15/12/2018

ஏன் எம்மொழியும் சொல்லாத அறத்தை தமிழ் வழியுறுத்துகிறது ?


வழக்கம் : கொம்பின் நடுவே லிங்கத்தை  வணங்கு.

பொருள் : அறத்தின் வழியே இறைவனை காண்.

வழக்கு : லிங்கத்திற்கும் நந்திக்கும் இடையே நடக்காதே.

பொருள் : இறைவனுக்கும் அறத்திற்கும் குறுக்கே போக நினைக்காதே.

வழக்கு : நந்தியின் காதுகளில் சிவனிடம் பேசு.

பொருள் : அறத்தைக் கொண்டு இறைவனை தொடர்புகொள்...

சபரிமலை விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான ரெஹானா பாத்திமா-வுக்கு நிபந்தனை ஜாமீன்...


சபரிமலை விவகாரத்தில் சர்ச்சையின் காரணமாக கைதான சமூக செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா-வுக்கு தற்போது நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது.

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ரெஹானா கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்...

அரசுகள் அம்பலம் - 2...


அடுத்த அரசுகள் அம்பலத்தில் இந்தியா...

ஆர்டர் செய்ததோ ஹெட்போன், வந்ததோ இரும்பு துண்டு, ஏமாந்த நடிகை...


லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் சோனாஷி சின்ஹா. பாலிவுட்டில் பிஸியாகவுள்ள இவர் சமீபத்தில் 18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஹெட்போன் ஆர்டர் செய்துள்ளார்.

ஆனால் அவர் கையில் கிடைத்தது வெறும் இரும்பு தானாம். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்...

பிரபஞ்சம்...


இந்த பிரபஞ்சம் மிகவும் விசித்திரமானது. அழகானது. மர்மங்கள் நிறைந்தது. அனைத்து அதிசயங்களையும் தன்னுள் அடக்கியது. ஆனால் அதேசமயம் மிகவும் எளிமையானது, இயல்பானது...

அதன் எளிமையையும் இயல்பையும் நீங்கள் சரியாக உள்வாங்கி உணர்ந்து விட்டீர்கள் என்றால் உங்களைப்போன்ற வாழப்பிறந்தவர் இந்த பூமியில் இல்லை. நீங்களே இந்த உலகத்தை அனுபவிக்க பிறந்தவர், ரசிக்கப்பிறந்தவர், கொண்டாட பிறந்தவர் என்பதை உணர்ந்து விடுவீர்கள்.

இங்கு அழகான ரோஜாவுடன் சேர்ந்து தான் முள்ளும் இருக்கிறது. சேற்றில் தான் செந்தாமரையும் இருக்கிறது. இதை ரசிக்க வேண்டும் என்றால் அப்படியே ரசிக்கலாம் ஆனால் அதை கையாளவேண்டும் என்றால் அல்லது மலரை பறிக்க வேண்டும் என்றால் முள்ளை விலக்கி வைக்க உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். கையில் முள் படாமல் ரோஜாவை பறிக்க தெரிந்து இருக்க வேண்டும்.

உங்களை நோக்கி வரும் சூழ்நிலைகளும், வாய்ப்புகளும், வாழ்க்கையும் இதுபோன்றதே. அதில் நன்மை தீமைகள் அனைத்தும் கலந்தே இருக்கும் நான் அப்படியே சூழ்நிலையை ஏற்றுக்கொள்வேன் என்றால் நீங்கள் கஷ்டப்படுவதை தடுக்க யாராலும் முடியாது. இதுவும் ஒருவகை ஆனவமே.

சூழ்நிலையை பிரித்து கையாள தெரிந்திருக்க வேண்டும். தேவையானால் சூழ்நிலையை எதிர்த்து போராட தெரிந்து இருக்க வேண்டும். அவசியமெனில் சூழ்நிலையையே மாற்றவும் தெரிந்து இருக்க வேண்டும். தேவையில்லையெனில் அந்த சூழ்நிலையில் இருந்து விலகவும் தெரிந்து இருக்க வேண்டும். மாற்றவே முடியாது எனில் அப்படியே ஆனந்தமாக ஏற்றுக்கொள்ளவும் தெரிய வேண்டும்.

இந்த உலகத்தில் ரசனைக்கும், ஆனந்தத்திற்கும், இன்பத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் என்றுமே பஞ்சம் இருந்ததே இல்லை. உங்களால் அனுபவித்து தீர்க்க முடியாத அளவிற்கு இங்கு அனைத்து இன்பங்களும் கொட்டி கிடக்கின்றன. அவற்றை அனுபவிக்க தெரியாமல் நீங்கள் கஷ்டத்திலோ துக்கத்திலோ துயரத்திலோ புலம்பிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் சூழ்நிலையை கையாள தெரியாத சூழ்நிலை கைதியாகி இருக்கிறீர்கள் என்று பொருள்.

சூழ்நிலை கைதியாக வாழ்பவன் ஆன்மிகவாதியாக இருக்க முடியாது. வாழ்வில் உள்ள அனைத்து இன்பங்களையும் மிச்சம் வைக்காமல் அனுபவித்து கொண்டாட பிறந்தவனே ஆன்மிகவாதி. வாழ்வு என்ன கேட்கிறதோ அதை அப்படியே கொடுப்பது இல்லை ஆன்மிகம். அந்த வாழ்வையே தனக்கானதாக மாற்றி கொண்டாடி மகிழ்வது ஆன்மிகம்.

இந்த உலகவாழ்வு தேனீக்கள் சூழ்ந்து இருக்கும் தேனைப்போன்றது. உங்களுக்கு தெளிவு என்ற நெருப்பை வைத்து தேனீக்களை கையாள தெரிந்தால் நீங்கள் வாழ்க்கை என்னும் தேனை உண்டு பரவசத்தில் ஆழ்வதை யாரும் தடுக்க முடியாது.

இவனே ஆன்மிகவாதி தனிமையையும் தியானத்தில் கொண்டாடுகிறான். வாழ்வை தனக்கேற்ற துணையுடன் கொண்டாடுகிறான். இயற்கையையும் கொண்டாடுகிறான். மரணத்தையும் ஆனந்தமாக வரவேற்கிறான். இவனுக்கு வாழ்வில் கஷ்டம் என்பது என்னவென்றே தெரியாது. வாழ்வை தொலைப்பது ஆன்மிகமாகாது. வாழ்வை வாழ்ந்து தீர்ப்பதே ஆன்மிகமாகும்...

வானுயர்ந்த கட்டிடம் என்றால் அதில் அனைத்தும் அடங்கும்...


தவம்...


விழிப்பு நிலையிலேயே இருக்க பழகி கொண்டால்...

மற்றவைகளுடைய எண்ண அலைகள் நமக்கு தீமை விளைவிப்பனவாக இருந்தாலும்..

உணர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பனவாக இருந்தாலும்..

அவை நம்மை பாதிக்காது..

உதாரணமாக ரேடியோவில் எத்தனையோ அலைவரிசைகள் உண்டு என்றாலும் எதை நாம் தேர்ந்து எடுக்கின்றோமோ அவை மட்டுமே நமக்கு கேட்கும்.

மற்ற அலைவரிசைகள் வந்து மோதும் , ஆனால் நமக்கு கேட்காது அது போல நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே நினைப்போம்.

நாம் எங்கு போனாலும் நமக்காக மற்றவர் தானாக அந்த அலைவரிசையில் கட்டுப் பட்டு நம் மதிப்பை உணர்ந்து அவர்கள் செயல்படுவார்கள்.

எங்கே போனாலும் நமக்கு வெற்றியாகவே இருக்கும்.

அப்படி எங்கேயாவது தடை ஏற்பட்டாலும் அது நமக்கு கெடுதல் இல்லை நம்மை திருப்பி விடுவதனால் தேவையில்லாதவற்றை தள்ளி விடுகிறது.

எந்த நேரத்தில், எந்த காலத்தில், எந்த சூழ்நிலையில் நடக்க வேண்டுமோ அது தானாகவே நடந்து விடும்.

உலகில் எந்த இடத்திலாவது நம் எண்ணிய எண்ணத்திற்குரிய காலமும் நேரமும் வரும் அது தானாக நடந்து விடும்.

எனவே நல்ல சிந்தனைகளையே மனதில் வளர்த்துக் கொள்வோம். நல்லதே நடக்கும். நாம் நினைப்பது தான் நடக்கும்...

அரசுகள் அம்பலம் - 1...


இது உலக அரசியலின் சிறு அங்கமே.. மேலும் காண்போம்...

முதல் இந்தி எதிர்ப்புப் போரை தொடங்கி வைத்தவர்.. ஈ.வெ.ரா.பெரியாரா சோமசுந்தர பாரதியாரா?


10.8.1937இல் இராமகிருஷ்ண மடம் மாணவர் இல்ல விழாவில் கலந்து கொண்ட முதல்வர் இராசாசி இந்தி பள்ளிகளில் கட்டாயமொழி என்று அறிவிப்பு.

27.8.1937இல் கரந்தை தமிழ்ச்சங்கம் சார்பில் உமா மகேசுவரனார் இந்தித் திணிப்புக்கு கண்டனம்.

29.8.1937இல் திருநெல்வேலி தமிழ்ப் பாதுகாப்பு சங்கம் இந்தித் திணிப்புக்கு கண்டனம்.

5.9.1937இல் சென்னை செளந்தர்ய மண்டபத்தில்  முதல் இந்தி எதிர்ப்பு கூட்டத்தில் தலைமையேற்று சோம சுந்தர பாரதியார் இந்தி திணிப்புக்கு எதிராக கண்டன முழக்கம்.

4.10.1937இல் சென்னை கோகலே மண்டபத்தில் மறைமலையடிகள் தலைமையில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாபெரும் கண்டனக் கூட்டம். சோமசுந்தர பாரதியார் இதில் பங்கேற்பு.

26.12.1937இல் கி.ஆ.பெ.விசுவநாதம் ஒருங்கிணைப்பில் திருச்சியில் சென்னை மாகாண மூன்றாவது தமிழர் மாநாடு. இந்த மாநாட்டின் தலைவர் சோமசுந்தர பாரதியார். இதில் தான் ஈ.வெ.ராமசாமி பெரியார் முதன் முறையாக பங்கேற்பு.

21.4.1938இல் மீண்டும் முதல்வர் இராசாசி கட்டாய இந்திப் பாடம் நடைமுறைக்கு வரும் என்று ஆணை பிறப்பிப்பு.

28.5.1938இல் திருச்சியில் மந்திராலோசனைக் கூட்டத்தில் சோமசுந்தர பாரதியார் சட்டமறுப்பு இயக்கம் தொடங்க வேண்டுகோள். உடனடியாக இந்தி எதிர்ப்பு வாரியம் அமைக்கப்பட்டு அதன் தலைவராக சோமசுந்தர பாரதியாரும், செயலாளராக கி.ஆ.பெ.விசுவநாதமும், உறுப்பினர்களாக உமா மகேசுவரனார், செளந்தர பாண்டியனார், ஈ.வெ.ரா. பெரியார், கே.எம். பாலசுப்பிரமணியம் ஆகியோர் தேர்வு.

இந்தி எதிர்ப்பு வாரியம் சோமசுந்தர பாரதியாரின் வழி காட்டுதலில் இராசாசி வீடு முற்றுகை, சட்ட மன்ற முற்றுகை என்று பல்வேறு தளங்களில் போராட்டம் வீறு கொண்டது.

இந்தி எதிர்ப்புப் போரில் மறியல் செய்து சிறை சென்ற சர்வாதிகாரிகள் பதிமூன்று பேர். இந்தப் பட்டியலில் பெரியார் பெயர் இல்லை.

13.11.38இல் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு, 14.11.38இல் பெத்து நாயக்கன் பேட்டை கூட்டம் ஆகிய இடங்களில் பெரியார் அரசுக்கு எதிராக பேசியதாக போடப்பட்ட அவதூறு வழக்கில் தான் பெரியார் 5.12.1938 அன்று கைது செய்யப்பட்டார்.

தமிழறிஞர் முன்னெடுத்த இந்தி எதிர்ப்புப் போரில் இடையில் புகுந்து  பெரியார் தலைவரான கதை இது தான் என்பதை எத்தனை தமிழர் அறிவாரோ?

அமமுகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று திமுகவில் இணைகிறார்...


திருநீறு அணிவது ஏன் ?


நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில் நம் உடல் ஏற்றுக் கொள்கிறது.

இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது. அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்து வருகிறது.

பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு.

விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும்.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்...

1. புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2. தொண்டைக்குழி (விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3. நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம்.

மேலும், விபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது.

ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது...

வங்கி உண்மைகள் - 3...


FRDIயோட இன்னொரு முகம்...

இதுவும் Demonetization மாதிரி தோல்வி ஆனால் சாமானியனோட பணத்துக்கு பாதுகாப்பு என்ன?

http://zeenews.india.com/economy/financial-resolution-and-deposit-insurance-bill-2017-all-you-need-to-know-2063799.html/amp

கர்ப்பிணிப் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்...


பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆவதற்கு சில ஆசனப் பயிற்சிகள் உண்டு. அவற்றை 7ஆம் மாதத்தில் இருந்து செய்யலாம்.

ஆனால் கர்ப்பிணிகள் ஆசனப் பயிற்சி செய்துதான் சகப்பிரசவம் ஆக வேண்டியதில்லை.

வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு.

முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும்.

ஒருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும். ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் போது கரு குழந்தையாக உருவாவதில் சிக்கல் ஏற்படும்.

அதன் பிறகும் மல்லாந்து படுப்பதை தவிர்க்க வேண்டும். மல்லாந்து படுத்தால் குழந்தைக்கு குடல் சுற்றிக் கொள்ளும் ஆபத்து ஏற்படும். அதேப்போல, ஒரு பக்கம் ஒருக்களித்து படுத்திருக்கும் போது அடுத்த பக்கத்திற்கு அப்படியேத் திரும்பக் கூடாது. எழுந்து உட்கார்ந்து பிறகுதான் அடுத்த பக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இது குழந்தை சுகப்பிரசவம் ஆக உதவும்.

இப்போதெல்லாம் இந்த பழக்கத்தை நிறைய கர்ப்பிணிகள் கடைபிடிப்பதில்லை. அதனால்தான் குழந்தை தலை திரும்புவதில் பிரச்சினை ஏற்படுகிறது. தலை திரும்பாமல் இருந்தால் கருப்பை மேற்புறத்திறப்பு (caesarean)மூலமாகத்தான் பிரசவமாகும்.

மேலும், எல்லோருமே குனிந்து நிமிர்ந்து வேலை செய்தாலே சுகப்பிரசவமாகும். வீட்டு வேலைகளை தாங்களாகவே செய்து கொண்டால் எல்லோருக்கும் சுகப்பிரவமாகும் வாய்ப்பு உள்ளது.

அதேப்போல கர்ப்பிணிகள் ஏற்கனவே யோகாசனம் செய்து வந்து கொண்டிருந்தாலும் முதல் மூன்று மாதங்களுக்கு செய்யக் கூடாது. அதன் பிறகும் எளிதான பயிற்சிகளை செய்யலாம்.

ஆனால் கர்ப்பம் தரித்த பிறகு புதிதாக யோகாசனம் செய்யவேக் கூடாது.

சுகப்பிரசவம் ஆவதற்கான ஆசனத்தையும் 7ஆம் மாதத்தில் இருந்து செய்யத் துவங்கலாம். ஆனால், சுகப்பிரசவம் ஆவதற்கு எந்த பயிற்சியும் தேவையில்லை. நீங்கள் சுறுசுறுப்பாக உங்கள் வேலைகளை செய்து கொண்டு வந்தீர்களானால். ஒரு வேளை எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்குத்தான் இந்த பயிற்சிகள் தேவைப்படும்.

மேலும், வீட்டில் குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகளான வீட்டை பெருக்குதல், துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்யும் போது வயிறு சுருங்கி விரியும் தன்மையை பெறுகிறது.

தற்போது சில பெண்களுக்கு சுகப்பிரவம் என்றால் பயம் ஏற்படுகிறது. கருப்பை மேற்புறத்திறப்புதான் (caesarean) எளிது என்கிறார்கள். முதலில் அந்த பயத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்...

விவசாய நிலங்களை விற்க வேண்டாம்...


அரசாங்கம் சாலையை விரிப்பதற்க்கு, தொழிற்சாலை தொடங்குவதற்க்கு என உங்கள் நிலங்களை கேட்க்கிறார்கள் என்றால் அவர்கள் மீது வழக்கு தொடருங்கள்...

இலுமினாட்டி களால் வெப்ப நிலையை கட்டுப்படுத்த முடியும்...


1958ல் அறிவியல் அறிஞர்களால் நிருபிக்கப்பட்ட உண்மை...

http://www.geoengineeringwatch.org/wp-content/uploads/2015/10/GeoengineeringWatch-magazine1-.jpg

வானிலையை ஆயுதமாக பயன்படுத்த தெரிந்த நாடே ஹட்ரஜன் குண்டுகளை விட வல்லமை கொண்ட அரசாக இருக்க முனை மியும்...

உலகின் வானிலையை கட்டுபடுத்தும் 5 வழிகள்...

1) ராக்கெட் மூலம் புகை மேகங்கள் கொண்டு சூரிய சத்தியை கூட்டவோ, குறைக்கவோ முடியும்..

2) அமனி மண்டலம் எலக்ட்ரான் வெடிப்பு மூலம் அதன் மின் சத்தியை மாற்ற முடியும்...

3) தெர்மோநியுக்ளியர் மூலம் வான்வெளியின் வெப்பத்தை அதிகரிக்க முடியும்...

4) சமுத்திரம் மீது ரசாயனம் தூவி ஆவியாதலை கட்டுப்படுத்தி மழையை குறைக்கலாம்...

5) கடல் பரப்பின் மீது சாயம் எண்ணெய் மூலம் அதன் பிரதிபலிக்கும் தன்மையை மாற்றலாம்...

நான் படித்த உளவியலில் இருந்து.. மனநோய் அறிகுறிகள்...


பொதுவாக பாதுகாப்பின்மையும், பயமும் சேர்ந்துதான் மனநோயை உன்டாக்குகிறது..

மனநோயின் அறிகுறிகள்...

மனச்சோர்வு,
அர்த்தமற்ற புரியாத பயங்கள்,
தாழ்வு மனப்பான்மை,
குற்ற உணர்ச்சிகள்,
தற்கொலை எண்ணங்கள்,
தன்னம்பிக்கையின்மை,
வாழ்க்கையில் பிடிப்பின்மை,
பதட்டமான மனநிலை,
பிரம்மைகள்,
காதில் கேட்கும் மாயக்குரல்கள் அதன் மிரட்டல்கள்,
இல்லாத உருவங்கள்,
அருவருப்புக் காட்சிகள் கண்முன் தெரிதல்,
வேலை, கல்வியில் ஈடுபாடின்மை.

மேலும் obsessive compulsive disorder அதாவது ஒரே எண்ணம் திரும்பத் திரும்ப வந்துபோதல், ஒரே காரியத்தை திரும்பத் திரும்பச் செய்தல், இந்த எண்ணம் தவறு என்று அவர்களுக்குத் தெரியும்.

ஆனால், அதை கட்டுப்படுத்த முடியாது, இதனால அடிக்கடி கைகழுவுதல், குளித்தல் என்று தன்னை சுத்தமாக்கிக் கொள்வதாக நினைத்துக் கொள்வார்கள். தோன்றும் மனநோய் அறிகுறிகள்.

அதேபோல் செக்சுவல் பிரச்சினைகள் இருக்கும். அதாவது Self-sex, Homo-sex, Lesbian-sex, இதெல்லாம் இருக்கும்.

கணவன்-மனைவியிடையே பரஸ்பர சந்தேகம், ஞாபக மறதி பிறகு இதில் முக்கியமான ஒன்று சேடிசம் எனப்படும் பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணுதல்.

பிறகு Day-dreaming என்கிற பகல் கனவு, பிறகு சிலருக்கு எதைப் பார்த்தாலும் ஏற்படும் பயம், ஹிஸ்டீரியா இதுபோன்ற மனத் தொடர்பான உடல் நோய்கள் ஏராளமாக உள்ளன.

உதாரணமாக..

திக்குவாய், ஃபிட்ஸ், நரம்புத் தளர்ச்சி, வயிறு, ஜீரணக் கோளாறுகள், மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி, ரத்த அழுத்தம்..

அதேபோல் டயாபடீஸ் உடல்நோய் அல்ல மனத்தில் அதிக பிரச்சினைகள் தோன்றும் போது தான் டயாபடீஸ் தோன்றுகிறது...

நமக்கான அரசியல் வெற்றி எங்கு தடைபடுகிறது..?


உணவுக்கு பின்...


1. உணவுக்குப் பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்...

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது...

வங்கி உண்மைகள் - 2...


இந்த மசோதா வை அடுத்த கூட்ட தொடரில் எப்போது வேனாலும் அமல் படுத்தலாம்...

எட்டு நடை...


எட்டு போடுகிறவனுக்கு நோய் எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி..

மனித மன, உடல் பிரச்சினைக்கு காரணம்...

அவன் கர்மா, அந்த கர்மா வழி உடலுக்கு வருகிறது நோய்.

நோய் வருத்தும் பொழுது, வருந்தும் உடல், அதிலிருந்து விடுபட்டு நிரந்தர நிம்மதியை தேடிக் கொள்ளவே விரும்பும்.

சித்தர் வழி என்பது அனைத்துக்கும்
தெளிவான விடைகளை தருகிறது.

சித்தர்கள்... எட்டுப் போடு, எல்லாம் பறந்தோடும்.. என்கிறார்கள்.

நம்மில் பலரும், நீரிழவு நோய், உயர்
அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம்,
மார்புச்சளி போன்றவைகளால் மிக
பாதிப்படைந்திருப்போம்.

எத்தனை தான் மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில் கட்டுப்பாடு இல்லாமல் போவதால்) மறுபடியும் இவை தாக்கும்.

இந்த நோய்களை, கொல்லாமல் கொல்லும் நோய்கள் தரவரிசையில் வைத்துள்ளனர் சித்தர்கள்.

இதிலிருந்து விடுபட்டு, நாம் மனிதர்கள், நலமாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த முறையை வகுத்துக் கொடுத்துள்ளனர்.

காலை நேரத்திலோ, அல்லது நேரம் கிடைக்கும் பொழுதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவேளியிலோ (குறைந்தது 10 அடி நீளம் வேண்டும்) எட்டு போடுகிற
வடிவத்தில் குறைந்தது 30 நிமிடங்கள்
நடை பயிற்சி செய்ய வேண்டும்.

முதல் 15 நிமிடங்கள் தெற்கிலிருந்து வடக்காக நடந்தால், அடுத்த 15 நிமிடங்கள் வடக்கிலிருந்து தெற்காக நடக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு இருமுறை செய்ய வேண்டும்.

காலையும், மாலையும் வேளைகள்
மிக வசதியாக இருக்கும்.

இதை செய்வதால் என்ன நடக்கும்...

1. பயிற்சி தொடங்கிய அன்றே மார்பு சளி
கரைந்து வெளியேறுவதை காணலாம்.

2. இந்த பயிற்சியை இருவேளை செய்து வந்தால், உள்ளங்கை கை விரல்கள்
சிவந்திருப்பதை காணலாம். அதாவது
ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று
அர்த்தம்.

3. நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை
வியாதி) குறைந்து முற்றிலும் குணமாகும். (பின்னர் மாத்திரை, மருந்துகள் தேவை இல்லை).

4. குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி,
மலச்சிக்கல் போன்றவை தீரும்.

5. கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.

6. கேட்கும் திறன் அதிகரிக்கும்.

7. உடல் சக்தி பெருகும் - ஆதார சக்கரங்கள் சரியாக செயல்படும்.

8. குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.

9. ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில் வரும்.

10. பாத வலி, மூட்டுவலி மறையும்.

11. சுவாசம் சீராகும் அதனால் உள்
உறுப்புக்கள் பலம் பெரும்.

சரி.. இதெப்படி நடக்கிறது என்று
உங்களுக்குள் கேள்வி ஏழும்.

8 வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது நீங்களே உணர்வீர்கள்..

அந்த வடிவம் முடிவில்லாதது மட்டுமல்ல, நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சமநிலை படுத்துகிறது.

இதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்த சித்தர்கள், இதையே வாசி யோகத்தில் (மூச்சு பயிற்சியில்) உள்ளுக்குள்ளே சுவாசத்தை விரட்டி எட்டு போடுவார்கள் என்பது தெரியுமோ?

விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து பலனடையுங்கள்...

வங்கி உண்மைகள் - 1...


அடுத்தடுத்த தொடரில் இதைப் பற்றி விரிவாக சொல்கிறோம்...

சபரிமலை விவகாரம் - தீக்குளித்த பாஜக தொண்டர் உயிரிழப்பு...


சபரிமலையில் 144 தடை உத்தரவை விலக்கிக் கொள்ளக் கோரித் திருவனந்தபுரத்தில் பாஜக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் வேணுகோபாலன் என்பவர் தீக்குளித்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்...

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டி. கட்சியின் கொள்கைகளை விளக்கி, ஜனவரி முதல் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் - சரத்குமார் அறிவிப்பு...


இசைப்பாடும் தும்பி...


கொம்பர்த் தும்பி குழலிசை காட்டப்
பொங்கர் வண்டினம் நல்யாழ் செய்ய
வரிக்குயில் பாட மாமயில் ஆடும்
விரைப் பூம்பந்தர்..

இப்பாடலடிகள் ஐம்பெருங்காப்பியமான மணிமேகலை எனும் நூலில் உள்ளன. வண்டினுள் உயர்ந்த சாதியாகிய தும்பி என்னும் வண்டு குழலூத, வண்டினம் யாழ் இசைக்க, குயில் பாடலைப் பாட, மயில் ஆடுகின்ற சோலை என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வடிகள் சோலைக் காட்சியைச் சித்தரிப்பனவாகும். ஆனால், குறிப்பாக இசை தோன்றிய வகையையும், இசைக்கருவி தோன்றிய முறையினையும் உணர்த்துகின்றன. குயிலின் இனிய குரலைக்கேட்டு மனிதன் இசை இசைக்கத் தொடங்கினான் என்ற கருத்தை, “குயில் பாட” என்பது தெளிய வைக்கின்றது. ஆதியில் குயில் பாடியதைக் கேட்டு மனிதன் பாடினான். அதனையே மரபாகக் கொண்டு சீத்தலைச் சாத்தனார் ஈண்டு இவ்வாறு கூறியுள்ளார் என்பது விளங்கும்.

மலையிடை நின்ற மூங்கிலில் வண்டுகள் துளைத்தத் துளைகளினின்று வெளிப்பட்ட இனிய ஓசையைக் கேட்டே, மனிதன் துளைக்கருவியாகிய குழல் தயாரித்தான் என்ற உண்மையை உணர்த்தும் வகையில் சாத்தனார் இவ்வாறு கூறினார் என்பது தெளிவாகும்...

தமிழா சேவல் சண்டைக்கு தயாராக இரு...


மலர் மருத்துவம்...


லண்டனைச் சேர்ந்த டாக்டர் எட்வர்ட் பாஹ் என்கிற ஹோமியோபதி டாக்டர், மலர் மருத்துவம் என்ற புதிய துறையைக் கண்டறிந்தார். முப்பது வருடங்களுக்கும் மேலாக லண்டன் காடுகளில் பூக்களோடு உறவாடிய பிறகுதான், இந்த மருத்துவ முறையை அவர் கண்டறிந்தார்.

ஒவ்வொரு மலருக்கும் ஒரு தனிச் சிறப்பு குணம் உண்டு. அது உடல்நலச் சிக்கல்களுக்கு எப்படித் தீர்வாகப் பயன்படும் என்று அவர் ஆராய்ச்சி செய்துள்ளார். தனி மலரையோ அல்லது, பல மலர்களின் கலவையையோ சிகிச்சையாகப் பரிந்துரைத்துள்ளார்.

மனமும் உடலும்...

மலர்களின் நறுமணம், நிறம், அமைப்பு போன்றவை மனிதர்களுக்குக் காலம்காலமாகப் புத்துணர்வை வழங்கிவந்துள்ளன. அத்துடன் நில்லாமல் மலர்கள் உடல் ஆரோக்கியத்துக்கு எப்படி உதவும் என்பதே அவருடைய கண்டறிதல். உடல்நலக் கோளாறு என்பது மனதின் வெளிப்பாடே. மனதைச் சுகமான நிலையில் வைத்திருப்பதால், உடலும் சுகமடைகிறது என்பதே இதன் அடிப்படைத் தத்துவம். வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு இந்த மருத்துவம் உதவுகிறது.

ஒருவருடைய உடல் பகுதி பகுதியாக வலிக்கிறது என்றால், உடல் இறுக்கமடைந்துவிட்டதாகக் கொள்ளலாம். அப்படிப்பட்டவருடைய மனநிலையும் அதுபோலவே இருக்கும். இவருக்கு எடுத்த பொருட்களை எடுத்த இடத்தில் வைக்காவிட்டால் கோபம் வரும். நேரத்துக்கு ஒரு வேலையை முடிக்காவிட்டால் பொறுக்க முடியாது. சுத்தம், நேரம் ஆகியவற்றைப் பராமரிப்பதற்காக அதிக நேரத்தையும், மனதையும் செலுத்தும் நபராக இருப்பார். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர், தன் மனதிடம் பிடிவாதமாக இருக்கிறார். அதுவே அவருடைய உடல் வழியாக, உறுப்புகளில் வலியாக வெளிப்படுகிறது.

இதற்கு ரா வாட்டர் மற்றும் பீச் என்னும் இரு மலர் மருந்துகள் உதவும். அதேநேரத்தில் வேலையும் நடக்கும். இறுக்க உணர்வை மனம் கைவிடும்.

பிரச்சினைகளுக்கு உதவி...

முதுகு வலி உள்ளவர்களுக்குப் பணம் அல்லது உறவு குறித்த கவலையோ, பயமோ இருக்கலாம். இதைப் போக்க கார்ஸ், மிமுலாஸ் என்கிற மருந்துகள் உதவும். இதனால் முதுகு வலி குறையும். டீ, காபி, வெற்றிலைப் பாக்கு, மது, சிகரெட் பழக்கம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தவும் மலர் மருந்துகள் உண்டு. பரு, தோல் பிரச்சினை, தலைமுடி கொட்டுதல் போன்ற பிரச்சினைகளுக்கும் மலர் மருந்து உண்டு.

இந்தச் சிகிச்சையைத் தருவதற்கும் கற்றுக்கொள்வதற்கும், அனுபவமும், தீவிர ஆர்வமும், உள்ளார்ந்த பார்வையும் அவசியம். அப்படிப்பட்ட ஒருவரிடம் சிகிச்சை பெறும்போது மலர் மருத்துவம் தரும் பலன்களை உணரலாம்.

அகத்திப்பூ:   பீடி, சிகரெட், சுருட்டு, குட்கா போன்றவற்றை பிடிப்பதால் ஏற்படுகின்ற விஷ சூட்டையும், பித்தத்தையும், வெயிலினால் உண்டாகும் சூட்டையும் நீக்கும்.

முருங்கைப் பூ: பித்தம் நீக்கும். வாந்தி குணமாகும். கண்கள் குளிர்ச்சி அடையும். காம உணர்வை அதிகமாக்கும்.

செந்தாழம் பூ: தலைவலி தீரும். கபம், ஜலதோஷம், க்ஷயம், வாத நோய் ஆகியவை அகலும். உடலுக்கு அழகு அளிக்கும்.

செவ்வகந்த்திப் பூ: உடற்சுடு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் போன்ற நோய்களை குணமாக்கும்.

வாகைப்பூ:  கசப்பு சுவையுடைய இப்பூவினால் சுட்டால்  உண்டாகும் நோயை  நீக்கும்.

இலுப்பைப்பூ: நல்ல சுவையுடைய  இப்பூவினால் பாம்பின் விஷம் நீக்கும், வாத நோய்  குணமாகும்.

புளியம் பூ : மலையை சார்ந்த காட்டில் முளைக்கும்  இப்பூவினால் பித்த நோய், சுவையின்மை வாந்தி ஆகியவை தீரும்.                       

மாதுளம்பூ : அனல் பித்தம், ஏப்பம், வாந்தி,  இரத்த மூலம் ஆகிய நோய் நீங்கும். இரத்தம் மிகுதியாகும். உடலுக்கு ஊட்டம் அளிக்கும்.           

வேப்பம்பூ:  நாட்பட்ட பூவினால் ஏப்பம், சுவையின்மை, மலப்புழுக்கள், நாக்குநோய்கள், ஜன்னி ஆகிய நோய்கள் தீரும். 

பனம் பூ: பல் நோய், சிறுகட்டு, வாத குன்மம், நாட்பட்ட சுரம் ஆகியவை தீரும்.

முள்முருக்கம் பூ: சூதக கட்டு [மாத விலக்கு தடை ] நீங்கும்.

வாழைப்பூ : சீதபேதி, இரத்தமூலம், பால்வினை நோய், வெள்ளைப்பாடு, இருமல், உடற்சூடு, கைகால் எரிச்சல் ஆகியவை  குணமாகும். விந்து விருத்தியாகும்.

தென்னம்பூ:  பால்வினை நோய்,வெள்ளை ஒழுக்கு, உடலில் உள் கொதிப்பு, இரத்த போக்கு, விஷக்கடி நோய்கள் நீங்கும்.

குருக்கத்திப்பூ : கசப்பும், இனிப்பும் சுவையுள்ள இப்பூவினால், தலைநோய், தாகம், கபம்,  புண் பித்தம், பல்வகை விஷக்கடி ஆகியவை குணமாக்கும்.

மல்லிகை பூ: இல்லறதில் ஆர்வமுண்டாக்கும். கபம், கண் மயக்கம், உடற்சூடு, குறையும்.உடலுக்கு சூட்டை அளிக்கும். அதிகப் பால் சுரப்பால் அவதியுரும் பெண்கள் இப்பூவை மார்பில் மூன்று நாட்கள் கட்டி வந்தால் பால் சுரப்பு குறையும்.

பன்னீர் பூ:  வாந்தி, நாக்கில் சுவையின்மை, விந்து விரையம், தண்ணீர் தாகம், உடற்சூடு ஆகியவை தீரும்.

மந்தார்ப்பூ:  உடல் கொதிப்பு நீங்கும். கண்கள் குளிச்சியடையும். உடலும் குளிச்சியடையும்.

மகிழம் பூ:  இதனை முகர வாந்தி நிற்கும். உடலிலுள்ள அனல் நீங்கும். புணர்ச்சியின் மீது ஆசையுண்டாகும்.

புன்னைப்பூ:  கரப்பான்,சொறி,சிறங்கு, பால்வினை நோய் ஆகியவை நீங்கும். ஆனால் பித்த மயக்கம் ஏற்படும்.             

பாதிரிப்பூ: பித்த சுரம் நீங்கும்.வெள்ளை போக்கு நிற்கும்.

பச்சைக் குங்குமப்பூ: மூக்கடைப்பு, ஜலதோஷம், காது நோய், கப-பித்த நோய்கள் நீங்கும்.

செண்பகப்பூ:  வாத, பித்த நோய்,  எலும்பு காய்ச்சல்,  பால்வினை நோய், விந்து விரையம் ஆகியவை தீரும். வாசனை மனமகிழ்ச்சியினை உண்டாக்கும்.

இந்தப் பூக்களை நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி,  நீங்கும். தலைமுடி நன்றாக வளரவும், கருமை நிறத்தினை தரும்.

கொன்றைப்பூ: சர்க்கரை நோய், குடல்வலி, மலப்புழுக்கள் யாவும் ஒழியும்.

காட்டாத்திப்பூ: சீதபேதி, இரத்த பேதி,பால்வினை நோய் குணமாகும்...

நாதக சீமான் கலாட்டா...


ஸ்டெர்லைட் - அதிமுக - காவல்துறையின் அடக்குமுறை...


தூத்துக்குடியில் 10 பேர் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்ட விவகாரத்தில்..

பொதுமக்கள் அவர்கள் நிலை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்..

பின்பு பேச்சு வார்த்தை நடத்தி அவர்கள் அனைவரும் விடுதலை செய்யபட்டனர்...

ஜனநாயக முறையில் மக்களை சந்திக்க சென்ற போது அழைத்து செல்லப்பட்டது ஏன் என்று கேட்கிறார்கள்?

சுதந்திர நாட்டில் வசிக்கும் எங்களுக்கு அருகில் இருக்கும் கிராமத்திற்கு செல்ல கூட காவல் துறை அமைதி தேவை ?

அப்படி என்றால் சுதந்திர நாட்டில் தான் இருக்கிறோம் என்ற சந்தேகம் என கேள்வி..

144 தடை உத்திரவு இல்லாத நேரத்தில் எங்களை எப்படி குழுவாக சென்றால் அழைத்து செல்லலாம் என்று மக்கள்  கேள்வி ?

வாழ்க்கை...


இரத்தம் சுத்திகரிக்க உண்ண வேண்டிய உணவு வகைகள்...


உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

1) பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

2) செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

3) முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

4) நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி விருத்தியாகும்.

5) இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

6) தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

7) இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

8 ) விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்...

பாஜக மோடியின் பெட்ரோல் அரசியல்...


தேர்தல் வரும் பின்னே..
பெட்ரோல் விலை குறையும் முன்னே..

தேர்தல் முடியும் முன்னே..
பெட்ரோல் விலை எகிறும் பின்னே..

57 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்த நிலையில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது...

கார்ப்பரேட் வியாபாரத்தை தவிர்ப்போம்...


ஆழ்மனத்தின் அற்புதம்...


மனித மூளையை பற்றி ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தாலும் நம் சித்தர்கள் அதை அன்றே ஆராய்ந்து கூறிவிட்டனர்.

பகவத் கீதையில் யத் பாவம் தத் பவதி என சொல்லப்பட்டுள்ள இந்த ஒரே வரியில் மொத்த பிரபஞ்சமும் அடக்கம்.

எதை எப்படி பாவிக்கிறாயோ அது அப்படியே ஆகும் என்பதே அதன் விளக்கம்.

ஆம் அப்படித்தான் இந்த பிரபஞ்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஆழ்மனத்தின் தகவல்களால் உங்கள் வாழ்க்கை எப்படி பார்க்கபடுகிறதோ அப்படியே அது அமையும்.

நம் உடலில் உள்ள அனைத்து செல்களும் படிப்படியாக சிதைந்து வளர்ந்து ஒரே வருடத்தில் மொத்த உடலும் புதிப்பிக்கப்பட்டு விடும்.

அப்படி இருக்க சென்ற வருடம் இருந்த அதே நோய் இந்த வருடமும் இருக்க காரணம் உங்கள் ஆழ்மனத்தில் அது ஆழமாக பதிந்ததால் தான்.

அந்த தகவல்கள் மாற்றப்படும் வரை அந்த நோய் ஒரு தொடர் கதை தான்.

அதேபோல் ஏழை மேலும் ஏழை ஆவதற்கும் பணக்காரன் மேலும் பணக்காரன் ஆவதற்கும் அவன் ஆழ்மன பதிவுகளே காரணம்.

டேட்டா தெரபியின் மூலம் அதை மாற்றி அமைத்து வாழ்க்கையை கொண்டாடுவோம்...

பெத்தாய் புயல் அச்சம் அடைய வேண்டாம்...


நாகப்பட்டினம், தஞ்சாவூர், அரியலூர்,  திருச்சி வழியாக கரையை கடக்கிறது..

இது கஜா புயலின் 75% தாக்கம் இருக்கும் என்கிறது  வானிலை அறிக்கை....

முன்னெச்சரிக்கையாக இருங்கள் அன்பு உறவுகளே...

குழந்தைத் திருமணம் திராவிட தெலுங்கர்கள் கொள்கையே...


பெண்கள் மீதான அடக்கு முறைகளிலேயே தலையானது குழந்தைத் திருமணம்.

அதில் முன்னணியில் இருந்தது தெலுங்கு இனமே.

1931 ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கட்தொகை கணக்கீட்டில் உள்ள ஒரு பக்கத்தை இங்கே தருகிறேன்.

அப்படியே ஈ.வே.ரா முதலில் திருமணம் செய்த பெண்ணில் வயதையும்
இரண்டாம் திருமணத்தில் அவரது வயதையும் பொருத்திப் பார்த்தால் உண்மை விளங்கும்.

தமிழினம் எப்போதும் பெண்ணடிமை சிந்தனைக்கு இடமளித்ததில்லை...

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இருந்து பிரபல நெறியாளர் செந்தில் ராஜினாமா...


உங்களிடம் காஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் போது பில் தொகையை விட அதிகமாக பணம் கேட்டால் இந்த உத்தரவு நகலை அவரிடம் காட்டவும்...


பில் தொகையை விட அதிகம் வசூலிக்க கூடாது என மாவட்ட வழங்கல் அதிகாரி போட்ட உத்தரவு....

அப்படிக் கேட்கும் பட்சத்தில் ஏஜென்சிக்குப் புகார் கொடுத்துவிட்டு சம்பந்தப்பட்ட நுகர்வோர் உணவுப் பொருள் வழங்கல் துறையிலும் புகார் தெரிவிக்க வேண்டும்...

பயமுறுத்துகிறதா பருமன்?


கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது.

கூடுதல் உடல் பருமனுக்கான காரணங்கள்...

அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது. வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும்கூட உடல்பருமனுக்குக் காரணங்கள். தைராய்டு சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பு அதிகரிப்பதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். கூடுதல் உடல்பருமனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வாதம், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன.

உடல்பருமனுக்கு எளிய சித்த மருத்துவம்...

இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol) ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.

கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.

சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.

பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.

எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள் ஸ்பூனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.

சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்...

தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.

நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்...

இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள்.

தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்...