10/03/2018

தமிழ்த்தேசிய விடுதலைப் போராளி பெருஞ்சித்திரனார் பிறந்த நாள் 10.3.1933...


விடுதலை வேண்டும் முதல் வேலை
 எந்த வேலையும் செய்யலாம் நாளை - மேற்படி பாடலில் பெருஞ்சித்திரனார் வேண்டிப் பாடிய விடுதலை என்பது தமிழ்நாடு விடுதலையை குறிப்பதாகும். 1956ஆம் ஆண்டு மொழிவழித் தமிழகம் அமைந்த பிறகும் தனிக் கழகம் கண்ட அண்ணா திராவிடநாடு கோரிக்கையை கைவிடத் தயாரில்லை.   இந்நிலையில் 1959ஆம் ஆண்டு தமிழ்மொழி முன்னேற்றம், இன முன்னேற்றம், தமிழ்நாடு விடுதலை ஆகிய மூன்று கொள்கையை முன் வைத்து தென்மொழி இதழை பெருஞ்சித்திரனார் தொடங்கினார்.

தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகள் வழியில் தேவநேயப் பாவாணர் தென்மொழி இதழில் சிறப்பாசிரியராக செயல்பட்டார். 1963ஆம் ஆண்டு பிரிவினை தடைச் சட்டம் வந்த போது அண்ணா பயங்கொண்டு திராவிட நாடு கோரிக்கைக்கு முழுக்கு போட்டார். இவரோ ஆட்சியாளருக்கு அடங்கிட மறுத்தார். தனது தென்மொழி ஏட்டிலே, "இந்திய நாட்டின் ஒற்றுமை உணர்வை விடப் பன்னூறாயிரம் மடங்கு உயர்ந்து வலிந்தாகும் தமிழக விடுதலையுணர்வு. அதைச் சட்டத்தால் அடக்குதல் சீறும் புயலை மீன் வலை கொண்டும் மடக்கும் செயல்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

1965ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போரை தமிழ்நாடு விடுதலையோடு இணைத்து பெருஞ்சித்திரனார் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தார். முதலமைச்சர் பக்தவத்சலத்தை கண்டித்து எழுதியதால் நான்கு மாதம் கடுங்காவல் தண்டனை பெற்றார். 17.11.1966 அன்று வேலூர் சிறையிலடைக்கப்பட்டு பின்னர் 11.1.1966இல் விடுவிக்கப்பட்டார். பெருஞ்சித்திரனார் மொழிப் போரில் ஈடுபட்டதை காரணம் காட்டி தில்லி அரசு பனிரெண்டு ஆண்டு காலமாக பணியாற்றி வந்த அஞ்சல்துறைப் பணியிலிருந்து நீக்கம் செய்வதாக அறிவித்தது. அப்போது அவர் சிறிதும் கண் கலங்கவில்லை.

ஈ.வெ.ரா.பெரியாரை ஆரிய எதிர்ப்பின் அடையாளமாக போற்றி வந்தவர் பெருஞ்சித்திரனார்.  1965ஆம் ஆண்டு மொழிப்போரின் போது பெரியார் மீது கடும் சினம் கொண்டார்.  காமராசர் அவர்கள் நல்லவர் என்று கூறி, பேராயக்கட்சிக்கு சார்பாக பேசியதோடு, தி.மு.க. இந்தியை எதிர்க்கிறது என்பதற்காக இந்தியைப் படிப்பதில் தவறில்லை என்று பெரியார் பேசியதைக் கண்டித்து "பெரியார் செய்த பெரும்பிழை" என்று தென்மொழியில் எழுதினார்.

பெரியாரின் தமிழ் மொழி எதிர்ப்பை கடுமையாகச் சாடி "பெரியாரின் தமிழ் ஆராய்ச்சி" (*) என்று தலைப்பிட்டு அதே தென்மொழியில் விரிவான கட்டுரை தீட்டினார். அதில், "மொழித்துறையில் இவர் வெறும் இராமசாமி தான்" என்று சாடினார். பெரியாரோ தன்னை திருத்திக் கொள்ள வில்லை. மீண்டும் மீண்டும்  "தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி" என்று பெரியார் எழுதிய போது வெகுண்டெழுந்து  'தமிழ் ஒரு காட்டு மிராண்டி மொழியே' என்று 16 பக்கம் பெரியாரை கடிந்து எழுதவும் துணிந்தார்.

பிறகு என் அலுவல் போனால் போகட்டுமென்று எதற்கும் அஞ்சிடாமல் தமிழக விடுதலை இயக்கம் ஒன்றை தொடங்கப் போவதாக அறிவிப்பொன்றை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக தமிழக விடுதலைப்படை அமைப்பதற்கு தமிழ் மறவர்கள் தங்கள் உறுதிப்பாட்டை பெயர், முழு முகவரியோடு பதிவு செய்திடுமாறு வேண்டுகோள் விடுத்தார். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் பெருஞ்சித்தினார் மூன்று தமிழக விடுதலை மாநாட்டை நடத்தியதால் கடும் நெருக்கடிக்கு உள்ளானார். 1972ஆம் ஆண்டு சூன் மாதம் 10,11 ஆகிய இருநாட்கள் திருச்சியில் தமிழக விடுதலை மாநாட்டை நடத்தினார்.

அதில் தமிழ்நாடு இந்திய அரசிடமிருந்து பிரிய வேண்டும், அப்படி பிரியாமல் போகுமானால் பத்து கேடான விளைவுகள் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் என்றார். அது வருமாறு: 1. தமிழ்மொழி உயர்வடைய வழியில்லை. 2. இந்தியை விலக்கவே முடியாது. 3. குல. சமயப்புரட்டுகள் என்றைக்கும் அகலா. 4. ஆரியப் பார்ப்பன நச்சுத்தன்மை இருந்து கொண்ட இருக்கும். 5. தமிழ்ப்பண்புகள் படிப்படியாகக் கெடும் 6. தமிழ்மொழியின் இலக்கணம், இலக்கியம் அழியும் 7. சமசுக்கிருதம் தலையெடுக்கும். 8. தமிழினம் மேலும் சிதறுண்டு போகும் 9. பொதுவுடைமை அரசைமப்புக்கு வழி ஏற்படாது 10. அரசியல் அதிகாரங்கள் தன்னிறைவு பெறா.

 மாநாட்டிற்கு முன் நடைபெற்ற 12 கல் தொலைவு பேரணியில் தமிழ்நாடு தமிழருக்கே முழக்கம் எழுப்பப்பட்டது. அப்போது காவல்துறை முழக்கத் தட்டிகளை பிடுங்கிச் சென்றது.

 9.6.1973 இல் இரண்டாவது தமிழ்நாடு விடுதலை மாநாடு மதுரையில் நடைபெற்றது. அப்போது தடையை மீறிப் பேரணி நடத்தப்பட்டதால் 92 பேர் கைது செய்யப்பட்டனர். 13.7.1975ல் மூன்றாவது தமிழக விடுதலை மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது. அப்போது பெருஞ்சித்திரனார், அடியார் உள்பட 22 பேர் 49 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழின இரண்டகர் கருணாநிதி தென்மொழி ஏட்டை தடை செய்த போது பெருஞ்சித்திரனார் தமிழ்சிட்டு ஏட்டை தொடங்கி கொள்கை முழக்கம் செய்தார்.

1976இல் ஆரியப்பித்து கொண்ட பெண் இந்திரா காந்தியால் மிசா சட்டத்தில் ஓராண்டு தளைப்படுத்தப்பட்டார். 1983ஆம் ஆண்டு ஈழ விடுதலைப் போர் தீவிரமடைந்த போது அதற்குத் துணை நின்றார். 1991இல் இராசீவ் காந்தியை கொன்ற வீரத்தமிழ்பெண் தணுவை பாராட்டி "ஆகுமோ உலகு அவள் அழிவிலாப் புகழ்க்கே" எனும்  பாடலை தென்மொழியில் எழுதினார். மேலும் பல நிகழ்வுகளில் தணுவைப் பாராட்டிப் பேசியதால் 15 நாட்களுக்கு மேல் சிறை ஏகினார். 27.1.1993இல் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதால் ஆரிய செயலலிதா அரசு கொடிய தடா சட்டத்தில் கைது செய்தது.  நான்குமாதம் சிறைவாசம் கழித்த பின்னரே வெளியே வந்தார்.

1994இல் 'திராவிடர்' என்று சொல்வது தவறு என்றும், 'தமிழர்' என்றே குறிப்பிட வேண்டுமென்றும் தனது 'தமிழ் நிலம்' ஏட்டில் அறிக்கை விடுத்தார். தாழ்த்தப்பட்டோரை 'பழந்தமிழர்' என்றே குறிப்பிட வேண்டும். ஆதிதிராவிடர் என்றோ, ஹரிஜன் என்றோ, தலித் என்றோ அழைக்கக் கூடாது என்பதையும் தெளிவாகக் கூறி விளக்கமளித்தார்.

கடும் காய்ச்சல் கண்டு துன்ப நிலையில் இருந்த போதும் 24.4.95இல் நடந்த தமிழே பயிற்றுமொழி, ஆட்சிமொழி என்று கூறி தலைநகர் தமிழ்க்கழகம் நடத்திய பேரணியில் கலந்து கொண்டு குடும்பத்தோடு தளைப்படுத்தப்பட்டார். அதுவே பெருஞ்சித்திரனார் இறுதியாகப் பங்கேற்றப் போராட்டமாகும்.

சளித்தொல்லை மிகுந்து, சிறுநீரகம் செயலிழப்புக்குள்ளான நிலையில் 11.6.1995 இல் இத்தமிழ்ப் பேருலகத்தை கண்ணீர் கடலில் மிதக்க விட்டு மறைந்தார்...

இந்திய பாஜக மோடி... தன் இனம் வாழ.. தமிழர்களை அழிக்க தொடங்கி விட்டான்.. விழித்துக்கொள் தமிழா...







விஜய் மல்லையாவின் சொகுசு கப்பல் பறிமுதல்...


தொழில் அதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது.

மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள மால்டா தீவு நாட்டில் மல்லையாவுக்கு சொந்தமான ‘இந்தியன் எம்ப்ரஸ்’ என்ற சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டு உள்ளது. அதில் பணிபுரியும் 40–க்கும் அதிகமான ஊழியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. ரூ.6 கோடிக்கும் மேல் சம்பள பாக்கி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மல்லையாவுடன் பேச்சுவார்த்தை நடந்த போதிலும் எந்த பலனும் இல்லை.

இதைத்தொடர்ந்து, மால்டா அதிகாரிகள் அந்த கப்பலை பறிமுதல் செய்து உள்ளனர். கோர்ட்டு மூலம் ஊழியர்களின் சம்பள பாக்கி உள்ளிட்ட தொகைகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அங்குள்ள தொழிற்சங்கம் தெரிவித்து உள்ளது...

நாம் அனைவரும் சல்லிக்கட்டு என்ற ஒன்றுக்காக ஒரே நேர்கோட்டில் ஒருமுறை இணைந்தோம்.. அதன் பிறகு..?


அதை சிதைப்பதற்காகவே அனுப்பப்பட்ட திசைதிருப்பு பலகைகள் தான் இவர்கள்..

அடுத்ததாக அதே மாதிரி எப்போது ஒன்று சேர்வோம் என்ற கேள்வியோடு இந்த பதிவை முன் வைக்கிறேன்..

நாம் ஒன்று சேரவில்லை, ஆனால் அதன் பிறகு நம்மை பிரிப்பதற்கு அவர்கள் அனைவரும் ஒரே நேர் கோட்டில் இணைந்து விட்டார்கள்..

தொப்பையை குறைக்க வழிகள்...


உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற சக்தியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு குவளை நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி தேநீரை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள். இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு குவளை சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

உடல் எடையை குறைக்க திட்ட உணவில் In Diet இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம். தொப்பையை குறைக்க வழி...

இந்தியா தமிழர்களை அழித்துக் கொண்டிருக்கிறது... விழித்துக்கொள் தமிழா...


சட்டம் அப்பாவி பொது மக்களுக்கு மட்டும் தானா.?


திருச்சி ரயில்வே மேம்பாலத்தில்..

வண்டிஎன் ~ TN~ 45 BE 7431..

ஹெல்மெட் அணியாமல் செல்லும்
காவல்துறை பெண் உதவி ஆய்வாளர்..

இவரை விரட்டி சென்று உதைக்க ஒரு காமராஜர் கூட இல்லையா ?

சாதிப் பெயர் வேண்டாமென முதன் முதலாகத் தீர்மானம் கொண்டு வந்தது தமிழர் தான்...


1929 பிப்ரவரி 17,18 ஆம் திகதிகளில் செங்கல்பட்டிலுள்ள தியாகராயநகர் பனகல் அரசர் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் மாகாண சுயமரியாதை மாநாட்டில் சாதி பட்டங்களை பெயருடன் பயன்படுத்துவதை விட்டுவிட வேண்டும் என்றும் மத, சாதி அடையாளங்களை அணிந்து கொள்ளக் கூடாது எனவும் தீர்மானத்தை சிவகங்கை தாலுக்கா போர்டு தலைவர் ராமச்சந்திரன் சேர்வை கொண்டு வந்தார்.

நானும் இன்றிலிருந்து என் பெயரை வெறும் ராமச்சந்திரன் என்று மாத்திரம் வைத்துக் கொள்கிறேன் எனக் கூறி அதற்குச் சட்டத்தின்படி என்ன வழி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இவர் இன்றைய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பாக்கியராசன் சேதுராமலிங்கத்தின் (Packiarajan Sethuramalingam) தாத்தா ஆவார்.

இது குறித்து அவர் எழுதிய பதிவை ஒளிப்பிரதியாகக் காணலாம்.

இவ்வாறு பெயருக்குப் பின்னால் சாதியை வைத்துக் கொள்ளக் கூடாது என்று சமத்துவ நோக்கத்தில் சிந்தித்தவர் ஒரு தமிழர்.

ஆனால் அதையும் இவர்கள் மறைத்து பிடுங்கி ஈ.வெ.ராமசாமிக்கு கொடுத்து விட்டனர்.

சரி இந்தக் கொள்கை நிறைவேற்றப்பட்டு 19 வருடங்களின் பின்னர் 1948 இல் நடந்த திருமண அழைப்பிதழ் ஒன்றைப் பார்ப்போம்.

தனது 14 வயதில் அரசியலுக்கு வந்ததாக பெருமையடித்துக் கொள்ளும் கருணாநிதி அடைப்புக்குறிக்குள் தாயாளுவின் தந்தை பெயரை பிள்ளை என்ற பின் ஒட்டுடன் போட்டுள்ளார்.

சாதி ஒழிப்புப் போராளிகளில் ஒருவராக காட்டப்படும் கருணாநிதி தனது சின்னமேளம் சாதிக்கு இசைவேளாளர் என்று பெயரை மாற்றிய சாதனையாளர்.

ஒழிக்கிற சாதிக்கு ஏன் பெயரை மாற்றுவான்..

அது மட்டுமல்ல கருணாநிதியின் வீட்டில் நடந்த ஒழுங்கு செய்த திருமணங்கள் அனைத்தும் அவரின் சொந்தக் சாதிக்குள்ளேயே நடந்துள்ளன...

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனகோட்டையில் போலிஸ் அதிகாரி வாகன சோதனையில் பிச்சையெடுக்க ஈடுபட்ட போது...


தலையில் தொப்பி இல்லாமலும், காலில் பூட்ஸ் இல்லாமலும், கையில் சிகெரட்டுடன் அதிகார தோரனையுடன்...

காவல்துறையினர் தன்னை தாக்கியதாக கூறி விவசாயி தற்கொலை முயற்சி...


தூத்துக்குடி அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற காவல்துறையினர் தன்னை தாக்கியதாக கூறி விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பைச் சேர்ந்த மாசி என்ற விவசாயிக்கு அவரது பக்கத்து வீட்டினருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து காவல்துறையினர் மாசியை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது உதவி ஆய்வாளர் துரை என்பவர் மாசியை சரமாரியாக அடித்து உதைத்தாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாசி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதை அறிந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்...

முதியோர் விரும்பினால் கருணைக் கொலை செய்யலாம் - உச்சநீதிமன்றம்...


தியானம்...


தியானத்திற்கு என்று அமரும் ஒவ்வொருவருக்கும் தெரியும் அவர்கள் தியானம் செய்யவில்லை..

தங்கள் மனதுடனும், சிந்தனைகளுடனும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று...

உங்களை நீங்கள் உத்தமர் என்று நினைக்கிறீரா??

தியானத்திற்கு என்று நேரமும் இடமும் ஒதுக்கி அமருங்கள்.

கண்களை மூடுங்கள்.. பிறகு தெரியும்..

உங்கள் மனதில் காமமும், வெறியும், காழ்ப்புணர்ச்சியும், மோகமும், குரோதமும், விரோதமும்... எவ்வளவு உங்களை பீடித்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியும்.

சாதாரணமாக, அமைதியாக இருக்கும் மனம் கூட, தியானம் என்றவுடன் ஆழிப்பேரலை போல் பொங்கி எழுந்துவிடும்.

உண்மையில் தியானம் செய்யும் ஒவ்வொருவரும் தியானம் செய்யவில்லை..

தத்தம் மனதுடன் போரில் ஈடுபட்டுள்ளார்கள்.

முதலில் தியானம் என்றால் என்னவென்று புரிய வேண்டும்.

பிறகு தியானம் பழக வேண்டும்.

மனதில் எதோ ஒரு மந்திரத்தை பல ஆயிரம் முறை ஜபிப்பது,

ஒரு புள்ளியிலோ, விளக்கிலோ, ஜோதியிலோ, கட்டைவிரல்
ரேகையிலோ மனதை குவிப்பதுதான் தியானம் என்று மிகவும் தவறாக புரிந்துள்ளனர்.

அவ்வாறு மனதை ஓரிடத்தில் குவிப்பது மன ஒருமைப்பாடு (concentration) ஆகும்.

அது தியானம் அல்ல.

நீங்கள் எத்தனை மணிநேரம் அமர்ந்திருந்தாலும் உங்கள் மனதில் சிறு அசைவும் தோன்றாமல், மனம் அமைதியாக, சூனியமாக, எந்த எண்ணமும் இல்லாமல் இருக்குமேயானால், அதுவே தியான நிலை (meditation) ஆகும்.

இந்த உன்னத நிலையை அடைய ஒரே ஒரு பயிற்சி தான் உள்ளது.

அது, நீங்கள் எந்த செயல் செய்யும் போதும் அந்த செயலிலேயே முழு கவனத்தையும் வைத்து, என்னத்தை சிதறவிடாமல் பழகுவதே ஆகும்.

உதாரணமாக நீங்கள் உங்கள் மகிழூந்தை இயக்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.

அப்பொழுது முழுகவனத்தையும் வாகனத்தை இயக்குவதிலேயே செலுத்தி, தேவையற்ற சிந்தனையை தவிர்த்து பழக வேண்டும்.

நீங்கள் மதிய உணவை உண்ணும் போது, தொலைகாட்சியையோ, முகப்புத்தகத்தையோ நோண்டாமல்..

தேவையில்லாமல் சிந்திப்பதை நிறுத்திவிட்டு..

உங்களுக்கு அளிக்கப்பட உணவை ரசித்து, ருசித்து முழுமையாக உண்டால் நீங்கள் தியானத்தை பழகினவர் ஆவீர்.

எனக்கு மூச்சிவிடவும், பசித்தால் உணவு உண்ணவும் கற்றுக்கொடுங்கள் என்று யாரிடமாவது நீங்கள் கேட்டதுண்டா..

தியானமும்  நீங்கள் முச்சு விடுவதைப் போன்றதே...

யாரும் உங்களுக்கு தியானம் கற்றுத்தர முடியாது. நீங்களாகத் தான் அதை அடைய வேண்டும்.

அதாவது உங்கள் தீவிர முயற்சியால்.. தியானம் என்பது விழிப்பாக இருப்பது அவ்வளவே.

வீண் சிந்தனைகளும், கற்பனைகளும் உங்களை அடிமைப்படுத்தாமல் விழிப்பாக இருங்கள். அந்த விழிப்பு நிலையே தியானம்.

வீண் சிந்தனையை, சிந்தனையுடன் சண்டையிடாமல் தவிற்பதே தியானம்.

வேலை செய்யும் போது அந்த வேலையிலேயே கவனமாக இருப்பதால் வீண் சிந்தனையை தவிற்கலாம்.

சும்மா இருக்கும் போது மனதையும் கற்பனை ஏதும் இன்றி சும்மா இருக்க பழகுங்கள்.

ஆனால் மனதுடன் சண்டை பிடிக்காதீர்கள்.

சிந்தனைகளை கவனியுங்கள்.

இயல்பாகவே வீண் சிந்தனைகள் நின்றுவிடும்.

தியானம் உங்கள் வாழ்வின் ஒரு அங்கம் ஆகிவிடும்.

நீங்களும் மகரிஷிகள் ஆகிவிடுவீர்கள்...

பாஜக பினாமி அதிமுக அரசே.. இனி கனவிலும் தமிழகத்தில் வெல்ல முடியாது...


தமிழனின் கடலறிவு...


தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய.

கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்! மத்திய தரைக்கடல், தென்ப்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான். பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில் பாறைகளில் கப்பல் மோதினால்  அதன் முன்பகுதியை அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன் மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர்.

உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார்.

சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில் பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள் அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான். போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா? அதுதான் உண்மை.

கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழன் தொழில்நுட்பம் தான் . அதாவது, கொலம்பஸ் கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட வழித்தடமும் ஒன்று தான்..

ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க இது மட்டுமா காரணம்? இல்லை. நம் பண்பாட்டுக்கும் ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

ஆம் தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம் உண்டு. தான் பிறந்த இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும். தமிழகத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு.

இதில் பல ரகசியங்கள் இருக்கும் போல...

பாஜக எச்ச. ராஜா சர்மா எவ்வளவு கேவலப்பட்டாலும் திருந்தவே மாட்டான்...


வணக்கம் சொல்வதின் நன்மை என்ன?


வணக்கம் செய்வது தமிழர்களின் உன்னதமான சைகையாகும்.

பொதுவாக இதை மரியாதை அளிக்கும் சைகையாக பார்க்கிறனர்.

ஆனால், வணக்கம் செய்யும் போது, இரண்டு கைகளையும் ஒன்று சேர்க்கும் போது, உங்களின் விரல் நுனிகள் அனைத்தும் ஒன்று சேரும்.

அவைகள் ஒன்றாக அழுத்தும் போது ப்ரெஷர் புள்ளிகள் செயல்பட தொடங்கும்.

இதனால் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு மறக்காமல் இருக்க செய்யும்...

இனி வெயிற்காலம்...


தற்பெருமை...


தற்பெருமை கொள்ளுதல் ஒரு மனிதனுடைய நல்ல குண நலன்களையும் கெடுத்து விடும்.

நிறை குடம் தழும்பாது என்பது ஒரு பழமொழி.

எல்லாம் கற்று தெரிந்த ஒருவன் மிகவும் அமைதியாக இருப்பான்.

ஏதோ அரைகுறையாக தெரிந்து கொண்டவன் எல்லாம் தெரிந்தது மாதிரி நடந்து கொள்வான்.

நீ ஒரு செயலை முடித்து விட்டால் நீயாகவே உன்னை உயர்த்தி சொல்லக் கூடாது.

உனது செயலை பற்றி மற்றவர்கள் பேச வேண்டும்.

அதைவிட்டு நீயே பேசினால் அது தற்பெருமை.

மற்றவர்கள் பேசினால் அது பெருமை.

விஞ்ஞானி ஒருவர், தன்னைப் போலவே அச்சாக பல மனிதர்களை உருவாக்கும் நுட்ப்பத்தைக் கண்டறிந்தார்.

அதன்படி அவர் உருவாக்கிய நகல்களுக்கும் அசலுக்கும் வித்தியாசமே தெரியவில்லை.

ஒரு நாள், தன் உயிரைக் கவர்ந்து செல்ல எமதர்மன் வரப் போகிறான் என்பதை அறிந்தார் விஞ்ஞானி.

ஏற்கனவே தான் உருவாக்கி வைத்திருந்த ஒரு டஜன் நகல் மனிதர்களுக்கு நடுவில் போய் நின்று கொண்டார்.

பூலோகம் வந்த எமதர்மன், உருவத்தில் விஞ்ஞானியைப் போன்றே இருக்கும் பதின்மூன்று பேரில் உண்மையானவர் யார் என்பதை அறிய முடியாமல் குழம்பிப்போனார். வெறுங்கையுடன் திரும்பினான். மரணத்தை வென்று விட்டதாகக் குதூகலித்தார் விஞ்ஞானி.

இருப்பிடம் திரும்பிய எமதர்மன் நன்கு யோசித்தான். அவன் மனதில் ஒரு திட்டம் பளிச்சிட்டது.

பாசக்கயிற்றுடன் பூலோகம் வந்தவன், விஞ்ஞானியின் இடத்தை அடைந்தான். ''ஐயா.. நீங்கள் பேரறிஞர்தாம். உங்களைப் போலவே ஒரு டஜன் உருவங்களைச் செய்து விட்டீர்கள். ஆனால். ஒரே ஒரு குறை...'' என்றான்.

விஞ்ஞானிக்குப் பொறுக்கவில்லை. ''என்ன குறை கண்டீர்?'' என்று எமதர்மனின் கைகளைப் பிடித்துக் கேட்டார்.

உடனே எமதர்மன், ''தற்பெருமை என்ற குறைதான். வாருங்கள் எமலோகத்துக்கு'' என்று விஞ்ஞானியை இழுத்துச் சென்றான்.

படிப்பாலும் கல்வியாலும் வருகிற அகங்காரம் மற்றவர்களின் அறிவால் இது வெறும் அறியாமையே என்று உணர்த்துகையில் தான் நாம் நம்மையே உணர்கிறோம்...

ஹெல்மட் அணியாமல் சென்றதுடன் வண்டியை நிறுத்தாததும் உஷா மரணத்திற்கு காரணமாக உள்ளது - உயர்நீதிமன்றம்...


புலிகளின் தலைவர் பெயரில் தமிழகத்தில் உணவகம்...


தமிழ் தேசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழகம் ஏற்காடு மலைப் பகுதியில் “தம்பி பிரபாகரன்” என்ற பெயரில் பெருமாள் என்பவர் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார்.

இந்த உணவகம் தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்று சிறப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தனது மகனுக்கு ஈழ பிரபாகரன் என்றும், மகளுக்கு தமிழினி என பெயர் வைத்திருப்பதாகவும் தம்பி பிரபாகரன் உணவகத்தின் உரிமையாளர் பெருமாள் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது;

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை “தலைவர், மேதகு” என்று அழைப்பதை விட “தம்பி” என்று அழைப்பதே பிடிக்கும் என்பதை புத்தகங்கள் வாயிலாக அறிந்துகொண்டேன்.

இதன் காரணமாகவே, மாபெரும் தலைவரை தம்பி என குறிப்பிட்டு உணவகத்திற்கு பெயர் வைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்...

தினகரனுக்கு குக்கர் சின்னம் மற்றும் அ.தி.மு.க. அம்மா என்ற பெயரை வழங்க வேண்டும் - இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு...


சிலம்பம் உருவான வரலாறு...


மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக் கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர்.

தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள இந்தக் கலையைப் பயன்படுதினர்.

தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும்.

இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர்.
அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் 'சிலம்பு' ஆகும்.

முற்காலத்தில் இக்கலையை வீர மறவர்கள் பயன்படுத்தினர். தற்போது இது ஒரு சில பள்ளிகளிலும், தனியார் அமைப்புகளாலும் கற்றுத் தரப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வீர விளையாட்டாகவும் இடம்பெறுகிறது.

சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன.

வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன.

சிலம்பாட்ட வகைகள்..

1. துடுக்காண்டம்
2. குறவஞ்சி
3. மறக்காணம்
4. அலங்காரச் சிலம்பம்
5. போர்ச் சிலம்பம்
6. பனையேறி மல்லு
7. நாகதாளி,
8. நாகசீறல்,
9. கள்ளன்கம்பு...

ஊடகங்கள் என்றைக்கும் உங்களுக்காக உள்ளவர்களை உங்களிடம் சேர்க்காது...


அதன் வேலை அவசியமில்லாத ஒன்றை அத்தியாவசியம் உடையதாக உங்களிடம் திணிப்பதே ஆகச்சிறந்த வேலையாகும்...

வாழைப்பழம் - நோய் நீக்கும் மருந்தாக...


வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன. வாழைப்பழத்தில் உடலுக்கு நன்மை தர கூடிய முக்கியமான வைட்டமின்கள் காணப்படுகிறது. வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகிறது.

இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை.

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

நம்முடைய உடலை நல்ல நிலையில் வைத்து கொள்ள உதவி செய்கிறது. மூளையில் வேதியியல் பொருட்களை சமநிலையில் வைத்து கொள்ள பெரிதும் துணை செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.

நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது.

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல் படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது...

பாஜக மோடியின் கார்பரேட் இந்தியா...


உயிர் எழுத்துகளும் உண்மை கோள்களும்...


நமது உடலில்  "வீணா  தண்டு " என்னும்  முதுகு  தண்டில் நாம் சுவாசிக்கும் மூச்சானது  மூன்று  பிரிவாக (channels) பிரிந்து (இடகலை , பிங்கலை, சுழி) உச்சி முதல் குதம் வரை சென்று 32 அடிப்படையான  உறுப்புகளுக்கு சக்தி பரிமாற்றம் செய்கின்றன.

இவை ஒரு நாளைக்கு 21,600 மூச்சாக பெரியோர்கள் கணக்கீடு செய்துள்ளனர்.

இந்த மூச்சானது முதுகு தண்டின் வழியாக செல்லும் போது ஏழு இடங்களில் சுழித்து ( முடிச்சு போன்றது ) செல்கின்றன.

இவற்றை "கிரந்தி" (முடிச்சு) என்பர்.

நவீன அறிவியலார் இவற்றை நாளமில்லா சுரப்பிகள்  என்கின்றனர்

(Endo glands ). யோக நூல்கள்  "ஆதாரம் " என்றும், குண்டலி சக்தி பாயும் "சக்தி பீடங்கள்" என்றும்   எடுத்துரைகின்றது.

இவ்வாறு இந்த மூச்சு சுழித்து பரவும் போது ஏற்படுத்துகின்ற  ஓசைக்கு "நாதாந்தம்" என்று பெயர்.

இந்த நாதாந்தம் ஏழு நிலைகளில் ஏற்படுத்தும் ஓசைக்கு ஏற்ப வடிவம் கொடுத்தனர்.

இவையே எழுத்து என்று பெயர் பெற்று வழங்கி வருகிறது. (ஏழு + அத்துக்கள் ) அத்து என்றால் முடிச்சு என்று பொருள். இவை "ஏழு சுரங்களாக " சங்கீதத்தில் சொல்லபடுகிறது. இவற்றை வகை படுத்தி "இராகங்கள்" என்று பாடி வருகின்றனர்.

இதையே
"ஏழிசையாய் இசைப் பயனாய்"
"ஏழு சுரங்களுக்குள் எத்தனை ராகம் "
என்கின்றனர்.

மேற்படி எழுத்துக்கள் என்பன தமிழில் "உயிர் எழுத்துக்கள் " என்று போற்றப்படுகின்றன.

அவைகள் முறையே  அ , இ ,உ எ, ஐ,ஒ  ஓள, என்பன.

இவைகள் ஐம்பத்தொன்று அச்சரமாக விரியும். இதை "சிதம்பர ரகசியம்" என்பர். ( இவற்றை சற்குருநாதர் தாள் பணிந்து பெறுக ). சுவாசம் ஆனது இந்த ஏழு ஆதார மையங்களில் செல்லும் போது எப்படி ஓசை உண்டாகின்றதோ அது போன்றே ஒளியும் அவ்விடங்களில் உண்டாகிறது.

இதையே " ஓசை ஒளியெல்லாம் நீனே  ஆனாய்" என்பது. இது அகத்தில் நடப்பது. இந்த ஒளியை "கோள்கள்" என்று பெரியோர்கள் குறித்தனர்.

கோ என்றால்  ஒளி ஆகும். கோயில் என்றால் ஒளி உள்ள இடம் என்று பொருள்.மேற்படி கோள்கள் மூலம் மனிதருக்கு "மனம்" என்ற அலையும் காற்று உண்டாகிறது. இவற்றை கோள்கள் மூலம் எடுத்துரைத்தனர். இதனால் ஏற்படும் (வாயு சுழலுவதால் ) உச்ச, நீச்ச, ஆட்சி  படி  ஒரு  கோள் என்றனர்.

பிங்கலை - சூரியன்  (மனம்)

இடகலை - சந்திரன் (புத்தி )

சூரியனாகிய மனம் சந்திரனாகிய புத்தியை உச்ச பலத்தால். கூடும் போது "துணிவு" என்னும்  "செவ்வாய்"தோன்றுகிறது (பிங்கலை) .

சந்திரன் என்னும் புத்தி உச்ச பலத்தால் சூரியனை கூடும் போது "நுட்பம்" என்னும் "புதன்" தோன்றும் (இடகலை).

சூரியன் என்னும் மனம் நீச்சம் என்னும் குறை பெறும் போது "மறதி" என்னும் "சனி " தோன்றுகிறது (பிங்கலை).

சந்திரன் என்னும் புத்தி நீச்சம் பெறும் போது "மயக்கம்" என்னும் "இராகு" தோன்றுகிறது (இடகலை).

மறதி என்னும் சனியும் மயக்கம் என்னும் இராகுவும் உச்சத்தில் கூடினால் "நூதனம்"  என்னும் "குரு " தோன்றுகிறது.
மறதி என்னும் சனியும் மயக்கம் என்னும் இராகுவும் நீச்சம் பெறும் போது "களிப்பு" என்னும் "சுக்கிரன்"  தோன்றும்.

இவை அல்லாமல்  நாடியானது "சுழியில்" ஓடும் போது "அறிவு " என்னும் "கேது" உண்டாகிறது.

இதை கொண்டு தான்   அறிவு என்பதை கேதுவுக்கு கொடுத்தனர். கேதுவை அறிவுக் கடவுளாக "கணபதி"  என்றனர்.

சித்தர்களும் இந்த அறிவு என்னும் "சுழியை" போற்றி வணங்கினர்.  இதனாலே தான் சித்தர்களுக்கு கோள்களின் பாதிப்பு இல்லை என்பர்.

இவ்வாறு நமது சான்றோர்கள் நமக்கு எடுத்துரைத்த அறிவு பெட்டகங்கள் ஆயிரம்.

இதை விடுத்து ஒன்பது கோள்களுக்கு விளக்கம் இல்லை. உண்மையில் வான்வெளியில் நிறைய கோள்கள் இருக்கின்றன. மணிவாசகரும் நூற்றி ஒரு கோடி கோள்கள் இருப்பதாக அண்ட உற்பத்தியில் கூறுகின்றார். நமது  முன்னோர்கள் ஒன்பது கோள்களை  மட்டும்   சொன்னதின் கருத்து இது தான். இதை

"ஊனுக்குள் உறையும் உறு பொருளை  உணர
உள் மூச்சை சீராக்கும் உயர் வித்தையை
தத்துவமாக சொன்னோம்  தரணியில்
சித்தனாக வாழத் தானே "

  - என்கிறார் நெருஞ்சில் சித்தர்...

கட்சில ஒன்னு ரெண்டு பேரு ஒரு மாதிரி இருந்தா சரின்னு சொல்லலாம்.. இருக்கிற எல்லாரும் இப்புடி இருந்தா அந்த பாஜக மோடி எப்புடிடா தமிழ்நாட்ல தாமரைய முளைக்க வைப்பான்...


ஆத்தா செல்லத்தாயி  நீ அடித்த வீடியோ முகநூல் முழுவதும் பரவிவிட்டது கொஞ்சம் கண்விழித்து பாரும்மா...

உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே...


உலகில் கப்பல் கண்டு பிடித்தவன் தமிழன்.

உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்து விளங்கியவன் தமிழன்.

இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர்.

கடலில் பயணம் செய்வது எப்படி? காற்று எந்த நாட்களில் எப்படி வீசும்?

காற்றின் திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.

உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும் அவன் மகன் ராசேந்திர சோழனும் ஆவான்.

கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில், கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும்.

ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும். ஆனால் இவ்வளவு தூரத்தைக் குறுகிய காலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்த போது ஆமைகள் ஓசியன் கிர்றேன்த்ஸ் (ocean currents) எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன் பல்லாயிரம் கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மை தெரிந்தது.

இப்படி பயணம் செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன் பின் தொடர்ந்த போது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன. ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும், மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.

உதாரணம்...

தமிழா - மியான்மர்.
சபா சந்தகன் - மலேசியா.
ஊழன், சோழவன், வான்கரை, ஒட்டன்கரை, ஊரு - ஆஸ்திரேலியா.
கடாலன் - ஸ்பெயின்.
நான்மாடல் குமரி - பசிபிக் கடல்.
சோழா, தமிழி, பாஸ் - மெக்ஸிகோ.
திங்வெளிர் - ஸ்லாந்து.
கோமுட்டி - ஆப்பிரிக்கா.

இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்து அதன்மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.

இதே போல் தென்பசிபிக்மாக் கடலில், ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டு பிடிக்கப்பட்டது. அக்கப்பலை ஆராய்ந்து பார்த்ததில் அது 2500 வருடங்களுக்கும் மேல் பழமையானது என்றும், இது தமிழருடையது என்றும் தெரிவித்தனர்.

பல்லவர்களின் வணிக நாணயத்தில் கப்பல் பொறிக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இன்னும் உலகில் உள்ள கப்பல் மற்றும், கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவிய பெயர்களே உள்ளன...

உலக மக்களின் எதிரி தான் அமெரிக்கா...


மனதின் நிலை...


மனதினால் செய்ய முடியாத விஷயம் நடுநிலையில் இருப்பதாகும்.

ஒரு துருவத்திலிருந்து எதிர் துருவத்திற்கு செல்வது மனதின் இயல்பாகும்.

நீங்கள் நடு நிலையில் இருந்தால் மனது மறைந்து விடும்.

இது கடிகாரத்தில் உள்ள ஊசலைப் போன்றது.

ஊசல் நடு நிலையில் நின்று விட்டால் கடிகாரம் நின்று விடுகிறது.

நடு நிலையில் நிற்பதே தியானம்...

இந்த மனம் அதிக தூரத்தில் உள்ளதையே நாடுகிறது. அருகாமை உங்களுக்கு சலிப்பைத் தருகிறது.

தூரத்தில் உள்ளது நம்பிக்கை தருகிறது. கனவைத் தருகிறது. மிகவும் வசீகரமாக இருக்கிறது.

நீங்கள் அந்தக் கோடிக்குப் போய் விட்டால் , நீங்கள் புறப்பட்ட இடம் மீண்டும் அழகாகக் காட்சி அளிக்கிறது.

மனம் முரண்பாடுகள் நிறைந்தது.

மனம் முழுமையாக இருக்க முடியாது.

யாரையாவது நீங்கள் நேசிக்கும் போது உங்கள் வெறுப்புத் தன்மையை அடக்கி வைக்கிறீர்கள். நேசித்தல் முழுமையாக இல்லை.

உங்கள் வெறுப்பு எந்நேரமும் வெளிப்படலாம்.

நீங்கள் ஒரு எரிமலையின் மீது அமர்ந்திருக்கிறீர்கள்.

எல்லா உறவுகளும் விருப்பும் வெறுப்பும் உடையவை.

மனம் உங்களுக்கு எதிரானதற்கே செல்ல வற்புறுத்தும்.

எதிரானதற்குச் செல்லாதீர்கள்.

மையத்தில் நின்று இந்த மனம் செய்யும் ஏமாற்று வேலையைக் கவனியுங்கள்.

இந்த மனம் உங்களை அதிகாரம் செய்து கொண்டிருக்கிறது...

தமிழகத்தில் 5 இடங்களை பெட்ரோல் மண்டலங்களாக அறிவித்து நிலங்களை கையப்படுத்த அரசு முயற்சி...


ஆரியர்கள் ஓர் இனத்தவர்கள் அல்லர்...


ஆரியம் என்பது ஒரு கூட்டமைப்பு...

இந்து மதம் என்பது தமிழர் மதங்களாகிய சைவத்தையும் வைணவத்தையும் குறிக்கிறது..

இந்துத்துவா என்றால் என்ன?

இந்துத்துவா என்பது ஒரு மதம் இல்லை.  அது ஆரிய வாழ்க்கை முறையாகும்.

ஆரிய வாழ்க்கை முறை என்பது என்ன?

1. ஆரியர் பிறப்பால் உயர்ந்தவர்.

2.  ஆளுகை செய்வதற்கென்றே பிறந்தவர் ஆரியர்.

3.  ஆரியர்களுக்குச் சேவை செய்வதையே தங்கள் பிறவிக் கடமையாகக் கொண்டவர் மற்றவர்கள்.

4. ஆரியர்களை எதிர்க்கும் மற்றவர்கள் ஆரியரின் எதிரிகள் அல்லது தீண்டத்தகாதவர்கள். 

என்பனவற்றை ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கை முறைதான் ஆரிய வாழ்க்கை முறையாகும். 

இதையே மனுநூல் வலியுறுத்துகிறது.

மனுநூலின் இக்கொள்கைக்கு ஆங்கிலேயர் கொடுத்த பெயர் தான் இந்துயிசம் அல்லது இந்துத்துவா என்பதாகும்.

ஆரியர்கள் என்னும் சொல் யாரைக் குறிக்கும்?

இந்தியாவின் மீது படையெடுத்து வந்த

1. பாரசீகர் (கி.மு. ஆறாம் நூற்றாண்டு).

2. கிரேக்கர்  (கி.மு. நான்காம் நூற்றாண்டு).

3. சகர் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு).

4. குசானர் (கி.பி. முதல் நூற்றாண்டு).

5. ஊணர் (கி.பி. நான்காம் நூற்றாண்டு).

ஆகியோரும் வணிகத்திற்காக வந்த

6. உரோமர் (கி.பி. நான்காம் நூற்றாண்டு).

ஆகிய ஆறுவரும் ‘ஆரியர்’ என்னும் பொதுப்பெயரில் ஒன்றிணைந்தனர். 

இவர்கள் தங்களுக்கென்று ஒரு மதம் இல்லாதவர்கள் ஆவர். 

ஆரியர் என்பது எந்த ஓர் இனத்தின் பெயரும் இல்லை...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் அடுத்த மோசடி...


வீடியோக்கான் அதிபர் 38,000 கோடி கடனுடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்...

தமிழகத்தின் மிக முக்கியமான பிரச்சனைக்கு எழுகிற போராட்டங்கள் - திட்டமிட்டு மறைக்கும் ஊடகம்...


பாமக கட்சி திட்டமிட்டிருக்கும் மிக முக்கிய இரண்டு போராட்டங்களை தமிழக ஊடகங்கள் அனைத்தும் திட்டமிட்டு மறைத்து தேவையற்ற சமூக விரோத நிகழ்வுகளை தனது ஊடக வளர்ச்சிக்கு என்பதை தாண்டி இந்திய ஒன்றியத்தின் நகழ்ச்சி நிரலுக்கு செயல்படுவது வேதனை.

அனைத்து ஊடகமும் ஓனரும் இந்திய ஆட்கள், ஊடகத்தில் வேலை பார்க்கும் ஆட்கள் அனைவரும்  திராவிட கருத்தியல் நபர்கள். இந்த நிலைமை மாற வேண்டும் ...

10 மார்ச் - OBC இட ஒதுக்கீட்டுக்கு போராட்டம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில்..

30 மார்ச் - காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகமே காணாத போராட்டம்..

பாமக அழைப்பு விடுத்திருக்கும் இந்த போராட்டத்தை தமிழர்கள் வலுப்படுத்துவோம்...

ஆரிய திராவிட திருட்டு அரசியலை புரிந்துக் கொள் தமிழா...


தனியார் மருத்துவமனைகளின் கொள்ளையை அம்பலப்படுத்திய மருந்து விலை நிர்ணைய ஆணைய தலைவர் பூபேந்திர சிங்கை பாஜக மோடி கார்பரேட் அரசு இடமாற்றம் செய்திருக்கிறது...


தனியார் கார்ப்பரேட்  மருத்துவமனைகளின் கட்டண கொள்ளையை ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் தலைவர் பூபேந்திர சிங்கை மோடி அரசு இடமாற்றம் இடமாற்றம் செய்திருக்கிறது. இது மருத்துவத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுதில்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆத்யா என்ற சிறுமி டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இந்த சிறுமியை சிகிச்சைக்காக கருவாவ்னில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் இறுதியில் சிகிச்சை பலனின்றி ஆத்யா உயிரிழந்தார். இந்நிலையில்  போர்டிஸ் மருத்துவமனை சிகிச்சை  கட்டணமாக ரூ 16 லட்சத்திற்கான பில்லை ஆத்யாவின் தந்தை ஜெயந்திடம் வழங்கியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயந் உடனே இதுகுறித்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்திடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தலைவர் பூபேந்தர் சிங் தில்லியில் உள்ள நான்கு தனியார் மருத்துவமனை வழங்கி வரும் பில்களை ஆய்வு செய்தனர்.

ஆய்வில் பல அதிர்ச்சித்தரும் தகவல்கள் தெரிய வந்தது.

அதாவது மருந்தின் விலையை விட சில மருந்துகளின் விலையை  2 ஆயிரம் மடங்கு அதிக லாபம் வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

மேலும் இந்த மருந்துகளில் மருத்துவமனை நிர்வாகம் நடத்தும் மருந்தகங்களில் மட்டுமே வாங்க வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். 

குறிப்பாக போர்டிஸ் மருத்துவமனை ஆத்யாவிற்கு சாதாரண மருந்துக் கடைகளில் 500 ரூபாய் விலையில் விற்கப்படும் மெரோலான் எனும் மருந்தை 4,491 ரூபாய் விலையில் விற்றுள்ளனர்.

சிப்லா நிறுவனத்தால் மெரோகிரிட் எனும் வணிகப் பெயரில் தயாரிக்கப்படும் இதே மருந்தின் விலை 3,100 – இதற்கு 65,362 ரூபாய் பில் போட்டுள்ளனர்.

இப்படி பல்வேறு வகையில்
உயிரை காப்பாற்றுவதாக கூறி ஜெயந்திடம் ஈவிரக்கமற்ற முறையில் பணத்தை சுரண்டியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மருந்து விலை நிர்ணய ஆணைய தலைவர் சுபேந்திர சிங் ஆதாரத்துடன் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனையின் கொள்ளையை அம்பலப்படுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் மோடி அரசிடம் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அம்பலப்படுத்திய 10 தினங்களில் மருந்து விலை நிர்ணய ஆணையத் தலைவர் சுபேந்திர சிங்கை இடமாற்றம் செய்திருக்கிறது.

மேலும் ஆணைய தலைவர் பணியிடத்தையே காலியாக வைத்திருக்கிறது. இதனால் அந்த ஆணையம் செயல்படமுடியாமல் 
முடக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே ஆத்யாவின் தந்தை ஜெயந் மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் அறிக்கையை வைத்து தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதுகுறித்து அவரிடம் கேட்ட போது  பல்வேறு கார்ப்பரேட் மருத்துவமனைகளின் செல்வாக்கினாலும், அரசியல் செல்வாக்கினாலும்  இதுவரை தனது மனு  விசாரணைக்கே வரவில்லை என்கிறார் ஜெயந்.

ஏற்கனவே மருத்துவிலை நிர்ணய ஆணையத்தின் தலைவர் சுபேந்தர் சிங் தனியார் மருத்துவமனைகள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி தன்னை  இடமாற்றம் செய்யும் என்று தெரிந்தே  தனியார் மருத்துவமனைகளின் அநியாய கொள்ளையை அம்பலப்படுத்தினார் என மருந்து விலை நிர்ணய ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது இந்தீய மக்களுக்கு மிகவும் ஆபத்தான செயல்பாடு...

பாஜக தயாரிப்பில்... ஆஸ்பத்திரி TO ஆஸ்கார்...


கோடம்பாக்கம் நடு நிலை பள்ளி சுவர் வண்ண ஓவிய- வாசக விழா...


விழிப்புணர்வு வாசக வண்ண ஓவியம்..

ப்ளாஸ்டிக்(நெகிழி) மற்றும் இதர  குப்பைகளை முழுவதுமாக ஒழிக்க..

குடிநீரை சேமிக்க..

விவசாயம் காக்க..

வண்ணங்களால் வண்ணம் தீட்டி மக்களின் மனதில் எண்ணங்களை தீட்டுவோம்...

வண்ணம் மற்றும் வண்ண தூரிகை கொடுக்கப்படும்..

தேதி: 11-03-18 ஞாயிறு..

நேரம் :காலை 9.00 மணி..

இடம் : நடு நிலை பள்ளி, கோடம்பாக்கம்..

தொடர்பு: 7904832774

தன்னார்வலர்கள் வருகை உறுதிப்பதிவேடு..

0. விஜய்
1. சுபாஷ்
2. மணி
3. ஜோதி
4. மணிகண்டன்
5. பிரேமா
6. வேலு
7. ஜெகன்
8. செல்வா
9. நிகில்
10. நித்தின்

MEBOC

தங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்   தோழமையே....

-காரிடிவி

கன்னட ஈ.வே.ராமசாமி நாயக்கரை தூக்கி பிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு இது சமர்ப்பணம்.....


காவேரி நதி நீர் பங்கிட்டு பிரச்சனை...



முடிந்த அளவு காவேரி பிரச்சனையின் தொடக்கத்தையும் அதை அரசுகள் கையாண்ட விதத்தையும் மிக சுருக்கமாக கூறி உள்ளேன் (எந்த அரசியல் தலைவர்களையும் முன்னிறுத்தாமல்). 



தயவுசெய்து நேரம் ஒதுக்கி படிக்கவும், தமிழகத்தின் முதன்மை பிரச்சனை காவேரி.. 200 ஆண்டுகால போராட்டம் இது..



ஒவ்வொரு தமிழனும் கன்னடனும் இந்த விடையத்தை முழுவதும் உணர்ந்தாள் ஒழிய தீர்வு கிடைக்காது.


மீண்டும் ஒரு பதிவில்  காவேரி நீர் தமிழகத்திற்கு எவ்வளவு இயன்றியமையாதது என்றும் அதை இழந்து விவசாயிகள் படும் துன்பத்தையும் காண்போம்...