15/12/2018

ஆழ்மனத்தின் அற்புதம்...


மனித மூளையை பற்றி ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தாலும் நம் சித்தர்கள் அதை அன்றே ஆராய்ந்து கூறிவிட்டனர்.

பகவத் கீதையில் யத் பாவம் தத் பவதி என சொல்லப்பட்டுள்ள இந்த ஒரே வரியில் மொத்த பிரபஞ்சமும் அடக்கம்.

எதை எப்படி பாவிக்கிறாயோ அது அப்படியே ஆகும் என்பதே அதன் விளக்கம்.

ஆம் அப்படித்தான் இந்த பிரபஞ்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஆழ்மனத்தின் தகவல்களால் உங்கள் வாழ்க்கை எப்படி பார்க்கபடுகிறதோ அப்படியே அது அமையும்.

நம் உடலில் உள்ள அனைத்து செல்களும் படிப்படியாக சிதைந்து வளர்ந்து ஒரே வருடத்தில் மொத்த உடலும் புதிப்பிக்கப்பட்டு விடும்.

அப்படி இருக்க சென்ற வருடம் இருந்த அதே நோய் இந்த வருடமும் இருக்க காரணம் உங்கள் ஆழ்மனத்தில் அது ஆழமாக பதிந்ததால் தான்.

அந்த தகவல்கள் மாற்றப்படும் வரை அந்த நோய் ஒரு தொடர் கதை தான்.

அதேபோல் ஏழை மேலும் ஏழை ஆவதற்கும் பணக்காரன் மேலும் பணக்காரன் ஆவதற்கும் அவன் ஆழ்மன பதிவுகளே காரணம்.

டேட்டா தெரபியின் மூலம் அதை மாற்றி அமைத்து வாழ்க்கையை கொண்டாடுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.