14/11/2017

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மாயம், ரூ.200-க்கு ஆசைப்பட்டு சென்ற கணவரை தேடும் மனைவி...


200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, இன்று கண்ணீரும் கடிதமுமாக போலீஸ் ஸ்டேஷன், எஸ்.பி ஆபீஸ், கலெக்டர் ஆபீஸ் என்று நடையாக நடந்து கொண்டிருந்த வசந்தாவுக்கு, என்னதான் பிரச்னை? அவரிடமே பேசினோம்.

'தருமபுரியை அடுத்துள்ள குண்டல்பட்டி தான் எங்க கிராமம். எனக்கு பிரபாகரன், ஜெயகுமார்னு ரெண்டு மகன்கள் உள்ளனர், என் கணவர் செல்வத்துக்கு 60 வயது ஆகிறது. தினமும் கட்டட வேலைக்குப் போனாதான் எங்க குடும்பத்துக்கு வருமானம்.

2017அக்டோபர் 7-ந் தேதி, தருமபுரியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடந்தது. விழாவுக்கு வர்ற ஆண்களுக்கு 200 ரூபாயும், பெண்களுக்கு 150 ரூபாயும் தந்து அழைச்சுக்கிட்டுப் போக டெம்போ வர்றதா அ.தி.மு.க-வை சேர்ந்த ராஜா சொன்னார். சரி, வீட்டுல சும்மாதானே இருக்குகோம் போயிட்டுவந்தா 350 ரூபா கிடைக்கும்னு 7-ம் தேதி மதியம் 2 மணிக்கு நானும் அவரும் தனித் தனி டெம்போவுல விழாவுக்குப் போனோம்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முடிஞ்சதும் நான் வீடு திரும்பிட்டேன். ஆனா, என் கணவர் செல்வம் மட்டும் வீடு திரும்பல. கடந்த 36 நாளா தேடி வர்றோம்.

இன்னிக்கு வரை வீடு திரும்பல. அவருக்கு என்ன ஆச்சு ஏது ஆச்சுன்னு தெரியல. அவருக்கு உடல்நிலை சரியில்லை., தினமும் மாத்திரை எடுத்துக்கணும். சரியா பேசக்கூட வராது அவருக்கு'' என்று கண்ணீர் வடித்தார் வசந்தா.

ஆளும் கட்சியைச் சேர்ந்த ராஜா ஒரு முறை, போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டுப் போனார். ஆனா, அவர் மட்டுமே போலீஸ் அதிகாரிகள்கிட்ட பேசினார். எனக்கு எந்த விவரமும் சொல்லலை. பிறகு, யாரோ செத்துப்போயிட்டாங்கன்னு அவங்களோட போட்டோவைக் காட்டி, இவரா?

என்று கேட்டாங்க போலீஸ். அவர் இல்லைனு சொல்லிட்டோம். எப்படியாவது என் கணவரை கண்டு பிடிச்சிக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்க என்று பரிதாபமாகக் கண்ணீர் விட்டு அழுதார் வசந்தா.

தருமபுரி பி1 காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினகுமாரிடம் வந்தாவின் புகார் குறித்துக் கேட்டோம்., ''ஆமாங்க, காணாமல் போனதாகப் புகார் கொடுத்துள்ளார்கள்.

மேன் மிஸ்சிங் கேஸ் போட்டு தேடி வருகிறோம். அவருக்கு சரியாகப் பேச வராதுன்னும் சொல்றாங்க நாங்க மட்டும் என்ன செய்ய முடியும்'' என்றார்.

விழாவுக்கு அழைத்துச் சென்ற அ.தி.மு.க நிர்வாகிகள், வசந்தாவின் கண்ணீருக்கு என்ன பதில் சொல்லப்போகின்றார்கள் என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.

 - K7 news

முகத்தில் கரும்புள்ளிகளைப் போக்கும் மாஸ்க் மருத்துவம்...


மூக்கின் ஓரங்களில் தங்கியுள்ள கரும்புள்ளிகளை தேய்த்து தேய்த்து சோர்ந்து விட்டீர்களா? அப்படியெனில், அதனைப் போக்க வேறு என்ன வழி உள்ளது என்று யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

சரி, இந்த கரும்புள்ளிகள் எப்படி வரு கிறதென்று தெரியுமா?

சருமத்துளைகளானது எண்ணெய், அழுக்குகள் மற்றும் இறந்த செல்களால் அடைக்கப்படுகிறதோ, அப் போது தான் கரும்புள்ளிகள் உருவாகின்றன. பொதுவாக இந்த கரும்புள்ளிகள் மூக்கு, தாடை, நெற்றி மற்றும் கன்னங்களில் அதிகம் காணப்படும்.

ஏனெனில் அந்த இடங்களில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பிகள் இருப்பதால், அந்த பகுதிகளில் அதிகம் ஏற்படுகிறது. எனவே தான் முகத்திற்கு அவ்வப்போது மாஸ்க், ஸ்கரப் போன்றவற்றை மேற்கொள்வது இன்றியமையாததாக உள்ளது.

அதற்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி ஸ்கரப் செய்ய வேண்டாம். வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களைக் கொண்டு, அருமையான முறையில் கரும் புள்ளிகளை போக்கலாம். இப்போது முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்குவதற்கு எப்படியெல்லாம் ஃபேஸ் மாஸ்க் போட வேண்டும் என்று பார்ப்போம்.

ஓட்ஸ் :

ஓட்ஸ் பவுடரை பாலில் கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால், கரும் புள்ளிகளானது எளிதில் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகள் நீங்கிவிடும்.

தயிர் :

தயிரில் தேன் மற்றம் கடலை மாவு சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, 5 நிமிடம் ஊற வைத்து, நன்கு காய வைத்து, தண்ணீர் ஊற்றி மீண்டும் ஸ்கரப் செய்ய வேண்டும்.

எலுமிச்சை :

எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை அதிகம் இருப்பதால், அதனைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் பசையுடன், கரும்புள்ளிகளும் நீங்கிவிடும். மேலும் முகமும் வெள்ளையாகும்.

ஆரஞ்சு தோல் :

ஆரஞ்சு தோலை நன்கு உலர வைத்து, பொடி செய்து, அதனை பால் மற்றும் தேனுடன் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, முகத்தை ஸ்கரப் செய்து, உலர விட்டு கழுவினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

பேக்கிங் சோடா :

பேக்கிங் சோடாவும் ஒரு சூப்பரான கரும்புள்ளியைப் போக்கும் பொருள் தான். அதற்கு பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, ஈரமான முகத்தில் அதனைக் கொண்டு மசாஜ் செய்தால், கரும்புள்ளிகளுடன் முகப்பருக்களும் நீங்கி விடும்...

மெல்லோட்டம் செய்வதால் கிடைக்கும் பயன்கள்...


மெல்லோட்டத்தை ஆங்கிலத்தில் ஜாகிங் (Jogging) என்பார்கள்.

விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்திற்கும் இடைப்பட்ட சீரான ஓட்டமாகும்.

இந்த மெல்லோட்டத்தை ஆண், பெண் இருபாலரும் மேற்கொள்ளலாம். மெல்லோட்டம் செய்ய காலை நேரமே சிறந்தது.

மெல்லோட்டம் பயிற்சியில் ஈடுபடும் முன் பருத்தியினாலான இறுக்கமில்லாத ஆடைகளை அணிந்துகெள்ள வேண்டும். ஆரம்பத்தில் 1/2 கிலோ மீட்டருக்கு மேல் ஓடக்கூடாது. அதுபோல் 50 வயதைக் கடந்தவர்கள் 5 கிலோமீட்டருக்கு மேல் ஓடக்கூடாது.

இரத்த அழுத்தம் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்று ஓடலாம். தினமும் செய்யாமல் ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.

மெல்லோட்டத்தால் ஏற்படும் நன்மைகள்..

மன அழுத்தம், மன எரிச்சல் நீங்குகிறது.

நுரையீரலுக்கு போதுமான ஆக்ஸிஜனைப் பெற்று இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது.

உடலின் எடை சீராக வைக்கப்படுகிறது.

இதயத் தசைகள் வலுவாக்குகிறது. இதயம் சுருங்கி விரியும் போது இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது.

உடலின் தசைகள் வலுப்பெறுகிறது.

எலும்புகளில் உள்ள சுண்ணாம்புச்சத்து குறைவைத் தடுத்து எலும்புகளை பலப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

என்றும் இளமைப் பொலிவோடு இருக்க உதவி செய்கிறது.

முதுமையைத் தள்ளிப்போட வைக்கிறது.

மெல்லோட்டம் சிறந்த உடற்பயிற்சியாகும். இதனை கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம்...

நான் படித்த உளவியலில் இருந்து உங்களுக்காக சில தகவல்கள்...


1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்..

2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்..

3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..

4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள்..

5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள்..

6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்..

7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்..

தமிழா விழித்துக் கொள்...


தமிழினத்தின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனை துளி...


சுதந்திரத்தை வென்றெடுக்காது போனால் நாம் அடிமைகளாக வாழ வேண்டும்...

தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழ வேண்டும்.

பயந்து பயந்து பதற்றத்துடன் வாழ வேண்டும்.

படிப்படியாக அழிந்து போக வேண்டும்..

ஆகவே, சுதந்திரத்திற்காகப் போராடுவதை தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை...

– எம் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் ..

நெல்லிக்காயும், நோய் எதிர்ப்புத் திறனும்...


நெல்லிக்காயில் உயிர்ச்சத்து – சி (Vitamin C) அதிகமாக உள்ளது.

உயிர்ச்சத்து – சி செல்களின் இனப் பெருக்கத்தில் (Cells Reproduction) முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் உயிர்ச்சத்து – சியில் ஆண்டி – ஆக்சிடன்ட் (Anti – Oxidant) தன்மை அதிகமாக உள்ளதால் நோய் வராமல் தடுக்கிறது.

எனவே கற்ப மூலிகையாக கருதப்படுகிறது...

இறப்பிற்கு 50% காரணமான கொசுக்கள் பற்றி தெரிந்ததும் தெரியாததும்...


உலகத்திலேயே மிக ஆபத்தான பூச்சி எது என்று பார்த்தால்… நாம் நினைப்பது போன்று அமேசான் காடுகளிலோ அல்லது ஆப்பிரிக்க காடுகளிலோ இருக்கும் ஒரு இனம் தெரியாத ஜந்து அல்ல…

நம்மை சுற்றி இருக்கும் நாம் அறிந்த  நுளம்பு/கொசு தான்... உலகிலேயே மிக ஆபத்தான பூச்சியாகும்!

மலேரியா, டெங்கு, மஞ்சள் காமாலை காய்ச்சல், மேற்கு நைல் வைரஸ் போன்ற எண்ணிலடங்காத நோய்கள் பரவுவதற்கு இந்த கொசுக்கள் காரணமாக அமைகின்றது.

வருடா வருடம் லட்சக்கணக்கான மக்களின் இறப்பிற்கு இந்த கொசுக்கள் காரணமாக இருக்கின்றன.

கற்காலம் முதல் இன்றுவரை உலகில் வாழ்ந்த மனிதர்களில் 50% இறப்பிற்கு கொசுக்கள் காரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இனி கொசுக்களை பற்றி தெரிந்த, தெரியாத சுவாரஷ்யங்களைப் பார்ப்போம்…

1. பெண் கொசுக்கள் மாத்திரமே மனிதரையும் விலங்குகளையும் கடிக்கும். ஆண் கொசுக்கள் பூக்களில் இருந்து உணவைப் பெற்றுக்கொள்ளும்.

2. இது அனைவருக்கும் தெரிந்த விசயம். ஆனால், பெண் கொசுக்கள் மனிதரை தாக்குவதற்கான காரணம் தமது இனப்பெருக்க முட்டைக்குத் தேவையான புரதத்தை (protein ) பெற்றுக் கொள்வதற்காகவே.

3. சில இடங்களில் இருக்கும் கொசுக்கள் மனிதரை கடிப்பதே இல்லை (பெண் கொசுவாக இருந்தாலும்) அவை விலங்குகள் மற்றும் பறவைகளை மட்டுமே கடிக்கின்றன.

4. கொசுக்கள் மணிக்கு 1.5 – 2 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும்.

5. இது ஏனைய பூச்சிவகைகளுடன் ஒப்பிட்டால் மிகவும் மந்தமானது. போட்டி வைத்தால் கொசுக்கள் கடைசியாகவே வரும்.

6. ஒரு செக்கனிற்கு 300-600 தடவைகள் தமது இறக்கைகளை அடிக்கும்.

7. இதன் விளைவாகவே உங்கள் தலைப்பகுதியை கொசு அண்டும் போது ஒரு வித ஒலி ஏற்படுகின்றது.

8. பொதுவாக வீடுகளை அண்டியே கொசுக்கள் வாழும். ஆனால் சிலவகை கொசுக்கள் 160 கிலோமீட்டர் தூரத்தில் கூட தமது இனப்பெருக்கத்தை நடத்தும். (நீரிலேயே தமது குஞ்சுகளை இடும்.)

9. டைனோசர் காலத்தில் இருந்தே கொசுக்கள் இருந்து வந்துள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகின்றார்கள். தென் ஆபிரிக்க கண்டத்தில் உருவாகி உலகம் முழுவதும் பரந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

10. கொசுக்கள் கடித்து இரத்தத்தை உறிஞ்ச முதல் சிறிய அளவில் சிறு நீரை கழிக்கின்றன. சில வேளைகளில் கடித்த இடத்தை சுற்றி ஈரமாக இருப்பதை உணர முடியும்.

11. கொசுக்கள் ஆண்களை விட பெண்களையே அதிகம் கடிப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றன.

12. பண்டைய கொசுக்கள் தற்போது இருக்கும் கொசுக்களை விட 3 மடங்கு உருவில் பெரியது.

13. 75 அடி தூரத்தில் இருக்கும் ஒரு மனிதரை சரியாக இனங்கண்டு கடிக்கும் மோப்ப சக்தி கொசுக்களுக்கு உண்டு.

14. ஒரு கொசு 5-6 மாத காலம் வரை வாழும் தகுதியுள்ளது.

15. கொசுக்கள் 6 கால்களை உடையன.

16. ஒரு கொசுவின் சாதாரண நீளம் 16 மில்லிமீட்டர்களாக இருக்கும்.

17. 2700 – 3500 வகையான கொசுக்கள் உலகம் பூராவும் இருக்கின்றன.

18. mosquito என்பது biting fly என்பதையே குறிக்கின்றது...

நோபல் பரிசு உருவான கதை - ஆல்ஃப்ரெட் நோபல்...


ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும்.

ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது நோபல் பரிசாகத்தான் இருக்க முடியும்.

நோபல் பரிசு ஒன்று தான் தேச மொழி எல்லைகளை கடந்து ஆறு வெவ்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்தவர்களை ஆண்டு தோறும் கவுரவுக்கிறது.

நோபல் பரிசை மிஞ்சும் அளவுக்கு வேறு எந்த பரிசும் கிடையாது என்று சொல்லுமளவுக்கு கடந்த 100 ஆண்டுகளில் அது நிலை பெற்றிருக்கிறது.

இன்று பலரை ஆக்க வழியில் சிந்திக்க தூண்டும் அந்த நோபல் பரிசு உருவானதற்கு ஓர் அழிவுசக்தி காரணமாக இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

அழிவுசக்தியை உருவாக்கி அதனால் மனம் நொந்து போன ஒரு விஞ்ஞானி தனக்கு ஏற்படப் போகும் களங்கத்தை துடைத்துக் கொள்ள உருவாக்கியதுதான் நோபல் பரிசு.

அந்த அழிவு சக்தி டைனமைட் எனப்படும் வெடிமருந்து..

அந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல். 1833 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ந்தேதி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கொமில் பிறந்தார் ஆல்ஃப்ரெட் நோபல், நோபலின் தந்தை மேனுவல் நோபல் ஒரு புகழ் பெற்ற பொறியாளராகவும் கண்டு பிடிப்பாளராகவும் இருந்தவர்.

கட்டடங்கள் பாலங்கள் கட்டுவதிலும் வெவ்வேறு வழிகளை கற்களை வெடித்து உடைப்பதிலும் அவர் வல்லவர்.

ஆனால் ஆல்பர்ட் நோபல் பிறந்த சமயம் தந்தையின் நிறுவனம் நொடித்துப் போனது. பின்னர் ரஷ்யாவுக்கு சென்று தொழில் செய்து பணம் சேர்த்தார் தந்தை, தனது குடும்பத்தையும் அங்கு அழைத்துக் கொண்டார்.

தனது நான்கு பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வி கிடைக்க வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு தனியாக பாடங்கள் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

ஆல்ஃப்ரெட் நோபலுக்கு 17 வயதான போது ஸ்விடிஸ், ரஷ்யன், ப்ரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரியும்.

நோபலை வேதியல் பொறியாளராக ஆக்க வேண்டும் என விரும்பிய தந்தை அவரை மேல் படிப்புக்காக பாரிஸ்க்கு அனுப்பி வைத்தார். பாரிஸில் நோபலுடன் படித்த அஸ்ட்ரானியோ ஸ்ப்ராரோ என்ற இத்தாலியர் நைட்ரோ கிளிசரின் என்ற ரசாயனத்தை கண்டு பிடித்திருந்தார்.

அது வெடிக்கும் தன்மை கொண்டதாலும் ஆபத்தானது என்பதாலும் அதை அப்படியே விட்டுவிட்டார்.

ஆனால் நோபல் அதைப்பற்றி மேலும் ஆராய விரும்பினார். படிப்பு முடிந்து ரஷ்யா திரும்பியதும் தன் தந்தையுடன் இணைந்து எப்படி நைட்ரோ கிளிசரினை கட்டுமான துறைக்கு பயன்படுத்தலாம் என ஆராயத் தொடங்கினார்.

கிரைனியன் போர் காரணமாக அவர்களது தொழில் மீண்டும் நொடித்துப் போனது எனவே அவர்கள் மீண்டும் ஸ்விடனுக்கு திரும்பினர்.

ஸ்வீடன் வந்த பிறகு நைட்ரோ கிளிசரினை வெடி மருந்தாக உருவாக்குவதில் ஆராய்ட்சி செய்தார் நோபல் அது அபாயமான பொருள் என்று தெரிந்தும் அதனை பாதுகாப்பானதாக ஆக்கினால் நல்ல காரியங்களுக்காக பயன்படுத்த முடியும் என்று நம்பினார்.

ஆனால் அதற்கு அவர் செலுத்திய விலை அதிகமாக இருந்தது.

அவரது சோதனைகளின் பொது சிலமுறை பயங்கர வெடிப்புகள் ஏற்பட்டு அவரது தொழிற்சாலைகள் தரைமட்டமாயின. பணியாளர்கள் சிலர் உயிரழந்தனர். அவர்களுள் ஒருவர் நோபலின் இளைய சகோதரர் இமில். உயிர் பலிக்கு பிறகும் ஆராட்சிகளை தொடர்ந்தார் நோபல்.

ஆனால் ஸ்வீடன் அரசாங்கம் அதற்கு தடை விதித்தது. மனம் தளராத நோபல் நைட்ரோ கிளிசரினுடன் பல்வேறு பொருட்களை கலந்து சோதனை செய்து பார்த்தார்.

கிஸல்கள் என்ற ஒரு வகை களிமண்ணுடன் சேர்த்து பிசைந்தால் பாதுகாப்பான வெடிமருந்து கிடைக்கும் என்பதனை கண்டு பிடித்தார்.

அந்த தனது கண்டு பிடிப்புக்கு டைனமைட் என்று பெயரிட்டார்.

டைனமைட் கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டு 1866. கிரேக்க மொழியில் டைனமைட் என்றால் சக்தி என்று பொருள். அவரது அந்த கண்டு பிடிப்பு பல தொழில்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

உதாரணத்திற்கு காடு மேடுகளை அழிக்கவும், நிலத்தை சமப்படுத்தவும், மலைகளை குடைந்து பாதைகள் அமைக்கவும், பழைய கட்டடங்களை சில நிமிடங்கில் தகர்க்கவும் முடிந்தது.

ஆல்ப்ஸ் மலையை குடைந்து செயின்ட் கடாட் குகைப்பாதை அமைக்க நோபலின் டைனமைட் தான் பேருதவி புரிந்தது.

அவரது கண்டு பிடிப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அவர் 90 டைனமைட் தொழிற்சாலைகளை உருவாக்கினார் பெருமளவில் செல்வம் சேரத் தொடங்கியது.

ஆனால் ஆக்க சக்தியாக தான் உருவாக்கியதை அழிவு சக்தியாக சிலர் பயன்படுத்தத் தொடங்கியதை கண்டு மனம் பதைத்தார் நோபல்.

1888 ஆம் ஆண்டு நோபலின் சகோதரர் லுட்விக் காலமானார். ஆனால் நோபல் தான் இறந்து விட்டார் என நினைத்த பத்திரிகைகள் அழிவு சக்தியை உருவாக்கி கோடிஸ்வரரான ஆல்ஃப்ரெட் நோபல் காலமானார் என்று செய்தி வெளியிட்டன.

அதனை படித்து அதிர்ந்து போன நோபல் தனது உண்மையான மரணத்துக்கு பின் உலகம் தன்னை பழிக்கப் போகிறது என்று கலங்கினார்.

அந்த களங்கத்தை அகற்ற ஒரே வழி தனது செல்வத்தை எல்லாம் உலக நன்மைக்காகவும் மனுகுல மேன்மைக்காகவும் பாடுபடுபவர்களுக்கு பரிசாக வழங்குவது தான் என்று முடிவு செய்தார்.

உலகம் முழுவதிலும் இருந்த 90 க்கும் மேற்பட்ட டைனமைட் தொழிற் சாலைகளிலிருந்தும், ரஷ்யாவில் எண்ணெய் கிணறு அபிவிருத்தியிலிருந்தும் கிடைத்த பெரும் செல்வத்தை கொண்டு ஓர் அறக்கட்டளையை நிறுவினார்.

1890 ஆம் ஆண்டு தான் எழுதிய உயிலில் 9 மில்லியன் டாலரை நோபல் அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார்.

அந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு ஆண்டுதோறும் 5 வெவ்வேறு மிகச்சிறந்த மனுகுல சேவை ஆற்றுவோருக்கு பரிசு வழங்க முடிவு செய்தார்.

இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த ஆல்ஃப்ரெட் நோபல் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ந்தேதி தனது 63 ஆவது வயதில் இத்தாலியில் காலமானார்.

ஆல்ஃப்ரெட் நோபல் மறைந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 1901 ஆம் ஆண்டு முதல் அவர் விருப்பப்படியே நோபல் பரிசுகள் வழங்கப்பட தொடங்கின.

ஐந்து துறைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த நோபல் பரிசு 1969 ஆண்டிலிருந்து பொருளாதாரம் என்ற புதிய பிரிவையும் சேர்த்துக் கொண்டது.

இன்று வரை 770 பேருக்கு மேல் நோபல் பரிசை வென்றிருக்கின்றனர்.

தன்னை அழிவு சக்தியை கண்டு பிடித்த நோபல் என்றில்லாமல் அறிவாளிகளை கவுரவிக்கும் நோபல் என்று உலகம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என விரும்பினார் ஆல்ஃப்ரெட் நோபல்.

அவரது எண்ணம் வீண்போகவில்லை ஆண்டு தோறும் நோபல் பரிசின் பெயர் உச்சரிக்கப்படும் போதேல்லாம் அந்த உன்னத மனிதனைத்தான் உலகம் நினைவு கூறுகிறது.

உண்மையில் அவர் அழிவு சக்தியை கண்டு பிடிக்கவில்லை. ஆக்க சக்தியாக நோபல் கண்டு பிடித்ததை உலகம் தான் அழிவு சக்திக்கு பயன்படுத்தியது இன்றும் பயன்படுத்துகிறது.

இருப்பினும் டைனமைட்டை கண்டு பிடித்ததிலும் பின்னர் நோபல் பரிசை அறிமுகம் செய்ததிலும் ஆல்ஃப்ரெட் நோபலின் நோக்கமும் சிந்தனையும் உயரியதாக இருந்தன.

அதனால் தான் இன்றும் அவரது பெயர் வானம் வரை உயர்ந்து நிற்கிறது...

பாஜக எச்ச. ராஜா சர்மா கலாட்டா...


நமக்கெல்லாம் ஒரு நாள் என்பது 24 மணி நேரம்..

கோமாளி எச்.ராஜாவுக்கும் கோமாளி சங்க தலைவர் மோடிக்கும் மட்டும் 23 மணி நேரம்..

எப்போ பாரு காமெடி பண்றதே வேலையா போச்சு...

ரூபாய் நோட்டில் இருந்து காந்தி படத்தை நீக்கக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்...


ரூபாய் நோட்டில் இருந்து காந்தி படத்தை நீக்கக்கோரி, முருகானந்தம் என்பவரின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு ரூ.10000 அபராதமும் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 60...


நினைவில் நிறுத்த சில உண்மைகள்...

இது வரையில் ஆழ்மன சக்திகள் அடையத் தேவையான அடிப்படை விஷயங்கள் அனைத்தையும் விளக்கமாகப் பார்த்தோம். ஆழ்மன சக்திகளில் ஒன்பது வகைகளில் அடிப்படையான ஒருசில சக்திகளை அடையும் வழிகளையும் பார்த்தோம். உயர் உணர்வு நிலை, ஒருமுனைப்படுத்தப்பட்ட மனது, எண்ணங்களில் கட்டுப்பாடு, மனதில் உருவகப்படுத்தி எதையும் தெளிவாகக் காணும் பழக்கம் ஆகியவை ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான சக்தி வாய்ந்த உபகரணங்கள். அந்த உபகரணங்களை வைத்துக் கொண்டு, முயல்பவர்களுக்கு மற்ற சக்திகளையும் பெறத் தேவையான, இனி மேல் போக வேண்டிய, வழிகள் தானாகப் புலப்படும்.

ஆவிகளுடன் பேசுதல், தொடர்பு கொள்ளுதல், மற்றவர்களை வசியம் செய்து தங்கள் விருப்பப்படி நடக்க வைத்தல் போன்ற சக்திகளையும் சிலர் ஆழ்மன சக்தி வகைகளில் சேர்க்கிறார்கள். பதஞ்சலியோ தன் யோக சூத்திரங்களில் ஆழ்மன சக்திகளைப் பெற்ற மனிதன் கூடு விட்டு கூடு பாயலாம், மற்றவர்கள் கண்களில் இருந்து மறைந்து போகலாம், தண்ணீரில் மூழ்காமல் இருக்கலாம் என்று எல்லாம் அடுக்கிக் கொண்டே போகிறார்.

பதஞ்சலி சொல்லும் பல அதீத சக்திகளுக்கான பயிற்சிகள் கடுமையானவை மட்டுமல்ல, அந்தப் பயிற்சிகள் குறித்த முறையான ஞானம் உள்ளவர்களும் மிகவும் குறைவு. அபூர்வமான சித்தர்கள், யோகிகள் மட்டுமே அறிந்த, கடைபிடிக்க முடிந்தவையாக அந்தப் பயிற்சிகள் கருதப்படுகின்றன. மொத்தத்தில் ஆழ்மன சக்தியால் சாதிக்கக் கூடிய அற்புதங்களின் எல்லை மனிதனின் கற்பனையின் எல்லை என்றே சொல்லலாம்.

இத்தொடரில் நாம் பார்த்த ஆழ்மன சக்தி பெற்றவர்கள் பெரும்பாலும் தற்செயலாக அந்த சக்தியைப் பெற்றவர்களாக இருந்ததைப் பார்த்தோம். ஏதோ ஒரு வகையில் அந்த குறிப்பிட்ட சக்திக்கு ‘ட்யூன்’ ஆனவர்கள் அவர்கள். அவர்களில் ஒருசிலர் அப்படி ’ட்யூன்’ ஆன பிறகு அதனை ஒத்த தன்மையுள்ள ஓரிரு சக்திகளையும் தங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களுடைய சிறப்புத் தன்மை அந்த ஒன்று அல்லது ஓரிரண்டு சக்திகளுடன் நின்று போகிறது. அவர்கள் எவ்வளவு தான் விருப்பப்பட்டாலும் வேறு ஏதாவது ஆழ்மன சக்தியைப் பயன்படுத்த முயற்சித்தால் அதில் தோல்வியே அடைகிறார்கள். இப்படி ஒரு வரம்புக்குள்ளேயே இருக்க நேர்வது தற்செயலாக ஒரு சக்தியைப் பெற்றவர்களுடைய குறைபாடாகி விடுகிறது. இன்னொரு குறைபாடு என்னவென்றால் அந்த சக்தி திடீரென்று வந்தது போல திடீரென்று போய் விடவும் வாய்ப்பு இருக்கிறது.

முறைப்படி பயிற்சிகள் செய்து படிப்படியாக மனதை பக்குவப்படுத்தி, ஆட்கொண்டு, ஆழ்மன சக்திகளை அடைந்தவர்கள் இப்படி ஓரிரு சக்திகளின் வரம்புகளுக்கு உட்பட்டு தங்கி விட வேண்டிய அவசியமில்லை. அது போல அந்த சக்திகளுக்கு எதிரான செயல்பாடுகள் இல்லாத வரையில் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பெற்றிருக்க வேண்டிய நிலையும் இருக்காது. யோகிகள், சித்தர்கள் போல எல்லா ஆழ்மன சக்திகளைப் பெற முடியா விட்டாலும், அடைந்துள்ள முன்னேற்றத்தையும், ஆற்றலையும் பொறுத்து, தங்களிடம் பல விதமான ஆழ்மன சக்திகளை வளர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் பார்க்க பிரமிக்க வைத்தாலும் நிஜ வாழ்க்கைக்கும், நமது முன்னேற்றத்திற்கும் பயன் தராத சக்திகளைப் பெற அதிகமாக ஒருவர் பாடுபடுவது முட்டாள்தனம். உதாரணத்திற்கு ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் வந்த சக்தி படைத்த ஒரு சாதுவைச் சொல்லலாம். அந்த சாது ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் முன்னாலேயே மறு கரையில் இருந்து நதி நீர் மீது நடந்தபடியே இக்கரைக்கு வந்தார். அந்த சக்தி பெற நிறைய பயிற்சிகளை நிறைய காலம் செய்து பெற்றதாகச் சொன்னார். ஸ்ரீ இராமகிருஷ்ணர் சொன்னார். “காலணா கொடுத்தால் படகுக் காரன் நதியைக் கடந்து இறக்கி விடுகிறான். அப்படிப்பட்ட வேலைக்காக நீங்கள் ஏன் இவ்வளவு காலம் கஷ்டப்பட்டீர்கள்?”. அவர் கேட்டது போல காலணா சமாச்சாரங்களுக்காக நிறைய கஷ்டப்படாதீர்கள். உங்கள் நிஜ வாழ்க்கைக்கு உதவக்கூடிய, உங்களை மேம்படுத்தக்கூடிய ஆழ்மன சக்திகளைப் பெறவே முயற்சியுங்கள். வெறும் புகழுக்காக ஆழ்மன சக்திகளை வெளிப்படுத்த நினைப்பது ஒருவித மூன்றாந்தர வெளிப்பாடாகவே விஷயமறிந்தோர்களால் கருதப்படுகிறது.

இதை தன்னுடைய நூலில் (A search in Secret India) பால் ப்ரண்டன் என்ற இங்கிலாந்து தத்துவ ஞானி ப்ரம்மா என்ற யோகியைப் பற்றி கேள்விப்பட்டு அவரைக் காணச் சென்றார். அவருடைய யோக சக்திகளை நேரில் காண விரும்புவதாகச் சொன்னார். முதலில் ப்ரம்மா தயங்கினார். பால் ப்ரண்டன் புரியாமல் கேட்டார். "உங்கள் யோக சக்திகளை மறைவாகவும் ரகசியமாகவும் வைத்திருப்பது எதற்காக? நான்கு பேர் அறிவதிலும், அவர்களுக்கு சொல்லித் தருவதிலும் என்ன நஷ்டம்?"

ப்ரம்மா சொன்னார். ஐயா அரசன் பொன்னையும், செல்வத்தையும் வீதிகளில் நான்கு பேர் பார்க்க விரித்து வைப்பதில்லை. பொக்கிஷங்களை கஜானாவில் தான் பாதுகாப்பாக வைக்கிறான். அவனிடம் இருப்பதையெல்லாம் வெளிப்படுத்தினால் தான் அவன் அரசன் என்றில்லை. அது போல் எங்கள் தேசத்தில் உண்மையான யோகிகள் தங்கள் சக்திகளைப் பொக்கிஷமாகவே பாதுகாக்கிறார்கள். அவற்றைப் பலர் பார்த்து வியக்க விளம்பரப்படுத்துவதில்லை. அதன் அவசியமும் அவர்களுக்கு இல்லை. மேலும் எல்லா உன்னதமான கலைகளையும் தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே யோகிகள் கற்பிக்கவும் முனைகிறார்கள். ஏனென்றால் தகுதியில்லாதவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் கூட தீமையான விளைவுகளைத் தான் தருகின்றன என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்....

மிகவும் பொருள் பொதிந்த வார்த்தைகள் அவை. ஆழ்மன சக்திகளை அடைய விரும்புபவர்கள் இதை நினைவில் வைத்திருப்பது நல்லது. தங்களுடைய பயிற்சிகளையும், அதன் விளைவுகளையும் ரகசியமாகவே வைத்துக் கொள்வதே உத்தமம். ஆரம்பத்தில் இதில் கிடைக்கும் சிறு வெற்றிகள் தரும் மகிழ்ச்சி சாதாரணமானதல்ல. அப்போது இயல்பாகவே பலரிடம் சொல்லி ஆனந்தப்படத் தோன்றும். ஆனாலும் ஒரு நல்ல முன்னேற்றத்தை அடையும் வரை நாம் பெறும் வெற்றிகளை எல்லோருக்கும் பிரகடனப்படுத்துவது முழுமையான வெற்றிக்கு ஒரு தடையாகவே இருக்கும். ஏனென்றால் அப்படிச் செய்கையில் அந்த ஆழ்மன சக்தியைப் பெறுவதை விடவும் அதிகமாக அதை அடுத்தவருக்கு நிரூபிக்கவும், அவர்களிடம் பெயர் வாங்கவுமே நம்மை அறியாமலேயே நாம் முக்கியத்துவம் தர ஆரம்பிப்போம். இது நமது உள்நோக்கிய பயணத்தை வெளி நோக்கிய பயணமாக மாற்றி திசை திருப்பி விடும். சிலர் பாராட்டுவார்கள். சிலர் நம் சக்திகளைக் காட்டி நம்மை சாமியார்களாக ஆக்கியும் விடக் கூடும். இப்படி அற்ப சாதனைகளில் கிடைக்கும் இந்த அற்ப திருப்திகளில் மகிழ்ந்து அத்துடன் நின்று விட்டால் இனியும் நமக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டங்களை நாம் அடைய முடியாமல் போய் விடும்.

இதில் முழு ஆளுமையை அடைகிற வரையில் ஒரு முறை சாத்தியப்பட்டது அடுத்த முறை சாத்தியப்படாமல் போகலாம். அதற்கு காரணங்கள் நமக்குள்ளோ, நமக்கு அப்பாற்பட்டோ இருக்கலாம். உண்மையான காரணங்களை அறிந்து நம் முயற்சியில் உள்ள குறைபாடுகளாக இருந்தால் அதை சரி செய்து கொண்டு, நமக்கு அப்பாற்பட்ட, நம் கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் என்றால் அதை ஏற்றுக் கொண்டு நாம் முன்னே செல்ல வேண்டி இருக்கும். ஆனால் கூட்டம் கூட்டி நாம் முயற்சி செய்யும் போது, வெற்றி கிடைக்காத போது பலர் ஏளனம் செய்ய ஆரம்பிக்கலாம். நமக்கே முன்பு கிடைத்த வெற்றி தற்செயலாகக் கிடைத்தது தான் போல இருக்கிறது, உண்மையில் நமக்கு இந்த சக்திகள் இல்லை என்ற எண்ணம் தோன்ற ஆரம்பிக்கலாம். இதெல்லாம் நாம் வெற்றி பெற பெரும் தடையாக மாற ஆரம்பிக்கும். மேலும் ஒரிரு முறை வெற்றி பெற்று பின் வெற்றி பெற முடியாதவர்களில் சிலர் தங்கள் புகழைத் தக்க வைக்க பின் ஏமாற்று வேலைகளில் கூட ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். ஏமாற்ற ஆரம்பிக்கிறவர்கள் அந்த சக்தியை நிரந்தரமாகவே இழக்க ஆரம்பிக்கிறார்கள்.

இந்த ஆழ்மன சக்திகள் விஷயத்தில் வெற்றி விகிதம் எப்போதுமே நூறு சதவீதமாக இருப்பதில்லை. பத்து முதல் இருபது சதம் வரை தோல்விகளுக்கு வாய்ப்பு உள்ளது. அதற்குக் காரணங்கள் நம் அறிவிற்கு அப்பாற்பட்டதாகக் கூட இருக்கலாம். அந்த உண்மையை மறப்பதும், மறுப்பதும் உண்மையான சாதகனுக்கு உகந்ததல்ல. எத்தனை பெரிய கைராசிக்கார மருத்துவராக இருந்தாலும் அவர் சிகிச்சை செய்யும் நோயாளிகளில் சிலரும் இறப்பதுண்டு. அதற்கென யாரும் அவரைக் குறைத்தோ, அந்த மருத்துவ சாஸ்திரத்தைக் குறைத்தோ மதிப்பிடுவதில்லை அல்லவா? அதே போலத் தான் இதுவும். பெரும்பான்மை வெற்றிகளை வைத்தே மதிப்பிடல் முக்கியம். சில முயற்சிகளில் தோல்வி வருவது இயற்கையே. அதனால் அதை மறைக்கவோ மறுக்கவோ முற்படாதீர்கள். அந்தப் பக்குவம் இருந்தால் மட்டுமே முன்னேற்றத்தின் அடுத்த கட்டங்களை உங்களால் சென்றடைய முடியும்.

மேலும், ஆழ்மன சக்தி வகை எதுவானாலும் அதை அடைய அதற்கான
பிரத்தியேக, உறுதியான, தொடர்ந்த ஆர்வம் இருத்தல் தேவை. அந்த ஆர்வம் பத்தோடு சேர்ந்த பதினொன்றாக இருந்தால் அதில் பெரிதாக எதுவும் சாதிக்க முடியாது. முன்பே பல முறை குறிப்பிட்டது போல அசாத்தியப் பொறுமையும் வேண்டும். கீரை விதைத்தவன் படுகிற அவசரம் தென்னை விதைத்தவன் படக்கூடாது. ஆழ்மனசக்தி வேண்டி முயற்சிக்கிறவர்கள் இதை எப்போதும் நினைவில் இருத்த வேண்டும். அதே போல சில முறை நமக்கு சில வெற்றிகள் விரைவாகக் கிடைக்கலாம். சில முறை நம் முயற்சிகளுக்குப் பலன் இருப்பது போலவே தோன்றாது. நம் பயணம் அப்படியே தேக்கமடைந்து விட்டதைப் போன்ற பிரமை கூட ஏற்படும். அந்த நேரத்தில் தான் நாம் முயற்சிகளைக் கை விட்டு விடக்கூடாது. வெளிப்பார்வைக்குத் தெரியா விட்டாலும் சில நுணுக்கமான மாற்றங்கள் உள்ளுக்குள்ளே நடந்து கொண்டு தான் இருக்கும். ஒட்டு மொத்தமாக ஒரு நாளில் நாம் உணர நேரிடலாம். எனவே பொறுமையாக நாம் தொடர வேண்டியது முக்கியம்.

இதை எல்லாம் சொல்லும் அளவுக்கு செயல்படுத்துதல் அவ்வளவு சுலபமல்ல. படிக்கும் போதும், மற்றவர் சாதனையைக் கேட்கும் போதும் நமக்குள் எழுகிற எழுச்சியையும், ஆர்வத்தையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுதல் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இது சாத்தியப்பட, இது சம்பந்தமான நூல்களை தொடர்ந்து அதிகம் படியுங்கள். இதில் ஆர்வம் உள்ளவர்களுடன் அதிகம் தொடர்பு வையுங்கள். ஓரளவு வெற்றி பெறும் வரை தாக்குப்பிடித்து உங்கள் முயற்சிகளில் தொடர்ந்து இருப்பது மிக மிக முக்கியம். அந்த வெற்றிகள் சாத்தியமானவுடன், உண்மையாகவே பிரபஞ்ச சக்தியுடன் நமக்கு ஒரு அறிமுகம் ஆனவுடன் பின் நாம் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. நம் அனுபவங்களே நம்மை மேலும் ஆர்வமாகப் பயணப்பட வைக்கும்.

ஆழ்மன சக்தியில் ஆளுமையைப் பெறும் வரை அதனை சோதித்து பார்த்துக் கொண்டு இருப்பது இயற்கையே. ஆனால் அதனை முழுமையாகப் பெற்ற பிறகும் தேவையில்லாமல் வெளிப்படுத்திக் கொண்டிருப்பது முட்டாள்தனமே. நம்மால் கையை அசைக்க முடிகிறது என்பதற்காக நாம் வெறுமனே கையையே அசைத்துக் கொண்டிருப்போமா? எப்போது தேவையோ அப்போது மட்டும் தானே நாம் கையை அசைப்போம். அது போல ஆழ்மன சக்தியையும் தேவைப்படும் போது தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துவது தான் முறையானது.

ஆழ்மன சக்தியின் கீழ்நிலை சக்திகளாக மாந்திரீகம், செய்வினை, பலவீனமானவர்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைத்தல் போன்றவையெல்லாம் கூட சொல்லப்படுகின்றன. உண்மையாக ஆழ்மன சக்தி வாய்ந்தவர்கள் யாரும் இது போன்ற முறைகளில் இறங்குவதுமில்லை. இந்த சக்திகளால் அவர்கள் பாதிக்கப்படுவதுமில்லை. கீழ்நிலை சக்திகள் மேல்நிலை சக்திகள் முன்பு என்றும், எப்பொழுதும் பலம் இழந்து போகின்ற தன்மை வாய்ந்தவை. மேலும் இது போன்ற கீழ்நிலை சக்திகளைப் பயன்படுத்தி அடுத்தவரைத் துன்புறுத்த முயல்பவர்கள் ஒரு காலத்தில் ஒன்றுமில்லாமல் துன்பப்பட்டு அழிந்து போகிறார்கள் என்பது ஆணித்தரமான உண்மை. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களுக்கு தீங்கிழைக்கும் அந்த வகை சக்திகளில் ஆர்வம் காட்டக்கூட முற்படாதீர்கள்.

ஆழ்மன சக்தி பெற உதவும் முதல் நண்பன் தன்னம்பிக்கை என்றால், பெற்றதை இழக்க சதி செய்யும் முதல் எதிரி அகம்பாவம். உண்மையான உயர் உணர்வு நிலை பெற்றவர் கர்வத்தின் வசம் சிக்கிக் கொள்வதில்லை. கர்வம் பிரபஞ்ச சக்தியுடம் நமக்குள்ள தொடர்பைத் துண்டித்து விடுகிறது.

மேலும் ஆழ்மன சக்திகள் எந்த ஒருவருக்கும் தனியே பிரத்தியேகமாக தரப்படும் பரிசு அல்ல. அவை முயன்றால் எல்லோரும் அடையக் கூடிய எல்லையில்லாத பொக்கிஷம். அப்படி இருக்கையில் கர்வம் அர்த்தமில்லாததும் கூட.

பலர் தாங்கள் அடையக்கூடிய அப்படியொரு பொக்கிஷம் இருக்கிறது என்றறியாமலேயே பரம தரித்திரர்களாக இருந்து விடுகிறார்கள் என்பது இரக்கப் பட வேண்டிய விஷயம். ஆனால் அப்படியொரு பொக்கிஷம் இருக்கிறது என்று அறிந்தும் அதை அடையும் வழி பற்றி தெரிந்தும் அந்த வழியில் பயணம் செய்யாமல் இருப்பதும், அந்த வழியில் சிறிது தூரம் பயணித்து திரும்பி வந்து விடுவதும் வடிகட்டிய முட்டாள்தனம்.

உலகில் எதுவுமே தற்செயல் இல்லை. இது போன்ற ஒரு தொடரைப் படிக்க நேர்வதும் கூட அப்படியே. இதைப் படிக்கையில் உங்கள் இதய ஆழத்தில் இதில் லயிப்பு தோன்றுமானால், படிக்கும் போது இருக்கும் ஆர்வம் சில காலம் கழித்தும் நீங்காமல் இருக்குமானால் இது உங்களுக்காகவே எழுதப்பட்டது என்பதை உணருங்கள். இது பற்றி நிறைய சிந்தியுங்கள். இந்த உண்மைகளை மனதில் ஊறப்போடுங்கள். நிஜ வாழ்க்கையில் இது ஒரு பாகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இந்தப் பாதையில் பயணத்தைத் தொடருங்கள். பயணத்தின் வேகம் எப்போதும் ஒரே போல சீராக இருக்காது. பயணம் அவ்வப்போது வேகமும் மந்தமுமாக இருக்கலாம். ஆனால் பயணத்தைக் கை விடாமல் இருப்பது முக்கியம். இதில் முழு வெற்றி, தகுதிகளை வளர்த்துக் கொண்டு கடைசி வரை பயணிப்பவர்க்கே வாய்க்கும் என்றாலும் பயணிக்கும் மற்றவர்களுக்கும் முயற்சி செய்த அளவு வெற்றியும் நற்பலன்களும் கண்டிப்பாகக் கிடைக்கும். முக்கியமாக பிரபஞ்ச சக்தியுடன் கண நேரமானாலும் தொடர்பு கொள்ளும் வரையாவது பயணம் செய்யுங்கள். முன்பு சொன்னது போல உண்மையாகவே பிரபஞ்ச சக்தியுடன் நமக்கு ஒரு அறிமுகம் ஆனவுடன் பின் நாம் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. நம் அனுபவங்களே நம்மை மேலும் ஆர்வமாகப் பயணப்பட வைக்கும்...

தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்...


ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுத்த நாய்.. கண் கலங்கிய முதலாளி...


மதுரை மேலூரை அடுத்துள்ளது, கேசம்பட்டி கிராமம். சோலையாய் காட்சியளிக்கும் இந்தக் கிராமம், விவசாயத்துக்கு பெயர்பெற்றது. இங்கு விளையும் பொருள்கள், பல இடங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த செம்மண் கிராமத்து விவசாயி தெய்வம், அதே கிராமத்தில்  டீக்கடை ஒன்று நடத்தி வருகிறார்.

இவர் வளர்த்த ஆடு ஒன்று, சில மாதங்களுக்கு முன் குறைமாத குட்டி ஒன்றை ஈன்றுவிட்டு இறந்தது. 

அதனால், குறை மாத ஆட்டுக் குட்டிக்கு பசும்பாலை பால் டப்பாமூலம் கொடுத்துக் காப்பாற்றி வந்தார்.

இந்நிலையில், அவர் கடையில் வளர்த்த நாயும் குட்டிகளை ஈன்று குட்டிகளுக்கு பால் கொடுத்து வந்த நிலையில், நாளடைவில் ஆட்டுக் குட்டிக்கும் பால் கொடுக்க ஆரம்பித்துள்ளது...

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது மாநில தேர்தல் ஆணையம்...


இலுமினாட்டி களின் பெண்ணியம் பேசும் உலகரசியல்...


பெண் விடுதலை , பெண்ணியம் , என்று சமூக சிந்தனையாளர்கள் பலரும் களமாடி வருகிறார்கள்..

அவர்கள் முன்வைப்பது அனைத்தும் பெண்ணிய சமத்துவம் மட்டுமே, ஆனால் அவர்கள் அதை முன்வைப்பதற்காக பயன் படுத்தும் கருத்தியல் என்பது இல்லுமினாட்டிகளால் (ஜியோனிச யூதர்கள்) உருவாக்கப்பட்ட ஒன்றே...

விடுதலை என்பது அடிமைத்தனம் இருக்கும் இடத்தில பேசப்பட வேண்டிய கருத்தியல் ஆகும்..

அப்படியானால் பெண் விடுதலை என்பது பெண் அடிமைத்தனம் இருக்கும் இடத்தில் மட்டும் அல்லவா பேசப்பட வேண்டும் ?

ஆனால் பெண் விடுதலை என்பது உலகம் முழுவதும் பேசப்பட வேண்டிய அவசியம் என்ன ?

பெண்கள் உலகம் முழுவதும் அடிமையாகவா உள்ளார்கள் ?

மற்றும் பெண்ணிய விடுதலை என்பது பண்பாடு அற்ற குடும்பம் அற்ற ஒழுக்கம் அற்ற கருத்தியலாகவே பேசப்பட வேண்டிய அவசியம் என்ன ?


பெண்ணிய உரிமைகளை பேசும் பெண்ணிய வாதிகள் , பெண்ணிய கடமைகளை பற்றி பேசாமல் இருப்பதன் நோக்கம் என்ன ?

கடமைகள் அற்ற உரிமை என்பது ஒரு வெட்டி விதண்டாவாதம் மட்டுமே...

இல்லுமினாட்டிகள் பெண்ணியம் பேசுவதின் அடிப்படை நோக்கம்..

அடிமை என்பதன் உண்மை விளக்கம்..

எவன் ஒருவன் பிறப்பிலிருந்து இறப்பு வரை தனக்காக வாழ முடியாமல் யாரோ ஒரு தனி நபரின் தேவைக்காக வாழ்கிறானோ அவன் தான் அடிமை..

நாகரிகம் தோன்றிய காலக்கட்டத்தில் இருந்தே மனிதனை மனிதன் அடிமைகளாக்கி பயணடைந்து வருகிறார்கள்.

இதில் இருக்கும் ஒரே சிக்கல், எப்போது ஒரு அடிமைக்கு தனது வாழ்க்கை, தனது விருப்பம் போன்ற தன் சார்பு கருத்துகள் தோன்றுகிறதோ அப்போதே அவனுக்குள் விடுதலை வேட்கை வெடிக்கிறது.

அவன் அவனது அடிமை வாழ்கையில் இருந்து மீள்கிறான்..

உலகை ஆளும் யூத பயங்கரவாதிகள், உலகை முழுக்க தனது கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கம் கொண்டவர்கள், உலகில் உள்ள மாந்தர்கள் அனைவரும் அடிமைகளாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

ஆனால் இதை நடைமுறை படுத்துவது கடினம்...


ஒரு மனிதன் தன்னை அடிமை என்று உணர்ந்தால் தானே அவன் விடுதலை பற்றி பேசுவான்..

அவனுக்கே அவன் அடிமை என்று தெரியாத வண்ணம் பார்த்துக் கொண்டால் ?

அவன் இறக்கும் வரை உணர மாட்டான்..

அதற்கு ஒரு தனி மனிதனுக்கு என்று எதுவும் இருக்கக் கூடாது, குடும்பம் என்று ஒன்று உருவானால் அவன் அதன் எதிர்காலம் பற்றி சிந்திக்க நேரிடும் ஆகவே குடும்பம் இருக்கக் கூடாது..

குடும்பம் என்பது தனிமனித ஒழுக்கம் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும்..

ஆகவே ஒழுக்கம் இருக்கக் கூடாது..

பெண்களுக்கு கற்பு இருக்கக் கூடாது..

இவையெல்லாம் சாத்தியப் படுத்த பாலியல் உறவுகள் திருமணத்துக்கு முன்பே இருத்தல் வேண்டும் (அதற்காக கொண்டு வரப்படதே காண்டம்ஸ்), காலம் முழுவதும் உண்மையற்ற வாழ்க்கையை வாழ வேண்டும். பாலியல் உணர்சிகளை குழந்தைகளுக்கே கொண்டு சேர்க்க வேண்டும்..

தவறான வழிகாட்டல்களால் அவர்களும் தவறு செய்வார்கள். குடும்பம் என்ற ஒன்றே இருக்காது. உண்மையான அடிமைகளாக இருப்போம்..

இதற்கும் மேலாக பெண்களுக்கும் ஆண்களுக்கும் கருத்து வேறுபாடு வர வேண்டும்..

நீ பெரியவனா நான் பெரியவளா என்ற ஈகோ சண்டை இருக்க வேண்டும் அப்போது தான் இருக்கும் குடும்பங்களும் சிதையும்..

காதல் என்பதின் பொருளை மாற்ற வேண்டும், வெறும் பாலியல் இச்சையை காதல் என்று திரைப்படங்கள் மூலம் கொண்டு சேர்க்க வேண்டும்..

உடைகளில் கவர்ச்சி மட்டுமே இருக்க வேண்டும், இதையும் அவர்களின் (illuminati) ஊடகங்கள் மூலம் நம்மிடம் புகுத்துவார்கள்..

பெண்கள் அவர்களின் அழகை மட்டுமே தகுதியாக கருத வேண்டும்..

இவையெல்லாம் தான் இந்த உலக அரசியல் உருவாக்கும் செயல் திட்டங்கள்.

இதன் விளைவாக மக்களுக்கு குடும்பம் இருக்காது, உறவுகள் இருக்காது, ஒழுக்கம் இருக்காது, இறுதியாக விடுதலை உணர்வு இருக்காது..

தான் ஒரு அடிமை என்பது அவர்களுக்கே தெரியாது..

ஆணும் பெண்ணும் சமம் இல்லை..

பெண் ஆணை விட மிக உயர்ந்தவள்..

ஒரு பெண்ணின் மதிப்பை ஆண்கள் உணர்தல் வேண்டும்..

பெண்ணை போற்றிக் காத்தல் ஆணின் கடமை..

அந்த ஆணை அவ்வாறு வளர்த்து எடுத்தல் பெண்ணின் கடமை..

பெண்களே கடமை தவரேல்..
ஆண்களே ஆண்மை தவரேல்...

தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்...


மிரட்டி வாங்கிய கோடநாடு எஸ்டேட்டை மீட்பேன்: சசிக்கு சவால் விடும் வெள்ளைக்காரர்...


ஜெயலலிதாவின் அதிகார நிழலில் நின்றபடி சசிகலா சேர்த்த சொத்துக்களை இப்போது ஏழரை நாட்டு... இல்லையில்லை எழுபதரை நாட்டு சனியே போட்டு ஆட்டமாய் ஆட்டுகிறது.

சசி-தினாவின் சொத்துக்களை கடந்த ஐந்து நாட்களாக வருமான வரித்துறை ரெய்டு வெச்சு செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் கோடநாடிலிருக்கும் கொடநாடு எஸ்டேட் மற்றும் கர்சன் எஸ்டேட் இரண்டும் அடக்கம்.

இந்நிலையில் கோடநாடு எஸ்டேட்டை ஜெயலலிதாவுக்கு விற்ற கிரேக் ஜோன்ஸின் மகன், பீட்டர் கிரேக் ஜோன்ஸ் ‘அடிமாட்டு விலையில் எங்களிடமிருந்து வாங்கப்பட்ட கோடநாடு எஸ்டேட்டை மீட்க வழக்கு தொடர்வேன். தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியை நாடுவேன்.’ என்று சவால் விட்டுள்ளார்.

அவர் பிரிட்டனை சேர்ந்த நாங்கள் எங்கள் தந்தை கிரேக் ஜோனுடன் கோத்தகிரி வந்தோம். 1975-ல் கோத்தகிரியிலுள்ள கோடநாடு டீ எஸ்டேட்டை வாங்கினோம். வர்த்தக தேவைக்காக சில வங்கிகளில் கடன் வாங்கினோம். கடனை அடைக்க, கோடநாடு எஸ்டேட்டை விற்க முயன்றோம். அப்போது சசிகலா மற்றும் ராமசாமி உடையார் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எங்களை அணுகி விலை கேட்டனர். இது தொடர்பாக 5 முறை பெங்களூருவில் பேச்சு நடந்தது. அதில் இரண்டு முறை நானும் பங்கேற்றேன். பேச்சுவார்த்தையின் போது சசி தரப்பு விதித்த சில நிபந்தனைகளை நாங்கள் ஏற்கவில்லை. ஆனால் அவர்கள் வர்புறுத்தினர். எனவே எஸ்டேட்டை விற்க முடியாது என்றோம். உடனே எங்களுக்கு மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக பெங்களூரு போலீஸில் புகார் அளித்தோம். பின்னர் அதை வாபஸ் பெற்றோம்.

பின் மீண்டும் விற்பனை பேச்சுவார்த்தை அவர்களுடன் ஆரம்பமானது. எஸ்டேட்டின் விலையாக 9.5 கோடி ரூபாய் கூறினேன். ஆனால் அவர்களோ 7.5 கோடி ரூபாய் தருவதாக கூறினர். பின் வங்கியிலிருந்த எங்களின் கடன்களை அடைப்பதாகவும் உறுதி தந்தனர். இதை நம்பி எஸ்டேட்டை விற்க முன்வந்தோம்.

முதலில் இந்த எஸ்டேட்டை உடையார் குடும்பத்தினருக்கு கைமாற்றினர். பின் குறுகிய காலத்தில் மீண்டும் 7.6 கோடி ரூபாய் மதிப்பில் சசிகலா குடும்பத்துக்கு  கோடநாடு எஸ்டேட் கைமாறியதாக தெரிய வந்தது. எங்களுக்கு வாக்கு தந்தபடி வங்கி கடனையும் அடைக்கவில்லை.

இந்த எஸ்டேட் நட்டத்தில் விற்கப்பட்டது எங்கள் குடும்பத்தை வாட்டியது, கூடவே கடன் விஷயத்திலும் ஏமாற்றப்பட்டதால் வருந்தினோம். 2008-ல் எங்கள் அப்பா இறந்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா இறந்து, சசிகலாவும் சிறையில் இருக்கிறார். இப்போது ஒரு வழக்கில் அரசே இந்த எஸ்டேட்டை பறிமுதல் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எங்களிடமிருந்து மிரட்டி வாங்கிய எஸ்டேட்டை மீட்க மத்திய அரசை நாடப்போகிறேன். வழக்கு தொடரும் ஆலோசனையும் நடக்கிறது. என்று தொடை தட்டியுள்ளார்.

ஜூனியர் ஜோன்ஸின் இந்த அறைகூவல் சிறையிலிருக்கும் சசியின் காதுகள் வரை போயிருக்கிறதாம். அவர் சில யோசனைகளை தந்திருக்கிறாரம் தன் டீமிடம். என்னாகுமோ, ஏதாகுமோ?

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் நண்பர்களுடன் குடிபோதையில் எம்ஆர்சி நகர் நட்சத்திர ஓட்டலில் தகராறு...


பரணிதரன் என்பவர் தன்னை கருணாஸின் நண்பர்கள் தாக்கியதாக காவல்துறையிடம் அளித்த புகாரின் பேரில் 6 பேர் மீது வழக்கு பதிவு. காவல்துறை விசாரணை...

சர்க்கரை பாதிப்பில் இருந்து நீக்கும் ஆரைக்கீரை. வேறு பயன்கள் என்ன..?



தின்றா லுரிசைதருந் தீராப் பயித்தியத்தைப்
பொன்றாத நீரிழிவைப் புண்ணீரை -யென்றுமிந்த
ஆராரைச் சாராம லோட்டிவிடு நாலிதழால்
நீராரைக் கீரையது நீ
     
- அகத்தியர் குணவாகடம்..

பொருள்...

இது நன்கு சுவையைத் தரும்.  மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும்.  முக்குற்றங்களில் ஒன்றான பித்தத்தை தணிக்கும, நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும்.  அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும்.  பெண்களுக்கு வெள்ளைப் படுதலைக் குறைக்கும்.

ஆரைக் கீரையின் பயன்களை அன்றே தமிழ் மூதாட்டி ஔவையார் பாடியுள்ளார்..

நான்கு இதழ்களைக் கொண்ட இவை நீர்பகுதிகளில் அதிகம் வளர்வதால் இதனை நீராரை எனவும் அழைக்கின்றனர்.

இக்கீரையை சமைத்து உண்டு வந்தால் மேற்கண்ட பலன்களைப் பெறலாம்..

நீராரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும்  அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஆரைக்கீரை சூப்..

ஆரைக் கீரை        - 1 கைப்பிடி

கறிவேப்பிலை    - சிறிதளவு

கொத்தமல்லி இலை    - சிறிதளவு

சின்ன வெங்காயம்     - 5

பூண்டுப்பல்        - 3

மிளகு        - 5

சீரகம்        - 1 ஸ்பூன்

சோம்பு        - 1 ஸ்பூன்

இஞ்சி        - 1 சிறு துண்டு

உப்பு        - தேவையான அளவு

இவற்றைச் சேர்த்து நன்கு நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வரலாம்.

சர்க்கரை நோயின் பாதிப்புக்கு ஆளானவர்கள், வாரம் இருமுறை ஆரைக் கீரை சூப் அருந்தி வந்தால் உடல் சோர்வு, மயக்கம், கை, கால் நடுக்கம் நீங்கும்.  அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது குறையும்.  மலச்சிக்கல் தீரும்.  அசீரணக் கோளாறுகள் நீங்கும்.

சரும நோய்கள் ஏதும் அணுகாது.  பித்தத்தைத் தணிப்பதால் கண்பார்வை நரம்புகள் வலுவடையும்.

பெண்களுக்கு உண்டாகும் சூலக நோய்களைத் தடுக்கும்.

வயிற்றுப் பூச்சிகளை நீக்குவதுடன், வயிற்றுப் புண்களையும் ஆற்றும்...

பழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்.....


1. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே..

விளக்கம்: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை. அதாவது ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ) நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை.

2. அடியாத மாடு படியாது..

விளக்கம்: உண்மை பொருள் என்னவென்றால் மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால் கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற ) செய்ய முடியும் என்பது தான்.

3. கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே.. வாளோடு முன் தோன்றிய மூத்த குடி..

விளக்கம்: (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.

4. ஆறிலும் சாவு நூறிலும் சாவு..

விளக்கம்: மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கொளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம். எனவே செய்நன்றிக் கடனுக்காக தான் கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன் கூறுகின்றான். அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் சாவுதான். நூறு பேர் கௌரவர்களுடன் இருந்தாலும் சாவுதான் என்பதுதான் அது. ஆனால் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது இன்று வயதைக் குறிப்பதாக அர்த்தப்பட்டு விட்டது.

5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு..

விளக்கம்: உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு.

6. நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்..

விளக்கம்: பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் "என் சிற்பம் எப்படி? என்று. அதற்குச் சுவைஞன் சொன்ன பதில் 'நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை.

7. பசி வந்திட பத்தும் பறந்து போகும்..

விளக்கம்: அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை.

8. போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை..

விளக்கம்: இந்த பழமொழியின் அர்த்தம், போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும்.

9. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்..

விளக்கம்: இதன் அர்த்தம், ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது (என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்து கொண்டால் , அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும்.

10. சேலை கட்டிய மாதரை நம்பாதே..

விளக்கம்: சேல் அகட்டிய மாதரை நம்பாதே என்பது தான் அதன் உண்மை பொருள். சேல் என்றால் கண். தன் கணவனுடன் இருக்கும் போது கண்களை அகட்டி வேறு ஒரு ஆடவனை பார்க்கும் பெண்களை நம்பாதே என்பது தான் உண்மை பொருள்.

11. ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்..

விளக்கம்: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல. ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்என்பதாகும். அதாவது, நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது...

இலுமினாட்டி இரகசியம்...


அவர்கள் என நான் கூறுவது குறிப்பிட்ட சமூகத்தை அல்ல, அவர்கள் என்பது உலக பெரும் பணக்காரர்கள் மற்றும் உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் என கூறி நம்மை அடிமையாக நடத்துபவர்களை....

கை உடைந்த நிலையில் பிச்சை எடுத்த 10 வயது சிறுவன்: விசாரித்த போது வெளியான திடுக் தகவல்...


கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 வயது சிறுவன் மருத்துவ செலவுக்காக பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்த்தாண்டம் சந்திப்பையொட்டியில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு 10 வயது சிறுவன் ஒருவன் உடைந்த கையில் கட்டுகளுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்.

இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின் போலீசார் சிறுவன் இருக்கும் பகுதிக்கு வந்து, சிறுவனை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது போலீசார் அவனிடம் விசாரித்த போது, நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்தவன் என்றும் கை உடைந்தபோது மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாததால் முதல்முதலாக பிச்சை எடுத்ததாக கூறியுள்ளான்.

இதைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், சிறுவனுக்கு மருத்துவ செலவு மற்றும் கல்வி செலவைச் செய்வதாகவும், சிறுவனை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுரை கூறி தாயுடன் அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது...

தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு...


மானங்கெட்ட இந்திய கடலோர காவல்படை.. தமிழர்களின் வரிப் பணத்தில் வயிற்றை வளர்த்துக் கொண்டு... இலங்கை படையை தாக்காமல்.. வேண்டும் என்றே தொடர்ந்து  மீண்டும் மீண்டும் தமிழர்களை தாக்கிக் கொண்டிருக்கிறது...

இந்தியா தான் தமிழினத்தின் முதல் எதிரி என்று புரிந்துக் கொள் தமிழா...

விசிக என்றுமே தமிழின துரோக மற்றும் விரோத கட்சி என்று புரிந்துக் கொள் தமிழா...


விசிக கட்சிக்கு எதிரிகள் தமிழினம் தான்...

விசிக கட்சிக்கு நண்பர்கள் யாரென்றால்..

தமிழனத்தை அழிக்கும் திராவிடம், கம்யூனிசம், தலித்தியம், சிங்களம், ஆரியம் தான்...

ஜெயா டிவி அலுவலகத்தில் மூன்று நாளா இதைத் தான் தேடிகிட்டு இருக்கணுங்கலாம்...


ஏனெனில் வீடியோ எடுத்து ஜெயா டிவி கையில் இருக்கும் என்று ஒரு முறை தினகரன் சொல்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

இது திமுகவின் தினகரன் நாளிதழோ, தினத்தந்தியோ அல்ல.. பாஜகவின் ஆதரவு The Hindu தமிழ் நாளிதழ்...

இவ்வளவு தான் நீதிமன்றம்...


ஆகாயத்தில் ஒரு ஒளி : அத்தியாயம் - 2.. உண்மைகள் உறங்குவதில்லை - பகுதி 11...


உண்மைகள் உறங்குவதில்லை என்ற இந்த வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று நாம் காண உள்ள தீர்க்க தரிசனப் பகுதி 11-ம் பகுதியாகும். இதில் இடம் பெறும் குறிப்புகள் யாவும் பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாகும்.

11-ம் தீர்க்க தரிசனத்தில் இன்று முதலாவதாக நாம் காண இருப்பது, வருங்காலத்தின் நிலையை காலக்கண்ணாடியாக நாம் விளக்கும் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பே இப்பகுதியாகும். அதாவது உண்மைகள் உறங்குவதில்லை என்ற பகுதியில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள 3-ம் தீர்க்க தரிசனத்தின் அனைத்து குறிப்புகளும் தற்போது நடக்கும் காலமாக உள்ளது என்றும், இது தவறாமல் நடக்கும்  நிகழ்வுகள் என்பதை 11-ம் தீர்க்க தரிசனம் தீர்க்கமாக இங்கே குறிப்பிடுகின்றது.


மயிலாடுதுறையில் சித்தர் ஒருவரின் சமாதியில் அற்புதமான நிகழ்வு ஒன்று தற்போது நடக்க உள்ளதாகவும், அங்கே மாயவன் குடிகொண்டுள்ள ஒரு ஆலயத்திலும் ஒரு அதிசய சம்பவம் நடக்க உள்ளதாக 11-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


இந்தியாவின் இறையாண்மையை பரிசோதிக்கும் அளவில் பாகிஸ்தானின் நிகழ்வுகள் தற்போது அதிகரிக்கும் என்றும், இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளின் எல்லைகளில் உடனே போர் ஏற்படும் அபாய நிலை  உருவாகிட உள்ளதாக 11-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


சுனாமியின் பேரலை தாக்குதலால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நாடுகள் அனைத்தும் மீண்டும் ஒரு சுனாமியின் தாக்குதலுக்கு ஆளாக உள்ளதாக ஒரு குறிப்பு செய்தி 11-ம் தீர்க்க தரிசனத்தில் சுட்டிக் காட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


சென்னை மாநகரில் இனி பல திடீர் திடுக்கிடும் சம்பவங்கள் நடக்க உள்ளதாகவும், மக்கள் கூடும் இடங்களை மிகுந்த கவனத்துடன் கண்காணிக்கப்பட வேண்டும் என்ற எச்சரிக்கையை  11-ம் தீர்க்க தரிசனம் இங்கு குறிப்பிடுகின்றது.


பாரதப் பிரதமரின் திடீர் பயணத்தில் ஒரு அரிய நிகழ்வு ஒன்று நடக்க உள்ளதாகவும், உலகத் தலைவர்களின் கவனம் தற்போது இந்தியா மீது திரும்பும் படியான ஒரு முக்கிய சம்பவம் நடக்க உள்ளதாக 11-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.


தென்கைலாயம் என்று அழைக்கப்படுகின்ற ஒரு மலையில் திடீரென்று பேரதிர்வு ஒன்று ஏற்பட உள்ளதாகவும், இது தமிழ்நாட்டிற்கு போதாத காலமாக இருக்கும் என்பதற்கான முக்கிய அறிகுறியாக மக்கள் மனதில் எண்ண வேண்டும் என 11-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


சுடுகாடு, இடுகாடு என்று பொருள்படும் நிலப்பரப்புகளில் பல இன்னல்கள் நடந்து வருவதை தமிழக அரசு தற்போது கண்டறியும் என்றும், இச்சமயத்தில் மகாகொடிய மனம் படைத்த சாமியார் ஒருவன் தென் மாவட்டத்தில் காவல்துறையால் கைது செய்யப்படுவான் என்றும், அவனைப் பற்றிய பிண்னணியை ஆராயும் போது மக்கள் அச்சப்படும்படி மிகப்பெரிய இரகசியம் ஒன்று வெளியாகும் என்று 11-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகிறது.


போகர் சித்தரின் பிரவேசம் ஒன்று தற்போது நடைபெறும் என்றும், அவரைப் பற்றிய மிக, மிக அரிதான விஷயம் ஒன்று உலக தமிழ் மக்கள் அறியும் படியான நிகழ்வு ஒன்று தற்போது நடைபெற உள்ளதாகவும், இதனால் சித்தர்களின் மேல் இருந்த நம்பிக்கை மக்கள் சமுதாயத்திற்கு அதிகமாகிட உள்ளதாக 11-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.



மேருமலை, கைலாய மலை, பர்வத மலை இவற்றில் ஒரே சமயத்தில் அதிசய நிகழ்வுகள் வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்றும், இறைவன் சிவனாரின் அற்புத காட்சிகளை உலக மக்கள் காணும்படியான ஒரு சம்பவம் நிச்சயம் நடக்கப் போவதாக 11-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகிறது.


திருவண்ணாமலையில் விசிறி சாமியார் என்று அழைக்கப்பட்ட ஒருவரின் ஆன்மாவை மக்கள் பல இடங்களில் காணும் படியான ஒரு அரிய நிகழ்வு வரும் கிரிவலம் அன்று நிகழப் போவதாக 11-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.


இறைவன் ஒருவனே, அவன் ஜோதி வடிவானவன், அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற பேச்சுகள் எல்லாம் காணாமல் போய், இறைவன் பல வடிவானவன், அவனின் உருவம் பல நிலைகளைக் கொண்டது. அவனை காண்பது என்பது உண்மையான ஒன்று என மக்கள் பேசும் படியான பல சம்பவங்கள் இனி தமிழ்நாட்டில் நடக்க உள்ளதாக 11-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


அன்னை சமயபுரத்தாளின் பிரவேசம் இப்பூமியில் இனி பல இடங்களில் மக்கள் காணும்படியான நெகிழ்வான பல சம்பவங்கள் இனி தமிழ்நாட்டில் நடக்க உள்ளதாகவும், அதற்கு அச்சாரமாக வரும் ஆடி மாதம் அதன் துவக்கமாக அமைய உள்ளதாக 11-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


சுந்தர் என்ற பட்டப்பெயர் கொண்ட ஒருவனின் வீண்ஜாலப் பேச்சால் ஒரு நிறுவனம் அவப்பெயருக்கு ஆளாக நேரிடும் என்றும், ஆவி, பரிசுத்தமானவன், வருகை என்ற பேச்சுக்கள் இனி அங்கு செல்லு படியாகாது என்று 11-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


தேவகன்னி ஒருவளின் வருகை தற்போது பூலோகத்தில் நடக்க இருப்பதாகவும், அதனை உலக மக்கள் பலரும் காணும் அதிசய நிகழ்வுகள் பல இடங்களில் உடனே நடக்க உள்ளதாக 11-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை இங்கு மீண்டும் சுட்டிக் காட்டுகின்றது.

ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற நமது வருங்கால தீர்க்க தரிசனத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்ட 24-ம் தீர்க்க தரிசனம் ஆரம்பமாகும் காலமாக வரும் ஆடி மாதம் அமைய உள்ளதாக 11-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை நமக்கு நினைவூட்டுகிறது.

நமது நினைவுகளில் இனி உண்மைகள் உறங்குவதில்லை என்ற தீர்க்க தரிசனங்கள் வலம் வரும் காலமாக தற்போது இருக்கும்  என்றும் அதனை காண, நாம்  அதுவரை காத்திருப்போம்.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

மழை...


1mm மழை அளவு என்பது 1லி / 1Sqmtr சமம்.

10mm மழை என்று பதிவானால், அதை 10லி/10 sqmtr என்று எடுத்து கொள்ளவும்.

ஒரு ஊரின் மழையை கணக்கிட ஊரின் பரப்பளவு (Sqmtr) தெரிந்திருக்க வேண்டும்.

சென்னை 174 Sq km (174 x 10,00,000sqmtr) சென்னையில் 1mm மழை என்பது 17,40,00,000 லி மழை பெய்ததாகக் கொள்ளலாம்...

ஒரு நட்சத்திரம் உதயமானது.. சூரியனை விட 8 மடங்கு பெரியது, 300 மடங்கு பிரகாசமானது...


பூமியில் இருந்து 4200 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய நட்சத்திரம் உதயமாகி உள்ளது.

இந்த நட்சத்திரம் சூரியனைவிட எட்டு மடங்கு பெரிதாகக் காணப்படுகிறது. மேலும் சூரியனைவிட 300 மடங்கு அதிகமாக பிரகாசிக்கிறது..

நட்சத்திரம் உதயமாவது எப்படி?

விண்வெளியில் ஹைட்ரஜன் வாயு உள்ளது. அந்த வாயு துகள்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பெரிய வாயு கூட்டமாக மாறுகின்றன. அவை பெரிய உருண்டையாக உருவெடுக்கிறது. அதன் மையப் பகுதி சூடேறி அணுச் சேர்க்கை நிகழ்கிறது. அப்போது ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஹீலியம் அணுக்களாக மாறுகின்றன. இதன் விளைவாக பெரும் ஆற்றலும் ஒளியும் வெளிப்படுகிறது. இவ்வாறு ஒரு நட்சத்திரம் உருவாகிறது.

ஆனால் விண்வெளியில் புதிய நட்சத்திரங்கள் உருவாவதை காண்பது மிகவும் அரிது.

அந்த அதிர்ஷ்டம் வானியல் விஞ்ஞானிகளுக்கு இப்போது கிடைத்துள்ளது.

18 ஆண்டுகளில் புதிய நட்சத்திரம்
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் கார்லஸ் காரஸோ கொன்சாலேஸ் தலைமையிலான விஞ்ஞானிகள் 1996-ம் ஆண்டில் ஒரு ஹைட்ரஜன் வாயுக் கூட்டம் ஒன்று சேருவதை கண்டு பிடித்தனர்.

அதனை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அந்த வாயு கூட்டம் கடந்த 18 ஆண்டுகளாக ஒன்றோடு ஒன்று கலந்து இப்போது புதிய நட்சத்திரமாக உதயமாகியுள்ளது.

இந்த குழந்தை நட்சத்திரத்துக்கு விஞ்ஞானிகள் W75N(B)-VLA2 என்று பெயரிட்டுள்ளனர்.

இது பூமியில் இருந்து 4200 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது.

சூரியனைவிட எட்டு மடங்கு பெரிதாகக் காணப்படுகிறது.

மேலும் சூரியனைவிட 300 மடங்கு அதிகமாகப் பிரகாசிக்கிறது.

இந்த நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதன் மூலம் சூரிய குடும்பம் உட்பட விண்வெளியின் பல்வேறு ரகசியங்களை கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகின்றனர்...

நேரு வின் பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக கொண்டாட வேண்டுமா..?



இந்திய மக்களின் நலன் கருதி நாலே நாலு மனைவியுடன் (நமக்கு தெரிந்து நாலு தெரியாம எத்தனையோ) நிறுத்திக் கொண்ட ஒழுக்க சீலர்...


தேச துரோகி போர் குற்றவாளி யான சுபாஷ் சந்திரபோஸை(அப்படிதான் நேரு சொன்னாரு) காட்டி கொடுத்த மாமா மனிதர்.... மன்னிக்கவும் மாமனிதர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளையே சிறிதளவும் வெட்கமேயின்றி குழந்தைகள் தினம் என்று கொண்டாடுகிறோம்....