுவர்.

திருநெல்வேலி-மதுரை சாலையில் காட்டுப் பள்ளிவாசல் என்ற தர்கா உள்ளது.

'இப்ராகிம் ராவுத்தர்' என்பவரும் அவரது நண்பர் 'முத்துக்கோனார்' என்பவரும் இங்கே அடக்கமான இறையடியார்களுக்கு சிறிய அளவில் வழிபாட்டைத் தொடங்கினர்.

இன்று கூரையில்லாத கட்டிடம் தர்காவாக இயங்குகிறது.

மதுரையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் திருப்பத்தூர் அருகேயும் ஒரு "காட்டுப் பள்ளிவாசல்" இருக்கிறது.

ஏழு பார்ப்பனப் பெண்களையும் இரண்டு பிராமணக் குழந்தைகளையும் காப்பாற்றும் முயற்சியில் உயிர்துறந்த 'சையது பக்ருதீன்' அடக்கமான தர்கா இது.

இராமநாதபுரம் மன்னர் 'கிழவன் சேதுபதி' (1674-1710) இத்தர்காவுக்ககு கொடைகள் வழங்கியுள்ளார்.

இங்கே நடக்கும் சந்தனக்கூடு விழாவில் கள்ளர் சாதியினர் பெருமளவு கலந்து கொள்கின்றனர்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒரு பார்ப்பன பெண்ணுக்கும் அவரை கள்வர்களிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் உயிர்துறந்த "பக்கிரி சாய்பு"வுக்கும் தர்கா உள்ளது.

தூத்துக்குடி வைப்பாறு சிற்றூரில் "ஒலியுல்லா தர்கா"வின் கந்தூரி விழாவில் தெலுங்கு கம்பளத்து நாயக்கர்கள் பெரிய பங்களிப்புகளைச் செய்கின்றனர்.

ஊத்துமலை தேவர்குளம் அருகே "கான்சாமாடன்" எனும் தர்காவை மறவர் மக்கள் வணங்குகின்றனர். ஊத்துமலை ஜமீன்தார்கள் முன்னின்று சந்தனக்கூடு ஊர்வலத்தை நடத்துகின்றனர்.

ஊர்மக்கள் பசுமாடு ஈன்றபிறகு கறக்கும் முதல் பாலை இச்சமாதியில் ஊற்றுகின்றனர்.

நாகூருக்குத் தெற்கேயுள்ள "முத்துப்பேட்டைத் தர்கா" 'கருப்பையாக் கோனார்' என்பவர் கட்டியதாகக் கூறுகிறார்கள்.

திருப்பத்தூரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள "அகோரி கானுமியா ஒளி" தர்காவிற்கு மருதுபாண்டியர் மானியம் வழங்கியுள்ளனர்.

கி.பி 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த மீனாட்சி சுந்தரம் ஐயர் தமிழிலும் இசையிலும் நல்ல புலமை பெற்றவர்.

அவர் இசுலாத்தைத் தழுவி 'மீனா நூர்தின்' என்று பெயரை மாற்றிக்கொண்டார். இவரது தர்கா மதுரை தெற்கு வெளிவீதியில் உள்ளது.

நாகப்பட்டிணத்திற்கும் வேளாங்கண்ணிக்கும் இடையில் "பாப்பாக்கோயில் தர்கா" உள்ளது.

இரண்டு இறையடியார்களுடன் இசுலாத்தைத் தழுவிய பார்ப்பனப் பெண் (ஹபீஸ் அம்மா) ஒருவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சேலம்-பெங்களூர் சாலையில் தொப்பூர் என்ற இடத்தில் "ஹாவாலிக் தர்கா" உள்ளது.

இங்கேயும் இசுலாமைத் தழுவிய பார்ப்பனப் பெண் அடக்கமாகியுள்ளார்.

இங்கே அசைவ விருந்து கிடையாது.

இங்கே அன்னதானம் நடக்கும்போது முதலில் இசுலாமியரல்லாத சிலருக்கு வழங்கிவிட்டு பிறகே அனைவருக்கும் அன்னதானம் தொடங்குகிறது.

தஞ்சை நகரின் கிழக்கே மாரியம்மன் கோவில் பழைய தெருவில் "பாப்பாத்தியம்மன் தர்கா" உள்ளது.

இவரும் பார்ப்பனராயிருந்து இசுலாமைத் தழுவியவரே.

கி.பி 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ நாயன்மார் சேரமான் பெருமாள் (சேர மன்னர்).

'பொன்வண்ணத்தந்தாதி', 'திருவாரூர் மும்மணிக்கோவை', 'திருக்கயிலாய ஞான உலா' போன்ற சைவ இலக்கியங்களைப் படைத்துள்ளார்.

இவர் சுந்தரரின் நண்பர்.

கேரளமான்மியம் என்ற வடமொழி நூலும் கேரளோற்பத்தி என்ற மலையாள நூலும் இவர் மெக்கா சென்று நபிகள் நாயகம் முன்னிலையில் இசுலாமைத் தழுவியதாகக் கூறுகின்றன.

'சிராஜிதின்' என்று பெயர் மாற்றிக் கொண்டாராம். திரும்பும் வழியில் மரணமடைந்ததாகவும் இவரது உடல் தூத்துக்குடி குலசேகரப் பட்டிணம் அருகே கரை ஒதுங்கியதாம்.

அங்கேயே கடற்கரையில் இவருக்கு தர்கா உள்ளது.

இங்கே கல்லறை அறையில் ஒரு சன்னல் சிதம்பரனாதர் கோவிலின் நுழைவாயிலுக்கு நேராக அமைக்கப்பட்டுள்ளது.

அதன் வழியாகப் பார்த்தால் கோவிலின் கருவறையைக் காணமுடியும்.

திருநெல்வேலி நான்குநேரி அருகே விஜயநாராணம் என்ற ஊர் உள்ளது.

அங்கே செய்யது முகம்மது மலுக்கு மேத்தப்பிள்ளை என்பவர் வசித்துவந்தார்.

இவரது நண்பர் மாடசாமித் தேவர்.

மாடசாமித் தேவரின் தங்கைக்கும் மேத்தப்பிள்ளைக்கும் தவறான உறவிருப்பதாக மேத்தப்பிள்ளையின் வேலைக்காரன் சொல்ல
மாடசாமித் தேவர் மேத்தப்பிள்ளையையும் தனது தங்கையையும் கொன்றுவிட்டார்.

வேலைக்காரன் சொன்னது பொய் என்று தெரிந்த பிறகு மாடசாமித் தேவர் மேத்தப்பிள்ளைக்கு தர்கா எழுப்பினார்.

தன் தங்கைக்கு நடுகல் நட்டார்.

இன்றுவரை அவரது வம்சாவளியினர் அந்த தர்காவுக்காக அனைத்து உதவிகளையும் செய்கின்றனர்.

தன் குழந்தைகளுக்கு மேத்தப்பாண்டியன், மேத்தா என்று பெயர் வைக்கின்றனர்.

அதோடு நடுகல் வைத்த இடத்தை 'கன்னியம்மன்' தெய்வமாகவும் வழிபடுகின்றனர் மாடசாமி வம்சத்தார்.

"மேத்தப்பிள்ளை அப்பா தர்கா" என்ற பெயருடைய இந்த தர்காவில் ஆடி 16 அன்று சாதிமத பேதமில்லாமல் ஆயிர்காணக்கில் மக்கள் கூடுகின்றனர்.

இங்கே வாழும் மறவர் மக்கள் தங்கள் வீடுகளில் மக்களைத் தங்கவைத்து விருந்தோம்புகின்றனர்.

240 ஆண்டுகளாக இது நடந்துவந்தாலும் இதுவரை காவல்துறை வந்து நடத்தித்தந்தது கிடையாது.

இதுபோல இன்னும் பலப்பல தர்காக்கள் உள்ளன.

அனைத்திலும் பல சமயத்தாரும் பங்கேற்கின்றனர்.

நன்றி: தர்காக்களும் இந்து-இசுலாமிய ஒற்றுமையும் - ஆ.சிவசுப்பிரமணியன்..

இசுலாமிய தீவிரவாதிகள் தர்கா வழிபாட்டை எதிர்ப்பதற்குக் காரணம் மத நல்லிணக்கனம் ஏற்பட்டால் தம் பிழைப்பை நடத்த முடியாது என்பதால்தான்.

இதிலே ஒருபடி மேலே போய் குரானுக்குப் போட்டியாக தவ்கீத்து சமாஅத்து என்ற கூட்டம் திருக்குறளை வேறு வம்புக்கிழுக்கிறது.

இசுலாம் பரவியுள்ள அனைத்து இடங்களிலும் அந்த அந்த இனத்தின் பழமையான பழக்க வழக்கங்கள் இசுலாமிய வழிபாட்டிற்குள் கலந்துள்ளதைக் காணமுடியும்.இது இயல்பான ஒன்றே.

மக்களுக்காக தான் மதம்.
மதத்திற்காக மக்கள் அல்லர்.

இறைமறுப்பாளனான என் தனிப்பட்ட கருத்து,

தர்கா வழிபாடு செய்யப்படும் இறையடியார்கள் யாருமே அத்தனை பெரிய ஈகி(தியாகி)கள் கிடையாது.

இந்த வழிபாடும் அதனுடன் இணைந்த சடங்குகளும் மூட நம்பிக்கைகளேயன்றி வேறில்லை...

அதிமுக விஞ்ஞானிகள் கலாட்டா...


மிளகாயில் இலைசுருட்டு பூச்சி தாக்குதலும் கட்டுப்படுத்தும் முறை...


மிளகாய் சாகுபடி செய்த 20 நாட்களுக்கு மேல் இலைகள் துளிர் விட ஆரம்பித்தவுடன் இலைப்பேன், அசுவினி, வெள்ளை ஈ, தத்துப்பூச்சி முதலியவை தாக்க ஆரம்பிக்கும்.

முதலில் மிளகாய் நடவு செய்வதற்கு முன்பு மண்பரிசோதனை செய்து தேவையான அளவு உரத்தைமட்டு கொடுக்க வேண்டும்.

தழைச்சத்து உரம் அதிகமாக கொடுக்காமல் 10 கிலோ உரம் போட வேண்டும் என்றால் 2 கிலோவை குறைத்து 8 கிலோதான் கொடுக்கனும் (தழைச்சத்து உரத்தை கொஞ்சம் குறைத்து தரவேண்டும்).

பூச்சிதாக்குதலை குறைக்க ஊடுபயிராக மிளகாய் நாற்று 10 வரிசையும் ஒரு வரிசை மக்காச்சோளமும் நடவு செய்ய வேண்டும்.

வரப்பு ஓரங்களிலும் மக்காச்சோளம் நடவு செய்தால் பக்கத்து வயலில் உள்ள பூச்சிகள் நம்முடைய வயலுக்கு வராமல் தடுக்கலாம்.

மிளகாய் சாகுபடியில் இலைப்பேன், அசுவினி, வெள்ளை ஈ, தத்துப்பூச்சி இவற்றை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு மஞ்சள் நிறப்பொறி 10 முதல் 15 இடங்களில் வைத்து கவர்ந்து அழிக்கலாம்.

தாவர இலைச்சாறு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10-15 மில்லி என்ற விகிதத்தில் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம். பூச்சி தாக்குதல் இல்லை என்றாலும் தொடர்ந்து தெளித்து பூச்சி வருமுன் பயிரை காக்கலாம்
இலைப்பேனின் தாக்குதல் மினகாயில் அதிகமாக இருக்கும்.

இவற்றை இரசாயன முறையில் கட்டுப்படுத்த புரப்பனாபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அசிபேட் 2 கிராம் என்ற அளவில் கலந்து மாலை வேளையில் ஒட்டும் திரவம் சேர்த்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

அல்லது அபாமேக்டின் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி தெளிக்க வேண்டும் சாறுறிஞ்சும் பூச்சி தாக்குதல் அதிகமாக தென்பட்டால் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளித்து கட்டுப்படுத்தலாம்...

ஊழலுக்கு எதிராக மோடியின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்காததால், மோடி அரசுக்கு எதிராக போராட்டம் - சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவிப்பு...


டிராபிக் போலீசுக்கே தண்ணி காட்டும் இளைஞர் படை...


மதுரை, சேலம் நகரைச் சேர்ந்த கொசுக்களே ஆம்னி பஸ்களில், சென்னைக்கு வந்து டெங்குவைப் பரப்புகின்றன- அதிகாரிகள் பகீர் குற்றச்சாட்டு...


அடப்படுபாவிகளா, கடைசில கொசு மேல பழியை போட்டுட்டீங்களே...

அதிமுக வில் இருக்கும் தமிழக விஞ்ஞானிகள்...


பண்டைத் தமிழகத்தில் தீபாவளி...


பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தீபாவளி பற்றிய குறிப்புகள் இல்லை..

ஆனால், விளக்கீட்டு விழா என்னும் விழாக்கள் பற்றிய செய்திகள் உள்ளன.

கார்காலம் முடிந்தபின் அறுவடையை எதிர்நோக்கிய காலத்தில் அறுமீன் சேரும் முழுநிலா மாலையில் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு செய்த ஒரு விழாவை அகநானூறு கூறும்.

இக்காலத்தில், மலை உச்சியில் கூட விளக்கேற்றி வைத்தனர். இந்த நிகழ்வு பிற்காலத்தில் தீபாவளியுடன் இணைந்தது என்பார்கள்.

விஜயநகர, நாயக்க பேரரசு காலத்தில் தமிழகத்தில் தீபாவளி விழா பெரிய அளவில் அறிமுகமானது என்ற கருத்து உண்டு. செஞ்சி நாயக்கர், தஞ்சை நாயக்கர் செல்வாக்காலும் மராட்டிய வணிகர்கள், போர் வீரர்கள் ஆகியோரின் செல்வாக்காலும் தஞ்சை, மதுரை பகுதிகளில் தீபாவளி பரவலாகியிருக்கிறது.

இது குறித்த ஆவணங்களை புலவர் ராசு பதிப்பித்திருக்கிறார்...

தஞ்சை அரண்மனை தேவதாசியான சுந்தரி என்பவள் தீபாவளி சமயம் அரண்மனையில் நடனமாட கொடுக்கப்பட்ட பரிசுகளை ஒரு மோடி ஆவணம் கூறும் ( கி.பி. 18 ஆம் நூற்.) 1821-ம் ஆண்டு ஆவணம் தஞ்சை கோட்டைக்குள் நகர்வீதியில் செல்லும் மக்களுக்கு இனிப்பு பண்டங்களைத் தானமாக வழங்கியதை குறிப்பிடுகிறது.

இன்னொரு ஆவணம், தீபாவளி முந்திய நாளில் எண்ணெய் குளியல் செய்யப்பட்டதையும் கூறும்.

1827- ம் ஆண்டு ஆவணம் தஞ்சை அரண்மனைகளில் 100 பட்டாசு கட்டுகள் வாங்கப்பட்டதற்கு முக்கால் பணம் கொடுக்கப்பட்டதையும் 1839- ம் ஆண்டு ஆவணம் 300 கட்டு பட்டாசு வாங்கியதையும் கூறும்.

இந்தப் பட்டாசுகள் பொது மக்களுக்கும் இலவசமாய்க் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இதனால் 19- ம் நூற்றாண்டு ஆரம்பத்திலேயே தீபாவளி விழாவில் பட்டாசு கொளுத்தப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது...

சசிகலா 15 நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்த மனுவை கர்நாடக சிறைத்துறை தள்ளுபடி செய்தது...


ஒற்றை தலைவலி...


ஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும்.

ஒற்றை தலைவ‌லி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது. எனவே வற்றை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.

காரணம்: குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில‌ மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மறும் ஓய்வு இல்லாமை. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் பாலுண‌ர்வு ஆன‌ந்தம்.

அறிகுறிகள்: இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி, கண் மங்குதல், வயிறு பிரச்சினைகள்

தீர்வுகள்:பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. எனவே எது தங்களுக்கு பொருந்துகிறது என கண்டறிந்து தீர்வுகளை செயல்படுத்தவும்.

1. எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.

2. நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும்.

3.கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.

4. குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டவும்.பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலனை தரும்.

5.அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.

6. 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம். இதுமிகவும் விலைமதிப்பானது.

7. (அ)200மிலி பசலைக்கீரை சாறு மற்றும் 300மிலி கேரட் சாறு
(ஆ)100மிலி பீட்ரூட் சாறு, 100மிலி வெள்ளரிச் சாறு மற்றும் 300 மிலி கேரட் சாறு, இந்த இரண்டு கல்வைகளில் ஒன்றை தினமும் பருக வேண்டும்.

8.வாசனை எண்ணெயால் தலைக்கு ஒத்தட்ம் தரலாம். தேய்த்து விடலாம்.

செய்ய வேண்டியவை:

1. விட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.

2. 2‍-3 நாட்களுக்கு வெறும் பழச்சாறு மற்றும் காய்கறி சாறை (ஆரஞ்சு, கேரட், வெள்ளரிக்காய்)மட்டும் உண்ணலாம். நீர் அதிகமாக பருக வேண்டும்.

3. தூங்குவதற்கு முன் சூடான நீரால் வற்றிற்கு ஒத்தடம் தரலாம்.

4. தலையில் இறுக்கமான துண்டையோ அல்லது பட்டையையோ கட்டிக் கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:

1. புகை மற்றும் மது. இவை தலைவலியை தூண்டக் கூடியவை.
2. வெயிலில் அலைவது.
3. காரமான உணவு வகைகள்.
4. வயிறு முட்ட சாப்பிடுதல்.
5. தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் கவலை...

முழுசா பாஜகவாக மாறி நிற்கும் அடிமைகள்...


கர்நாடகத்தில் கன்னடர்களுக்கே வேலை சட்டம்: தமிழகம் என்ன செய்யப் போகிறது? - மருத்துவர் ச.இராமதாசு ஐயா அவர்கள் எச்சரிக்கை அறிக்கை...


கர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு பணிகளை கன்னடர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வர அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக கர்நாடக அரசு ஏற்கனவே கொண்டு வந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதைப் பாதுகாப்பதற்காகவே இச்சட்டத்தை கர்நாடகம் கொண்டு வருகிறது.

கர்நாடக அரசு கொண்டு வரவிருக்கும் புதியசட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14-ஆவது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள சம உரிமை, 16-ஆவது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள சம வாய்ப்பு உரிமை ஆகியவற்றுக்கு ஆதரவானதா... எதிரானதா?

என்பதெல்லாம் ஆழமான விவாதிக்கப்பட வேண்டியவை. கர்நாடக அரசின் இந்நடவடிக்கை மற்ற மாநிலங்களுடனான உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் விவாதத்திற்குரியதே.

ஆனால், மத்தியில் ஆட்சி செய்யும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு  ஒற்றை இந்தியா என்ற பெயரில் மாநிலங்களின் உரிமைகளை பறித்துக் கொண்டிருக்கும் நிலையில், மாநில மக்களின் நலன்களைப் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் சரியா? என்று வினா எழுப்புவதை விட, தவறல்ல என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

கர்நாடக அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்டத்தின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கன்னடத்தை ஒரு பாடமாக படித்தவர்களும், கர்நாடகத்தில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வாழ்ந்து கன்னடத்தில் எழுதப் பேசத் தெரிந்தவர்களும் கன்னடர்களாக கருதப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் பணி நிமித்தமாக நீண்ட காலம் வெளிநாட்டிலோ, வெளி மாநிலங்களிலோ பணியாற்றி விட்டு, சொந்த மாநிலத்திற்கு திரும்பும்பட்சத்தில் அவர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படாத வகையில் சில விதிவிலக்குகளை கொண்டு வரவும் கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. இதனால் கர்நாடக தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கான வேலைவாய்ப்பு நிச்சயம் அதிகரிக்கும்.

தமிழ்நாட்டில் ஏராளமான தனியார் நிறுவனங்களும், பெரு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. உலகின் புகழ்பெற்ற மகிழுந்து நிறுவனங்கள் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தான் செயல்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றில் பணியாற்றுபவர்களில் பெரும்பான்மையினர் தமிழகத்தைச் சேராத மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். தனியார் நிறுவனங்களிலும், பெரு நிறுவனங்களிலும்

உயர்பதவிகளில் இருப்பவர்கள் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவர்கள் முடிந்தவரை தங்கள் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களையே சி மற்றும் டி பிரிவு பணிகளில் அமர்த்துகின்றனர்.
தனியார் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் ஆகியவற்றைத் தாண்டி, தமிழர்களின் நிலங்களைக் கையகப்படுத்தி அமைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திலும் இதே நிலை தான் காணப்படுகிறது.

தொடக்கத்தில் உயர்பதவிகளில் வடஇந்தியர்கள் திணிக்கப்பட்ட நிலை மாறி இப்போது ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூட பிற மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்படுகின்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்களாகக் கூட தமிழரை நியமிக்க நிர்வாகம் தயாராக இல்லை. இத்தகைய சூழலில் தமிழர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

கர்நாடக அரசு கொண்டு வரவுள்ள சட்டத்தால் அம்மாநிலத்தில், குறிப்பாக பெங்களூர், மைசூர் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் வேலைவாய்ப்பு மிகக்கடுமையாக பாதிக்கப்படும். சொந்த மாநிலமான தமிழகத்திலும் வேலை வாய்ப்புகளை மற்ற மாநிலத்தவரிடம் பறி கொடுத்து பிற மாநிலங்களிலும் வேலை கிடைக்காமல் தவிக்கும் நிலை தமிழர்களுக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்படாமல் தடுத்து தமிழர்களின் வேலைவாய்ப்புரிமையை பாதுகாக்க தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?

கன்னடர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பாதுகாக்க கர்நாடக அரசு கொண்டு வரவுள்ள சட்டத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் தனியார் நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு பணிகளில் தமிழர்களுக்கு 100% இடஒதுக்கீடு வழங்கும் வகையில் புதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் சட்ட வல்லுனர்களிடம் தமிழக அரசு விவாதிக்க வேண்டும்...

உலகிலே அமைதியாய் ஒரு அறை...


பாஜக தமிழகத்தையும்.. தமிழினத்தையும் வளர்ப்பது இப்படி தான்...


இந்துத்துவத்தை, பிராமணர்களை திராவிடர்களால் வீழ்த்த முடியுமா?


முடியாது. ஏனெனில் பல திராவிடர்கள் உடம்பில் ஓடும் பாதி ரத்தம் பிராமண ரத்தமே.

ஈ வெ ரா பலிஜா நாயுடுவோ, அண்ணா, கருணாநிதி என தெலுகு மேளக்கார திராவிடர்களோ பிராமணர்களுக்கு கோவிலில் ஆசை நாயகிகளாக இருக்கும் பலிஜா, மேளக்கார குலத்தை சார்ந்தவர்கள்.

உதாரணமாக நாராயணசாமி ஐயர் பிராமணர். அவரின் ஆசை நாயகி சந்திரம்மா தெலுகு மேளம். இதில் பிறந்த முத்துலட்சுமி (ரெட்டி) திராவிடர்.

பாதி பிராமண ரத்தம் ஓடும் திராவிடர்கள் வேண்டுவதெல்லாம் தன் அப்பாவான பிராமணர்களின் அங்கீகாரமும், குடும்ப உறவுமே.

இந்துத்துவத்தை தமிழ்நாட்டில் நிலைநாட்ட தெலுங்கர்கள் வந்ததும், குல குருவாக பிராமணர்களும், கோயில் கருவறைகளில் பிராமணர்களை பூசாரியாக்கிய வரலாறும் இதுதான்..

அதனால்தான் தமிழர்களின் கோயில்களில் பிராமணர்களை பூசாரியாக்கும் சட்டமான இந்து சமய சட்டத்தை திராவிடர்களால் போட முடிந்தது.

மதத்தில் புரட்சி செய்த மகான் என கருணாவால் ராமானுஜரை புகழ முடிந்தது. பிராமண பெண்களை தேடி போய் மண உறவு கொள்ள வைத்தது.

கடவுள் மறுப்பு பேசி ஊரெங்கும் பிராமணர்கள் கொழிக்கும் இந்துத்துவம் செழித்து ஓங்குவதும் நடந்தது.

பிராமணர்களை ஒழிக்க திராவிடர்களால் என்றுமே முடியாது. தன் அப்பாவான பிராமணனுடன் கூட்டு சேர்ந்து தமிழ்நாட்டை கொள்ளையடிக்க, தமிழின அழிப்பை செய்ய மட்டுமே முடியும்.

தமிழின எதிரியான பிராமணர்களை, பிராமண இந்தியாவை எதிர்த்து விரட்ட தமிழர்களே நேரடியாக இறங்க வேண்டும்...

விஜய் மல்லையா லண்டனில் மீண்டும் கைது கைதானவுடன் ஜாமின் வழங்கப்பட்டது...


வளரி (BOOMERANG) தமிழரின் ஆயுதம்...


பதினெட்டாம் நூற்றாண்டில் வீரத்தில் சிறந்த சின்ன மருதுவிடமிருந்து தான் வளரி (BOOMERANG) வீச கற்றுக்
கொண்டதை தன்னுடைய இராணுவ நினைவுகள் என்ற நூலில் குறிப்பிடுகிறார் கர்னல் வெல்ஷ்.

1920களில் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக பிறன்மலை கள்ளர்கள் போராடிய போது அவர்களை ஒடுக்குவதற்கு படைகளை குவித்தது ஆங்கிலேய அரசு.

அப்போது அவர்களை எதிர்த்து தாக்க அம்மக்கள் வளரியையே பயன்படுத்தினர்.

பகையாளியை தாக்கிவிட்டு மீண்டும் அடித்தவரிடம் திரும்பும் அந்த ஆயுதத்தை பார்த்து ஆங்கிலேயர்கள் கலங்கி போயினர்.

வளரி தடை செய்யப்பட்டது, வீட்டில் வைப்பது குற்றம் என்று கருதப்பட்ட காரணத்தால் அதற்கு பிறகு அந்த ஆயுதம் கோவில்களில் வைக்கப்பட்டது.

இன்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது இடுப்பில் வளரி தாங்கியிருப்பார் என்று சொல்கிறார்கள்,

தென்மாவட்டங்களில் பல கோவில்களில் வளரி பூஜைக்குரிய ஆயுதமாக இருப்பதாக சொல்கிறார்கள்...

மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)...


மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.

மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:

1) மூட்டழற்சி (osteo arthritis) : இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.

2) முடக்குவாதம் (rheumatoid arthritis) :  இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

அறிகுறிகள்:

மூட்டழற்சி: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.
முடக்குவாதம்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

காரணம்: முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம்.

முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரண்மாகும்.

பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

கைவைத்தியம்:

1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3.இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5.ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.

6.இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும். இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

7.ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

உணவுப்பழக்கம்:

வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.

காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.

கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்...

விடுதலைப் போராட்ட வீரர்கள் சுப்பிரமணிய சிவா மற்றும் திருப்பூர் குமரன் இருவரின் பிறந்த தினம் இன்று...




அமெரிக்கா நிலாவுக்கு போகவே இல்லயாம்...


1960-களில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுக்கும், யார் முதலில் நிலாவிற்கு செல்வார்கள் என்று ஒரு 'கடும் விண்வெளி யுத்தமே' நடந்து என்பது தான் நிதர்சனம்.

1969-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி நிலவில் முதல் மனித காலடியை எடுத்து வைத்து அந்த விண்வெளி யுத்ததில் வெற்றி அடைந்தது அமெரிக்கா.

அதன் பின் தான் மெல்ல மெல்ல கிளம்பின சந்தேகங்கள்.

அமெரிக்காவின் அப்பலோ விண்கலங்கள், அதன் வீர்ர்கள், அவர்கள் நிலாவிற்கு சென்றது எல்லாம் பொய். அவைகள் எல்லாம் படமாக்கப் பட்டவைகள் என்று புரளிகள் கிளம்பின..

அப்படியாக அது பொய், படம் பிடிக்கப்பட்டவைகள், புரளிகள் என்று கூறும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் (Conspiracy theorists) குறிப்பிடும் ஆதாரங்கள்.


10. காற்றில் ஆடும் அமெரிக்க கொடி :

அமெரிக்கா நிலாவில் முதல் கால் தடம் பதிக்கும் நிகழ்ச்சியானது நேரடி ஒளிப்பதிவில் இருந்தது, அதில் நிலவில் நிலை நிறுத்தப்பட்ட அமெரிக்க கொடியானது காற்றில் ஆடுவதை தெளிவாக காண முடிந்தது.


09. பள்ளங்கள் இல்லாமை :

அப்பலோ விண்கலம் நிலவில் தரை இறங்கியதற்க்கான எந்த விதமான பள்ளமும், வீடியோ மற்றும் புகைப்படங்கள் என எதிலும் இல்லை. இறக்கி வைக்கப்பட்டது போல் தான் காட்சியளிக்கிறது.


08. பல கோணங்களில் ஒளி ஆதாரம் :

ஒளி ஆதாரமானது பல வகையான கோணங்களில் இருந்து கிடைப்பதின் மூலம் இது படடமக்கப்பட்டது என்கிறார்கள் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள்.


07. வான் அலென் ரேடியேஷன் பெல்ட் :

முதல் முயற்சியிலேயே 'வான் அலென் ரேடியேஷன் பெல்ட்' என்ற கடினமான பூமியின் காந்த சக்தி கதிர்வீச்சை தாண்டி எப்படி நிலாவிற்கு சென்றனர் என்பது இன்றும் கேள்வி குறி தான்..!


06. விளக்கமில்லாத பொருள் :

வெளியான நிலவில் இறங்கிய புகைப்படம் ஒன்றில், விண்வெளி வீரரின் ஹெல்மாட்டில் விளக்க முடியாத பொருள் ஒன்று பிரதிபளிக்கிறது.


05. மறைக்கப்பட்ட கேபிள்கள் :

நிலவின் புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்றபடி விண்வெளி வீரர்கள் கேபிள்களில் இணைக்கப்பட்டு குதித்து குதித்து செல்லப்பட்டனர் என்றும், சில புகைப்படங்களில் கேபிள்களை தெளிவாக பார்க்க முடிகின்றது என்றும் கூறுகிறார்கள் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள்.


04. நட்சத்திரமின்மை :

வெளியான முழு புகைப்பட தொகுப்பு மற்றும் வீடியோ பதிவிலும் எந்தவொரு ஒரு நட்சத்திரமும் பதிவாகவில்லை.

03. 'சி' பாறை :

வெளியான நிலவில் இறங்கிய புகைப்படம் ஒன்றில், இயற்கைக்கு மாறான முறையில் தெளிவாக 'சி' (C) என்ற எழுத்தை பிரதிபலிக்கும் பாறை..!

02. பொய்யான கிராஸ்-ஹேர்ஸ் :

வெளியான நிலவில் இறங்கிய பெரும்பாலான புகைப்படங்களில் கிராஸ்-ஹேர்ஸ்கள் (Cross-hairs) 'எடிட்' (Edit) செய்யப் பட்டுள்ளன, குறிப்பிட்ட புகைப்படத்தில் கிராஸ்-ஹேர்ஸ் ஆனது விண்கலத்திற்கு பின்னால் 'எடிட்' செய்யப்பட்டுள்ளது அதற்கு சான்றாகும்.


01. டூப்ளிக்கேட் பின்னணிகள் :

ஒரே மாதிரியான பின்புலம் (Backdrop) கொண்ட பல வீடியோ காட்சிகள்..!

நம்பவில்லை :

அமெரிக்கா நிலாவிற்கு சென்றதை, 20% அமெரிக்கர்களே நம்பவில்லை என்கிறது ஒரு ஆய்வு என்பதும் குறிப்பிடத்தக்கது..