14/04/2017

திருப்பூர் தடியடியில் போலீஸ் நாடகம் அம்பலம்....


பல பெயர்கள் எனக்குண்டு...


இனத்தை நேசிப்பதால் இனவாதி..
மொழி பற்றோடிருப்பதால் மொழி வெறியன்..
அடக்குமுறையை வெறுப்பதால் தீவிரவாதி...
அதிகாரத்தை எதிர்ப்பதால் பயங்கரவாதி..
விடுதலைக்கு கூவுவதால் கூச்சல்காரன்..
சமூக அக்கறை இருப்பதால் வேலை இல்லாதவன்..
பணம் சேர்க்காததால் கேனையன்..
அடிக்கடி அரசியல் பேசுவதால் உருப்படாதவன்..
சாதி மறைப்பதால் நடிகன்...
பார்ப்பனியத்தை எதிர்ப்பதால் பரதேசி..
இட ஒதுக்கீடை ஆதரிப்பதால் அக்கிரமக்காரன்...
தமிழ்த்தேசியம் பேசுவதால் சமூக விரோதி..
இந்தியத்தை எதிர்ப்பதால் நக்சுலைட்..
ஈழத்தை நேசிப்பதால் புலி...

மொத்தத்தில் வீணாப்போன வெறும்பய என்ற கொள்கைக்காரன்...

தமிழினமே விழித்தெழு...


மார்சியம் பேசுவார்கள்,
பெரியாரியம் பேசுவார்கள்,
பொதுவுடைமை பேசுவார்கள்,
விடுதலைப் புலிகளைப் பற்றி பேசுவார்கள்,
ஈழம் பற்றி உருகுவார்கள்,
திராவிடம் பேசுவார்கள்,
தமிழ் பற்றிப் பேசுவார்கள்...

ஆனால்...

தமிழர், தமிழர் நாடு, தமிழர் அரசியல் பற்றி வாய் திறக்க மாட்டார்கள்...

விடுதலைப் பயணத்தில் இமயம் போன்று எதிரே நிற்கிற எதிரிகளைவிட.. எலிபோல இருக்கிற ஊடுருவல் தான் பேரிடர் நிறைந்தது..

நாடும் மொழியும் நம் இரு கண்கள்...
தனித் தமிழர் நாடு நமது இலக்கு...

தமிழகத்தின் தங்கமகன் மாரியப்பன் தங்கவேலுவிற்கு குடியரசு தலைவர் பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்...


சித்தர் ஆவது எப்படி - 15...


வேறு ஒன்றும் தோன்றா நிலை...

தோன்றா நிலையில் அனுபவப் பட்ட நாம், அந்த தோன்றா நிலையில் நாம் நம் கடமைகளை செய்ய வில்லையென்றால் அந்த தோன்றா நிலை பெற்றதின் மூலம் எந்த பயனையும் அடைவதில்லை..

அந்த தோன்றா நிலையில் ஒரு காரியத்தை செய்தால், அந்த தோன்றா நிலை கெட்டு தானே போகும் என்ற ஒரு கேள்வி எழலாம்..

ஒரு காரியத்தை செய்ய மனம் தேவைப் படுகிறது.. தோன்றும் நிலையில் உள்ள மனம், நிச்சயமாக தோன்றா நிலையை பாதிக்கவே செய்யும்.. உண்மை தான்..

ஆனால் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது..

உணவு உண்டு கொண்டு இருக்கிறோம்.. அது மனம் தன்னை ஈடுபடுத்தி அந்த காரியத்தை செய்ய தொடங்குகிறது.. இப்பொழுது அந்த மனம் அந்த உணவு உண்ணும் காலத்தில் சித்தத்தின் எண்ண ஆதிக்கத்தால் அந்த உணவில் தன்னை முழுமையாக ஈடு படுத்திக் கொள்வதில்லை...

அதனால் அந்த உணவில் உள்ள உணர்வு மிக மிக குறைந்து, அந்த உணர்வின் மூலம் பெற வேண்டிய கனலை பெற முடியாமல் போய் உண்கின்ற அந்த உணவு நாசம் ஆகிறது..

ஒரு தோராயமான கணக்கில் பார்த்தால் அந்த உணவில் நூறில் ஒரு பங்கே நாம் கனலை பெறுகிறோம் என்பது மிக மிக ஆச்சரியமான விசயம் மட்டும் அல்ல, மிக மிக உண்மையான விசயமும் கூட...

நாம் வாழ்வில் பாடுபட்டு சேர்த்ததை எப்படி யெல்லாம் விரையம் செய்கிறோம் என்பதை அந்த தோன்றா நிலை அனுபவத்தின் மூலம் நமக்கு நன்கு விளங்க வரும்...

அந்த தோன்றா நிலை அனுபவத்தை பெற்றபின், நாம் உணவு உட்கொள்ளும் போது, அந்த ஒரு செயலை தவிர வேறு ஒன்றும் தோன்றா நிலையில், அந்த உணவினை உட்கொள்ள வேண்டும்..

வேறு ஒன்றும் தோன்றா நிலையில் நாம் அந்த உணவினை உட் கொள்ளும் போது, அந்த உணவில் நூற்றுக்கு நூறு பங்கு கனலை பெற்று, நாம் வலிமை உடையவர்கள் ஆகிறோம்..

இதை விட மிக உயர்ந்த சிறப்பு எங்கு இருக்கிறது ?

நாம் கடினப் பட்டு ஈட்டிய பொருள்களில் உச்ச கட்ட பயனை பெறுகிறோம்..

மேலும் மேலும் பொருள் ஈட்டவேண்டிய அவசியம் இல்லாமல் போய் விடுகிறது..

ஒரு எளிமையான வாழ்க்கையில் ஒரு பெரிய சக்கரவர்த்தியை விட மிக அதிகமான பயன் தூய்ப்பை பெற்று நமது தேடுதல்கள் அறவே நின்று போய் விடுகிறது...

அந்த தோன்றா நிலை அனுபவத்தை தோன்றும் நிலை ஒன்றில் இணைத்து அந்த தோன்றும் நிலை ஒன்றை தவிர வேறு ஒன்றும் தோன்றா நிலையில் செயல் படும் போது அந்த செயல் சித்தி பெறுகிறது..

சித்தி என்பது பூரணத்துவம் என்பதாகும்..

இப்படியாக செய்கின்ற காரியங்கள் எல்லாம் சித்தி பெறுவதால், ஒரு மனிதன் சித்தர் ஆகிறான்.. சித்தர்கள் செய்கின்ற காரியங்கள் எல்லாம் பூரணத்துவமாக இருக்கும்..

சகலமும் சித்தி பெறும் என்பது இப்படி வேறு ஒன்றும் தோன்றா நிலையில் செய்யும் போது மட்டுமே..

இப்படி தோன்றா நிலை அனுபவத்தை தோன்றும் நிலையோடு பொருத்தி வேறு ஒன்றும் தோன்றா நிலையோடு செயல் படுவதையே அன்பு என்கிறோம்..

தோன்றா நிலையாகிய அருள் சக்தியான அகரமும், தோன்றும் நிலையான புவியின் உலகியல் ஒரு செயலும் பு என்ற எழுத்தும் வேறு ஒன்றும் தோன்றா நிலையாகியாகிய ஒரே முடிவான ஒன்றான ன் என்ற கடைசி மெய் எழுத்தானது இணைந்து அன்பு ஆனாது..

இதில் பதினெட்டாம் மெய் எழுத்தான  ன்  என்பதுதான் மிகவும் முக்கியமானதாகும்..

அதுவே வேறு ஒன்றும் தோன்றா நிலையில் ஒரு செயலை ஒரே முடிவாக வைத்துக் கொண்டு அந்த செயலை சித்தி அதாவது பூரணத்துவம் அடையும் வண்ணம் ஆற்றலை தரவல்லது..

சகலமும் சித்தி பெற ஒரு தகுந்த உபாயத்தை அறிந்த நாம் தோன்றா நிலை அனுபவத்தின் அவசியத்தை உணர்ந்து வாசிப் பயிற்சியிலே கற்றுக் கொண்டதை நடை முறைக்கு கொண்டு வந்து சகலத்தையும் சித்தி பெற செய்து சித்தராவோமாக...

தன்மானமுள்ள தமிழர்களே...


நீங்கள் பிரித்தாளும் சூழ்சிக்கு பலியாகாதீர்கள் .

தமிழினத்தின் எதிர் காலத்தை திரையரங்கத்தில் தேடாதீர்கள்.

இனமானத்தை வந்தேறிகளிடம் அடகு வைக்காதீர்கள்.

திராவிடச் சூது உங்களை இருளில் மாய்த்து விடச் செய்யும்.

தனித் தமிழர் தேசியத்தை அறிந்து கொள்ளுங்கள்.

இன பற்று கொள்ளுங்கள்.

மொழிப் பற்று கொள்ளுங்கள்.

எந்த ஒரு தமிழனுக்காக மலையாளிகள் இருவர் மோதிக் கொள்வதில்லை..
கன்னடர்களோ, தெலுங்கர்களோ மோதிக் கொள்வதில்லை..

தமிழ் பேசத் தெரியாத, தமிழினத்தின் மீது ஒட்டும் உறவும் பற்றும் இல்லாத வந்தேரிகளுக்காக நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும். ஏவல் நாய்களா நீங்கள் ?

இன பற்றையும், மொழிப் பற்றையும் வந்தேரிகளிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்..

எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே...
இங்கு பிறப்பினும் அயலான் அயலானே..

பாஜக என்பதே டூபாக்கூர் கட்சி டா...


தமிழினமே சிந்தித்து பார்...


யாதும் ஊரே யாவரும் கேளிர்.. என்ற பொதுஉடமை சிந்தனை மலர்ந்த இந்த மண்ணின் மைந்தர்கள் மறைக்கப்பட்டும், மறக்கப்பட்டும் வரலாற்றிலிருந்து தொலைகபட்டும் வருகின்றனர்...
 
உலகிற்கே வானியல் அறிவியலையும் , வள்ளுவத்தையும், நாகரிகத்தையும் தந்தவர்கள் இன பற்று நீங்கி சாதியால் மதத்தால் பிளவு பட்டு கிடப்பது யாரால்? 

பிராமணியத்தை எதிர்ப்பதாக கோரிக் கொண்டு திராவிடத்தை திணித்து விட்டு தமிழினத்தின் உடமைகளையும் உரிமைகளையும் தமக்குள் பங்கு போட்டு கொண்டவர்கள் தமிழர் அல்லாதவர்களே..
 
சாதி தீண்டாமையை ஒழிக்க துவங்கப்பட்ட சீர்திருத்த இயக்கம் பிராமணர்.. பிராமணர் அல்லாதோர் என்ற வேறுபாட்டை மட்டும் சுட்டிகாட்டி தமிழர் தெலுங்கர் கன்னடர் மலையாளி ஆகியோரை ஒருங்கிணைப்பு செய்தது. 

விளைவு தமிழர்நாடு தமிழர் அல்லாதோரின் வேட்டைக்காடாகி போனது. களையும் பண்பாடும் சீர்குலைந்தது. 

ஆரிய வைசிய மகாசன சங்கம், நாய்டு மகாசன சங்கம், தெலுங்கு மகாசன சங்கம், கேரளா மகாசன சபை, சௌராஷ்டிர அமைப்புகள், போன்றன முளைத்துவிட்டன.. 

ஆட்சி அதிகாரங்களை கைபற்றி கொண்டு தமிழனை ஒட்டு போட மட்டும் அழைக்கிறது இந்தியமும் - திராவிடமும்..
 
தமிழன் ஏமாந்து போனதுக்கு ஒரே காரணம் இந்திய தேசியம் தான்...
 
நாம் தமிழர்கள், நம் நாடு தமிழர்நாடு, திராவிடன் தமிழன் அல்ல என்பதை உணர வேண்டும்..
 
இன பற்று கொள்ளதவரை எழ முடியாது. எழ மறுக்கும் இனம் பிணத்திற்கு சமம்..
 
சினம் கொள்ளமறுத்தால்.. நீயும் ஒரு பிணம்...
 
சாதி மதங்களை கடந்து தமிழர்களாய் ஒன்றிணைவோம்...
 
தமிழர் நாடு தமிழர்கே...

பிரேசில் மர்ம மனிதன்...


பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருத்தர், 14 புத்தகங்கள் எழுதி வைத்துவிட்டு, மர்மான முறையில் காணாமல் போய் விட்டார் என்று ஊரே பரபரப்பா இருக்கு. அப்படி என்ன அந்த மனுஷன் எழுதி வச்சாருனு பார்த்தால், 14 புத்தகம் பூரா ரகசிய குறியீடு மொழில எழுதிட்டு போய்ட்டாரு.

யாரு சாமி இவரு?

அவர்  பெயர் புருனோ (Bruno Borges) , ஒரு மாதம் முழுதும், ஒரே அறைக்குள் இருந்து தன் கைப்பட 14 புத்தகம் மட்டும் இல்லாமல், சுவர் எங்கும் ரகசிய குறியீட்டில் எழுதியுள்ளார். இதில், சில வரைபடங்களை அடங்கும்.


மேலும் புதிர்போடும் வகையில், இத்தாலிய தத்துவவாதி ஜியோர்டனோ ப்ரூனோ (Giordano Bruno) என்பவரின் சிலை ஒன்றை செய்து வைத்துள்ளார், அதன் விலை 2500 டாலர்கள்.

அறைக்குள் புத்தகங்கள் யாவும் நேர்த்தியாய் அடிக்கிவைக்க பட்டு இருந்தன. வீட்டில் உள்ளோரை கேட்டால், எப்படி சிலை வந்தது என்று தெரியவில்லை. அவர் அம்மா, என் மகன் புத்தகம் எழுதுகிறேன், உலகை நல்வழியில் மாற்றிடும் புத்தகம் அவை என்று கூறினான், என்றார்.

எல்லாம் முடித்துவிட்டு, மார்ச் 27 அன்று மாயமாகி போனார்.


சுவரில் அவரும், உடன் ஒரு வேற்றுகிரக வாசியும் உள்ளது போல் புதிர் ஓவியம் ஒன்றும் தீட்டப்பட்டு உள்ளது.

சுவரெல்லாம் எழுதிவச்சிருக்காரு, அட மனுஷன் ஒரு இடம் விடவில்லை.


விடை தேடி, தலை பித்து கொண்டு வீட்டாரும் , காவல் துறையும்.

வேற்றுகிரக வாசிகளோடு தொடர்பு படுத்துவதா? எழுதியதை எப்படி மொழிபெயர்ப்பது என்ற பல குழப்பங்கள்...

இந்தியமும் - திராவிடமும் நமக்கு வேண்டாம் தமிழா... இரண்டுமே தமிழின விரோத தீய சத்திகள்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 15...


ஆவியுலகைத் தொடர்பு கொள்ள முடிந்த மனிதர்கள் அந்தக் காலத்தில் மட்டுமல்ல இந்தக் காலத்திலும் உலகெங்கும் கணிசமாக இருக்கின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன.

சமீபத்தில் ஆழ்மன சக்திகளைப் பற்றி நிலாச்சாரல் இணைய இதழின் ஆசிரியரும், எழுத்தாளருமான நிலா (நிர்மலா) அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது அவரே ஆவிகளைத் தொடர்பு கொள்ள முடிந்த ஒரு 'மீடியம்' என்று சொன்ன போது எனக்கு வியப்பாக இருந்தது. இங்கிலாந்தில் பொறியாளராகப் பணியாற்றி வரும் அவரிடம் அவரது அனுபவங்களைக் கேட்டேன்.

ஒரு முறை இங்கிலாந்தில் ஒரு 'மீடியம்' மூலமாக தன் இறந்து போன மாமியாரைத் தொடர்பு கொள்ள முடிந்தது அவருடைய ஆவியுலக முதல் அனுபவம் என்று சொன்னார். அதில் அவருக்கு கிடைத்த தகவல்கள் நம்பிக்கை ஏற்படுத்துவனவாக இருக்கவே அவருக்கு அது போன்ற விஷயங்களில் ஆர்வம் அதிகரித்தது.

அந்த ஆர்வமும், ஈடுபாடும் விரைவிலேயே அவரையும் ஒரு 'மீடியமா'க்கியது. எதிர்பாராத விதங்களில் ஆவிகள் தங்களுக்கு நெருங்கியவர்களுக்குத் தகவல்கள் தெரிவிப்பது மட்டுமல்லாமல் உதவவும் செய்கின்றன, சில அற்புதங்களையும் நிகழ்த்துகின்றன என்பதற்கு சில சுவாரசியமான நிகழ்ச்சிகளை அவர் உதாரணமாகக் கூறினார். அதில் ஒன்று..

ஒரு சமயம் எனது தோழியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது இறந்து போன அவளது மாமியார் அவளது வயிற்றைத் தொட்டு வலி போன்ற உணர்ச்சியைக் காட்டினார். அவளிடம் வயிற்றில் வலி இருக்கிறதா என நான் கேட்டபோது அவள் ஆச்சர்யத்துடன் ஒப்புக் கொண்டாள். பின் அவளை நிறைமாத கர்ப்பிணியாக என்னால் காணமுடிந்தது. அவளிடம் அதைக் கூறியபோது, கருப்பையில் கட்டிகள் இருப்பதால் கருவுறுவது சாத்தியமல்ல என மருத்துவர்கள் கூறியதை வருத்தத்துடன் கூறினாள். ஆனால் அவளது மாமியார் அவள் வயிற்றிலிருந்து எதையோ அப்புறப்படுத்தி மீண்டும் அவள் நிறைமாத கர்ப்பிணியாகத் தோன்றும் காட்சியை எனக்குக் காட்டினார்.


சில வாரங்களில் அவள் மருத்துவ பரிசோதனைக்குச் சென்றபோது அவளது கருப்பையில் கட்டிகள் இல்லாதது கண்டு மருத்துவர்கள் ஆச்சர்யம் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் கருவுறுவதற்கான சாத்தியக் கூறுகளில்லை என்றே கூறி இருக்கிறார்கள். ஆனால் சில மாதங்களிலேயே அவள் கருவுற்றாள். அந்தக் குழந்தைக்கு இப்போது மூன்று வயதாகிறது. அவள் தன் தாயின் கருப்பையில் உருவாவதற்கு முன்பே எனக்குப் பரிச்சயமானதால் எங்களுக்குள் ஒரு விசேஷப் பிணைப்புண்டு.

கருப்பையில் இருந்த கட்டிகள் மறைந்ததற்கும், கருவுறுதலே சாத்தியம் இல்லை என்ற பெண் கருவுற்றதற்கும் மருத்துவர்களிடம் விஞ்ஞான ரீதியான பதில்கள் இல்லை என்பதனை இங்கு நாம் கவனிக்க வேண்டும்.

ஆவியுலகில் இருந்து தகவல்கள் பெற முடிந்தது அதிசயம் என்றால் அவற்றை அவர்களுடைய குரலிலேயே கேட்க முடிவது பேரதிசயம் அல்லவா? அதையும் கேட்க வைத்தார் லெஸ்லி ப்ளிண்ட் (1911-1994) என்ற ஆங்கிலேயர். வின்ஸ்டன் சர்ச்சில், பெர்னார்ட் ஷா, மகாத்மா காந்தி போன்ற பிரபலங்கள் உட்பட பலருடைய ஆவிகள் அவரவர் குரலில் பேசக் கேட்ட போது பலரும் அதிசயித்தனர்.

அவரை ஆழ்மன ஆராய்ச்சிக் கழகம் போன்ற அமைப்புகளும், சண்டே எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகளும் தனிமனித ஆராய்ச்சியாளர்களும் பல வழிகளில் ஆராய்ந்தார்கள். லெஸ்லி ப்ளிண்ட் இருட்டான அறைகளில் நிகழ்ச்சிகளை நடத்தினார். அவர் குரலின் மூலம் ஆவிகள் பேசுவதில்லை. அவர் தலைக்கு மேல் இருட்டில் இருந்து பேசுகின்றன என்று அவர் தெரிவித்தார். மற்றவர்கள் போல் அவர் அரை மயக்க நிலைக்கும் செல்லவில்லை.

இதில் ஏதாவது தில்லுமுல்லு உள்ளதா என்றறிய ஆராய்ச்சியாளர்கள் அவர் வாயை துணி வைத்து உறுதியாகக் கட்டிப்போட்டார்கள். அதோடு சிலர் அவரை நாற்காலியோடு கட்டி அவர் நகரவோ, குனியவோ முடியாதபடி பார்த்துக் கொண்டார்கள். ஒரு ஆராய்ச்சியாளர் அவ தொண்டையில் ஒரு கருவியை வைத்து அதில் சின்ன அதிர்வு வந்தாலும் தெரியும்படி பார்த்துக் கொண்டார்.


இன்னொருவர் இன்னும் ஒருபடி மேலே போய் இளஞ்சிவப்பு திரவத்தை அவர் வாயில் ஊற்றி பின் வாயில் ப்ளாஸ்திரி போட்டு கட்டிப் பார்த்தார். எல்லாம் முடிந்த பிறகு அதே அளவு இளஞ்சிவப்பு நீரை உமிழ்ந்து அந்த ஆராய்ச்சியாளரை லெஸ்லி ·ப்ளிண்ட் திருப்திப்படுத்தினார். இத்தனைக்குப் பின்னும் ஆவிகள் வித விதமான குரல்களில் தங்கள் தகவல்களையும், கருத்துகளையும் சொன்னதை பார்வையாளர்கள் கேட்டனர். இரண்டு ஆராய்ச்சியாளர்கள் 1955 முதல் 1970 வரை 500 நிகழ்வுகளை டேப்பில் பதிவு செய்து வைத்திருக்கின்றனர்.

அந்த குரல்களில் ஒருசில குரல்கள் உயிரோடிருக்கும் போது கேட்ட குரல்களோடு ஒத்துப் போகவில்லை என்று ஒருசில விமரிசனங்கள் இருந்தாலும் பெரும்பாலான குரல்களும், சொன்ன செய்திகளும் இறந்து போன மனிதர்களின் குரல்களுக்கும், தன்மைகளுக்கும் ஒத்துப் போனதாக ஆராய்ச்சியாளர்களும், சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்களும் கருதுகின்றனர்.

உதாரணத்திற்கு ப்ளிண்ட் மூலமாக ஜார்ஜ் பெர்னார்ட் ஷா பேசக் கேட்ட அவருடைய நண்பர், கேட்ட குரலும் சொன்ன விதமும் பெர்னார்ட் ஷாவினுடையதாகவே இருந்தது என்று ஒத்துக் கொண்டார்.

லெஸ்லி ப்லிண்டின் மறைவுக்குப் பின் ஒரு பிரபல பத்திரிக்கையாளரான அலெக்சாண்டர் வாக்கர் சொன்னார். நான் ஒரு முறை அவருடைய நிகழ்ச்சி ஒன்றிற்கு சந்தேகத்தோடு சென்றிருக்கிறேன். அப்போது எனக்கு மிகவும் நெருங்கிய ஒருவரின் தந்தையின் ஆவி ப்ளிண்ட் மூலமாக என்னிடம் பேசியது. நான் அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கக்கூடிய பல கேள்விகள் கேட்டேன். சொன்ன குரலும், சொன்ன விஷயங்களும் சரியாகவே இருந்தன என்பதை நான் ஒத்துக் கொண்டு தானாக வேண்டும்.

கற்பனைக்கும் எட்டாத அதிசய நிகழ்வுகள் அல்லவா இவை..

மேலும் பயணிப்போம்...

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்...


அருகம்புல் பொடி - அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி.

நெல்லிக்காய் பொடி - பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் சி உள்ளது.

கடுக்காய் பொடி - குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

வில்வம் பொடி - அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது.

அமுக்கலா பொடி - தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

சிறுகுறிஞான் பொடி - சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

நவால் பொடி - சர்க்கரை நோய், தலை சுற்றுக்கு சிறந்தது.

வல்லாரை பொடி - நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

தூதுவளை பொடி - நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

துளசி பொடி - மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

ஆவரம்பூ பொடி - இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

கண்டங்கத்திரி பொடி - மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

ரோஜாபூ பொடி - இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

ஓரிதழ் தாமரை பொடி - ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும். வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.

ஜாதிக்காய் பொடி - நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

திப்பிலி பொடி - உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

வெந்தய பொடி - வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

நிலவாகை பொடி - மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

நாயுருவி பொடி - உள், வெளி, நவ மூலத்திற்க்கும் சிறந்தது.

கறிவேப்பிலை பொடி - கூந்தல் கருமையாகும். கண் பார்வைக்கும் சிறந்தது.

வேப்பிலை பொடி - குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

திரிபலா பொடி - வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

அதிமதுரம் பொடி - தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

துத்தி இலை பொடி - உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

செம்பருத்திபூ பொடி - அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

கரிசலாங்கண்ணி பொடி - காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

சிறியாநங்கை பொடி - அனைத்து விஷக் கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

கீழாநெல்லி பொடி - மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

முடக்கத்தான் பொடி - மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

கோரைகிழங்கு பொடி - தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

குப்பைமேனி பொடி - சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

பொன்னாங்கண்ணி பொடி - உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

முருங்கைவிதை பொடி - ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பொடி - பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

பாகற்காய் பவுட்ர் - குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைத்தண்டு பொடி - சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

மணத்தக்காளி பொடி - குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சித்தரத்தை பொடி - சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

பொடுதலை பொடி - பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

சுக்கு பொடி - ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆடாதொடை பொடி - சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

கருஞ்சீரகப் பொடி - சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பொடி - நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

வெள்ளருக்கு பொடி - இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

நன்னாரி பொடி - உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

நெருஞ்சில் பொடி - சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

பிரசவ சாமான் பொடி - பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

கஸ்தூரி மஞ்சள் பொடி - தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

பூலாங்கிழங்கு பொடி - குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

வசம்பு பொடி - பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

சோற்று கற்றாலை பொடி - உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

மருதாணி பொடி - கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

கருவேலம்பட்டை பொடி - பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்...

திராவிடம் மற்றும் இந்தியத்தின் பேரில் தமிழர் இழந்த மண்...


ஆந்திரத்தில் தமிழர் இழந்த மண்..

·         சித்தூர் வட்டம்
·         திருப்பதி (சந்திரகிரி) வட்டம்
·         திருக்காளத்தி வட்டம்
·         பாமனேறு வட்டம்
·         குப்பம் ஜமீன் பகுதி

கர்நாடகத்தில் தமிழர் இழந்த மண்..

·         கோலார் தங்க வயல்
·         பெங்களூரு தண்டுப்பகுதி
·         கொல்லங்கோடு வனப்பகுதி
·         பாலக்காடு வட்டம்
·         கொள்ளே காலம் வட்டம்

கேரளத்தில் தமிழர் இழந்த மண்..

·         தேவிகுளம் வட்டம்
·         பீர்மேடு வட்டம்
·         செங்கோட்டை வனப்பகுதி
·         நெய்யாற்றங்கரை வட்டம்
·         நெடுமாங்காடு கிழக்குப் பகுதி

இலங்கையிடம் தாரைவார்க்கப்பட்ட தமிழர் நிலம் -   கச்சத்தீவு..

இந்தியத்தாலும் திராவிடத்தாலும் நாம் இழந்தது பார்த்தாயா தமிழா…. இன்னுமா நீ இந்தியன் என்றும் திராவிடன் என்றும் இல்லாத ஒன்றை சொல்லி இருப்பதையும் இழக்கப் போகிறாய்...

வைகோ நாயூடு கலாட்டா...


கொள்கையாவது, மன்னாங்கெட்டியாவத...

பெட்டி கொடுதால் எந்த வேஷமானாலும் போடுவேன்...

சித்திரை திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...


ஆகாயத்தில் ஒரு ஒளி -15...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தொடரானது இனி உலகத்தின் உண்மை நிலைகளை மக்களுக்கு எடுத்துரைக்க போகின்றது. மக்களின் மன மாற்றமே யுக மாற்றத்திற்கான திறவு கோல் என்று கடவுள் கோட்பாடுகள் கூறுகின்றன.

உலகத்தின் படைப்பில் இயற்கை அழகானது, அதில் ஆபத்தும் உண்டு, ஆனந்தமும் உண்டு, ஆரோக்கியமும் உண்டு, ஆனால் அதில் உள்ள உண்மைகளை மக்கள் இன்னும் அறியாமல் உள்ளனர், ஆழத்தில் பல இரகசியங்கள் உண்டு. ஆழமென்பது இங்கு கடலின் ஆழத்தை குறிக்கும்.

இந்த உலகத்தில் திடீரென்று காணமல் போன அனைத்தும் வானத்தில் மறைத்து வைக்கப்படவில்லை. ஆனால் கடலின் ஆழத்தில் பாதுகாக்கப்பட்டு உள்ளது என இன்றைய 15 –ம் தீர்க்க தரிசனம் ஒரு உண்மையை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

கடலின் ஆழத்தை கணக்கிடாத மனிதனுக்கு கண்ணுக்கு புலப்படாத சக்திகளைப் பற்றி நிச்சயம் அறிந்து கொள்ள முடியாது என 15-ம் தீர்க்க தரிசனம் கூறுகிறது.


கண்ணுக்கு புலப்படாத ஆனால் மக்களுக்குள் மக்களாக மாறி பல வினோத சக்திகள் வாழ்ந்து வருவதாக இந்த 15-ம் தீர்க்க தரிசனம் ஒரு வியப்பான செய்தியினை இங்கு வெளியிடுகிறது.

மனிதனுக்குள்ளே பல வியப்பான ஆற்றல்கள் மறைந்துள்ளன என்றும், அத்தகைய சக்திகளை மனிதன் இன்னும் பயன்படுத்தும் நுணுக்கங்களை அறியவில்லை என்றும், அத்தகைய சக்திகளை மனிதனுக்கு அருகே வாழும் சில கண்னுக்கு புலப்படாத மகாசக்திகள் பயன்படுத்தி வருகின்றன என்றும் இது வெகு சீக்கிரத்திலேயே விஞ்ஞானத்தால் அறியப்படும் என்றும் 15-ம் தீர்க்க தரிசனம் மேலும் அதன் உண்மைகளை எடுத்துக் கூறுகிறது.

மனிதன் தான் வாழும் காலக்கட்டத்தில் இதன் உண்மைகளை முழுமையாக உணர்ந்தும், உணராமலும் வாழ்ந்து சென்றதாகவும், அக்கால ஞானிகளால் இத்தகைய சக்திகளை அவர்கள் இனம்கண்டு அதனை பயன்படுத்தி வந்தனர் என்றும், ஆனால் இக்கால மனிதர்கள் இதனை அறியாமல் வாழ்ந்து வருகின்றனர் என கடவுள் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

15-ம் தீர்க்க தரிசனம் இனி நடக்கும் பல வினோத சம்பவங்களை பற்றி இங்கு சில குறிப்புகளாக வெளிப்படுத்துகின்றது.

அவைகள் :

தென் பசிபிக் கடலோரமாக ஒரு விந்தையான வினோத உருவங்களை இனி மக்கள் காண்பார்கள் என்றும், அதன் பிறகே இவ்வுலகம் விழிப்படையும் என்றும்,

அப்பொழுது மதம் சார்ந்த பல்வேறு அமைப்புகள் பல கட்டுகதைகளை அவிழ்த்து விடுவார்கள் என்றும் 15-ம் தீர்க்க தரிசனம் மேலும் விளக்கம் தருகிறது.


கடலுக்குள் உள்ள அந்த அதிசயங்களை வரும் சுனாமி பேரலைகளே உலகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டப்போவதாக மேலும் சில உண்மைகளை இந்த 15-ம் தீர்க்க தரிசனம் எடுத்துக் கூறுகிறது.

தமிழக கல்குவாரி ஒன்றில் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு இரகசியம் தென்படும் என்றும், அதனை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றுமின்றி அந்த இடத்திற்கு அது விஞ்ஞானிகளையும் வரவழைக்கும் என்று மற்றொரு தீர்க்க தரிசனம் ஒரு உண்மையை நமக்கு எடுத்துக் கூறுகிறது.

மக்களின் மனதில் நீங்காத ஒரு அற்புத நிகழ்வு கூடிய விரைவில் நடக்கும் என்றும், அது தென் தமிழகத்தில் ஒரு சித்தரால் நடக்க உள்ளதாக மற்றொரு தீர்க்க தரிசனம் இங்கு ஒரு குறிப்பை தருகின்றது.

அற்புதங்கள் என்பவை மந்திரங்களையோ (அ) மனிதர்களையோ சார்ந்தது அல்ல என்றும்,

அது இறைவனுக்கு மட்டுமே உரியவை என்றும், அது மனிதர்களை சார்ந்து நடக்கும் பொழுது மக்களால் அது கவர்ந்திழுக்கப்படுகிறது என்றும்,

அது போன்ற ஒரு நிகழ்வு சேலத்தின் மையப்பகுதியில் விரைவில் நடக்க உள்ளதாக மற்றொரு தீர்க்க தரிசனம் மற்றுமொரு குறிப்பை தருகிறது.


திருவண்ணாமலை, திருப்பதி, சேலம், கடலூர், குமரி மாவட்டம், தருமபுரி, காஞ்சிபுரம், மயிலாடுதுரை, பழனி, ஊட்டி இவையாவும் குறிப்பில் கொள்ள வேண்டிய ஊர்கள் என்றும், இங்கிருந்து பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கும் என்றும்,

அரசு இயந்திரம் மிக வேகமாக செயல்பட வேண்டும் என்றும் இறை தீர்க்க தரிசனம் ஒன்று இங்கு ஒரு குறிப்பை தருகிறது.

கர்நாடாக எல்லையில் சில வியப்பூட்டும் ஒளி பிழம்பு நிகழ்வுகள் நடக்க உள்ளதாகவும், மக்களுக்கு இது அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் தரும் என்று மற்றொரு தீர்க்க தரிசனம் கூறுகிறது.

மேலும் இது மிக, மிக அருகில் நடக்கும் நிகழ்வு என்று அந்த தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.

காலத்தால் அழியாத காவியமான கண்ணகியின் கதைக்குள் உள்ள ஒரு விஞ்ஞான உண்மை கேரளத்தின் எல்லையில் கண்டறிவார்கள் என்றும், இது வியக்கதக்கவகையில் பிரமிப்பை ஏற்படுத்தும் என்றும் மற்றொரு தீர்க்க தரிசனம் கூறுகிறது.

கன்னியாகுமரி கடலில் இருந்து ஒளியால் ஆன ஒரு உருவம் எழுந்து கடல் நடுவே நடந்து செல்லும் அதிசயத்தை சுற்றுலா பயணிகளால் படம் பிடிக்கப்படும் என்றும்,

அது பல சர்ச்சைகளை அப்பொழுது ஏற்படுத்தும் என்றும் மற்றொரு தீர்க்க தரிசனம் கூறுகிறது. இதுவும் சமீபமாக நடக்க கூடிய ஒரு செயல் என்று அந்த தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகிறது.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

இந்திய விமானங்களில் இனி flight mode-க்கு பதிலாக வருகிறது WIFI mode...


இராவண்ணன் தமிழன்...


இரா – இரவு..

வண்ணன் – நிறம் பொருந்தியவன்.

இரவு நிறமான கருநிறம் கொண்டவன் என்று பொருள்.

பெயரிலேயே தமிழன் என்று உணர்ந்தாலும் சில மூடர்களுக்கு இராவணனை தமிழன் என்று உணர முடியவில்லை.

ராவணனைப் பற்றி பேச முற்படுகின்ற போது, முதலில் அவன் இனம் எது வென சொல்லிவிடுதல் நலம்.

ஒரு வலைப்பதிவர் ராவணணை சிங்கள அரசன் எனச் சொல்லியிருந்தார். இன்னொரு வலைப்பதிவர் ராவணனை பிராமணன் எனச் சொல்லியிருந்தார்.

ஆனால் நான் மதிக்கும் ஜெயமோகன் தனது வலைப்பூவில் காளிவிளை ராஜா’ எழுதிய சீரிய ஆய்வுக்கட்டுரை பற்றி குறிப்படும் போது, விளவங்கோடு வட்டம் மருதங்கோடு பரக்குன்று, அகத்தீஸ்வரம் வட்டம் தெக்குறிச்சி போன்ற ஊர்களில் அதற்கான தடயங்கள் உள்ளன.

இங்கெல்லாம் இராவணனை தங்கள் குலமுன்னோராக போற்றும் மரபு சில குடும்பத்தாரிடம் இருந்து வருகிறது…

இராவணானால் எழுதப்பட்ட தமிழ்ச் சுவடிகள் சிலவும் இவர்களிடம் இன்றளவும் உள்ளன என்கிறார்.

ஆதாரத்தின் சுருக்கம்..

1.குமரிமாவட்டத்தில் உள்ள நாடார் அல்லது சான்றோர் சாதியினரே ராவணனின் குலத்தவர்.

2. சான்றோர் சாதியில் முந்நூற்றுவர் என்ற பிரிவு உள்ளது.ராவணனின் படைப்பிரிவை முந்நூற்றுவர் என கம்பன் சொல்கிறார். அது இவர்களே.

3. ராவணன் சீதையை சிறைவைத்த இடம் குமரிமாவட்டத்தில் உள்ள மிஞ்சிறை என்ற ஊரே. இது உண்மையில் ராவணப் படையினரான சான்றோர் சாதியால் முன்சிறை என்று சொல்லப்பட்ட இடம்.

4. சான்றோர்கள் கேரளத்தில் ஈழவர் என்று சொல்லப்படுகிறார்கள். அவர்கள் ஈழத்தில் அதாவது ராவணனின் இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் இது.

5.ராவணன் மனைவி மண்டோதரி சான்றோர் குலத்தவள். அவள் அப்பா மயன். இவர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டத்தைச் சார்ந்தவர்.

6. இந்த மயன் மாபெரும் பொறியியல் மேதை. ஆகாயவிமானம் (வானூர்தி) போன்றவற்றைக் கண்டு பிடித்தவர். மயனச்சிற்பி என்றும் இவருக்கு பெயர் உண்டு. ஐந்திறம் போன்ற அரிய நூல்களை இவர் எழுதினார்.

7. எகிப்து பெரு முதலிய நாடுகளில் உள்ள பெருமேடுகள் [பிரமிடுகள்] இவரால் கட்டப்பட்டவையே.

8. திருவிதாங்கூர் மன்னர்கள் சான்றோர் குலத்தவரே. ஆதாரங்களாக புலவர் குழந்தை எழுதிய ராவண காவியம், அரக்கர் நூல் [ஓலைச்சுவடி] கோயிலூட்டம்மை வழிபாடு -இராவணேசுவரன் பூசை [பதிப்பாசிரியர் சு.செல்வகுமார் 2004]

குமரிமாவட்ட எழுத்தாளர்கள் யார் எவர் -மயன் மற்றும் திரு பாஸ்கரன் வைத்தியர் நேர்காணல் ஆகியவை சுட்டப்பட்டுள்ளன.

ராவண காவியம் - ராவணன் தமிழன் என உறுதி படக் கூறவே ராவண காவியம் இயற்றப்பட்டது.

கம்பனின் சொல் வழக்குகளில் மயங்கியதால் தமிழர்கள் பலருக்கும் இக் காவியம் சென்றடையவில்லை. கடவுள் மறுப்பு கொள்கையில் தீவிரமாக இருக்கும் திராவிடமும்  இதை கவணத்தில் கொள்வதில்லை..

இதன் சாராம்சத்தில்…

இரண்டாம் கடல்கோளுக்குப் பின்னர்த் தோன்றிய இலங்கையிலிருந்து தமிழகத்தை ஆண்டு வந்தான். தமிழர் இனத் தலைவனாகிய விச்சிரவாவு. அவன் மனைவி கேகசி. அவர்களுக்கு இராவணன், கும்பகன்னன், பீடணன் என்ற மூன்று ஆண்மக்களும் காமவல்லி என்னும் ஒரு பெண்மகளும் பிறந்தனர். தன் தந்தை விச்சிரவாவுக்குப் பின்னர் இராவணன் தமிழகத்தை ஆண்டான்.
எனக் குறிப்படப்பட்டுள்ளது.

பத்து தலைக் காதல் – எண்சான் உடம்பிற்கும் தலைதான் பிரதானம் என்பது முன்னோர்களின் மொழி. ஒரு தலையுள்ளவனின் அறிவினை விட பத்துதலை உல்லவனின் அறிவு எப்படியிருக்கும் எண்ணிப் பார்க்க வேண்டும். பல கலைகளிலும் வல்லவனான ராவணனின் பெருமை உணர்த்தவே ராவணனுக்கு பத்து தலை உருவக் கதை சொல்லப்படுகிறது.

தமிழர்களின் ஆதித் திருமணங்கள் எல்லாமே காந்தர்வ திருமணங்கள் தான். ராவணன் தமிழனல்லவா, எனவே அவளை காந்தர்வ மணம் செய்ய விருப்பம் கொண்டிருக்கின்றான்.

காந்தர்வ திருமணம் என்றால் காதல். இந்தக் கால திரைப்படங்களில் கதாநாயகியை துரத்தி துரத்தி காதல் செய்யும் கதாநாயகர்களைப் போல சீதையை தூக்கிக் கொண்டு போய் காதல் செய்திருக்கிறான் ராவணன்.

சீதையை கவர்ந்த காரணம்..

இராமன் ஒரு நாள் தனித்துலாவிய காமவல்லியைக் கண்டு அவள்பால் காமுற்றான். அவள் கையைப் பிடித்திழுத்து வற்புறுத்தினான். அவனுடைய விருப்பத்திற்கு உடன்படாததால் இலக்குவனால் அவள் உறுப்புகள் அறுக்கப்பட்டன. காமவல்லி இறந்தாள்.

தன் தங்கை அழிந்த செய்தியை இராவணன் தூதரால் அறிந்தான். உடனே அவன் விந்தம் சென்று காமவல்லி வளர்த்த மானை விட்டு இராமலக்குவரைப் பிரிக்கச் செய்தான். வீரர்களைக் கொண்டு அவர்களை வளைத்துக் கொள்ளுமாறு செய்து சீதையைக் கவர்ந்து சென்று அவளைப் போற்றினான்.

ராமனை விடவும் ராவணனே உயர்ந்தவன்.. பல விதமான கலைகளிலும், அறிவிலும் ராமனை விடவும் ராவணனே உயர்ந்தவன். சீதை விசயத்தை மட்டும் எடுத்துக் கொண்டால்…

சீதையை தூக்கி வந்தானே ஒழிய அவளை வன் புணர்ச்சி செய்யவில்லை.
ராமனோ ராவணனுடன் இருந்ததிற்காக சீதையை தீக்குளிக்க செய்தான்.

பின்பு ஒரு ஒற்றன் வந்து ஊரே ராமனை ஏசுவதாச் சொல்ல சீதை காட்டில் கொண்டு போய் விட்டுவர இலக்குமணை அனுப்பினான். இதுவே ராவண காவியம் சொல்லும் உண்மை...

ஐடி தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக சிடிஎஸ் அறிவிப்பு – ஐடி தொழிலாளர்கள் அமைப்புகளின் ஒருங்கிணைந்த பிரச்சார இயக்கம்...


சர்வதேச ஐடி நிறுவனம் காக்னிஸன்ட் டெக்னாலஜிஸ் சொல்யூஷன்ஸ்(சிடிஎஸ்) அறிவித்துள்ள பணிநீக்கத்திற்கு (Layoff) எதிராக KPF (Knowledge Professionals Forum), FITE (Forum for IT Employees) மற்றும் NDLF IT Employees Wing ஆகிய மூன்று அமைப்புகள் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னையில் பல்வேறு ஐடி பார்க் வளாகங்கள் முன்னர் ஏப்ரல் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் அவர்கள் துண்டுப் பிரச்சார இயக்கம் நடத்தினர்.

ஓஎம்ஆர் சாலையில் உள்ள டைடல் பார்க் எதிரில் தொழிலாளர்கள் வெளியே வரும் மாலை வேளையில் இந்த மூன்று இயக்கங்களின் போராளிகள் துண்டுப் பிரச்சாரங்களை விநியோகித்தனர். சிடிஎஸ் அறிவித்துள்ள லேஆஃப் சட்டவிரோதப் பணிநீக்கம் என்றும் கட்டாயப் பணிநீக்கம் என்றும் அவர்கள் ஐடி தொழிலாளர்களுக்கு வலியுறுத்தினர்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இதே போல் பலத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது. அப்போது தன்னுடைய நிறுவனத்தின் செயல்திறன் குறைந்த தொழிலாளர்களை வெளியேற்றுவதாக டிசிஎஸ் அறிவித்தது. அதே பாணியில், சரியாக செயல்படாத தொழிலாளர்களை நிறுவனத்தில் இருந்து வெளியேற்ற உள்ளதாக சிடிஎஸ் அறிவித்துள்ளது.

இதனால் 10000 வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் பிசினஸ் ஸ்டான்டர்ட் எனும் பத்திரிக்கை எழுதிய கட்டுரையில் தொழிலாளர் பணிநீக்கத்திற்கு முதலீட்டார்களுடன் சிடிஎஸ் போட்டுள்ள ஒப்பந்தம் தான் காரணம் என்பது தெளிவாகி உள்ளது.

எலியட் மேனேஜ்மென்ட் எனும் முதலீட்டாருடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் நிறுவனத்தின் Non GAAP Operating Margins 19.5 சதத்தில் இருந்து(2016) 2019க்குள் 22 சதம் வரை உயர்த்த நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. செலவுகளை கட்டுப்படுத்தல், செயல்பாட்டுத் திறனை அதிகரித்தல், மற்றும் இயந்திரமாக்கத்தை அதிகரித்து தொழிலாளர்களை குறைத்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் லாபத்தை அதிகரிக்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதனால் தன்னுடைய தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 2.5 சதம் வரை குறைக்க முயற்சிக்கின்றது.

சிடிஎஸ் நிறுவனத்தில் சேர்ந்து ஒரு மாதமாக வேலை செய்யும் சிலப் பெண் தொழிலாளர்கள் நிர்வாகத்தின் நடவடிக்கைப் பற்றி ஓரளவு அறிந்திருந்தனர். செயல்திறன் குறைவாக உள்ள தொழிலாளர்களே பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தங்களுடைய மேலதிகாரிகள் கூறினர் என்றும், ஒவ்வொரு ப்ராஜக்டிலும் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களும் 1, 2, 3, 4 என வகைப்படுத்தப்படுவர் எனவும், 4வது நிலையில் உள்ள தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அவர்கள் கூறினர்.

இப்பணிக்கு வரும்போதே இத்துறையில் பணிப்பாதுகாப்பு இல்லை என்று அறிந்துள்ளதாகவும், தங்களுக்கு இக்கதி நேராது என்று நம்புவதாகவும் அவர்கள் கூறினர்.

தொழிலாளர்களின் இக்கூற்று நிர்வாகத்தின் கூற்றை பிரதிபலிப்பதாகவே உள்ளது. 2014ல் டிசிஎஸ் தொழிலாளர்களை பணிநீக்கம்(25000 தொழிலாளர்களை டிசிஎஸ் பணிநீக்கம் செய்துள்ளதாக சில செய்திகள் கூறின) செய்த போதும், இவ்வாறு திறனுடன் செயல்படாத தொழிலாளர்களை விருப்பமற்ற பணிநீக்கம்(involuntary attrition) செய்வதாக டிசிஎஸ் நிறுவனம் கூறியது. ஆனால் 5-8 வருடங்களுக்கு மேல் அனுபவம் மிக்கத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து அவர்களுக்கு பதிலாக அனுபவமில்லா புதுத் தொழிலாளர்களை குறைந்த ஊதியத்தில் வேலைக்கு அமர்த்துவதே டிசிஎஸ் நோக்கம் என ஒரு உண்மை அறியும் குழுவின் விசாரணை முடிவு செய்தது.

டிசிஎஸ் தொழிலாளர்கள் பணிநீக்கம் ஐடி துறைகளில் உள்ள மோசமான பணி நிலைமைகளை வெளிச்சம் போட்டு காட்டியது. இவற்றை எதிர் கொள்ள தொழிலாளர்களின் கூட்டு நடவடிக்கை தேவை என்பது தெளிவாகியது.

அதை அடுத்து ஐடி தொழிலாளர்களின் பிரச்சனைகளை எடுத்துரைத்து அவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சில அமைப்புகள் ஈடுபட்டனர். இதில் ஒன்றான FITE இயக்கத்தின் பிரதிநிதி வினோத், நிர்வாகம் தொழிலாளர்கள் பிரச்சனையை தனியார் பிரச்சனையாக்க முயற்சிக்கின்றனர் எனக் கருதுகிறார். ‘ப்ராஜக்ட் இலக்கை பற்றிப் பேசும் போதும் மட்டும், கூட்டு முயற்சி என அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் தொழிலாளர் பிரச்சனை என்றால் அது தனிப் பிரச்சனை என்ற ரீதியில் அணுகுகின்றனர். இதை பயிற்சி காலம் முதல் அவர்கள் உளவியல் ரீதியாக தொழிலாளர்களுக்கு கற்பிக்கின்றனர்’ என அவர் கூறினார். தாங்கள் பணிக்கு சேரும் போது தங்கள் ஊதியத்தை மற்றத் தொழிலாளரகளுடனோ மற்றவர்களுடனோ பகிர மாட்டோம் என ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டுள்ளதாக சிடிஎஸ் இளம் தொழிலாளர்களும் உறுதி செய்தனர்.

சிடிஎஸ் நிறுவனத்தில் பணி புரிந்து வெளியேறிய 5 வருடம் அனுபவம் மிக்க ஒரு தொழிலாளர், சிடிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் தனது தோழர்கள் பலர் மிகவும் பதட்டமாக உள்ளதாகவும் ஒரு தோழர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பணிநீக்கம் செய்யப்பட்டவரை அவரது மேலதிகாரி அழைத்து உங்களது செயல்திறன் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை அதனால் நீங்கள் ஒரு மாதத்தில் இங்கிருந்து செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் பேச்சு வார்த்தைக்கு இடமேயில்லை என அவர் கருதினார். சிடிஎஸ் நிறுவனத்தில் கொடுக்கப்படும் ஊதியம் செயல்திறன் அடிப்படையில் கொடுக்கப்படுவதால் பலருக்கு ஊதியம் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஐடி துறையின் பணிநீக்கத்திற்கான அடிப்படை அணுகுமுறை பற்றி KPF தலைவர் வெல்கின் இவ்வாறு கூறுகிறார்: தொழில்நுட்பத்தில் பல்வேறு முன்னேற்றங்கள் வெகுவேகமாக மாறி வருகின்றன. அதனால் பழைய தொழில்நுட்பத்தை அறிந்த தொழிலாளர்கள் தேவையில்லை என நிர்வாகம் அவர்களை வெளியே தள்ளுவது எளிதாகிறது. ‘தங்களுக்கு வேண்டும் போது அவர் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்திருந்தாலும் சரி, எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் படித்திருந்தலும் சரி அவரைப் பணியில் வைத்து போதுமான பயிற்சி கொடுத்து நிர்வாகம் அவர்களை வேலைக்கு வாங்கிக் கொண்டது. தொழில்நுட்பம் மாறும் போது இதே தொழிலாளர்களை மீண்டும் பயிற்சி கொடுக்காமல் அவர்கள் திறன் சரியில்லை என்பது சரியல்ல. மீண்டும் தொழிலாளர்களை பயிற்சி கொடுப்பது நிர்வாகங்களால் முடியும், அது அவர்களின் கடமையும் கூட என வெல்கின் கூறுகிறார். ஐடி தொழிலாளர்கள் புது தொழில்நுட்பங்கள் குறைந்த செலவில் கற்று கொள்ள KPF டெக் காரிடார்(Tech Corridor) எனும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிற்சங்கம் தான் தீர்வு..

தொழிலாளர் கூடத்துடன் பேசிய பல தொழிலாளர்கள் தங்களுடைய பிரச்சனைகளை தீர்க்க தங்களுக்கென்று தொழிற்சங்கம் தேவை என்றும் ஆனால் அதற்காக என்ன செய்வது என்று தெரியவில்லை எனக் கூறினர். தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் இணைவதை ஐடி துறை தடுத்து வருகிறது.

தொழிற்சங்கத்தில் இணைந்தால் தங்கள் வேலை வாய்ப்புகளை நாஸ்காம் ரெஜிஸ்ட்ரி(NASSCOM Registry) மூலம் ஐடி துறை தடுக்கும் எனத் தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர். தொழிற்சங்கம் அமைப்பது ஒரு அடிப்படை உரிமை என்றாலும் தொழிற்சங்கம் அமைத்தால் தொழில் வாய்ப்புகள் குறையும் என்ற ஒரு கருத்தை ஐடி துறை பரப்பி வருகிறது.

சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த வருடம் NDLF ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தது. அப்போது தொழிலாளர் துறை முதன்மை ஆணையர் ஐடி தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க உரிமை, தொழிற்தாவா சட்டம் அனைத்தும் பொருந்தும் என்று கூறினார். டிசிஎஸ் தொழிலாளர் பணிநீக்கத்திற்கு பின் iஃபட் கட்டாயப் பணிநீக்கத்திற்கு எதிராக தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடுத்துள்ளது.

சிடிஎஸ் பணிநீக்கத்திலும் வழக்குகள் தொடர FITE முயற்சித்து வருகிறது. நெடிய மக்கள் போராட்டமும் அரசையும் நிர்வாகத்தையும் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வழிவகுக்கும் என iஃபட் பிரதிநிதிகள் கருதுகின்றனர்.

இம்மூன்று அமைப்புகளும் ஒன்று சேர்ந்து நடக்கும் இயக்கத்தினால், ஐடி தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளும் முயற்சி வலுப்பெற்றுள்ளது. மஹீந்த்ரா சிட்டி, மறைமலை நகர், மற்றும் சென்னை நகர்புறங்களில் தங்கள் இயக்கத்தை வளர்க்க கேபிஎஃப் முயற்சித்து வருகிறது. இணையதளங்களில் இது குறித்த விழிப்புணர்வு இயக்கத்தையும் KPF நடத்தி வருகிறது. இது தான் கார்ப்பரேட் நடைமுறை என்று ஐடி தொழிலாளர்கள் கருதாமல் தங்களுடைய உரிமைகளுக்காக போராடுவார்கள் என இயக்கத்தின் பிரதிநிதிகள் கருதுகின்றனர்.

தொழிலாளர் துறை அமைச்சருக்கு மனு அளிப்பதற்கு FITE பிரதிநிதிகள் முயற்சித்து வருகின்றனர்.

சென்னையில் தொழிற்சங்க அமைப்புகள் உள்ளதனால் கோயம்பத்தூர், பூனே, கொல்கத்தா, தில்லி போன்ற நகரங்களில் தொழிலாளர்கள் பணிநீக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். அதனால் தேசிய அளவில் தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதற்கு FITE இயக்கம் முயற்சித்து வருகின்றனர்...

வறட்சி காரணமாக ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க குடிநீர் திட்டப்பணிகளுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 14...


டி.டி.ஹோமைப் போலவே லியொனாரா பைப்பர் (1859-1950) என்பவருக்கும் எட்டு வயதில் ஆழ்மன சக்தியின் முதல் அனுபவம் ஒரு மரணச்செய்தி மூலமாகவே ஏற்பட்டது. அத்தை சாரா இறக்கவில்லை. இன்னும் உங்களுடன் தான் இருக்கிறாள் என்ற செய்தி செவிப்பறையை அறைந்து தெரிவிப்பது போலிருக்க லியொனாரா பைப்பர் ஓடிச்சென்று தாயிடம் அதைத் தெரிவித்தார்.

மகளின் பைத்தியக்காரத்தனமான கற்பனை என்று கருதிய அந்தத் தாய் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மறுநாள் அந்த அத்தை சாரா இறந்து போன செய்தி அவர்களுக்குக் கிடைத்தது. இறந்த நேரம் லியொனாரா பைப்பர் காதில் அறைந்த செய்தியின் அதே நேரம் தான்.

அதன் பிறகு பதினான்கு வருடங்கள் அது போன்ற அனுபவங்கள் லியொனாரா பைப்பருக்கு ஏற்படவில்லை. மீண்டும் ஏற்பட்ட ஒரு அனுபவம் அவர் வாழ்வையே மாற்றி அமைத்தது.

கடுமையான வயிற்று வலியால் அவதியுற்ற லியொனாரா பைப்பர் அதைக் குணப்படுத்த டாக்டர் ஜே ஆர் காக் என்பவரிடம் சென்றார்.

அந்த டாக்டர் குருடர். தன் கையை நோயாளியின் தலையில் வைத்து நோயைக் குணமாக்கக் கூடியவர். அவரிடம் இரண்டாவது முறை சென்ற போது அவர் லியொனாராவின் தலையில் கையை வைத்தவுடன் திடீரென்று தன் முன் ஒரு ஒளிவெள்ளத்தையும் அந்த ஒளிவெள்ளத்தில் பல்வேறு முகங்களையும் லியொனாரா கண்டார்.

அதன் பின் கிட்டத்தட்ட அரை மயக்க நிலையை அடைந்த அவர் சுயநினைவில்லாமல் எழுந்து ஒரு காகிதத்தை எடுத்து ஒரு கடிதத்தை எழுதி அதை அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவரிடம் சென்று தந்து மறுபடி தான் முன்பு அமர்ந்திருந்த இடத்திலேயே வந்தமர்ந்தார்.

அவர் அந்தக் கடிதத்தைத் தந்தது கேம்ப்ரிட்ஜைச் சேர்ந்த நீதிபதி ப்ராஸ்ட் என்பவரிடம். அந்தக் கடிதம் அவரது இறந்து போன மகன் எழுதுவது போல எழுதப்பட்டது. லியொனாராவுக்கு அந்த நீதிபதியைப் பற்றியோ, அவரது இறந்து போன மகனைப் பற்றியோ தகவல்கள் ஏதும் தெரியாததாலும், கடிதத்தின் தன்மையாலும் அந்தக் கடிதம் தன் மகனுடைய ஆவியாலேயே எழுதப்பட்டது என்று அந்த நீதிபதி நம்பினார்.

மயக்க நிலையிலிருந்து மீண்ட லியொனாராவுக்கு தான் செய்தது எதுவும் நினைவிருக்கவில்லை.

இந்த செய்தி காட்டுத்தீயாகப் பரவியது. பலரும் தங்களுக்கு நெருங்கிய அன்பான இறந்து போனவர்களிடம் இருந்து செய்திகளைப் பெற லியொனாரா பைப்பரை மொய்க்க ஆரம்பித்தார்கள். அப்படி லியொனாராவைத் தேடி வந்தவர்களில் ஒருவர் அமெரிக்க மனோதத்துவ மேதை வில்லியம் ஜேம்ஸின் மாமியார்.

அவருக்கு லியொனோராவின் மூலமாகக் கிடைத்த தகவல்கள் நம்பிக்கை தரும் வண்ணம் இருக்கவே அவர் தன் மருமகன் வில்லியம் ஜேம்ஸிற்குக் கடிதம் எழுதினார். மாமியாரிடம் பணம் பறிக்க யாரோ ஒரு பெண் ஏமாற்றுவதாக எண்ணிய வில்லியம் ஜேம்ஸ் அந்தப் பெண்ணைக் கையும் களவுமாகப் பிடிக்க எண்ணி தானும் நேரில் வந்தார்.

மிகக் கவனமாகக் கண்காணித்தும் ஏமாற்று வேலைகள் எதையும் வில்லியம் ஜேம்ஸால் கண்டு பிடிக்க முடியவில்லை.

லியொனாரா பைப்பர் ஒவ்வொரு காலக் கட்டத்தில் ஒவ்வொரு ஆவியின் ஆதிக்கத்தில் இருந்ததாகக் கூறினார். அந்த ஆவி சம்பந்தப்பட்ட மற்ற ஆவிகளுடன் தொடர்பு கொண்டு தேவையான தகவல்கள் சொல்வதாகச் சொன்னார்.

அவர் சொல்வதற்கேற்றாற் போல் அந்தந்தக் கட்டங்களில் அவர் ஆவியின் ஆதிக்கத்தில் இருக்கையில் பேசும் பேச்சுகளின் குரல்கள் வித்தியாசப்பட்டன.

வில்லியம் ஜேம்ஸ் இதைப் பற்றி ஆழ்மன சக்திகளின் ஆராய்ச்சிக் கழகத்திற்குத் தெரியப்படுத்தினார். அந்த ஆராய்ச்சிக் கழகத்தின் டாக்டர் ரிச்சர்டு ஹோட்சன் என்ற ஆராய்ச்சியாளர் பல போலிகளை போலிகள் என்று நிரூபித்த பெருமையுடையவர்.

எதையும் உடனடியாக நம்ப மறுத்த அவர் லியொனாரா பைப்பரை ஆராய்ச்சி செய்ய வந்தார்.

ரிச்சர்டு ஹோட்சன் துப்பறியும் நிபுணர்களை எல்லா சமயங்களிலும் லியொனாரா பைப்பரைப் பின் தொடரச் செய்தார். யாரிடமாவது பேசித் தகவல்கள் தெரிந்து கொள்கிறாரா என்று கண்காணித்தார்.

அவராகவே லியொனாராவிற்கு அறிமுகமே இல்லாத நபர்களை வரவழைத்து லியொனாரா பைப்பர் முன் அமர வைத்து அவர்களுக்கு வேண்டிய இறந்த மனிதர்கள் சம்பந்தமாகக் கேட்க வைத்தார். எல்லா விவரங்களும் திருப்தி தருபவையாக இருந்தன.

1888 இறுதியில் ஹோட்சனுடன் டாக்டர் ஜேம்ஸ் ஹிஸ்லாப் என்பவரும் சேர்ந்து கொண்டார். அவர் லியொனாரா பைப்பர் 'மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டரா'ல் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தாலும் லியொனாராவிற்கு முன்பின் தெரியாத இறந்தவர்களின் தகவல்கள் எல்லாம் எப்படித் தெரிகின்றன என்பதை அவரால் அறிவியல் பூர்வமாகச் சொல்ல முடியவில்லை.

ரிச்சர்டு ஹோட்சனும், ஹிஸ்லாப்பும் மேற்கொண்டு ஆராய்ச்சி செய்ய லியொனாராவை இங்கிலாந்துக்கு அழைத்தார்கள். லியொனாரா சம்மதித்தார்.

இங்கிலாந்தில் அவர் ஆழ்மன ஆராய்ச்சிக் கழகத் தலைவர் எ·ப்.டபுல்யூ.எச். மயர்ஸ் வீட்டில் தங்கினார். மயர்ஸ் லியொனாரா வருவதற்கு முன் வீட்டில் அனைத்து வேலைக்காரர்கலையும் நீக்கி புதிய வேலைக்காரர்களை நியமித்தார்.

எனவே லியொனாரா வேலைக்காரர்கள் மூலம் எதையும் தெரிந்து கொள்ளுதல் சாத்தியமிருக்கவில்லை. மயர்ஸ் லியொனாராவுக்கு உதவ ஏற்பாடு செய்த வேலைக்காரி ஒரு கிராமத்திலிருந்து தருவிக்கப்பட்டார். அவர் வீட்டை விட்டு செல்லும் இடங்களுக்கெல்லாம் ஆராய்ச்சிக் கழகத்தின் நபர் ஒருவரும் கண்காணிக்க கூடவே சென்றார்.

மயர்ஸ் மற்றும் சர் ஆலிவர் லாட்ஜ் கண்காணிப்பில் நவம்பர் 1889 முதல் பிப்ரவரி 1890 வரை லியொனாரா 88 முறை முன்பின் தெரியாத நபர்களின் குடும்பத்தில் இறந்தவர்களிடம் இருந்து தகவல்கள் பெற்றுத் தந்தார்.

லியொனாராவிற்கு வந்தவர்களை சில சமயங்களில் தவறான பெயரில் அறிமுகப்படுத்தியதும் உண்டு. சில சமயங்களில் லியொனாரா அரை மயக்க நிலைக்குச் சென்ற பிறகு சிலரை திடீரென்று அழைத்து வந்ததும் உண்டு.

ஆனால் லியொனாரா பைப்பர் தருவித்துத் தந்த தகவல்கள் சம்பந்தப்பட்டவர்களின் உண்மையான தகவல்களாகவே இருந்தன. மயர்ஸம், ஆலிவர் ஸ்காட்டும் 1890 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் எந்த விதத்திலும் லியொனாரா பைப்பர் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டிருக்க சாத்தியமே இல்லை என்றும் அவர் நாணயமும், நம்பகத் தன்மையும் சந்தேகத்திற்கப்பால் பட்டது என்பதையும் தெரிவித்தார்.

மீண்டும் அமெரிக்கா திரும்பிய லியொனாரா பைப்பர் 1909ல் மீண்டும் ஆராய்ச்சிகளுக்காக இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டார்.

1915ல் சர் ஆலிவர் ஸ்காட் இறந்து விடப்போவதாகத் தனக்கு ஆவியுலகில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக லியொனாரா தெரிவித்தார். அதன் படியே ஸ்காட் இறந்து போனார்.

பின் தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்த லியொனாரா இது போன்ற நிகழ்ச்சிகளைத் தருவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டார்.

பல ஆராய்ச்சியாளர்கள் கண்காணிப்பில் எந்த வித தயக்கமும் இன்றி இது போன்ற பல அதிசயங்களை செய்து காட்டிய லியொனாரா பைப்பர் இன்றும் ஒரு அற்புதப் பெண்மணியாகவே ஆழ்மன ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறார்.

ஆவியுலகைப் பற்றி நம்பிக்கை இல்லாத ஆராய்ச்சியாளர்கள் பலரும் கூட அவர் சொன்ன தகவல்களின் உண்மை தன்மையை உணர்ந்த போது பிரமித்துப் போனார்கள்.

மேலும் பயணிப்போம்......

கொடிய பஞ்சத்தைப் போக்கிய சித்தர் கோரக்கர்...


பொதுவாகவே வேறு எங்கும் பஞ்சம் ஏற்படலாம். ஆனால், அத்ரிமலையில் மட்டும் ஏற்படாது என்று சொல்வார்கள். அதற்குக் காரணம், இந்த இடம் ஒரு தபோவனமாக இருப்பது தான்.

அத்ரி மகரிஷி, தன் பிரதான சீடர்களோடு இங்கே யாகம் புரிய வந்தார். அந்த சீடர்களில் கோரக்கர் குறிப்பிடத்தக்கவர். தன் குரு அத்ரி முனிவருக்கு அவர் வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார். அந்தச் சமயத்தில் தென்பாண்டிச் சீமையில் பல நல்ல நிகழ்வுகளும் கோரக்கரால் நிகழ்ந்தேறின.

ஒரு காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பெரும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இந்தப் பஞ்சம் தாமிரபரணிக் கரையிலுள்ள நெல்லையப்பர் ஆட்சி செய்யும் திருநெல்வேலி சீமை வரை நீடித்தது. நெல்லுக்கு வேலியிட்டவர் நெல்லையப்பர். இவர் ஆட்சி புரியும் பகுதியிலேயே பஞ்சமா.. அனைவரும் அதிர்ந்தனர்.

இதன் காரணத்தினை தெரிந்து கொள்ள இப்பகுதி மக்கள் அத்ரி மலையிலிருந்த கோரக்கரை நாடினர். மக்களின் குறைகளை கோரக்க முனிவர் கேட்டார்.

பின்னர், தன்னுடைய ஞானதிருஷ்டியின் மூலமாக அதற்கான காரணத்தினையும் அறிந்து கொண்டார். தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட அக்னி தேவனும், அவரது வாகனமாகிய ஆடும், சிவ பெருமானின் சாபத்திற்கு உள்ளானார்கள். தன்னை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தினை கண்டு வெகுண்டு எழுந்தார் சிவபெருமான். அவர் தட்சனை அழித்து உக்ர வடிவில் காட்சி தந்தார். அக்னி ரூபத்தில் அவர் காட்சி தந்த காரணத்தினால் இப்பகுதி பஞ்சத்தால் வாடத் தொடங்கின. நெற்பயிர்களெல்லாம் கருகின. ஆகவே, இந்த இடம் கருங்காடு, கரிக்காதோப்பு என்றழைக்கப்பட்டது..

இதைத் தெரிந்து கொண்ட கோரக்கர், ஒரு யோசனை கூறினார்.. தாமிரபரணிக் கரையில் கிழக்கு நோக்கி லிங்கம் அமைத்து யாகங்களும் பூஜைகளும் செய்தால் ஈசனின் கோபம் குறையும். அழிந்து வரும் இப்பகுதியும் மீண்டும் புத்துயிர் பெறும். நாட்டில் நிலவும் பஞ்சமும் நீங்கும்’ என்று கூறினார்.

உடனே, அவரும் மக்களின் பிரச்னையை தீர்க்க தாமிரபரணியின் மேற்குக் கரைக்கு வந்தார். அங்கு ஒரு சிவலிங்கத்தினை பிரதிஷ்டை செய்தார். பௌர்ணமி தினத்தன்று யாகங்களை நடத்தத் துவங்கினார். இதனால் மகிழ்ச்சியடைந்த சிவ பெருமான் அக்னி சொரூபத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். தண்ணருளைப் பொழிந்தார்.

இந்த இடத்தில் அழியாபதி ஈஸ்வரர் என்கிற திருப்பெயரில் காட்சி தந்தார். அதன் பின்னர் நாடு முழுவதும் பஞ்சம் நீங்கியது.

தாமிரபரணிக் கரையின் கீழ்ப்பகுதியில் அக்னீஸ்வரரையும் மேல் பகுதியில் கோரக்கர் அமைத்த அழியாபதீஸ் வரரையும் தற்போதும் காணலாம். இத்தலமும் நெல்லை நகரத்திலுள்ள குறுக்குத்துறைக்கு அருகிலுள்ளது.

சிவலிங்க வழி பாட்டின் பெருமைகளை அளவிட முடியாது. வழிபாடு, ஸ்தோத்திரம், பாராயணம், தரிசனம், அபிஷேகம் இப்படி பல விதங்களிலும் மனதையும் உடலையும் சிவனுக்கு அர்ப்பணித்து பக்தியில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் மற்றோரையும் அதில் மூழ்கச் செய்பவர்களே சித்தர்கள்.

இவ்வாறு சித்தர்கள் அமைத்து வழிபட்ட லிங்கத்தை ஆர்ஷ லிங்கம் என்பார்கள்.

இந்த வகையில் கோரக்கர் முனிவர் அமைத்து வழிபட்ட ஆர்ஷ லிங்கம் இதுவே.

கோரக்கர் உருவாக்கிய இந்த லிங்கம் குறித்து தாமிரபரணி மகாத்மியம் பெருமைபட பேசுகிறது. சப்த ரிஷிகள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் அண்டம், அகிலங்களையெல்லாம் தோற்றுவிக்கும் சக்தி படைத்தவர்கள். சப்த ரிஷிகள்தான் நட்சத்திர மண்டலங்களாக வானில் ஜொலிப்பதாக வடமொழி வானசாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

சித்திர சிகண்டிகள் எனப் பெயர் பெற்ற ஏழு ரிஷிகளில் ஒருவராக திகழ்கிறார் அத்ரி. வேத மந்திரங்களை உலகுக்கு வழங்கிய ரிஷிகளில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.

ரிக் வேதத்தின் பல காண்டங்களை அத்ரி மகரிஷிதான் தம்முடைய தபோ வலிமையால் ஈர்த்துக் கொடுத்தார். அத்ரி மகரிஷி ஆயுர்வேதம், ஜோதிடம் போன்றவற்றிலும் சிறந்த நூல்களை இயற்றியுள்ளார். மானுட சரீர ரகசியங்கள், யோகம் போன்றவற்றை பதஞ்சலி ரிஷிக்கு குருவாய் இருந்து கற்றுக் கொடுத்துள்ளார்.

பிரபஞ்சப் படைப்பை விஸ்தரிப்பதற்காக ஆழ்ந்த பெருங்கடலின் அடியில் கடும் தவம் செய்து கொண்டிருந்தார் அத்ரி மகரிஷி. அதே வேளையில் அவருக்கு மனதில் வேறு ஒரு எண்ணம் தோன்றியது. உலகிற்கு ஒரே ஒளியாக சூரியன் திகழ்கிறது. இந்த சூரியன் பகலில் மட்டும் வெளிச்சம் தருகிறது. ஆனால், இரவில் வெளிச்சம் இல்லாமல் ஜீவராசிகள் துன்பப்படுகின்றன.

எனவே, இன்னொரு ஒளியும் உலகிற்கு வேண்டுமென்று நினைத்தார்.அதற்காக ஒரு அற்புதத்தை செய்தார்.

அன்னதானம் - அத்ரிமலை யாத்திரை சுமார் 6 கி.மீ. நடை பயணம்தானே என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. விரதமிருந்து அத்ரியை மனதில் நினைத்து நடைபயணத்திற்கு ஆயத்தமாக வேண்டும். நிச்சயம் தனியாக செல்லக்கூடாது, நாலைந்து பேர் சேர்ந்துதான் போக வேண்டும். போகும் வழியில் கூச்சல் போடாமல் செல்ல வேண்டும். கூச்சலைக் கேட்கும் மிருகங்கள் கீழேயிறங்கி வந்து விடக் கூடும்.

மேலும், அடர்ந்த காட்டுக்குள் செல்லும் போது கவனமாகச் செல்ல வேண்டும். கவனம் தப்பினால் பாதை மாறிவிடும். காலை உணவை கையில் வைத்துக் கொண்டு, காலை 7 மணிக்கு பயணம் துவங்கினால் ஆற்றை கடக்கும் போது உணவை உண்டுவிட்டு பின்னர் பயணத்தைத் தொடர்ந்தால் மதியத்துக்குள் அத்ரிதபோவனத்துக்கு சென்று விடலாம். அங்கேயே மதிய சாப்பாட்டை சமைத்துக் கொள்ளலாம்.

பௌர்ணமி, அமாவாசை, கடைசி ஞாயிற்றுக்கிழமை போன்ற தினங்களில் மேலே அன்னதானம் நடைபெறும்.

முக்கியமாக, பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்கப் பாருங்கள்.

ரொம்பவும் அவசியமென்றால் அந்த பிளாஸ்டிக் குப்பைகளை அத்ரி மலையில் எங்கும் போட்டுவிடாமல், யாத்திரை முடிவில் கீழே இறங்கியபின் உரிய குப்பை போடும் பகுதியில் சேர்த்துவிடுங்கள்...

தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. மதுக்கடைகளை உடைக்கத் தொடங்கியுள்ள மக்கள்...


தென்கிழக்கு வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது...


ஆகாயத்தில் ஒரு ஒளி - 14...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் 14-ம் தீர்க்க தரிசனத்தை காண உள்ளோம்.

தீர்க்க தரிசனங்கள் மெய்படும் காலமாக இன்றைய 2014 அல்லது 2015-ம் ஆண்டின் இறுதி நாட்களும், வரும் ஆண்டுகளான 2016 முதல் 2020 வரை ஆகிய ஆறு ஆண்டுகள் மிக சக்திவாய்ந்த ஆண்டுகளாக இருப்பதாக தீர்க்க தரிசன கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

தீர்க்க தரிசனங்களில் பெரும் பாலானவை  2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளுக்குள் கட்டாயம் நடந்து முடிந்துவிடும் என்றும்,

எஞ்சியுள்ள மற்ற தீர்க்க தரிசனங்கள் 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டுக்குள் நடந்து முடியும் என தீர்க்க தரிசனங்கள் கூறுகின்றன.

தீர்க்க தரிசனங்கள் நடந்து முடியும் கால அளவு என்பது இறைவனின் திட்டதில் உள்ள இரகசியம் என்றும்,

இதனை 18 சித்தர்களில் ஒரு சிலர் முழுமையாக அறிந்து உள்ளனர் என்றும்,

அந்த சித்தர்கள் உலகில் உள்ள சில மகான்கள் மூலம் இதன் இரகசியங்களை வரும் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து வெளியிடுவார்கள் என தீர்க்க தரிசன குறிப்புகள் தெரிவிக்கின்றன.

தீர்க்கதரிசன குறிப்புகளை இறைவனே முன்னின்று அனைத்து மதங்களை சார்ந்த மனிதர்கள் மூலம் வழங்குவார் என்றும், இதனை மக்கள் ஏற்றாலும் சரி, ஏற்காவிட்டாலும் சரி, அது நடந்தே முடியும் என தீர்க்க தரிசன கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

தீர்க்க தரிசனம் 14-ம் நிகழ்வு என்னவென்பதை இங்கு காண்போம்.

கடல் சூழ்ந்த நாடுகளில் உள்ள புத்த கலாச்சாரம் ஒன்று புத்த சந்நியாசிகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் சமயத்தில் கடலில் ஆழிப்பேரலைகள் தோன்றி உலகை அச்சுறுத்தும் என்றும்,


அப்பொழுது இலங்கை கடல் பகுதியில் இருந்து ஒரு புத்த விக்கிரகம் கடல் வழியாக மிதந்து வந்து இந்திய கடல் எல்லையை வந்து அடையும் என்றும்,

அதனை மக்கள் மீட்டு தமிழகத்தில் வைக்கும் சமயத்தில் இலங்கையில் பல அற்புதச்சம்பவங்களும், பல அழிவுச் சம்பவங்களும் ஏற்படும் என்றும்,

அதனை காண உலக விஞ்ஞானிகள் இலங்கைக்கு சென்று ஆய்வு செய்யும் அச்சமயத்தில் ஆதாம் – ஏவாள் வாழ்ந்த சரித்திர சான்றொன்றை கண்டெடுப்பார்கள் என்றும்,

இதுவே முதல் கிருஸ்துவர்களுக்கான அடையாளத்தை உலகத்திற்கு வெளிச்சமிடும் என்று 14-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.

14-ம் தீர்க்க தரிசனத்தின் படி ஆதாம் – ஏவாள் வாழ்ந்தது உண்மை என்று மக்கள் அறிந்து வியப்படையும் சமயத்தில் இந்திய எல்லைக்குள் இயேசு பயனித்த காலம், அவர் இந்தியாவில் தான் சில ஆண்டுகள் வாழ்ந்தார் என்ற உண்மையும் இந்த உலகத்திற்கே தெரியவரும் என்றும் 14-ம் தீர்க்க தரிசனம் மேலும் சில அரிய உண்மைகளை வெளியிடுகிறது.

மேலும் கிருஸ்தவர்களுக்கான நற்செய்தி ஒன்று விரைவில் கிடக்கப்பெறும் என்றும், அந்த நற்செய்தி 14-ம் தீர்க்க தரிசனம் நடைபெறுவதை உறுதி செய்யும் நற்செய்தியாக நமக்கு இருக்கும் என்று தீர்க்கதரிசன குறிப்புகள் தெரிவிக்கின்றன.


14-ம் தீர்க்க தரிசனம் மேலும் சில உண்மைகளை இங்கு எடுத்துக் கூறுகிறது, அதாவது இனி கிருஸ்துவர்கள் மத்தியில் நம்பிக்கை பிறக்கும் அளவிற்கு இயேசுவின் வருகைக்கான அறிகுறிகள் தென்படும் என்றும்,

அதே சமயத்தில் அவரின் வருகை என்பது எப்படி இருக்கும்? அவரின் வெளிப்பாடு இவ்வுலகில் எப்படி இருக்கும்? என்ற கேள்விகள் ஆராய்ச்சி நோக்கில் கிருஸ்துவ மக்களிடையே எழும்பும் என்றும்,

அதற்கு பல்வேறு விடைகளை ஊகத்தின் மூலம் கிருஸ்துவ அமைப்பின் வழி நடத்துனர்கள் கூறுவார்கள் என்று 14-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது,

14-ம் தீர்க்க தரிசனத்தின்படி ஆதாம் – ஏவாள் வாழ்வியல் சான்றுகள் இந்த மண்ணுலகில் கிடைக்க பெற்றாலும் மீண்டும் இயேசுவின் வருகை எதற்காக? என்ற கேள்வி உலக மக்களிடையே ஒரு விடைதெரியாத மர்மத்தை ஏற்படுத்தும் என்றும்,

அப்பொழுது உலகில் உள்ள பல கிருஸ்துவ அமைப்புகள் ஒன்று கூடி ஒரு புதிய இறைக்கொள்கையை கடவுளின் வருகையை பற்றி முன் மொழிவார்கள் என்றும் 14-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு புதிய குறிப்பை தருகின்றது.

இயேசுவின் வருகை என்பது இறைவனின் வருகைக்கான முன் அறிவிப்பு என்றும், அவரே கடவுளின் வருகையை முன் அறிவிப்பார் என்றும், என்னை பின் தொடர்ந்த நீங்கள் இனி பிதாவான இவரை பின் தொடருங்கள் என முன்அறிவிக்கவே இப்பூலோகத்திற்கு வருகிறார் என 14-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு உண்மையை நமக்கு எடுத்து கூறுகிறது.


காலத்தால் அழியாத ஒரு புதுக்காவியம் ஒன்று இந்திய திருநாட்டில் உருவாகிட போகிறது என்றும், அதனைச்சார்ந்தே உலகில் உள்ள அனைத்து மதத்தினரின் வழியே இறைவன் தனது வெளிப்படுதல்களின் அற்புதத்தை செய்வார் என்றும் இது மிக, மிக அருகில் உள்ள ஒரு நிகழ்வு என்று 14-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

மக்கள் சமூகம் இனி பூமி மட்டுமின்றி வான் மண்டலத்தில் நடக்கும் மாற்றங்களையும், ஆச்சர்யங்களையும் நன்கு ஊன்றி கவனிக்க வேண்டும் என்றும்,

இந்த மாற்றங்களே 14-ம் தீர்க்க தரிசனம் நடைபெறுவதற்கான இயற்கையின் மாற்றங்கள் என்றும், இதுவே மக்கள் மனதில் ஆகாயத்தில் ஒரு ஒளி போன்று நம்பிக்கை ஏற்படுத்தும் என்றும் 14-ம் தீர்க்க தரிசனம் கூறுகிறது.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

விவசாயிக்கு வந்தா தக்காளி சட்டினி, முதலாளிக்கு வந்தா ரத்தம் – பாஜக மோடியின் செல்லப் பிள்ளை உர்ஜித் பட்டேல்...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா வின் கடன் தள்ளுபடி – விவசாயிகளும்.. கார்ப்பரேட்டுகளும்...


தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வராக் கடன் ரூ 6.8 லட்ச கோடி..

அதில் 70% பெருநிறுவன கடன், வெறும் 1% விவசாயக் கடன்.

2012-2015-ல் ரூ 1.14 லட்சம் கோடி பெருநிறுவன கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் ரூ 4 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்படலாம்..

பூஷன் ஸ்டீல் வராக் கடன் ரூ 44,478 கோடி, பஞ்சாப் மாநில மொத்த விவசாய வரா கடன் மதிப்பீடு ரூ 36,000 கோடி.

ஜிண்டால் ஸ்டீல் & பவர் வரா கடன் ரூ 44,140 கோடி; இது உத்தர் பிரதேச மாநிலத்தின் விவசாய வராக் கடன் மதிப்பீட்டை விட அதிகம்.

மகாராஷ்டிரா மாநிலம் ரூ.30,500 கோடி விவசாய கடன் தள்ளுபடியை கோருகிறது. இது எஸ்ஸார் ஸ்டீல் வராக் கடன் ரூ. 34,929 கோடியை விடக் குறைவு.

பத்திரிகைகளில் வாராக் கடன் தள்ளுபடி எவ்வாறு தொழிற் சூழலுக்கு முதலீடுகளுக்கு நல்லது என்று எத்தனை கட்டுரைகள் இருக்கின்றன என்று தேடிப்பாருங்கள்.

முதலீட்டாளர்கள் கடன் தள்ளு படிகளை நல்ல அறிகுறிகளாக பார்த்து அதன் மூலம் முதலீடுகளைக் கொண்டு வந்து கொட்டுவார்கள் என்று மட்டும் நூற்றுக் கணக்கான கட்டுரைகள் இருக்கும்.

வேளாண் கடன் தள்ளுபடி நியாயமில்லாதது என்று இதே லாபிகள் கட்டுரைகள் எழுதித் தள்ளுகின்றன...

விவசாயிகளுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு...


வரும் செவ்வாய்க் கிழமை (ஏப்ரல் 18, 2017) மாலை 4 மணி முதல் 7 மணி வரை பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

மெப்ஸ் ஊழியர்கள், டைடல் பார்க் ஊழியர்கள், டி.எல்.எஃப் மற்றும் பிற வளாக ஐ.டி ஊழியர்களுடன் இணைந்து பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு எடுத்த முயற்சியின் மூலம் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.

தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றக் கோரியும், நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் வர உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரியும் ஐ.டி ஊழியர்கள் சார்பாக பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு ஒருங்கிணைப்பில் தாம்பரம் சண்முகம் தெருவில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய போது, அதற்கு பதிலாக பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது காவல் துறை.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஐ.டி ஊழியர்கள் மத்தியில் பெருமளவில் பிரச்சாரம் செய்து பெரும் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்...

சித்தர் ஆவது எப்படி - 14...


பேரருளை உணர்த்தாத குருவருள் பாழ்...

அன்பே சிவம் என யாரும் அறிகிலர் என சித்தர் பாடிய பாட்டின் படி, அன்பை பற்றி சதா பேசிக் கொண்டே இருக்கும் மனித வர்க்கம் அதன் உண்மை தன்மையை உணராது இருக்கிறது..

அது முக்தியில் மட்டுமே தோற்றத்திற்கு வரும்.. விளக்கம் கிடைக்கும்... அந்த மூன்று இணைக்கக் கூடிய ஒளி நிலை பெறவே முதலில் முனைய வேண்டும்...

அந்த மூன்று கிடைத்த ஒளி நிலையில் மட்டுமே மரணமற்ற நீங்காத பேரன்பு கிடைக்கும்..

முதலில் பேராற்றல் மிகுந்த பேரருளின் தோன்றா நிலையின் தொடர்பு..

அப்படி அப்படி பெற்ற ஆற்றலை உருவ சக்தியாக மாற்றும் வல்லமை வாய்ந்த ஒரு ஊடகமான குருவருளின் தொடர்பு.. அது இரண்டாம் நிலை..

பின் குருவின் தொடர்புடன் உருவ பொருள்களுடன் உலகத்தோடு தர்மமாக வாழுதல்.. இது மூன்றாம் நிலையான திருவருள்..

பேரருள் குருவருள் திருவருள் இந்த மூன்று நிலைகளையும் ஒரே நேரத்தில் பூரணமாக பெற்று இயங்குகிற அந்த தருணம் தான் முக்தி அடைந்த நிலை என்பர்.. அந்த நிலை தான் நிகழ் கால தொடர்பாகிய அன்பு என்பர்..

அந்த நிலையில் வற்றாத சக்தியை பிரபஞ்சமாகிய தோன்றா நிலையில் பெற்று பெற்று, அதனை சத்திய பொருளாக குருவின் துணையால் உருவமாக மாற்றி உலக சார்புகளோடு, சத்திய வாழ்க்கை தர்ம வாழ்க்கை, கருணையோடு வாழும் தகுதி பெறுகிறோம்.

முக்தி ஆனது தோன்றா நிலையாகிய பேரருளையும், அந்த பேரருளை வேண்டிய வண்ணம் பொருளாக மாற்றும் ஒரு ஊடகமான குருவருளையும், அதனால் உண்டான சத்திய நிலையில் ஏற்படும் உலக பந்தங்களில் பயன் தூய்ப்பு என்ற அனுபவநிலையும் ஒன்று சேர்ந்த நிலையில், இணைந்த நிலையில், இருக்கும் தன்மையாகும்..

அதாவது மூன்றும் பூரணமான செயல் நிலைதான் முக்தி என்பது.. இதில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டோ நீங்கிய நிலையில் குறைவு பட்டவர்களாக உள்ளோம்..

பேரருளும் குருவருளும் குறைவு பட்ட காரணத்தால், தொடர்பு மையமாகிய உலகியலில் பல வேதனைகளை சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்...

தோன்றா நிலையாகிய பேரண்டமும் பேரறியும் அதன் பேராற்றலும் உணர்த்த வேண்டிய மதங்கள், இடையில் உள்ள குருவருளை மற்றுமே பற்றிக்கொண்டு, முயன்று முயன்று மூல ஆதார சக்தியை பற்ற முடியாமல், விதிக்கப் பட்ட சக்தியையும் செலவு செய்து தோற்றுப் போய் கொண்டே இருக்கின்றன..

சூரிய வெளிச்சத்தை முறைபடுத்தி குவித்து ஒரு குவி ஆடி ( lense ) தன் கீழ் உள்ள பஞ்சை எரிய வைக்கிறது..

இதில் சூரிய வெளிச்சம் பிரபஞ்ச ஆற்றல் என்ற பேரருள் என்றால், குவி ஆடி குருவருள் ஆகும்..

பஞ்சு என்பது உலக சம்பந்த பட்ட சார்புகளான திருவருள் ஆகும்..

இந்த மூன்றும் சேர்ந்த பூரணமாக பெற்ற நிலையே முக்தி என்பதாகும்..

இன்று நிழலிலே குவி ஆடி வைத்துக் கொண்டு பஞ்சை எரிக்க, படாதபாடு அனைவரும் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்..

எல்லா மதங்களும் யோக பயிற்சிகளும் இன்று மூல ஆதாரத்தை விட்டு விட்டு வெறும் வழிபாட்டிலும், வெற்று பயிற்சியிலும் ஈடுபட்டு, இருக்கும் விதிக்கப் பட்ட ஆற்றலையும் இழந்து இழந்து நாசமாகி போய் கொண்டு இருக்கிறது.. எல்லாமே சூரிய ஒளி படாத குவி ஆடிகளாக இருக்கின்றன..

ஆனால் சில அற்புதங்கள் மதங்களில் நடக்கின்றனவே என்று வாதாடலாம்.. அற்புதங்கள் நடந்தபின், அதன் பின் வந்த நிலையை யாரும் வெளிப் படுத்துவது இல்லை..

அற்புதங்கள் நடந்த ஆனந்தத்தில் பின்னால் தொடர்ந்து வரும் அவல நிலையை மறைக்கப் பட்டு விட்டது..

காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை போல் நடந்த அற்புதங்கள் பின், ஏற்படும் அவலங்களை சொல்லாமலே போய் விட்டனர்..

அற்புதங்கள் நடந்த போது பெருமை பட்ட போது, அந்த பெருமையே தனக்கு ஏற்பட்ட அவல நிலையை சொல்ல தடையாக இருந்தது..

சித்தர்களை தவிர எந்த மதவாதிகளுக்கும் எந்த அற்புதமும் நடக்கவே இல்லை..

உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் ஒன்றுக்கு நூறாக மிகை படுத்தப் பட்ட அந்த அற்புதங்கள் பொய்யாகவே இருக்கும்..

முக்தி என்ற ஞான நிலையில் மட்டுமே அவைகளின் உண்மை தோற்றம் புலப்படும்.. தோன்றா நிலையில் உள்ள பேரருளின் துணை இல்லாமல் சத்தியமாக எந்த அற்புதமும் நடக்காது..

அந்த மூலாதார சக்தியின் துணையின்றி எந்த அற்புதமும் நடக்கவே நடக்காது..

மூலசக்தியின் துணையின்றி எல்லை கடந்து பலப்படுத்தப் பட்ட குருவருள் நாசத்தையே உருவாக்கும்.. பெருகி வரும் கோவில்களும் மசூதிகளும் சர்ச்களும், பேரருளுக்கு எதிரானவை..

பேரருளை பெற மிகப் பெரும் தடையாக உள்ளன.. அவைகள் எல்லாம் நிழலில் பயன் படுத்தப் படும் குவி ஆடிகள்.. எந்த கனலையும் எழுப்ப தகுதி அற்றவை..

மாறாக இருக்கின்ற கனலையும் கிரகித்து மனிதனை சக்கையாக செய்து விடும்.. இன்றைய குருமார்களும் அப்படியே இருக்கின்றார்கள்..

அதனால் தான் நிலைதடுமாறிய நிலையில் மனிதன் எண்ண செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறான்...

இந்த தோன்றா நிலையை உணர்த்தாத எதுவும் பலன் அளிக்காது.. மூலக் கனலோடு தொடர்பு அற்ற எதுவும் வெறும் சடப் பொருளே..

தோன்றும் நிலையில் உள்ள தொடர்பு, தோன்றா நிலையை உணர தடையாக இருப்பதால், தோன்றும் நிலையில் உள்ள குருவருள் மறைந்திருந்து ஒருவனுக்கு தோன்றா நிலையை உணர்த்த வேண்டும்.. அப்படி எதுவும் இன்றைய சூழ்நிலையில் நடப்பது இல்லை...

தானே கடவுள் என பிரகடனப் படுத்தி மனித குலத்திற்கு நாசமே விளைவிக்கின்றனர்.. தோன்றா நிலையில் பெறப்பட்ட மூல சக்தியால் மட்டுமே முக்தியின் விளைவாக ஒருவர் அன்பு உடையவராய் ஆகி திருவருளான உலக சார்புகளுக்கு, அதாவது உலக உயிர் இனங்களுக்கு நன்மை செய்ய முடியும்..

மற்றபடி மற்றவர்கள் அன்பை பற்றி பேசிக் கொண்டு இருக்கலாமே தவிர அன்பாய் இருக்க முடியாது..

ஆகவே இன்றைய மனிதக் குலத்திற்கு தோன்றா நிலைக்கு அழைத்து சென்று பேராற்றல் என்ற மூலக் கனலை பெற வேண்டிய கட்டாயம் அவசியம் உள்ளதால், தோன்றா நிலைக்கு அழைத்து செல்லும் பயிற்சியே தலை சிறந்த பயிற்சி என்பது சத்தியமான உண்மை..

தோன்றா நிலையில் இருக்கும் மூலதார மூலக்கனலுக்கு அழைத்து செல்லாமல், தோன்றும் நிலையில் உள்ள பொய்யான மூலாதாரத்தினை காட்டி காட்டி பயிலும் இன்றைய முறையற்ற வாசி பயிற்சி நாசம் மட்டுமே விளைவிக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்...

தோன்றா நிலை என்பது எண்ண ஆதிக்கங்கள் இல்லாத கனல் பொருந்திய சுத்த மனம் ஆகும்..

அம்மனம் ஒன்றே தோன்றா நிலையில் அகப்படும் கனலை ஈர்த்து வைக்கக் கூடிய ஆற்றல் உடையது..

எண்ண ஆதிக்கங்களால் ஆளப்படும் அசுத்த மனம் இருக்கின்ற ஆற்றலை எண்ணங்களில் விரையம் செய்து கொண்டிருக்கும்....

தோன்றா நிலையில் மட்டுமே இறைவனும், இறை ஆற்றலும், இருப்பதால் தோன்றா நிலையில் இருக்கும் அந்த தருணம் மட்டுமே இறைவன் வழிபாடு பயன் உள்ளதாக இருக்கும்..

மற்றபடி எண்ண ஆதிக்கங்களான வேண்டுதல்களை முன் வைத்து சிலைகளுக்கு முன் செய்யும் எந்த பிரார்தனையும் தகுந்த பலனை தராது..

எண்ணியவாறு எண்ணிய வண்ணம் எதுவும் உடனே நடைபெற தோன்றா நிலையில் நின்றால் மட்டுமே சாத்தியமாகும்...

தோன்றா நிலையில் முன் வைக்கப் படும் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப் படும்..

காரணம் அங்கே மட்டுமே பேரண்ட பேராற்றலின் கனல் என்ற கடவுளின் கருணை சுலபமாக அகப்படும்...

ஆகவே முக்தியின் முன் நின்ற நிலையான பேரருளின் ஆசியை பெற வாசியோகத்தில் தோன்றா நிலை அனுபவப் பட வேண்டும் என வற்புறுத்தப் படுகிறது..

தோன்றா நிலையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்ட அந்த தருணம் முதல் மனிதனுக்கு வாழ்வு உயர நல்ல தருணம் தொடங்கி விட்டது என்பது சத்தியமான உண்மை...

ஆகவே தான் பேரருள் பொருந்திய தோன்றா நிலையை முன்வைத்து விளக்கத் தவறிய எந்த ஒரு மதமும் யோகமும் மன்னிக்க முடியாத ஒழுங்கின்மையை செய்கிறது என சொல்லப் படுகிறது...

எல்லாமே ஒழுங்கின்மையாக உள்ள நிலையில் சுவாச ஒழுங்கு என்ற மிக அற்புத மிக மிக சாதாரணமான பயிற்சியை, செய்ய மனித குலத்திற்கு மிக மிக கடினமாக உள்ளது...

ஏழாம் அறிவை நோக்கிய மனித இனம்...


மனிதன் ஆறறிவு கொண்டவன் என்று தான் இது நாள்வரை கூறி வருகிறோம். ஆனால், மனித மூளையின் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கின்ற பொழுது, இது தவறு எனத் தெரிகிறது.

மனிதன் ஏழாம் அறிவை எட்டி விட்டான் என்பது தான் உண்மை. இளம் வயதிலேயே அபாரத் திறமையுடன் விளங்கும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். குழந்தை மேதைகளின் எண்ணிக்கை தற்காலத்தில் பல்கிப் பெருகி வருகிறது.

இடையறாது நிகழ்ந்து வரும் பரிணாம வளர்ச்சியின் இயக்கப் போக்கில், மனித மூளை, ஏழாம் அறிவை எட்டி விட்டது என்பதனைக் குழந்தை மேதைகள் உறுதி செய்கின்றனர்.

மனித இனத்தின் தன்மை மற்றும் எதன் மூலம் மனிதர்கள் அறிவாளிகளாகத் திகழ்கிறார்கள் என்பதனை ஆய்வு செய்வதே அறிவியலாகும். மனித மூளை ஏழாம் அறிவை எட்டி விட்டது என்கின்றனர்.

மனித மூளை எந்தப் பயனும் இல்லாத, வெறும் சதைப் பிண்டம் என்றே பல நூற்றாண்டுகளாக மருத்துவ உலகில் நம்பப்பட்டு வந்தது. மருத்துவத் துறையில் முன்னேற்றம் அடைந்திருந்த சீனர்களின் அகராதியில் கூட, மூளை என்பதனைக் குறிக்கும் வார்த்தையே கிடையாது.

கிரேக்கர்கள் தாம் மூளையைப் பற்றி முதல் முதலாகச் சிந்தித்தார்கள். ‘பிரேன்’ என்ற கிரேக்கச் சொல்லில் இருந்தே ‘பிரெய்ன்’ என்ற ஆங்கில வார்த்தை உருவாகியது. ‘பிரேன்’ என்றால் கிரேக்க மொழியில் ‘தேவையற்ற சதைப் பிண்டம்’ என்றுதான் அர்த்தம். கிரேக்கர்களும் மூளையைப் பற்றித் தவறாகவே சிந்தித்திருக்கிறார்கள்.

கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இருந்து 8ஆம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தில் மூளையைப் பற்றிய ஆராய்ச்சிகள் மிகுதியாயின. கேலன் என்ற கிரேக்க அறிஞர் நாம் உள்ளே இழுக்கும் மூச்சு மூளைக்குப் போய் உயிர்ச் சக்தியாக மாறி, இதயத்திற்கு வருகிறது என்றார்.

ஆனால் இது தவறான கருத்து. இருந்தும் ஏதோ ஒரு வகையில் மூளையின் முதன்மையைக் கேலன் உணரத் தொடங்கினார். அன்றைய கால கட்டத்தில் மருத்துவர்களுக்குப் பிணத்தை அறுத்து ஆராய்ச்சி செய்வது முடியாத காரியமாக இருந்தது. மீறிச் செய்தால், அது தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. இதனால், மனித உடற்கூறுகளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை.

இந்தக் கால கட்டத்தில்தான் எடின்பரோ நகரில் பர்க் மற்றும் ஸாரே என்ற திருடர்கள் இருந்தார்கள். இருவரும் நண்பர்கள். இருவரும் சேர்ந்து சிறுசிறு திருட்டுக்களைச் செய்து வந்தனர். இருவருக்கும் தொழில் இலாபகரமாக இல்லை. தீவிர யோசனைக்குப் பின் இருவரும் பிணங்களைத் திருடி, மனித உடலை அறுத்துப் பார்க்கும் டாக்டர்களுக்கு விற்பனை செய்வதாக முடிவு செய்தனர். புதிதாக அடக்கம் செய்யப்பட்ட பிணங்களைக் கல்லறையில் இருந்து இருவரும் திருடி வந்து, டாக்டரிடம் கொடுத்தார்கள்.


அதுமட்டுமல்லாமல் இறப்பதற்கு முன் என்னென்ன நோய் இருந்தன? எப்படி இறந்தார்? என்பன போன்ற பயனுள்ள விபரங்களையும் டாக்டர்களுக்கு விற்பனை செய்தனர். அவை டாக்டர்களுக்கு மிகவும் பயன்பட்டன. ஆவர்கள் ஒவ்வொரு நோய்க்கும் உடலில் என்ன மாதிரியான பாதிப்பு இருக்கும் எனத்தெரிந்து சொல்லப் பெரிதும் உதவினர்.

ஒரு முறை இடது கையில் முடக்கு வாதம் வந்து இறந்தவரின் உடலை டாக்டரிடம் அந்தத் திருடர்கள் கொடுத்தனர். டாக்டர்கள் அந்தப் பிணத்தின் மண்டை ஓட்டைப் பிளந்து பார்த்த போது, மூளையின் வலது பக்கம் பாதிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

மூளைக்கும், மனித உடலின் உள் உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று சிந்திக்கத் தொடங்கினர்; மூளை தொடர்பான ஆராய்ச்சி தொடர்ந்தது.

வியப்பான உண்மைகள் உலகுக்குத் தெரிய வந்தன. அந்தத் திருடர்கள் மட்டும் பணத்திற்காகப் பிணங்களைத் திருடி, டாக்டரிடம் கொடுக்காமல் இருந்திருந்தால், மூளையைப் பற்றிப் பல உண்மைகள் உலகிற்குத் தெரிய பலகாலமாயிருக்கும் அல்லவா!

மூளையின் ஒவ்வொரு பகுதியின் செயல்பாடுகளையும் மனித இனம் அறிந்திருந்தாலும், இன்றும் ஆச்சரியம் தரும் வகையில் அதன் செயல்பாட்டினை எதிர்காலச் சந்ததியினர் ஏழாம் அறிவினைக் கொண்டு வெளிச்சத்திற்குக் கொண்டு வருவார்கள் என்று நம்பலாம்.

நேஷனல் ஜியோகிராஃபி சேனலில் அறிவு ஜீவிகளான இளம் இந்தியர்களை விவரிக்கும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. என்னுடைய அபார மூளை என்ற தொடராக அது வருணிக்கப்பட்டது.

இளம் வயதிலேயே மிகுந்த திறமையுடன் விளங்கும் நிசால் நாராயணன், ஹைதராபாத்தைச் சேர்ந்த சித்தார்த் நாகராஜன், பெங்களுரைச் சேர்ந்த தாதாகத் துளசி, மும்பையைச் சேர்ந்த ராகவ் சச்சார் ஆகிய நான்கு இளைஞர்களைப் பற்றிய சிறப்புத் தன்மைகள் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றன. அவர்களில் சித்தார்த் நாகராஜனின் தற்போதைய வயது பத்து. தனது மூன்று வயதிலேயே டிரம் இசை நிகழ்ச்சியைத் தனியாக நடத்திய சிறப்புத் தன்மை பெற்றவர். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பன்னிரெண்டு வயதே ஆகும் நிசால் நாராயணன் கணிதத்தில் மிகுந்த திறமை பெற்றவர். கணிதக் கோட்பாடுகள் பற்றிய அவரது ஆறு புத்தகங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. சிறு வயதிலேயே தன் தந்தையின் நிதிநிலை அறிக்கையில் தவறுகள் இருந்ததைக் கண்டறிந்த மேதை அவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. மிக இளம் வயதில் கின்னஸ் புத்தகத்தில் செயற்கரிய செயல் செய்தவராக இடம் பெற்ற இந்தியர் என்பது அவரது மற்றொரு சிறப்பு.

அடுத்த அறிவு ஜீவி, தாதாகத் அவதார் துளசி, தனது ஒன்பது வயதில் பள்ளிப் படிப்பை முடித்தவர்; பட்டப் படிப்பை மறு ஆண்டிலேயே முடித்தார். பி.எச்.டி., பட்டம் பெற்றவர்களில் மிகவும் இளையவர் என்ற பெருமை பெற்ற துளசிக்குத் தற்பொழுது வயது இருபதுதான்.

ராகவ் சச்சார் தனது நான்கு வயதிலேயே இசைக் கருவிகளைத் திறன்பட வாசித்துப் புகழ் பெறத் தொடங்கினார். ஆண்டுதோறும் ஓர் இசைக் கருவி என்ற அடிப்படையில் இதுவரை இருபத்தி நான்கு இசைக் கருவிகளில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய இசை நிகழ்ச்சியில் குறைந்த பட்சம் பத்து இசைக் கருவிகளை வாசிப்பார். இதில் புல்லாங்குழல், ஹார்மோனியம், சாக்சபோன் உள்ளிட்டவைகளும் அடங்கும். அவரது தற்போதைய வயது இருபத்து ஆறு.

பாகிஸ்தானைச் சேர்ந்த 10 வயது சிறுமி ‘ஆல்பா கரிம்நந்தாவர்’ உலகளவில் அமெரிக்காவைச் சேர்ந்த பில்கேட்ஸின் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம் நடத்திய கம்யூட்டர் தேர்வில் உலக சாதனை நிகழ்த்தினார். இந்த உலக சாதனையை மதுரையைச் சேர்ந்த 8 வயது சிறுமி ‘லவிணாஸ்ரீ’ முறியடித்து ‘உலகின் இளம் வயதில் மைக்ரோசாப்ட் சான்றிதழ் பெற்றவர’ என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.


பி.இ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., போன்ற தொழில் நுட்பத்தில் முதுகலைப்பட்டம் பெற்று 25 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர் மட்டுமே எழுதக் கூடிய இத்தேர்வில் பில்கேட்ஸ் சிறப்பு அனுமதி வழங்கியதால் இத்தேர்வை இவள் எழுத முடிந்தது. லவிணாஸ்ரீ மூன்று வயதில் இருக்கும் பொழுதே திருக்குறளின் 1330 குறள்களையும் ஒரே மூச்சில் ஒப்பித்தாள். பாகிஸ்தான் சிறுமியும், மதுரை சிறுமியும் ஏழாம் அறிவுக்கு சான்றாயின.

குழந்தைகள்தாம் என்றில்லை; பல முதியவர்களும் திறன்மிகு மூளை வளம் கொண்டவர்களாக உள்ளனர். மும்பையைச் சேர்ந்த எழுபத்து ஐந்து வயது கணக்குப் புலி எம்.எஸ். டோஷி ஐந்திலக்க எண்ணை 39,122 ஐ 97,531 இல் பெருக்கினால், என்ன விடை வரும்? அல்லது 24,681 இல் இருந்து 13,579 ஐ கழித்தால் என்ன விடை வரும்? என்று அவரிடம் கேட்டால், கால்குலேட்டர், கம்ப்யூட்டர் எதுவுமில்லாமல், சில வினாடிகளில் சரியான பதில் சொல்லி வியப்பிலாழ்த்தி விடுவார்.

வக்கீலான அவர், கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஓன்பது இலக்க எண்ணிலோ அல்லது அதற்கு மேலான எண்களிலோ கணக்குக் கேட்டால், அவர் நிமிடத்தில் பதில்சொல்லி விடுவார். அவரை ‘மனிதக் கால்குலேட்டர்’ என்றே சொல்லலாம். இவ்வளவு விரைவாகக் கணக்குப் போட யாரிடமும் பயிற்சி பெற்றதும் இல்லை.

அவர் இதனைப் பற்றிக் கூறும் பொழுது, நான் விரைவாகக் கணக்குப் போடுவதில் மாய மந்திரம் ஏதுமில்லை. எல்லாவற்றையும் வெளிப்படையாகவே செய்கிறேன். சரியான பயிற்சியும் எனக்குக் கணக்குப் பாடத்தில் உள்ள ஆர்வமும் தான் காரணம்’ என்று கூறினார்.

அண்மையில் நியூயார்க் நகரில் 200 இலக்க எண்ணின் பதின் மூன்றாம் மூலத்தை (Thirteen Root) 72 நொடிகளில் கண்டு பிடித்துக் கூறினார். ஒர் ஆய்வு மாணவர், அவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘லெம்மாயிர்’ என்பவர். இந்த மூலம் 2397 207 667 966 701 ஆகும். இது பதினாறு இலக்க எண் ஆகும்.

மேதமை வாய்ந்த ஒரு மூளையின் மிக்க திறமையின் வெளிப்பாடு என்று மட்டுமே செயற்கரிய செயலைக் கருதுவது குறை மதிப்பீடாகும் என்று சென்னையைச் சேர்ந்த நியூட்டன் அறிவியல் மன்றம் இன்ஸ்கோ சுப்பிரமணியன் கூறுகிறார்.

இடையறாது நிகழ்ந்து வரும் பரிணாம வளர்ச்சியின் இயக்கப் போக்கில் மனித மூளையானது ஏழாம் அறிவை எட்டிவிட்டது என்பதன் உறுதிப்பாடு, செயற்கரிய செயலாகும். மனித மூளையால் ஒளியின் வேகத்திற்கு அளவிற்கு (நொடிக்கு 3 லட்சம் கி.மீ.) சிந்திக்க இயலும் என்பதற்குச் சாட்சியாக இருக்கிறது லெம்மாயிர் நிகழ்த்திய சாதனை.

குழந்தை மேதைகளின் எண்ணிக்கை கணக்கற்றவை. பள்ளிக் குழந்தைகளில் மாநில மட்டத்தில் நடைபெறும் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் 100க்கு 100 பெறும் மாணவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் பலர் உள்ளனர்.

எலக்ட்ரான்கள் ஓர் ஆற்றல் மட்டத்தில் இருந்து பிறிதோர் ஆற்றல் மட்டத்திற்குப் பாய்ந்து செல்வது போன்று மனித மூளை ஆறாம் அறிவில் இருந்து ஒரு குவாண்டம் பாய்ச்சலில் ஏழாம் அறிவை எட்டிவிட்டதன் வெளிப்பாடே இந்நிகழ்வு. இஃது ஒரு குவாண்டம் நிகழ்வு. (Quantum Phenomenon) பல்லாயிரம் ஆண்டு பரிணாம வளர்ச்சியின் விளைவாக இரட்டைச் சுருள் (Double Helix DNA) என்ற மூளை வளத்தைப் பெற்ற மானிடம், பரிணாமத்தின் அடுத்த கட்டத்தில், ஏழாம் அறிவு பெறும். மூளையின் நியூரான்கள் வெளிப்படுத்தும் மின் சமிக்ஞைகளை EEG (Electro Encephalograph) என்ற கருவியின் மூலம் பதிவு செய்கின்றனர் நரம்பியல் நிபுணர்கள்.

மேலும், ஆழமானதும் துல்லியமானதுமான கருவிகள் வடிவமைக்கும் போது, ஆறாம் அறிவையும் ஏழாம் அறிவையும் பிரித்தறிவது கைகூடும்.

பொருட்களுக்குத் திடம், திரவம், வாயு என்று மூன்று நிலைகள் மட்டுமே உண்டு என்ற அறிவியல் கருத்து இன்று மாறி விட்டது. இவற்றிற்கு அப்பால் ஒரு புதிய நிலையை (New State of Matter) 2001இல் மூன்று அமெரிக்க இயற்பியலாளர்கள் நிரூபித்து, நோபல் பரிசு பெற்றனர்.

போஸ் – ஐன்ஸ்டின் குளிர் நிலை (Bose – Einstein Condensate) என்று அப்புதிய நிலைக்குப் பெயர். இதுபோலவே, ஏழாவது அறிவும் ‘குவாண்டம் அறிவு’ (Quantum sense) என்ற பெயருடன் இவ்வுலகை ஆளும் என்கிறார் – இன்ஸ்கோ சுப்பிரமணியன்....

ஜூலை மாதம் உள்ளாட்சித் தேர்தல்...


ஜூலை மாதம் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் பதில்...